Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுநீரகத்தை பெற்று பணம் கொடுக்காமல் வெளிநாடு சென்ற நபர் ; ஏமாற்றத்தில் தவிக்கும் இளைஞன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து இலட்சம் ரூபா பணம் தருவதாகக் கூறி தனது சிறுநீரகத்தை பெற்றுக் கொண்ட நபர் தன்னை ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஹட்டன் எபோஸ்ட்லி தோட்டத்தைச் சேர்ந்த ஜோன்ஸ்டன் என்ற இளைஞன் முறையிட்டுள்ளார்.

 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

 

பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளியை கவனித்துக் கொள்ளும் தற்காலிக பணியில் குறித்த இளைஞன் ஈடுபட்டிருந்தார்.

 

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிறுநீரகம் தேவைப்படுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கேட்டபோது அதற்கு ஜோன்ஸ்டன் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

 

சிறுநீரகத்தை தானம் செய்வதற்காக 5 இலட்சம் ரூபா தருவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் வாய்மூலமாக உறுதியளித்துள்ளார்.

 

இதனையடுத்து, குறித்த இளைஞனை கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கவைத்து, பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுநீரகத்தை பெற்றுள்ளார். 

 

வீட்டிற்குச் செல்வதற்கு வாகனமொன்றை தயார்படுத்திக் கொடுத்துள்ள குறித்த நபர், ஜோன்ஸ்டனின்  வங்கிக் கணக்கையும், தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுள்ளார். 

 

வீட்டிற்குச் சென்றவுடன் வங்கிக் கணக்கிற்கு 5 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிடுவதாகவும் குறித்தநபர் உறுதியளித்ததற்கு இணங்க, அந்த இளைஞனும் நம்பிக்கையுடன் வீடு திரும்பியுள்ளார்.

 

வீடு திரும்பிய பின்னர் வங்கிக் கணக்கை பார்வையிட்ட அவர், அதில் எந்த பணமும் வைப்பிலிடாததை அறிந்தவுடன் குறித்த நபரது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டுள்ளார். எனினும் அந்த இலக்கம் செயற்படவில்லை.  

 

இதனையடுத்து குறித்த நபர் தங்கியிருந்த வெள்ளவத்தைக்குச் சென்று விசாரித்தபோது, அவர் வெளிநாடு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது. அவரது சகோதரியிடம் குறித்த இளைஞன் விபரத்தைக் கூறியபோது அந்த சகோதரி இளைஞனை ஏசியுள்ளார்.

 

சிறுநீரகம் தானம் செய்ததினால் பாரமான எந்த தொழிலிலும் ஈடுபட முடியாத அசாதாரண நிலையில் உள்ளதாகவும், குடும்ப கஷ்டம் காரணமாகவும் 5 இலட்சம் ரூபாவிற்கு சிறுநீரகத்தை தானம் செய்ய விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

தற்போது ஏமாற்றம் அடைந்ததினால் தனக்கு ஏதாவது உதவி செய்யுமாறும் அவர் கொடையாளிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

சிறுநீரகம் கொடுத்துவிட்டு ஏமாற்றம் அடைந்ததால் பிரதேசத்திலுள்ள மற்றையவர்கள் தன்னை  கேலி செய்வதாகவும் ஜோன்ஸ்டன் கவலை வெளியிட்டுள்ளார். 

 

சிறுநீரகம் கொடுத்துவிட்டு ஏமாற்றம் அடைந்ததால் பிரதேசத்திலுள்ள மற்றையவர்கள் தன்னை  கேலி செய்வதாகவும் ஜோன்ஸ்டன் கவலை வெளியிட்டுள்ளார். 

 

 

 

 

http://ibctamil.com/news/index/9242

 

  • கருத்துக்கள உறவுகள்

உயிரைக்கொடுத்தவனையே ஏமாற்றும் மனிதர்கள்.....

உருப்படமா உலகம்....??

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைத் தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முதல் முன்பணம் வாங்கியிருக்க வேண்டும்....! கொஞ்சமாவது ஏமாற்றத்தைத் தவிர்த்திருக்கலாம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.