Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய தேர்தலில் ஈழத்தமிழர் ஆதவு லிபரல் கட்சி ஆட்சியைப்பிடித்தது.! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி.!

Featured Replies

கனேடிய தேர்தலில் ஈழத்தமிழர் ஆதவு லிபரல் கட்சி ஆட்சியைப்பிடித்தது.! ஹரி ஆனந்தசங்கரி  வெற்றி.!


கனடியர்கள் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளின் பின்னர் மாற்றம் ஒன்றை நோக்கி புதிய தலைவர் ஒருவரை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையுடன் பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். 

தற்போதைய பழமைவாத கட்சியின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர்  நான்காவது தடவையாகவும் பிரதமராக போராடிய அதேவேளை லிபரல் கட்சி யானது ஜஸ்டின்ஐ பிரதமராக‌ கொண்டு தனித்து ஆட்சியமைப்பதற்கு மொத்தம் 338 ஆசனங்களில் 170 ஆசனங்கள் தேவையிருப்ப‌தால் தற்போதய நிலவரங்களின்படி 175 ஆசனங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது . இதில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் லிபரல் கட்சியில் கனேடிய குடியுரிமை பெற்ற இலங்கையரரான‌ கரி ஆனந்தசங்கரி தெரிவாகியுள்ளாரெனவும், ஈழத்தமிழர்களின் வாக்கு இவரது வெற்றியில் கணிசமான பங்கு ஆற்றியிருப்பதாக அறியப்படுகிறது.

மூன்றாம் தரப்பான‌ , இடது சார்பு புதிய ஜனநாயகக் கட்சி ( NDP) திரு தோமசும் சிறுபான்மை அரசு அமையுமிடத்து கூட்டணி அமைப்பதற்கு ஆதரவளிக்க வேண்டிய நிலமை தற்போது தேவையற்றுப்போய் விட்டது. ராதிகா சிற்சபேசன் இந்தக்கட்சியிலேயே போடியிட்டு கடந்தமுறை தேர்தலில் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கனடா நாடாளுமன்ற தேர்தல்: ஆட்சி அமைக்கிற்து லிபரல் கட்சி! ஹரி ஆனந்தசங்கரி  வெற்றி!!

கனடா நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. இம்முறை லிபரல் கட்சியே பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிப்பதால் ஆட்சி அமைக்க உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட்ட 6 ஈழத் தமிழ் வேட்பாளர்களில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். கனடா நாடாளுமன்றத்தின் 338 எம்.பி. இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பல முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் படுதோல்வியை சந்தித்துள்ளனர். தற்போதைய நிலையில் லிபரல் கட்சி 101 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 56 இடங்களுடன் பின் தங்கியுள்ளது. கனடாவில் ஆட்சி அமைக்க மொத்தம் 170 இடங்கள் தேவை. 

 இத்தேர்தலில் 6 ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இதில் லிபரல் கட்சி சார்பாக ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் ஹரி ஆனந்தசங்கரி மட்டும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியான ராதிகா சிற்சபை ஈசன் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறை தோல்வியைத் தழுவியுள்ளார். இதேபோல் சாந்திக்குமார், செந்தி செல்லையா, ரோஷான் நல்லரத்தினம், கார்த்திகா கோபிநாத் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125068/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஆனந்தசங்கரியின் மகனுக்கு ஆசனம் .

கனடாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் மகனான ஹரி ஆனந்தசங்கரிக்கு, நாடாளுமன்ற ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. இவர் கனடாவில் லிபரல் கட்சியின் கீழ் போட்டியிட்டுள்ளார்.

 http://www.tamilmirror.lk/157027/கனட-ந-ட-ள-மன-ற-த-ர-தல-ல-ஆனந-தசங-கர-ய-ன-மகன-க-க-ஆசனம-#sthash.HI9MmSnA.dpuf

 

  • தொடங்கியவர்

canada_0.jpg

கனடாவின் பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றியை உறுதி செய்துள்ளதையடுத்து ஜஸ்டின் ட்ரூடோ புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

338 ஆசனங்களைக் கொண்ட கனேடிய பாராளுமன்றத்தில் லிபரல் கட்சி 188 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தற்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 107 தேர்தல் தொகுதிகளில் மாத்திரமே முன்னிலைப் பெற்றுள்ளது.

இடதுசாரிக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி 33 இடங்களில் முன்னிலைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை, கனேடிய புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ள லிபரல் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவின் மறைந்த முன்னாள் பிரதமர் பியெர் ட்ரூடோவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/10/20/கனேடிய-பிரதமராக-லிபரல்-கட்சியின்-ஜஸ்டின்-ட்ரூடோ-தெரிவு

Federal election 2015

Scarborough—Rouge Park

Election results to be verified by Elections Canada. This page will be updated periodically. Last updated 10/20/2015 05:01:04 am ET
LIB
ELECTED
Gary Anandasangaree
Gary
Anandasangaree
Votes
29,906
Vote share
60%
CON
Leslyn Lewis
Leslyn
Lewis
Votes
13,604
Vote share
27%
NDP
KM Shanthikumar
KM
Shanthikumar
Votes
5,164
Vote share
10%
GRN
Calvin Winter
Calvin
Winter
Votes
1,080
Vote share
2%

GRN
 
Calvin
Winter
Votes
1,080
Vote share
2%

Federal election 2015

Scarborough North

Election results to be verified by Elections Canada. This page will be updated periodically. Last updated 10/20/2015 05:02:59 am ET
LIB
ELECTED
Shaun Chen
Shaun
Chen
Votes
18,903
Vote share
48%
CON
Ravinder Malhi
Ravinder
Malhi
Votes
10,738
Vote share
27%
NDP
Rathika Sitsabaiesan
Rathika
Sitsabaiesan
Votes
8,647
Vote share
22%
GRN
Eleni MacDonald
Eleni
MacDonald
Votes
579
Vote share
1%
 
  • கருத்துக்கள உறவுகள்

'கரி'க்கு வாழ்த்துக்கள்!

கரியின் பெருவெற்றி உலகத் தமிழர் பத்திரிகைக்காரர்களுக்கு முகத்தில் அறைந்தது போன்றது!:rolleyes:

வாழ்த்துக்கள்....GARI

பிழையோ சரியோ ...விருப்போ வெறுப்போ ... வாழ்த்துவதில் தவறில்லையே...என்ன தயக்கம் ????

 

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின்குட்டி பாம்பு அதன்குட்டி நட்டுவக்காலி.

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பின்குட்டி பாம்பு அதன்குட்டி நட்டுவக்காலி.

நல்ல சிந்தனை. சிங்களமும் இப்பிடித்தான் யோசிச்சு சிறுவன் பாலச்சந்திரனை முடிச்சிருக்கும் போல. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

போலிருக்கும் என்ன! அதேதான், உண்மையைச் சொல்லுறியள் வாலி.

  • கருத்துக்கள உறவுகள்

லிப் அலையில் அள்ளுப்பட்ட படகு இவர்.  ராதிகா கடந்த முறை.. என் டி பி அலையில் அள்ளுப்பட்டார். இம்முறை என் டி பிக்கும் படு வீழ்ச்சி. என் டி பி கடந்த தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. கனடாவில் அரச மாற்றத்துக்கான அலை.. உவருக்கு உந்தப் பிச்சையை போட்டுள்ளது. அதனை உபயோகமாகப் பயன்படுத்தினால் உண்டு. இல்லை அப்பர் மாதிரி புலம்பல் அரசியல்தான் செய்ய வேண்டி இருக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பலத்த சேறடிப்புகளைக் கடந்து கனடாவில் தமிழர்களின் எதிர்காலம் என்ற ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டு முன்னணிக்கு வந்துள்ள ஹரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். தாயகம் என்ற ரீதியில் பேசி மக்களை ஏமாற்றாமல் இங்குள்ள எம்மினத்தின் எதிர்காலத்திற்கு உரமான அத்திவாரமாக இனங்காணப்பட்டுள்ள ஹரி இம்மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்பதே எமது அவா.

வாழ்த்துக்கள்  ஹரி வென்றவனால்தான் அதிகம் சாதிக்கமுடியும்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள்  ஹரி

வாழ்த்துக்கள்  ஜயா...

ஆர்வக் கோளற்றில் உங்க அப்பாவை கொஞ்சம் மோசமாக பேசி இருப்பேன், அதை எல்லாம்  மனசில வைத்து  பழிவாங்க கூடாது

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஹரி சங்கரிக்கு வாழ்த்துக்கள்.  நீங்கள் சோடை போக மாட்டீர்கள் என நம்பலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.