Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர் அத்துமீறலை சர்வதேச விவகாரமாக்க வேண்டும்! - வாசுதேவ யோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய மீனவர் அத்துமீறலை சர்வதேச விவகாரமாக்க வேண்டும்! - வாசுதேவ யோசனை
[Saturday 2015-10-10 08:00]
இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுக்க சர்வதேச சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலான பிரச்சினை போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கின்றது. போர் இடம்பெற்ற காலத்தில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனை தடுக்க சர்வதேச சர்வதேச உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பிலான பிரச்சினை போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரே ஆரம்பிக்கின்றது. போர் இடம்பெற்ற காலத்தில் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டனர்.

  

30 ஆண்டுகளாக இந்திய மீனவர்களின் வாழ்வாதாரமாக காணப்பட்ட ஓர் விடயத்தின் உரிமையையே நாம் கோருகின்றோம்.இந்திய மீனவர்களின் படகுகளை நிறுத்துமாறு ஜனாதிபதி கூறுகின்றார். ஒரே நேரத்தில் 300 – 400 மீன் பிடிப் படகுகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது. பல நாடுகளில் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது. ஐரோப்பாவிலும் இந்தப் பிரச்சினை காணப்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும்.

சர்வதேச மீன்பிடி சட்ட திட்டங்களுக்கு அமைய சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கப்பட வேண்டும். போர் தொடர்பில் மட்டுமா சர்வதேச உதவி கோரப்பட வேண்டும்? மீனவர் பிரச்சினைகளுக்கு சர்வதேச சமூகம் தீர்வு வழங்க முடியும். சீனப் படகுகள் இலங்கைக் கொடியுடன் இலங்கையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றன. பிடிக்கப்படும் மீன்களில் ஒரு பகுதி எமக்கு வழங்கப்படுகின்றது.

கூட்டு ஆணைக்குழு ஒன்றை நிறுவி இழக்கப்படும் மீன் வளத்தை கணக்கிட்டு அதற்காக இந்தியாவிடமிருந்து ஓர் தொகையை பெற்றுக்கொண்டு அதனை இலங்கை மீனவர்களின் நலனுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும் என வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=142042&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.