Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!

 

el%20nino%20leftt.jpgசென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ (El Nino)  என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது. அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல் நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...

1.  'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை. 'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள். டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும் வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப் பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும் அழைக்கிறார்கள். பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடைபெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'

 2. சுருக்கமாக எல் நினோ என அழைக்கப்பட்டாலும், 'எல் நினோ தெற்கத்திய அலைவு' (El Nino Southern Oscillation – ENSO) என முழுமையாக அழைக்கப்படுவதே சரியானது. கிழக்கு பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு ஏற்படும் போது வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின் திசையானது அதற்கு நேர்மாறாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி திசை மாறுகிறது, காற்று வீசும் திசையின் இந்த ஊசலாட்டத்தின் காரணமாகவே 'எல் நினோ தெற்கத்திய அலைவு' என்று அழைக்கப்படுகிறது.

3. இத்தகைய காற்றின் திசைமாற்றத்தின் காரணமாக பசிபிக் பெருங்கடலின் காலநிலை முற்றிலுமாக மாற்றமடைகிறது. வழக்கமான ஈரப்பதம் மற்றும் மித வெப்பம் கொண்ட பசிபிக்கின் மேற்குப் பகுதியானது எல் நினோவிற்குப் பிறகு ஈரப்பதம் இல்லாமல் குறைந்த மழையும் வறண்ட நிலையும் கொண்டதாக மாறுகிறது. இதேபோல  எல் நினோ நிகழ்வால் வழக்கமாக வறண்ட குளிர் மற்றும் குறைந்த மழையைக் கொண்ட  பசிபிக்கின் கிழக்குப் பகுதியானது ஈரப்பதமும் மித வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக மாற்றமடைகிறது.

4. எல் நினோ நிகழ்வைப் பற்றிய முறையான அறிவியல் ரீதியான விளக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாகவே மனிதனின் பட்டறிவின் மூலமாக இந்நிகழ்வு கவனிக்கப்பட்டே வந்தது. பெரு நாட்டின் கடல் பகுதி மீனவர்களும் கப்பலோட்டிகளும் சில ஆண்டுகள் இடைவெளியில் கடலில் நீரோட்டம் வழக்கத்தை விட வெப்பமடைவதையும், மீன்களின் அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்தனர். இத்தகைய நிகழ்வுகளை அடுத்து வானிலையில் மாற்றமடைவதையும் கவனித்தே வந்தனர்.

el%20nino%20leftt%20600%201.jpg

5. தெற்கத்திய அலைவோட்டம் பற்றி  அறிவியல் ரீதியான விளக்கத்தை முதன் முதலாக அளித்தவர்  இங்கிலாந்தைச் சேர்ந்த 'சர் கில்பர்ட் வாக்கர்'. 1923 -ம் ஆண்டு அவர் இதை கண்டறிந்தார். 1904 -ம் ஆண்டு இந்திய வானவியல் ஆராய்ச்சி மையங்களின் தலைமை இயக்குநராக பணிபுரிந்த அவர் இந்திய வானிலை ஆராய்ச்சியில்,  தான் பயின்ற கணிதம் மற்றும் புள்ளியியலை பொருத்தி ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்திய பருவ கால மழைகளை ஆராய்ந்ததில் சில குறிப்பிட்ட நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதை அவர் கண்டறிந்தார். பதினைந்து ஆண்டுகள் இந்திய வானிலை மாற்றங்கள் மற்றும் பசிபிக் பிராந்திய வானிலையைக் கண்காணித்து வந்ததில் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் ஊசலாட்டம் போன்ற நிகழ்வு தெற்காசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கப் பகுதிகளின் வானிலையில் மாற்றம் ஏற்படுத்துவதைக் கண்டறிந்தார். இந்த நிகழ்வுகளையே 'எல் நினோ தெற்கு அலைவு' என்று அழைத்தார்.

el%20nino%20leftt%20gilbert.jpg6. எல் நினோவைப் பொறுத்த வரை, முன்கூட்டியே நம்மால் அதை துல்லி யமாக இதுவரை கணிக்க முடிந்ததில்லை. இரண்டு முதல் ஐந்து ஆண்டு களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு ஏற்படுகிறது. இந்த கால இடைவெளியில் எல் நினோ நிகழ்வு சில வாரங்கள் முதல் மாதம் வரை நீடிக்கிறது.

சில சமயங்களில் எல் நினோ நிகழ்வானது மூன்று ஆண்டு முதல் ஏழு ஆண்டு  வரையிலான கால இடைவெளியில் காணப்படுகிறது. இத்தகைய சமயங்களில் சில மாதங்கள் வரை கூட எல் நினோ நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.

7. எல் நினோ நிகழ்வின் விளைவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல் பகுதிகளில் முக்கியமாக பெரு நாட்டின் கடல் பகுதிகளில் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால், மீன்களின் உணவூட்டப் பொருட் கள் குளிர்ச்சியான நீரின் அடிப்பகுதியில் தங்கிவிடுவதால் மேற்பகுதியின் வெப்பநீரில் ஊட்டப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுகிறது, இதனால் மீன்கள் மடிகின்றன. இதனால் இக்கடல் பகுதிகளில் எல் நினோ நிகழ்வுக் காலத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும்.

8. 1982 மற்றும் 1983 ம் ஆண்டு  ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் விளைவாக உலகம் முழுக்க 2000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். பொருளாதார ரீதியாகவும் ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது. 1990-1995 -ம் ஆண்டு வரை மிக நீண்ட எல் நினோ நிகழ்வு ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் மிகப்பெரும் வெள்ளம், புயல் போன்றவை சில பகுதிகளிலும் பஞ்சம், காட்டுத்தீ போன்றவை சில பகுதிகளிலும் நிகழ்ந்தது. ஆயிரம் ஆண்டுகாலத்தின் பெரும் பேரழிவாக இது கருதப்படுகிறது.

1997-1998 -ம் ஆண்டு எல் நினோ நிகழப்போவதை முன்கூட்டியே நம்மால் கணிக்க முடிந்தது என்றாலும்,  உலகம் முழுவதும் ஏற்பட்ட  2000க்கும் மேற்பட்ட உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.

9. எல் நினோ நிகழ்வால் உலகின் பல பகுதிகளில் பெரு மழை, வறட்சி போன்றவை நிலவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினாலும் எல் நினோ நிகழ்வால் சில நன்மைகளும் இருக்கின்றன. வளி மண்டலத்தின் உயரத்தில் வேகமாக கிழக்கு நோக்கி வீசும் 'ஜெட் காற்றோட்டங்கள்' இக்காலப் பகுதியில் பெரும்பாலான புயல்களை வழி நடத்துவதாக இருக்கின்றன.

el%20nino%20leftt%20600%20pacific.jpg

எல் நினோ நிகழ்வால் இந்த ஜெட் காற்றோட்டங்கள் மாற்றம் பெறுகின்றன. இதனால் பெரும் புயல்கள் வலுவிழக்கின்றன. சில பகுதிகளில் வானிலை மாற்றங்களில் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.

10. எல் நினோ நிகழ்விற்கு அப்படியே எதிர்மாறானது லா நினா ஆகும். எல் நினோ எவ்வாறு சிறுவன் எனப் பொருள் கொண்டதோ அதே போல லா நினா என்றால் ' சிறுமி' என்று பொருள் ஆகும். லா நினா நிகழ்வால் தென் அமெரிக்க கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிக வறட்சியும் குளிர்ச்சியும் ஒருங்கே நிகழும். மேற்கு பசுபிக் கடல் பகுதி மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதமும் மற்றும் அதிக மழையும் இருக்கும்.

பொதுவாக எல் நினோ வை அடுத்து லா நினா நிகழும். ஆனால், எல்லா நேரங்களில் சிறுவனை அடுத்து சிறுமி வரமாட்டாள்.

http://www.vikatan.com/news/miscellaneous/56317-interesting-bits-about-el-nino.art

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

14-1450081137-jaya-troll5.jpg

  • தொடங்கியவர்

5 வயதில் அசத்தல் திறமை... ஆச்சர்யப்படுத்தும் சிறுவன்! (வீடியோ)

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த, ஐந்து வயது சிறுவனான ராம்ஸெஸின் அபரிமிதமான அறிவாற்றலும், வினோதமான தொலையுணர்வு திறமையும் அவரது தாயை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரை ஆய்வு செய்த மருத்துவர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

US%20Child.jpg

இது குறித்து சிறுவன் ராம்ஸெஸின் தாயார் நிக்ஸி சாங்குய்னோ (32) கூறுகையில், "பெரியவர்களே புரிந்துகொள்ள போராடும் புத்தகங்களை, மனதால் வாசித்து, சாதாரணமாக புரிந்துகொள்கிறான். ரகசியமாக ஒழுங்கற்ற வரிசையில் எழுதப்படும் எண்களை, தூரத்திலிருந்து மிக சரியாக அவனால் சொல்ல முடிகிறது.

12 மாத குழந்தையாக இருக்கும்போதே அவனுக்கு படிக்கும் திறமை வந்துவிட்டது. 5 வயதிலே கிரேக்கம், ஹிப்ரு, ஜப்பனிஸ், அரபு உட்பட 7 மொழிகளை அவனால் ஓரளவுக்கு பேசவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது. சிரமமான அல்ஜிப்ரா கணக்கு சமன்பாடுகளை அவனால் போடமுடிகிறது. வேதியியல் தனிம வரிசை அட்டவணையை அவனால் முழுமையாக வரைய முடிகிறது. உலகில் உள்ள 5 வயது சிறுவர்களில் ராம்ஸெஸ் அறிவில் முதலாம் இடத்தில் இருப்பான் என நம்புகிறேன்" என்று கூறுகிறார்.

அதோடு மட்டுமல்லாமல், ராம்ஸெஸின் நுண்ணுணர்வு திறனையும் மேதைக்கான அறிகுறிகளையும் நிரூபிக்கும் வீடியோ காட்சிகளையும், ஆன்லைன் மூலம் இணையதளத்தில்  லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வெளியிட்டிருக்கிறார் நிக்ஸி.

தற்போது, ராம்ஸெஸ் அறிவியலாளர்களுடைய முக்கிய ஆய்வுப் பொருளாகவே கருதப்படுகிறார்.


இந்த ஆன்லைன் வீடியோவை பார்த்த, ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் ஆசிரியரான டாக்டர் டயான் பவல், இந்த தொலையுணர்வு அறிவு ஒரு மன இறுக்கத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்களோடு தகவல் தொடர்புக்கான ஒரு மாற்றுமுறையாக ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்.

நரம்பியல் மருத்துவர்களும் ராம்ஸெஸுக்கு உள்ள வினோதமான திறமை நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்றும், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என்றும் கூறுகின்றனர்.

"ஆய்வின்போது, ராம்ஸெஸிடம் இன்னும் அறியப்படாமல் இருக்கும் வேறு திறமைகளும் வெளிப்படலாம். இதுபோல, தொலையுணர்வு உள்ள குழந்தைகள் குறைந்தது ஏழு பேரை இதுவரை அறிந்திருக்கிறேன் அவர்களிடம் மன இறுக்கத்தின் விளைவாகவே இந்த நுண்ணுணர்வு இருந்திருக்கிறது.

ஆனால், ராம்ஸெஸுக்கு அதுபோல காரணம் இருக்குமா? அல்லது வேறு விஷேச குணமா? என்பது கடுமையான கட்டுப்பாட்டு நிலைக்கு உட்படுத்திய ஆய்வின் மூலமே அறிய முடியும் " என பவல் கூறுகிறார்.

http://www.vikatan.com/news/world/56312-telepathic-genius-child-tested-by-scientist.art

  • தொடங்கியவர்
சென்னை மக்களுக்காக தெலுங்கு சினிமா உலகின் உருக்கமான பாடல் (வீடியோ இணைப்பு)
 

கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏரிகள், குளங்கள் நிறைந்து சென்னையில் பெருத்த வெள்ளம் ஏற்பட்டது. சென்னை மக்கள் பலரும் தங்களது உடமைகள், வாழ்வாதாரத்தை இழந்து நின்றனர். பலருக்கு உடுத்த உடை உணவு கூட இல்லாமல் பாதிக்கப்பட்ட நிலையில் எங்கெங்கோ இருந்து நிவாரணப்பொருட்களும், பண உதவிகளும் வந்தன. இன்னமும் வந்துகொண்டிருக்கின்றன.

 இந்நிலையில் தெலுங்கு சினிமா பிரபலங்களான ராணா, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, நவ் தீப், எனப் பலரும் நிவாரணப் பொருட்களாகவும், நிதியாகவும் கொடுத்து வருகிறார்கள்.

இதன் இன்னொரு கட்டமாக தெலுங்கு சினிமா பாடகர்கள், நடிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சென்னையை ஆதரிப்போம் ( Let's Suppoort Chennai) என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்று வெளியாகியுள்ளது,பாடலைக் கேட்டதும் கண்டிப்பாக மொழியே தெரியாத மக்களுக்கும் உணார்ச்சிகள் உருவாகும் என்பது உறுதி.

பாடலைக் கேட்க:

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று....

டிசம்பர் - 15

 

623varalaru2.jpg1256 : மொங்­கோ­லியப் பேர­ரசன் குலாகு கான் அலா­முட்­டினால் (தற்­போ­தைய ஈரானில்) எனும் இடம் கைப்­பற்றி அழிக்­கப்­பட்­டது.

 

1891 :  கூடைப்­பந்­தாட்ட விளை­யாட்டை டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித்  அறி­மு­கப்­ப­டுத்­தினார்.

 

1905 : அலெக்­ஸாண்டர் புஷ்­கினின் கலா­சாரப் பழ­மை­களைப் பேணும் பொருட்டு ரஷ்­யாவின் சென் பீட்­டர்ஸ்­பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்­கப்­பட்­டது.

 

1914 : முதலாம் உலகப் போர்: சேர்­பிய இரா­ணுவம் தலை­நகர் பெல்­கி­ரேடை மீண்டும் கைப்­பற்­றி­யது.

 

1914 : ஜப்­பானில் மிட்­சு­பிஷி நிலக்­கரிச் சுரங்­கத்தில் ஏற்­பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1941 : யுக்­ரேனின் ஆர்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாஸி­க­ளினால் சுட்டுக் கொல்­லப்­பட்­டனர்.

 

1960 : நேபாள மன்னர் மஹேந்­திரா அந்­நாட்டு அர­சாங்­கத்தைக் கலைத்து நாட்டின் முழு அதி­கா­ரத்­தையும் தன­தாக்கிக் கொண்டார்.

 

1967 : அமெ­ரிக்­காவின்  ஒஹையோ மாநி­லத்தில் ஒகையோ ஆற்­றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்­ததில் 46 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1970 : சோவியத் ஒன்­றி­யத்தின் வெனேரா 7 விண்­கலம் வெள்ளி கோளின் மேற்­ப­ரப்பில் மெது­வாக இறங்­கிய முத­லா­வது கல­மா­கி­யதும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்­கிய முத­லா­வது விண்­க­ல­மாகும்.

 

1970 : தென் கொரியப் பய­ணிகள் கப்பல் கொரிய நீரி­ணையில் மூழ்­கி­யதில் 308 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1978 : மக்கள் சீனக் குடி­ய­ரசை அங்­கீ­க­ரிப்­ப­தா­கவும் தாய்­வா­னு­ட­னான உற­வு­களைத் துண்­டிப்­ப­தா­கவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜிம்மி கார்ட்டர் அறி­வித்தார்.

 

1981: லெப­னானின் பெய்ரூத் நகரில் ஈராக்­கிய தூத­ரகம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் லெபனா­னுக்­கான ஈராக் தூதுவர் உட்­பட 61 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1997 : தஜி­கிஸ்தான் விமா­ன­மொன்று ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் ஷார்ஜா விமான நிலை­யத்­திற்கு அருகில் வீழ்ந்து நொருங்­கி­யதில் 85 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1997 : தென் கிழக்கு ஆசி­யாவை அணு­வா­யு­த­மற்ற பகு­தி­யாக அறி­விக்கும் உடன்­ப­டிக்கை பாங்­கொக்கில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

 

2000 : செர்­னோபில் நகரில் மூன்­றா­வது அணு உலை மூடப்­பட்­டது.

 

2001 : பைஸாவின் சாய்ந்த கோபுரம் 11 ஆண்­டு­களின் பின்னர் மீண்டும் திறக்­கப்­பட்­டது.

 

2009 : போயிங் நிறு­வ­னத்தின் 787 விமானம் முதல் தட­வை­யாக அமெ­ரிக்­காவின் சியாட்டில் நக­ரி­லி­ருந்து பறந்­தது

 

2010 : புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் 90 பேரை ஏற்றிச் சென்ற பட­கொன்று அவுஸ்­தி­ரே­லி­யாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் பாறையில் மோதி உடைந்தால் 48 பேர் உயிரிழந்தனர்.

 

2014 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நக­ரி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் துப்­பாக்­கி­தாரி ஒருவன் 18 பேரை பண­யக்­கை­தி­யாக பிடித்­து­வைத்­தி­ருந்தான். பொலி­ஸாரின் முற்­று­கை­யின்­போது துப்­பாக்­கி­தாரி உட்­பட  மூவர் கொல்லப்பட்டனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=623#sthash.xTPXJ220.dpuf
  • தொடங்கியவர்

இந்தியாவுக்கே சவால் கொடுக்கும் 4G பெண்ணுக்கு காக்காமுட்டை சேலஞ்ச்!

 

4g%20350.jpgசாஷா சேத்ரி... இந்தப் பெயர் உங்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால், இந்தப் பெயருக்குரிய பெண்ணை தினமும் குறைந்தது 10 முறையேனும் பார்க்காமல் இருக்க முடியாது! சேட்டிலைட் சேனல், கிரிக்கெட் ஒளிபரப்பு, ஃப்ளெக்ஸ் விளம்பரங்கள், பத்திரிகை, இணைய விளம்பரம் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் 4G பெண்தான் அவர்.

“4G சேலஞ்சுக்கு நீங்க ரெடியா? ஸ்மார்ட்போன் வச்சிருந்தா ஏர்டெல் மட்டுமே எடு” என தில் சவால் விடுக்குமே அந்தப் பெண்தான் சாஷா சேத்ரி.

4G விளம்பரம் காரணமாக இந்தியா முழுக்க செம பிரபலம் ஆகிவிட்டார் சாஷா. சரி... யார் இந்த சாஷா? 19 வயது சாஷா, டேராடூனைச் சேர்ந்தவர். மேற்படிப்புக்காக மும்பைக்கு வந்தார். அங்கு சேவியர் இன்ஸ்டியூட் ஆஃப் கம்யூனிகேஷனில் விளம்பரப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கிறார். பின்னர் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியவர், அப்படியே விளம்பரங்களில் நடிக்க முயற்சித்திருக்கிறார். வாய்ப்புகள் சில வந்தாலும், அதைவிட இசை சாஷாவை ஈர்த்திருக்கிறது. இசைக்குழுக்களில் 'ரிக்ஷா ராணி' என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது மும்பையில் 4G விளம்பரத்துக்கென நடிகர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் எனத் தெரிந்து ஆடிஷன் சென்றிருக்கிறார்.

“நான் அன்று அந்தத் தேர்வுக்கு செல்லவே விரும்பவில்லை. ஏனென்றால், என் கூந்தலை அப்போதுதான்4g%201.jpg கட் செய்திருந்தேன். கிட்டத்தட்ட டாம் பாய் போல மிகவும் குறைவாக இருந்தது என் முடி. அதனால் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்போது அந்த ஹேர்ஸ்டைல்தான் என் அடையாளமாகிவிட்டது!’’ என்கிறார் சாஷா சந்தோஷமாக.

தற்போது 4G விளம்பர வரிசை வைரலான பின்னர், அடுத்தடுத்து விளம்பர வாய்ப்புகள் சாஷா மொபைலை தீண்டுகிறது. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தன் இசைக்குழுவுடன் ஒரு  ஆல்பம் தயாரிப்பதில் தீவிரமாக இருக்கிறாராம் சாஷா.

4G விளம்பரம் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 20 ம் தேதி வரை மட்டும், 54,406 முறை ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மொத்தமாக 475 மணி நேரம் திரையில் தோன்றியிருக்கிறார் சாஷா. அதே சமயம் சாஷாவை வைத்து, உலா வரும் ஜோக்ஸ், மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை. ஏர்டெல் நெட்வொர்க்கையும், இவரின் விளம்பரத்தையும் வைத்து களைகட்டுகின்றன கலாய்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை சாஷா.

அப்புறம் இந்த க்யூட் மாடல் பார்க்க விரும்பும் தமிழ் சினிமா என்ன தெரியுமா? - ‘காக்கா முட்டை’! படத்தின் டிரைலருக்காகவே அந்தப் படத்தைப் பார்க்க விரும்புகிறாராம்.

 

girlss.jpg

‘காக்கா முட்டை’ படத்தை சென்னை தியேட்டரில் பார்க்க சாஷாவுக்கு நாம் சேலஞ்ச் கொடுப்போம். ஏற்றுக் கொள்கிறாரா என பார்க்கலாமா?

http://www.vikatan.com/news/miscellaneous/56315-sasha-chettri-wants-to-see-kaaka-muttai-movie.art

  • தொடங்கியவர்

12375009_955405777841450_444354571334843

குணச்சித்திர, நகைச்சுவை, வில்லன் நடிகராக முத்திரை பதித்த வினு சக்கரவர்த்தி அவர்களின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

12341363_955407794507915_870141243923898

  • தொடங்கியவர்

தலைக்கு மேல தண்ணி போனாலும் நாங்க அதுக்கு மேல.... சென்னை புகழ்பாடும் மலையாள கரையோரம் (வீடியோ)

 

"வரலாறு காணாத மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. மக்கள் கடும் துயரத்திற்குள்ளானார்கள். இந்தியா மட்டுமல்ல உலகமே சென்னையின்  நிலையை பார்த்து கண்ணீர் விட்டது. ஆனால் இத்தகைய இக்கட்டான நிலையில் இருந்து சென்னை தன்னம்பிக்கையுடன் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

இக்கட்டான நிலையில் இருந்து ஒற்றுமையுடனும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்கும் சென்னையை பார்த்து உலகமே வியந்து நிற்கிறது." - இது மலையாள கரையோர எப்.எம். ஒன்று சென்னை குறித்து வெளியிட்ட ஆடியோ.

 

 

தமிழாக்கம்

மெட்ராசு என்ற இந்த இடத்துக்கு அட்ரஸ் ஒன்றே ஒன்றுதான்,  அதுதான் மெட்ராஸ். சும்மா தமாசுக்கு சொன்னாலும் இது உண்மைதான். கடந்த சில தினங்களில் அதனை  பார்த்தோம். கேரளத்தில் இருந்து  புறப்பட்ட ஒவ்வொரு வண்டியிலும் எழுதப்பட்ட ஒரே பெயர் சென்னை.  கழுத்துக்கு மேல தண்ணி  போனாலும் தலை நிமிர்ந்து நிற்கும் சென்னைக்கு வணக்கம் சொல்லிக் கொண்டு இந்த ஷோவை தொடங்குவோம்.

தண்ணி வண்டிக்காக காத்திருக்கும் சென்னையை பார்த்திருக்கிறோம். ஆனா இன்னைக்கு தண்ணிய வெளியேத்துற வண்டிக்காக காத்திருக்கும் சென்னையை பார்க்கிறோம்.  இவ்வளவு இக்கட்டான சூழலிலும் சென்னை சிரித்த முகத்துடன் நிற்கிறது. இதனால்தான் சென்னையை இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்கிறோம்.

டப்பாங்குத்தை அறிமுகப்படுத்தியது சென்னைதான். விசில் போடுவதற்கு இந்தியாவுக்கே சொல்லிக் கொடுத்தது சென்னைதான். தோத்தாலும், ஜெயிச்சாலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நிற்பதும் சென்னைதான். சண்டைக்கு வந்தா என்னடானும்,  உதவி கேட்டா என்னா சார்னு... உலகத்துக்கே கற்றுக் கொடுத்தது சென்னைதான்.

ஊரை இழந்தாலும், வீட்டை இழந்தாலும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் உதவி செய்ததை பார்க்க முடிந்தது.  ஒற்றுமையுடனும் அன்புடனும் நின்ற சென்னையை கண்ட போது,  சான்சே இல்ல... சான்சே இல்ல. ஆனா தோனி சிக்ஸ் அடிக்கும் போது கையை உயர்த்தி ஆரவாரிக்கும் சென்னை... இன்னைக்கு மொட்டை மாடில இருந்து பிஸ்கட்டுக்கு கையை உயர்த்தும் போது, மனசு என்ன சொல்லுது தெரியுமா? 'நீங்கதான் சென்னை சூப்பர் கிங்ஸ்..!'

தண்ணி தலைக்கு மேல போனாலும்  நாங்க அதுக்கு மேலனு நின்ன சென்னை... வாழ்க்கைனா என்னனு சொல்லிக் கொடுத்தற்கும்...  வாழ்க்கை எத்தனை எளிதானது என்று சொல்லிக் கொடுத்தற்கும் நன்றி. வாழ்க்கை என்பது  தேடி ஓடுவது அல்ல.  அருகில் இருப்பவர்களை அரவணைப்பது என்பதை எங்களுக்கு சொல்லிக் கொடுத்த சென்னைக்கு அன்புடன் வணக்கம்.

  • தொடங்கியவர்

Eingebetteter Bild-Link

  • தொடங்கியவர்

12316400_1037609176297872_21490148726658

கால்பந்தில் போட்டியில் அசத்திய இந்தியாவின் பைசங் பூட்டியா பிறந்த தினம் இன்று...

  • தொடங்கியவர்

12366403_742220635912767_110444000116987

சென்னை சூப்பர் கிங்ஸ் எங்க இருக்கு ???

 
8 hours ago, நவீனன் said:

12341363_955407794507915_870141243923898

9jn2vo.jpg

இது போகந்தலாவ சென்ற போது எடுத்தது.

  • தொடங்கியவர்

12377989_955403767841651_391442451713936

முன்னாள் மேற்கிந்தியத் தீவுகளின் அணித் தலைவர், சகலதுறை வீரர் கார்ல் ஹூப்பரின் பிறந்தநாள் இன்று.

  • தொடங்கியவர்
விமான பயணம் என்பதே பலருக்கும் பரவசமான அனுபவத்தை தரவல்லதாக இருக்கும்.
 
தொழில்நுட்ப வசதிகள் பெருகி வரும் இக்காலத்தில் விமான பயணத்தை ரசனைமிக்கதாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக, ஸ்கைடெக் என்ற கண்ணாடி கூண்டில் இருக்கைகள் அமைப்பதற்கான ஓர் முன்மாதிரியை வின்ட்ஸ்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
 
இந்த ஸ்கைடெக் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள் இதோ உங்களுக்காக...
 
14-1450088234-aircraft-skydeck-05.jpg
நோக்கம்
விமானத்தில் பயணிக்கும்போது சிறிய ஜன்னல் வழியாக வெளியுலகை ரசிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அது ஒரு வட்டத்திற்குள் அடைந்து போகிறது. இதனை போக்கும் விதத்திலேயே ஸ்கைடெக் கான்செப்ட்டை வின்ட்ஸ்பீடு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
14-1450088222-aircraft-skydeck-03.jpg
ஸ்கைடெக்
இது புதிதல்ல. ஆடம்பர படகுகளில் மேல் புறத்தில் இதுபோன்ற ஸ்கைடெக்குகள் பொருத்தப்படுகின்றன. ஆனால், அதனை விமானத்தில் அமைப்பது சிரமம். அதற்கான தீர்வாக இந்த ஸ்கைடெக் கான்செப்ட்டை வின்ட்ஸ்பீடு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
 
14-1450088246-aircraft-skydeck-07.jpg
கண்ணாடிக் கூண்டு
விமானத்தின் மேல்புறத்தில் சிறிய கண்ணாடி கூண்டு ஒன்றை அமைத்து அதில் இரண்டு இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்த இருக்கைகளை லிஃப்ட் மூலமாகவோ அல்லது படிக்கட்டுகள் அமைத்து செல்லும் விதத்தில் உருவாக்கியிருக்கின்றனர்.
14-1450088240-aircraft-skydeck-06.jpg
பரவசம் அளிக்கும்
விமானம் பறந்து கொண்டிருக்கும்போது இந்த இருக்கையில் அமர்ந்தால், ஓர் புதிய பரவசத்தை ஏற்படுத்தும் எனலாம். அத்துடன், அந்த இருக்கைகளை ஒரு பொத்தானை அழுத்தினால் 360 டிகிரி கோணத்தில் திருப்ப முடியும்.
 
14-1450088217-aircraft-skydeck-02.jpg
ஏரோடைனமிக்ஸ்
விமானத்தின் பின்பகுதியில் இந்த கண்ணாடி கூண்டு அமைப்பதால் விமானத்தின் ஏரோடைனமிக்ஸில் எந்த பாதிப்பும் இருக்காதாம். எனவே, விமானத்தின் செயல்திறனிலும், எரிபொருள் சிக்கனத்திலும் எந்த மாறுதலும் இருக்காது என்கிறது வின்ட்ஸ்பீடு.
 
பயப்படாதீங்க...
ஸ்கைடெக் அமைப்பு பறவைகளின் மீது மோதினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், மிக உறுதியான கண்ணாடி பொருட்களை கொண்டு அமைக்கப்படும். எனவே, பயப்பட வேண்டிய அவசியல்லை என்று ஆர்வத்தைத் தூண்டுகிறது வின்ட்ஸ்பீடு நிறுவனம்.
 
Read more at: http://tamil.drivespark.com/off-beat/windspeed-introduces-skydeck-concept-private-jets-009317.html
2 hours ago, நவீனன் said:

தொழில்நுட்ப வசதிகள் பெருகி வரும் இக்காலத்தில் விமான பயணத்தை ரசனைமிக்கதாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக, ஸ்கைடெக் என்ற கண்ணாடி கூண்டில் இருக்கைகள் அமைப்பதற்கான ஓர் முன்மாதிரியை வின்ட்ஸ்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

நாங்கள் பிசினஸ்/first கிளாசை கண்டதே முதலாளியின்ர தயவிலதான். இது நமக்கு சரிவராது.

  • தொடங்கியவர்
 
வரலாற்றில் இன்று: டிசெம்பர் 16
 
 

article_1450234766-0.jpg1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

1835 - நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.

1857 - இத்தாலியின் நேப்பில்சில் 6.9 ரிச்டர் அளவு நிலநடுக்கம் உணரப்பட்டதுடன் இதனால் 11,000 பேர் உயிரிழந்தனர்.

1920 - சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் உயிரழந்தனர்.

1922 - போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பமானது.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.

1960 - ஐக்கிய அமெரிக்க விமானம் நியூயோர்க்கை அண்மிக்கும் போது மோதியதில் 134 பேர் பலியாகினர்.

1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.

1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

- See more at: http://www.tamilmirror.lk/161620/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B1-%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B0-#sthash.LKnJvkcz.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12375301_955838101131551_282493174348115


BIG BIRD என்று அழைக்கப்பட்ட, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்துவீச்சாளராக விளங்கிய ஜொயெல் கார்னரின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்
ஆரம்பக் காலத்தில் வினோதமாக காணப்பட்ட மருத்துவ முறையின் அரிய புகைப்படங்கள்!!!
 

10-1436503697-17creepyvintagemedicalphot

ஒருவருக்கும் மேற்பட்டவர்களுக்கு போலியோ மருந்து தருவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட உபகரணம் இதுவாம்.
 

 

  • தொடங்கியவர்

என் பெயர் ஹிஷாம். நான் ஒரு அகதி
சிரியாவிலிருந்து ஜெர்மனி வந்துசேர்ந்த ஒரு அகதியின் கதை- வரைகலை படங்களில்.

  • தொடங்கியவர்

"துன்பம், துயரங்களின்போது 'எனக்கு மட்டும் ஏன் இப்படி' என்று மனம் சஞ்சலத்தில் மேலும் சோர்வுறுகிறதே?"

12373163_1037961166262673_51002168842363

"ஆர்தர் ஆஷ் அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீரர். 1983-ம் ஆண்டு அவருக்கு நடந்த ஒரு அறுவை சிகிச்சையின்போது, தவறான ரத்தம் செலுத்தப்பட்டதால், ஹெச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளானார். எய்ட்ஸ் நோயின் வீரியத்தால் அவர் உடல், நாளுக்கு நாள் மோசமாகி உருக்குலைந்துகொண்டு இருந்தது. அந்த நிலையில், ஆஷைப் பார்த்த அவரது ரசிகர் ஒருவர், 'உங்களை ஏன் கடவுள் இப்படிச் சோதிக்க வேண்டும்?' என்றார். மெல்லிய புன்னகை இதழ்களில் தவழ ஆர்தர் ஆஷ் இப்படிச் சொன்னாராம், 'உலகில் 5 கோடி மக்கள் டென்னிஸ் போட்டியை ஆர்வத்துடன் விளையாடுகிறார்கள். அதில் 5 லட்சம் பேர் புரொஃபஷனல் வீரர்கள் ஆகிறார்கள். 50 ஆயிரம் பேர் முக்கிய கட்டங்களுக்கு முன்னேறுகிறார்கள். அவற்றுள் 5 ஆயிரம் பேர் கிராண்ட் ஸ்லாம் விளையாடத் தகுதி பெறுகிறார்கள். 50 பேர்தான் அதில் விம்பிள்டன் வரை வருகின்றனர். 4 பேர் செமி பைனல், 2 பேர் பைனல், இறுதியில் ஒரே ஒரு ஆள் விம்பிள்டன் பட்டத்தை வெல்கிறார். என் கையில் விம்பிள்டன் பட்டம் இருந்தபோது 'இது கடவுளால் அளிக்கப்பட்டது!' என்று நன்றி சொல்லி ஏற்றுக்கொண்டதைப்போல இதையும் ஏற்றுக்கொள்கிறேன்!"

  • தொடங்கியவர்

30 விநாடிகளி 108 தடவை ஸ்கிப்பிங் விளையாடி புதிய உலக சாதனை

 

  • தொடங்கியவர்

12356692_955838921131469_735190914662183

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கலக்கல் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக விளங்கிய இம்ரான் நசீரின் பிறந்தநாள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரியாத பற்பல விளையாட்டு வீரர்களைக் காண வைக்கின்றீர்கள் ,தகவல்களுடன்... வாழ்த்துக்கள்...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.