Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், கொஞ்ச நாளாக எனக்கு ஒரு சந்தேகம்.ஊரில படிக்காத ஆட்கள் இங்கே புலத்தில் சாதரண காசாளாராக வங்கி, சுப்பர் மார்கட்,பெற்றோல் செட்களில் வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி, மனேஜர் அல்லது அதற்கு மேலான பதவியை அடைகிறார்கள்.இது எங்கட ஆட்கள் மட்டுமல்ல,ஒரு நாட்டில் இருந்து பிழைப்பதற்காக வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வந்து விடா முயற்சியால முன்னுக்கு வரும் சிலரைப் பற்றித் தான் கதைக்கிறேன்

இங்கு நான் அவர்களது கல்வித் தகுதியைப் பற்றி கதைக்க வரவில்லை.என்னுடைய கேள்வி என்ன என்டால் இதே இவர்கள் எங்கட[தங்கட] ஊரில் இருந்து இருந்தால் இவர்களால் இந்த நிலைக்கு வந்து இருக்க முடியுமா?...உதாரணத்திற்கு இலங்கையில் ஒரு வங்கியில் மனேஜராக வேண்டுமானால் அதற்கு என கல்வித் தகுதிகள் இருக்க வேண்டும் அல்லவா?...சாதரண காசாளார் ஒரு கட்டத்தில் வங்கி மனேஜராக வர முடியுமா?...அங்கே காசாளார் ஆவதற்கே தகுதி வேண்டும் அல்லவா[ அல்லது லஞ்சம் கொடுக்க வேண்டும். அது வேற கதை.]

நான் சொல்ல வாறது என்ன என்டால் அப்படிப் பார்த்தால் எங்கட நாட்டில் கல்வித் தகுதிகள்,புலம் பெயர் நாட்டின் கல்வித் தகுதிகளை விட அதிகம் அல்லவா!...இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?...உங்கள் கருத்தை தாருங்கள்...நன்றி



இலங்கையில் அரச நிறுவனங்களிலோ அல்லது வங்கிகளிலோ எனக்கு வேலை செய்து அனுபவம் இல்லை. ஆயினும் எனக்கு தெரிந்த பலர் வங்கிகளில் சிறிய பதவியிடங்களில் வேலை பெற்று பின் வங்கிகளுக்கான பல பரீட்சைகளில் சித்தி எய்தி மேலாளராக மானேஜராக வந்திருக்கினம். அதே போன்று கிளரிக்கல் எக்ஸாம் (Clerical exam) எடுத்து ஒரு கிளார்க்காக இணைந்து கொண்டவர்கள் கூட படிப்படியாக பல பரீட்சைகள் எடுத்து  உயர் பதவிகளை பெற்று முன்னேறுவதற்கு அங்கு வழி இருக்கு. இதே போன்று ஆசிரியர் துறையிலும் உள்ளது.

என் அப்பா கூட   book keeper ஆக இணைந்து உள்ள நாட்டு பரீட்சைகள் எல்லாம் எடுத்து இறுதியில் CA ஆக பதவிவகித்தார்.

பொதுவாக அரசியல்வாதிகளின் தயவை பெற்று அங்கு  இணைபவர்கள் அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்களினால் பந்தாடப்பட்டு விடுவர்

தனியார் துறை என்றால்  அங்கு  இற்கு நல்ல மதிப்பு இருக்கு. துரித கதியில் முன்னேற முடியும். சம்பள உயர்வு பல மடங்காக அதிகரிக்கும்

என்னைக் கேட்டால் பதவி உயர்வு என்ற விடயத்தில் இங்குள்ளதை காட்டிலும் அங்கு நல்ல வாய்ப்புகள் வருவது அதிகம். போட்டியும் குறைவு

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்தின் பின் சமூகச்சாளரத்தில் பலரும் எழுதக் கூடிய விதமான தலைப்போடு வந்த ரதிக்கு மிக்க நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஏ எல் முடிச்சு - மருத்துவம், பொறியியல், சட்டம், மனேஜ்மெண்ட் போறதெண்டுறது மிகக் கடினம். அதி புத்திசாலி அல்லது கடின உழைப்பு அல்லது ரெண்டும் உள்ள மாணவர்களால் மட்டுமே முடியும். ஆனால் இங்கு அப்படியில்லைத் தானே, just above average ஆக இருப்போரே, கொஞ்சம் மினெக்கெட்டால் நல்ல படிப்புப் படிக்கலாம். AL பாசாகாமக் கூட யூனிக்குப் போகலாம். அந்த வகையில் பார்த்தால் இங்கே படிப்பு இலகு.

ஆனால் அடி மட்டத்தில் சேர்ந்து வேலையில் உயர்வதற்கு, குறிப்பாக தனியார் துறையில் இரண்டு நாடுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. 

அண்மையில் ஒரு பதுளை பயனில் இருந்து வந்த பையனை யாழில் சந்தித்தேன். ஒரு பெரிய சுப்பர் மார்கெட்டின் யாழ் ஏரியா மனேஜர். பொருட்கள் அடுக்குபவராய் தொடங்கி முன்பேறியுள்ளார்.

ஆனால் அரச சேவை இப்போதும் கிளரிக்கல், மனேஜீரியல் என்று பகுக்கவே படுகிறது. எவ்வளவு திறமை இருப்பினும் பட்டம் இல்லாமல் AGA,GA, அமைச்சு செயலாளர் ஆக முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரதி...!

ஒரு நாட்டில் உள்ள பதவி வெற்றிடங்களும்.. கேள்வி.. தேவை...(Demand & Supply) என்ற பொருளாதார நியதிக்கு இணங்கவே இயங்குகின்றது! 

இலங்கையில் வெற்றிடங்கள் குறைவாகவும்.. சப்பிளை அதிகமாகவும் இருப்பதால்.. பதவிகளை நிரப்ப..அதிகமான கல்வித்தாராதரங்கள் அவசியமாகின்றது! கல்வித் தாராதரத்தைத் தவிர மற்றைய தகுதிகள்... உதாரணமாக மற்றவர்களுடன் தொடர்பாடல் திறமை, ஒரு கூட்டாக இயங்குதல் ( communication skills, Working in a team environment) போன்றவை கருத்திலெதுக்கப் படுவதில்லை என்பதாலும், அதிக கல்வித்திறமை அவசியமாகத் தேவைப்படுகின்றது! அத்துடன் இலங்கையில் ஒரு வேலைத் தலத்தில் ஒருவர் வேலையில் சேர்ந்தால் அவரது சீவிய காலம் முழுவதும்.. அந்த வேலையில் இருப்பதால் .. பல விதமான திறமைகளை ( Multi skills/ Multi Tasking) வளர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு.

ஆனால் வெளிநாட்டில்.. வெற்றிடங்கள் அதிகமுள்ளதாலும், பிரச்சனைகளை ஏற்படுத்தாத வேலையாளர்களாக எம்மவர் இருப்பதாலும், பொதுவாக அந்த வேலைக்கான சம்பளத்திலும் சற்றுக் குறைந்த ( சில வேலைகளில் 'அரைவாசி' யாக) சம்பளங்களில் எம்மவர் வேலை செய்வதாலும்.. அவர்கள் முதலாளிகளால் விரும்பப் படுகின்றார்கள்! மற்றும் வேலைத்தலத்தில் விரும்பத் தகாத பாலியல் தொந்தரவுகள் ( Sexual Harassment ) போன்றவைகளும் இவர்களால் ஏற்படுவது மிகவும் குறைவு! எல்லாவற்றுக்கும் மேலாக, மேலாளர்களின் நம்பிக்கைக்கு உகந்தவர்களாக இவர்கள் இருப்பதும் ஒரு காரணமாகும்! மற்றது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எல்லாம் தமது முன்னேற்றத்துக்காக உபயோகிக்கும் குணமும் உள்ளது! அத்துடன் எம்மில் பலர் வேலை நேரத்துக்கும் .. அதிகமான நேரம் வேலை செய்தாலும்... ஓவர் டைம் போன்றவற்றைப் பெற்றுக்கொள்வதில்லை!

இது சரியா, பிழையா என்பதற்கப்பால்... மேலுள்ள காரணங்களாலேயே எம்மவர்கள் முன்னேறிச் செல்கிறார்கள்!

மற்றது வியாபரத் துறையில் விரைவில் முன்னேறுவதற்கு உரிய காரணங்களில் 'முயற்சி' என்பதை விடவும் பல காரணங்கள் உண்டு! இதற்காகக் கன பேர் இங்கு எனக்குக் கல்லெறிய வருவார்கள்.. !

 

VAT/GST  போன்ற வரிகளைச் சரியான முறையில் கட்டுவதில்லை!

பற்றுச்சீட்டுக் கொடுத்து விற்பனை செய்வதில்லை ! அநேகமாகக் கையில் காசு என்ற ரீதியிலே, வியாபாரத்தின் அதிக பகுதி நடை பெறுகின்றது!

ஒரு நாட்டின் நல்ல பிரஜைகளாக 'வரி' கட்டாமல் வரி ஏய்ப்புச் செய்வது! (  I do not mean Tax Planning/ I mean Tax Evasion)

 ஒரு கொம்பனியைத் திறந்து விட்டு... அரைவாசியில் கடன் காரருக்குக் கடனைச் செலுத்தாமல் கொம்பனியை இழுத்து மூடி விட்டு.. இன்னொரு கொம்பனியை மனைவியின் பெயரில் திறந்து..வியாபாரத்தை நடத்துவது!

இறக்குமதி வியாபாரத்தில்.. சுங்க வரி ஏய்ப்பு!

மனைவி, குழந்தைகள், உறவினர்களை வேலையாட்களாகப் பதிந்து...வருமான வரி கட்டும் அளவைத் தாண்டாது சம்பளம் வழங்குவது!

விற்கும் பொருட்களின் காலாவதி திகதிக்கு மேல்.. விலை லேபலை ஓட்டுவது..!

மதுபான அனுமதியின்றி... மது வியாபாரம் செய்வது..!

பொருட்களில் அதிகமான கலப்படங்கள் செய்வது.... பாவனையாளர்கள் எவ்வளவு பாதிக்கப் படப் போகின்றார்கள் என்பதைக் கணக்கிலெடுப்பதில்லை!

விசா இல்லாமல் இருப்பவர்களை, அடிமைச் சம்பளத்தில் வேலைக்கு அமர்த்துவது... அல்லது சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிப்பது..!

(அவுசில் Seven to Eleven.. அனைத்தையும் இழுத்து மூடக் கூடிய அளவுக்கு 'சம்பளக் களவு' கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!

களவாகக் காப்புறுதி இழப்புக்கள் பெற்றுக்கொள்வது...!

இப்படியெல்லாம் செய்து தான்.. இப்போது பெரிய வியாபாரிகளாக  (இப்போது தங்களைத் தொழிலதிபர்கள்) என்று அழைத்துக் கொள்கின்றார்கள்)

 

இதை விடவும் சட்ட பூர்வமாக வியாபாரம் செய்த பலரையும் நான் அறிவேன்! அவர்களது வளர்ச்சி.. மேல் கூறப்பட்டவர்களின் வளர்ச்சியைப் போன்று... அபரிதமானதான வளர்ச்சியாக இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அரச நிறுவனங்களிலோ அல்லது வங்கிகளிலோ எனக்கு வேலை செய்து அனுபவம் இல்லை. ஆயினும் எனக்கு தெரிந்த பலர் வங்கிகளில் சிறிய பதவியிடங்களில் வேலை பெற்று பின் வங்கிகளுக்கான பல பரீட்சைகளில் சித்தி எய்தி மேலாளராக மானேஜராக வந்திருக்கினம். அதே போன்று கிளரிக்கல் எக்ஸாம் (Clerical exam) எடுத்து ஒரு கிளார்க்காக இணைந்து கொண்டவர்கள் கூட படிப்படியாக பல பரீட்சைகள் எடுத்து  உயர் பதவிகளை பெற்று முன்னேறுவதற்கு அங்கு வழி இருக்கு. இதே போன்று ஆசிரியர் துறையிலும் உள்ளது.

என் அப்பா கூட   book keeper ஆக இணைந்து உள்ள நாட்டு பரீட்சைகள் எல்லாம் எடுத்து இறுதியில் CA ஆக பதவிவகித்தார்.

பொதுவாக அரசியல்வாதிகளின் தயவை பெற்று அங்கு  இணைபவர்கள் அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்களினால் பந்தாடப்பட்டு விடுவர்

தனியார் துறை என்றால்  அங்கு  இற்கு நல்ல மதிப்பு இருக்கு. துரித கதியில் முன்னேற முடியும். சம்பள உயர்வு பல மடங்காக அதிகரிக்கும்

என்னைக் கேட்டால் பதவி உயர்வு என்ற விடயத்தில் இங்குள்ளதை காட்டிலும் அங்கு நல்ல வாய்ப்புகள் வருவது அதிகம். போட்டியும் குறைவு

வெள்ளைக் காரானோட போட்டி போடலாம்.. அவ்வளவு பிரச்சனைகள் இல்லை!

ஆனால் இந்தியாக் காரங்களோட போட்டி போடுறது தான் பிரச்சனை! 

எந்த ஆங்கிள்ள,  அட்டாக் வரும் எண்டு தீர்மானிக்கிற அளவுக்கு...நம்மிட்ட... அறிவு கிடையாது!:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. நான் எதிர் பார்த்த அளவு கருத்துக்கள் வரவில்லை.நான் ஆரம்பித்த தலைப்பு மொக்கையோ அல்லது ரதியின் திரியில் ஏன் கருத்து எழுதுவான் என எல்லோரும் பேசாமல் இருக்கினமோ தெரியாது.

ஊரில ஒரு சின்ன வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி பெரிய பதவிகளை அடைந்தவர்களை பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.ஆனால் இங்கு வங்கிகளில் காசாளார் வேலை எடுப்பதற்கு ஒன்றும் கல்வித் தகைமைகள் எதிர் பார்ப்பதில்லை.இன்ரவுயூவை ஒழுங்காக செய்தால் காணும் வேலை எடுக்கலாம்.பின்பு அவர்கள் படிப்படியாக முன்னேறி, வங்கியே அவர்களை யூனி அனுப்பி படிப்பித்து மனேஜர் அல்லது அதற்கு மேலான பதவிகளை கொடுப்பார்கள். ஆனால் தற்போது இங்கு அந்த நிலையிலும் மாற்றம் வந்திருக்குது. தற்போது வங்கிகளில் மனேஜர் வேலைக்கு எடுக்கும் போது யூனி சென்று பட்டம் பெற்று இருந்தால் மட்டுமே வேலைக்கு எடுப்பார்களாம்.

அலுவலகத்தில் சாதரண வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி உயர்ந்த நிலைக்கு வந்த ஒருவரும், பட்டம் பெற்று நேராய் அந்த பதவிக்கு வரும் ஒருவரும் ஒரே தகுதியை கொண்டு இருப்பார்களா?...என்னைப் பொறுத்த வரைக்கும் அனுபவமே சிறந்த பாடம் என நினைக்கிறேன்.

பிரித்தானியா கல்வி முறையை அடிப்படையாக வைத்து இலங்கையில் படிப்ப்பித்தாலும் பிரித்தானியா கல்வி முறையை விட எங்கட கல்வி முறை சிறந்தது.இப்ப ஊரில பட்டம் பெற்று இருந்தால் தான் வங்களில் காசாளர் வேலையாவது எடுக்கலாம். வேலை இல்லாத திண்டாட்டம் ஊரில் மட்டுமல்ல இங்கும் தானே இருக்குது.

கணக்க அலட்டுறன் என்று நினைக்கிறன்.எங்கேயோ ஆரம்பித்து இங்க கொண்டு வந்து முடித்திருக்கிறன்.இத்துடன் நிப்பாட்டுறன்.நன்றி


  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு நாடு சில வித்தியாசம் இருக்கிறதுதான் 
படிக்காதவர்கள் மேலே போவதில்லை என்று கூற முடியாது 
வேறு வேறு வழிகளில் போய்கொள்கிரார்கள் 
இந்த வழிகள்தான் வித்தியாசபடுகின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்த பலர் ஆசிரியர் வேலை எடுக்க அமெரிகாகவில் இருக்கும் என்னை தொடர்பு கொள்வார்கள். 
என்னுடைய நண்பர் ஒருவர் ஈபிடிப்பி இல் பொறுப்பாக இருக்கிறார்.
பலருக்கும் அவர் மூலம் வேலை எடுத்து கொடுத்திருக்கிறேன்.
இப்போது அதில் பலர் முழு நேர ஆசிரியர்கள் ஆகிவிட்டார்கள். 
அந்த சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்கவில்லை 

வோளுண்டீயராக பலகாலம் பணி புரிந்தும் உரிய உவமானம் இல்லாதோர் பலர். 
பந்தா இருக்க வேண்டும் என்பதே அடிப்படை 

ஒரு ஐரோப்பிய நாட்டில் நான் வேலை பார்க்கும்போது 
இன துவேஷம் மறைமுகமாகவும் நேரிடையாகவும் இருக்கும்.
வெள்ளையாக இருப்பதாலேயே பலர் முன்னேறுவார்கள்.
நாம் அகதி என்பதால் திறமை இருந்தாலும் பின்னுக்கு தள்ளபடுவோம்.

அமெரிக்கா வந்த பின்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி ....
உங்களிடம் திறமை இருந்தால் ..... தடுப்பரண்கள் குறைவாகவும் ... சாத்திய பாடுகள் நிறைவாகவும் இருக்கும்.

எனபதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இவை பெரும்பான்மையினருக்கு என்ன நடக்கிறது என்பது மட்டுமே.
விதி விலக்கு எங்கும் உள்ளதுதானே ?  

land of opportunity 

அமெரிக்காவில் வாழ சந்தர்ப்பம் கிடைத்தால் ... தயவு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
நிம்மதியான வாழ்க்கை.  ஏற்ற தாழ்வு சமூக விசனம் குறைவு 
தவிர இன்பம் துன்பத்தின் மறு புறம் என்பதால் ....
நீங்கள் இனபத்தை தேட தேட ... துன்பமும் ஒருபுறமாக உங்களிடம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கும். 
அதில் இருந்து விடுபடுவது அவரவர் அறிவை பொறுத்தது. 

I'm proud to be an American! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திற்கு நன்றி மருதங்கேணி, அமெரிக்கா போகுமளவிற்கு எனக்கு வசதியும் இல்லை,ஆங்கில அறிவும் இல்லை,கல்வியறிவும் இல்லை,பத்தாதற்கு முயற்சியும் இல்லை,அதிஸ்டமும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

கருத்திற்கு நன்றி மருதங்கேணி, அமெரிக்கா போகுமளவிற்கு எனக்கு வசதியும் இல்லை,ஆங்கில அறிவும் இல்லை,கல்வியறிவும் இல்லை,பத்தாதற்கு முயற்சியும் இல்லை,அதிஸ்டமும் இல்லை

எல்லோருக்கும் அந்த வசதியும் வாய்ப்பும் கிடைக்க போவது இல்லைதான் .......

நாம் பிறந்த நாட்டிலேயே இரண்டாம் பிரஜைகளாக நடாத்தபட்டோம் 
எங்கு ஓடினாலும் அகதி என்ற சொல்லும் ஓட்டிக்கொண்டே வரும்.

இங்கு வந்து சேர்ந்தபோது அது இல்லாமை என்பது 
எனக்கு ஒரு ஆறுதலாக இருந்தது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.