Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணக் கிளை UTE உடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் ரூபா 56 மில்லியன் நிதியுதவியுடன் செயற்படுத்திய திட்டம்

Featured Replies

நெடுந்­தீவைச் சேர்ந்த மக்­க­ளுக்கு தொடர்ச்­சி­யான குடிநீர் விநி­யோ­கத்தை மேற்­கொள்ளும் வகையில், தேசிய நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபையின் யாழ்ப்­பாண கிளை மற்றும் UTE  ஆகி­யன இணைந்து நீர் வழங்கல் மற்றும் இரு புதிய கடல் நீர் சுத்­தி­க­ரிக்கும் (Reverse Osmosis) நிலை­யங்­களை நிறுவ முன்­வந்­துள்­ளன. 


626DSC08812.jpg

 நெடுந்­தீவுப் பகு­தியில் தூய்­மை­யான குடி­நீ­ருக்­காக காணப்­படும் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.
 
இந்த விட­யத்தைக் கவ­னத்தில் கொண்டு, 56 மில்­லியன் ரூபாய் பெறு­ம­தி­யான (Reverse Osmosis) நீர் சுத்­தி­க­ரிக்கும் நிலை­யங்கள் நிறு­வப்­பட்­டுள்­ளன.
 

626DSC08819.jpg

 இந்த நிலை­யங்கள், நாளொன்­றுக்கு 100 கன மீற்றர் உப்பு நீரை தூய்­மை­யாக்கி குடி­நீ­ராக மாற்றும் திறனை கொண்­டுள்­ளன. 
 
இலங்­கையில் காணப்­படும் மிகவும் பின்­தங்­கிய ஒரு தீவாக நெடுந்­தீவு காணப்­ப­டு­கி­றது.
 
கடு­மை­யான அலைகள் காணப்­படும் கடல் பகு­தி­யி­னூ­டாக இந்த தீவுக்கு பய­ணிக்க வேண்­டி­யுள்­ளதால், பலர் இந்த தீவுக்கு செல்­வதை பெரு­ம­ளவு விரும்­பு­வ­தில்லை. 
 
ஆனாலும், இந்தத் தீவுக்கு அரு­கா­மையில் காணப்­படும் நயி­னா­தீ­வுக்கு தின­சரி பெரு­ம­ள­வானோர் விஜயம் செய்­கின்­றனர்.
 
இந்த தீவில் காணப்­படும் ஒரே தூய குடி நீர் மூல­மாக, “ஆழ­ம­றி­யாத கிணறு” (“Devil’s Well”) அமைந்­துள்­ளது.
 
UTE இன் சூழல்சார் செயற்­பா­டு­களில் ஈடு­படும் பொறி­யியல் பிரி­வான இகொ­லொஜிக் சிஸ்டம்ஸ் (பிரைவட்) லிமிட்டெட், யுனைட்டட் டிராக்டர் அன்ட் எக்­யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் நிறு­வ­னத்தின் துணை நிறு­வ­ன­மாக செயற்­ப­டு­கி­றது.
 
மாற்­றி­ய­மைத்துக் கொள்­ளக்­கூ­டிய சூழல்சார் தீர்­வு­களை வழங்கும் முன்­னோடி நிறு­வ­ன­மாக இகொ­லொஜிக் திகழ்­கி­றது.
 
வடி­வ­மைப்பு மற்றும் கட்­டி­ய­மைத்துக்கொள்­ளக்­கூ­டிய செயற்­பா­டு­க­ளுக்­கான
பொறி­யியல் தீர்­வு­களை வழங்கும்  இரு தசாப்த காலப்­ப­கு­திக்கு அதி­க­மான
நிபு­ணத்­து­வத்தைக் கொண்டுள்ள இகொ­லொஜிக், அரச, விருந்­தோம்பல்,
ஆடைத்­தொ­ழிற்­றுறை, இறப்பர், பொதி­யிடல், அச்­சிடல், உரம் மற்றும் துறைசார் இர­சா­யனப் பொருட்கள், உணவு மற்றும் பான வகைகள் மற்றும் நிர்­மாணம் போன்ற வெவ்வேறு துறை­களைச் சேர்ந்த பல வாடிக்­கை­யா­ளர்­களின் நம்­பிக்­கையை பெற்­றுள்­ளது. 
 
மேல­திக சேவை­யாக, இகொ­லொ­ஜிக்­கினால் விநி­யோ­கிக்­கப்­படும் அமைப்­புகள் 24 மணி நேர அவ­சர பரா­ம­ரிப்பு சேவை­களை எவ்­வித மேல­திக கட்­ட­ணங்­க­ளு­மின்றி பெற்றுக் கொள்ளும். 
 
இகொ­லொஜிக்சிஸ்டம்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் மீது நம்­பிக்­கையை கொண்­டுள்ள வாடிக்­கை­யா­ளர்கள், தமது கழி­வுகள் சூழ­லுக்கு மிகவும் குறைந்த பாதிப்­புடன் சிக்­க­ன­மான முறையில் கையா­ளப்­ப­டு­வதை அறி­வார்கள். 
 
இந்த திட்­டத்­துக்­கான கடல்நீர் சுத்­தி­க­ரிக்கும் (Reverse Osmosis) அல­குகள், ஹிடாச்சி அக்­கு­வாடிக் என்­ஜி­னி­யரிங் (பிரைவட்) லிமிட்டெட் நிறு­வ­னத்­தினால் விநி­யோ­கிக்­கப்­பட்­டி­ருந்­தது. 
 
சிங்­கப்­பூரை தள­மாக கொண்­டி­யங்கும் ஹிடாச்சி அக்­கு­வாடிக் என்­ஜி­னி­யரிங் நிறு­வ­னத்­துடன் UTE கைகோர்த்து இந்த திட்­டத்தை இலத்­தி­ர­னியல் மற்றும் பொறி­யியல் உடன்­ப­டிக்­கை­க­ளுக்­கு­அமைய முன்­னெ­டுக்­கி­றது. 
 
இதில் நிறுவல், பரி­சோ­தித்தல், செயற்­ப­டுத்தல் மற்றும் ஊழி­யர்­க­ளுக்­கான பயிற்­சிகள் மற்றும் விற்­ப­னைக்கு பிந்­திய பெரு­ம­ள­வான சேவைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன.
 

http://metronews.lk/business.php?business=626&display=0#sthash.I1FupzpG.dpu

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திட்டம், நெடுந்தீவு மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடக்கவிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

நாமெல்லாம் இந்த ஊருக்கு சொந்தாமகத்தான் இருந்தோம் .....
அடிப்படை நீரே பிரச்சினை என்றால் .....?
மூத்த தலைமுறையே யாழிற்கு வந்துவிட்டது 

எனது வாழ்நாளிலேயே 3 தடவைதான் இங்கு சென்று இருக்கிறேன்...
இனி ஆராய்ச்சியாளர்கள் போலத்தான் போய் எல்லாம் தேடி பார்க்க வேண்டும். 

இப்போதாவது இவை இந்த தீவுக்கு கிட்டுவது 
மகிழ்ச்சியா என்று கூட தெரியவில்லை. 
இப்போதும் ஒரு வெறுமை நிலைதான் இருக்கிறது ... 

மிகவும் நல்ல விடயம். என்ன உந்த அரசியல்வாதிகள் உள்ளை புகுந்து குழப்பியடிக்காவிட்டால் சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.