Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண இணையத் தளத்தில் கவனிப்பாரற்றுத் தமிழ் மொழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vvvvvvv.jpg

வடக்கு மாகாண சபை அரசியல் ரீதியாக செயற்பட ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் தமிழ் மொழி தொடர்ந்தும் புறக்கணிப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் பார்வையிடுவதற்குரிய வசதிகளைக் கொண்டிருக்கின்றது. அதில் வடக்கு மாகாண சபை தொடர்பிலான பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

ஆங்கில மொழி மூலம் இணையத்தளத்தைப் பார்வையிடும்போது, வெளியீடுகளுள் நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புள்ளிவிவரங்கள், மாகாண சபை உறுப்பினர்களின் பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுத் திட்டங்கள் மற்றும் வடக்கு மாகாண சபையின் நிதியியல் அறிக்கை என்று பல்வேறு விடயங்களும் ஆங்கில மொழியில் உள்ளன. 

ஆனால் தமிழ் மொழி மூலம் இணையத் தளத்தைப் பார்வையிடும்போது, வெளியீட்டினுள் தனித்து 2011 ஆம் ஆண்டுக்குரிய ஆளுநர் உரை மாத்திரமே உள்ளது. புள்ளி விவரங்கள் உள்ளிட்ட ஏனைய விவரங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை. 

வடக்கு மாகாண சபை கடந்த 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அமைக்கப்பட்டது. இயங்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழ் மொழி மூலமான தரவு வெளியீடுகளை மாகாண சபை புறக்கணித்து வருகின்றது.

 

http://onlineuthayan.com/news/736

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கணணித் துறையில் தேர்ச்சியடைந்தவர்கள் இல்லையென்றால் இந்திய துணைத் தூதுவரை  நாடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் கணணித் துறையில் தேர்ச்சியடைந்தவர்கள் இல்லையென்றால் இந்திய துணைத் தூதுவரை  நாடலாம்

ஏன் தமிழுக்கு பதில் கிந்தியில் இறங்கவா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.