Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேநீர் விற்ற மோடி பிரதமராக முடியுமானால் வடை விற்ற எனக்கு ஏன் முடியாது : ஊவா முதலமைச்சர்

Featured Replies

தேநீர் விற்ற மோடி பிரதமராக முடியுமானால் வடை விற்ற எனக்கு ஏன் முடியாது : ஊவா முதலமைச்சர்

 
 

தேநீர் விற்ற மோடி இந்தியாவின் பிரதமராகியிருக்கின்ராரென்றால் ரயிலில் வடை விற்ற என்னால் ஏன் அவ்வாறானதோர் உயர் பதவிக்கு வர முடியாது இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு அப்படியான சிறப்பான பதவிக்கு ஏன் வர முடியாது என்று ஊவா மாகாண புதிய முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.D06504dfd.jpg

ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் கதிரையில் அமர்வதற்கு பாடுபட்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பைசர் முஸ்தபா மற்றும் டிலான் பெரேரா ஆகியோரை நினைவு கூர்வதுடன் அவர்களுக்கு கௌரவத்தை அளித்து நன்றியும் தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.

பதுளை நகர் மஸ்ஜிதுல் அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இதன் போது சிறப்புரை நிகழ்த்துகையிலேயே முதல்வர் சாமர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/articles/2015/09/21/தேநீர்-விற்ற-மோடி-பிரதமராக-முடியுமானால்-வடை-விற்ற-எனக்கு-ஏன்-முடியாது-ஊவா

ஆகா..ஆகா நல்ல கேள்வி!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏலும், ஆனா இந்தியாவில எல்லே பிறந்திருக்கோனும்... ஹி...ஹீ.. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ...கஸல் வத்தையில 'லவறியா' வித்தவர் ஒருவர் ...ஏற்கனவே ஜனாதிபதி ஆகியிருக்காருங்கோ...!

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கோ...கஸல் வத்தையில 'லவறியா' வித்தவர் ஒருவர் ...ஏற்கனவே ஜனாதிபதி ஆகியிருக்காருங்கோ...!

 

ஆம், புங்கையர்.

பிரேமதாசா ஜனாதிபதியானபின், முதலாவது பொதுக் கூட்டமொன்றில் பேசிய பேச்சு, அங்கிருந்த அனைவராலும் எழுந்து நின்று வரவேற்கப் பட்டது.

சோதிடத்தினை நம்பும் அரசியல் வாதிகளுக்கு ஒரு நம்பிக்கை ஊட்டிய பேச்சில் சொன்ன கதை தான் இது.

1925 ல், தாழ்த்தப் பட்ட சமூகத்தில் பிறந்த அவரது நேரத்தினை குறித்துக் கொண்டு, புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள ஒரு சோதிடரிடம் அவரது தந்தை ரணசிங்க சென்றிருக்கிறார்.

அந்த குறிப்பை எழுதி, பல ஏடுகளையும், ரணசிங்கவையும் பலதடவை மாறி, மாறிப் பார்த்த சோதிடர், இதோ பார், ரணசிங்க, இந்த நேரம் சரியாய் இருப்பின் உனது மகன் இந்த நாட்டினை ஆளுவான் என்று சொல்லி இருக்கிறார்.

வந்ததே கோபம், ரணசிங்கருக்கு.

என்னய்யா பேச்சு பேசுறாய்? இந்த நாட்டினை ஆள வேண்டியவன் ஆயின், கடல் கடந்து, பக்கிங்காம் அரண்மனையில் அரச குலத்து வாரிசாகப் பிறந்திருக்க வேண்டும். இவனோ இந்த தரித்திரம் பிடிச்ச பயலுக்கு பிறந்திருக்கிறான். எப்படி சாத்தியமாகும்... உனக்கு ரொம்ப லொள்ளு கூடிப் போயிருச்சு. உன்னை எல்லாம் பெரியீ... ய சாத்திரி என்று வந்தன் பாரு...என்னைத் தான் செருப்பால அடிக்கணும். ஒனக்கு காசு கிடையாது, போ... என்று துண்டை உதறிக் கொண்டு கிளம்பி விட்டார்.

ஏய், ரணசிங்க, உன் மகன், நீ சொன்ன நேரத்தில் பிறந்தது உண்மையானால், நான் சொன்னதும் உண்மை, ஆனால் அதைப் பார்க்க, நீயோ, நானோ இருக்கப் போவதில்லையே... என்று சத்தமாக சொன்னார்... வெளியே போய்க் கொண்டிருந்த ரணசிங்கவிடம்....

ஆனால் இந்த கதையினை தேச மக்களுக்கு சொல்லும் போது, நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார் ரணசிங்க பிரேமதாசா.

தனது பாதையினை படிப்படியாக செதுக்கியே அந்த உச்சத்தினை தொட்டார் அவர்.

ஏனோ, அவரையும், பிரபாகரனையும் ஒரே தராசில் வைத்தே பார்க்க மனம் சொல்கிறது. 

இருவரும் தமது இலட்சிய உச்சத்தினை அடைந்தார்கள் - வெவ்வேறு விதமாக - ஆனால்.... அதில் தொடர முடியாமல் இருவருமே.....

ம்.... விதி வலிது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.