Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்? - விஜித ஹேரத் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் கூட எழுதாதது ஏன்? - விஜித ஹேரத் கேள்வி
[Saturday 2015-10-10 08:00]
வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் வடக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என வடக்கு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று 'இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் பிரச்சினை' தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் வடக்கு முதல்வர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை என வடக்கு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று 'இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் ஏற்படும் பிரச்சினை' தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

  

"இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதால் வடக்கு, கிழக்கு மீனவர்கள் பாரிய பாதிப்புக்கு உளளாகியுள்ளனர். இந்தப் பிரச்சினையானது இராஜதந்திர ரீதியாகவும், அரசியல் பிரச்சினையாகவும் பார்க்கப்படுகின்றது. இந்திய - இலங்கை இரு தரப்பிலும் இதனை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்துகின்றனர். 1974 ஜூன் 26இல் கொழும்பிலும், 28இல் டில்லியிலும் கைதுசெய்யப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இரு நாட்டு கடல் எல்லை பிரிக்கப்பட்டது. 5 இலட்சத்து 17 ஆயிரம் சதுர கிலோமீற்றர் கடற்பரப்பு இலங்கைக்கு சொந்தமானது. எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் இலங்கையில் இறைமையும், பாதுகாப்பு பாதிக்கப்படுகின்றன.

இரு நாட்டு அரச தலைவர்களின் விஜயங்களின்போது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன. ஆனால், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது 16 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் இந்தியப் பிரதமர் இங்கு வந்தபோது சில மீனவர்கள் அங்கு விடுவிக்கப்பட்டனர். இப்படியா இரு நாட்டுத் தலைவர்களின் விஜயத்தின்போதும் குறிப்பிட்டளவு மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால், பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினையை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றார்.

இலங்கைச் சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா பல கடிதங்களை எழுதியுள்ளார். ஆனால், வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண முதல்வர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்கூட எழுதவில்லை என்று வடக்கு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதில் ஓர் அரசியல் உள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் இலங்கைக்கு வருடமொன்றுக்கு 564 கோடி ரூபா பணம் இல்லாமல் போகின்றது. இதனால், வடக்கு, கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரம்தான் பாதிக்கப்படுகின்றது. இந்திய மீனவரின் அத்துமீறலானது, இலங்கையின் இறைமை, பாதுகாப்பு என்பவற்றுடன் தொடர்புடையதாக இருப்பதால் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதில் தலையிடவேண்டும். மீன்பிடித்துறை அமைச்சு, வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சு, நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு என்பன இந்த விடயத்தில் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்.

தமது பிரச்சினைகளை மீனவர்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும் என இரு நாட்டு அரச தலைவர்களும் கூறுகின்றனர். மீனவர்களே பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டுமாயின், அரசு எதற்காக உள்ளது? இந்த விடயத்திலிருந்து அரசு கைநழுவ முடியாது. இரு நாட்டு அரசுகளுக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொறுப்புள்ளது. எனவே, கொழும்பு - டில்லியின் தலையீட்டால் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்" - என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=142036&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.