Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

நம்ப முடிகிறதா?- இயற்கை அதிசயங்கள்!

 

 
wonder_3000917f.jpg
 

உலகில் இயற்கையாக நடைபெறும் அதிசயங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை பார்ப்போமா?

நமீபியாவில் நமீப் என்ற பெயரில் பாலைவனம் உள்ளது. இந்தப் பாலைவனம் எப்போதும் மூடுபனியால் சூழ்ந்தே கிடக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் வீசும் காற்றிலிருந்து ஈரப்பதம் உருவாகி இப்படி மூடுபனி ஏற்படுகிறதாம்.

l உலகில் அமைதியான எரிமலைகளும்கூட உண்டு. இவை பெரிய சத்தத்துடன் வெடித்து ரகளையெல்லாம் செய்யாது. உள்ளே பொங்கும் காலங்களில் அமைதியாக எரிமலைக் குழம்பை வழியவிட்டுக்கொண்டேயிருக்கும். ஹவாய் பகுதியிலிருக்கும் ‘ஷீல்டு வால்கனோஸ்’ எரிமலை இந்த ரகத்தைச் சேர்ந்ததுதான்.

l ஒரு ஆண்டு முழுவதும் அவ்வப்போது வீசும் மின்னல், பூமியின் மேல் 10 மில்லியன் டன் நைட்ரஜனைத் தள்ளிவிடுகிறது.

l மாலையில் அஸ்தமிக்கும் சூரியன் பூமியில் நமக்கு சிவப்பாகத் தெரிகிறது அல்லவா? அண்டார்டிகாவில் அது பச்சையாகத் தெரியும்.

l விமானத்தில் பயணம் செய்யும்போது வானவில்லை முழு வட்டமாகப் பார்க்க முடியும்.

l நிலத்தைவிட நீர் மெதுவாகவே வெப்பமடையும். குளிர்வதும் அப்படித்தான். அதனாலேயே கோடைக் காலத்தில் நீர், நிலத்தை விடக் குளிர்ச்சியாக இருக்கிறது. குளிர்காலத்தில் நிலத்தைவிட நீர் வெப்பமாக இருக்கிறது.

l அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் படுவேகத்தில் ஏகப்பட்ட நீரை கலக்கிறது. அதனால், அமேசான் நதியின் முகத்துவாரத்திலிருந்து கடலினுள் நூறு மைல்வரை இருக்கும் நீர், நல்ல நீர்தானாம். உப்பு நீரல்ல. அதைக் குடிக்கவும் செய்யலாம்.

l உலர்ந்த காற்றைவிட ஈரப்பதமுள்ள காற்றில்தான் உஷ்ணம் அதிக நேரம் நிலைத்திருக்கும். இதனால்தான் இரவுகளில் வெப்பநாடுகள் மிதமான சூட்டோடு இருக்கின்றன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் குளிராகவும் இருக்கின்றன.

l அதிர்ச்சியைத் தாங்குவதில் இரும்புக்கு இணையானது மூங்கில். ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்ற பிறகு, அந்தப் பகுதியின் நடுவில் மூங்கில் புதர்கள் மட்டும் அப்படியே இருந்தன. வேறு எந்தப் புல் பூண்டும் இருக்கவில்லை.

l பசிபிக் கடல் பகுதியில் ஹவாய் தீவில் உள்ள மவுன்ட் அவாய் என்ற இடத்தில் உலகிலேயே எப்போதும் மழை பெய்துகொண்டேயிருக்கும். இங்கு ஆண்டின் ஆறு நாட்கள் மட்டுமே மழை இல்லாமல் இருக்குமாம்.

l ஜெர்மனியில் ஹெம்லஸ் டார்பர் என்ற ஏரி உள்ளது. இந்த ஏரி மற்ற ஏரிகளிலிருந்து மாறுபட்டது. இதன் மேல்புறத்தில் உள்ள நீர் தேனாக இனிக்குமாம். உள்பக்கம் உள்ள நீரோ வேம்பாகக் கசக்குமாம்.

புல் என்றாலே பச்சை வண்ணத்தில் இருக்கும் அல்லவா? அமெரிக்காவில் கெண்டகி மாநிலத்தில் புல்லின் நிறம் பச்சையும் நீலமும் கலந்ததாக இருக்கும். மண் நீல நிறத்தில் இருப்பதால் புல்லும் நீல நிறமாகவே வளர்கிறது.

wonder1_3000919a.jpg

 

நார்வே நாட்டில் ஏப்ரல் மாத கடைசியிலிருந்து ஆகஸ்ட் மாதம்வரை முழு இருளே இங்கு கிடையாது. சூரியன் மறையும் நேரத்தில் காணப்படும் மங்கலான வெளிச்சம் போல எப்போதும் இருக்கும்! நார்வேயின் வடக்குப் பகுதிகளில் கோடையில் இரண்டு மாத காலத்துக்கு சூரியன் முழுவதும் அஸ்தமனம் ஆவதே கிடையாது.

wonder111_3000922a.jpg

காற்றுதான் சூறாவளியாக வீசும் இல்லையா? ஆனால் நெருப்புகூட சூறாவளி போல சீறியிருக்கிறது தெரியுமா? பிரான்ஸில் மார்ட்டினிக்யூ எனும் தீவு உள்ளது. இந்தத் தீவில் பீலி என்னும் எரிமலை 1902-ம் ஆண்டு வெடித்துச் சிதறியது. அப்போது அந்த மலையில் இருந்து நெருப்புக் கோளம் பயங்கரமாக சூறாவளி காற்று போல சீறிப் பாய்ந்ததாம். அதன் காரணமாக செயின்ட் பியரி என்ற நகரமே எரிந்து பொசுங்கிபோனது.

wonder11_3000921a.jpg

 

tamil.thehindu

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

பாரம்பரியத்தை பறைசாற்றும் உலக நாடோடிப் போட்டிகள்

பாரலிம்பிக்ஸ் என்றழைக்கப்படும் மாற்றுத்திறணாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் இன்று ரியோ டி ஜெனீரோவில் தொடங்கும் நிலையில்,உலக நாடோடிப் போட்டிகள் கிர்கிஸ்தானில் நடைபெறுகின்றன.
குதிரையேறி மல்யுத்தம் செய்பவர்கள், எலும்புத் துண்டுகளை வீசுபவர்கள், கழுகுகளை வேட்டையாடுபவர்கள் போன்றோருக்கு உலக நாடோடிகள் விளையாட்டு போட்டிகள் ஒரு களமாக அமைந்துள்ளது.

  • தொடங்கியவர்

 

ரோபோரஸ் பந்தய கார்
ஓட்டுனரில்லா ரோபோரஸ் பந்தய கார்
  • தொடங்கியவர்

 

ஏன் உங்களை உங்கள் சகோதரர்களின் பெயருடன் அழைப்பார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

நார்வே நாட்டில் ஏப்ரல் மாத கடைசியிலிருந்து ஆகஸ்ட் மாதம்வரை முழு இருளே இங்கு கிடையாது. சூரியன் மறையும் நேரத்தில் காணப்படும் மங்கலான வெளிச்சம் போல எப்போதும் இருக்கும்! நார்வேயின் வடக்குப் பகுதிகளில் கோடையில் இரண்டு மாத காலத்துக்கு சூரியன் முழுவதும் அஸ்தமனம் ஆவதே கிடையாது

நோர்வேயிலை இருக்கிற ஆக்களுக்கு ஒரே ஜாலிதான்....:grin:

  • தொடங்கியவர்
1923 : அமெரிக்காவில் 9 கடற்படை கப்பல்கள் விபத்துக்குள்ளாகி மூழ்கின
 

வரலாற்றில் இன்று......

செப்டெம்பர் - 08

 

1514 : லித்துவேனியா மற்றும் போலந்துப் படைகள் ஓர்ஷா என்னுமிடத்தில் ரஷ்யாவைத் தோற்கடித்தன.

 

1655 : சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னனின் படைகள் போலந்தின் வோர்ஸோ நகரை கைப்பற்றின.

 

1727 : இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் குழந்தைகள் பொம்மைக் களியாட்ட விழா ஒன்றில் இடம்பெற்ற பெருந்தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெரும்பாலானோர் குழந்தைகளாவர்.

 

805valrau.jpg1796 : பிரெஞ்சுப் படையினர் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தனர்.

 

1888 : இங்கிலாந்தில் முதலாவது கால்பந்தாட்ட லீக் போட்டிகள் நடைபெற்றன.

 

1900 : அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 8,000 பேர் கொல்லப்பட்டனர்.

 

1923 : கலிபோர்னியா மாநிலத்தில் அமெரிக்கக் கடற்படையின் ஒன்பது கப்பல்கள் விபத்துக்குள்ளாகி மூழ்கின. 

 

1934 : அமெரிக்காவின் நியூ ஜேர்சி கரையோரத்தில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 135 பேர் கொல்லப்பட்டனர்.

 

1941 : இரண்டாம் உலகப் போரில் சோவியத் ய+னியனின்  லெனின்கிராட் நகரை ஜேர்மனி முற்றுகையிட்டது.

 

1943 : இரண்டாம் உலகப் போரில் இத்தாலி சரணடைந்ததை அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.

 

1944 : இரண்டாம் உலகப் போரில் வி2 ரொக்கெட் மூலம் முதல் தடவையாக லண்டன் நகரம் ஜேர்மனியினால் தாக்கப்பட்டது.

 

805varalru.jpg1945 : சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்திற்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.

 

1951 : அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் 48 நாடுகள் ஜப்பானுடன் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்தின.

 

1965 : இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள துவார்க்கா நகர் மீது பாகிஸ்தான் பாரிய முற்றுகையொன்றை நடத்தியது. இத்தினத்தை வருடாந்தம் வெற்றி தினமாக பாகிஸ்தான் கொண்டாடுகிறது.

 

1991 : யூகோஸ்லாவியாவிடம் இருந்து மசிடோனியக் குடியரசு சுதந்திரம் பெற்றது.

 

1994 : அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 132 பேர் உயிரிழந்தனர்.

 

2006 : இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, மற்றும் சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

 

2013 : ருமேனியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14184384_1124220034293356_27807910786653

இந்தியாவின் இசைக்குயில், எண்பதிலும் குரலினிமையில் பதினெட்டாகவே இளமையில் சிறகடிக்கும் ஹிந்தியில் மட்டுமன்றி தமிழ் உட்பட இன்னும் பன்மொழிகளிலும் பாடிக்கொண்டிருக்கும்
பாடகி ஆஷா போஸ்லேயின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Asha Bhosle

 

 

ஆஷா போஸ்லே

 

 
son_3002104f.jpg
 

பிரபல பின்னணிப் பாடகி

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளுள் ஒருவரும் 60 ஆண்டுகளுக்கும் மேல் பின்னணி பாடி வருபவருமான ஆஷா போஸ்லே (Asha Bhosle) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*மகாராஷ்டிரத்தில் சாங்க்லி மாவட்டத்தில் கோர் என்ற கிராமத்தில் பிறந்தார் (1933). தந்தை ஒரு நடிகர். இவரது 9 வயதில் தந்தை காலமானார். குடும்பம் பம்பாயில் குடியேறியதும், இவரும் இவரது அக்கா லதா மங்கேஷ்கரும் திரைப்படங்களில் பாடினர்.

*1943-ல் முதன்முதலாக ‘சலா சலா நவ பாலா’ என்ற மராத்தி மொழிப் பாடலை ஆஷா தனியாகப் பாடினார். 1949-ல் ‘ராத் கீ ராணி’ படப் பாடல் மூலம் புகழ்பெறத் தொடங்கினார்.

*1952-ல் ‘சங்தில்’, அடுத்த ஆண்டு ‘பரிநீதா’ ஆகிய படப் பாடல்களாலும் ராஜ் கபூர் படத்தில் பாடிய ‘நன்ஹே முன்னே பச்சே’ என்ற பாடல் மூலமும் புகழ்பெற்றார். தொடர்ந்து ‘சி.ஐ.டி.’, ‘நயா தௌர்’ ஆகிய படங்களில் பாடிய பாடல்கள் வெற்றி பெற்றதில் பாலிவுட்டில் நிரந்தர இடமும் கிடைத்தது.

1966-ல் ‘தீஸ்ரி மஞ்சில்’ படத்தில் இவர் பாடிய ‘ஆஜா ஆஜா’ என்ற மேற்கத்திய பாணியிலான பாடல் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ‘வசன்’ படத்தில் பாடிய ‘சந்தாமாமா தூர் கே’ என்ற தாலாட்டுப் பாடல் இந்திய அன்னையரின் மனம் கவர்ந்த பாடலாக மாறிவிட்டது.

*’ஹவுரா பிரிட்ஜ்’, ‘மேரே சனம்’, ‘காஷ்மீர் கீ கலி’, ‘வக்த்’, ‘கும்ராஹ்’, ‘சாகர்’, ‘ஆத்மி அவுர் இன்சான்’, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’, ‘உம்ராவ் ஜான்’, ‘இஜாசத்’, ‘யாரோங் கீ பாராத்’, ‘ரங்கீலா’ உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

*மராட்டியர்கள் இவரை ஆஷா ‘தாயி’ (சகோதரி) என்று அன்புடன் குறிப்பிடுவர். தமிழில் ‘நம்ம ஊரு பாட்டுக்காரன்’, ‘ஹே ராம்’, ‘இருவர்’, ‘சந்திரமுகி’ உள்ளிட்ட படங்களில் பாடியுள்ளார். கஜல், பஜனைப் பாடல்கள், கவாலி எனப் பல்வேறு வகைப் பாடல்களைப் பாடும் திறன் கொண்டவர். இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம், தமிழ், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஆங்கிலம், ரஷ்யா, நேபாளம், செக் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார்.

*கனடா, துபாய், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இசைப் பயணங்கள் மேற்கொண்டார். 1990களில் பழம்பெரும் பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இவர் இசையமைத்து, பாடி வெளியிட்ட ‘ராகுல் அன்ட் ஐ’, ‘ஜானம் சம்ஜா கரோ’, ‘ஆப்கி ஆஷா’ உள்ளிட்ட பல இசைத் தட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தன.

*1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்டப் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

*நன்றாகச் சமைப்பார். தங்களுக்கு விருப்பமான உணவைச் சமைத்துத் தரும்படி கேட்கும் பல திரையுலகப் பிரபலங்களுக்கு அன்போடு சமைத்துத் தருவாராம். துபாய், குவைத் ஆகிய இடங்களில் உணவகங்களை நடத்திவருகிறார்.

*இரண்டு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது, பல ஃபிலிம்ஃபேர் விருதுகள், நைட்டிங்கேல் ஆஃப் ஆசியா, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். இன்று 83-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இவர் இப்போதும் திரைப்படங்கள், ஆல்பங்களில் பாடியும், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.

tamil.thehindu

  • தொடங்கியவர்

அகோரமான கட்டடத்திற்கான கிண்ணத்தை வென்ற அடுக்குமாடி....

அகோரமான கட்டடத்திற்கான கிண்ணத்தை வென்ற அடுக்குமாடி....

 
லிங்கன் பிளாசாவின் உரிமையாளர்கள் அற்புதமான வாழ்க்கை தர வசதிகளுடன் கூடிய கட்டடம் என்று அதை விவரித்துள்ளனர். ஆனால் நடுவர்கள் அதை மறுத்துள்ளனர்.

அதன் வடிவங்கள், நிறங்களின் கலவை அந்த கட்டடத்தை குழப்ப நிலைக்கு தள்ளியதாக தெரிவித்துள்ளனர்; அதில் ஒருவர் அதை கொடூரமான ஜெங்கா விளையாட்டை போன்று உள்ளது என்றும் எப்போது இடிந்து விழும் என்று உறுதியளிக்க முடியாது என்றும் விவரித்துள்ளார்.

ஆனால் உரிமையாளர்கள் அதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. இந்த கட்டடத்தின் விலை மில்லியன் டாலர்களை தாண்டிய போதும் அவை அனைத்தும் விற்றுவிட்டன.

http://tamil.adaderana.lk

  • தொடங்கியவர்
கட்டட சுவரில் Tetris விளையாட்டு
 

19133_049922-01-02.jpgடேட்ரிஸ் (Tetris) எனும் வீடியோ கேம் விளையாட்டை பிரமாண்ட கட்டட சுவரில் விளையாடும் போட்டி இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவில் அண்மையில் நடைபெற்றது.

 

இஸ்ரேலியர்களும் வெளிநாட்டவர் களும் இப் போட்டியில் பங்கு பற்றினர்.

 

1.5 மீற்றர் நீளம் கொண்ட பாரிய “ஜோய்ஸ்டிக்”குகளைப் பயன்படுத்தி போட்டியாளர்கள் இவ் விளையாட்டில் ஈடுபட்டனர். 

 

இம் மாத இறுதியில் நடைபெறவுள்ள, நவீன கண்டுபிடிப்புகளுக்கான டெல் அவிவ் விழாவை முன்னிட்டு இப் போட்டி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

 

19133049919-01-02.jpg

 

19133049925-01-02.jpg

 

19133049918-01-02.jpg

 

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14199739_1124221374293222_13158356664902

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரும் மீண்டும் தேசிய அணியில் நுழையக் காத்திருப்பவருமான லஹிரு திரிமன்னேயின் பிறந்தநாள்.
Happy Birthday Lahiru Thirimanna

  • தொடங்கியவர்

அப்போ மீனவர் இப்போ கிரிக்கெட்டர்!

தா.ரமேஷ், படங்கள்: பா.காளிமுத்து

 

p22aa.jpg

ன்டனி தாஸ்... தமிழ்நாடு கிரிக்கெட்டின் அதிரடி ஆல்ரவுண்டர். 27 வயதான இந்த மீனவ இளைஞர், தமிழ்நாடு பிரிமியர் லீக்கின் ஸ்டார் ப்ளேயர். சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடிவரும் ஆன்டனி, கிரிக்கெட்டரான கதை பல ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் நிறைந்தது.

‘‘சொந்த ஊர் நாகர்கோவில் பக்கத்துல பள்ளம். மீன்பிடி கிராமம். அப்பா மீனவர். நான் ஏழாவது படிக்கும்போது எங்க அப்பாவுக்குக் கட்டுமரத்துல அடிபட்டது. அவரால ஒரு வருஷத்துக்குமேல மீன் பிடிக்கப் போக முடியாத சூழல். எனக்கு ஐந்து சகோதரிகள். அப்போ யாருக்கும் கல்யாணம் ஆகலை. அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும். குடும்ப நிலைமை ரொம்ப மோசமா இருந்தது. அதனால 12 வயசுலயே கடலுக்கு மீன்பிடிக்கப் போக ஆரம்பிச்சுட்டேன்.

ஸ்கூல் படிக்கும்போது கிரிக்கெட் விளையாட ரொம்பப் பிடிக்கும். கிடைக்கிற நேரத்துல கிராமப் பசங்களோடு கிரிக்கெட் விளையாடினேன். அப்போ பேட் வாங்கவே ரொம்ப கஷ்டம். தென்னை மட்டை, ஒடைஞ்ச கட்டுமரத் துண்டுனு எது கிடைச்சாலும் செதுக்கி பேட் செஞ்சுருவேன். பூவரச மரம், வேப்பமரக் கம்புகள்ல ஸ்டெம்ப் செய்றது, பெயில்ஸ் கட் பண்றது, கத்தாழை முள்ளை உடைச்சு, பௌண்டரி  லைன்ல செருகுறதுனு... எல்லா எக்யூப் மென்ட்டையும் நானே ரெடி பண்ணிடுவேன்.

‘நீ மேட்ச் ஆடினா சான்ஸ் கிடைக்கும். ட்ரை பண்ணு'னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. ‘பேக்கிரவுண்ட் இல்லைனா தமிழ்நாடு கிரிக்கெட் டீம்குள்ள நுழைய முடியாது’னு சிலர் டிஸ்கரேஜ் பண்ணாங்க. ஆனா, பெருசா ஏதாவது சாதிக்கணும்னு எனக்குள் ஆசை.

2006-ம் ஆண்டு... எங்க ஏரியாவுல ஊரக விளையாட்டு டென்னிஸ் பால் மேட்ச் நடந்தது. அதுல பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிச்சேன். எல்லாரும் நோட் பண்ணாங்க. `தாஸ் நல்லா விளையாடுறான்’னு எங்க ஏரியா முழுக்க செம ஃபேமஸ் ஆகிட்டேன். கன்னியாகுமரி வட்டாரத்துல எங்கே ரப்பர் பால், டென்னிஸ் பால் மேட்ச் நடந்தாலும் நான்தான் கெஸ்ட் ப்ளேயர். என் மேல எனக்கே கான்ஃபிடன்ஸ் வந்தது.

அப்பதான் நாகர்கோவில் சன்னி கிளப்ல ஜாயின்ட் பண்ணேன். என்னைச் செதுக்கியவர் கோச் ஹரிசுப்ரமணியம். 18 வயசுலதான் கிரிக்கெட் பால் மேட்ச் ஆட ஆரம்பிச்சேன். நைட் கடலுக்குப் போவேன். பகல்ல பிராக்டிஸ் பண்ணுவேன். இப்படியே அஞ்சு வருஷம் ஓடுச்சு. ஒருகட்டத்துல, இனி கிரிக்கெட்தான் வாழ்க்கைனு கடல் தொழிலை விட்டுட்டேன்.

p22bb.jpg

`இந்தியாவுக்காக விளையாடுறதுதான் என் கனவு'னு கோச்கிட்ட சொன்னேன். பயிற்சியை அவர் இன்னும் கடுமையாக்கினார். டிஸ்ட்ரிக்ட் அண்டர் 19 டீம்ல ஆடவெச்சார். அதுல நல்லா பெர்ஃபார்ம் பண்ணேன். ஐந்தாவது டிவிஷன்ல ஆட சான்ஸ் வந்தது. அப்புறம், ஒவ்வொரு டிவிஷனா கடந்து ஃபர்ஸ்ட் டிவிஷன் வந்தேன்.

2013-14 சீஸன் ரஞ்சி ட்ராஃபி டீம்ல ஆட இடம் கிடைத்தது. அடுத்த சீஸன்ல ஒன்டே டீம்ல இடம் கிடைத்தது. எம்.ஆர்.எஃப் பேஸ் ஃபவுண்டேஷன்ல ஐந்து  வருஷம் இருந்தப்பதான், மெக்ராத், டென்னிஸ் லில்லினு பெரிய பெரிய லெஜண்ட்ஸ்கிட்ட பயிற்சி எடுக்குற வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் நிறையக் கத்துகிட்டேன்.

டி20, ஒருநாள் கிரிக்கெட்ல என் பெர்ஃபார்மன்ஸ் பார்த்து, நல்ல ஆல் ரவுண்டர்னு முத்திரை விழுந்தது. டி.என்.பி.எல் தொடருக்கு, `சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டீம்' என்னை ஏலத்துல எடுத்தாங்க. நத்தத்துல நடந்த காரைக்குடிக்கு எதிரான மேட்ச்ல 9 ரன்கள் மட்டுமே கொடுத்து நாலு விக்கெட் எடுத்து, மேன் ஆஃப் தி மேட்ச் விருது தட்டினேன்.

இப்போ என் கவனம் முழுக்க டி.என்.பி.எல்-லின் பெஸ்ட் ஆல்ரவுண்டரா தேர்வாகிறதுதான்’’ என நம்பிக்கையோடு கைகொடுக்கிறார் ஆன்டனி தாஸ்!

vikatan

  • தொடங்கியவர்

14203177_578577068991866_742932165246238

14212095_578577085658531_894738008500221

ஆப்பிரிக்காவில் விற்பனையாகும் அம்மா பேக்.. அம்மா புகழ் ஆப்பிரிக்கா வரை பரவியிருக்கு..tw_yum:

  • தொடங்கியவர்

340 பயணிகள் உயிரை காத்தவர் : இந்தியாவும் பாகிஸ்தானும் கொண்டாடிய வீர மங்கை!#Neerja Bhanot

neri%20.jpg

வீரதீரச் செயல்களுக்கு வழங்கப்படும் 'அசோகச் சக்ரா' விருதை இளம் வயதிலேயே வென்றவர் பஞ்சாப்பை சேர்ந்த நீர்ஜா  பனோத். இந்த விருது அளிக்கப்படும் போது 23 வயது நீர்ஜா உயிருடன் இல்லை. அண்டை நாடான பாகிஸ்தானும் தம்ஹா இ இஷானியத் என்ற கவுரவமிக்க விருதை இந்த வீர மங்கைக்கு வழங்கியிருக்கிறது. இந்த இரு தேசங்களும் ஒரு பெண்ணை கொண்டாடுகின்றன என்றால் அதன் பின்னணி என்னவாக இருக்கும்?

கடந்த 1986ம் வருடம் செப்டம்பர் 5-ம் தேதி மும்பையிலிருந்து நியூயார்க் நோக்கி அமெரிக்காவைச் சேர்ந்த பான் ஆம் விமானம் பறந்தது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் இறங்கி எரிபொருள் நிரப்பப்பட வேண்டும். விமான ஊழியர்கள் தவிர, 361 பயணிகளும் விமானத்தில் இருந்தனர். மாடலாக இருந்து விமானப் பணிப் பெண்ணாக மாறிய, நீர்ஜா பனோத்துக்கு இன்னும் 2 நாட்களில் 23வது வயது பிறக்கிறது. அந்த உற்சாகத்தில் அவர் இருந்தார்.

கராச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் இறங்கியது. அப்போது, கராச்சி விமான நிலைய பாதுகாப்பு படையினர் உடையில் அவர்கள் பயன்படுத்தும் வாகனம் ஒன்று பான் ஆம் விமானத்தின் அருகே வந்து நின்றது. அது வழக்கமான ஒன்றுதான் என்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.  அந்த வாகனத்தில் இருந்து குதித்த சிலர் திடீரென்று துப்பாக்கி சகிதமாக பான்ஆம் விமானத்தின் படிக்கட்டுகளில் ஏறினர்.விமானத்தின் கதவை சராமரியாகச் சுட்டுத் திறக்க முயற்சித்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டதுமே நீர்ஜா உஷாராகி விட்டார். உடனடியாக இன்டர்காமில் பைலட்டுக்குத் தகவல் தெரிவித்து உஷார் படுத்தினார். அவர்களை விமானத்தில் இருந்து வெளியேறுமாறும் கூறினார். பைலட்டுகள் விமானத்தில் இருந்து குதித்து தப்பி விட்டனர்.

neerja.jpg

விமானத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள், விமானம் கடத்தப்படுவதாக அறிவித்தனர். 'பயணிகளை இருக்கைகளை விட்டு நகரக் கூடாது. நகர்ந்தால் சுட்டு பொசுக்கி விடுவோம்' என எச்சரித்தனர். பெண்கள் குழந்தைகளின் கண்களில் மரண பீதி. விமானத்தில் மயான அமைதி நிலவியது.  லிபியாவை சேர்ந்த, 'அபு நிதால்' என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரின் கட்டுப்பாட்டில் அந்த அமெரிக்க விமானம் வந்தது. சைப்ராஸ் நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்கள் கூட்டாளிகளை விடுவிக்க வேண்டும் என்பது தீவிரவாதிகளின் கோரிக்கை. விமானத்தில் இருந்த அமெரிக்கப் பயணிகளை இனம் கண்டு சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் தீவிரவாதிகள் வெறி கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, விமானத்தின் காக்பிட்டில் பைலட்டுகள் இல்லை என்பதை அறிந்தும் தீவிரவாதிகளின் கோபத் தலைக்கேறியிருந்தது.  விமானத்தை சைப்ரஸ் நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பதால், முதலில் பைலட்டுகளை விமானத்திற்குள் வரவழைக்கத் தீவிரவாதிகள் திட்டமிட்டனர். பாகிஸ்தானுக்கான பான் ஆம் விமான நிறுவனத் தலைவருடன் இதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அடுத்த, பதினைந்து நிமிடங்களுக்குள் பைலட்டுகள் விமானத்திற்குள் வரவில்லை என்றால் குமார் என்பவரை சுட்டுக் கொல்லப் போவதாக தீவிரவாதிகள் எச்சரித்தனர்.

விமானத்தின் கதவு அருகே குமார் முழங்காலிடப்பட்டு நிறுத்தப்படிருந்தார். கைகளை மேலேத் தூக்கியவாறு குமார் முழங்காலிட்டிருந்தார். அவரது கண்களில் மரணபீதி. பேச்சுவார்தையில் பலன் கிடைக்கவில்லை. ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகள், பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கண் முன்னரே குமாரை தலையில் சுட்டுக் கொன்றனர். பின்னர் விமானத்தில் இருந்து அவரது உடல் வெளியே வீசப்பட்டது. இதனை பார்த்த பயணிகள் பயத்தில் வெட வெடத்து போனார்கள். பயணிகள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுநடுங்கினர்.

ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளில் ஒருவன் நீர்ஜாவை அழைத்தான். அனைத்து பயணிகளிடம் இருந்தும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி வர உத்தரவிட்டான். புத்திசாலியான நீர்ஜா, தீவிரவாதிகளின் நோக்கத்தை அறிந்து கொண்டார். பாஸ்போர்ட்டை வாங்கிய அவர், அமெரிக்க குடிமகன்கள் என்றால், அந்த பாஸ்போர்ட்களை சீட்டுக்கு கீழே ஒளித்து வைத்தார். அப்படி 41 பாஸ்போர்ட்களை நீர்ஜா விமானத்துக்குள் ஆங்காங்கே ஒளித்து வைத்திருந்தார். இதனால் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கர்கள் யார் மற்றவர்கள் யார் என வேறுபடுத்திப் பார்க்க முடியாததால் பல அமெரிக்கர்கள் உயிர் பிழைத்தனர்.

   pan%20amm%20.jpg                          

இதற்கிடையே பாகிஸ்தான் அரசும் தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பதினேழு மணி நேரப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. ஒரு கட்டத்தில், கோபமடைந்த தீவிரவாதிகள், விமானத்தினுள் கண்டபடி சுப்பாக்கிச் சூடு நடத்தினர். தீவிரவாதிகள் சுட்டதில் 20 பயணிகள் இருக்கையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இறந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள். இந்த சமயத்தில், நீர்ஜா சமயோசிதமாக செயல்பட்டு, விமானத்தின் எமர்ஜென்சி கதவை கண்ணிமைக்கும் நேரத்தில் திறந்தார். அவர் நினைத்திருந்தால், முதலில் வெளியே குதித்து தப்பியிருக்க முடியும். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் நீரஜா தனது கடமையில் இருந்து நழுவவில்லை.

கதவைத் திறந்த நீர்ஜா, அவசர அவசரமாக விமானத்தில் இருந்து பயணிகளை வெளியேற்றத் தொடங்கினார். பயணிகள் உயிர் பிழைத்தால் போதுமென்று குதித்து தப்பி ஓடினர். தன்னால் முடிந்த வரை, விமானப்பயணிகளை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் நீர்ஜா படு வேகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து விட்ட தீவிரவாதி ஒருவன், நீர்ஜாவை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். அப்போது நீர்ஜாவிடம் 3 அமெரிக்க குழந்தைகள் இருந்தன. தீவிரவாதி சுடத் தொடங்கியதுமே அந்த குழந்தைகளை கட்டியணைத்து தழுவிக் கொண்டார் நீர்ஜா. நீர்ஜாவின் உடலை துப்பாக்கிக் குண்டுகள் சல்லடையாகத் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் நீர்ஜா சரிந்து கிடக்க, அவரது அரவணைப்பில் மூன்று அமெரிக்க குழந்தைகள் உயிருடன் இருந்தன. அந்த வீரமங்கைக்கு இன்று 53வது பிறந்த நாள். வீரமங்கைகளை தேசம் மறந்து விடக் கூடாது!

vikatan

  • தொடங்கியவர்

 

கட்டண விருந்தாளிகள்!

BBC

  • தொடங்கியவர்
ஸ்டீயரிங்குக்குப் பதிலாக சமையல் பாத்திரத்தை பயன்படுத்தி கார் செலுத்திய நபர்; அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது
 

கார் ஒன்றில் முறையான ஸ்டீயரிங்குக்கு (சுக்கான்) பதிலாக சமையல் பாத்திரமொன்றை பயன்படுத்தி காரை செலுத்திய நபர் ஒருவரை அவுஸ்திரேலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

19137car.jpg

 

அடிலெய்ட் நகரிலுள்ள வீதியொன்றில் கடந்த ஞாயிறன்று நபர் ஒருவர் காரில் கண்டபடி சுற்றித் திரிவதாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

 

பொலிஸார் அங்கு வந்தபோது காரின் சாரதி தப்பிச் சென்றார். அக் காரில் ஸ்டீயரிங்குக்குப் பதிலாக சமையல் பாத்திரமொன்று பயன் படுத்தப்பட்டிருந்ததைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

 

அக் கார் பதிவுசெய்யப்படவோ, காப்புறுதி செய்யப்படவோ இல்லை என்பதும் தெரிய வந்தது. பின்னர் மேற்படி காரின் சாரதி கைது செய்யப்பட்டார். 

 

அவர் அடிலெய்ட் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் பிணை யில் செல்ல அனுமதிப்பதற்கு நீதிமன்றம் மறுத்தது. மேற்படி காரை 28 நாட் களுக்கு தடுத்து வைக்குமாறும் உத்தர விடப்பட்டுள்ளது.

.metronews.lk

Edited by நவீனன்

19 hours ago, குமாரசாமி said:

நோர்வேயிலை இருக்கிற ஆக்களுக்கு ஒரே ஜாலிதான்....:grin:

நாங்க எல்லாம் அந்த காலத்தில் இரவு 11 மணிவரை கிரிக்கெட்டே விளையாடியிருக்கிறோமே.

ஆனாலும் கொடுமை என்னவென்றால் பனிக்காலத்தில் நம்ம சூரியன் சிலமணி நேரமே தலை காட்டுவார்.

10 hours ago, நவீனன் said:

ஆஷா போஸ்லே

உபரித்தகவல்:

இவர் R .D .Burman என்ற பிரபல்யமான இசையமைப்பாளரின் இரண்டாவது மனைவி. இவர் பிரமனின் பாடல்களினாலேயே பிரபல்யமானார்.

  • தொடங்கியவர்

 

அறிவுடையார் எல்லாம் உடையார்...! (இன்று உலக எழுத்தறிவு தினம்)

lit.jpg

அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்... அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். இதெல்லாம் எதற்கு இப்போது என யோசிக்கிறீர்களா? இன்று, (செப்-8) உலக எழுத்தறிவு தினம்.

எழுத்தறிவு தினம்!

ஐ.நா. அமைப்பின் அங்கமாகிய யுனிஸ்கோ எழுத்தறிவுப் பெற்றவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், எழுத்தறிவு இல்லாதவர்கள் இல்லா உலகை உருவாக்கவும் 1965-ம் ஆண்டு, முதன்முதலில் உலக எழுத்தறிவு தினத்தினை செப்டம்பர் 8-ம் தேதி நடத்தியது. அந்த மாநாட்டில்தான் உலக எழுத்தறிவின்மையை அகற்ற மேற்கொள்ளப்பட வேண்டியவை பற்றிய அறிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 1966 செப்டம்பர் 8 முதல் உலக எழுத்தறிவு தினம் பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தைத் தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும் உணரவைப்பதே இந்தத் தினத்தின் நோக்கம்.

எழுத்தறிவின்மை!

ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. உலகின் பலதரப்பட்ட விவரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில், எழுத்தறிவின்மையால் அவற்றை  உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எழுத்தறிவு பிரச்னைதான் கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் எழுத்தறிவுப் பெற்றவர்களாக உள்ளனர். இதில் 82 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இதன்படி எழுத்தறிவில், கேரளா முதல் இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. யுனெஸ்கோவின், ‘அனைவரும் கல்வி பற்றிய உலக அறிக்கை’யின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர்.

 

ELU_2.jpg

 



எழுத்தறிவின்மையும், பிரச்னைகளும்!

எழுத்தறிவைப் பெறமுடியாததற்கான சமூக நிலை தொடர்பானவைகளில் கவனம் செலுத்தப்பட்டது. வறுமை, ஆரோக்கியமின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் உலக நாடுகளில் இன்றும் எழுத்தறிவின்மை காணப்படுகிறது. எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட ஓர் அம்சம். தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்விச் செயல்பாடுகள், அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. எழுத்தறிவின்மை வாசிக்க, எழுதத் தெரியாமை என்பதையும் தாண்டி, நாட்டின் பல்வேறு முன்னேற்றங்களுக்குத் தடையாக இருக்கும். நம் நாட்டைப் பொறுத்தவரையில், பொருளாதாரம் போன்றவற்றுக்குக் கல்வியே பிரதானம். எனினும், கடந்த தலைமுறையில் இருந்து கல்வியால் முன்னேறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வது மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலான விஷயம். பொதுவாக எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, பேச, கேட்டுப் புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.

எழுத்தறிவு மிகவும் முக்கியம்!

எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். கல்விக்கும் எழுத்துக்களுக்கும் முடிவே கிடையாது...

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

அழகான பழைய நகரம்!

 

 
nagar_3000896f.jpg
 

ஏழு உலக அதிசயங்களில் ஒன்று சிச்சென் இட்ஸா . தென் கிழக்கு மெக்ஸிகோவின் யுகட்டான் மாகாணத்தில் அமைந்துள்ளது இந்தப் பாரம்பரிய சிச்சென் இட்ஸா. மிகப் பெரிய புகழ்பெற்ற மாயன் நகரங்களில் ஒன்று இது. மெசோ அமெரிக்கப் பழங்குடியினரான மாயன்கள்தான் சிச்சென் இட்ஸாவை உருவாக்கினார்கள். கொலம்பஸுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த நகரம் இந்த சிச்சென் இட்ஸா.

கி.பி. 600-ல் சிச்சென் இட்ஸா பகுதி புகழ்பெறத் தொடங்கியது. கி.பி.900-ம் ஆண்டிலிருந்து 1050 வரை இந்நகரம் புகழ்பெற்ற தலைநகராக விளங்கியது. 1221-ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போர் காரணமாக சிச்சென் இட்ஸாவின் புகழ் மங்கி, ‘மாயபன்’ என்னும் ஊர் தலைநகராக மாறியது. ஆனாலும், மாயன்களுக்கு சிச்சென் இட்ஸா ஒரு புனிதத் தலமாகவும் வியாபார மையமாகவும் விளங்கியது. வெறும் ஐந்து சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள இந்த நகரில் பல வகையான மக்கள் வசித்தனர்.

அதனால் பல வகையான கலாச்சாரங்களும் காணப்பட்டதால், இங்கு பல வகை பாணி கட்டிடக் கலைகளும் இடம்பெற்றுள்ளன. மாயன்கள் கட்டிடக் கலையில் வல்லவர்கள். கடவுள் உருவங்கள், அரசர்கள், விலங்குகள், போர்க் காட்சிகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் சிற்பங்கள் சிச்சென் இட்ஸாவின் கட்டிடங்களை அலங்கரித்தன.

இப்போது இந்தப் பகுதி சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக உள்ளது. அழிந்துபோன நகரின் மிச்சமான சிச்சென் இட்ஸாவை மெக்ஸிகோ அரசு பராமரித்து வருகிறது. 1988-ம் ஆண்டில் சிச்சென் இட்ஸா, யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

tamil.thehindu

  • தொடங்கியவர்
யானை ஷ்ரூவ்…

யானை ஷ்ரூவ்…

 

விநாயகர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது யானைதான் அதுபோல அவருடைய வாகனமான மூஞ்சுறுவையும் மறக்கமுடியாது.

3 elephant shrew

யானை ஷ்ரூவ் என்றழைக்கப்படும் இவை எலிகள் மற்றும் அணில்கள் போன்றவை அடங்கும் ‘’ரோடன்ட்’’ வகையில் அடங்காது என்றாலும், இதை ஷ்ரூவ் மவுஸ் என்றும் அழைக்கிறார்கள் .

இன்னுமொரு பாலூட்டி இனமான மோல் என்ற வகைக்கும் இவை மிக நெருக்கமானதுதான் என்கிறது அறிவியல்.

3 elephant shrew

இதன் மூக்கு அமைப்பால் இதற்கு யானை ஷ்ரூவ் என்று பெயர் இருந்தாலும், இதன் வேகமான குதித்தோடும் ஆற்றலால் இதற்கு ஜம்ப்பிங் ஷ்ரூவ் என்றும் ஒரு பெயர் இருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை கர்ப்பகாலம் கொண்ட இந்த வகை யானை ஷ்ரூவ்வின் வசிப்பிடம் ஆப்பிரிக்கா. ஜோடியாக வாழும் குணம்கொண்ட இந்தவகை ஷ்ரூவ் 10முதல் 30 செ.மீ வரை நீளமும், 50 முதல் 500கிராம் வரை எடையும் வளரக்கூடியது.

http://onlineuthayan.com

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 09
 
 

article_1473309472-mavo.jpg1791: அமெரிக்க முதல் ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டனை கௌரவிக்கும் முகமாக அமெரிக்க தலைநகருக்கு வாஷிங்டன் டி.சி. என பெயரிடப்பட்டது.

1945: சீனாவிடம் ஜப்பான் சரணடைந்தது.

1948: கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வடகொரியா) ஸ்தாபிக்கப்பட்டதை கிம் இல் பிரகடனப்படுத்தினார்.

1969: கனடாவில் ஆங்கிலத்திற்கு சமமாக பிரெஞ்சும் உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ மொழிகள் சட்டம் அமுலுக்கு வந்தது.

1976: 33 வருடங்கள் சீனாவை ஆட்சி செய்த சீன அதிபர் மாவோ சேதுங் தனது 82 ஆவது வயதில்

1990: மட்டக்களப்பு சத்துருகொண்டானில் 184 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1991: தஜிகிஸ்தான் சுதந்திரம் பெற்றது.

1993: இஸ்ரேலை பலஸ்தீன விடுதலை இயக்கம் அங்கீகரித்தது.

2001: ஆப்கானிஸ்தானில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஷா மசூட் கொலை செய்யப்பட்டார்.

2004: இந்தோனீசியா, ஜகார்த்தாவில் அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

2006: திறந்த அமெரிக்க டென்னிஸ் பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவா வெற்றி பெற்றார்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 
 
 
Bild zeigt 1 Person
 

செப்.9: டால்ஸ்டாய் மாமனிதர் பிறந்த தினம் இன்று

டால்ஸ்டாய் தலை சிறந்த படைப்பாளி. வாழ்க்கையின் ஆரம்பகட்டங்களில் போக்கிரியாக, சூதாடியாக திரிந்த டால்ஸ்டாய் ஒருநாள் வேட்டைக்கு போனார். கரடி ஒன்றினை வேட்டையாட துரத்தி அதன் ரத்தம் சிந்திய ஜீவ மரண போராட்டத்தை பார்த்ததும் அவருக்குள் கருணை சுரந்தது பைபிள் அவரை செம்மைப்படுத்தியது.

சக மனிதர்களின் மீதான அன்பு அவரின் எழுத்தில் கசிந்து கொண்டே இருந்தது. என்றைக்கும் எழுத்தை பொருளீட்டும் ஒரு மூலதனமாக அவர் பார்த்தில்லை. எளிமையாக வாழ வேண்டிய வாழ்கையை அரசும்,ஓயாமல் பொருள் தேடி அலையும் பேராசை எண்ணங்களும் எப்படி சிக்கலாக்கி விடுகின்றன என்று வெகு இயல்பாக சொல்லும் அவரின் எழுத்து உங்களை அப்படியே சொக்க வைக்கும்.

கிறிஸ்துவ மத சர்ச்சுகளுக்கு போனார். அவற்றின் ஊழல்,போலியான பண்புகள் அவரை புரட்டின. இயேசுவை நான் நேரடியாக உணர்ந்து கொள்கிறேன் என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அனா கரீனினா நாவலை எழுதி பெரும்புகழ் பெற்றார் அவர் ; அதன் மூலம் நல்ல வருமானம். கூடவே ஏற்கனவே இருந்த சொத்துகள் வேறு எக்கச்சக்கம். நல்ல கிறிஸ்துவன் நிறைய சொத்துகள் வைத்துக்கொள்ள கூடாது என்று உணர்ந்தார் அவர். ஏழை மக்களை,பிச்சைக்காரர்களை அழைத்தார். அள்ளி அள்ளி எல்லாருக்கும் கொடுத்தார். மனைவி சோபியா பல்லைக்கடித்து கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தார். வன்முறையை விட்டுவிடுங்கள் என்று அழுத்தி எழுதிய அவரின் தாக்கத்தில் காந்தி தன்னுடைய தென் ஆப்ரிக்க ஆசிரமத்துக்கு டால்ஸ்டாய் பண்ணை என்று பெயரிட்டார்.

டால்ஸ்டாய் ஒருமுறை ஒரு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். ஒரு பெண்மணி அவரின் மூட்டையை தூக்க யாரோ எளியவர் என்று எண்ணி இவரை அழைக்க இவரும் அப்பணியை செவ்வனே செய்தார். அதற்கு பின் விஷயம் தெரிந்து அப்பெண்மணி பதறி கொடுத்த பணத்தை திருப்பி கேட்க ,”நான் உழைத்த உழைப்புக்கான பணம் அதை. அதை ஏன் நான் திருப்பி தரவேண்டும் ?” என்று கேட்டார்.

எழுத்தில் எது நல்ல எழுத்து என்பதில் இங்கே பலரின் வாதங்கள் பல்வேறு வகையில் அமையலாம் . ஆனால் சில எழுத்துக்கள் வாசிப்பதற்கு சுகம் தராவிட்டாலும் அதன் நோக்கத்தால் காலங்களை கடந்து நிற்கிறது

டால்ஸ்டாய் கிட்டத்தட்ட தீவிர எழுத்து வாழ்க்கையை விட்டு விலகி இருபது வருடங்களுக்கு பிறகு புத்துயிர்ப்பு எனும் நாவலை எழுதப்போவதாக அறிவித்தார் . அதற்கு யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விற்பனை உரிமையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வேறு செய்தார் . பணத்திற்காக ஆசைப்படாத அவர் அப்படி சொன்னதன் நோக்கம் டுகொபார்ஸ் எனும் 47,000 மக்கள்.

டுகொபார்ஸ் இன மக்கள் அன்றைய மத வழிபாட்டு முறைகளை ஏற்காமல் வாழ்ந்தார்கள். முழுக்க சைவமாக இருந்த அவர்கள் வன்முறையை விரும்பாதவர்கள் ; அடித்தாலும் திருப்பி தாக்க மாட்டார்கள். கூட்டுறவு வாழ்க்கை வாழ்ந்தார்கள் ; ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டார்கள். கட்டாய ராணுவ சேவை அமலில் இருந்தபடியால் அர அடிபணிய சொன்னது. மாட்டேன் என்று மவுனமாக சொன்னார்கள் இவர்கள். நாட்டை விட்டு கிளம்புங்கள் என்று அமைதியாக,ஆனால்,அழுத்தமாக சொல்லிவிட்டது அரசு.

அவர்களை கனடா அரசு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது .அதற்கான பயணச்செலவு மற்றும் அங்கு நிலம் வாங்க பணம் இல்லாமல் அந்த மக்கள் வாடியதால் அவர்களுக்கு உதவவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த நாவல் பலமுறை திருத்தப்பட்டு ,பல்வேறு குளறுபடிகளோடு பல்வேறு இடங்களில் வெளிவந்தது ,டால்ஸ்டாய் அவர்களின் டச் இதில் இல்லை என்று வேறு எல்லாரும் புலம்பினார்கள். எழுபத்தி எட்டு வயதில் விழித்துக்கொண்டு இருந்த நேரமெல்லாம் இந்த நாவலையே எழுதி தள்ளினார் டால்ஸ்டாய். ஒருவருட காலத்தில் கிடைத்த ராயல்டி தொகை அம்மக்களை காப்பாற்றியது. டால்ஸ்டாய் அவர்களின் நோக்கம் ஆனால் நிறைவேறியது. அந்த மக்கள் வெற்றிகரமாக அங்கே குடியேறினார்கள். அவர்கள் இப்பொழுது தங்களை டால்ஸ்டாய் டுகொபார்ஸ் என்றே அழைத்து கொள்கிறார்கள். அவருக்கு எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிலை எழுப்பி அஞ்சலி செலுத்துகிறார்கள்

டால்ஸ்டாய் தன்னுடைய எழுத்தை பணமீட்டும் மூலமாக பார்த்தது இல்லை. வீட்டுக்கு என்று பணம் எதையும் விட்டுவைக்க அவர் ஒப்பவில்லை. ராயல்டியை கேட்க வேண்டும் என்கிற மனைவியின் கட்டாயத்துக்கு மசியாமல் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்த நாள் ஆனா கரீனினா இறப்பதாக எழுதப்பட்ட அதே அச்டபோவ் ரயில்வே நிலையத்தில் நிமோனியா தாக்கி இறந்தார். டால்ஸ்டாயின் எழுத்தும்,டுகொபார்ஸ் மக்களும் அவரை என்றும் ஞாபகப்படுத்தி கொண்டே இருப்பார்கள்

vikatan

லியோ டால்ஸ்டாய்

leon_tolstoy1_3003924f.jpg
 

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய நாவலாசிரியர்

ரஷ்யாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரான லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

*ரஷ்யாவில் யஸ்னாயா பொல்யானா என்ற கிராமத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் (1828) பிறந்தவர். 3 வயதில் தாயையும், 9 வயதில் தந்தையையும் இழந்தார். அத்தையால் வளர்க்கப்பட்டார். சிறுவனாக இருந்தபோது, படிப்பில் கவனம் செல்லவில்லை.

*கஸன் பல்கலைக்கழகத்தில் சட்டம், பாரம்பரிய மொழிகள் கற்றார். படிப்பை பாதியிலேயே நிறுத்தினாலும், தனக்குப் பிடித்த விஷயங்கள், புத்தகங்களை அதிகம் படித்தார். குறிப்பாக, ரூஸோவின் படைப்புகளைத் திரும்பத் திரும்ப படித்தார்.

*குடும்பச் சொத்தில் தனக்குக் கிடைத்த பங்கைக் கொண்டு, தனது கிராமத்து விவசாயிகளின் வறுமையைப் போக்கவும் அவர்களது குழந்தைகளுக்குக் கல்வி புகட்டவும் நலத்திட்டங்களைத் தொடங்கினார். ஆனால், அவரது முயற்சிகள் பலன் தரவில்லை. பின்னர் மாஸ்கோ சென்றார். அங்கு மது, சூதாட்டப் பழக்கத்தால் சொத்துகளை இழந்தார்.

*16 வயதில் எழுதத் தொடங்கியவர், முதலில் சிறுகதைகள் எழுதினார். ‘தி சைல்ட்ஹுட்’, ‘பாய்ஹுட்’ உள்ளிட்ட நூல்களால் ரஷ்யா முழுவதும் புகழ் பெற்றார். இவரது மாஸ்டர் பீஸ் எனப்படும் ‘வார் அண்ட் பீஸ்’ நாவல் 1869-ல் வெளிவந்து இவருக்கு உலகப் புகழ் பெற்றுத் தந்தது. 1877-ல் வெளிவந்த ‘அன்னா கரேனினா’ நாவல், இவருக்குப் புகழுடன் பணத்தையும் அள்ளிக் கொடுத்தது.

*இவரிடம் அடிக்கடி சண்டை போட்டாலும், குடும்ப வாழ்க்கை பெரும்பாலும் போராட்டத்திலேயே கழிந்தாலும், இவரது மனைவி, புரிந்துகொள்ள முடியாத இவரது எழுத்துக்களைப் படித்துப் புரிந்துகொண்டு பலமுறை நகலெடுத்துக் கொடுப்பாராம்.

*ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படித்த பிறகு, அகிம்சை கோட்பாடு அவருக்குள் வலுப்பட்டது. அகிம்சை, எளிமை, ஏழைகளுக்கு உதவுதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். ஏழைகளுக்கு உணவளித்தார்.

*இந்திய விடுதலை இயக்கப் புரட்சி வீரர் தாரக்நாத் தாஸுக்கு இவர் எழுதிய புகழ்பெற்ற ‘எ லெட்டர் டு எ ஹிண்டு’ என்ற கடிதங்கள் அடங்கிய தனது நூலில், பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா விடுதலை பெற அகிம்சைதான் வழி என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார்.

*அப்போது தென்னாப்ரிக்காவில் இருந்த காந்தியடிகள் இதைப் படிக்க நேர்ந்தது. அதுமுதல் இருவருக்கும் கடிதப் போக்குவரத்து தொடங்கியது. அகிம்சை, சைவ உணவு உள்ளிட்ட பல கொள்கை களில் காந்திஜிக்கும் டால்ஸ்டாய்க்கும் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இவரது நினைவைப் போற்றும் வகையில் காந்திஜி அங்கு தான் நிறுவிய ஆசிரமத்துக்கு இவரது பெயரைச் சூட்டினார்.

*ஏராளமான கதைகள், நாவல்கள், நாடகங்களைப் படைத்த டால்ஸ்டாய், தன் வாழ்வின் இறுதி 20 ஆண்டுகளில் நூற்றுக்கணக் கான கட்டுரைகளை எழுதினார். இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

*குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு, இறுதிக் காலத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார். ரயிலில் சென்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அஸ்டபோவ் ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார். 82-வது வயதில் (1910) அவரது உயிர் அங்கேயே பிரிந்தது. ரஷ்யாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தற்போதும் அந்த ரயில் நிலையத்துக்குத் தவறாமல் செல்கின்றனர்.

tamil.thehindu

  • தொடங்கியவர்
மலேஷியாவில் தீக்கோழி சவாரி
 

மலேஷியாவிலுள்ள தீக்கோழிப் பண்ணையொன்றில் பார்வையாளரான யுவதி ஒருவரும் ஊழியர்கள் சிலரும் தீக்கோழியில் சவாரி செய்வதை படங்களில் காணலாம்.

 

19161076818-01-02_5184602.jpg

 

ஜெலிட்டா தீக்கோழிப் பண்ணை எனும் இப் பண்ணை கோலாலம்பூரிலிருந்து 40 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சேரேம்பன் எனும் இடத்தில் உள்ளது.

 

19161076820-01-02_5184604.jpg

 

4.2 ஏக்கரில் இப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சுற்றுலா பயணிகள் மத்தியில் இந்த தீக்கோழிப்பண்ணை பிரசித்தி பெற்றுள்ளதாகத்  தெரிவிக் கப்படுகிறது.

.metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மது போதையில் மரம் கைது

 

பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது.

பிரித்தானிய ஆட்சியில் இந்தியா இருந்த காலத்தில், 1898 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்குய்ட் எனும் பிரித்தானிய இராணுவ அதிகாரியே அம்மரத்தினை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

380DCFC100000578-0-image-a-1_14733200543

அதிக மதுபோதையில் காணப்பட்ட குறித்த இராணுவ அதிகாரி மரம் நகர்ந்து செல்வதாக கூறி அம்மரத்தினை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, அம்மரம் தரையுடன் சங்கிலியால் தரையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

குறித்த மரம் இன்னும் தரையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டவாறு காணப்படுகின்றது.

 

 

2016-09-09_at_10-21-49.jpg

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்
 

செப். 9: சீன வரலாற்றை மாற்றிப் போட்ட மா சே துங்-ன் நினைவு தின சிறப்பு பகிர்வு

14203161_1224042624321192_67538907621770

 

 

மா சே துங் என அறியப்படுகிற மாவோ சீன வரலாற்றை மாற்றிப் போட்டவர். சீனாவை மாவோவின் இளமைக்காலத்தில் பல நூறு வருடங்களாக ஆண்டு கொண்டிருந்த மன்னர் பரம்பரையே ஆண்டு கொண்டிருதது. சன் யாட் சென் அதை எதிர்த்து புரட்சி செய்து கோமின்டங் கட்சியைக் கொண்டு ஆட்சியை விட்டு அவர்களை விரட்டினார். அப்பொழுது அந்த கட்சியில் இணைந்து மாவோ பணியாற்றினார்.

நூலகத்தில் அவருக்கு வேலை கிடைத்து இருந்தது. ரஷ்ய புரட்சிக்கு பின்னர் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை மாவோ வேறு சிலருடன் இணைந்து ஆரம்பித்தார். அந்த கட்சி சீனாவின் முன்னேற்றம் சார்ந்து இயங்கினாலும் சன் யாட் சென்னுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்திருந்த சியாங் காய் ஷேக் அவர்களை கண்டு அஞ்சினார். கொடிய அடக்குமுறைகள் மற்றும் ராணுவ தாக்குதல்களை இவர்கள் மீது ஏவி விட்டார். சீனாவை ஜப்பான் தாக்கிய தருணத்தில் மட்டும் இணைந்து பணியாற்றினார்கள். பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட படைகள் மாவோ மற்றும் இன்ன பிற தோழர்களை துரத்தி வந்தபடியால் தப்பி போவதே சரியான வழி என்று முடிவு செய்து பெரும் நடைபயணம் ஒன்றை முன்னெடுத்தார்கள். அதில் பாதிக்கும் மேற்பட்ட தோழர்கள் இறந்து போனார்கள். நகர்ப்புறங்களை விட்டு நகர்ந்திருந்த படியால் கிராமப்புறங்களில் இருந்த மக்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அவர்களுக்கு கைகொடுத்தது.

சீனாவின் சிந்தனைப் போக்கை கன்புசியஸ் பெரிய அளவில் நிர்மாணித்து இருந்தார். அதை தவறு என்று சொல்கிற தைரியம் யாருக்கும் அமைந்திருக்கவில்லை. மாவோ அஞ்சாமல் அதை தாக்கினார். மக்களின் சிக்கல்களை தீர்க்க இடதுசாரி பாதையே சரியென்று குரல் கொடுத்தார். ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இறந்த பொழுது ,"அவளின் தற்கொலைக்கு மூவர் காரணம். அவளின் குடும்பம்,வருங்கால குடும்ப உறவுகள் மற்றும் இந்த சமூகம். அவளின் விருப்பம் என்னவென்று கேட்காமல் அவளை கட்டாயத்திருமணத்துக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அவள் சுதந்திரமாக முடிவெடுக்க இந்த சமூக அமைப்பு வாய்ப்பு தரவில்லை. இதை முழுதாக மாற்றி அமைக்க வேண்டும். குடும்ப அமைப்பே கூடாது !" என்று அவர் எழுதினார். லெனினால் ஈர்க்கப்பட்டாலும் தன்னுடைய நாட்டுக்கு ஏற்றவாறு கம்யூனிசத்தை அவர் கட்டமைத்தார்.

அதே போல தற்காப்பு என்பதையே போர்க்கலையின் முக்கிய அம்சமாக கொண்டிருந்த சீனர்களுக்கு திருப்பி தாக்குதல் என்கிற மரபு மாவோவிடம் இருந்தே வந்தது. மாவோ உலகப்போருக்கு பின்னர் அதிகாரத்தை கைப்பற்றினார். நில சீர்திருத்தங்களை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்தினார். கல்வி மற்றும் மருத்துவத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டது. நூறு மலர்கள் மலரட்டும் என்று அவர் தன்னை விமர்சிக்கலாம் என்று கொண்டு வந்த திட்டத்தில் மிகக்கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்பு குரல்கள் வரவே அவற்றை முற்றிலும் ஒடுக்கினார்.

மாபெரும் முன்னெடுப்பு என்று சொல்லிக்கொண்டு எழுபத்தி ஐந்தாயிரம் விவசாயிகளை கூட்டாக விவசாயம் செய்ய வைத்தார். வெள்ளங்கள்,உற்பத்தி வீழ்ச்சி ஆகியவை சேர்ந்து கொண்டன. இது பயன் தராது என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இரண்டு முதல் நான்கு கோடி மக்கள் பஞ்சத்தால்,பசியால் இறந்து போனார்கள். இந்தியாவுடன் ஏற்பட்ட எல்லைத்தகராறை சாதகமாக்கி தயாராக இல்லாத இந்தியாவை போரில் வென்று வீழ்ந்த மதிப்பை சரி கட்டிகொண்டார் அவர்.

கலாசார புரட்சி என்று சொல்லி நகரங்களில் இருந்த இளைஞர்களை கிராமங்கள் நோக்கி கட்டாயப்படுத்தி அனுப்பினார். பண்டைய சீனாவின் அடையாளங்கள் அழித்து ஒழிக்கப்பட்டன. பள்ளிகள் மூடப்பட்டு இளைஞர்கள் புதிய புரட்சிக்காக கிராமங்களில் போய் கடின வேலைக்கு ஆட்படுத்தப்பட்டார்கள். பூர்ஷவா சக்திகள் முதலாளித்துவத்தை மீண்டும் கொண்டு வர முயல்கின்றன என்று சொல்லி சந்தேகத்துக்கு உள்ளான பல்லாயிரம் பேர் செம்படையால் கொல்லப்பட்டார்கள். என்றாலும்,சீனாவின் வலிமையான இன்றைய பாய்ச்சலுக்கான அடித்தளம் மாவோவில் இருந்தே துவங்குகிறது.

 

 

vikatan

  • தொடங்கியவர்

இந்த நாள்... கேர்ள்ஸ் அவனைக் கட்டிப்பிடிக்க ஆரம்பிச்ச நாள்...!

rakul-preet-singh-smiling-wide.jpg

கரடி பொம்மைகள் என்றாலே குழந்தைகளுக்கு எப்போதும் ஓர் அலாதிப் பிரியம் உண்டு. பெரியவர்களும்கூட வீட்டு ஷோகேஷில் அழகுக்காக வாங்கிக் குவித்து வைத்திருப்பார்கள். அதிலும், குறிப்பாகப் பெண்களுக்கு டெடி பியர் என்றால் உயிர். யாருமின்றித் தனியாக இருக்கும் சூழல்களில் பாதுகாப்பான ஜீவனாகக் கரடி பொம்மையைக் கட்டியணைத்துக்கொள்வார்கள். அப்படி, எல்லா வீடுகளிலும் அன்பாக 'வளர்க்கப்படும்' ஒரு உயிரினமாகவே ஆகிவிட்ட டெடிபியர்களின் தினமாம் இன்று. அதனாலேயே தெரிந்தோ தெரியாமலோ பல ஆண்களின் எதிரியாகிவிட்ட அந்த அதிர்ஷ்டசாலி கரடி பொம்மைகளுக்கு ஹேப்பி பொறந்த டே சொல்லியே ஆகணும். ஆங். #HappyTeddyBearDay

முதலில், அந்தக் கரடி பொம்மைகளுக்கு 'டெடி பியர்' எனப் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

கரடி பொம்மை முதன்முதலில் அமெரிக்காவில்தான் அறிமுகம் ஆனது. அமெரிக்க அதிபராக இருந்த தியடோர் ரூஸ்வெல்ட் வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர். அவர் ஒருமுறை காயத்துடன் உலாவிய சின்னக் கரடிக்குட்டி ஒன்றைக் கண்டார். அதைக் கண்டதும், அவருடன் வந்தவர்கள் கரடியைச் சுடுவதற்கு வலியுறுத்தினர். ஆனால், தியடோர் ரூஸ்வெல்ட் அதைச் சுடாமல் 'பொழைச்சுப்போ'னு விட்டுவிட்டார். இந்தச் செய்தி பத்திரிகையில் கரடிக்குட்டிப் படத்துடன் வெளியாகிப் பரவியது. தியடோர் ரூஸ்வெல்ட்டுக்கு ‘டெடி’ என ஒரு செல்லப் பெயர் உண்டு. அந்த நேரத்தில் கரடியையும், தியடோர் ரூஸ்வெல்ட்டையும் சேர்த்து வரைந்த கார்ட்டூன் படத்துக்கு ‘டெடி பியர்’ எனப் பெயர் சூட்டியிருந்தனர். இதை வைத்து கல்லா கட்டலாம் என நினைத்த பொம்மை நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த கரடி பொம்மைகளுக்கு 'டெடி பியர்' எனப் பெயர் சூட்டி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. எப்படியெல்லாம் வராய்ங்க! 

இப்படி ஆரம்பிச்ச பொம்மைகளோட வரலாறெல்லாம் இருக்கட்டும். டெடி பியர்களை வெச்சுக்கிட்டு இந்தப் பெண்கள் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. 

Nazriya-Nazim-photos.jpgதூங்கும்போது பக்கத்திலேயே படுக்கவைக்க டபுள் பர்த் கட்டிலிலேதான் படுப்பேன் என அடம்பிடித்தும், தரையிலே படுத்தாலும் பக்கத்தில் ஒரு பாயைப் போட்டு அதில் பொம்மையைப் படுக்கவைத்துத் தாலாட்டுப் பாடித் தூங்கவைக்கும் அக்கப்போர்களையும் அரங்கேற்றும் இந்த கேர்ள்ஸ்களின் அழிச்சாட்டியங்கள் ரொம்பவே ஓவர்தான்.

பிறந்தநாளுக்குப் பரிசாக என்ன வேணும்னு கேட்டால் டெடி பியரைக் கேட்கும் அம்மணிகளே... எல்லா வருசமும் அதையே வாங்கி பொம்மைக் கடையா வைக்கப் போறீங்க? இல்லை மொசுமொசுனு பஞ்சு மாதிரி இருக்கிறதால தலையணையாக்கித் தலைமாட்டுக்கு வெச்சுத் தூங்குறீங்களா?

ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் போட்டோ போடும்போதும் டெடிபியரைத் தூக்கி மடியில் வெச்சுக்கிட்டே போஸ் கொடுத்திருக்கீங்களே... 'அந்தக் கரடி பொம்மை என்ன விலை'ன்னு கேட்டு யாராவது கலாய்ச்சாத் தாங்கிக்கிற அளவுக்குத் தங்கமான மனசு இருக்கா உங்களுக்கு?

டெடி பியருக்கு வாய் இருக்கிறது என்பதற்காக நீங்கள் வைக்கும் ரசத்தையும், புதினாச் சட்னியையும்கூடச் சோற்றில் பிசைந்து ஊட்டிவிட்டுக் கொடுமைப்படுத்துறீங்களே... கடுப்பாகித் துப்பிருச்சுனா என்ன பண்ணுவீங்க. யோசிங்க மக்கா!

கட்டிப்பிடிச்சுப் படுத்துக்கிறோம்னு அதை சக்கையாகப் பிழிஞ்சு, காலையில் நீங்கள் விழிப்பதற்குள் கை வேறு, கால் வேறு, கண்ணாமுழி வேறாகப் பிச்சு எடுத்துப் பாடாய்ப் படுத்துறீங்களே... உங்களுக்கே இது வன்கொடுமையாத் தெரியலை?

கடைசியா ஒண்ணு, உயிரில்லாத கரடி பொம்மையை நீங்கக் கொஞ்சிக் கொஞ்சி விளையாடுறதைப் பார்க்கிற எங்களுக்கு எவ்வளவு கடுப்பாகி, அந்தக் கரடி மேல பொறாமையாகும்னு எங்க இடத்தில் இருந்து என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா? பாவம்மா நாங்க!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.