Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுவமடு வழக்குத் தீர்ப்புக்கு வரவேற்பு

Featured Replies

விசுவமடு வழக்குத் தீர்ப்புக்கு வரவேற்பு
விசுவமடு வழக்குத் தீர்ப்புக்கு வரவேற்பு

விசுவமடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை முன்னுதாரணமானது என வரவேற்றுள்ள பெண்களின் செயற்பாட்டுக்கான வலையமைப்பு பாலியல் குற்ற வழக்குகளை உரிய முறையில் விசாரிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டும் என கோரியிருக்கின்றது.

அத்துடன் ஏற்கனவே பாலியல் வல்லுறவு துஸ்பிரயோகம் என்பவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் ஏனைய வழக்குகளைத் துரிதமாக விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.  அந்த பெண்கள் அமைப்பு இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விசுவமடு இராணுவப் பாலியல் வல்லுறவு வழக்கில் வழங்கப்பட்ட முன்னுதாரணமிகு தீர்ப்பினை பெண்களின் செயற்பாட்டிற்கான வலையமைப்ப வரவேற்கின்றது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களினதும் துணிச்சலினை நாம் பாராட்டுகின்றோம்.

இராணுவத்திற்கு எதிராக பாலியல் துஷ;பிரயோக வழக்குத் தாக்கல் செய்துள்ள ஏனைய பல பெண்களுக்கு இது நம்பிக்கையினை வழங்குவதோடு மாத்திரமல்லாது தொடரந்தும் மௌனமாகத் துயருற்று வாழும் பல பெண்களுக்கும் இது நம்பிக்கையளிக்கின்றது. யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் கூட நீதியைத் தேடும் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் கட்டமைப்பு ரீதியான தடைகளை இது கோடிட்டுக் காட்டுகின்றது.

ஆயுதம் தாங்கிய நபர்களுக்கெதிராக எழுந்து சிறுபான்மை இனப்பெண்கள் நீதிகோருவது அப்படியொன்றும் இலகுவான விடயமல்ல என்ற உண்மையினையும் தாண்டி இக்கூட்டுப் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாம் கொல்லப்படக்கூடிய அபாய நேர்வினையும் பொருட்படுத்தாது இந்த வழக்கினை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றனர்.

கடந்த காலத்திலே பாதுகாப்புப் படையினால் பெண்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவு, சித்திரவதை மற்றும் கொலை தொடர்பான பல வழக்குகளை பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கையாண்டுள்ளது. தமது பாதுகாப்பிற்கும் தமது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கும் ஏற்பட்ட அச்சறுத்தல் காரணமாக இவ்வாறான பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல்கள் பற்றிப் பெண்கள் முறைப்பாடு செய்ய மறுத்து வருகின்றனர்.

இலங்கை அரசாங்கம், பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவை பாலியல் வன்முறைக்கெதிரான சட்டப் பாதுகாப்பினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு, குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் குற்றவாளிகளாக இருக்கும் சம்பவங்களில் அவ்வாறான பாதுகாப்பினை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/1067

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.