Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் ஸ்ரேயா..! வைரலாகும் போட்டோ

Shreya%20with%20bravo_16451.jpg

அமெரிக்காவில்  ஸ்டார் ஹோட்டலில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும், நடிகை ஸ்ரேயாவும் இருந்த போட்டோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியது.

கடந்த  2014-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது, அவருடன் நட்பாக பழக்கமானார், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ. ஸ்ரேயாவின் குடும்ப நண்பர்கள் பலர், அமெரிக்காவில் வசித்து வருவதால், ஆண்டுதோறும் அமெரிக்காவுக்குச் சென்று அவர்களை சந்தித்து மகிழ்வது ஸ்ரேயாவின் வழக்கம். 

அதன்படி அமெரிக்காவுக்குச் சென்ற அவர், அங்குள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அதே ஹோட்டலில் அந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவும் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், ஹோட்டலில் இருவரும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். இயல்பான இந்த சந்திப்பின்போது, எடுக்கப்பட்ட ஒரு போட்டோ வெளியானது. இது குறித்து வதந்திகள் பரவின.

முன்னதாக, மும்பையில் தனது குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவரை ஸ்ரேயாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள்  முடிவு செய்துள்ளதாகவும், இதை  ஸ்ரேயாவும் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14.10.2016 at 2:06 PM, நவீனன் said:

வெஸ்ட் இண்டீஸ் வீரருடன் ஸ்ரேயா..! வைரலாகும் போட்டோ

அநேகமான நடிகையளின்ரை தொழில் நடிக்கிறது மட்டும்தான் எண்டு உங்கை கனபேர் நினைச்சுக்கொண்டிருக்கினம்...:grin:

  • தொடங்கியவர்

14705620_1155024914546201_13625546155391

 
 
அவுஸ்திரேலிய அணியின் வளர்ந்து வரும் சுழல்பந்து - சகலதுறை நட்சத்திரம் அஷ்டன் அகாரின் பிறந்தநாள்.

தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இவர் பெற்ற 98 ஓட்டங்கள், இன்றுவரை 11 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய டெஸ்ட் ஓட்டங்கள் என்ற சாதனையாகப் பதிவாகியுள்ளது.

பரம்பரை வழியாக இலங்கைத் தொடர்பும் கொண்டவர் அகார் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.

Happy Birthday Ashton Agar
  • தொடங்கியவர்
நண்டுகளுக்கான பெஷன் ஷோ
 

நண்டுகளுக்கான பெஷன் ஷோ சீனாவில் அண்மையில்   நடை பெற்றது. பல்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்ட நண்டுகள் இந்த பெஷன் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டன. மணமக்களைப் போன்றும் சிலர் நண்டுகளை அலங்கரித்திருந்தனர்.

 

1995869.jpg

 

சீனாவின் ஹொங்ஸே ஏரியில் நண்டுகள் அதிகமாக பிடிக்கப்படும் பருவ காலத்தில் உள்ளூராட்சி அதிகாரிகளால் வருடாந்தம் இந்த பெஷன் ஷோ நடத்தப்படுகிறது.

 

1995870.jpg

1995867.jpg

1995968.jpg

1995971.jpg

 

metronews.lk

  • தொடங்கியவர்

ஓட்டுநரில்லா ட்ராக்டர்: விவசாயத்தின் அடுத்த புரட்சி
---------------------------------------------------------------------------------------------

பிரிட்டனின் நிறுவனம் ஒன்று ஓட்டுநர் இல்லா ட்ராக்டர்களை முதல் முறையாக உருவாக்கியுள்ளது.

இதை பிரிட்டனில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
எந்த பொருளிடமிருந்தும் ஒரே ஒரு அங்குலம் வரை நெருங்கிச் செல்லும் அளவுக்கு மிகத்துல்லியமாக இவை பயணிக்கவல்லவை.

பிரிட்டனில் உள்ள எல்லா விவசாயிகளும் இவற்றை பயன்படுத்தினால் பிரிட்டனில் மட்டும் மேலதிகமாக ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஏக்கர் நிலத்தை கூடுதலாக விளைநிலங்களாக மாற்றலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

அதிகரிக்கும் மக்கள் தொகைக்குத் தேவையான உணவுப்பொருட்களை இருக்கும் நிலத்திற்குள்ளாகவே உருவாக்க வேண்டிய நெருக்கடிக்கு இதுபோன்ற உபகரணங்கள் புதிய தீர்வுகளை உருவாக்கும் என்கிறார்கள் இதனை உருவாக்கியவர்கள்.

  • தொடங்கியவர்

வழுக்கைதான் இப்போ கெத்து... எப்படி? #baldandfreeday

21-1-baldness_17207.jpg

இன்று உலக வழுக்கை தினம். இதுக்கெல்லாம் ஒரு தினமா என யோசிப்பவரா நீங்கள்? எனில் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். 35 வயதுக்குட்பட்ட 40 சதவிகித ஆண்களுக்குத் தலையில் வழுக்கை ஏற்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இப்போது இல்லாவிட்டாலும் 'ஏய் தப்பிக்கவா பார்க்கிறே?' என உங்கள் தலையிலும் வாழ்க்கை விளையாடும் வாய்ப்பிருக்கிறது.

 

* இன்றைய இளைஞர்களுக்குத் தலையாய பிரச்னையாக இருக்கிறது வழுக்கைதான். 20 வயசுக்கு மேல லைட்டா தலைமுடி உதிர ஆரம்பிச்சாலே... இருக்கிற கொஞ்சநஞ்ச முடியையும் பிச்சுக்கிற அளவுக்குப் பலமா யோசிக்க ஆரம்பிச்சிருவோம். அந்த அளவுக்கு இந்த வழுக்கைத் தலைங்கிறது பலரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு பிரச்னையா வளர்ந்து நிற்குது. 

 

* இந்த வழுக்கை பல காரணங்களால் ஏற்படுது. அப்பாவோட பாக்கெட்ல இருந்து பணத்தை எடுக்கிறது நம்ம குணநலன்னா... அப்பாவோட குணநலன்களையும் சேர்த்துக் கடத்திட்டு வர்றது இந்த மரபணுக்கள். அப்படி வர்றதுல இந்த வழுக்கையும் முக்கியமானது. அது மட்டுமில்லாம நீண்டநாள் கவலை, ஊட்டச்சத்தில்லாத உணவுமுறை, தைராய்டு பிரச்னை, மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், புற்றுநோய் அறிகுறி, இப்படிப் பல காரணங்களாலயும் முடி உதிர்வு ஏற்படுவதா அறிவியல் விளக்கம் சொல்லப்படுது.

 

* உயிரே போகின்ற அபாயம் இருந்தும் அலட்சியமாக பைக்கில் பறக்கும் இளைஞர்கள், முடி உதிர ஆரம்பித்ததும் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். நம்மைப்பற்றி பிறர் கேலி செய்வார்களோ என்ற அச்ச உணர்வுதான் இதற்குக் காரணம். வழுக்கை விழ ஆரம்பித்ததும் தன்னம்பிக்கைக் குறைவு ஏற்பட்டதாகவும், நண்பர்களைக்கூட தவிர்க்க ஆரம்பித்ததாகவும் ஓர் ஆய்வில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர்களைக் குறிவைத்துதான் அமேசான் காட்டில் இருக்கும் அரிய மூலிகைகளைப் பயன்படுத்தியதாகச் சொல்லும் ஹேர் ஆயில் விளம்பரங்கள் தயாராகின்றன. எதையாவது செய்து இந்தப் பிரச்னையை சமாளிக்க வேண்டுமென்று இளைஞர்களும் கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். முடிவில் அவர்களுக்கு மிஞ்சுவதென்னவோ ஏமாற்றம்தான்.

 

* சரி, இந்தப் பிரச்னையைச் சமாளிக்க என்ன செய்யலாம்? செயற்கை முடிவைத்து உலகத்துக்கு நம்மை மறைக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மனநிலைக்கு மாறும்போது மன அழுத்தத்திலிருந்து எளிதாகத் தப்ப முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 'இதுல என்ன இருக்கு?' என்ற மனநிலைக்கு வரும்போதுதான் நம்மைச்சுற்றி இருப்பவர்கள் கேலி செய்யும்போது அதை எளிதில் சமாளிக்க முடியும். அதையும் மீறிக் கலாய்ப்பவர்களை விட்டுத்தள்ளுங்கள்!

 

* வழுக்கைத்தலை என்பது அழகுக்குறைவா என யோசிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு மற்றவர்களைவிட வழுக்கைத்தலை ஆண்களை அதிகம் பிடிக்கிறதா ஒரு டாக் இருக்கு ப்ரோ. மனசத் தளரவிடாதீங்க!

 

* டென்னிஸ் பிரபலமான ஆன்ட்ரே அகாசி 90-களில் சிங்கத்தின் பிடரி போன்ற தோற்றமுடைய ஹேர்ஸ்டைல் வைத்து டென்னிஸ் ஆடியதை யாரும் மறந்திருக்க முடியாது. பின்னாளில் அகாசிக்கு வழுக்கை ஏற்பட்டு மொட்டைத்தலையுடன் ஆடினார். தனது சுயசரிதையான 'ஓப்பன்' புத்தகத்தில், அந்த சிங்கம் பிடரி ஹேர்ஸ்டைலே விக்குதான் எனப் போட்டு உடைத்தார்.  'ஃபைனல்ல ஜெயிக்கணும்னு நினைச்சு ஆடியதைவிட தலையில் வைத்திருக்கும் விக் தனியாகக் கழண்டு விடக் கூடாதுனு பயந்ததுதான் அதிகம்' எனத் தனது விக் அனுபவம் பற்றிப் பேசியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி. யார் என்ன நினைச்சாலும் பரவால்லைனு முடிவெடுத்து மொட்டை போட்டதும்தான் அவருக்கு நிம்மதியே வந்தது. இந்தப் பக்குவம் வர ஆரம்பித்தாலே எப்பேர்ப்பட்ட கேலியையும் சமாளிக்க முடியும்.

 

இனிமே யாராவது 'கிளார் அடிக்குது மச்சி. கொஞ்சம் விலகிக்க’ன்னு கலாய்க்கும்போது ''நாங்கள்லாம் தலைக்கு மேலே உள்ளதை நம்பி வாழ்றவய்ங்க கிடையாது... தலைக்கு உள்ளே உள்ளதை நம்பி வாழ்றவய்ங்க'' மாதிரி சமாளிக்கக் கத்துக்கோங்க பாஸ்!

 

இந்த வீடியோல இருக்குறவங்க எல்லாம் வழுக்கைத் தலையோட கலக்கியவர்கள் தான் பாஸ். டோன்ட் வொர்ரி!

 

- கருப்பு

vikatan

  • தொடங்கியவர்

 

p38a.jpg

* பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் தர வரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இந்தியா நம்பர் 1 இடத்தைப் பெறுவது, இது நான்காவது முறை. ``2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின்போது இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு, திடீரென தோனியிடம் இருந்து எனக்கு வந்தது. அப்போது, என்னுடைய திட்டத்தை இந்திய வீரர்களிடம் சொன்னேன். அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. முதல் தோல்வி என்னை அசைக்கவில்லை. மாறாக, என்னை இன்னும் வலுவாக்கியது. `இந்த அணி, உலகின் நம்பர் 1 அணி. அதற்கு நீதான் கேப்டன்' என எனக்குள்ளே அன்று சொல்லிக்கொண்டேன். அது வெகு சீக்கிரத்திலேயே உண்மையாகிவிட்டது இரண்டாவது முறையாக மீண்டும் முதல் இடம் பிடித்துவிட்டோம்'' என்கிறார் கேப்டன் விராட் கோஹ்லி. சொல்லிஅடி!

* மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அவருக்கு எப்போது எல்லாம் வெளிநாட்டுப் பயணங்கள் வருகின்றனவோ, அப்போது எல்லாம் காஷ்மீர் விவகாரம் வெடிக்க, பிரதமர் மோடியால் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து ஆகும். இந்த முறையும் அக்டோபர் மாதம் அமெரிக்கா - ரஷ்யா பயணங்களுக்கு விசாவுடன் தயாராக இருந்தார் ராஜ்நாத் சிங். ஆனால், பாகிஸ்தான் பிரச்னையால் அவரது பயணம் மீண்டும் ரத்தாகிவிட்டது. மோடியோடு ஜோடி போடுங்க!

p38b.jpg

* நிருபரின் கேள்விக்கு செம போல்டாக பதில் அளித்த நடிகை ராதிகா ஆப்தேதான், இப்போது ட்ரெண்டிங். `படத்தின் புரமோஷனுக்காகத்தானே அப்படி நடித்தீர்கள்?’ ‘பார்ச்டு’ படத்தின் நிர்வாணக் காட்சி குறித்து நிருபர் ஒருவர் நடிகை ராதிகா ஆப்தேவிடம் கேட்டார். ‘உங்களுடைய உடல் குறித்த பார்வை தவறாக இருக்கும்போதுதான் மற்றவர்களுடைய உடல் மீது உங்கள் கவனம் திரும்பும். சர்ச்சை என்பது, தனி மனிதர்களான உங்களால் உருவாக்கப்படுவதுதான்’ என்று காட்டமாக பதில் அளித்தது உலக லெவலில் எதிரொலிக்க, டேரிங் பதிலுக்கு லைக்ஸ் குவிகின்றன. ராதிகா ஆப்தேடா!

* பாரீஸில் தங்கி இருந்த ஹாலிவுட் டி.வி ஸ்டார் கிம்கார்தாஷியனைக் கட்டிப்போட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்ததுதான் கடந்த வார உலக வைரல். ஒரு பக்கம் அவருக்கு ஆறுதல் குரல்கள் வந்தாலும், பலரும் `சுய விளம்பரத்துக்காக கிம் இப்படிச் செய்துள்ளார்' என விமர்சித்துள்ளனர். `அவர் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட்டில் கேமரா வேலை செய்யவில்லை. அவரின் பாதுகாவலர்கள் அங்கு இல்லை என சொல்வது எல்லாம் நம்பும்படியாக இல்லை' என ஆளாளுக்கு விசாரணை அதிகாரிகளாகக் கிளம்ப... கிம் கப்சிப். கடுப்பேத்துறாங்க மை லார்டு!

p38c.jpg

* `பெண்கள், `தொடாதே' என்றால் தொடாதீர்கள்; `நோ' எனச் சொன்னால் அவர்களைக் கொன்றுவிடாதீர்கள்' எனக் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆண்-பெண் புரிதல் பற்றி தன் மகன்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். `ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு, எல்லோரும் என்னை மதிக்கிறார்கள். ஆனால், சிறுவயதில் நான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானவள். ரேப் என்பது, செக்ஸ் அல்ல. பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் மேரிகோம். புரியவைப்போம்!

p38d.jpg

* கங்னம் ஸ்டைலில் உலக வைரலாகிக்கொண்டிருக்கிறது Chee yee Teoh என்பவரின் 51 நொடிப் பாடல். `Pen Pineapple Apple Pen' எனக் கலாய்த்திருக்கும் அந்த வீடியோ பாடலில் இரண்டே வரிகள்தான். ஆனால் பாடல், யூடியூபில் வெளியான ஒரே வாரத்தில் ஆறு கோடி ஹிட்ஸ் அடித்திருக்கிறது. `ஆப்பிள்'னாலே வைரல்தானே!

vikatan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அநேகமான நடிகையளின்ரை தொழில் நடிக்கிறது மட்டும்தான் எண்டு உங்கை கனபேர் நினைச்சுக்கொண்டிருக்கினம்...:grin:

 

மட்டை பிடித்து சுழற்றி சுழற்றி அடிப்பதில் இவர் கெட்டிக்காரர், பவுண்டரி, சிக்ஸர் அள்ளிக் கொட்டப்போவுது.

  • தொடங்கியவர்
26 minutes ago, colomban said:

 

மட்டை பிடித்து சுழற்றி சுழற்றி அடிப்பதில் இவர் கெட்டிக்காரர், பவுண்டரி, சிக்ஸர் அள்ளிக் கொட்டப்போவுது.

https://www.youtube.com/watch?v=yepOBJyMDfY

இதுதானே ..:grin:

  • தொடங்கியவர்

செல்ஃபி ஓ.கே... ஷூஃபி தெரியுமா? #Shofie

உலகம் முழுக்க இப்போது இதுதான் ஹாட்!

அழகாக வைத்துக் கொள்வதில் தொடங்கி அஷ்டகோணலாக போஸ் கொடுப்பது வரை செல்ஃபி எடுக்கும்போது ஏகப்பட்ட முகபாவங்களைப் பார்க்கலாம். செல்ஃபி டிரெண்ட் கொஞ்சம் போரடிக்கத் தொடங்கியிருப்பதை அடுத்து இப்போது ஷூஃபி ட்ரெண்ட் பற்றிக் கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எல்லாவற்றிலும்  ஷூஃபிக்களை போஸ்ட் செய்யவென்றே ஒரு செலிப்ரிட்டி கூட்டம் இருக்கிறது.

ஷூஃபி என்றால் புரியாதவர்களுக்க ஷூ செல்ஃபி என்றால் விளங்கும்.

shiefie_12421.jpg

முகத்துக்கு பதிலாக ஷூக்களை மட்டும் விதம் விதமாக செல்ஃபி எடுத்து சோஷியல் நெட்வொர்க்கில் போஸ்ட் செய்வதுதான் ஷூஃபி.

ஆரம்பத்தில் நகைச்சுவையாகப் பார்க்கப்பட்ட ஷூஃபி கலாசாரம், இன்று பிரபலங்கள் மத்தியில் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாகவே மாறியிருக்கிறது. அழகான கால்கள், ஆடம்பரமான காலணிகள், அட்டகாசமான தரை... பெஸ்ட் ஷூஃபி எடுக்க இவை மட்டுமே போதும்.

மேக்கப் போடலை... ஃபோட்டோவுக்கு போஸ் பண்ண மூடு இல்லை.... நாட் இன்ட்ரெஸ்ட்டட் என்றெல்லாம் சொல்லி, மீடியாக்களுக்கு போஸ் கொடுக்க மறுக்கும் பிரபலங்கள்கூட, ஷூஃபி என்றால் டபுள் ஓ.கே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டில் ஷூஃபி டிரெண்ட் பற்றி எரியக் காரணமானவர் சின்னத்திரை பிரபலமும் மாடலுமான Kim Kardashian.  அநியாயத்துக்கு செல்ஃபி பைத்தியமான இவர், இப்போது ஷூஃபி பைத்தியமாக மாறியிருக்கிறார்.

செல்ஃபிஷ் என்கிற பெயரில் தனது செல்ஃபிக்களை வைத்து ஒரு புத்தகமே வெளியிட்டிருக்கிறார் கிம். அந்தப் புத்தகத்தில்  அவரது செல்ஃபிக்களுக்கு இணையாக ஷூஃபிக்களே ஆக்கிரமிக்கின்றன. 

ஹாலிவுட்டில் ஆரம்பித்த இந்த புதுமைப் பித்து இப்போது நம்மூருக்கும் வந்திருக்கிறது. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு  சோஷியல் மீடியாக்களில் காலணி ஆதிக்கம்தான்!

vikatan

  • தொடங்கியவர்

14633151_1155016957880330_30590199756217

நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் டெஸ்ட் அணிக்குள் பிரவேசித்துள்ள இந்திய அணியின் துடுப்பாட்ட நட்சத்திரம் - கௌதம் கம்பீரின் பிறந்தநாள்.
Happy Birthday Gautam Gambhir

  • தொடங்கியவர்

 

எலும்புக்கூடுகளால் நிறைந்த ஏரிக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

  • தொடங்கியவர்

யெஸ் பாஸ்; நோ சொல்லப் பழகுங்க! #MorningMotivation

 

The Late Show With Stephen Colbert stephen colbert late show lssc lateshow

via GIPHY

நம்மிடம் இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று எல்லாவற்றிற்கும் " யெஸ் " சொல்லி மாட்டிக்கொள்வது. அலுவலகத்தில் உயர் அதிகாரி இந்த வேலையை  நீங்கள் தான் செய்து முடிக்க வேண்டும் என கேட்கிறாரா, வீட்டில் குழந்தை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என கேட்கிறதா எல்லாவற்றுக்கும் யோசிக்காமல் 'யெஸ்' சொல்லியே பழக்கப்பட்டிருப்பீர்கள்.

 ஆனால் வேறு ஏதாவது ஒரு வேலைப்பளுவில் மாட்டிக் கொண்டு நீங்கள் ஒப்புக் கொண்ட வேலையை முழுமையாக செய்து முடிக்காமல் போகும் பொழுது உங்கள் உயரதிகாரிக்கும் குழந்தைக்கும் உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைவதையும் தாண்டி உங்களுக்கே உங்கள் வேலை மீதான நம்பிக்கை குறைந்து விடுவதை உணர முடியும். இப்படி உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்களை சுற்றி இருப்பவர்களுக்காகவே உங்களுக்கு பிடிக்காத வேலையாக இருந்தாலும் யாரும் ஏதும் சொல்லிவிடுவார்களோ என்ற நினைப்பிலும் தயக்கத்திலுமே எல்லாவற்றுக்கும் தலையாட்டி விடுவோம். பின்னர் அந்த வேலையை செய்ய ஆரம்பிக்கும் பொழுது நிச்சயமாக அதன் மீது முழுமையான ஈடுபாட்டை காட்டவே முடியாது. 

  • உங்களுக்கு தெரியாத அதிகம் பரிட்சயமில்லாத விஷயங்களைச் செய்ய சொல்லி நிர்பந்திக்கும் பொழுது முழு மனதோடு அதை நிராகரித்து விடுங்கள். அதே நேரம் எல்லாவற்றுக்கும் "எனக்கு இது தெரியாது " " எனக்கு இதில் ஆர்வம் இல்லை " என்ற கருத்துகளை மட்டுமே பகிராமல் ஓய்வு நேரங்களில் அதை பற்றித் தெரிந்து கொள்ள உங்கள் நேரத்தை செலவு செய்யுங்கள். இது உங்களுக்கு தெரியாத விஷயத்தையோ ஏதோ சொல்கிறார்கள் செய்து பார்ப்போம் என்று அரைகுறையாக செய்வார்களே அவர்களிடமிருந்து உங்களைத் தனித்துக் காட்டும்.

SayNO_16389.jpg 

  • 'செய்ய முடியும்' அல்லது 'முடியாது' என்ற குழப்பமான நேரங்களில் நாம் அதிகம் தேர்ந்தெடுப்பது அதிகபட்சமாக ' செய்ய முடியும் ' என்பதாகத் தான் இருக்கும். அது போன்ற நேரங்களில் தெளிவாக உங்கள் கருத்தை வெளிப்படுத்த பழகுங்கள். 
  • ' யெஸ் ' அல்லது 'நோ' அதைச் சொன்னாலும் அது முழுக்க முழுக்க எந்த வித விமர்சனத்துக்கும் அஞ்சாமல் உங்களிடமிருந்து வெளிப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். ' நேர்படப் பேசு' என பாரதி சொன்னது இதற்காகத் தான்.
  • ஒவ்வொரு முறை நோ சொல்லும் பொழுதும் அந்த கேள்விக்கான அடுத்த கட்ட தீர்வையும் தயக்கமில்லாமல் முன்வைத்தால் உங்கள் மேல் தனிக்கவனம் உருவாகும். இயல்பாக எல்லா விஷயத்துக்கும் ' யெஸ் ' சொல்லியே பழக்கப் பட்டிருக்கும் நம் மனதுக்கு ' நோ ' எனச் சொல்வது ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாய் தான் இருக்கும். ஆனால் விருப்பமில்லாத விஷயங்களில் நீங்கள் 'நோ' சொல்ல ஆரம்பித்தால் தானாகவே உங்களுக்கு பிடித்த விஷயங்களுக்கு எல்லோரும் 'யெஸ்' சொல்லுவார்கள்!

யெஸ் பாஸ்; நோ சொல்ல பழகுங்க!

vikatan

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

14712693_1155019851213374_49493689250486

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளரும், தலைவருமான ரஷிட் லட்டிஃபின் பிறந்தநாள்
Happy Birthday Rashid Latif

  • தொடங்கியவர்

வாங்க... கை கழுவலாம்! - #GlobalHandwashingDay

handwash1_19522.jpg

 

‘அந்த ஆளைக் கை கழுவிட்டேன்பா’ என்று யாராவது வேதனையோடு சொல்லியிருப்பார்கள்; அதையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் கேட்டிருப்போம். நெருக்கமாக நேசித்த ஒருவரை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளுவதை விடுங்கள்! கை கழுவுதல் அத்தனை சாதாரண விஷயம் அல்ல பாஸ்! சுத்தமாகக் கைகளை வைத்திருந்தால், வயிற்றுப்போக்கு, நிமோனியா உட்பட பல வியாதிகளைத் தடுக்கலாம்; நோய்த்தொற்று வராமல் காக்கலாம்; ஆரோக்கியமாக வாழலாம். இவையெல்லாம் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள். அதனால்தான் அக்டோபர் 15-ம் தேதியை உலக கை கழுவுதல் தினமாகக் கொண்டாடுகிறார்கள். 

சுவாசப் பிரச்னைகள் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக இறக்கும் குழந்தைகளின் இறப்பைக் குறைக்கவே ஆரம்பத்தில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. அதாவது, சோப் போட்டு கைகளைக் கழுவினால் இந்த பாதிப்புகளைப் பெருமளவுக்குக் குறைத்துவிடலாம். சோப், கிருமி நாசினியால் கைகளைச் சுத்தமாகக் கழுவுவது எப்படி என்பது ஒரு பிரசாரமாகவே மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டது. சாப்பிடுகிறோம்... கை கழுவுகிறோம்; கழிவறைக்குச் செல்கிறோம்... கை கழுவுகிறோம்; வெளியே போய்விட்டு வீட்டுக்குத் திரும்பிய பிறகும் கால்களையும் கைகளையும் கழுவுகிறோம்... ஆனால், அதை முறைப்படி செய்கிறோமா என்று கேட்டால் நிச்சயமாக நம்மில் பெரும்பாலானோர் செய்வது இல்லை என்பதே உண்மை. அப்படிச் செய்யாத காரணத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான நோய்த்தொற்றுக்கு ஆளாகுறோம்; ஆரோக்கியத்தையும் இழக்கிறோம்.  

2008-ம் ஆண்டு `குளோபல் பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் ஃபார் ஹேண்ட்வாஷ்’ அமைப்பு இந்த தினத்தை ஆரம்பித்து வைத்தது. ஐநா பொதுக்குழு, 2008-ம் ஆண்டை ‘உலக சுகாதார ஆண்டாகக்’ கடைப்பிடித்தது. அதன் ஓர் அங்கமாகத்தான் அக்டோபர் 15-ம் தேதி ‘உலக கைகழுவுதல் தினம்’ என அறிவிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் இந்தத் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். முதல் கை கழுவுதல் தினத்தன்று இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் தன் சக தோழர்களுடனும் கலந்துகொண்டார். அன்று, இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 10 கோடி மாணவர்கள் இந்த தினத்தின் முக்கியத்துவம் குறித்த பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். 

hand%20wash_12418.jpg

முறையாகக் கைகளைக் கழுவுவது எப்படி? 

* குழாய்த் தண்ணீரில் கைகளை நீட்டிக் கழுவ வேண்டும்.
* சோப்பு அல்லது லிக்விட் சோப்பை உள்ளங்கை, புறங்கையில் பரவலாகப் பூச வேண்டும். 
* இரு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும்.
* இப்போது வலது உள்ளங்கையால் இடது புறங்கையைத் தேய்க்கவும்; அதேபோல இடது உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்க வேண்டும்.
* இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, விரல்களைக் கோர்த்து, விரல் இடுக்குகளைத் தேய்க்க வேண்டும்.
* இப்போது விரல்களை மடக்கி, இடது உள்ளங்கையின் மேல் வலது கை விரல்களை வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும். அதேபோல வலது உள்ளங்கையின் மேல் இடது கை விரல்களை மடக்கி வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும்.
* இடது கை கட்டை விரல் நுனியை, வலது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்கவும். அதேபோல வலது கை கட்டை விரல் நுனியை, இடது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்க வேண்டும்.
* வலது கை விரல்களால் இடது உள்ளங்கையிலும், இடது கை விரல்களால் வலது உள்ளங்கையிலும் சுழற்றிச் சுழற்றித் தேய்க்க வேண்டும்.
* இப்போது கைகளை குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். 
* துண்டால் கைகளை நன்கு துடைக்கவும். 

கை கழுவ இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்று யோசிக்க வேண்டாம். இவ்வளவையும் ஒரு சில விநாடிகளில் முடித்துவிட முடியும். இதனால், கிருமிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு ஆரோக்கியம் காக்கப்படும்.

வாங்க... கை கழுவலாம்! 

vikatan

  • தொடங்கியவர்

14729159_1155053187876707_39743229554614

ஆசானாக, அணு விஞ்ஞானியாக பின்னர் அனைவரது மனதும் வென்ற அன்புக்குரிய இந்திய ஜனாதிபதியாக விளங்கிய - அண்மையில் காலமான அப்துல் கலாம் என்ற ஆளுமை மிக்க மனிதரின் பிறந்தநாள்.

நினைந்து கொள்கிறோம்.

 

இளைஞர்களுக்கு கலங்கரை விளக்காய் திகழ்ந்த அப்துல்கலாம்! #APJAbdulKalam

village2_09415.jpg

 

பல நல்ல மாமனிதர்களை பெற்று பெருமை கொண்டது தான் நம் தேசம் அந்த வகையில் தமிழ்த்தாய் ஈன்ற கடைகோடியில் பிறந்த காவியத்தலைவன் தான் A.P.J.அப்துல் கலாம் அவரின் பிறந்த நாள் இன்று.

உலக நாயகனின் உதயம்

தமிழ்நாட்டின் கடைகோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் சாதரணமான  ஏழை மீனவக் குடும்பத்தில் ஜெயினுலாப்தின் - ஆஷியம்மா தம்பதியருக்கு 15.10.1931 ல் பிறந்தவர் தான் அப்துல் கலாம். கலாமின் 86-வது பிறந்த தினம் இந்நாள். அவரின் முழுப் பெயரோ "ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன்  அப்துல் கலாம்"  சிறு வயது முதலே பல  கஸ்டங்களை கடந்து வந்தவர் தான் கலாம்.பேப்பர் போடும் பையனாக இருந்து தன் வாழ்க்கைப் பயணங்களை தொடங்கியுள்ளார்.

கலாமின் கல்விப் பருவம்

இராமநாதபுரம் ஸ்வாட்ஸ் மெட்ரிக் பள்ளியில் படித்தார்.பின் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியலும் ,1955-ல் சென்னை எம்.ஐ.டி யில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்கும்  பயின்றார்.

இந்தியாவின் குடிமகனாக விளங்கிய கலாம்

இப்படி தன்னுடைய வாழ்க்கையைத்  தொடங்கிய கலாம் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்தார்.1958-ல் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்த கலாம் 1963-ல் இந்திய விண்வெளித் துறையின் திட்ட அலுவலர் ஆனார். 1998ல் ராஜஸ்தானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை எல்லாம் அதிர வைத்தார்.

அக்னி நாயகனாய் கலாம்

1960-ல் DRDO விஞ்ஞானியாக தன் பயணத்தை தொடங்கிய கலாம் பிறகு இஸ்ரோ விண்வெளித் துறையில் கால்பதித்து பல ஏவுகணைகளை பறக்க விட்டார்.உலக நாடுகள் மத்தியில் இந்தியா தலைநிமிர இவரின் பணி இன்றியமையாதது.  இந்திய விண்வெளித் துறைக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கனார். அக்னி ஏவுகணையை விண்ணில் செலுத்தி உலக நாடுகள் அனைத்தையும்  இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த இவர் "ஏவுகணை தந்தை என்றே" அழைக்கப் பட்டார் .பல தொழில் நுட்பத்துக்கு வித்திட்டவராய் திகழ்ந்தவர் கலாம்.

இளைஞர்களின் எழுச்சி நாயகனாய் கலாம்

இந்திய விண்வெளித் துறையோடு தன் பயணத்தை முடிக்காமல் எதிர்கால இந்தியாவின் மன்னர்களாம் இளைஞர்களை "கனவு காணுங்கள்   கனவு காணுங்கள்" எனக் கூறி ஒவ்வொரு இந்திய இளைஞரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தவர். ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் இமயமாக இருக்கிறார்.

நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த கலாம்

பாரத ரத்னா, பத்ம பூசண், பத்ம விபூசண் என எந்த பட்டத்தையும் விட்டுவைக்காத கலாம் நாட்டின் குடியரசு தலைவராகவும்  உயர்ந்தார்.   இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக 2002-2006 வரை பணியாற்றினார் . எத்தனையோ பேரை இப்பதவி அலங்கரித்தது ஆனால் இந்த பதவியே அலங்கரிக்கப்பட்டது அப்துல் கலாமால்.நாட்டின் தலைவராக உயர்ந்த போதிலும் தனக்கென எதுவும் சேர்த்து வைக்காமல் நாட்டுக்காகவே வாழ்ந்தார். அவர் சேர்த்து வைத்தது என்னவோ அவரின் புத்தகங்களும்,நம்முடைய அன்பையும்.

கலாமின் நூல்கள்

இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்பதே கலாமின் ஆசையாக இருந்தது அதனால் "இந்தியா 2020" என்ற நூலை எழுதினார். அவரின் வாழ்க்கை காவியமான "அக்னி சிறகுகள்",குறிக்கோள் 3 பில்லியன்,திருப்பு முனைகள், பற்றவைக்கப்பட்ட மனங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

கனவாக மாறிய கலாம்

கனவு காணுங்கள் எனக்கூறி கலங்கரை விளக்காய் திகழ்ந்த கலாம் தன்னுடைய விந்தை விளையாட்டை மண்ணுலகில் மட்டும் செய்தால் மட்டும் போதாது விண்ணிலகிலும் செய்ய வேண்டும் என விரைந்து விட்டார்.கடவுளுக்கே கலாமை சீக்கிரமாக காண வேண்டும் என்ற ஆசை போலும் அதனால் விரைவாக அவர் கலாமை அழைத்துச் சென்றுவிட்டார்.27.07.2015 அன்று மேகாலயா மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்த கலாம் திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் இறந்தார்.அவரின் மரணம் இந்தியாவையே சோகத்தில் மூழ்க்கியது ஒவ்வொரு இந்தியனும் தன் குடும்பத்தில் ஒருவராக கலாமுக்காக துக்கம் செய்தார்கள்.அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரம்  பேக்கரும்பில்   அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தற்போது அவரின் சமாதியில் பிரமாண்டமான வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இன்று கலாம் நம்மிடம் இல்லை என்றாலும் அவர் விதைத்த விதைகளாய் இருக்கிற இளைஞர்கள் ஒவ்வொருவரும் இந்தியா வளர்ந்த வல்லரசு நாடாக மாற  உழைக்க வேண்டும்  உழைப்போம்!!!.

கலாமின் முக்கிய கோரிக்கைகள்

1.கிராமம் - நகரம் இடையே இடைவெளி அனைத்தும் அகலப் பட வேண்டும்.
2.குடிநீர்,எரிசக்தி சமனடையப் பட வேண்டும்.
3.விவசாயம்,தொழில் ,சேவை, ஒருங்கிணைந்த முன்னேற்றம்.
4.சமூகம் ,பொருளாதாரம், பண்பாட்டுடன் சிறந்த கல்வி அனைவருக்கும் கிடைத்தல்.
5.விஞ்ஞானம் ,அறிவார்ந்த வல்லமை ,தொழில் முதலீடு ஏற்புடைய நாடாக மாற்ற வேண்டும்.
6.குடிமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி.
7.ஊழலற்ற ,வெளிப்படையான, பொறுப்பான ஆட்சி முறை.
8.எவரும் தனிமைப் படுத்தப்படாமல் வறுமை ஒழிக்கப்பட்டு கல்லாமை இன்றி, பெண்கள், குழந்தைகள் பேணப்படுதல் .
9.அனைத்து வகைகளிலும், ஓர் ஏகோபித்த நாடாக இந்தியா மாற வேண்டும்.
10.சிறந்த தலைமை, வளமான, அருமையான நிலையை இந்திய மக்கள் அனுபவிக்க வேண்டும்.

கலாம் கற்பித்த பொன் மொழிகள்

சிறந்த மனிதர்களுக்கு மதம் என்பது,
நண்பர்களை உருவாக்கும் வழி சிறிய மனிதர்களுக்கு அது சண்டையிடுவதற்கான கருவி .

உங்களது முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வு எடுக்காதீர்கள். ஏனென்றால் இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தால், முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல நிறைய உதடுகள் காத்துக் கொண்டிருக்கும்.

வானத்தைப் பாருங்கள் நாம் தனித்து இல்லை.இந்த பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது.
கனவு காண்பவர்களுக்கும் உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது.

பெரிய விசயங்களுக்காக காத்திருக்க கூடாது.கையில் என்ன இருக்கிறதோ அதைக்கொண்டு பயணத்தை தொடங்க வேண்டும்.
எல்லோரும் 5 நிமிடங்கள் ஒதுங்கி சிந்தியுங்கள், என்னிடமுள்ள தனித்திறமை சிந்தனை, அறிவு, மனோபாவம் என்ன ?

vikatan

  • தொடங்கியவர்

வவ்வால் பொண்ணு!

 

58p1.jpg

டங்களில் வரும் சூப்பர் ஹீரோக்களைப் போல வேடமணிந்து ஆங்காங்கே பலர், கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிக்கொண்டிருப்பார்கள். இதில் பல வேடிக்கையாக இருந்தாலும், சில நபர்கள் நிஜ ஹீரோக்கள் போலவே சாகசங்கள் செய்து பிரமிக்க வைப்பார்கள். அப்படிச் சமீபத்தில் ரஷ்ய மக்களை நடுக்கத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார் இந்தப் பெண் பேட்மேன்.

பேட்மேன் படங்களைப் பார்த்துப் பார்த்து  நாடி, நரம்பு, ரத்தம், எலும்பு என்று உடம்பு முழுக்க சாகசவெறி ஊறிப்போன `காப்ஸரோ' எனும் பத்தொன்பது வயது இளம்பெண்தான் கரண்ட் கம்பிகளுக்குள் புகுந்து மாரத்தான் ஓடிக்கொண்டிருக்கிறார். மின்சார ரயிலின் மேலே செல்லும் ராட்சத வொயர்களைப் பார்த்தாலே எல்லாப் பாகங்களிலும் உதறல் எடுக்கும் நமக்கு, இந்தப் பெண் ரயில் கூரையின் மேலே படுத்தபடி வித்தையைக் காட்டுவதைப் பார்த்தால், அல்லு கிளம்புவதில் ஆச்சர்யமில்லை. பனிச்சறுக்கு, நீர்ச்சறுக்கு போல ரயில் சறுக்கு விளையாட்டில் புகுந்து விளையாடுகிறார் அம்மணி. ரயிலில் தொங்கிக்கொண்டும், பறந்து பறந்து பயிற்சி செய்தபடியும் பயணிக்கும் இவர், எப்போதாவது போரடிக்கும்போதுதான் வண்டிக்குள்ளேயே சென்று அமர்வாராம்.

58p2.jpg

‘இப்படிக் கொலைவெறியாக் கிளம்பிட்டீங்களேம்மா...?’ எனக் கேட்டால், ‘பெண் என்பதால் சிறு வயதிலிருந்தே வீட்டில் அதிகமாகப் பாதுகாப்பு உணர்வோடு பொத்திப் பொத்தியே வளர்த்ததால் கடுப்பாகி இப்படி சாகசம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். பெண்கள் என்றாலே வீட்டுக்குள் முடங்கிப்போய் இருக்க வேண்டுமா? நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் என் பெற்றோர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். நான் பின்பற்ற விரும்புவது எல்லைகள் தாண்டி தனக்கென ஒரு வரலாறு படைத்தவர்களைத்தானே அல்லாமல் ஒரு வட்டத்தில் குறுகியவர்களை அல்ல’ என ஸ்டேட்டஸ் தட்டுகிறார் இந்த சாகச விரும்பி.

மனிதி...வெளியே வா!

vikatan

  • தொடங்கியவர்

14705782_1155053881209971_12146345719147

ஈழத்துக் கவிஞரும் கர்நாடக இசைக் கலைஞரும் ஆன இணுவில் வீரமணி ஐயரின் பிறந்த தினம்.
காலஞ்சென்ற வீரமணி ஐயர், பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.

  • தொடங்கியவர்

24 மணி நேரமும் இலவசமாக மது அருந்த இங்கு செல்லவும் (வீடியோ இணைப்பு)

 

 

உலகில் முதன் முறையாக 24 மணி நேரமும் இலவசமாக மது வழங்கும் சேவையொன்று இத்தாலியில் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளவில் வையின் மது உற்பத்தி செய்வதில் இத்தாலி இரண்டாம் இடம் வகித்து வருகின்றது.மேலும், இத்தாலி நாட்டில் ஒவ்வொரு வருடமும் பல நாடுகளை சேர்ந்த சுற்றூலா பயணிகள் வருவது வாடிக்கையாகவுள்ளது.

3961B8C000000578-3837911-image-a-31_1476

குறிப்பாக, அப்ருஸ்ஸோ மாகாணத்தில் உள்ள சால்டரி டி ஓர்டோனா என்ற நகருக்கு இலட்சக்கணக்கான சுற்றூலா பயணிகள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3961B46F00000578-3837911-image-a-29_1476

எனவே, சுற்றுலா பயணிகளை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் வகையில் இப்பகுதியில் போன்டனா டெல் வினோ என்ற வையின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த வையின் நிலையத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு நீரூற்றில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் இந்த வையின் ஊற்றில் இருந்து 24 மணி நேரமும் வையின் வந்துக்கொண்டு இருக்கும்.

3961B47300000578-3837911-image-a-37_1476 3961B49500000578-3837911-image-m-36_1476

இவ்வழியாக செல்லும் சுற்றூலா பயணிகள் எவ்வித கட்டணமும் அனுமதியும் இன்றி எந்த நேரத்திலும் தரமான குறித்த வையினை சேமித்து அருந்தலாம்.இந்த வையின் ஊற்றை சுற்றூலா பயணிகளின் நன்மைக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைத்து நடத்தி வருகின்றது.

எனினும், கட்டுப்பாடின்றி அளவுக்கதிகமாக மது அருந்துபவர்களுக்கும், எந்நேரமும் மதுவில் மூழ்கியுள்ள நபர்களுக்கும் இங்கு வையின் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

3961B8CA00000578-3837911-image-a-30_1476

3961B8C400000578-3837911-image-a-33_1476

 

virakesari.lk

  • தொடங்கியவர்

எல்லாமே ஒரு கணக்குதான்! #WorldMathsDay

160328_ED_andrew-hacker.jpg.CROP.promo-x

படிக்கும்போது நமக்கு எட்டிக்காயாய் எட்ட நின்றது கணக்குப் பாடம். பலருக்குக் கணக்கை நினைச்சாலே மெரசல் ஆகும். அப்படிச் சின்ன வயதில் நம்மை வெச்சு செஞ்ச கணக்குக்கு இன்னிக்கு பர்த்டேவாம். அதான் பாஸ், உலக கணக்கு தினமாம். #WorldMathsDay

நாம ஒண்ணாவது, ரெண்டாவதுல படிச்ச கூட்டல், பெருக்கல் கணக்குகளைத் தவிர வேறு கண்ணைக் கட்டும் எந்தக் கணக்குகளையும் வாழ்நாளில் எங்கேயுமே பயன்படுத்தப் போறதில்லை. அப்புறம் எதுக்குய்யா அப்படி மண்டையைக் குழப்பி காஷ் தீட்டா, டேன் தீட்டான்னு 'கொசகொச' ஃபார்முலாக்களைப் படிக்கச்சொல்லி 'ஞேஞே'ன்னு சுத்த விட்டீங்க? ...

பிதாகரஸ் தேற்றம், லெக்ராஞ்சியின் நான்கு வர்க்கத் தேற்றம்னு விதவிதமான பெயர் வெச்சு அதே எக்ஸ், ஒய், இசட்டை மல்லாக்கப் படுக்க வெச்சு, சேர்த்து வெச்சு, விலக்கி வெச்சுனு டிசைன் டிசைனா புரியாமலேயே என்னென்னவெல்லாமோ பண்ணிக் கடைசியா, வலதுகைப் பக்கமும், இடதுகைப் பக்கமும் சமமா இருக்கு. தேற்றம் சரியாத்தான் இருக்குனு சர்டிஃபிகேட் கொடுப்போம். ஆமா... அவ்ளோ பெரிய அறிஞர்களுக்குத் தெரியாததா எங்களுக்குத் தெரிஞ்சிடப் போகுது? அப்புறம் ஏன்யா பாடாய்ப் படுத்துறீங்க?

வர்க்கமூலம், கனமூலம்னு விதவிதமான பஸ் ஸ்டாப் போஸ்டர் வகையறாக் கணக்குகளைத் தீர்க்கச் சொல்லி வருசம் முடியும்போது கணக்குக்கு மட்டும் ஆறு நோட்டு முடிஞ்சு போயிருக்கும். அப்பா கொடுத்த காசெல்லாம் கணக்கு நோட்டு வாங்கியே காலியாப் போகுதுன்னு கண்ணைக் கசக்கி நின்ன பயலுகதானே நாமெல்லாம். 

பள்ளிக்கூடம் படிக்கும்போது பெருமைக்கு எருமை மேய்ச்ச கதையா கணக்கைப் பார்த்தாலே எட்டடிக்குப் பாய்ஞ்சு பல்டி அடிச்சுப் பறந்திருப்போம். கணக்கு வாத்தியாரைப் பார்த்தாலே log 270 டிகிரிக்கு வேல்யூ என்னன்னு கேட்டு மண்டையில் கொட்டுவாரேனு டேபிளுக்கு அடியில் நுழைஞ்சு தலைமறைவாகி இருப்போம். 

ஆனால், மளிகைக் கடையில் பொட்டுக்கடலையும் பொரியும் வாங்குறதுல இருந்து பங்குச்சந்தையில் ஷேர் விற்கிறது, விண்வெளிக்கு ராக்கெட் விடுறது வரையும் வாழ்க்கையில் எல்லாமே கணக்குதான். ஆகவே மக்களே... நாம படிச்ச கணக்கு நமக்கு ஒரு வகையிலேயும் பயன்படலையேன்னு மனம் வெதும்பிப் பாடம் நடத்திய வாத்தியாரைத் திட்டுறதை விட்டுட்டு கணக்குப் பாடத்தைக் கொண்டாடும் விதமாக உங்களுக்கு நினைவில் இருக்கும் ஃபார்முலாக்களை எல்லாம் கமென்ட்டில் கொட்டிவிட்டுப் போங்களேன். a+b+2ab -யைத் தவிர இன்னும் என்னவெல்லாம் நமக்கு ஞாபகம் இருக்குனு பார்க்கலாம்.

கணக்கு வாத்தியார்களையே கதிகலங்க வைத்த சில கில்லாடி மாணவர்களின் பதில்களை வீடியோவில் கண்டு மகிழுங்கள்...

 

 

vikatan

  • தொடங்கியவர்

 

சிம்பன்ஸிகளுக்கு ‘சிம்பன்சிகளாக’ இருக்க பயிற்சி

சிம்பான்ஸிகளை காடுகளில் செயற்படுவதை போலவே மிருகக்காட்சி சாலைகளிலும் செயல்பட வைக்க பிரிட்டிஷ் மிருக காட்சி சாலை ஒன்று முயற்சிக்கிறது.

அவற்றுக்காக டைக்ராஸ் மிருக காட்சி சாலையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் புதிய செயற்கை வாழ்விட சூழலில் அவற்றின் செயற்பாடுகள் கண்கானிக்கப்பட்டு வருகின்றன.

  • தொடங்கியவர்

கிராமப்புற பெண்களுக்கு தனியொரு நாள் எதற்கு? #RuralWomen

14658398_10202253291369192_383953013_n_1

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என கவிபாடினான் தமிழ்ப் புலவன். உழவில்லை என்றால் உணவில்லை. உணவில்லை என்றால் உயிரில்லை. விவசாயம் என்றாலே விவசாயி என்றும், விவசாயி என்றதும் ஏர்பூட்டி நிலம் உழும் ஆண்மகனை சித்தரிப்பதும்தான் இங்கு பொது வழக்கம். ஆனால், இந்திய அளவில் விவசாயத்தில் அதிகம் ஈடுபடுவது ஆண்கள் அல்ல... பெண்கள். விதைத்தல், களை பிடுங்குதல், அறுவடை செய்தல் என எல்லாவற்றிலும் அவர்களின் பங்குதான் அதிகம். கிராமப்புறப் பெண்களில் 82 சதவிகிதம் பேர் உழைக்கும் வர்க்கத்தினர். குறிப்பாக விவசாயிகள். அத்தகைய கிராமப்புறப் பெண்களுக்கான சர்வதேச தினத்தை இன்று அனுசரிக்கிறது ஐக்கிய நாடுகள் சபை.

 

கிராமப்புறப் பெண்களுக்காகத் தனியொரு நாள் எதற்கு?

‘‘நாட்டின் 63 சதவிகித உணவு உற்பத்திக்குப் பின்னணியில் இருப்பவர்கள் அவர்கள்தான். அவர்கள் மட்டுமே இரண்டரை லட்சம் கோடி ரூபாய் வரை இந்தியப் பொருளாதாரத்துக்கு மதிப்புக் கூட்டுகிறார்கள். இவை அனைத்தையும் தாண்டி இந்தியப் பொருளாதாரம் 9 சதவிகிதம் வரை வளர்ச்சி அடைய கிராமப்புறங்களில் பயிர் நடும் பெண்களும் ஒரு காரணம். எங்கோ, ஒரு பலமாடிக் கட்டடத்தின் குளிரூட்டப்பட்ட அறையில் யாரோ சிலர், அவர்கள் விதைத்த நெல்லை உணவாக உண்டபடிதான்... நாட்டின் முன்னேற்றப் பாதையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இன்றளவில் உழைக்கும் பெண்களில் 52 சதவிகிதம் வரை அடிப்படை ஊட்டச்சத்துகூடக் கிடைக்காத அளவுக்குச் சிக்கலில் இருக்கிறார்கள். 69 சதவிகிதம் வரை கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள் அவர்களுக்கான உரிமையை நிலைநாட்டத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இவை அத்தனையுமே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த காரணங்கள்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

‘‘கிராமப்புற பெண்களுக்கு உடல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாதுகாப்பு அதிகம் தேவை!’’

deepa%20dhanraj_18020.jpg‘‘பெங்களூருவில் அண்மையில் அரசுப் பெண் பணியாளர்கள் சிலர், பெரிய அளவிலான தர்ணாவில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கான சம்பளம் சரியாக அவர்களது மேலதிகாரிகளால் தரப்படாததுதான் காரணம். குறைவான சம்பளம் தரப்பட்டது என்பதை அறிய அவர்களுக்கு பல வருட காலங்கள் பிடித்தது. காரணம், கல்வியறிவு குறைபாடு. பெரும்பாலான பெண்கள் நாளொன்றுக்கு 100 ரூபாய் அல்லது அதற்கும் குறைவான சம்பளத்துக்குத்தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் உழைப்புக்கான ஊதியம் திருப்பி அளிக்கப்படுகிறதா என்றால்? இல்லை. தனியார் கணக்கிடுதலின்படி 93,000 கோடி ரூபாய் வரை கிராமப்புறப் பெண்களுக்கு இதுவரை இழப்பீடு ஏற்பட்டுள்ளது. சாப்பாட்டை உண்ணுபவர்கள் வருடாந்திரமாகப் பல லகரங்களில் சம்பாதிக்கும்போது அதனை விளைவிக்கும் பெண்களின் வருடாந்திர வருமானம் அதில், நான்கில் ஒரு பங்குதான்.

காடுகள், விதைகள் என நமக்காக அத்தனையையும் பாதுகாக்கும் அவர்களுக்கு நாம் என்ன மாதிரியான கைம்மாறு செய்துவிட முடியும்? ஆந்திராவின் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் பெண்களுக்கு கர்ப்பகாலங்களில் இரட்டிப்புச் சம்பளம் தருகிறார்கள். இது மாதிரியான திட்டங்கள் ஏன் இன்னும் அரசால் எந்தக் கிராமத்திலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை? சிறுதொழில் போன்ற அரசுத் திட்டங்கள் அவர்களது பொருளாதாரத்தை மீட்க ஓரளவே வழிவகை செய்கிறது. ஆனால், சமூகத்தின் கட்டமைப்பைப் பார்க்கும்போது பெண்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புறப் பெண்களுக்கு உடல் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாதுகாப்பு இன்னும் அதிகம் தேவை. பாதுகாப்பைத் தர ஒவ்வொரு மாநிலத்தின் கிராமப்புறப் பகுதிகளிலும் பாலினத் தணிக்கை (Gender audit) நடத்தப்பட வேண்டும். பாலினத் தணிக்கை முறையைக் கொண்டுவருவது அல்லது அதனை 100 சதவிகித செயல்முறைப்படுத்துவதுதான் கிராமப்புறப் பெண்களுக்கான வாழ்வியல் தேவைகளை நிறைவேற்ற வழிவகை செய்யும்’’ என்கிறார் ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜ்.

பாலினத் தணிக்கை என்றால் என்ன?

ஒவ்வோர் இலாக்காவிலோ, துறையிலோ, நிர்வாகமோ அல்லது குழுமமோ தனது செயல்பாடுகளை எந்த அளவுக்கு பாலின சமத்துவ நோக்கத்துடன் அணுகுகிறது என்பதுதான் பாலினத் தணிக்கையின் அடிப்படை நோக்கம். ஒவ்வொரு குழுமத்தில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் வெவ்வேறு நிலையில் இருப்பவர்களின் நிலையை ஆய்வுசெய்வதன் வழியாகவே குழுமத்தின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்ல முடியும். இது எந்த ஒரு தனியார் அல்லது அரசு சார்ந்த நிர்வாகத்துக்கும் பொருந்தும். இதன்வழியாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பெண்களின் பல்வேறு வகையான சிக்கல்களுக்கும் தீர்வை எட்ட முடியும்.

‘‘உழைப்புக்கும், உரிமைக்கும் அங்கீகாரம் தரவேண்டும்!’’

prema%20rangachary_18348.jpg‘‘கிராமப்புறப் பெண்கள் என்றாலே ஒன்றும் அறியாதவர்கள் என்கிற பொது பிம்பம் இங்கு உண்டு. கற்றறிதலுக்கும் உள்ளார்ந்த ஞானத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்தான் அப்படிச் சொல்ல முடியும். சிறுதானியங்களை உணவாக உண்டால் உடலுக்கு நல்லது என இன்று நிறைய மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே பயிர்களை முளைகட்டி வைத்து உணவாகக் கொடுத்தவர்கள்தான் நமது மூதாட்டிகள். இப்போது, நமக்கு ஏற்ப நம்முடைய சுற்றுச்சூழலை மாற்றிக்கொண்டிருக்கிறோம். கிராமங்களிலும் காடுகளிலும் இருப்பவர்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு வாழ்கிறார்கள். அதனை, இன்று இருக்கும் புத்தகங்கள்போல இல்லாமல் தங்கள் பாடல்களின் வழியாகவும் கலைகள் வழியாகவும் தொடர்ந்து ஆவணப்படுத்தியும் வருகிறார்கள். ஆவணங்கள் அத்தனையும் நம்மிடம்தான் வந்து சேர்கின்றன. ஆனால், அதற்காக நாம் அவர்களுக்கு ஒன்றுமே திருப்பி அளிப்பதில்லை. முக்கியமாகக் கல்வியறிவு! கிராமப்புறப் பெண்கள் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப் பெண்கள் கல்வியறிவை நிராகரிப்பதன் காரணம், அவர்களைப் பற்றிய நமது தவறான பார்வைதான். அவர்கள் சுற்றுச்சூழலைக் கண்டு பயப்படுவதில்லை. நம்மைக் கண்டும் நம் வாழ்வியலைக் கண்டும்தான் அஞ்சுகிறார்கள். அவர்களது இந்த மனப்பான்மையை அகற்ற வேண்டும். அதற்கு அந்த பகுதிகளில் பள்ளிகள் கட்டித் தருவது மட்டும் தீர்வு அல்ல... நாம் கிராமங்களாக வேண்டும். நாம் அவர்களுடன் ஒன்றுபட வேண்டும். அவர்களது உள்ளார்ந்த திறமைகளை அங்கீகரிக்க வேண்டும். உழைப்புக்கும் உரிமைக்குமான அங்கீகாரம் தருவதுதான் அவர்களைச் செழுமைபடுத்தும்’’ என்கிறார் கல்வியாளர் பிரேமா ரங்காச்சாரி.

ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமும் அதுதான். உலகில் இருக்கும் 76 சதவிகிதம் வறுமைக்கோட்டுக்குக் கீழான பகுதிகளில் இருக்கும் பெண்களுக்கு அவர்களின் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுப்பது. அதன்வழியாக பசி, பட்டினியைப் போக்குவது 2030-க்குள் சர்வதேச பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வது.

சர்வதேசப் பார்வை தொடங்கப்படவேண்டியது கிராமப்புறப் பெண்களிடமிருந்துதான்.

 

 

 

அம்மா பாட்டு... நாட் ரீச்சபிள்?! #WorldRuralWomen'sDay

girl_19574.jpg

 

மடிக்கணினி முதல் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்கள் வரை கடந்த சில ஆண்டுகளாய் கிராமங்களில் வேகவேகமாக நுழைந்து கொண்டிருந்தாலும், இன்னும் நாட்ரீச்சபிள் ஏரியா கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
சூழல் எதுவாக இருந்தாலும் மனதிடமும் உடலுழைப்பும் கொண்டவர்கள் கிராமத்துப் பெண்கள். குறிப்பாக, இவர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்திருக்கும். ஆயிரம்தான் கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கை அழகானது. அதை வாழ்வதற்கெல்லாம் நிச்சயமாக கொடுப்பினை வாய்த்திருக்க வேண்டும்.

விடியற்காலையில் எழுந்து, மாட்டுச்சாணத்தை நீரில் கரைத்து தெருவில் தெளித்து, பெருக்கிக் கோலம் போடும்போது கிடைக்கும் உடற்பயிற்சியை, நகரங்களின் ட்ரெட்மில் எப்போதும் கொடுத்துவிடாது.


பத்து ரூபாய் கொடுத்து ராசயன சாயத்தை மெஹந்தி என்று பூசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மருதாணி இலைகள் பறித்து அதில் கொஞ்சம் கொட்டைப்பாக்கு புளியும் சேர்த்து அரைத்து வட்ட வட்டமாய் கைகளை அலங்கரிக்கும்போது ஆயிரம் கதைகள் அந்நேரம் கிராமத்துத் தோழிகளிடையே ஓடும்.

p144_19298.jpg


‘இங்க பாருடி... அழவாணலை (மருதாணி) செவந்துச்சுனாதான், உனக்கு உன் மாமன் மேல பாசம் இருக்குறதா அர்த்தமாம். விடியுறவரைக்கும் கலைச்சிடாதே’ என்று தோழி ஒருத்தி சொன்னால்,
அதெல்லாம் செவக்கும்... கொட்டப்பாக்கும் புளியும் மட்டும் வைக்கலை... செவத்துல இருந்த மூட்டப் பூச்சியையும் வச்சிருக்கேன்’ என்பாள் பதிலுக்கு.


வாட்ஸ் அப் கதைகளையோ, மெஹந்தி டிசைன்கள் பற்றியோ அறிந்ததில்லை இவர்கள். இலந்தை மரங்களில் ஏறவும், புளியம் பழங்களை உலுக்கவும் கற்றறிந்தவர்கள். ஆட்டுக்குட்டிகளை கழுத்தில் மாலையாக்கிக் கொள்ளவும், முயல்குட்டிகளை காது பிடித்து தூக்கிச் செல்லவும், வாத்து மேய்க்க, ஆட்டுப்பட்டியை கட்டி ஆள, தூண்டில் போட்டு மீன் பிடிக்க என இயற்கையை கற்றறிந்தவர்கள்.


கிராமத்துப் பெண்கள் சம்மர் கிளாஸில் நீச்சல் கற்றுக் கொள்வதில்லை. விறகு வெட்ட தெரியும். கிணறு வெட்டத் தெரியும். ஏர்பூட்டி கழனி உழ, நாற்று நட, அறுவடை செய்ய, பதர் அடிக்க, நெல்குத்த, ஒரு விவசாய பூமியை மொத்தமாய் கட்டி ஆளும் வித்தையை அறிந்தவர்கள்.


கிராமங்களில் கழிப்பறை வசதி 90 களுக்கு பிறகுதான் படிப்படியாய் கிடைக்கத் துவங்கியது. அதற்கு முன்பெல்லாம் கழிப்பறை வைத்த வீடுள்ள மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வதே கிராமத்துப் பெண்களின் பெருங்கனவாக இருந்தது. செயற்கை நாப்கின்கள் வரவு கிராமங்களில் அப்போது இல்லை. பருத்தித் துணிகளையே மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தி வந்தார்கள். சுகப்பிரசவம் வீட்டிலேயே நடந்ததெல்லாம் ஒரு காலம். விவசாயம், கால்நடை, காடு, கழனி, ஓடை என்றே வாழ்க்கை நடத்தியவர்கள். விஷப்பாம்பு கடித்தாலும் கைவைத்தியம் செய்யும் மருத்துவச்சிகள் கிராமங்களின் உண்டு. ஐபாட் பாட்டறியாமல் ஆராரோ பாடி தாலாட்டியவர்கள் இவர்கள். மஞ்சளும் மரிக்கொழுந்தும் கிராமத்துப் பெண்களுக்காகவே வரம் வாங்கி மண்ணில் விளைந்தவை. தாழம்பூவின் வாசம் அறிந்தவர்கள்.


சொலவடையோ, கிராமியப் பாடலோ ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு இவர்களிடம்.
கிராமங்களில் கல்விக் கூடங்கள் எட்டிப்பார்த்தன. தலைவாரி பாவாடைச் சட்டை அணிந்து கல்விக் கூடங்கள் போனார்கள் சிறுமிகள். எட்டாத ஏட்டுக் கல்வி அவர்களுக்கு எட்டும் கனியானது. பள்ளிக்கூடம் தாண்டி கல்லூரியில் கால் பதித்தார்கள். சேலை... நைட்டி ஆனது. தாவணி... சல்வார் ஆனது.


இதெல்லாம் கால மாற்றம். கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிராமங்களில் தடம் பதிப்பதை வரவேற்பதைப் போலவே, ஆலமரத்து தூளிக்குப் பக்கத்தில் ஒலிக்கும் அம்மா, அம்மாச்சியின் தாலாட்டுப் பாடல்கள் தூரமாய் மெல்லிய சத்தத்தில் இசைத்து அடங்கிக் கொண்டே இருக்கும் சோகமும் நெஞ்சின் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருப்பதையும் மறுக்க முடியவில்லை. கிராமங்களை எல்லாம் நகரமயமாவதோடு, அங்கிருந்த அழகியல், நல்ல பழக்கவழக்கங்கள் என பலவும் மெள்ளச் சிதைவதையும் பொறுக்கமுடியவில்லை.

vikatan

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

 

கிளிக் - தொழில்நுட்பக் காணொளி

அமெரிக்காவில் போனை உளவு பார்க்கும் போலிஸ், இணைய வழிப் பாடல் ஒலிபரப்பு மற்றும் விற்பனையில் அமேசான், புதிய அம்சங்களுடன் பி.எம்.டப்ளியூ புதிய மாடல் பைக் உள்ளிட்டவை அடங்கிய காணொளி.

  • தொடங்கியவர்

வைரல் பூனை!

 

79p1.jpg

வீட்டுல குழந்தைங்க கேட்டுச்சுனு ஆசை ஆசையா பூனையோ அல்லது நாயோ வாங்கி... முதல் வேலையா அதுக்குப் பேரும் வெச்சுருப்போம். துருக்கி நாட்டில் இருக்கிற இஸ்தான்புல் நகரில் ஒரு பூனைக்குச் சிலையே வெச்சிருக்காங்க!

சுற்றுலா நகரமான இஸ்தான்புல் தெருக்கள்ல ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த இந்தப் பூனையோட பேரு டோம்பிலி. `காலை நீட்டி சாவகாசமா உட்கார்றதுல என்னா சொகம்?'னு இந்தப் பூனை அசந்து உட்கார்ந்த கேப்ல ஒருத்தர் போட்டோ எடுத்து நெட்ல சுற்றவிட்டார். பிறகென்ன... போட்டோ வைரல் ஆனதில் ஒரே நைட்டில் இந்தப் பூனை உலக ஃபேமஸ் ஆச்சு. பிறகு யாரு கண்ணு பட்டுச்சோ... தெரியலை. ஆகஸ்ட் மாசம் டோம்பிலி உடம்பு சரியில்லாம இறந்திருச்சு. `லைக் யூ' பூனையான டோம்பிலிக்கு இருந்த அனுதாப அலையைச் சொல்லவா வேணும்?

இஸ்தான்புல்லைச் சேர்ந்த 17,000 பேர் டோம்பிலி நினைவாக சிலை வைக்கணும்னு கண்ணைக் கசக்கிக்கிட்டே கையெழுத்துப் போட்டு மனு கொடுத்திருக்காங்க. எந்த போட்டோவால டோம்பிலி வைரலாச்சோ... அதே இடத்துல அதே போஸ்ல சிலை ரெடியானது. முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிலை `உலக விலங்குகள் தினம்' அன்று திறந்துவைக்கப்பட்டது. இப்போ, இந்தச் சிலையும் இணையத்தில் வைரல்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.