Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12345627_740300879438076_120311237395081:grin:

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்று

1871 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தார்.


1873 - ஆளுநர் வில்லியம் கிரிகோரி, களுத்துறையிலிருந்து கொழும்பு வரையான ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

 

1919 - இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கம்.


1919 –சேர். பொன்னம்பலம் அருணாச்சலம் இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

1946 – இலங்கையில் யுனிசெப் அமைப்பு உருவாக்கம்.

 

1992 - முதல் சிங்களம் அகராதி அறிமுகப்படுத்தப்பட்டது.

 

2001 - இரத்னசிரி விக்கிரமநாயக்க எதிர்கட்சி தலைவர் ஆனார்.

1946 - ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனம் அமைக்கப்பட்டது.

   

1981 - எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.

  • தொடங்கியவர்

12339578_953483348033693_433097039521879


இந்தியாவின் சதுரங்கச் சக்கரவர்த்தி,இளம் வயதிலேயே சதுரங்க சாம்பியனாக முடி சூடி சாதனை படைத்த விஸ்வநாதன் ஆனந்தின் பிறந்தநாள் இன்று.

 

டிச.11: சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த தின சிறப்பு பகிர்வு!

 

விஸ்வநாதன் ஆனந்த் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி அவர் வேலை விஷயமாகப் பல ஊர்களுக்குப் பயணம் போக நேரிட்டதோடு, வீட்டில் தொலைகாட்சியில் பெரிதாக ஆர்வமில்லாமல் போகவே, அம்மாவுடன் சேர்ந்து செஸ் ஆட ஆரம்பித்ததுதான் திருப்பம்.

பின்னர்ப் பிலிப்பைன்ஸ் நாட்டில் அப்பாவின் வேலை விஷயமாக வசிக்கப் போன பொழுதும் செஸ் தான் ஒரே பொழுது போக்காக இருந்தது. டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் நிறைய செஸ் சம்பந்தப்பட்ட புதிர்கள் வந்த பொழுது அவற்றுக்குத் தொடர்ந்து சரியாகப் பதில் அனுப்பி,புத்தகங்களைப் பரிசாக விஷி அள்ளிக்கொண்டே இருக்கவே ,"இனிமேல் நீங்கள் போட்டியில் பங்குகொள்ள வேண்டாம். நீங்களே நிரந்தரச் சாம்பியன்!" என்று சொல்லி எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அனுமதித்து விட்டார்கள். அவர் அப்படி வாங்கிய முதல் பரிசு செஸ் பற்றிய ஒரு புத்தகம்.

viswanathan%282%29.jpg



டால் என்கிற ரஷ்ய க்ளப்பில் செஸ் விளையாட சேர்க்கப்பட்ட பொழுது, அங்கே ஜெயிப்பவர்கள் உட்கார்ந்து கொண்டும் தோற்பவர்கள் நின்று கொண்டும் ஆடவேண்டும். விஷி நின்றதே கிடையாது என்கிற அளவுக்குச் சிறப்பாக ஆடினார்.

2010-ல் உலகச் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் நடைபெற்றது. ஆனந்த், ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் நகரில் இருந்து விமானம் மூலம் சோஃபியாவுக்குச் செல்ல வேண்டும். ஆனால், எரிமலை வெடிப்புக் காரணமாக விமானச் சேவைகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட்டன 1,700 கி.மீ. தூரத்தை காரில் பயணித்துச் சோஃபியாவை அடைந்தார். அந்தப் பயணச்சோர்வு எதையும் காட்டிக்கொள்ளாமல் உலகச் சாம்பியன் ஆகி சாதித்தார் அவர்.

காந்தி அவரின் ரோல் மாடல். அன்புதான் மிகப்பெரிய ஆயுதம் என்று நம்புவர். போட்டியாளரை விமர்சித்தோ, திட்டியோ எந்தப் பேட்டியும் தரமாட்டார். ஆட்டத்தில் மட்டுமே முழுக்கவனமும் அவருக்கு. இந்தியாவின் தனி நபருக்கு வழங்கப்படும் எல்லா விருதுகளும் பாரத ரத்னாவைத் தவிர அவரை வந்து சேர்ந்திருக்கின்றன.

viswanathan1.jpg



சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் காலி பண்ணி, ஐந்து முறை மூன்று வெவ்வேறு வகையான நாக் அவுட், ரவுண்ட் ராபின், நேருக்கு நேர் போட்டி பாணிகளிலும் உலகச் சாம்பியன் ஆனவர் அவர். ஒரு முறை கூட வெற்றியை பெரிய அளவில் கொண்டாடி அவரைப்பார்க்கவே முடியாது. எதையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்ளும் ஜென் நிலை அது.

"எப்படிச் சாத்தியம் ஆனந்த்?" என்று கேட்ட பொழுது ,"எப்படி வென்றேன் என்று கவலைப்படவே மாட்டேன்; என்னென்ன தவறுகள் செய்தேன். எதிராளி என்னென்ன தவறுகள் செய்தார் என்று மட்டுமே மண்டையில் ஓடும். திருப்பி அதைச் செய்யக்கூடாதில்லையா ?" வெற்றித் தோற்காமல் இருப்பதில் இல்லை ; தவறுகளைத் திருப்பிச்செய்யாமல் இருப்பதில் இருக்கிறது என்பது அவரின் மந்திரம். கல்வித்திட்டத்தில் செஸ் சேர்க்கப்பட வேண்டும் அது அவர்களின் திறனை அதிகப்படுத்தும் என்று வாதிடுபவர் அவர்.

47 minutes ago, நவீனன் said:

சதுரங்க ராஜா. விஸ்வநாதன் ஆனந்த்

ஆனந்த் ஒரு சிறந்த விளையாட்டுக்காரன் என்பதில் வேறு கருத்தில்லை. ஆனந்தின் ஒரு அதீத ரசிகன் நான். ஆனால் எனது கண் முன்னால் வளர்ந்த மக்னுஸ் கார்ல்சன் அதைவிட மேலாக இருக்கும் போது இன்னுமொருமுறை மோத வேண்டுமா. கரி ஹஸ்பரோ போல ஆனந்தும் ஒரு லெஜன்ட். போட்டிகளிலிருந்து விலகினால் சந்தோசப்படுவேன்.

  • தொடங்கியவர்

கேன்சரை வென்ற யுவி! - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

 

விடாமுயற்சியும், போராட்டக் குணமும் நிறைந்த ஒரு வீரனால் எந்த சூழ்நிலையிலும் தன்னை நிருபிக்க முடியும் என்பதற்கு யுவராஜ் சிங் ஒரு உதாரணம். ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர் என உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த அதிரடி ஆட்டக்காரர், 2014ம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடர் நாயகன்.

உலககோப்பைக்கு பின் நுரையீரல் புற்று நோய் தாக்கியவுடன் அனைவரும் கூறியது,  அவ்வளவுதான் இனி யுவராஜ் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் பார்வையாளர்தான் என்று. ஆனால் அவர் மீண்டு வந்ததுதான் ஆச்சர்யம்!! 

சண்டிகரில் டிசம்பர் 12ம் தேதி பிறந்த யுவராஜ் சிங், ரசிகர்களால் செல்லமாக யுவி என்றழைக்கப்பட்டார். சிறுவயதில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.  14 வயதுக்குட்பட்டவருக்கான தேசிய அளவிலான போட்டியில் பதக்கம் வென்ற யுவராஜை, அவரது தந்தை, 'நீ கிரிக்கெட்தான் ஆடவேண்டும்!' என கட்டாயபடுத்தி கிரிக்கெட் வீரராக்கினார். அதிலும் கில்லியாக வலம் வந்தார் யுவராஜ். 2002 ஆண்டில் நாட்வெஸ்ட் இறுதிபோட்டியில் இமாலய இலக்கை இந்தியா எட்ட இவர்தான் காரணமாக இருந்தார். 2007ம் ஆண்டு முதல் T20 உலகக் கோப்பையில், ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸ்ர் அடித்து பந்துவீச்சாளரை அழவைத்தவர் யுவி.

uviraj1212_1.jpg



2011ம் ஆண்டு உலக கோப்பைக்கு முன் யுவராஜை நுரையீரல் புற்றுநோய் தாக்கியது. அது தெரியமலேயே களமிறங்கினார் யுவி. முதல் சுற்று ஆட்டங்களின்போதே அவருக்கு தனக்கு ஏதோ பிரச்னை இருப்பது தெரியவந்தது.இருந்தாலும் சமாளித்து உலககோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவர் இல்லையெனில் இந்தியா உலகக்கோப்பை வெல்வது சற்று கடினமாகி இருக்கும் என்ற அளவிற்கு ஆடி 2011ம் ஆண்டு உலக கோப்பையின் தொடர் நாயகன் ஆனார். அதோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவருக்கு நுரையீரல் புற்றுநோய் என்றனர் மருத்துவர்கள். இனி கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட வேண்டியதுதான் என பலர் கூறினாலும், தன் தன்னம்பிக்கை, சக வீரர்களின் தூண்டுதல் இதையெல்லாம் தாண்டி கிரிக்கெட் மீதான காதல் அவரை மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து வந்தது.

மீண்டு வந்த யுவராஜை அணியில் சேர்த்தபோது அவர் மீது உள்ள கரிசனத்தில் எடுத்துள்ளனர்; அவரது ஆட்டத்திறன் திருப்தி அளிக்காது என்றவர்களுக்கு பேட்டால் பதிலளித்தார். அவர் மீண்டு வந்த முதல் ஆட்டமே சென்னையில் நடைபெற்ற ஆட்டம்தான். அதில் களமிறங்கும் போது. 'எனக்கு நம்பிக்கை தந்தது சென்னை ரசிகர்களின் விசில் சத்தம்தான்!' என்றார்.  அதில் சிக்ஸர் விளாசி மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தார்.

yuv_vc1.jpg

நன்றாகவே விளையாடினாலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடததால், 2015ம் ஆண்டு உத்தேச அணியிலிருந்தே கழட்டிவிடப்பட்டுள்ள நிலையில்,  யுவராஜ் ஓய்வு பெற வேண்டியதுதான் என நினைத்த போது, ரஞ்சி கோப்பையில் சதமடித்து நிராகரித்தவர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கினார்.

தன்னம்பிக்கையின்றி இருந்திருந்தால் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட், 2007ம் ஆண்டு T20  உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தொடர் நாயகன் பட்டம் வென்றிருக்க மாட்டார்.

http://www.vikatan.com/news/sports/56237-yuvaraj-singh-birthday-special.art

  • தொடங்கியவர்

12313566_954032714645423_411490072996703

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி அவர்களின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

12348100_1035289779863145_79606684329112

* சொல்வனம்! *

விரோதமற்று!

சரியாகக் காயாத எண்ணெயில்
முழுதாகப் பொரியாத
முதல் அப்பளம் மட்டும்
மிஞ்சிப்போகிற
மதியப் பொழுதுகளிலும்
சிரித்துக்கொண்டே சாப்பிடுகிறாள்
அம்மா!

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இவர் மார்க் சக்கர்பெர்க்கா... இல்ல அபியும் நானும் பிரகாஷ்ராஜா?

 

அபியும் நானும் படத்துல த்ரிஷாவ பிரகாஷ் ராஜ் கண்ணுக்குள்ள வைச்சு தாங்குவார். சைக்கிள் ஓட்டிட்டு ஸ்கூல் போகும்போது பின்னாடியே சைக்கிள் வேகத்துல ஜீப் ஓட்டிட்டு போய் அப்பா கேரக்டர்ல அழுக வைச்சுருப்பாரு. அதேமாதிரி தான் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர் பெர்க்கும், டிசம்பர் 1ம் தேதி தனக்கு குழந்தை பிறந்ததை ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் மூலம் தெரிவித்தார். அதற்கு முன்பே 2 மாதம் தன் குழந்தைக்காக விடுப்பில் செல்ல இருப்பதாக அறிவித்திருந்தார் மார்க்.

 

 

 
 


அதன் பின் மார்க் சக்கர்பெர்க், அபியும் நானும் பிரகாஷ்ராஜாகவே மாறிவிட்டார். போட்டோ எடுத்து தினம் ஒரு போஸ்ட்டாக போட்டு லைக்ஸ்களை அள்ளுகிறார் மார்க். அவர் போட்ட மேக்ஸ் போஸ்ட்டுகளுக்கு தான் மேக்ஸிமம் லைக்ஸாம். மேக்ஸின் 5 போஸ்ட்டுகளுக்கு மட்டும் 2 கோடி லைக்ஸாம். தெறிக்க விடுங்க மார்க்...

அளப்பறையை கூட்டும் மார்க்கின் ஜாலி டைம் லைன்:

இந்த உலகிற்கு மேக்ஸை வரவேற்கிறோம். மேக்ஸை வரவேற்பதற்கான கடிதம்தான் இது. மேக்ஸ் மற்றும் உலகின் உள்ள குழந்தைகளுக்காக புதிய உலகை உருவாக்குவோம். அதற்காக எனது 99% ஃபேஸ்புக் பங்குகளை தருகிறேன் என்று எமோஷனல் தந்தையாக ஸ்டேட்டஸ் போட்டார் மார்க்.

12341306_10102503989686391_7377090272350
 
 
Mark Zuckerberg with Priscilla Chan.
· 44,251,570 followers
· November ·
 
·
 

We're so happy to welcome our daughter Max into this world. Everyone is happy and healthy. Thank you for all your love and support through our pregnancy. There is so much joy in our little family.


தரையில் படுத்து கொண்டு மேக்ஸூடன் விளையாடுவது எல்லையற்ற மகிழ்ச்சியை தருவதாக அடுத்த ஸ்டேட்டஸ்.

12313859_10102515545528391_3047726019341

 


'குழந்தைகளுக்கான குவாண்டம் பிசிக்ஸ் புத்தகத்தை இந்த வருடத்துக்கான புத்தக பட்டியலில் சேர்த்து விட்டேன். அடுத்த வருடம் முழுக்க குழந்தை வளர்ப்பு புத்தகம் படிக்க போகிறேன்' என தட்டி விட்டு 11 நாள் குழந்தைக்கு புத்தகம் படித்து காட்டியுள்ளார் மார்க்.

12373163_10102519494634351_2437307411052

 

 

 

மகள்களை பெற்ற அப்பாக்களுக்குதான் தெரியும் என ஆனந்த யாழை மீட்டி வருகிறார் மார்க். இன்று அதன் உச்ச கட்டமாக குழந்தைக்கு உலக வரைபடத்துடன் உடை மாட்டிவிடும் போஸ் போட,  எல்லா போஸ்ட்டுமே வைரலோ வைரல்...மார்க்கின் 11 நாள் போஸ்ட்டே இப்படினா... 2 மாசம் லீவு போட்டு இருக்காரு? லைக்க கணக்கு பண்ண தனி சர்வர் வாங்கணும்னு சொல்லுற அளவுக்கு லைக் வாங்கப்போறாரு...

12341175_10102521282381691_1143564574018

 

இருக்காதா பின்ன... ஃபேஸ்புக்ல அக்கவுண்ட் இருக்குங்கிற ஒரே காரணத்துக்காக டெய்லி செல்ஃபி எடுத்து நாம போஸ்ட் பண்ணும்போது...ஃபேஸ்புக்குக்கே ஓனர் அவர் போஸ்ட் போட மாட்டாரா? நீங்க கலக்குங்க மார்க்...நாமும் அந்த குழந்தைக்கு ஒரு லைக் போடலாமே ஃப்ரெண்ட்ஸ்!! லைக் மேக்ஸ்!!

http://www.vikatan.com/news/miscellaneous/56255-mark-zuckerbergs-timeline-after-maxs-birth.art

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

விஜயகாந்த்:கடற்கரையில் படுத்திருந்தார்...
அமெரிக்கன்:Are u relaxing?
விஜயகாந்த்:No i'm vijayakanth.
மற்றொரு அமெரிக்கன்:Are u relaxing?
விஜயகாந்த்:No i'm vijayakanth.
இங்கிலாந்துகாரன்:Are u relaxing?
விஜயகாந்த்:(சத்தமா)No no no no i'm vijayakanth.
(கோவத்துடன் விஜயகாந்த் அங்கிருந்து கிளம்பிவிட்டார்)
கடற்கரையில் படுத்திருந்த ஒரு சர்தாரை பார்த்து விஜயகாந்த் கேட்டார்)
விஜயகாந்த்:Are u relaxing?
சர்த்தார்:Yes, i'm relaxing?
(விஜயகாந்த் ஓங்கி ஒரு அரைவிட்டு சொன்னார் உன்னத்தாண்டா எல்லாரும் தேடுராங்க...)
:grin:

  • தொடங்கியவர்
சுப்பர்ஸ்டார் ரஜினியின் 65 ஆவது பிறந்த தினம்
2015-12-11 15:30:33

13685_Rajinikanth_.jpgC.jpgசுப்பர் ஸ்டார் ரஜி­னிகாந்த் நாளை சனிக்­கி­ழமை தனது 65 ஆவது பிறந்த தினத்தை கொண்­டா­டு­கிறார்.

 

1975  ஆம் ஆண்டு, கே. பாலச்­சந்தர் இயக்­கத்தில் வெளி­வந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்­ப­டத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரை­யு­லக வாழ்க்­கையை தொடங்­கிய ரஜனி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்­னடம், மலை­யாளம், வங்­காளம் மற்றும் ஆங்­கிலம் போன்ற மொழி­களில் சுமார் 160க்கும் மேற்­பட்ட திரைப்­ப­டங்­களில் நடித்­துள்ளார். 

 

முள்ளும் மலரும்’, ‘ஆறி­லி­ருந்து அறு­பது வரை’ ‘பில்லா’, ‘போக்­கி­ரி­ராஜா’, ‘முரட்­டுக்­காளை’, ‘தில்லு முல்லு’ ‘வேலைக்­காரன்’, ‘பணக்­காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்­மத்தின் தலைவன்’, ‘எங்­கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்­ல­வ­னுக்கு நல்­லவன்’ ‘நான் சிவப்பு மனிதன்’, ‘ஸ்ரீரா­க­வேந்­திரா’ படிக்­கா­தவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்­கா­வலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’, ‘மாப்­பிள்ளை’ ‘தள­பதி’, ‘மன்னன்’, ‘அண்­ணா­மலை’, ‘பாண்­டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்­பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அரு­ணா­சலம்’, ‘படை­யப்பா’, ‘சந்­தி­ர­முகி’, ‘சிவாஜி’, ‘எந்­திரன்’  கோச்சடையான், லிங்கா போன்ற திரைப்­ப­டங்கள் ரஜி­னியின் நடிப்பில் வெளி­வந்த மறக்­க­மு­டி­யாத திரை­ப்ப­டங்­க­ளாகும்.

 

இந்­தி­யாவில் மட்­டு­மல்­லாமல், ஜப்பான் போன்ற வெளி­நா­டு­க­ளிலும், தனக்­கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன்.

 

தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ருத்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

 

சென்னையைத் தொடர்ந்து மலேஷியா மற்றும் வேறு இடங்களில் படப்பிடிப்பு இடம்பெற்று வருகிறது.

 

1977 ஆம் ஆண்டு நடித்த ‘புவனா ஒரு கேள்­விக்­குறி’ திரைப்­படம் ரஜி­னிகாந்த்திற்கு பெரும் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­திய பட­மாக இருந்­தது. இந்த வெற்­றியைத் தொடர்ந்து, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறி­லி­ருந்து அறு­பது வரை’ போன்ற படங்­களில் கதா­நா­ய­க­னாக நடித்து மிகப்­பெ­ரிய வெற்­றியை அவர் பெற்றார்.

 

‘பில்லா’, ‘போக்­கி­ரி­ராஜா’, ‘தனிக்­காட்டு ராஜா’, ‘முரட்­டுக்­காளை’, போன்ற திரைப்­ப­டங்­களில் ஒரு அதி­ரடி நாய­க­னாக நடித்து புகழ் பெற்றார். 1981 ஆம் ஆண்டு, கே.பாலச்­சந்தர் இயக்­கத்தில் வெளி­வந்த “தில்லு முல்லு” திரைப்­ப­டத்தின் மூலம், தன்னை ஒரு சிறந்த நகைச்­சுவை நடி­க­ராக வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்பார்.

 

ரஜி­னிகாந்த் நடித்த திரைப்­ப­டங்­களில், 1985 ஆம் ஆண்டு எஸ்.பி முத்­து­ராமன் இயக்­கத்தில் வெளி­வந்த அவ­ரு­டைய 100 ஆவது பட­மான ‘ஸ்ரீரா­க­வேந்­திரா’ திரைப்­படம் அவ­ருக்கு வித்­தி­யா­ச­மான நடிப்பு அனு­ப­வத்தைப் பெற்­றுத்­தந்­தது எனலாம். 

 

1995 ஆம் ஆண்டு வெளி­வந்த “முத்து” திரைப்­படம், இந்­தி­யாவை தாண்டி வெளி­நாட்­டிலும் முத்­திரை பதித்­தது. குறிப்­பாக ஜப்­பா­னிய மொழியில் மொழி­மாற்றம் செய்­யப்­பட்டு, வெளி­யி­டப்­பட்ட இத்­தி­ரைப்­படம் ஜப்­பா­னிலும் பெரும் வெற்­றியைப் பெற்­றது.

 

மட்­டு­மல்­லாமல் அம்­மொ­ழியில் மொழி­மாற்றம் செய்­யப்­பட்ட முதல் இந்­திய திரைப்­படம் என்ற தகு­தி­யையும் பெற்­றது.

 

ரஜினியின் ஒவ்­வொரு திரைப்­ப­டத்­திலும் தன்­னு­டைய ஸ்டைலான நடிப்­பிலும், பஞ்ச் டய­ெலாக்­குகள் மூலமும் ரசி­கர்­களை கவர்ந்­துள்ளார் என்று கூறினால் அது மிகை­யா­காது.

 

அவர் வெளி­ப­டுத்­திய ஒவ்­வொரு டயலொக்கும் இன்றும் மக்கள் மனதில் நீங்­காமல் இடம் பெற்­றுள்­ளது.

 

16 வய­தி­னிலே திரைப்­ப­டத்தில், ‘இது எப்­படி இருக்கு?’

 

மூன்று முகம் திரைப்­ப­டத்தில், ‘வத்­திக்­குச்­சிக்கு இரண்டு பக்கம் உர­சி­னாதான் தீ பிடிக்கும். ஆனா, இந்த அலெக்ஸ் பாண்­டி­ய­னுக்கு எந்த பக்கம் உர­சி­னாலும் தீப்­பி­டிக்கும்’

 

முத்து திரைப்­ப­டத்தில், ‘எப்ப வருவேன்? எப்­படி வரு­வேன்னு யாருக்கும் தெரி­யாது, ஆனா வர­வேண்­டிய நேரத்­துல கரக்டா வருவேன்.’   

 

 அண்­ணா­மலை திரைப்­ப­டத்தில், ‘கஷ்டப் படாம எதுவும் கிடைக்­காது, கஷ்­ட­ப­டாம கிடைக்­கி­றது என்­னைக்­குமே நிலைக்­காது’ மற்றும் ‘சொல்­றதை தான் செய்வேன், செய்­ற­தைதான்  சொல்­லுவேன்’

 

பாட்ஷா திரைப்­ப­டத்தில் “நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி”

 

பாபா திரைப்­ப­டத்தில் ‘நா லேட்டா வந்­தாலும், லேட்­டஸ்டா வருவேன்’ 

 

படை­யப்பா திரைப்­ப­டத்தில், “என் வழி தனி வழி” மற்றும் ‘அதி­கமா கோபப்­ப­டற பொம்­ப­ளையும், அதி­கமா ஆசப்­ப­டற ஆம்­ப­ளையும் நல்லா வாழ்ந்­ததா சரித்­தி­ரமே இல்ல’

 

சிவாஜி திரைப்­ப­டத்தில், ‘பேரை கேட்­டாலே சும்மா அதி­ரு­துல்ல’ மற்றும் ‘பண்­ணிங்க தான் கூட்­டமா வரும், சிங்கம் சிங்­க­லாதான் வரும்

விரு­துகள்: 1978 ஆம் ஆண்டு முள்ளும் மலரும்’ திரைப்­ப­டத்­திற்­காக ‘தமி­ழக அரசு திரைப்­பட விருது’ வழங்­கப்­பட்­டது.

 

1979 ஆம் ஆண்டு “ஆறி­லி­ருந்து அறு­பது வரை” திரைப்­ப­டத்­திற்­காக “தேவர் விருது” வழங்­கப்­பட்­டது.

 

1984 ஆம் ஆண்டு ‘நல்­ல­வ­னுக்கு நல்­லவன்’ திரைப்­ப­டத்­திற்­காக ‘ஃபிலிம்பேர் விருது’ வழங்­கப்­பட்­டது.

 

1985 ஆம் ஆண்டு தமி­ழக அரசின் ‘கலை­மா­மணி விருது’ வழங்­கப்­பட்­டது.
1989 ஆம் ஆண்டு  ‘எம்.ஜி.ஆர் விருது’ வழங்­கப்­பட்­டது.

 

1992 ஆம் ஆண்டு ‘அண்­ணா­மலை’ திரைப்­ப­டத்­திற்­காக ‘அம்­பிகா விருது’ வழங்­கப்­பட்­டது.

 

16 வய­தி­னிலே” மற்றும் “முள்ளும் மலரும்” திரைப்­ப­டத்­திற்­காக “அரிமா சங்கம் விருது” வழங்­கப்­பட்­டது.

 

முள்ளும் மலரும், மூன்று முகம், முத்து, படையப்பா, சந்திரமுகி, சிவாஜி போன்ற திரைப்படத்திற்காக ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்’ வழங்கப்பட்டது.

 

2000 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது.

 

தனக்கென ஒரு பாதையில் ஸ்டைலான நடிப்பில் அசைக்கமுடியாத ராஜாவாக நடைபோட்டு வரும் ரஜினிகாந்த், திரையுலகில் மட்டும் ‘சூப்பர்ஸ்டார்’ என இல்லாமல்,

 

நிஜ வாழ்க்கையிலும் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்து வருகிறார். தற்போது சென்னையில் வெள்ளத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு பத்துகோடி ரூபா நிதியுதவி கொடுத்துள்ளார். 

 

பணம், புகழ், அந்தஸ்து என அனைத்திலும் நிறைவைப் பெற்றுவிட்டாலும், இன்று வரை அவர் சாதாரண மனிதராக ஒரு எளிமையான வாழ்க்கையயை மட்டுமே வாழ விரும்புகிறார். தன்னம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியையும் கொண்டு கடுமையாக உழைத்தால், வாழ்கையில் முன்னேறலாம் என்ற பாடத்தை கற்றுத்தந்துள்ளார்.

- See more at: http://metronews.lk/article.php?category=entertainment&news=13685#sthash.a4k1Hkzr.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உக்ரைன் பாராளுமன்ற மோதல்!

4 hours ago, நவீனன் said:

இருக்காதா பின்ன... ஃபேஸ்புக்ல அக்கவுண்ட் இருக்குங்கிற ஒரே காரணத்துக்காக டெய்லி செல்ஃபி எடுத்து நாம போஸ்ட் பண்ணும்போது...ஃபேஸ்புக்குக்கே ஓனர் அவர் போஸ்ட் போட மாட்டாரா? நீங்க கலக்குங்க மார்க்...

இது பிடிச்சிருக்கு.

  • தொடங்கியவர்

சொல்வனம்
குரைப்பின் மொழி

வெளியே கூட்டிப் போக
ஒரு குரல்.

தனியே விட்டு
ஊர் போய்த் திரும்பினால்
தவிப்பாய்
வேறொரு குரல்.

பேப்பர் போட
வருபவருக்கு ஒருவிதம்.

கொய்யா மரத்தில்
அணிலும் காக்கையும்
விரட்டிப் பிடிக்க முடியாக்
கோபத்தில் ஒருவிதம்.

மேயும் மாடுகளின்
நடமாட்டத்துக்குத்
தொடர் குரைப்பு.

மாதமொருமுறை வரும்
சிலிண்டருக்கோ
பயத்தோடு ஒரு குரைப்பு.

ஓரெழுத்துக் கூடினாலும்
பால்காரருக்கும்
தபால்காரருக்கும்
வெவ்வேறுவிதம்.

பாம்புக்கு வன்குரல்.

சிறுநீர் கழிக்கவும்
இனம் பெருக்கவும்
வெவ்வேறு தொனிகளில்.

குட்டிகளுடன்
விளையாடுகையில்
செல்லமாய் ஒரு குரல்.

யாருமற்ற இரவுகளில்
தொலைதூரக்
குரைப்புக்கு
பதில் குரைப்பாய்
சில நேரம்.

எதுவுமில்லா அலுப்பூட்டும்
பொழுதுகளில்
ஆயாசமாய் ஒரு குரல்.

திடுக்கிடும் கனவுகள்
கலைகையில்
குழப்பமாய் ஒரு குரல்.

எஜமானன்
இறந்துபோனால்
தேற்ற முடியாத
உயிரின் துயரம்
சொட்டும் குரலென

நாயின் குரல்
நாற்பது விதம்.
என் கவிதைக்குக்
கூட இல்லை
இத்தனை விதம்.

12376164_1035595606499229_23863529809127

  • தொடங்கியவர்

12356817_954032227978805_833489939404215

நல்ல படங்கள், தரமான இயக்கம், அருமையான திரைக்கதை என்று தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குனர், நடிகர் சேரனின் பிறந்தநாள்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வனம் பப்பி செப்புவது சுப்பர்....!  :)

  • தொடங்கியவர்

31 ஆண்டுகளுக்கு பின்னரும் துரத்தும் போபால் சோகம்!- கல்பாக்கம், கூடங்குளம் விஞ்ஞானிகள் கவனத்துக்கு...

 

ந்தக் கொடூரத்தை இன்றைய தலைமுறை விரிவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்! உலகத்தின் மிகக்குரூரமான தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு பேரழிவு நிகழ்வு கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் இருந்து மூடி மறைக்கப்பட்டு விட்டது. இந்தியாவே மறந்தாலும் இன்னும் அந்த மண்ணின் மைந்தர்கள் அனுதினமும் கண்ணீர் சிந்தியே நாட்களை கடத்தி கொண்டிருக்கின்றனர்.

union%20carbide%20600.jpg

1984-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவில், மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் நடந்த விபத்தால் கசிந்த விஷவாயு, 3500 க்கும் அதிகமானோரை ஒரே இரவில் பலி வாங்கியது. சுமார் ஐந்து லட்சம் மக்களின் கை, கால்களை காவு வாங்கி அவர்களை முடக்கி போட்டது.

உலகளவில் நடந்த இந்த மோசமான பேரழிவில் பாதிக்கபட்டவர்களுக்கு இன்னமும் சரியான நீதியும் கிடைக்கவில்லை, நிவாரணமும் கிடைக்கவில்லை. இரண்டாம் உலகப்போரில் அணுகுண்டு வீச்சினால் எப்படி ஜப்பான் பாதிக்கபட்டதோ அதேபோன்ற நிலைமையில்தான் போபாலில் உள்ள மக்கள் வாழ்கின்றனர். விபத்து நடந்து 31 ஆண்டுகள் கடந்தும்,  ஏறக்குறைய மூன்றாவது தலைமுறையும் கடுமையாக பாதிக்கப்பட்டு பல குழந்தைகள் கோரமாகவும், பல்வேறு பிறவிகுறைபாடுகளுடனும் பிறப்பதை சமீபத்தில் வெளிவந்த மருத்துவ ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளது கடும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து போராடி வரும் 'சம்பாவ்னா' சேவை அமைப்பு,  முப்பது மருத்துவர்களை கொண்டு கடந்த மூன்றாண்டுகளாக நடத்திய ஆய்வு முடிவுகளில்தான் இந்த அதிர்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது. 

1984-ம் ஆண்டு போபாலில் பேரழிவை ஏற்படுத்திய தினத்தன்று, கடும் நச்சுத்தன்மை மிகுந்த Methyl isocyanate வாயு,  சுமார் 40 டன் அளவுக்கு கசிந்ததுதான் இக்கோரவிபத்துக்கு காரணம். அன்றைய தினம் பாதிக்கப்பட்ட மக்களில் சிலருக்கு சமீபத்தில் பிறந்த பேரக்குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

போபாலில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள், விஷவாயுவை tragedy%20350.jpgசுவாசித்ததால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள், விஷவாயு கலந்த நீரை பயன்படுத்தி பாதிக்கபட்டவர்கள், விஷவாயு மற்றும் விஷவாயு கலந்த நீர் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டவர்கள், விஷவாயு மற்றும் விஷவாயுவால் பாதிப்புக்குள்ளான நீர் ஆகிய இரண்டில் இருந்தும் தப்பித்தவர்கள் என நான்கு வகைகளில் பிரித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த 20,000 குடும்பங்களில் இருந்து சுமார் 2500 குழந்தைகள் சோதிக்கப்பட்டனர். அதில் ஏறக்குறைய 1700 குழந்தைகள் பிறவியிலேயே பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான  குறைபாடுகளோடு பிறந்திருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது

1700 குழந்தைகளில் 164 குழந்தைகள் பெருமூளை செயல்பாடு மட்டுப்பட்டு மன வளர்ச்சி குன்றியவர்களாக இருக்கிறார்கள் என்பது இன்னொரு பேரதிர்ச்சி. தவிர போபால் விஷவாயு நடந்த அன்று போபாலில் வசித்தவர்களுக்கு, அதற்கு பின்னர்  பிறந்த குழந்தைகள், பேரக்குழந்தைகளில் பெரும்பாலோனோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் தன்னார்வலர்கள், போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களின் அடுத்த இரண்டு தலைமுறையினரும் தொடர்ந்து ஏதாவதொரு மோசமான நோயால் பாதிக்கpபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என கவலை தெரிவிகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு போபாலில் ஆய்வு செய்த ஜோதிர்மயி மற்றும் தேவேந்திர பஞ்சல் ஆகிய இரு மருத்துவர்களும், போபால் பகுதிகளில் பிறவி குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளின் விகிதம் மற்ற ஊர்களை விட ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது என அறிக்கை அளித்திருக்கிறார்கள்.

victims%20600.jpg

போபால் விஷவாயு காற்றில் பரவியதில், ஏறக்குறைய 8 ஆயிரம் டன் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுபொருட்கள் அந்த மண்ணில் படிந்துள்ளது. தவிர நீர் நிலைகளிலும் கலந்து அந்த பகுதியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசாகி கிடக்கிறது.

போபால் விஷவாயு குறித்து பல சால்ஜாப்புகளை சொல்லி வந்த யூனியன் கார்பைடு நிறுவனம், உண்மை கண்டறியும் அமைப்பின் சோதனையில் மாட்டியுள்ளது. உண்மை கண்டறியும் அமைப்பின் 2002-ம் ஆண்டின் அறிக்கைபடி பாதரசம், காரீயம், டிரைகுளோரோபென்சீன், டை குளோரோ மீத்தேன், குளோரோபார்ம் ஆகிய நச்சு பொருட்கள் போபாலில் வசிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அங்கு வாழும் மனிதர்களின் உடலில் இன்னும் நச்சு தேங்கி கிடக்கிறது. பெண்களையும், ஆண்களையும் அந்த நச்சு வாயுக்கள் பாதித்தன் விளைவாகத்தான் அங்கே ஒழுங்கற்ற முறையில் விகாரமாக குழந்தைகள் பிறக்கின்றன. 

போபாலில் இன்னொரு சோகம் என்னவென்றால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அங்கே ஆய்வு நடத்துவதை கூட நிறுத்தி ஏறக்குறைய 20  ஆண்டுகள் ஆகின்றது. ஒரு முதலாளியை காப்பாற்ற லட்சக்கணக்கில் மக்களை டீலில் விடுபவர்களை பச்சை துரோகிகள் என்றுதான் அடையாளப்படுத்த வேண்டும்.

இப்படிப்பட்ட அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகளை படிக்கையில் ஏனோ கல்பாக்கம், கூடங்குளம் பகுதிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஏனெனில் அணு உலைகளின் லட்சணத்தை சில ஆண்டுகள் முன்பு ஜப்பானில் கண்டோமல்லவா!

http://www.vikatan.com/news/coverstory/56271-bhopal-disaster-31-years-on-the-crisis-remains.art

  • தொடங்கியவர்

வாட்ஸ அப், ட்விட்டர் கலக்கல்: நகைச்சுவை வெள்ளம்

 
 
22_2653226f.jpg
 

1_2653225a.jpg

3_2653224a.jpg

4_2653223a.jpg

5_2653222a.jpg

6_2653221a.jpg

7_2653220a.jpg

  • தொடங்கியவர்
    • இன்று

    • 1893 – இலங்கையில் முதலாவது தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

      1884 - இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.

      1888 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.

    • 1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.

2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

   

2006 - பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.   

  • தொடங்கியவர்

12360274_1139410772744684_77447261465167

நியூ சீலாந்து அணி சகலதுறை ஆட்டகாரர் Corey Anderson இன் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

11219228_1089501684423938_25426829330079

அந்த நாள் ஞபகம்

17 minutes ago, நவீனன் said:

11219228_1089501684423938_25426829330079

அந்த நாள் ஞபகம்

அட தொட்டாசிணுங்கி

  • தொடங்கியவர்

12345608_1683844268525183_28163351786945

12359891_1683844295191847_61320359399706

12342814_1683844355191841_29652073153714

மன்னார் மாவட்டத்திலுள்ள பள்ளிமுனை எனும் கிராமத்தில் இந்த மரம் காணப்படுகிறது.இதன் பெயர் "பெருக்கமரம்" என்பதாகும்.இதனுடைய தாவரவியல் பெயர் "Bio Bab"என்று கூறப்படுகிறது.இம்மரத்தின் உயரம் 7.50மீட்டர் எனவும் சுற்றளவு 19.51மீட்டர் எனவும் அருகில் உள்ள அறிவித்தல் பலகையில் குறிக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 14

 

622valrru.jpg1287 : நெதர்­லாந்தில் ஏற்பட்ட பெரும் வெள்­ளத்­தினால் சுமர் 50,000 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1900 : மாக்ஸ் பிளாங்க் தனது கரும்­பொருள் கதிர்­வீச்சு பற்­றிய கொள்­கையை நிறு­வினார்.

 

1911 : ரோல்ட் அமுண்ட்சென் தலை­மை­யி­லான 5 பேர­டங்­கிய குழு தென் முனையை அடைந்த முத­லா­வது மனிதர் என்ற பெயரைப் பெற்­றனர்.

 

1918 : பின்­லாந்தின் மன்­ன­னாக ஜேர்­ம­னியின் இள­வ­ரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரி­வு­ செய்­யப்­பட்டான்.

 

1946 : ஐ.நா.வின் தலை­மை­ய­கத்தை நியூயோர்க் நகரில் அமைப்­ப­தற்கு ஐ.நா. பொதுச்­சபை தீர்­மா­னித்­தது.

 

1962 : நாசாவின் மரைனர் 2 விண்­கலம் வெள்ளி கோளை அண்­மித்­தது. இதுவே வெள்­ளியை அண்­மித்த முத­லா­வது விண்­க­ல­மாகும்.

 

1972 : அப்­பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்­தி­ரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.

 

2003 : பத­வியி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட ஈராக்­கிய ஜனா­தி­பதி சதாம் ஹுஸைன் கைது­ செய்­யப்­பட்ட செய்­தியை ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்தார்.

 

2003 : பாகிஸ்தான் ஜனா­தி­பதி  பர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்­றி­லி­ருந்து உயிர் தப்­பினார்.

 

2004 : பிரான்சில்  மில்லோ எனும் உலகின் மிக உய­ர­மான பாலம் திறக்­கப்­பட்­டது.

 

2012 : அமெரிக்காவின் கனக்டிகட் மாநிலத்தில் துப்பாக்கிதாரி ஒருவனால் 27 பேர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=622#sthash.Ts3qKpRO.dpuf
  • தொடங்கியவர்

12362942_954992704549424_882436899580651

நடிகை சமீரா ரெட்டியின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

placeholder

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.