Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழருக்கான நீதியை வென்றெடுக்கவும், ஒன்றுபட்டு தொடர்ந்து போராட தமிழினம் உறுதியேற்க வேண்டும்: - தொல்.திருமாவளவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத் தமிழருக்கான நீதியை வென்றெடுக்கவும், ஒன்றுபட்டு தொடர்ந்து போராட தமிழினம் உறுதியேற்க வேண்டும்: - தொல்.திருமாவளவன்
[Friday 2015-10-09 21:00]
ராஜபக்ச மட்டுமல்ல இன்றைக்கு ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியுள்ள, சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் ஈழத் தமிழர்களைக் கொன்றுகுவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளே என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் ஜெர்மனியில் 10 அக்டோபர் 2015 அன்று ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெற இருக்கின்றது. இம்மாநாட்டுக்கு வாழ்த்துக் தெரிவிக்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவடிவமும் இங்கே தரப்படுகின்றது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் ஜெர்மனியில் 10 அக்டோபர் 2015 அன்று ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறவிருப்பதை அறிந்து பெரிதும்  மகிழ்ச்சியடைகிறேன்.

இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென இயக்கத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் மதிப்பிற்குரிய துரை.கணேசலிங்கன் அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்தார். தவிர்க்க இயலாத காரணங்களால் என்னால் பங்கேற்க இயலவில்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன். இம்மாநாடு வெற்றிகரமாக நடந்தேற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், ஈழத் தமிழரை வஞ்சிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில் இம்மாநாடு நடைபெறுகிறது. எனவே, இது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒரு மாநாடாகக் கருதப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகமே ஈழத் தமிழர்களின் கடைசி நம்பிக்கை எனக் கருதிக்கொண்டிருந்த நிலையில், அதுவும் தகர்ந்துபோனது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுமே ஈழத் தமிழர்களைக் கைவிட்டு விட்டன. சிங்கள இனவெறியர்கள் மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்து வரவேற்கும் வகையிலான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நம்பகமான, சுதந்திரமான, சிங்களவன் இடம்பெறாத, சர்வதேசப் புலனாய்வு விசாரணை வேண்டுமென்பதே உலகத் தமிழர்களின் ஒற்றைக் கோரிக்கையாகும். ஆனால், சிங்கள இனவெறியர்களின் கட்டுப்பாட்டில், சிங்கள நீதிபதிகள் உட்பட சர்வதேச நீதிபதிகள் இடம்பெறும் ‘கலப்பு விசாரணை’ முறையைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர். இதனால் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. சிங்கள அதிபர் மைத்ரிபால சிறீசேனா, இந்தக் கலப்பு விசாரணை முறையிலும் சர்வதேச வழக்கறிஞர்களுக்கு இடமில்லையென்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எப்படி நேர்மையாகவும் நம்பகமாகவும் இவ்விசாரணை நடைபெறும்? குற்றவாளிகளே எப்படி தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தாங்களே விசாரித்துக்கொள்வார்கள்?

ராஜபக்ச மட்டுமல்ல! இன்றைக்கு ஆட்சிபீடத்தைக் கைப்பற்றியுள்ள, சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கவும் ஈழத் தமிழர்களைக் கொன்றுகுவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளே என்பதை உலகம் அறியும்.

அக்குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் விசாரணை நடக்கும் என்பது எவ்வளவு மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். சர்வதேசச் சமூகம் குறிப்பாக, ஐ.நா.மனித உரிமைப் பேரவை எவ்வாறு இப்படியொரு விசாரணை முறையை ஏற்றுக்கொண்டது என்பதுதான் பெருங்கவலையாக உள்ளது. உலகத் தமிழர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. குற்றவாளிகள் தப்பித்துக்கொள்வதற்கு ஏதுவான ஒரு சூழல் அமைந்து விட்டது. இந்நிலையில், உலகத் தமிழர்களின் ஒற்றுமை ஒரு வரலாற்றுத் தேவையாக மாறியுள்ளது.

சர்வதேசச் சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், ஈழத் தமிழருக்கான நீதியை வென்றெடுக்கவும், ஒன்றுபட்டு தொடர்ந்து போராட தமிழினம் உறுதியேற்க வேண்டும். அத்தகைய உறுதியை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு மாநாடாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஜெர்மனி மாநாடு அமைந்திட வேண்டுமெனவும், இது வெற்றிகரமாக நடந்தேற வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=142014&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.