Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா பற்றிய மூன்று கடப்பாடுகளை லிபரல் கட்சி முன்மொழிந்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்கா பற்றிய மூன்று கடப்பாடுகளை லிபரல் கட்சி முன்மொழிந்துள்ளது: Top News
[Thursday 2015-10-08 19:00]
அக்டோபர் 3, 2015 அன்று ஸ்காபரோ- றூச்  பார்க் கனடா லிபரல்   கட்சி    வேட்பாளர் கரி ஆனந்தசங்கரி, சக வேட்பாளர்கள் மார்க் ஹொலந்து (Ajax)   நவ்தீப் பெயின்ஸ் (Mississauga - Malton) யோன் மக்கலம் (Markham-Thornhill)  மற்றும் ஜெனிபர் கொனல் (Pickering - Uxbridge)  ஒரு தமிழ் கலந்துரையாடல்  ஒன்றை நடத்தினார்கள். கரி  ஆனந்தசங்கரி, லிபரல்  அரசு  சிறிலங்காவோடு   இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின்  சிறிலங்கா பின்பற்றவேண்டிய  மூன்று கடப்பாடுகளை முன்மொழிந்தார்:

அக்டோபர் 3, 2015 அன்று ஸ்காபரோ- றூச் பார்க் கனடா லிபரல் கட்சி வேட்பாளர் கரி ஆனந்தசங்கரி, சக வேட்பாளர்கள் மார்க் ஹொலந்து (Ajax) நவ்தீப் பெயின்ஸ் (Mississauga - Malton) யோன் மக்கலம் (Markham-Thornhill) மற்றும் ஜெனிபர் கொனல் (Pickering - Uxbridge) ஒரு தமிழ் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்கள். கரி ஆனந்தசங்கரி, லிபரல் அரசு சிறிலங்காவோடு இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின் சிறிலங்கா பின்பற்றவேண்டிய மூன்று கடப்பாடுகளை முன்மொழிந்தார்:

  

1. இலங்கையில் பொறுப்புக் கூறல்

a. ஐக்கிய நாடுகள் அவை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட புலன் விசாரணை அறிக்கைகையின் (OISL) அடிப்படையில் ஒக்தோபர் 01, 2015 அன்று சிறிலங்கா பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை (ஐநாமஉஅ) நிறைவேற்றிய தீர்மானத்தை நாங்கள் எச்சரிக்கை கலந்த நம்பிக்கையோடு வரவேற்கிறோம்.

b. நியூயார்க் / ஜெனீவா நகரங்களில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைகள் அவையின் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அதன் இராஜதந்திர செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

c. கனடா, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உரிமைக் கட்டளைக்கு அமைய உருவாக்கப்பட்ட கலப்புப் பொறிமுறைக்கு எங்கள் நிபுணத்துவத்தை (புலனாய்வாளர்கள், வழக்குத்தொடுநர், நீதிபதிகள்) நல்க வேண்டும்.

d. இலங்கையில் பொறுப்புக் கூறலை அடைவது பற்றிய முன்னேற்றத்தை கனடா தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கனடா ஐநாமஉஅ இன் 32 வது மற்றும் 34 வது அமர்வுகளில் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்பதுடன் தேவையேற்படும் போது ஐக்கிய நாடுகள் அவையில் கூடுதலான தலையீட்டையும் மேற்கொள்ள வேண்டும். e. கனடாவில் வசிக்கும், போர்க் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை இழைத்தவர்கள் மீது உலகளாவிய சட்டதிட்டங்களின் கீழ் வழக்குத் தொடர வேண்டும்.

f. சிறிலங்காவின் ஆயுதப் படைகளின் கட்டளை அதிகாரிகளாக எவரேனும் செயற்பட்டிருந்தால் அப்படிப்பட்டவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு எதிராக நாங்கள் பயணத்தடையை நடைமுறைப் படுத்தவேண்டும். g. இலங்கையில் 1948 ஆம் ஆண்டு தொடக்கம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை உட்பட தீவிர அனைத்துல குற்றங்கள் இழைத்தோருக்கு எதிராக ஒரு குற்றவியல், அனைத்துலக, சுதந்திர புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை நாம் வற்புறுத்துவோம்.

(2) நீண்ட கால அரசியல் தீர்வு

a. கனடா லிபரல் அரசு இலங்கையில் சமாதானம் மற்றும் உறுதித்தன்மை நிலவ வேண்டும் என்றால் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் ஆகியோரது சட்டப்படியான குறைகளை நீக்குவதற்கு ஒரு நீண்ட கால அரசியல் தீர்வு அவசியம் எனக் கருதுகிறது.

b. இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு முயற்ச்சிக்கும் அனைத்து தரப்புக்களையும் கனேடிய அரசு ஆதரிக்க வேண்டும்.

c. தமிழ்த் தேசிய இனம் மற்றும் இதர சிறுபான்மையினரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப் படவேண்டும் என நாம் நம்புகிறேம்.

d. கனடா இணைப்பாட்சி (சமஸ்டி) பற்றிய நிபுணத்துவத்தை (இலங்கைக்கு) வழங்க முடியும் என நாம் நம்புகிறோம்.

(3) போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்

a. உள்ளூர் மற்றும் கனடிய அரச சார்பற்ற அமைப்புகளுடன் சேர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேவைபற்றி ஒரு மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.

b. கனடாவின் உதவிகள் பின்வரும் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது உறுதிசெய்யப் படவேண்டும். மனவேதனைக்கு உள்ளானவர்களுக்கு மனவள ஆலோசனை பெறுவதற்கும், பெண்களின் முன்னேற்றத்திர்க்கு அதிகாரம்கொடுப்பதற்கும் , மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இடையில் கூட்டுறவு மற்றும் பரிவர்த்தனை மூலம் உதவி வழங்கல். (உதாரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிளிநொச்சி நகரம் முதலியன.)

"ஜஸ்ரின் ரூடோ இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட வேண்டும் என்றால் பொறுப்புக் கூறல் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார், இலங்கையுடனான இணக்கப்பாடு என்பது கனடாவின் மூன்று கடப்பாடுகளின் நிறைவேற்றத்தில் தங்கியுள்ளது. பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை அடைவதற்கு கனடா மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை அவர் வற்புறுத்தி வந்துள்ளார்" என கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

"கனடா இலங்கையோடு இணங்கி நடப்பது என்ற இந்த முக்கியமான நடவடிக்கை எந்தவிதமான, ஒளிவு மறைவுகளும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன், கனடாவின் மற்றைய சர்வதேசக் கடமைகளுடன் ஒத்ததாகவே இருக்கும். கனடாவுக்கு மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றுக்கு ஆதரவளித்தல் தொடர்பான நீண்ட கால வரலாறு உண்டு. அதே போல் இலங்கை பற்றிய மூன்று கடப்பாடுகளை கடைப்பிடித்தல் அந்தத் தீவின் நீண்டகால சமாதானத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும்" என கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு குணா நாகலிங்கம் அவர்களை 416 520 4584 எண்ணில் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=141937&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.