Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் மக்களுக்கு தற்காலத்தில் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும், விலைபோகாததும், நேர்மை யானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும்"

Featured Replies

தமிழ் மக்களுக்கு தற்காலத்தில் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும், விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.இந்துக்கல்லூரியின் 125 ம் ஆண்டு நிறைவு விழாவில் இன்று மாலை முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

நொந்து போன சமூகத்திற்கு புலம்பெயர் உறவுகளின் உதவி தேவை .

இன்றைய மாணவர்களே எதிர் காலத்தின் தலைவர்களாக மாறுகின்றார்கள் அல்லது மாற்றப்படுகின்றார்கள். தமிழினத்தைப் பொறுத்தவரையில் எமது மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தது மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்ற போது மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். 

எங்களுடைய மக்கள் நிறையத் தேவைகளை உடையவர்களாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். உண்ண உணவில்லை,  இருக்க இடமில்லை, தொழில் வாய்ப்பு இல்லை, அவர்கள் காணிகள் வெளியார் சுவீகரிப்பில் அகப்பட்டுள்ளன, பிள்ளைகள் சிறையில் வாடுகின்றார்கள் அல்லது காணமற் போயுள்ளார்கள் என இன்னோரன்ன பிரச்சனைகள் பல அவர்கள் முன் தலைதூக்கி நிற்கின்றன. 

ஒரு காலத்திலே மிகச் சிறப்புடன் வாழ்ந்த எத்தனையோ குடும்பங்கள் இன்று ஏதிலிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள். பல குடும்பங்கள் தமது குடும்பத் தலைவர்களை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர். 

பிள்ளைகளை இழந்தவர்கள், பெற்றோர்களை இழந்த சிறார்கள் என பலதரப்பட்ட மக்கள் தினமும் எம்மிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களின் சோகக் கதைகள் எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன. இவர்களுக்கு உதவுவதற்கு நாமும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் அரசாங்கம் தரும் பணம் மிகச் சொற்பமே. அவற்றைக் கூடுமானவரை இலஞ்ச ஊழல்கள் இன்றி மக்களிடம் போய்ச் சேர்ப்பிக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளோம். 

ஆனால் பழைய பழக்கங்கள் எங்கள் அலுவலர்கள் சிலரை விட்டுப் போவதாக இல்லை. வறியவர்களிடம் வலிந்தெடுக்கும் வக்கிர புத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.  

வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெறுகின்ற நிதிகளை உண்மையில் தேவையுள்ள எமது மக்களுக்கு முழுமையாக எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டபோது முந்திய அரசாங்கத்தினால் பல தடைகள் விதிக்கப்பட்டன. 

இப்போது சற்று இணக்கமான சூழல் தென்படுகின்றது. ஆனாலும் முழுமையான அங்கீகாரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. முதலமைச்சர் நிதியம் உருவாக்கப்பட்டு விடுமேயாயின் உங்கள் அனைவரிடமும் எமது தேவைகள் குறித்து விண்ணப்பிக்க எம்மால் முடியும். 

அண்மையில் இங்கிலாந்தில் தமிழ் சகோதர சகோதரிமார் என்னிடம் வெளிநாட்டுப் பணத்தை நீட்டினார்கள். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பணமானது சட்டப்படி வரவேண்டும் என்பது எனது விருப்பம். ஆகவே உங்கள் பணங்களை இலங்கையில் எவருனுக்கேனும் அனுப்புங்கள். 

அவர்களை இலங்கைப் பணம் மூலம் எமக்கு அனுப்பச் சொல்லுங்கள். நாங்கள் ஏற்று நீங்கள் விருப்பப்படும் செயற்பாடுகளை செவ்வனே செய்வோம் என்று கூறினேன். சிலர் அவ்வாறு செய்யத் தொடங்கி விட்டார்கள். 

இந்த நொந்து போன சமூகத்தை ஏனைய பிரதேசத்திலுள்ள மக்களுக்கு ஒப்பாக உயர்த்துவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்புக்களும் வழிகாட்டல்களும் மிகமிக அவசியமானது. 

ஆகவே எப்பவாவது ஒரு நாள் உங்கள் அனைவரதும் உதவியை நாடும் நாள் வரும். அதனை முன்கூட்டியே உங்களுக்குக் கூறிவைக்கின்றேன்.


 நாட்டாண்மை ஆட்சி முறைமை நீக்கப்பட வேண்டும். 

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இன்று வடமாகாணத்தை ஆள்வதற்கென ஒரு தனியான அலகாக வடமாகாணசபை உருவாக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று ஒவ்வொரு பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் மாநகரசபையையும் நிர்வகிப்பதற்கு அவற்றிற்கென தனியான ஒவ்வொரு சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் நிர்வகிக்கக்கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் மிக விரைவில் நடைபெற இருக்கின்றன. 

தற்போது அவை வழக்கொழிந்து நிற்கின்றன. இத் தேர்தல்களில் எமது பாரம்பரிய “நாட்டாண்மை முறை” தெரிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேச சபை, நகர சபை அல்லது மாநகர சபை நிர்வாக முறைமையைக் கற்றுத் தேர்ந்தவர்களும் அல்லது கற்றுத் தேற முடிந்தவர்களும் மற்றும் நேர்மையாகச் செயற்படக் கூடியவர்களும், விலை போகாதவர்களும், ஊழல் இலஞ்சத்திற்கு இடமளியாதவர்களும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.  

எந்தக் கட்சியாக இருந்தாலும் மக்கள் நலம் சார்ந்த, படித்த, தன்னலமற்ற சேவையை மக்களுக்குக் கொடுக்கக்கூடிய பிரதிநிதிகளையே நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கள் கட்சி என்பதால் அவர் எப்படிப்பட்டவர் என்றாலும் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படப்படாது. 

இன்று பிரதேசசபை நிர்வாகம்கூட மிகவும் சிக்கலானதொன்றாக மாறி வருகின்றது. கணனி ஞானம், கணக்கு ஞானம், சபையில் நடந்து கொள்ளும் விதம் பற்றிய ஞானம் போன்றவை பிரதேசசபைப் பிரதிநிதிகளுக்கு இருக்க வேண்டும். 

ஆகவே பிரதேசசபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். படியாத சிலர் அண்மைக் காலங்களில் “நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நாங்கள் எதையுஞ் செய்யலாம்” என்று படித்த, பண்புள்ள செயலாளர்களுக்குக் கூறி, அச்செயலாளர்கள் அப்பேர்ப்பட்டவரின் கோரிக்கைகளை மறுத்ததால் குறித்த நபர்கள் அடிதடியில் இறங்கவும் பின்னிற்கவில்லை. 

சட்டத்தில் இடமிருக்கின்றதா என்று பார்க்க அவர்களுக்கு அறிவு குறைவு. எனவே “நான் சொன்னால் அவர் செய்ய வேண்டும்” என்று ஆணவத்துடன் கூறத் தலைப்பட்டு விட்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் சில ஊழியர்கள் என்னைப் பார்க்க வந்தார்கள். அவர்களை உள்ளெடுக்க தற்போதிருக்கும் சட்டத்தில் இடமில்லை. இதைக் கூறினால் அவர்களின் பதில் “சேர்! நீங்கள் எடுங்கள் என்று சொன்னால் அவர்கள் எடுக்கத்தான் வேண்டும்! நீங்கள் ஆணையிடுங்கள்” என்று கூறினார்கள். 

இதுதான் வடமாகாணசபை வரமுன் இருந்த சூழல். அதனை எங்களிடமும் எதிர் பார்க்கின்றார்கள் மக்கள். சட்ட திட்டங்கள், சுற்றறிக்கைகள், காரியாலயப் பழக்க வழக்கங்கள் எதையுமே ஏற்காமல் தான்தோன்றித்தனமாக நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். 

இதில் விசித்திரம் என்னவென்றால் எமது வடமாகாணசபை உறுப்பினர்கள் சிலர் கூட இதே போலத்தான் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். சட்டத்திற்கு அமைவாக நடக்க வேண்டும் என்றால் முன்னர் எவ்வாறு செய்தார்கள் என்று கேள்வி கேட்கின்றார்கள். ஆகவே கல்வியறிவின் முக்கியத்துவத்தை இதிலிருந்து உணர்ந்து கொண்டிருப்பீர்கள். 

நீங்கள் கல்விகற்ற இக் கல்லூரித் தாயின் 125வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு இன்று பல்வேறு நாடுகளிலும் இருந்து எவ்வாறு பெருந் தொகைப் பணத்தை செலவளித்து இங்கே வந்திருக்கின்றீர்களோ அதேபோல் எதிர்வரும் தேர்தல்க் காலத்திலும் இங்கே வந்து உங்கள் உங்கள் பகுதிக்குரிய பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளில் முன்னின்று உழைக்க வேண்டும். 

படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் ஊழல் அற்றவர்களையும் தேர்ந்தெடுக்க உதவி புரிய வேண்டும். அதுமட்டுமல்லாது நீங்கள் சார்ந்த கட்சிகளில் மிகச் சிறப்பானவர்களைப் போட்டியிட வைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டும். 

எமது தற்போதைய “நாட்டாண்மை” ஆட்சி முறைமை நீக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் எமது மக்களுக்கு ஒரு பூரண விடிவு கிடைக்கும். 



ஒழுங்கான, வினைத்திறன் மிக்க, விலைபோகாத, நேர்மையான, ஒரு அரசியற் கட்டமைப்பு தேவை.


வன்முறை மூலம் நிர்வாகம் நடந்த காலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும். தற்போது நடந்து முடிந்த தேர்தலின் போது கோடி கோடியாகப் பணம் செலவழிக்கப்பட்டது. பணத்தைச் செலவழித்தவர்கள் எவ்வாறு தாம் செலவழித்ததை இனி ஈடு செய்ய முடியும் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கின்றார்கள். 

சிலர் பணம் தந்த நிறுவனங்களுக்கு எவ்வாறு விஸ்வாசமாய் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்கள். பணம் செலவழித்து வாக்குகளை வாங்கும் அண்மைக்கால பழக்கங்களை நாங்கள் இனியாவது கைவிட வேண்டும். 


இப்போது எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவது ஒழுங்கானதும், வினைத்திறன் மிக்கதும், விலைபோகாததும், நேர்மையானதுமான ஒரு அரசியற் கட்டமைப்பாகும். அவ்வாறான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமாகவே எமது பணிகளை விரைவு படுத்தி எம்மக்களின் வாழ்க்கைத்தரத்தை ஓர் உயர் நிலைக்கு கொண்டு வர முடியும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.


குறையிருந்து எடுத்துக் காட்டினால் எதிர்ப்பு அரசியல்வாதி.

 
என்னைப் பலரும் ஒரு “எதிர்ப்பு அரசியல் வாதி" என வர்ணிப்பதை நான் அறிவேன். நான் ஒரு அரசியல்வாதியும் இல்லை. கட்சி சார்ந்தவனும் இல்லை. நீதித்துறையில் எனது காலத்தைக் கழித்த பின்னர் சிவனே என்று ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும், சட்டத்துடனும் மூழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தார்கள். 

தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். மக்களும் தங்கள் வாக்குகளைப் பெருவாரியாக எனக்கு அளித்து அமோக வெற்றியடையச் செய்தார்கள். அதனால் என் நிலை மாறியது. 

நான் கொழும்பிலே பிறந்து, கொழும்பிலே கல்வி கற்று, அங்கேயே சீவித்தவன். சுமார் 10 வருடங்கள் வடகிழக்கு மாகாணங்களில் நீதித்துறையில் இருந்து கடமையாற்றியவன். 

ஆனால் சிறுவயது முதல் எனக்கு தமிழ் மீது பற்று, தமிழர்கள் மீதும் பற்று; அத்துடன் வடமாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் எனப் பிரித்து நோக்காது அனைத்து தமிழர்களும் இந்த இலங்கைத் திருநாட்டில் சிங்கள மக்களுடன் சம அந்தஸ்துடைய இனமாக வாழ வேண்டுமென்பதில் குறியாக இருந்தவன்.  

எனினும் இங்கு வந்த பின்னர் தினமும் என்னைச் சந்திக்க வருகின்ற மக்கள் படுகின்ற அவலங்கள் பற்றி, அவர்களுடைய கஸ்டங்கள் பற்றி, அவர்களுடைய தேவைகள் பற்றி, அவர்கள் பறிகொடுத்த வசதிகள் பற்றி, அவர்கள் வாழ்வில் இழந்தவை பற்றித் தமது சோகக் கதைகளை எனக்கு எடுத்துக் கூறக் கூற என்னுள் ஒரு வைராக்கியம் பிறந்தது. இந்த மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் எந்த மட்டத்திலாவது சென்று பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று. 

அதற்காக நான் எவ்வாறான எதிர்ப்பை அல்லது பழிச்சொல்லை ஏற்க நேர்ந்தாலும். நான் அதைப்பற்றி கவலைப்படப் போவதில்லை. சில கட்சிகளில் ஒருவர், இருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோருமே கட்டுப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். அவர்களின் முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் “எதிர்ப்பு அரசியல்வாதி” என்கின்றார்கள். 



ஆகையால்த்தான் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நீங்களும் இதுபற்றி நன்றாகச் சிந்தியுங்கள். எது நல்லது என நம்புகின்றீர்களோ அதனை வலுப்பெறச் செய்வதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள்! 

அவ்வாறான செயல்களுக்கான அத்திவாரங்கள் இப்போதிருந்தே இடப்பட்டு திட்டமிட்ட முறையில் மிகச் சிறப்பான சபைகளை எதிர்வரும் தேர்தல்களில் உருவாக்குவோம். அத்துடன் எங்கள் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பாடு படுவோம் என தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124334/language/ta-IN/article.aspx

 

Wigneswaran lashes out at concentration of power in his party 

Sri Lanka’ Northern Province Chief Minister C.V.Wigneswaran on Sunday publicly lashed out at “concentration of power” in the Ilankai Tamil Arasu Katchi (ITAK), the party to which he belongs.

ITAK is the single largest constituent of the Tamil National Alliance (TNA). Striking a belligerent note in his address at the 125th anniversary function of Jaffna Hindu College, Wigneswaran vowed to stick to his convictions and urged the younger generation to do likewise. 

   “In certain political parties one or two persons are taking all decisions. These power centers expect others to accept the decisions they take. If others point out  deficiencies in these decisions, they are branded as opposition parties,” he said.

  Though Wigneswaran did not mention the ITAK, it was clear that the cap fitted it.  He has been having a cold war with the ITAK leadership troika comprising R.Sampanthan, M.A.Sumanthiran and Mavai Senathirajah. While the ‘troika’ views the Supreme Court judge-turned Chief Minister as their protégé who should take orders from them, Wigneswaran feels that he got elected on the strength of his own credentials as a Tamil nationalist. On Sunday, he said that he was a Tamil nationalist at heart even while being a judge.

  While the troika has been veering towards cooperation with the new and liberal Maithripala Sirisena-Ranil Wickremesinghe government at the Center, Wigneswaran feels that the Tamils have not got much from the change of regime. He feels that the TNA should keep up its uncompromising line on the Tamil question.

In the run up to the August 17 parliamentary elections, Wigneswaran unilaterally issued a statement saying that he would be “neutral” and  appealed to the Tamils to vote for genuine and un-buyable Tamil nationalists. The ITAK leadership took this as an endorsement of the radical Tamil National Peoples’ Front (TNPF). They charged that ITAK/TNA lost two seats because of Wigneswaran’s statement.

When the matter was raised at the last ITAK Executive Committee meeting, it was decided to have talks at the highest level. But clearly, the talks, if held, were fruitless. Wigneswaran continues to be belligerent and an irritant to the ITAK leadership. (New Indian Express) - See more at:

http://www.dailymirror.lk/88957/wigneswaran-lashes-out-at-concentration-of-power-in-his-party#sthash.JO1WNfSh.dpuf

http://www.dailymirror.lk/88957/wigneswaran-lashes-out-at-concentration-of-power-in-his-party#sthash.JO1WNfSh.dpuf

 

Edited by no fire zone

  • தொடங்கியவர்

“In certain political parties one or two persons are taking all decisions. These power centers expect others to accept the decisions they take. If others point out  deficiencies in these decisions, they are branded as opposition parties,” he said.

  Though Wigneswaran did not mention the ITAK, it was clear that the cap fitted it.  He has been having a cold war with the ITAK leadership troika comprising R.Sampanthan, M.A.Sumanthiran and Mavai Senathirajah. While the ‘troika’ views the Supreme Court judge-turned Chief Minister as their protégé who should take orders from them, Wigneswaran feels that he got elected on the strength of his own credentials as a Tamil nationalist. On Sunday, he said that he was a Tamil nationalist at heart even while being a judge.

2010 இற்கு பின் தமிழரசு கட்சிக்குள் உட்புகுத்தப்பட்டு (அதன் முன் எங்கிருந்தவர்? என்ன செய்தவர் தமிழினத்துக்கு? ... என்பது யாருக்கும் தெரியாது) , இன்று ஈழத்தமிழரின் தலைவிதியை தன் கைகளில் எடுத்துள்ள சுமந்திரன், இன்று கனடாவில் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு சில  பொதுமக்களை ... அவரின் பாசையில் குறிப்பிடுவதானால் "வேறு கிரகத்தில் இருந்து வந்த புலம்பெயர் சமூகத்தினர்" ... சந்திக்கிறாராம்! (... லண்டனில் சில நாட்களுக்கு முன் பாதிரியார் ஒழுங்கு படுத்திய சந்திப்பில் விரல் விட்டு எண்ணக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையே சந்தித்தாராம். பலர் சந்திக்க விரும்பியும் நிராகரிக்கப்பட்டார்களாம். சந்தர்ப்பம் யாராவதுக்கு கிடைத்தால் ... நாலு கேள்விகளை ..? ... சுனை கெட்டிருக்கும், என்றாலும் ..

அங்காலை தாத்தா, இந்தியாவில் ரீட்மென்ட் என்ற பெயரில் ஒளிந்திருக்கிறாராம்

... மாவை ஜெனீவா என்ற சொல்லை கேட்டாலே சரியாக வெட்கப்படுகிறாராம், வீட்டை விட்டு வெளியே வருகிறார் இல்லையாம்!

... இப்படியாக சில வெடிகளை சி.வி.கே விட்டால் மட்டும் ... கொய்யோ முறையோ, உவரை ஒரு கை பார்ப்போம் .. எனவாவது வெளியே தலையை காட்டுவார்கள்! ... நன்றிகள் சி.வி.கேக்கு!

 

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தமிழரைத்தவிர, புலம்பெயர்தேசத்தில் வாழக்கூடிய ஒருகுறிப்பிட்ட தொகையான இலங்கைத்தீவின் வாழ்ந்த தமிழர்கள் தற்போதைய தாயகத்தின் மக்களால் தங்கள் அரசியல்தலைமை என இனங்காட்டியிருக்கும் அரசியல் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இவர்களைத் தெரிவுசெய்த ஒரு தமிழ்சமுதாயத்தில்தான் 

டக்ளஸ் தேவானந்தா அவர்களையும், விஜயகலா மகேஸ்வரன் அவர்களையும் தேர்வுசெய்து, அதற்கு அடுத்தபடியாக வெற்றிபெறாதுவிட்டாலும் அங்கயன் இராமநாதனுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணியைவிட அதிகப்படியான வாக்குகளை அள்ளிக்கொடுத்த தமிழ்ச்சமூகத்தால் தெரிவு செய்யப்பட்ட இவர்களால் எப்படியான அரசியல்பாதையில் பயணிப்பார்கள் என்பதில் ஓரளவுக்காவது உங்களுக்குப் புரிதல்வேண்டாம்? அவர்கள் தங்களது தகுதிக்குத் தக்கதான அரசியல் முன்னெடுப்புகளைத்தானே செய்வார்கள்.

கொஞ்சமேனும் யோசிச்சிப்பாருங்கள்

திருமணமாகி ஓரிருவாரங்கள், ஒரு தேனீர்ச்சாலையில் மாலைவேளையில் தேனீரருந்த ஒதுங்குகிறார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய வன்முறையாளர்கள் கைகலப்பின்பின்பு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைகிறார், கிட்டத்தட்ட முதிர்கன்னியாக இவ்வளவுகாலமும் திருமணத்திற்காகக் காத்திருந்து ஈடேறிய திருமணவாழ்வு ஒருபெண்ணுக்கு நிரந்தரமாகவில்லை குற்றுயிரும் குலையுயிருமாக அப்பெண்ணும் மருத்துவமனையில்.

அவர்களது இந்த அவல நிலைக்கு தாகுதலாளிகள் மட்டும் காரணமா? சுத்தியிருந்து வேடிக்கை பார்த்தது இந்த அரசியல்த் தலைமையைத் தெரிவுசெய்த மக்களில் ஒருபகுதியினரும்தான்.

சுண்ணாகத்தில் வியாபார நிலையத்துக்குள் புகுந்து பொருட்களை வீசி எறிந்து ரவுடித்தனம் செய்தவர்கள் என்ன வேற்றுக்கிரகவாசிகளா? இந்த அரசியல் தலைமையைத் தெரிவுசெய்த மக்களின் ஒருபகுதியினர்தான்

யாழ்குடாநாட்டில் கடந்த நான்கு மாதத்தில் ஐந்தாயிரத்து எண்ணூறு வாகனவிபத்துக்கள் நடந்தேகியுள்ளது இதில் எண்பத்துக்கு மேற்பட்டோர் மரணமாகியுள்ளனர் சாலை விதிகளைப்பற்றிய எந்த அறிவுமே இல்லாது சட்டவிரோதமாக வாகனஓட்டுனர் அனுமதி பெற்றவர்களும் அனுமதி இல்லாது வாகனமோட்டுவோரும் தான் இதற்குக்காரணம் இவர்களிலும் தற்போதைய அரசியல் தலைமையைத் தேர்ந்தெடுத்தவர்கள் அடக்கம்.

இதைவிட வழிப்பறி, சிறுவர்மீதான பாலியல் வன்முறை, கள்ளத்தொடர்பு காரணமான வன்செயல்கள், அனைத்தையும் மேற்கொள்வது வேற்றுக்கிரகவாசிகள் இல்லை தற்போதைய தமிழர் அரசியற்த்தலைமையைத் தெரிவுசெய்தவர்களில் ஒருபகுதியினரே.

ஆகமொத்தமாக மேற்கூறப்பட்டவர்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் தமிழர்க்கு நல்லது செய்வார்கள் அன்றேல் அதற்கான வினைத்திறன் அவர்களிடம் இருக்கும் என எதிர்பார்ப்பது எந்த அளவில் நியாயம்.

நான் ஒரு வழக்கறிஞராகக் கூறுகிறேன் இனவழிப்பு என்பதற்கான எந்தவித ஆதாரஙகளையும் என்னால் அறியமுடியவில்லை எனக்கூறச்செய்யும் அரசியல்த் தலைமையையே எங்களால் தெரிவுசெய்யமுடியும். அவர்களிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்புகளுக்குத் தீனியை எப்படிப்பெறமுடியும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிலையான தலைமை என்பது யாழ்ப்பாணத்தில்... பேசிச் செய்கிற கலியாணம் மாதிரிச் சட்டுப் புட்டென்று உருவாவதில்லை!

ஒரு நீண்ட காலக் காதலைப் போன்று....தானாகவே.. தேவையின் நிமித்தம் உருவாக வேண்டும்!

தற்போதைய தலைவர்கள் சிலர் .. பேசிச் செய்கிற கலியாண மாப்பிள்ளைகள் மாதிரித்தான்! பெண்ணின் குடும்பத்துக்குச் செஞ்சோற்றுக்கடன் பட்டவர்கள்!

பெண் வீட்டாரின் தேவைகளைத் தான் நிறைவேற்றுவார்கள்!

அறிந்தவர்கள்... புரிந்து கொள்வார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நிலையான தலைமை என்பது யாழ்ப்பாணத்தில்... பேசிச் செய்கிற கலியாணம் மாதிரிச் சட்டுப் புட்டென்று உருவாவதில்லை!

ஒரு நீண்ட காலக் காதலைப் போன்று....தானாகவே.. தேவையின் நிமித்தம் உருவாக வேண்டும்!

தற்போதைய தலைவர்கள் சிலர் .. பேசிச் செய்கிற கலியாண மாப்பிள்ளைகள் மாதிரித்தான்! பெண்ணின் குடும்பத்துக்குச் செஞ்சோற்றுக்கடன் பட்டவர்கள்!

பெண் வீட்டாரின் தேவைகளைத் தான் நிறைவேற்றுவார்கள்!

அறிந்தவர்கள்... புரிந்து கொள்வார்கள்!

இதிலை புரிய என்னங்க இருக்கு 
எலும்பு வீசுகிறவனுக்கு நாய் வால் ஆட்டிவிட்டு போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

cm.jpg

என்னை பலரும் எதிர்ப்பு அரசியல் வாதியென வர்ணிப்பது  நான் அறிவேன். நான் அரசியல் வாதியும் இல்லை, கட்சி சார்ந்தவனும் இல்லை, நீதித்துறையில் சில காலம் களித்த பின்னர் ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும் ,சட்டத்துடனும், முழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தேர்தலில் போட்டியிட  வைத்தார்கள். இதனால் என்நிலை மாறியது என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்று யாழ்.இந்துக்கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 

நான் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றேன் பின்னர் எனது நிலை மாறியது. மக்களுக்கு சேவையாற்றும் வைராக்கியத்துடன் இருந்தேன்  மக்களுக்காக எவ்வாறான எதிர்ப்பும் பழிச்சொல்லும் எனக்கு நேர்ந்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை.

தமிழினத்தைப் பொறுத்தவரையில் எமது மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தது மட்டுமல்லாமல் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்ற போது மிகவும் பின்னடைந்த நிலையில் இருப்பதை நாம் அவதானிக்கின்றோம். ஒரு காலத்திலே மிகச் சிறப்புடன் வாழ்ந்த எத்தனையோ குடும்பங்கள் இன்று ஏதிலிகளாக மாற்றப்பட்டிருக்கின்றார்கள்.பல குடும்பங்கள் தமது குடும்பத் தலைவர்களை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.பிள்ளைகளை இழந்தவர்கள், பெற்றோர்களை இழந்த சிறார்கள் என பலதரப்பட்ட மக்கள் தினமும் எம்மிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களின் சோகக் கதைகள் எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றன.

இவர்களுக்கு உதவுவதற்கு நாமும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அரசாங்கம் தரும் பணம் மிகச் சொற்பமே. அவற்றைக் கூடுமானவரை இலஞ்ச ஊழல்கள் இன்றி மக்களிடம் போய்ச் சேர்ப்பிக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளோம்.ஆனால் பழைய பழக்கங்கள் எங்கள் அலுவலர்கள் சிலரை விட்டுப் போவதாக இல்லை. வறியவர்களிடம் வலிந்தெடுக்கும் வக்கிர புத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இன்று வடமாகாணத்தை ஆள்வதற்கென ஒரு தனியான அலகாக வடமாகாணசபை  உருவாக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஒவ்வொரு பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் மாநகரசபையையும் நிர்வகிப்பதற்கு அவற்றிற்கென தனியான ஒவ்வொரு சபைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதேச சபைகளையும் நகர சபைகளையும் நிர்வகிக்கக்கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல்கள் மிக விரைவில் நடைபெற இருக்கின்றன. தற்போது அவை வழக்கொழிந்து நிற்கின்றன.

இத் தேர்தல்களில் எமது பாரம்பரிய “நாட்டாண்மைமுறை” தெரிவுகள் தவிர்க்கப்பட்டு பிரதேச சபை, நகர சபை அல்லது மாநகர சபை நிர்வாக முறைமையைக் கற்றுத் தேர்ந்தவர்களும் அல்லது கற்றுத் தேற முடிந்தவர்களும் மற்றும் நேர்மையாகச் செயற்படக் கூடியவர்களும், விலை போகாதவர்களும், ஊழல் இலஞ்சத்திற்கு இடமளியாதவர்களும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும்.

நீங்கள் கல்விகற்ற இக் கல்லூரித் தாயின் 125வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு இன்று பல்வேறு நாடுகளிலும் இருந்து எவ்வாறு பெருந் தொகைப் பணத்தை செலவளித்து இங்கே வந்திருக்கின்றீர்களோ அதேபோல் எதிர்வரும் தேர்தல்க் காலத்திலும் இங்கே வந்து உங்கள் உங்கள் பகுதிக்குரிய பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகளில் முன்னின்று உழைக்க வேண்டும்.படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் ஊழல் அற்றவர்களையும் தேர்ந்தெடுக்க உதவி புரிய வேண்டும். அதுமட்டுமல்லாது நீங்கள் சார்ந்த கட்சிகளில் மிகச் சிறப்பானவர்களைப் போட்டியிட வைப்பதற்கு நீங்கள் பாடுபட வேண்டும்.

எமது தற்போதைய “நாட்டாண்மை” ஆட்சி முறைமை நீக்கப்பட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டில் எமது மக்களுக்கு ஒரு பூரண விடிவு கிடைக்கும்.வன்முறை மூலம் நிர்வாகம் நடந்த காலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.

 

http://onlineuthayan.com/news/651

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.