Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஆறடி பனை போல் 
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை 
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே 
குதி இருக்குதுகால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர 
கண்டதையும்வைதிருந்தவளே 
கை இருக்குதுகைப்பை எங்கே ...?

கண்டதையும் பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
உன் முகம் எங்கே .....?
முகம் இருக்குது அழகு எங்கே ..?

கானா கவிதை 
கே இனியவன்

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காதல் என்று சொல்லிக்கொண்டு
தெருக்களின் மூலைகளிலும் ...
தெரு சனங்கள் கூடுமிடத்திலும் ....
உலகில் நீங்கள் மட்டும் தான் ....
மனிதர் என்று நினைப்பவர்களே ....
தெருவோரா காதல் செய்பவர்களே ....
உங்களை கட்டையால் அடிக்க ....
முடியவில்லை என்னால் .....
கவிதையால் அடிக்கிறேன் ......!!!


சிறுவர் பூங்காவிலும் ...
சிறுவர் பாடசாலை வீதிகளிலும் 
பேரூந்தின் இறுதி ஆசனத்திலும் ...
திரை அரங்கிலும் தெரு எங்கிலும் ...
கேவலம் சாமியின் இடத்திலும் ...
சாமியின் ஊர்வலத்திலும் .....
காதல் என்று சொல்லி காதலை ....
கேவலப்படுத்தும் மடையர்களே ....
உங்களை கட்டையால் அடிக்க ....
முடியவில்லை என்னால் .....
கவிதையால் அடிக்கிறேன் ......!!!


ஒரு குடைக்குள் இருவரும்
நடமாமும் விபச்சாரம் செய்து ....
காதல் என்று காதலை வியாபாரம் ....
செய்யும் மூடர்களே அடிப்பேன் .....
கட்டையால் அல்ல ..
என் கவிதை சாட்டையால் ....!

  • தொடங்கியவர்

ஒருவன் 
வெற்றி பெற வேண்டும் 
என ஆசைப்படால் ......
அதிகாலை 
ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!

ஒருவன் 
சாதனை செய்ய வேண்டும் ....
என்ற ஏக்கம் இருந்தால் 
அதிகாலை ........
நான்கு மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!

ஒருவனை..... 
உலகம் திரும்பி பார்க்க ....
வேண்டுமென்றால் அவன் .....
அதிகாலை ......
மூன்று மணிக்கு ....
துயில் எழ பழகிக்கொள்ள வேண்டும் ....!!!

இவை..... 
வாழ்க்கையாக மாறவேண்டும் .....
சிலநாட்கள் சிலமாதங்கள் போதாது ....
வெற்றியடைந்தவர்கள் அனைவரும் ....
இந்த நிலையில் தான் வெற்றி ....
அடைந்திருக்கிறார்கள் ......!!!

முயற்சித்து பாருங்கள் ....
வெற்றி நிச்சயம் .....!!!

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ஈமெயில் வந்தவுடன் ......
தந்தி செயலிழந்தது......
நம் காதலும் அதேபோல் .....
வசதியான இடம் வந்தது .....
நான் செயழிலந்தேன் ....!!!

என்னதான் ஈமெயில் ....
அனுப்பினாலும் ....
கடிதம்.. தந்தி எழுதும் ...
சுகம் ஈமெயிலில் ....
வரவே வராது .....!!!

நீயும் உணர்வாய் .....
என்ன வசதி வந்தாலும் .....
என் முதல் காதல் ....
மூச்சுவரை இருக்கும் ....!!!

+

கே இனியவன் 
நவீன சிந்தனை கவிதை 
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

  • தொடங்கியவர்

ஜாவா என்பார்கள் ....
மாயா என்பார்கள் ....
கணனியில் காலத்துக்கு ....
காலம் மாறிக்கொண்டே ....
போகிறது அதன் குணம் ....!!!

காதலில் .....
இன்று ஒன்று நாளை ஓன்று .....
என்று வாழ்பவன் ....
காதலிக்கவில்லை ......
காதலை தவறாக புரிந்தவன் ....!!!

காதல் என்பது ....
வன்பொருள் கணனிபகுதி .....
நினைவுகளும் கனவுகளும் ....
மென் பொருள் கணனி பகுதி ....!!!

+

கே இனியவன் 
நவீன சிந்தனை கவிதை 
தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!

  • தொடங்கியவர்

இன்பமாக வாழ்ந்து .....
இல்லற வாழ்க்கையை .....
இறுதிவரை வாழ்ந்தவனுக்கு .....
இறைவன் கொடுக்கும் ....
இன்ப அன்பளிப்பே ....
மரணம் .....!!!

நோயினால் அவத்திப்பட்டு.....
எப்போது தனக்கு மரணம் ....
காத்திருக்கும் நோயாளிக்கு .....
இறைவன் கொடுக்கும் .....
அளப்பரிய வெகுமதி ....
மரணம் .......!!!

தெரியாமல் மனிதனாய் ....
பூவுலகில் பிறந்தவனின் ....
முட்டாள் தனமான செயல் ....
தற்கொலை மரணம் .....!
இறைவன் தந்த உடலையும் ....
உயிரையும் -அனுமதியின்றி ....
பறிக்கும் செயலே தற்கொலை.... 
மரணம் ...!!!

மரணத்தை விரும்புபவன் ....
மரணத்தோடு வாழ்பவன் .....
மரணம் இயற்கையின்கொடை.....
மரணத்தை உணர்ந்து வாழ்பவன் ....
மரணத்தை தவமாய் கருதுபவன் ....
பிரபஞ்சத்தில் ஞானி .....!!!

  • தொடங்கியவர்

வாழ்வில் நான்
மனமுடைந்த பொழுதுகளில்
என்னை அணைத்து என்
வலிகளை எரித்தவள் - நீ

நான்
தடுமாறிய தருணங்களில் என்
தலையைத்தடவி
தன்னம்பிக்கை தந்தவள் - நீ

உனக்கெனக்கொடுக்க
உண்மைக்காதலும் என்
உயிரும் மட்டுமே
உள்ளது என்னிடம் .....!
நீ எதுவும் தர முடிந்தால் ....
உள்ளத்தால் உண்மையான ...
காதலை தந்துவிடு ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

  • தொடங்கியவர்
நீ 
தூக்கி எறிந்த -என் இதயம்
துடித்துக்கொண்டு இருக்கிறது ....
சிதறு தேங்காய் போல் ....
சிதறிக்கிடந்தாலும் .....
இன்னும் இறக்காமல் .....
துடித்துக்கொண்டே இருக்கிறது ....!!!


நீ தூக்கி எறிந்த ....
உன் நினைவுகளும்....
என் நினைவுகளோடு.... 
சேர்ந்து அழுதுகொண்டே ....
இருக்கிறதடி ......!!!

என் 
நரம்புகள் துடி துடித்து 
சாகுதடி ....!
என் நரம்புகளில்....
நகர் வலம் வரும்.....
உன் நினவகளுடன் ....
கலந்த என் நினைவுகளும் ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
 

பகல் நேர நிலவு
இரவு நேர சூரியன்

நீரற்ற அருவி
இசையற்ற காடு

இவையெல்லாம் 
ரசிக்கபடுவதில்லையோ
அவ்வாறே..
நீயில்லாத நான்.. .....!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

  • கருத்துக்கள உறவுகள்

உயிருள்ள ஒரு உருவம் கண்ணுக்குத் தெரியாது மறைந்துபோகத் தொடங்கும் ஆரம்பமே மரணம்.

  • தொடங்கியவர்

உயிருள்ள ஒரு உருவம் கண்ணுக்குத் தெரியாது மறைந்துபோகத் தொடங்கும் ஆரம்பமே மரணம்.

ஆமாம் 
நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

காதலிக்கும் போது....
கிறுக்கிய வரிகளை .....
காதல் கவிதை என்றாள் ....
அற்புதம் அற்புதம் ....
இன்னும் எழுதுங்கள் ...
என்றாள்........!!!

காதலில் தோற்றபின் ....
கிறுக்கிய வரிகளை ....
காதல் தத்துவம் என்றாள் ....
போதும் போதும் ....
இனிமேல் எழுத வேண்டாம் ...
என்கிறாள் ....!!!
+
கே இனியவன் 
காதல் கவிதையும் தத்துவமும் 01

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரா இருக்கு இனியவன்!

காதலில் வெண்டாப்பிறகு நான் உண்மையாக கவிதை எழுதினாலும் குப்பை எண்டு கசக்கிப் போடுகிறாள்! அப்ப நான் என்ன செய்ய?

  • தொடங்கியவர்

கண்களால் கதைபேசி..... 
என்னை காணமல் ஆக்கியவளே .....
கடைசிவரை உன் நினைவையும் ....
காதலையும்கர்ப்பணி தாய் போல்
கவிதையாய் சுமர்ந்து கொண்டிருக்கிறேன் ....!!!

இதயத்தில் பெரு காயத்தை .....
வார்த்தையால் தந்தவளே .....
கடைசிவரை உன் வார்த்தையை ....
கல்லறைவரை சுமப்பேன் .....
கல்லறை தத்துவங்களாய் ....!!!
+
கே இனியவன் 
காதல் கவிதையும் தத்துவமும் 02

  • தொடங்கியவர்

மாணவர்களே .....
தினமும் படிக்கவேண்டும் ....
கடும் பயிற்சி எடுக்க வேண்டும் ....
வீணாகும் நிமிடங்களை நினைத்து ....
கண்ணீர் விடவேண்டும் .....
வருத்து வருத்து உன்னை வருத்து ....
சிறந்த பெறுபேறு நிச்சயம் ....
உன் கையில் தவழும் .....!!!

விளையாட்டு வீரனே......
தினமும் பயிற்சி செய்துகொள் ....
முயற்சிக்கு மேலாக பயிற்சி .....
பயிற்சிக்கு மேலாக முயற்சி .....
வருத்து வருத்து உன்னை வருத்து ....
உலக வெற்றிக்கிண்ணம் .....
உன் கையில் தவழும் .....!!!

முயற்சியாளனே ......
தினமும் ஆபத்தை எதிர்கொள் .....
முட்டு மோது போராடு ......
புதியனபற்றி சிந்தனை செய் .....
வருத்து வருத்து உன்னை வருத்து ....
சிறந்த முதலீட்டுக்கு சிறந்த இலாபம் 
உன் கையில் தவழும் .....!!!
+
கே இனியவன் 
முயற்சிசெய் - பயிற்சிசெய் 
முயற்சி கவிதைகள்

  • தொடங்கியவர்

நான் பழகுவதற்கு
எத்தனையோ மனங்கள் ....
இருக்கலாம் - ஆனால் 
நான் மனம் விட்டு பேச .....
உன்னைவிட்டால் யார் ...?

காதல் கண்ணில் தோன்றி ....
கண்ணில் மறைபவர்களுக்கு ....
காண்பதெல்லாம் காதல் .....
என் இதயத்தில் தோன்றி ....
என் இதயம் வரை இருக்கும் ....
பாக்கியம் உன்னைவிட்டால் யார் ...?

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

  • தொடங்கியவர்

நீ 
அங்கே கைவிரலுக்கு ....
மோதிரம் மாற்றுகிறாய் ....
என்று நினைக்கிறேன் ....
இங்கே .....
நீ தந்த கைவிரல் மோதிரம் ....
என் கையில் கதறி அழுகிறது ....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

  • தொடங்கியவர்

நீ 
பேசிய வார்த்தைகளை 
கவிதையாக்கினேன் ....!!!
நீ 
இப்போ பேசாமல் இருக்கும் ....
வார்த்தைகள் கல்லறை ....
வாசகங்களாய் மாறி வருகிறது ....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

  • தொடங்கியவர்

உன்னை ...
காதல் செய்தபோது ......
மரணம் தாண்டி வாழ்வேன்....
இனி நான் இறந்தாலும்
உயிர்ப்பேன் ..........
என்றெல்லாம் நினைத்தேன் ....
எல்லாம் கனவாய் ...
போய்விட்டதே .....!!!
+
கல்லறை இதயத்தின் கதறல் 
கே இனியவன்

  • தொடங்கியவர்

மன்னித்துவிடாதே ....!!!

நண்பா ....
அறியாமையை அறிந்து கொள் ....
அறியாமல் தவறு செய்தால் ....
மன்னிக்கலாம் .....
அறிந்தே தவறுசெய்தால் ....
மன்னித்துவிடாதே ....!!!

தீமை என்று தெரிந்தும் ,,,,
நட்பு என்று சொல்லிகொண்டு .....
வரபோகும் நன்மையை ....
அறியாமல் விடுவதே ....
அறியாமையாகும் .....!!!

+
குறள் 831
+
பேதைமை
+
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு 
ஊதியம் போக விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 51

  • தொடங்கியவர்

அறுத்துவிட வேண்டும் ....!!!

அறியாமையில் பெரும் ....
அறியாமை அறிந்துகொள் ....
நண்பா .....!!!

அனுகூலம் இல்லையென்று ....
அறிவுக்கு எட்டியபோதும் ....
தொடர்ந்து அதன்மேல் பற்று ....
வைத்துகொண்டு தொடர்வதாகும் ....
அனுகூலம் இல்லாதவற்றை ....
அறுத்துவிட வேண்டும் ....!!!
+
குறள் 832
+
பேதைமை
+
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை 
கையல்ல தன்கட் செயல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 52

  • தொடங்கியவர்

தலை குனிந்து வெட்கப்படு
--
தீமை ஏற்பட்டால் தலை 
குனிந்து வெட்கப்படு .....
ரசிக்க வேண்டியவற்றை ....
ரசித்து வாழ்,,,,,,
அன்பு வைக்கவேண்டின் ...
அன்புவை .....!!!

செய்ய 
வேண்டிய அனைத்தையும் .....
செய்யாதிருப்பது அறியாமையின் .....
உச்சகட்டம் ....!
அறிவற்றவனின் செயலாகும் ,,,,,!!!

+
குறள் 833
+
பேதைமை
+
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் 
பேணாமை பேதை தொழில்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 53

 
 

நிறைய தவறு செய்பவர்களே 
----
படிக்க வேண்டும் ....
படித்தற்போல் நடக்க வேண்டும் ....
படித்ததை மற்றவருக்கு ....
சொல்லியும் கொடுக்கவேண்டும் ....
இவர்களே அறிவுடையோர் ....!!!

நிறைய படித்து .....
நிறைய அறிந்து ....
நிறைய தவறு செய்பவர்களே .....
அறிவற்றவர்களின் முதன்மை ....
இடத்தவர் ஆவர் ,,,,!!!

+
குறள் 834
+
பேதைமை
+
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் 
பேதையின் பேதையார் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 54

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எல்லாம் எனக்கு தெரியும் ....
----
தான் சொல்வதே சரி ....
தான் செய்வதே சரி ....
யாரும் தடுக்க முடியாது .....
எல்லாம் எனக்கு தெரியும் ....
இதுவே அறிவின்மையின் ....
உச்சமாகும் ....!!!

அறிவின்மையில் வாழ்பவன் ....
நரகலோகத்துக்கு...... 
போகத்தேவையில்லை ......
வாழும் காலத்திலேயே ....
நகரத்திலேயே வாழ்கிறான் ...!!!

+
குறள் 835
+
பேதைமை
+
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் 
தான்புக் கழுந்தும் அளறு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 55

  • தொடங்கியவர்

....................................ஒரு வரியில் இதயக்கவிதைகள்.......................................

" என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "
-------
" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "
-------
" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "
-------
"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "
-------
"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"
-------

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி

.............................. "ஒரு வரியில் காதலும் கவிதையும் "............................

" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "
-------
" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "
-------
" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "
-------
"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "
-------
"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "
-------

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி -02

  • தொடங்கியவர்

....................................ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை .......................................

"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி - 03

  • தொடங்கியவர்

இங்கே.....!!!
துடித்து கொண்டிருக்கும் ....
என் இதயத்தில் உன்நினைவுகள் ....
பூத்து கொண்டிருக்கிறது ....!!!

அங்கே.....?
துடிப்பில்லாத உன் இதயத்தில் .....
நான் என்ன பாடுபடுவேனோ ...?
ஒருமுறை என்னை நினைத்துவிடு ....
உன்னிடம் இருந்து நான் ....
வெளியேறுவிடுகிறேன் ....!!!

நீபாதி நான்பாதி தான் காதல் .....
நீ வேறுபாதி நான் வேறு பாதியாய் .....
என்றாகிவிட்டது நம் காதலில் ....?
நீ இங்கே இருக்கிறாய் 
நான் எங்கே...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.