Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

சுயநலவாதி வாழும் இடத்தில் 
பொதுநலவாதி ஏமாற்றுக்காரன் 

படியாதார் வாழும் இடத்தில் 
படித்தவன் முட்டாள் 

கதைப்பவர் வாழும் இடத்தில் 
கதையாதவன் பித்தன் 

வாசிக்காதார் வாழும் இடத்தில் 
வாசிப்பவன் அலட்டல் காரன் 

குழப்புபவர் வாழும் இடத்தில் 
குழப்பாதவன் ஏமாளி 

குழம்புபவன் வாழும் இடத்தில் 
குழம்பாதவன் திமிர் பிடித்தவன் 

இருப்பவன் வாழும் இடத்தில் 
இல்லாதவன் ஓட்டாண்டி 

கடன்பட்டான் வாழும் இடத்தில் 
கடன்படாதவன் பிழைக்க தெரியாதவன் 

குடித்தவன் வாழும் இடத்தில் 
குடிக்காதவன் அனுபவிக்க தெரியாதவன் 

அம்மனமாய் வாழும் இடத்தில் 
கோவணத்தான் கோமாளி

+
கே இனியவன் 
தத்துவ கவிதை

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கடனாலே வந்த நட்பு வேண்டாம் ..!!! 
சீட்டாலே வந்த நட்பு வேண்டாம் ..!!! 
தற்புகழால் வந்த நட்பு வேண்டாம் ...!!! 

ஆலயத்தில் 
வந்த நட்பு அர்ச்சனைவரை... 
குடியாலே 
வந்த நட்பு வெறி முறியும் வரை... 
கடையாலே 
வந்த நட்பு கடன் வாங்கும் வரை.. 
பயணத்தால் 
வந்த நட்பு பாதையில் நின்றுவிடும் .. 

இணையத்தில்  
வந்த நட்பு வைரஸால் புகும் வரை ...
அறிவிப்பாளரோடு 
வந்த நட்பு நிகழ்ச்சியோடு போகும்.... 
ரெலிபோனால் 
வந்த நட்பு மீதிப்பணம் முடிய போகும்.... 
எதிர்பார்ப்பு எதுவுமே 
இல்லாத நட்பு உயிர் போகும்வரை  ...!!!

+
கே இனியவன் நட்பு கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''

வீதியில் எச்சில் துப்பாதவன் .. ...
பொது இடத்தில் புகைப்பிடிக்காதவன்..... 
சிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....
கழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....
தலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....
ஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...
பேரூந்தின் வாசலில் தொங்கிசெல்லாதவன்.... 
மூடநம்பிகையை நம்பாதவன் ...
பந்தா லொள்ளு செய்யாதவன் ...
குடியால் குடியை அழிக்காதவன்.. ..

'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''
'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''

+
கவிப்புயல் இனியவன் 
நகைசுவை கவிதைகள்
( சிரிக்க மட்டுமல்ல .....)

தந்தை: 
அவன் குடியில்லை, கூத்தியில்லை, புகைப்பதில்லை, வெற்றிலை கூடப் போடுவதில்லை. அவனைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன்.
மகள்:
அவர் எனக்கு வேண்டாம்பா.
தந்தை:
ஏனம்மா? இத்தனை நல்ல பழக்கங்கள் உள்ளவரை வேண்டாம் என்கிறாய்??
மகள்:
கணவனைத் திருத்திய மனைவி என்று நான் எப்படியப்பா பெயரெடுப்பது!!.

 

  • தொடங்கியவர்

தந்தை: 
அவன் குடியில்லை, கூத்தியில்லை, புகைப்பதில்லை, வெற்றிலை கூடப் போடுவதில்லை. அவனைத்தான் உனக்குப் பார்த்திருக்கிறேன்.
மகள்:
அவர் எனக்கு வேண்டாம்பா.
தந்தை:
ஏனம்மா? இத்தனை நல்ல பழக்கங்கள் உள்ளவரை வேண்டாம் என்கிறாய்??
மகள்:
கணவனைத் திருத்திய மனைவி என்று நான் எப்படியப்பா பெயரெடுப்பது!!.

 

அதுதானே நம்ம பொண்ணுங்க சும்மாவா ...?

  • தொடங்கியவர்

 

உறுதிகொண்ட மனம் உள்ளோரும்..

உலகில் வாழ்ந்து பயனில்லை..

அதனால் அனுப்பிவிட்டோம்.. 

தேசியத் தலைவரை...!!! 

sangry_big_redteeth_100-100.gif

உண்மைதான் சூழ்ச்சி கொன்றுவிட்டது 

  • தொடங்கியவர்

என் மனதோடு....
என் நினைவோடும்...
என்னவளின் நினைவுகள் ...
அவள் என்னை பிரிந்தாலும்,....
என் உயிரை உள்ளவரை ....
என் வாழ்வெல்லாம் அவளுக்கே ....!!!
+
உயிரே உனக்காக சிலவரிகள் 
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்

  • தொடங்கியவர்

என் மனதோடு....
என் நினைவோடும்...
என்னவளின் நினைவுகள் ...
அவள் என்னை பிரிந்தாலும்,....
என் உயிரை உள்ளவரை ....
என் வாழ்வெல்லாம் அவளுக்கே ....!!!
+
உயிரே உனக்காக சிலவரிகள் 
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்

சிப்பிக்குள் விழுந்த....
மழைத்துளி முத்தாகும் ...
என் கண்ணுக்குள் விழுந்த ....
காதல் ஆனாய் ....
தண்ணீரில் முத்து கரையும் ....
கண்ணீரில் காதல் கரையும் ...!!!
+
உயிரே உனக்காக சிலவரிகள் 
இவன் உன் உயிர் உனக்காக ...
கிறுக்கும் கிறுக்கன் ....
கே இனியவன்
 
  • தொடங்கியவர்
இறைவா ...!!!
என் இதயத்தை ஏன்..?
மென்மையாக படைத்தாய்...
ஏளனம் செய்கிறார்கள்...
ஏமாற்றுகிறார்கள்.....!!!

கையால் ஆகாதவன் என்கிறார்கள்
கோழை என்கிறார்கள்
நான் மென்மையான
இதயத்தில் பிறந்தது
குற்றமா ..?-இல்லை
மற்றவர்கள் -வன் இதயத்தை
கொண்டவர்களா ...?

பொறுத்த மில்லாத -என்
இதயத்தை மாற்று
நானும் சமூகத்தில்
இணைந்து வாழ்வதற்கு ....!!!

+
கே இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
 
  • தொடங்கியவர்

நீ சிரித்து பேசினால் ...
நட்சத்திரம் மின்னும்......!!

நீ முறைத்து பேசினால் 
மேகம் கறுக்கும்....!!

நீ மறைத்து பேசினால் 
சூரியன் மறையும்...!!

நீ துன்பப்பட்டு பேசினால் 
இடி இடிக்கும்...!!

நீ உருக்கத்தோடு பேசினால் 
தென்றல் வீசும்...!!

நீ பேசாமல் இருந்தால் 
வானம் மப்பும் மந்தாரமுமாகும்...!!

நீ 
தான் என் பருவகாலமாயிற்றே...!!!

  • தொடங்கியவர்

கடவுளே உனக்கு வேண்டும் ...!!!
நாஸ்தீகன் என்று கூறி ....
உன்னை கல் என்கிறார்கள் ....
உன்னில் ஒன்றும் இல்லை என்கிறார்கள் ...
சில நேரம் உன்னையே திருடுகிறார்கள் ...

ஆஸ்தீகனை படைத்தாய் ..!!!
ஆடம்பர வீடு உனக்கு கட்டுகிறார்கள் ...
அழகான பந்தல் போடுகிறார்கள் ..
படைத்தவனுக்கே படையல் போடுகிறார்கள் ..
தங்கநகை போடுகிறார்கள் ...
உலகத்தையே சுமக்கும் உன்னை ..
சுமந்து பெருமை பேசுகிறார்கள் ..

என்னை 
பொறுத்தவரை -இந்த இருவரும்
பாவிகள்தான் .........!!!
கடவுளே உனக்கு வேண்டும் ..
இவர்களை பாவி என்று சொன்ன என்னை
படைத்ததற்கு ...!!!

  • தொடங்கியவர்

சந்தோசமாக பேசி 
சந்தோசமாக பழகி 
சந்தேகப்படும் 
காதலைவிட 

கோபத்தோடு பழகி 
கோபத்தோடு பேசி 
எந்தநேரமும் என்னை 
அன்போடு பார்க்கும் 
நண்பன் எவ்வளவோ மேல் 

சிரித்து சிரித்து 
பேசுபவனை நம்பாதே 
வெறுத்து வெறுத்து 
பேசுபவனை வெறுக்காதே 

  • தொடங்கியவர்

வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து -தெருவில்
போகிறேன் -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...

ஞானத்தில் பழுத்து
அதிகமாக பேசாமல்
ஊத்தை துணியுடன்
ஞான பார்வையுடன்
என் அருகில் ஒருவர்
நிற்கிறார் -அவர் கேட்காமல்
காசை போடுகிறார்கள்
பிச்சையாக ...

என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை
பார்த்து எவ்வளவு
காலம் தான் ஏமாறும்
இந்த உலகம் ...!!!

  • தொடங்கியவர்
சகுனம் பார்த்து
காரியம் செய்பவனை
நம்பாதே ...!!!


உன் நல்ல விடயங்களை
சகுனம் பார்த்தே கெடுத்து
விடுவான் ...!!!


இவன் தான் உனக்கு
வந்த கண்கண்ட சகுனி
நிழல்கள் நிஜமானால்
நிம்மதி பெருகும்
உண்மைகள் வரும்போதுதான்
வாழ்க்கையின் தவறுகள்
புரியும் ......!!!
  • தொடங்கியவர்

மூட்டாமல் வராது
நெருப்பு ....!!!

உன்னை திட்டாமல்
வராது -புத்தி....!!!

முயற்சிக்காமல்
வாராது -வெற்றி.....!!!

தர்மம் செய்யாமல்
வராது -சொத்து....!!!

தர்மம் செய்தால்
அழியாது சொத்து.....!!!

நீ ஒப்பிட்டுப்பார்
ஊரில் நடந்த கொள்ளையை
தர்மவான்கள் இழந்ததில்லை
சொத்தை .....!!!


கே இனியவன் தத்துவ கவிதை

  • தொடங்கியவர்
இறப்பு ஒரு கொடுமைதான் 
ஆனால் இறக்காமல் -உலகில் 
யாரிப்பர் ....???

இறப்பின் போது அழுவது 
இயற்கைதான் -ஆனால் 
அழுததால் மீண்டவர் யார் ...???

இறந்தவரை நினைப்பது 
கவலைதான் -ஆனால் 
நினைத்ததால் -மீண்டும் 
சிரித்தவர் உண்டோ ...???

பட்டுப்போன மரத்தை 
நாளை படப்போகும் 
மரங்கள் தூக்குவதே -பாடை 

செத்துப்போன உடலுக்கு 
நாளை சாகப்போகும் -உடல் 
போடுவதே -கூச்சல் 
பட்டினத்தார் ஒன்றும் 
சும்மா கூச்சலிடவில்லை 
மனிதா ....!!!
 
  • தொடங்கியவர்
உன் 
முகநூலில்...
முகம் காட்டுகிறாய்...
இல்லை .....
என் அகம்படும் பாட்டை 
கேட்பாயா.....?

உன் 
போட்டோ ..
பகுதியை எடுத்துப்பார்த்தேன்
அங்கும் பூக்களின் படம் தான்
இருந்தது ..-சொல்...?

நீ ..
பூக்களின்
பிரியனா ..?
பூவையரின்
பிரியனா ...?
புரியத்துடிக்கிறது
என் மனசு ...!!!

+
முகநூல் காதலருக்காக 
கே இனியவன்
 

 

எங்கேயோ பிறந்தோம் 
எங்கேயோ வாழுகிறோம் 
எங்கேயோ பேசுகிறோம் 
உலக நட்புக்கு -முகநூல் 
பெரும் நூல் 

குறுகிய வட்டத்தில் 
ஊருக்குள் இருந்த 
நம் நட்பு -இப்போ 
உலக நட்பாகியது 
ஆனாலும் -முகநூலே
நாணயத்துக்கு -இருபக்கம் 
உனக்கும் பொருந்தும் ...!!!

வணக்கம் இனியவன்,

நல்ல கவிதைகளை தொடர்ந்து எழுதும் உங்களுக்கு பாராட்டுகள். யாழில் எழுதிய உங்கள் அனைத்து கவிதைகளையும் இரண்டு திரிகளில் தொகுத்து இத் திரியில் இணைத்து உள்ளோம். 

நன்றி

  • தொடங்கியவர்

வணக்கம் இனியவன்,

நல்ல கவிதைகளை தொடர்ந்து எழுதும் உங்களுக்கு பாராட்டுகள். யாழில் எழுதிய உங்கள் அனைத்து கவிதைகளையும் இரண்டு திரிகளில் தொகுத்து இத் திரியில் இணைத்து உள்ளோம். 

நன்றி

மிக்க நன்றி உங்கள்நிர்வாக சுலபதுக்கு உதவும் என்று நினைக்கிறன் 
நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

மரணமே எனக்கு உதவிசெய் ....!!!

சேர்ந்து வாழ காலம் தடுத்தாலும் 
காதலோடு கடைசி வரை வாழ 
துடிக்கிறது மனம்... !!!

கரம் கூப்பி கரைந்து தொழுகிறேன் 
மரணமே என்னை நெருங்காதே......!!!

சேர்ந்தே 
வாழ்வோம் சேர்ந்தே மரிப்போம் ...
இரண்டும் எனக்கு காதலின் ...
பரிசாக அமையட்டும் ....!!!

+

கே இனியவன் 
காதல் கவிதைகள் 

  • தொடங்கியவர்

நீயல்லவோ உயிரே ....!!!

***

பத்து மாதம் 
என்னை சுமந்து பெற்றவள்
என் உயிர் தாய் ....!!!

வாழ்நாள் முழுதும் உன்னை
சுமக்க இருக்கும்
என்னை என்னவென்று ...
அழைப்பாய் உயிரே ...?

உயிரை உயிரால் எடுத்து ...
என் உயிரை சுமப்பவளே ....
தாயின் இன்னொரு பிறப்பு ....
நீயல்லவோ உயிரே ....!!!

+

கே இனியவன் 
காதல் கவிதைகள் 

 

  • தொடங்கியவர்

உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
தாய்க்கு கொடுத்தாய் ....!!!

உன்னை தோளில்...
சுமக்கும் பாக்கியம்
தந்தைக்கு கொடுத்தாய் ...!!!

உன்னை இதயத்தில் ....
சுமக்கும் பாக்கியத்தை ...
எனக்கு கொடுத்தாய் .....!!!

வாழ்க்கை முழுவதும் ....
ஏதோ ஒருவகை சுமை ....
காதல் எல்லா சுமைகளின் ....
கூட்டு மொத்தம் ....!!!

+
கே இனியவன் 
காதல் கவிதைகள் 

  • தொடங்கியவர்

வளர விட்டேன் காதலை ....
மனதில் அதுவே இன்று
என்னை மாற்றி சுற்ற
வைத்து விட்டது....!!!

ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .......
ஒரு மனதாககண் மூடி ....
திறக்கிறேன் காணும் ...
பொருளெல்லாம் நீ ....!!!

+
கே இனியவன் 
காதல் கவிதைகள் 

நினைவுகள்  ஓய்வதில்லை...
மன அலைகள் ஓய்வதில்லை...!!!

என்னைப் பற்றிய நினைவுகள்
உன் மனதிற்குள்ளும்...
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும்...
காரணமே தெரியாமல்
அலைந்து கொண்டிருக்கின்றன...!!!

அலைகள் ஓய்ந்தாலும் ....
காதல் ஓய்வதில்லை ....!!!

+
கே இனியவன் 
காதல் கவிதைகள் 

  • தொடங்கியவர்

வலியை வலியால் ....
உணரவைக்கமுடியும்....
என்றால் தினமும்
கடவுளிடம் வேண்டுவேன் ....
தொடர்ந்து நீ வலியை....
தரவேண்டும் என்பேன் ....!!!

பணம் இருக்கும் இடத்தில்....
நல்ல குணம் இல்லை ....
அது பொய் என்பேன்....
உன்னிடம் நல்ல குணம்....
இருக்கின்றது......!!!

+
கே இனியவன் 
காதல் கவிதைகள் 

என்னவள் எனக்கு தந்த ....
அத்தனை நினைவு பொருட்களும் .....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என்னையும் அவளையும் ....
ஓவியமாய் வரைந்ததை ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....!!!

என் காதலை திருப்பி தா ....
கேட்டாள் கொடுத்துவிட்டேன் ....
வலிகள் நெருஞ்சி முள்போல் ....
குத்துகின்றன அவளுக்காக ....
காதலையும் கொடுத்துவிட்டேன் ....!!!

அவளுக்காக எழுதிய அத்தனை .....
கவிதைகளையும், கிழித்து விட்டேன்....
வரிகளை தான் மறக்க முடியவில்லை.......!
நினைவில் என்றும் வைத்திருப்பேன் ....
ஆயுள் வரை கவிதைக்காக ....
ஆயுள் வரை காதலிப்பதற்காக ....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை 

  • தொடங்கியவர்

நேசித்த இதயத்தையும்
சுவாசித்த மூச்சையும் ....
மரணத்தில் தானே மறக்க ....
முடியும் உயிரே ....!!!

மறந்து விடு மறந்து விடு ....
அடிகடி கூறும் உன்னால் ....
என்னை மறக்கமுடியாது ....
என்னை மறக்கசொல்லி -நீ 
உன் மனக்கவலையை .....
மறக்கிறாயா..? மறைகிறாயா ..?

காதல் எல்லோருக்கும் ....
கைகூடுவத்தில்லை .கூடினால் ...
காதலில் வரலாறு இல்லை ....
நாம் காதல் வரலாறாகிறோம்....!!!

+

கே இனியவன் 
காதல் சோக கவிதை 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

கண்ணீரில் .....

அன்பே ..
நீ தந்த நினைவுகாளால் ..
என் கண்கள் கலங்குகின்றன .
என்றாலும் நான் அழமாட்டேன் ..
என் கண்ணீருக்குள் நீந்திக்கொண்டு இருக்கிறாய் ....


எழுதியவர் : கவிஞர் இனியவன்
நாள் : 27-Dec-12, 5:31 pm

சோக சுகம்
    
நீ கிடைக்க மாட்டாய் என்று நன்றாகத்தெரியும்
என்றாலும் உன் துன்பநினைவுகளும் எனக்கு சுகம்தான்
எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பதற்கு

பத்திரமாக இரு    

நீ எப்போதும் பத்திரமாக என்னோடு இருக்கத்தான் ..
இறைவன் இதயத்தை உள்ளே படைத்திருக்கிறான்

காதல் விடுகதை (நொடி )

நான் நானாக உள்ளபோது
நீ நீயாக இருக்கிறாய்
நீ நீயாக இல்லாதபோது
நான் நானாக இல்லை
நீ நீயாக உள்ளபோது
நான் நானாக இருக்கிறேன் எனின்
நான் யார் ? (..................)
முடிந்தால் விடை தாருங்கள்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.