Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சாதனைப் பெண்கள் தங்கள் வாழ்வை இப்படித்தான் திட்டமிட்டிருப்பார்கள்! #MondayMotivation

 
 

பெண்கள்

ஒருவரை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக்காட்டுவது, அவரின் சாதனைகள்தான். ஆண் மனநிலை நிறைந்திருக்கும் இந்த உலகில் ஒரு பெண் சாதிப்பது என்பது இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், எவ்வளவு இடர் வந்தாலும் தன் நோக்கத்தில் உறுதியாக இருந்து சாதித்த பெண்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை அனுபவங்கள் வழியே மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம்.

ஏதேனும் ஒரு துறையில் சாதிக்க துடிக்கும் பெண்களா நீங்கள்? முதலில் மனம் நிறைந்த வாழ்த்துகள். சாதிப்பதற்கான திட்டமிடலை ஒழுங்குப் படுத்திக்கொள்ளுங்கள். அதற்கான சில யோசனைகள் இதோ.

1. தன்னை அறிதல்: முதலில் தன்னைப் பற்றிய முழுமையான தெளிவும் நம்பிக்கையும் கொள்ள வேண்டும். ஒரு பெண் இந்தத் துறையைத் தேர்தெடுத்து வெல்ல முடியுமா... எனும் தயக்கத்துடன் தனக்குப் பிடித்தமான துறையை நழுவ விட்டுவிடாதீர்கள். எந்தத் துறையும் ஆண், பெண் எனும் பேதத்தைப் பார்ப்பது அல்ல. கடும் முயற்சியை மட்டுமே எதிர்பார்க்கிறது. அதனால், அந்தத் தயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் வளர்ந்த சூழல், வாழும் சூழல், உங்கள் உடல் திறன் ஆகியவற்றை மனதில் நிறுத்தி தனது இலக்கைத் தேர்ந்தெடுங்கள்.

2. இலக்கு எது?: இதுதான் இலக்கு என முடிவெடுக்கும் முன் அதற்கான வெற்றி வாய்ப்புகளை ஆராயுங்கள். அந்த இலக்கை அடைவதற்கான பயணத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ள விருக்கும் காலத்தில் பொருள், உழைப்பு, குடும்பச் சூழல் ஆகியவை சீராக இருக்குமா என்பதை யோசியுங்கள். நீண்ட காலத்தை கோரும் இலக்கு எனில், தொடங்குபோது உங்களின் வயது, ஒரு நாளில் சோர்வற்று உழைக்கும் நேரம், இலக்கை அடையும்போது எவ்வளவு நேரம் சோர்வற்று உழைக்க முடியும் என்பதையும் கணக்கில் கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொன்றையும் மிக கவனமாக சோதித்து விட்டு சரியான இலக்கைத் தேர்ந்தெடுங்கள்.

3. பலம் இரட்டிப்பாகட்டும்: மிகத் துல்லியமாக இலக்கை முடிவு செய்துவிட்டீர்களா... அதை அடைவதற்கான பலத்தை இரட்டிப்பாக்குங்கள். குடும்பச் சூழலில் தினமும் இரண்டு மணிநேரம்தான், உங்களின் இலக்கு நோக்கியப் பயணத்துக்கு ஒதுக்க முடிகிறது என்றால், அதை நான்கு மணிநேரமாக மாற்ற முயலுங்கள். அதற்கு குடும்பத்தினரைத் தயார் செய்யுங்கள். அதற்காக உறங்கும் நேரத்தை பலி கொடுக்காதீர்கள். சரியான உணவும் தேவையான உறக்கமும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்பவை. அதனால் அவற்றைத் தவிர்க்க நினைக்காதீர்கள். உங்கள் இலக்கிற்கு தோழிகள், குடும்பத்தினரின் உதவியை எப்படி பெற முடியும் என யோசியுங்கள். அவர்களின் இயல்பான வேலைத் திட்டத்திற்கு இடையூறு இல்லாமல் உதவியைப் பெறுங்கள்.

4. சறுக்கல் நிரந்தரமல்ல: மிகச் சரியாக சென்றுகொண்டிருக்கும் உங்களின் பயணத்தில் சிறு தோல்வியோ சறுக்கலோ வரக்கூடும். உடனே, பயணமே முழு முற்றாக முடிந்துவிட்டதாக சோர்ந்துவிடாதீர்கள். நீண்ட பயணத்தின் ஓர் அங்கம்தான் சறுக்கலும் சிறு தோல்வியும். எனவே, அவற்றைக் கண்டு அச்சமுறாதீர்கள். அதற்கான காரணங்களைக் கண்டடையுங்கள். அவற்றை தயவுதாட்சண்யமின்றி உதறித் தள்ளுங்கள். சில சமயங்கள் ரிஸ்க் எடுக்கவும் தயங்காதீர்கள்.

5. இறுதி நொடி: பலரும் செய்கிற ஒரு தவறு என்னவெனில், இலக்கு தொட்டுவிடும் தூரத்தில் வந்தவுடன் உழைப்பையும் முயற்சியையும் குறைத்துவிடுவதான். அப்படி செய்யும்பட்சத்தில் அதற்கு முன்பான அவ்வளவு உழைப்பும் கரைந்துவிடும். அதனால், வெற்றி தன் மகுடத்தை உங்களின் தலையில் சூட்டும் வரை போராடுங்கள். உழையுங்கள்.

 

6. வெற்றியைக் கொண்டாட்டம்: இலக்கை அடைந்துவிட்டால் எந்தத் தயக்கும் கூச்சமும் இல்லாமல் அதைக் கொண்டாடுங்கள். ஏனெனில் உங்களின் கடும் உழைப்புக்கு கிடைத்த பரிசு. அதை உங்களின் குடும்பத்தினர், நண்பர்களோடு கொண்டாடுங்கள். இது, உங்களின் அடுத்த இலக்கை நோக்கிய பயணத்திற்கு உற்சாகப் படுத்தும்.

http://www.vikatan.com

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
 
 
 
Bild könnte enthalten: 2 Personen
 

மே 8: செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஹென்றி டூனன்ட் என்கிற ஒப்பற்ற மனிதர் பிறந்த தினம் இன்று.

சுவிட்சர்லாந்து நாட்டில் மிகப்பெரிய செல்வ வளம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் இவர் ;இளம் வயதிலேயே வியாபாரத்தில் ஆர்வம் கொண்டு இருந்தவர்;வடக்கு ஆப்ரிக்காவில் மிகப்பெரிய ஒரு முதலீட்டு திட்டத்தோடு அங்கே நீர்வள பயன்பாட்டு உரிமையை பெறுவதற்காக கிளம்பினார். அங்கே ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்த பிரான்ஸ் தேசத்து மன்னரை சந்திக்க போனார். அங்கே போரில் எப்படியெல்லாம் வீரர்களும் மக்களும் துன்பப்படுகிறார்கள் என பார்த்து மனம் நொந்து போனார்.

போரில் துன்பப்படும் ,காயப்படும் ஜீவன்களை காப்பாற்ற ஒரு நடுநிலையான அமைப்பை உண்டாக்கி காயப்பட்டவர்களின் உயிர் காக்க,உதவி செய்ய உருவாக்க வேண்டும் என அவர் எடுத்த முன்னெடுப்பு தான் செஞ்சிலுவை சங்கம்;தன் ஒட்டுமொத்த வருமானத்தையும் போட்டு அதை நடத்தினார்; பல்வேறு நாடுகளை அதில் இணைத்தார் .நடுவே பிசினஸ் படுத்து தொலைத்தது;எல்லாம் போனது-பிச்சைக்காரன் போல வாழ்வு வாழ்ந்தார்-எங்கே இவர் என்றே யாருக்கும் தெரியாது.மனிதர் இறந்தே போனார் என பலரும் நினைத்தார்கள்.

அவர் வரிகளிலேயே பாருங்கள்," நான் ஓரிரு ரொட்டித்துண்டுகளில் வாழ்கிறேன். என்னுடைய சாயம் போன கோட்டை செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவி கேட்க போகும் பொழுது மையால் கருப்பாக்கி கொள்கிறேன்; எங்கேனும் இருக்கும் கதவுகளின் ஓரமாக படுத்து இரவில் தூங்கிக்கொள்கிறேன்.

முதல் நோபல் பரிசு அறிவிக்கபட்ட பொழுது அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.அதையும் முழுக்க செஞ்சிலுவை சங்கம் சிறப்பாக செயல்பட கொடுத்துவிட்டார். ஒரே ஒரு அறையில் அனாதையாக வாழ்ந்தார் ; தனியாளாக தன் அறையில் இறந்து போனார். எனினும் இன்றைக்கும் பலபேரின் உயிர்களை காப்பாற்றி அவரின் கனவை நிலைபெற செய்து இருக்கிறது செஞ்சிலுவை சங்கம்;

அதுதானே வெற்றி!

#HenryDunant #RedCross

  • தொடங்கியவர்
 

’மை நேம் ஈஸ் பாகுபலி!’ - கேரளச் சிறுவனின் குஷி!

 
 

ன் பெயர் ஸ்டைலிஷா... கேட்சியா இருக்க வேண்டும் என்பது இளைய தலைமுறையின் ஆசைகளில் ஒன்று. `குப்பம்மா', `சுப்பம்மா' எனப் பெயர் இருந்தால், வளர்ந்ததும் 'பெயர் வெச்சிருக்காங்க பாரு... பெயர்னு' எனப் பெற்றோரிடம் சண்டைபோடுவர். 'டேய்... அது நம்ம குலதெய்வப் பேருடா... பழிக்காதே'னு நம்மைச்  சமாதானப்படுத்துவார்கள். பிறகு, நாமே ஸ்டைலாக ஒரு பெயரைத் தேர்தெடுத்து வைத்துக்கொண்டு, நண்பர்களை அந்தப் பெயரிட்டே அழைக்கச் சொல்வோம். அவர்களோ, பெயருக்கு புனைபெயரைப் பயன்படுத்தினாலும் சில சமயங்களில் ஒரிஜினல் பெயரைச் சொல்லி நம்மை ஓட்டுவார்கள்; 'உன்னோட பேரு இதுதானே... ஊரை ஏமாத்திட்டுத் திரியுறியா?' என்று மானத்தை அடுத்த நாட்டுக்கே கப்பல் ஏற்றுவார்கள்.

பாகுபலி பெயர் கொண்ட சிறுவன் ‘பாகுபலி' படம், பிரபாஸுக்கு மட்டும் புகழைத் தந்துவிடவில்லை; கேரளாவைச் சேர்ந்த   ஒரு சிறுவனுக்கும்  மிகப்பெரிய குஷியைக் கொடுத்துள்ளது. ஆம், 'பாகுபலி' என்ற பெயர்கொண்ட ஒரு சிறுவன், இதுநாள் வரை பள்ளி நண்பர்களால் கேலிக்குள்ளானான். கால மாற்றத்தால், இப்போது 'நான்தான் பாகுபலி' எனப்  பெருமிதத்துடன்  உலாவருகிறான். `உன் பெயர் என்ன?' என்று கேட்காதபோதுகூட, 'ஹலோ... மை நேம் இஸ் `பாகுபலி'' என்று அவனே தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறானாம்.

இந்தப் படம் வெளியாகும் வரை, இது போன்ற பெயரை நாம் கேள்விட்டிருக்கவே மாட்டோம். இந்தியாவில் பரவலாக அறியப்பட்ட பெயரும் அல்ல.  'பாகுபலி' என்றால், 'தோள் வலிமை மிக்கவன்' என அர்த்தம்.

கேரள மாநிலம் கொச்சியில் பெற்றோருடன் வசித்துவரும் ஜூனியர் பாகுபலி, இரு வருடங்களுக்கு முன்பு வரை பெற்றோருடன் தினமும் சண்டையிடுவானாம்.

'இது என்ன பெயர்?', 'யார்கிட்ட கேட்டுட்டு இந்தப் பெயரை எனக்கு வெச்சிங்க?' என்று ஒரே புலம்பல். பெற்றோரும் அவனை இத்தனை காலமாகச் சமதானப்படுத்தி வந்தனர். காலம் மாறியது. `பாகுபலி' முதல் பாகம் வந்த பிறகுதான்,  பெற்றோருடன்  சண்டையிடுவதை நிறுத்தியுள்ளான் அந்தச் சிறுவன். இரண்டாம் பாகம் வந்து சக்கைப்போடுபோட, பள்ளியே இவனுடைய சாம்ராஜ்யமாகிவிட்டது. பள்ளித் தோழர்கள் இவனைப் பார்க்கும்போதெல்லாம் `ஜெய் பாகுபலி..!' என்று சொல்கிறார்களாம்.

கொச்சியைச் சேர்ந்த கே.எம்.ஜெயராஜ்-சாரபாய் தம்பதியின் மகன் இந்த ஜூனியர் பாகுபலி. தற்போது ஒன்பது வயதாகும் இவன்,  ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்தப் பெயரை எப்படி செலெக்ட் செய்தீர்கள்? - என தந்தை ஜெயராஜிடம் கேட்டபோது...

என்னோட மூத்த மகனுக்கு `விஸ்வாமித்ரா'னு பெயர் வெச்சேன். இளையவன் பிறந்தப்போ அவனுக்கும் வித்தியாசமான பெயர் வெக்கணும்னு ஆசைப்பட்டுத் தேடினேன். ஜைன மதத்தில்தான் `பாகுபலி'ங்கிற பெயரைப் பார்த்தேன். வித்தியாசமா இருந்துச்சு; பார்த்ததும் பிடிச்சுப்போச்சு. `பாகுபலி'னு பெயர் வைக்க, வீட்டில் கடும் எதிர்ப்பு. அதையெல்லாம் சமாளிச்சுதான் இளையவனுக்கு இந்தப் பெயரை வெச்சேன். பாகுபலி வளர்ந்த பிறகு, எங்கிட்ட பல முறை `என்ன பெயர் இது?'னு சண்டைபோட்டிருக்கான்.  இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கான். முதல் பாகம் வந்தபோதே, ' `பாகுபலி'னு பையனுக்கு எப்படி பெயர் வெச்சிங்க?'னு நிறைய பேர் கேட்டாங்க. பதில் சொல்ல மாளல''  என்று சிரிக்கிறார்.

''முதல்ல இந்தப் பேரு எனக்கும் பிடிக்கவேயில்லை.ஃப்ரெண்ட்ஸ்கிட்ட `'பாகு'னுதான் கூப்பிடணும்'னு சொல்வேன். என்னை இப்போ பார்த்தா, `ஜெய் பாகுபலி..!' -ங்கிறாங்க. எங்க அப்பா எனக்கு சூப்பர் நேம் செலெக்ட்பண்ணி வெச்சிருக்கார்'' என சந்தோஷத்தில் திளைக்கும், ஜூனியர் பாகுபலியின்  ஆசை என்ன தெரியுமா? சீனியர் பிரபாஸை மீட் பண்ண வேண்டுமாம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு (29 மே - 5 மே 2017)

 
 

கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளில் சிறந்த படங்களை தேர்வு செய்து இங்கு வழங்கியுள்ளோம்.

கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் என்ற பகுதியில் நடிகர்கள் கர்ட் ரஸ்ஸெல் மற்றும் கோல்டி ஹான் ஆகிய இரு நட்சத்திரங்களும் முத்தம் பரிமாறிக் கொண்ட காட்சி.

ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் நிகழ்ச்சியில் நடிகர்கள் கர்ட் ரஸ்ஸெல் மற்றும் கோல்டி ஹான் ஆகிய இரு நட்சத்திரங்களும் முத்தம் பரிமாறிக் கொண்ட காட்சி.

 

 

சுவிட்ஸர்லாந்தில் மே தினத்தின் போது நடைபெற்ற போராட்டத்தில், அதில் கலந்து கொண்ட கோமாளி வேடம் தரித்த போராட்டக்காரர் ஒருவர் மழையிலிருந்து போலீஸாரை பாதுகாக்கும் காட்சி.

சுவிட்ஸர்லாந்தில் மே தினத்தின் போது நடைபெற்ற போராட்டத்தில், அதில் கலந்து கொண்ட கோமாளி வேடம் தரித்த போராட்டக்காரர் ஒருவர் மழையிலிருந்து போலீஸாரை பாதுகாக்கும் காட்சி.

 

Hayden Paddon of New Zealand drives his Hyundai i20 Coupe

 

அர்ஜென்டினாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின் நான்காவது தினத்தில், நியூஸிலாந்தை சேர்ந்த ஹேடன் பாடோன் கூட்டத்தினரிடையே தன் ஹுண்டாய் ஐ 20யை ஓட்டிச் செல்லும் காட்சி.

 

Prince Philip, The Duke of Edinburgh and Elizabeth II leave Buckingham Palace in London,

எடின்பரோ கோமகன் வருகிற இலையுதிர் காலத்திலிருந்து தன்னுடைய ராஜ்ஜிய கடமைகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

 

German Chancellor Angela Merkel, Svein Richard Brandtzaeg, President and Chief Executive Officer of Rolled Products and Norwegian Prime Minister Erna Solberg are seen during the official opening of a production line

ஜெர்மனியின் க்ரிவென்பிராய்கில் உள்ள நார்வேவின் ஹைட்ரோ அலுமினியம் கிளை நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவு ஒன்றிலிருந்து புகைப்படத்திற்காக போஸ் கொடுக்கும் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல், தலைமை செயல் அதிகாரி சீன் ரிச்சர்ட் பிராண்ட்சேக் மற்றும் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்.

 

Nemophila flowers

ஹிட்டாச்சி கடற்கரை பூங்காவில் சுமார் 4.5 மில்லியன் நெமோஃபிலா மலர்கள் பூத்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பார்க்க குவிந்துள்ள பார்வையாளர்கள்.

 

 

Liberal Democrat leader Tim Farron speaks during a general election campaign visit to Harts Boatyard on the banks of the river Thames in Surbiton, south London

தேம்ஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஹார்ட் படகு குழாமில் நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தில் லிபரல் ஜனநாயக தலைவர் டிம் ஃபெர்ரான், ஆதரவாளர்களிடையே நம்பிக்கையுடன் பேசிய காட்சி.

 

Horses in the snow

சீனாவில், ஜின்ஜியாங் என்ற தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள அல்டேவில் கடும் பனியில் குதிரையில் சவாரி செய்தபடி குதிரை கூட்டத்தை வழிநடத்தி செல்லும் நபர்.

 

Katy Perry at Metropolitan Museum of Art

நியூ யார்க் நகரத்தில் உள்ள மெட்ரோபோலிட்டன் கலை அருங்காட்சியகத்தில், காலா என்ற அடை நிறுவனத்திற்காக கேட்டி பெர்ரி அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

 

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

33 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கடற்கரை, ஒரே இரவில் திரும்பிய அதிசயம்..! #AchilIIsland

 
 

கடற்கரை

அச்சீல் தீவுகள். அயர்லாந்து நாட்டில் இருக்கும் அமைதியான தீவுகள். 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இன்னமும் தன்னைத் தொலைத்துவிடாமல், இயற்கையோடு இணைந்தே இருக்கும் நகரம். இந்தப் பகுதியின் மொத்த மக்கள் தொகையே 3000க்குள் தான். ஆனால், சுற்றுலாவாசிகள் பலர் வந்துபோகும் ஓர் அழகிய பிரதேசம். 

அச்சீலீஸ் தீவுகள் அமைதிக்காகவும், இயற்கை சூழ்ந்த பகுதிகளுக்கும் பெயர் போனது. இங்கிருக்கும் deserted village என்ற பகுதி புகழ்பெற்றது. 80க்கும் மேற்பட்ட வீடுகள் இன்னமும் இங்கு இருக்கின்றன. எந்த சிமெண்ட்டும் இல்லாமல், வெறும் கற்களாக கட்டப்பட்ட வீடுகள் அவை. ஆனால், எல்லா இயற்கை சீற்றங்களையும் தாங்கிக்கொண்டு இன்னமும் வீடுகள் நிற்கின்றன. இப்போது இங்கே ஒருவர் கூட வாழாததால் இதற்கு deserted village என்ற பெயர் வந்திருக்கிறது. 

1900களில் இங்கு 5000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், திடீர் திடீர் என மாறும் காலநிலையால் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இடம்பெயர்ந்துவிட்டார்கள். இயற்கை, அச்சீல் தீவுக்கு வரமும் சாபமும் மாறி மாறி தரும். அப்படி ஒரு சாபத்தைத்தான் 1984-ம் ஆண்டு தந்தது.

Dooagh என்னும் ஒரு கிராமம் இங்கே உண்டு. அந்த கிரமாத்துக்கு 1984-ம் ஆண்டு வரை ஒரு கடற்கரை இருந்தது. 1984ல் அடித்த ஒரு சூறாவளியில் கடற்கரையில் இருந்த மொத்த மணற்பரப்பும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் அன்று முதல் வெறும் பாறைகளே இருந்தன. தங்களுக்கென இருந்த ஓர் அழகிய கடற்கரையும் இல்லாமல் போய்விட்டதை நினைத்து கிராமவாசிகள் கடந்த 33 ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர். சுற்றுலாவாசிகளுக்கு அது இன்னொரு கடற்கரை. ஆனால், அந்தக் கிராம மக்களுக்கு பல நினைவுகளைத் தரும் ஒன்று அந்தக் கடற்கரை.

2017. சாபம் தந்த அதே இயற்கை வரம் தந்திருக்கிறது. கடந்த 10 நாட்களில் பல டன் மணல் கடற்கரையில் சேர்ந்திருக்கிறது. முன்பிருந்ததை விட அதிக மணல், 300 மீட்டர் நீளத்துக்கு ஒரு புது கடற்கரையையே உருவாக்கியிருக்கிறது. இது Dooagh கிராம மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அச்சீல் தீவுகள்

கடற்கரை - 1984ல்

அச்சீல் தீவுகள்

கடற்கரை - இன்று

படங்கள்: swns.com / Achill Toursim

 

Foundation for Environmental Education என்னும் அமைப்பு கடற்கரைகளை ஆராய்ந்து, அவற்றுக்கு Blue flag ஸ்டேட்டஸ் தருவார்கள். அது அந்தப் பகுதியின் பாதிகாப்பினை உறுதி செய்து, சுற்றுலாவாசிகளுக்கு போட்டிங் போன்ற சேவைகளை கொடுக்க அனுமதிக்கும். Dooagh கிராம மக்கள் அடுத்த ஆண்டு தங்களுக்கு கிடைத்திருக்கும் புது கடற்கரைக்கு ப்ளூ ஃப்ளாக் ஸ்டேட்டஸ் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். மகிழ்ச்சியை கொண்டு வந்திருக்கும் புதிய கடற்கரை, தங்களுக்கு பொருளாதார ரீதியான உதவியையும் செய்து கொடுக்கும் என நம்புகிறார்கள் கிராமவாசிகள்.

இயற்கையை ஒருபோதும் மனிதர்களால் வெல்ல முடியாது என்பதற்கு இன்னோர் உதாரணம் அச்சீல் தீவுகள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

105 வயது மருத்துவரின் இளமை ரகசியம் என்ன?

மருத்துவர் பில் ஃபிராங்க்லேண்டுக்கு 105 வயது.

அவர் இரண்டாம் உலகப்போரில் சண்டையிட்டவர். போர்க்கைதியாக பிடிபட்டு ஜப்பானில் இருந்தவர்.

இன்றும் அவர் மருத்துவராக பணிபுரிகிறார்.

தான் செய்யும் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகளால் தான் தன்னால் இந்த வயதிலும் தொடர்ந்து உழைக்க முடிவதாக கூறுகிறார் அவர்.

இந்த பயிற்சிகளை இவர் தினமும் காலையில் செய்கிறார்.

இவற்றை செய்து முடிக்க இவருக்கு ஒருமணி நேரம் தேவை.

இந்த பயிற்சிகள் அவரது உடற்தசைகளை வலுவாக்கி அவர் நேராக நிற்கவும் நடக்கவும் உதவுகின்றன.

இந்த உடற்பயிற்சிகளே தனது நீண்ட ஆயுளின் ரகசியம் என்கிறார் மருத்துவர் ஃபிராங்லேண்ட்.

அத்தோடு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை என்கிறார் அவர்.

  • தொடங்கியவர்

ராபர்ட் ஹார்விட்ஸ்

 
 
 
 
10_3162143f.jpg
 
 
 

நோபல் பெற்ற அமெரிக்க உயிரியலாளர்

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர் ஹாவர்டு ராபர்ட் ஹார்விட்ஸ் (Howard Robert Horvitz) பிறந்தநாள் இன்று (மே 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் சிகாகோ நகரில் (1947) பிறந்தவர். தந்தை கணக்காளர். பெற்றோர் இருவருமே நன்கு கற்றவர்கள் என்பதால், கல்வியின் மதிப்பை இவருக்குள் ஆழமாக விதைத்தனர். குழந்தையாக இருந்தபோதே, வண்ணத் துப்பூச்சி போன்ற பூச்சிகள் சேகரிப்பில் ஈடுபட்டார். இறந்த உயிரினங்களை வகைப்படுத்துவதிலும் ஈடுபட்டார்.

# சிறு வயதுமுதல் தன்னை அறிவியலில் நாட்டம்கொள்ளச் செய்து, ஒவ்வொரு கட்டத்திலும் உற்சாகமூட்டியதும், பல்வேறு சோதனைகளை தனிப்பட்ட முறையிலும் பள்ளியிலும் மேற்கொள்ளச் செய்ததும் தனது தாய்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

# பள்ளிப் படிப்பை முடித்ததும், மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (எம்ஐடி) சேர்ந்து, கணிதம், பொருளாதாரத்தில் இரு இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். அறிவியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்தாலும் பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்டுவதில் அதிக ஈடுபாடு காட்டினார். வியாபாரம், பத்திரிகை நடத்துவது மட்டுமல்லாமல், பகுதிநேர வேலைகளிலும் ஈடுபட்டார்.

# புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவரை மூலக்கூறு அறிவியல் துறை ஈர்த்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பயின்றார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் சோதனைக்கூடத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.

# எம்ஐடி-யில் உயிரியல் துறைப் பேராசிரியராக பணியில் சேர்ந்ததும், ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தினார். ஒட்டுண்ணி அல்லாத நூற்புழுவை மாதிரி உயிரினமாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இதில் நரம்பணு வளர்ச்சி உட்பட பல்வேறு வளர்ச்சி குறித்து ஆராய்ந்தார்.

# நூற்புழுக்களைக் கொண்டு செல் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களைக் கண்டறிந்து வகைப்படுத்தினார். இதற்காக 2002-ல் சிட்னி பிரென்னர், ஜான் சல்ஸ்டன் ஆகியோருடன் இவருக்கும் கூட்டாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

# மரபியல், மூலக்கூறு உயிரியல், உயிரிவேதியியல், எலெக்ரோ ஃபிசியாலஜி, லேசர் மைக்ரோசர்ஜரி, ஃபார்மகாலஜி ஆகிய களங்களைப் பயன்படுத்தி, நரம்பு மண்டல அமைப்பை மரபணுக்கள் கட்டுப்படுத்துவதையும், நரம்பு மண்டல அமைப்பு, நமது நடத்தையைக் கட்டுப்படுத்துவதையும் ஆராய்ந்தார்.

# பிற ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, நூற்புழுவின் மரபணுவில் உள்ள 100 மைக்ரோ ஆர்என்ஏக்களின் தொகுப்பை வகைப்படுத்தினார். ஹெட்ரோக்ரானிக் மரபு பிறழ்வு, செல் பிரிவு, செல் வளர்ச்சி, செல் வரிசையின் மற்ற அம்சங்கள், சமிக்ஞை கடத்திகள், உருவத் தோற்றம், நரம்பு வளர்ச்சி ஆகியவை தொடர்பாக ஏராளமான நுட்பங்களை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். செல் உயிரிழப்பின் காலகட்டத்தைக் கட்டுப்படுத்தும் காரணிகளை அடையாளம் கண்டார்.

# புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கான சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் நோய் அறிகுறிகளைக் கண்டறியவும் இவரது கண்டுபிடிப்புகள் பயன்படுகின்றன. உயிரி மருத்துவ அறிவியல் கழகத்தின் வில்லே பரிசு, நரம்பணு உயிரியலின் ஸ்பென்சர் விருது, இங்கிலாந்து மரபணுக் கழகத்தின் மெண்டல் பதக்கம், குருபர் அறக்கட்டளையின் மரபணுப் பரிசு உட்பட ஏராளமான பரிசுகள், பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

# தனியாகவும், பிற அறிஞர்களுடன் இணைந்தும் பல நூல்களை எழுதியுள்ளார். 250-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது எம்ஐடி உயிரியல் துறையில் கவுரவப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். உயிரியல் ஆராய்ச்சியில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள ஹாவர்டு ராபர்ட் ஹார்விட்ஸ் இன்று 70 வயதை நிறைவுசெய்கிறார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

உயிரை வாட்டும் தொடர் தலைவலிக்கு என்ன மருந்து?
========================================
தொடர் தலைவலி என்பது பலருக்கு ஒரு தீராத பிரச்சினை.

வலியை தற்காலிகமாகவேனும் தவிர்த்துக்கொள்ள அவர்கள் எதுவும் செய்ய தயாராக இருப்பார்கள்.

சிலர் இதனால் தற்கொலை செய்துகொள்வதும் உண்டு. தலையை சுவரில் இடிப்பது, தலையில் பொருட்களை அடிப்பது எல்லாம் பலனில்லாத வழிகள்.

அதற்கு ஒரு வழிகாண முயல்கிறது லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

285 தொன் எடையுள்ள விமானத்தை கட்டி இழுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்த கார்

உலகின் மிகப் பெரிய விமான ரகத்தைச் சேர்ந்த எயார்பஸ் ஏ380 ரக விமானமொன்றை கட்டி இழுத்ததன் மூலம் “போர்ஷ” ரக காரொன்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள சார்ள்ஸ் டி கோல் விமான நிலையத்தில் அண்மையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

AirFramce (5)

  285 தொன் எடையுடைய எயார் பஸ் ஏ 380 ரக விமானமொன்றை  Porsche Caynne S Diesel ரக ஒன்று 42 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றது. இது புதிய உலக சாதனையாகும். 

இதுவரை 114 தொன் எடையுடைய கார் ஒன்று கட்டி இழுத்தமையே கின்னஸ் உலக சாதனையாக இருந்தது.
எயார் பஸ் நிறுவனமானது, சார்ள்ஸ் டி கோல் விமான நிலையத்திலுள்ள தனது பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 10 எயார்பஸ் ஏ 380 ரக விமானங்களில் ஒன்றை இத்திட்டத்துக்காகப் பயன்படுத்தியிருந்தது.

AirFramce (2)

4.8 மீற்றர் நீளமான காரும் 73 மீற்றர் நீளமான விமானமும் விசேட இணைப்பதற்காக விசேட இணைப்பு  
“போர்ஷ” நிறுவனத்தின் தொழில்நுட்பவியலாளரான ரிச்சர்ட் பெய்ன் மேற்படி காரை செலுத்தினார்.

 

இச்சாதனை தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த கார் சாதனையை நிகழ்த்திவிட்டது. நான் மிக நிம்மதியடைகிறேன். பொதுவாக, எமது கார்களின் வரம்புக்கு மீறிய அளவிலான இது போன்ற சோதனைகளை நாம் மேற்கொள்வதில்லை.

AirFramce (1)

இக்கார் மிக சிறப்பாக செயற்படுகிறது. இக்காரை நாம் லண்டனிலிருந்து இங்கு (பாரிஸுக்கு) செலுத்திவந்தோம். இப்போது எயார் பஸ் விமானத்தை கட்டி இழுத்த இக்காரை நான் எனது வீட்டுக்கு செலுத்திச் செல்லவுள்ளேன்” என்றார்.

“எமது வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதைவிட சற்று அதிகமாக எமது கார்கள் செல்லக்கூடியவை. அவை உறுதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இச்சாதனைக்காக தமது அழகிய விமானமொன்றை அனுமதித்த எயார் பஸ் நிறுவனத்தின் தாராள மனப்பான்மைக்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.

AirFramce (3)

http://metronews.lk

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 09
 
 

article_1431142527-Ash300.jpeg1502; கிறிஸ்டோபர் கொலம்பஸ் நான்காவது தடவையாக ஸ்பெய்னிலிருந்து புதிய உலகத்தை நோக்கி புறப்பட்டார்.

1874: குதிரைகளால் இழுக்கப்படும் பஸ் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது..

1877: பெருநாட்டில் 8.8 ரிச்டர் அளவுடைய பூகம்பம் தாக்கியதால் 3541 பேர் பலி.

1901: அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்போர்னில் திறந்துவைக்கப்பட்டது.

1927: கான்பெரா நகரில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.

1936: எத்தியோப்பியாவை இத்தாலி தன்னுடன் இணைத்துக்கொண்டது.

1955: நேட்டோ அமைப்பில் மேற்கு ஜேர்மனி இணைந்தது.

1970: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக வெள்ளை மாளிகை முன்னால் சுமார் ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

1980: புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல், பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததுடன் 35பேர் கொல்லப்பட்டனர்.

1985: காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

1987: போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183பேர் கொல்லப்பட்டனர்.

1988: கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

2001: கானா நாட்டில் கால்பந்தாட்டப்போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி 129 பேர் பலியாகினர்.

2002: ரஷ்யாவின் கஸ்பிஸ்க் நகரில் குண்டுவெடிப்பினால் 43 பேர் பலி.

2004: ரஷ்யாவின் செச்சினிய பிராந்திய ஜனாதிபதி அஹமட் கடிரோவ் குண்டுவெடிப்பொன்றில் பலியானார்.

2005: பிரிட்டனின் தாவர ஆலையில் அணுக் கசிவு

2010: எரிமலை சாம்பல் கசிவு காரணமாக ஐரோப்பாவுக்கான நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் இரத்து.

2012: ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆதரவு தெரிவித்தார்.

.tamilmirror.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
'இறைபக்தி நிரந்தரமானது'
 
 

article_1494222481-religion.jpgநாவுக்குத் தருகின்ற எப்பேர்ப்பட்ட அமிர்தத்தின் சுவையைவிட மனதுக்குத் தரும் சுவையே மேலானது.

நெஞ்சத்தை இலேசாக்கி, இறையுணர்வை மேல்நோக்கும்போது, ஏற்படும் பக்திச் சுவையே, ஆன்மா அடையும் மேன்மைமிகு நறுஞ்சுவையாகும். 

நாங்கள் உண்ணும் உணவை வாயனூடாகச் சாப்பிடும்போது, எங்கள் நாக்கு சுவையறிந்து கொள்கின்றது. இவை எல்லாமே ஒன்றரை அல்லது இரண்டு அங்குல நீளத்துக்குள்தான். அவை கடந்து விட்டதும் சுவையின் காலமும் கரைந்து விடுகின்றது.

எவ்வளவு நேரத்துக்குச் சாப்பிடுகின்றோமோ, அந்தளவு நேரத்தின் பின்னர் சுவையை நம்மால் உணரமுடியாது. 

ஆனால், இறைபக்தி நிரந்தரமானது. பக்தி வௌ்ளமென நெஞ்சத்தில் உள்நின்றால், அதனூடு சஞ்சாரம் செய்யும் பக்தனின் நிலை, சொல்லொண்ணா பரவச நிலையன்றோ!  

இதனையே அடியார்கள், பக்திச் சுவையெனச் சொன்னார்கள். பக்தி சுத்தமானது; அத்தனையையும் தரும்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக சென்சேஷன் ஜஸ்டின் பீபரின் வாழ்க்கை ஆரம்பித்தது எங்கே தெரியுமா? #JustinBieber

 

‘அம்மா... அம்மா... எனக்கு டிஸ்னி லேண்ட் போகணும்னு ஆசையா இருக்கு. கூட்டிட்டுப்போறீங்களா?' என்று எல்லா பிள்ளைகளும் கேட்பார்கள்... அடம்பிடிப்பார்கள். ஆனால் "நீங்க கவலைப்படாதீங்கம்மா… உங்ககிட்ட காசு இல்லைன்னா என்ன... நான் பணம் சம்பாதிச்சு டிஸ்னி லேண்டுக்கு நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து போலாம்" என்றான் அந்த ஏழு வயதுப் பையன்.

ஜஸ்டின் 

"நீ எப்படி பணம் சம்பாதிக்கப்போற?" என்று அம்மா கேட்டதும், வேக வேகமா கிட்டாரை எடுத்துக்கொண்டு ரோட்டில் நின்று பாடல் பாடத் தொடங்கினான். அந்தப் பாடலைக் கேட்டு பாதசாரிகள் எல்லாரும் காசு போடத் தொடங்கினார்கள்.

இப்படித்தான் ஆரம்பித்தது ஜஸ்டின் பீபருடைய இசைப் பயணம். சாலையோரத்தில் பாடினார் என்றதும் சிலர் முகம் சுழிக்கக் கூடும். ஆனால், ஜஸ்டின் அப்படி நினைக்கவில்லை. தன்னுடைய இசைத்திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம். இதை விரும்பி கேட்டவர்கள் பணம் தந்தார்கள். கிட்டத்தட்ட 3,000 டாலர்கள் சேர்ந்தது. இதை வைத்துக்கொண்டு ஜஸ்டினும் அவரது அம்மா பாட்ரீசியாவும் டிஸ்னி லண்டனுக்குச் சென்று வந்தனர்.

"இதுதான் எங்களுடைய முதல் விடுமுறைப் பயணம்" என்கிறார் பாட்ரீசியா.

ஜஸ்டின் பீபர் பிறந்தபோது, அவருடைய அம்மா பாட்ரீசியாவுக்கு வயது பதினெட்டு. அந்த இளம் வயதில், திருமணம் செய்துகொள்ளாமலே குழந்தை பெற்றுக்கொண்டுவிட்டார். ஜெரெமி ஜாக் பீபர் என்பவர்தான் ஜஸ்டினின் தந்தை. ஆனால், அவர் பாட்ரீசியாவைக் கடைசி வரை மணந்துகொள்ளவில்லை. ஜஸ்டினுக்கு மூன்று வயதாகியிருக்கும்போதே அவர் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். பல சிரமங்களுக்கிடையே தனியாளாக ஜஸ்டினை வளர்த்தது அவருடைய தாய்தான்.

`என் தாய் நிறைய தவறுசெய்திருக்கிறார்’ என்று ஜஸ்டினே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார், ‘இளவயதில் அவர் புகைத்திருக்கிறார்; மது அருந்தியிருக்கிறார்; போதைப் பொருள்களுக்குக்கூட அடிமையாகியிருக்கிறார். இவையெல்லாம் நான் பிறக்கும் வரைதான். நான் பிறந்தவுடன், அவர் எல்லா கெட்டபழக்கங்களையும் விட்டுவிட்டார்’ என்கிறார் ஜஸ்டின். ‘எனக்காக அவர் மாறிவிட்டார். எனக்காகவே வாழத் தொடங்கிவிட்டார்.’ இதையெல்லாம் பாட்ரீசியாவே ஜஸ்டினிடம் சொல்லியிருக்கிறாராம், ‘மகனே, உனக்கும் சேர்த்து நான் நிறைய கெட்டது செய்துவிட்டேன். ஆகவே, நீ எந்தக் கெட்டபழக்கத்திலும் ஈடுபட வேண்டாம்’ என்றாராம் அவர்.

பதினெட்டு வயதில் பிள்ளை பெற்றுக்கொண்ட பாட்ரீசியாவுக்கு, ஜஸ்டின்தான் எல்லாமே. பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில்கூட, தன் மகனுக்கு எல்லாவற்றையும் பெற்றுத்தர வேண்டும் என்று அவருக்கு தீராத ஆசை.

லண்டனில் பிறந்த ஜஸ்டின் வளர்ந்தது ஸ்ட்ராட்ஃபோர்டில். சிறுவயதிலிருந்தே மிகுந்த இசை ஆர்வத்தோடு இருந்த இவன், பியானோ, கிடார், ட்ரம்பெட் ஆகியவற்றை தானே வாசிக்கக் கற்றுக்கொண்டான். வீட்டில் ஓய்வு நேரங்களில் எல்லாம் வாயில் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டிருப்பான்.

தன் மகனின் இசைத்திறமையைக் கண்டு பாட்ரீசியாவுக்குப் பெருமை. அவன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளை எல்லாம் வீடியோ படம் எடுத்துவைத்தார். அதைத் தனது நண்பர்கள், உறவினர்களிடம் யூடியூப் மூலம் பகிர்ந்துகொண்டார்.

இப்படி ஜஸ்டினின் மேடை நிகழ்ச்சிகள், சாலையோர நிகழ்ச்சிகள் யூடியூபில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்திருந்தன. அவனுடைய குரலும் இசையும் பலருக்குப் பிடித்திருந்தன. இந்த நேரத்தில், ஸ்கூட்டர் ப்ரௌன் என்றொருவர் இணையத்தில் இன்னொரு பாடகரைப் பற்றித் தேடிக்கொண்டிருந்தார். அப்போது எதேச்சையாக ஜஸ்டின் பீபரின் ஒரு வீடியோவை க்ளிக் செய்துவிட்டார்.

ஜஸ்டினின் குரலைக் கேட்ட ப்ரௌன் அசந்துபோனார். ‘யார் இந்தப் பையன்? இந்தப் பையனைச் சரியாக வழிநடத்தினால் பெரிய ஆளாக வருவான்’ என்று ப்ரௌனுக்குத் தோன்றியது. அவனைத் தேட ஆரம்பித்தார். 

ப்ரௌன், பிரபலத்தின் பின்னே ஓடுகிறவர் அல்ல; திறமையுள்ள இளைஞர்களைக் கண்டுபிடித்து வளர்த்து, அவர்களின் வெற்றிக்கு வழிவகுப்பவர். அவருடைய முதலீடும் இதுதான்.

ஜஸ்டின் எந்தக் கட்டடத்துக்கு முன்னே வாசிக்கிறான் என்று வீடியோவைப் பார்த்துக் கண்டுபிடித்தார் ப்ரௌன், அங்கிருந்து நூல் பிடித்துச் சென்று  அவனுடைய பள்ளியைக் கண்டுபிடித்தார், அந்தப் பள்ளியின் பொறுப்பாளர்களிடம் விசாரித்து எப்படியோ பாட்ரீசியாவைச் சந்தித்தார்.

ஜஸ்டின்

‘உங்கள் மகனுக்கு அருமையான எதிர்காலம் இருக்கிறது, உலகமே அவனுடைய பாடலைக் கேட்கப்போகிறது. நான் அவனைக் கவனித்துக்கொள்கிறேன். என்னோடு அனுப்பிவையுங்கள். நல்ல இசை நிறுவனமாகப் பார்த்து அவனைச் சேர்த்துவிடவேண்டியது என்னுடைய பொறுப்பு’ என்றார்.

முதலில் தயங்கிய பட்ரீசியா, பிறகு எப்படியோ மனம் மாறி ஜஸ்டினை ப்ரௌன் வசம் ஒப்படைத்தார். ப்ரௌனும் பல இசை நிறுவனங்களுக்கு ஜஸ்டினை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார். ஆனால், எந்த நிறுவனமும் ஜஸ்டினை நம்பி வாய்ப்புகள் தரவில்லை. காரணம், எந்த ஒரு முன் அனுபவமும் கிடையாது. பெயர் தெரியா கச்சேரிகள், தெருவோர யூடியூப் பாடல்கள் அவ்வளவே.

'இப்படி வாய்ப்பு தரா நிறுவனங்களை நம்பி எந்தவிதப் பயனும் இல்லை. நாம் ஏன் கையில் இருக்கும் பணத்தைக்கொண்டு பாடல் வீடியோ ஒன்றை உருவாக்கக் கூடாது? நமக்கு மிகப்பெரிய கேமரா தேவையில்லை, அதிநவீன தொழில்நுட்பம் தேவையில்லை. ஜஸ்டின் மிகப்பெரிய திறமைசாலி. அவனுடைய பாடல்கள் மக்களுக்குப் பிடித்தால் போதும். மற்ற அனைத்தும் தானாகவே நடக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருந்தார். ஜஸ்டினின் யூடியூப் பாடல்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் மக்களை ஈர்த்தன. இவருடைய யூடியூப் ரசிகர்கள் வட்டம் படிப்படியாக அதிகரிக்க அதிகரிக்க, இசை நிறுவனங்கள் இவரைத் திரும்பிப் பார்த்தன. 'தி ஐலண்ட் டெஃப் ஜாம் மியூசிக் குரூப் ஜஸ்டினைச் சரியாக அடையாளம் கண்டுகொண்டது. 2009-ம் ஆண்டில் ஜஸ்டினின் முதல் சிங்கிள் பாடல் 'ஒன் டைம்' வெளியானது. அப்போது அவருக்கு வயது 15. இன்னும் உடையாத மென்மையான குரலில் உலகத்தையே தன்வசப்படுத்தினான். இவனது வசீகரக் குரலைக் கேட்ட ரசிகர்கள் மத்தியில் ஜஸ்டினின் முதல் ஆல்பத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமானது.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஜஸ்டினுடைய முதல் ஆல்பம் 'மை வேர்ல்டு' வெளியானது. அதன் பிறகு வந்த அவருடைய எல்லா ஆல்பம்களுமே மிகப்பெரிய வெற்றிதான். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல் மக்கள் அவருடைய குரலைக் கொண்டாடினார்கள். குறிப்பாக, இளைஞர்கள். அதிலும் குறிப்பாக இளம்பெண்கள் இவரது இசையையும் நடனத்தையும் கண்டு கிறங்கினார்கள். பல  மில்லியன் டாலர் ஹிட்டுகளை அடித்து கிடுகிடுவென டாப் சிங்கர்கள் பட்டியலில் இடம்பிடித்தான் ஜஸ்டின். உலக இசை வரிசையில் முக்கியப்புள்ளியாகவும் வலைதளங்களில் அதிகமாகத் தேடப்பட்டு வரும் பிரபலமானான் ஜஸ்டின். 

மே 10-ந்தேதி அன்று மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பநிலை டிக்கெட் ரூபாய் 4,000. ஆன்லைனில் இ.எம்.ஐ-க்குக்கூட  டிக்கெட் கிடைக்கிறது என்றால், எவ்வளவு டிமாண்ட் ஜஸ்டினுக்கு என்று சற்று யோசித்துபாருங்கள். சுமார் 4,000 பணியாளர்கள் இதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களாகவே வலைதளங்களில் ஜஸ்டின் எந்த ஹோட்டலில் தங்கப்போகிறார், எந்த இந்திய உணவைச் சாப்பிடப்போகிறார், எத்தனை நாள் இங்கு இருக்கப்போகிறார் என்பது போன்ற செய்திகள் வைரலாகப் பரவிவருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்பைக்கொண்ட இசை ப்ரியர்களுக்கு இது ஒரு மாபெரும் விருந்தாக அமையப்போகிறது என்றே கூறலாம். வயதுக்கேற்ற முதிர்ச்சியும் திறமையும் அனுபவங்களும் வழிகாட்ட, அவரின் சாதனைகள் தொடர வாழ்த்துகள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கலைஞனுக்கெலாம் கலைஞன்... இளைஞனுக்கெல்லாம் இளைஞன்... நம்ம டி.ராஜேந்தர்! #HBDTRajendar

 

டி.ராஜேந்தர் என்கிற பெயரைக் கேட்டதும் சட்டென உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? தாடி, ரைமிங் டயலாக், அவரைப் பற்றிய மீம்ஸ், கிண்டலான வீடியோ, வாடா என் மச்சி, வாயிலேயே பீட்பாக்ஸ் ஸ்டைலில் மியூசிக் போடுவது, புலி ஆடியோ லான்ச். இதில் நிறைய பேருக்கு மீம்ஸும், ட்ரோல்ஸும்தான் அதிகம் நினைவுக்கு வந்திருக்கும். எழுதும் எனக்கே கூட அதுதான் வந்தது. இதை எல்லாம் தாண்டி தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நபர் அவர் என்பதுதான் நிஜம். சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் நடிப்பு, இசை, பாடல், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகலத்திலும், அதில் உச்சம் தொட்டவர்களுக்கு, வந்த உடனேயே டஃப் கொடுத்தவர் டி.ஆர். அந்த அட்டகாசமான டி.ஆர், அட்ராக்ட் பண்ற டி.ஆர், ஆச்சர்யப்படுத்தும் டி.ஆருக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றிய கேலி, கிண்டல் எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு சினிமாவில் அவரின் உழைப்பைப் பார்த்தால், அது உங்களை இன்ஸ்பையர் செய்யும். டி.ஆரின் சினிமா பரிமாணங்களில் இருந்தே அதைப் பற்றிப் பார்க்கலாம்.

ராஜேந்தர்

கதாசிரியர்:

டி.ராஜேந்தருக்கு முதல் படம் 'ஒரு தலை ராகம்'. படத்தை ஈ.எம்.இப்ரஹிம் இயக்க, கதாசிரியர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மூன்றையும் ராஜேந்தர் செய்தார். 80களில் ரஜினி, கமல் என இரு பெரும் நட்சத்திரங்கள் மாறிமாறி ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கூடவே இன்னும் சின்னச் சின்ன நடிகர்களுக்கும் ஒரு கூட்டம் இருந்தது. இந்த சூழலில் புதுமுகம் ராஜா நடித்த 'ஒரு தலை ராகம்' வெளியானது. ஆரம்பத்தில் சரியாக வரவேற்பைப் பெறாத படம் கவனம் பெற்ற பின் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடி ஹிட்டானது. காரணம் அதுவரை வந்த படங்களில் இல்லாத ஒன்றை இந்தப் படத்தின் கதையில் வைத்திருந்தார் டி.ஆர். கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டினாலும், படத்திலிருந்த எமோஷன்ஸ் ரசிகர்களைக் கவர்ந்தது.

இயக்குநர்: 

ராஜேந்தர்

கதாசிரியரிலிருந்து இயக்குநராக டி.ஆர் வந்த பொழுது, இங்கே இருந்த இயக்குநர்கள் எடுக்காத கதைகளே இல்லை என்கிற நிலை. காரணம் ஸ்ரீதர், எஸ்.பி.முத்துராமன், பாலச்சந்தர், மகேந்திரன், பாரதிராஜா எனப் பல இயக்குநர்கள் வெவேறு களங்களில் கலக்கிக் கொண்டிருந்த காலம் அது. புதிதாக யார் வந்தாலும் இதிலிருந்து விலகி என்ன செய்யப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதே நேரத்தில்தான் சரியாக பாக்யராஜ் 'சுவரில்லா சித்திரங்கள்' முடித்து இரண்டாவது படமாக 'ஒரு கை ஓசை' இயக்கிக் கொண்டிருந்தார். பாக்யராஜும் டி.ஆரின் இன்னொரு வெர்ஷன்தான். இத்தனைப் போட்டிகளையும் மீறி தன் ட்ரேட் மார்கை நிறுவினார் டி.ஆர். ஒவ்வொரு படத்திலும் ஒரே பேர்ட்டனாக இருந்தாலும் குடும்பங்களைத் திருப்தி செய்யும் சென்டிமெண்ட், இயக்குநராக டி.ஆரை ஹிட்டாக்கியது. கூடவே பாடல்களைப் படமாக்க அவர் போடும் செட்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.

வசனகர்த்தா:

இங்கும் டி.ஆருக்கு சென்டிமென்ட்தான் கை கொடுத்தது. பல ரைமிங் வசனங்களையும் கடந்து அதுதான் டி.ஆரை பலரிடமும் கொண்டு சேர்த்தது. காதலோ, தங்கை சென்டிமென்டோ, சண்டைக்கு முன்னாடி பேசும் வசனமோ எதுவாக இருந்தாலும் டி.ஆரின் அந்த ரைமிங் டச்சும் வேற லெவலில் இருக்கும். "மரம் வெயில்ல காஞ்சாதான், கீழ இருக்கவங்களுக்கு நிழல் கிடைக்கும். குடை மழைல நனைஞ்சாதான் அதைப் பிடிச்சிட்டுப் போற ஆள் நனையாம போக முடியும். அதைப் போல உனக்காக நான் கஷ்டப்படறதில் எனக்கு ஒரு சந்தோஷம்" என அவர் திரையில் பேச...  அன்றைக்கு இதைப் பார்த்த எல்லோரையும் கலங்க வைத்திருப்பார் டி.ஆர். அவரின் படங்களை தியேட்டரில் பார்ப்பது போல, வசனக் கேசட்டாக வாங்கி ரீப்பீட் மோடில் கேட்டு ரசித்து, உருகும் ரசிகர்களும் ஏராளம். அது யூ-ட்யூப் வரை நீண்டிருப்பது தான் டி.ஆரின் பவர்.

பாடலாசிரியர் - பாடகர் - இசையமைப்பாளர்:

TR

முன்பு சொன்ன அதே தான். அதற்கு முன்பு இருந்த இசையமைப்பாளர்கள் ரசிகர்களை ஒரு ட்யூனிங்கில் வைத்து பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் எதிர்பார்க்காதது டி.ஆரின் இசையமைப்பாளர் என்ட்ரி, அதுவும் முதல் படத்திலேயே பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்திருந்தது சின்ன சலசலப்பை உண்டாக்கியது. டி.ஆரின் டைம் ஸ்பேன், 80ல் ஆரம்பித்து 90களுக்கு முன் முடிந்துவிடுகிறது என வைத்துக்கொள்வோம். அந்த பத்து வருட இடைவெளியில் படங்களை இயக்கிக் கொண்டு, சில படங்களுக்கு பாடல் எழுதி இசையமைப்பதையும் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பாட்டும் பட்டி தொட்டியின் ஒவ்வொரு ரேடியோ பெட்டியிலும் பலமுறை ஒலித்தது. அதிலும், ஒரு பொன்மானை நான் காண... பாடல் எல்லாம் ரசனையின் உச்சம். டி.ஆர் பாடும் பாடல்கள் பாடுவதற்கும் சுலபம் என்பதால்... "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி..." என சோகத்தை பிழிந்து ரசம் வைப்பார்கள் ரசிகர்கள்.

நடிகர்:

முகம் முழுக்க மண்டிக்கிடக்கும் தாடி, பொசு பொசுவென சிலுப்பிக் கொள்ளும் முடி என ஹீரோவுக்கென எந்தப் பெரிய அடையாளமும் இல்லாமல் வந்து ஹீரோவாகவும் ஜெயித்ததில் இருக்கிறது அவரின் வெற்றி. ஒரு படம், இரண்டு படம் இல்லை கடைசியாக நடித்த கவண் வரை அதே தோற்றம்தான். தன் படத்தின் தலைப்பு ஒன்பது எழுத்தில் இருக்க வேண்டும் என்பது போல, தன் நடிப்புக்கும் சில கட்டுப்பாடுகள் வைத்திருந்தார் டி.ஆர். பெண்களைத் தொட்டு நடிக்கக் கூடாது என்பது அதில் முக்கியமானது. அது பலருக்கும் பிடித்திருந்தது. அப்போது இருந்த ஹீரோக்கள் படங்களுக்கு செம டஃப் கொடுத்து நடித்தார் டி.ஆர். சில ஹீரோக்கள் டி.ஆர் படம் வருகிறதா எனப் பார்த்து வெளியிட்ட விஷயங்கள் கூட நடந்திருக்கிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, 'அட பொண்ணான மனசே என பாடினால், அதே போல் தாடி வளர்த்து தாளம் தட்டுவதும், சூலக் கருப்பே அடிடா, இத சொல்லிக்கிட்டே புடிடா என டி.ஆர் அடித்தால், அதேபோல ஸ்டெப் போட்டு சண்டை பிடிப்பதுமாய் ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது. 

 
 

சினிமாவில் முடிந்தவரை எல்லா சாத்தியங்களையும் செய்து பார்ப்போம் என முயன்றவர் ஒளிப்பதிவு, தயாரிப்பு, திரைப்பட விநியோகம் ஆகியவைகளையும் ஒரு கைபார்த்தார். வீராசாமி எடுத்தவர் தானே என்று டீல் செய்தாலும்,  மீம்ஸ் போட்டாலும் தன் வெற்றியாலும், உழைப்பாலும் "இந்த டி.ஆர் வேற லெவல்" என்பதை முன்பே நிரூபித்தவர் என்பது மட்டும் உண்மை.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

நார்வேயில் 2200 கலைமான்களைக் கொல்ல முடிவு!

 

Norway deer killing

மான் இனத்துக்கிடையே பரவும் தொற்று நோயான 'க்ரோனிக் வேஸ்டிங் டிஸீஸ்', அமெரிக்காவில் வெகுவாகப் பரவியிருந்தது. மான்களின் எச்சில்மூலம் அவற்றுக்குள் பரவக்கூடிய இந்நோய் தாக்கினால், கண்டிப்பாக மரணம் உறுதி. தற்போது, இந்த நோய் நார்வேயில் உள்ள காட்டு கலைமான்களிடத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, போர்க்கால நடவடிக்கையாக, நார்வேயின் நோர்ஜெல்லா மலைப்பகுதியில் இருக்கும் 2,200 கலைமான்களைக் கொல்வதற்கு அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. 2,200 என்பது நார்வேயின் காட்டுக் கலைமான்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம். கடந்த ஆண்டின் இறுதியில், மூன்று கலைமான்களும், இரண்டு மூஸ் மான்களும் இந்த நோய்த் தாக்குதலால் உயிர் இழந்தன. இதைத் தொடர்ந்து, நார்வே அரசு மூன்று குழுக்களை அமைத்து நோயைத் தடுப்பதுகுறித்து ஆலோசித்தது. மூன்று குழுக்களுமே மேற்கண்ட ஆலோசனையையே வழங்கியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

''இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்படும் என்றாலும் எங்களுக்கு வேறு வழியில்லை. தற்போது அழிக்க இருக்கும் கலைமான்களின் எண்ணிக்கையைவிட, அதிக கலைமான்களை விரைவில் உருவாக்கும் திட்டங்களும் எங்களிடம் உள்ளது''  என்று அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர், ஜோன் ஜார்ஜ் டேல் குறிப்பிட்டுள்ளார். 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

காரின் ஒலியெழுப்பியதால் நடந்த களேபரம்! (காணொளி)

 

 

தமது காருக்குப் பின்னால் இருந்தபடி தொடர்ச்சியாக ஒலியெழுப்பிய வாகனச் சாரதியைத் தாக்க முற்பட்ட இருவரை, பலசாலி சாரதியொருவர் அடித்து வீழ்த்திய காட்சி இணையத்தில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

இடம் குறிப்பிடப்படாத இந்தக் காட்சியில், வாகனம் ஒன்று, பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விடாதபடி வீதியை மறித்து நிற்கிறது. இதனால், அதன் பின்னால் இருந்த வாகனத்தின் சாரதி, தொடர்ச்சியாக ஒலியெழுப்பினார்.

கோபமுற்ற முதல் வாகனத்தின் சாரதி, காரை விட்டிறங்கி பேஸ்போல் மட்டையொன்றை எடுத்துக்கொண்டு சென்று பின்னால் நின்ற காரின் சாரதியை கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், கையில் இருந்த மட்டையால் காரைத் தாக்கவும் செய்தார்.

அதுவரை பொறுத்துக்கொண்ட பின்னின்ற வாகனத்தின் சாரதி, வாகனத்தை விட்டிறங்கி ஒரே குத்தில் முன்னின்ற வாகனச் சாரதியை வீழ்த்தினார். இதைக் கண்டு முதல் காரில் இருந்த மற்றொருவர் இறங்கி வந்து பின்னால் வந்த காரின் சாரதியைத் தாக்கினார். ஆனால், கொஞ்சமும் சளைக்காமல் இரண்டாவது நபரையும் தாக்கி வீழ்த்திவிட்டு தனது காரில் ஏறிச் சென்றார்.

இந்தக் காணொளி, 2 இலட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

கலவரத்தின்போது வயலின் வாசித்த வாலிபர்!

வெனிசுலாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுக் கலவரத்தின்போது, போலீஸ் தாக்குதலையும் பொருட்படுத்தாமல், இளைஞர் ஒருவர் வயலின் வாசிக்கும் காட்சிகள் வைரலாகிவருகின்றன.

வெனிசுலா

வெனிசுலாவில், அதிபர் நிக்கோலஸ் மடுராவின் ஆட்சிக்கு எதிராக, உள்நாட்டுக் கலவரங்கள் சில நாள்களாகவே நடந்துவருகின்றன. இதில், பல அப்பாவி மக்கள் உயிரிழந்துவருகின்றனர். மடுரா பதவி விலக வேண்டும் எனவும் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெனிசுலாவில் தினமும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் காரகஸ்ஸில் நடைபெற்ற கலவரத்தின்போது, இளைஞர் ஒருவர் வயலின் வாசிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸார் பெல்லட் குண்டுகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசுகையில், வெனிசுலா தேசியக்கொடி வரையப்பட்ட தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, வெனிசுலா தேசிய கீதத்தை வயலினில்  வாசித்துவருகிறார் இந்த இளைஞர். பதற்றமான ஒரு சூழலில், நிதானமாக அவர் வயலின் வாசிக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

சிவப்புக் கம்பளத்தில் சங்கமித்ரா அணி !

இயக்குநர் சுந்தர் .சி பிரமாண்டமாக இயக்கிக்கொண்டிருக்கும் படம், 'சங்கமித்ரா'. இந்தப் படத்தில், 8-ம் நூற்றாண்டின் இளவரசியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துவருகிறார். மேலும், நடிகர் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியும் நடிக்கிறார்கள்.

Shruti-6_12242.jpg

இந்தப் படத்தில் நடிப்பதற்காக, லண்டனில் கத்திச்சண்டை கற்று வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் 70-வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், 'சங்கமித்ரா' படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'இந்த நிகழ்ச்சியின்மூலம் சர்வதேசப் பார்வையாளர்களைப் பார்ப்பதில் பெருமைப்படுகிறேன். என் வாழ்வில் இந்த நாளுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் முரளியுடன் நான் ஏற்கும் இந்தப் பயணம் மறக்க முடியாத பயணம்' என்று தெரிவித்துள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் உள்ள களஉறவுகளும் தங்களுக்கு தெரிந்த கத்திசண்டையை ஸ்ருதிக்கு கற்று கொடுக்குமாறு வேண்டுகின்றேன்.

31 minutes ago, நவீனன் said:

சிவப்புக் கம்பளத்தில் சங்கமித்ரா அணி !

இயக்குநர் சுந்தர் .சி பிரமாண்டமாக இயக்கிக்கொண்டிருக்கும் படம், 'சங்கமித்ரா'. இந்தப் படத்தில், 8-ம் நூற்றாண்டின் இளவரசியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துவருகிறார். மேலும், நடிகர் ஆர்யா மற்றும் ஜெயம் ரவியும் நடிக்கிறார்கள்.

Shruti-6_12242.jpg

இந்தப் படத்தில் நடிப்பதற்காக, லண்டனில் கத்திச்சண்டை கற்று வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் 70-வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், 'சங்கமித்ரா' படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'இந்த நிகழ்ச்சியின்மூலம் சர்வதேசப் பார்வையாளர்களைப் பார்ப்பதில் பெருமைப்படுகிறேன். என் வாழ்வில் இந்த நாளுக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். இயக்குநர் சுந்தர்.சி மற்றும் தயாரிப்பாளர் முரளியுடன் நான் ஏற்கும் இந்தப் பயணம் மறக்க முடியாத பயணம்' என்று தெரிவித்துள்ளார்.

 

 

லண்டனில் உள்ள களஉறவுகளும் தங்களுக்கு தெரிந்த கத்திசண்டையை ஸ்ருதிக்கு கற்று கொடுக்குமாறு வேண்டுகின்றேன்.

  • தொடங்கியவர்

இப்படி ஒரு விருந்தாளி உங்க சமையலறையை எட்டிப் பார்த்தால் என்ன செய்வீங்க?

 

அமெரிக்காவின் அவான் நகரத்தில் வசிக்கும் சார்லி வைட்னி, தன் குடும்பத்தினருக்காக ’சாக்லேட் ப்ரௌனீஸ்’ (brownies) செய்து கொண்டிருந்தார். சார்லியின் வீடு முழுவதும் ப்ரௌனீஸின் மணம் பரவிக்கொண்டிருந்தது.

சமையலறை ஜன்னலை யாரோ தட்டுவதுபோன்று சார்லி உணர்ந்ததால், திரும்பிப் பார்த்தார். கறுப்பு நிற கரடி ஒன்று, கண்ணாடி ஜன்னல் மீது ஏறி பாவமாக ப்ரௌனீஸை நோட்டமிட்டுக்கொண்டிருந்தது.

bear
 

இந்தக் காட்சி, சார்லியை ஒரு நிமிடம் பயத்தில் நிலைகுலையச் செய்தாலும், ஒரு சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு, வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். வனத்துறையினர் வந்து கரடியை மீட்க, அரை மணி நேரம் ஆகிவிட்டது.

bear
 

அரைமணி நேரமும் அந்தக் கரடி, கண்ணாடி ஜன்னல் மீது தன் கால்களை வைத்துக்கொண்டு ஏக்கத்துடன் ப்ரௌனியை நோட்டமிட்டுக் கொண்டே இருந்துள்ளது. அதைப் புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் சார்லி. புகைப்படம் வைரலாகிவிட்டது. ஆனால், கடைசிவரை அந்தக் கரடிக்கு ப்ரௌனீஸ் கொடுத்தாரா இல்லையா என்பதை சார்லி கூறவேயில்லை!

beer

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அதிக கார்பன் - டை- ஆக்ஸைடை வெளியிடும் அலாஸ்கா மண்!

 

Alaska

அமெரிக்காவின் அலாஸ்காவில் குளிர்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வழக்கமான சுழற்சியின் அடிப்படையில், இந்தச் சமயத்தில் அலாஸ்கா மண் முழுவதும் உறைநிலையை அடைந்திருக்க வேண்டும். ஆனால், எப்போதும் இல்லாத வகையில் மண் இன்னும் உறையாமலேயே இருக்கிறது. மேலும், அந்த மண்ணில் இருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலான கார்பன் - டை - ஆக்ஸைடு வெளியேறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

1975-ம் ஆண்டில் இருந்து 2015-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தப் பகுதிகளில் அக்டோபர் - டிசம்பர் வரையிலான மாதங்களில் வெளியேற்றப்படும் கார்பன் - டை - ஆக்ஸைடின் அளவு, 70 சதவிகிதம் வரை கூடியிருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.  40 ஆண்டுகளுக்கு முன்பு, மண் ஒரு மாத காலத்திலேயே உறைநிலைக்குச் சென்றுவிடும். தற்போது, மூன்று முதல் நான்கு மாதங்கள்  தேவைப்படுகின்றன. பூமி வெப்பமயமாதலே இதற்குக் காரணம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

'அலாஸ்கா, இந்தப் பூமியின் மிக முக்கிய பல்லுயிர்ச் சூழலைக்கொண்டது. பூமியின் பிற பகுதிகளில் நடக்கும் அழிவுகள், அலாஸ்காவில் பிரதிபலிக்கின்றன. பூமி வெப்பமயமாதலுக்கான எதிர்வினையாகத்தான் இதுபோன்ற சம்பவங்கள் அலாஸ்காவில் நடக்கின்றன' என்கிறார், கலிஃபோர்னியாவின் சான் டியாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர், டொனதெல்லா ஜோனா.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

"வளர்ப்புப் பிராணிக்கும் பெண்களுக்குமான அன்பு அலாதியானது''- புகைப்படக் கலைஞரின் புது முயற்சி!

 
 

பெண் தன் வளர்ப்பு நாயுடன்

அன்னையர் தினம் அன்று உலகின் பல இடங்களிலும் அன்னையர்களைக் கொண்டாடும் வகையிலான செயல்பாடுகளை பலரும் செய்து வருகின்றனர். அவற்றில் ஓர் அங்கமாகவும் புது முயற்சியாகவும், பெண்களுக்கும் அவர்களின் வளர்ப்பு நாய்க்குமான சிநேகத்தை போட்டோ எடுத்து அசத்தியிருக்கிறார் பெங்கரூருவைச் சேர்ந்த பெட் அனிமல்ஸ் போட்டோகிராஃபரான அசோக் சிந்தாலா. தன் புது முயற்சியை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்...

"ஐ.டி வேலை ஒருபக்கம், ஃபோட்டோகிராபி மறுபக்கம்னு சுழன்டுட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல நிறைய செல்லப் பிராணிகளை புகைப்படம் எடுக்கும் சூழல் உருவாச்சு. தொடர்ந்து பெட் அனிமல்ஸ் மேல பிரியம் அதிகமாகி ரெண்டு நாய்களையும் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே பெட் அனிமல்ஸ் என்.ஜி.ஓ-கள் மற்றும் அமைப்புகளின் நட்பு கிடைச்சு, அவங்களுக்காக 2015-ம் வருஷத்துல இருந்து இலவசமா நாய்கள் மற்றும் பூனைகளை போட்டோஸ் எடுத்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்படி நான் எடுத்த பெட் அனிமல்ஸ் போட்டோக்களைப் பார்த்த நிறைய பேர், அதை தத்தெடுத்தது உத்வேகம் தந்தது. இதுக்காகவே இந்தியாவின் பல பகுதிகளுக்கு வார விடுமுறை நாட்கள்ல போய் புகைப்படம் எடுக்கிறதை வழக்கமா வைச்சுகிட்டேன். இதுல ஒரு அம்சமா, சிறப்பு தினங்களோட வளர்ப்பு பிராணிகளை இணைச்சு புகைப்படம் எடுக்கிற கான்சப்டை கண்டுபிடிச்சேன்.

இந்த முயற்சி எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்துச்சு. குறிப்பா 2015-ம் வருஷத்தின் இறுதியில சென்னையில வெள்ளம் வந்த சமயத்துல நிவாரணத்துக்கு நிதி திரட்ட ஒரு காலாண்டர் வெளியிட முடிவுசெஞ்சேன். அதுக்காக 'பெட் அண்ட் பெட் ஃபேமிலிஸ்'ங்கிற கான்செப்ட்டுல பலரையும் போட்டோஸ் எடுத்தேன். அப்போ பெண்கள் தங்களோட வளர்ப்பு நாய்கள் மேல அலாதியான அன்பு வெச்சிருந்ததைப் பார்த்து ரொம்பவே வியந்தேன். அந்த அன்பு தங்களோட குழந்தைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமலும், சில இடங்கள்ல குழந்தைகள் மேல இருப்பதைவிடவும் அதிகமாவும் இருந்துச்சு. தொடர்ந்து பலரும் தங்களோட வளர்ப்பு நாய்களோடு போட்டோ எடுத்துக்கொடுக்கச் சொல்லி கூப்பிட்டாங்க. தவிர, நாய் வளர்க்கும் நிறையப் பெண்கள் இல்லத்தரசிகளா இருக்காங்க. கணவரை வேலைக்கும், குழந்தைகளை ஸ்கூலுக்கும் அனுப்பின பிறகு தங்களோட முழு நேரத்தையும் செல்லப் பிராணிகளோடதான் கழிக்கிறாங்க. .

தனது வளர்ப்பு நாய்களுடன் அசோக் சிந்தாலா

 

அதுவும் தங்களோட உடல்நலம், அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துல கொஞ்சம் குறைவில்லாத அளவுக்கு கவனிப்புகளை செய்றாங்க. அப்படி தினமும் குளிக்க வெக்கிறது, மசாஜ் சென்டர் கூட்டிட்டுப் போறது, சலூன் கூட்டிட்டுப் போறது, பிறந்த நாள் கொண்டாடுறது, ஹெல்தியான உணவுகளை பார்த்துப் பார்த்துக் கொடுக்கிறதுன்னு அவங்களே பெற்ற குழந்தை மாதிரி நாயை கவனிச்சுக்கிறதை பார்த்து ரசிச்சிருக்கேன்" என்பவர் அந்த ரசிப்பில் இருந்து புதுவிதமான கான்செப்டை உருவாக்கி, 'அம்மா-பிள்ளை' உறவைப் போல பெண்களையும் அவர்களின் நாய்களையும் போட்டோ எடுக்க ஆரம்பித்துள்ளார்.

வளர்ப்பு நாயுடன் பெண்

"நான் பார்த்து ரசிக்க விஷயங்களை அடிப்படையா வெச்சு, மனிதர்கள் தங்களோட நாய்மேல வெச்சிருக்கும் குழந்தைக்கு இணையான பாசத்தை 'அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம்'னு பல கான்செப்ட்டுல போட்டோஸ் எடுக்க முடிவெடுத்தேன். அதுப்படி என்னோட ஃபேஸ்புக் பேஜ்ல, ஆர்வம் இருக்கிறவங்க என்னை அணுகுவாங்க. அவங்க விருப்பப்படி போட்டோஸ் எடுத்துக்கொடுப்பேன்.  இந்த வருஷம் வரும் 14-ம் தேதி அன்னையர் தினம் வர இருப்பதால, நேற்றும், நேற்றைக்கு முன்தினமும் பெண்களை அவங்களோட நாய்களுடன் போட்டோஸ் எடுத்துக்கொடுத்தேன். போன வருஷத்தைத் தொடர்ந்து, இந்த வருஷமும் நிறைய பேருக்கு போட்டோஸ் எடுத்துக்கொடுத்திருக்கேன்.

வளர்ப்பு நாயுடன் பெண்

தங்களோட வளர்ப்பு நாயுடன் கொஞ்சுறது, பேசுறது, விளையாடுறதுனு அவங்க செய்யும் விஷயங்களை எதேர்ச்சையான, இயல்பான விதத்துல, அவங்க விருப்பப்படுற மாதிரி போட்டோஸ் எடுத்துக் கொடுப்பேன். அந்த தருணங்கள் ரொம்பவே எமோஷனலா இருக்கும். இப்படி புதுமையான முறையில தங்களோட பெட் அனிமல்ஸூக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், அதன் மூலமா தங்களோட கவலைகளையும் மறக்கிறதா சொல்லுவாங்க. இந்த மாதிரி போட்டோ எடுக்க ஆசைப்படுறவங்க இளம் வயதுப் பெண்கள் தொடங்கி, வயதான பெண்கள் வரைக்கும் இருக்கிறாங்க. தொடர்ந்து நான் எடுத்துக்கொடுக்கும் போட்டோஸை தங்களோட வீட்டுல ஃப்ரேம் செஞ்சு வெச்சு நிறையப் பெண்கள் ரசிக்கிறாங்க. என்னோட பெரும்பாலான நேரத்தை வளர்ப்புப் பிராணிகளுடன் செலவழிப்பது எனக்கும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் அசோக் சிந்தாலா. அவருடைய ஆல்பங்களைப் பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அம்மா பிள்ளை உறவுக்கு இணையானது... பெட் அனிமல்ஸ் - பெண்களின் சிநேகம்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கலையரசன் நடிப்பில், 'எய்தவன்' படத்தின் நான்கு நிமிட வீடியோ..!

மெட்ராஸ்' புகழ் கலையரசன் கதாநாயகனாகவும், 'பிச்சைகாரன்' புகழ் சாத்னா டைட்டஸ் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம்தான் 'எய்தவன்'. ஃப்ரெண்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஃபிலிம்ஸ் சார்பில் எஸ். சுதாகரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, சக்தி ராஜசேகரன் இயக்கியுள்ளார். பார்தவ் பார்கோ இசையமைத்திருக்கும் (4 பாடல்கள்) இந்தப் படத்துக்கு, பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

Yeidhavan


நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சௌமியா, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை, ஐ.ஜே. அலன் எடிட்டிங் செய்துள்ளார். ஏழைகளுக்குக் கல்வி என்பது இன்றைய சூழ்நிலையில் பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. முறையான கல்வியைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி, ஆக்‌ஷன் த்ரில்லராக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார், சக்தி ராஜசேகரன்.

 

 

 


இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி இருந்தது. வருகின்ற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், படத்தின் 4.27 நிமிட வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். விஜய் ஆண்டனியின் சைத்தான், எமன் படத்தின் சில காட்சிகளை படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட்டு ப்ரமோட் செய்தனர்.


இந்நிலையில், தற்போது எய்தவன் படக்குழுவினரும், விஜய் ஆண்டனியின் ஸ்டைலில் படத்தை ப்ரமோட் செய்துள்ளனர்.

  • தொடங்கியவர்

இலக்கை எட்டியது தமிழ் விக்கிபீடியா

 

_06590.JPG

'தமிழ் விக்கிபீடியா' தன்னுடைய நெடுநாள் இலக்கான ஒரு லட்சம் கட்டுரைகளை எட்டிப் பிடித்துள்ளது. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக விளங்குவது 'விக்கிபீடியா' தளம். இதன் தமிழ் மொழிப் பக்கம், கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பாகவே ஒரு லட்சம் கட்டுரைகளை இலக்காகக்கொண்டு இயங்கியது. இன்று, அது தன் இலக்கான ஒரு லட்சம் கட்டுரைகளை அடைந்துள்ளது. 

http://www.vikatan.com

வருகிறது, அதிரடி மன்னன் புரூஸ் லீ-யின் பயோபிக்..!

 
 

Bruce Lee

மார்ஷியல் ஆர்ட்ஸை வெள்ளித்திரைமூலம் உலகின் கடைக்கோடி சினிமா ரசிகர்கள் வரை எடுத்துச்சென்ற புரூஸ் லீ மறைந்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை. அவர் மரணத்தில் இருக்கும் மர்மமும் இன்னும் நீங்கியபாடில்லை. இந்நிலையில், புரூஸ் லீ, இளைஞராக வாழ்ந்த காலகட்டத்தைப் பற்றி, பயோபிக் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை, பிரபல இயக்குநர் சேகர் கபூர் எடுக்க உள்ளார். இதற்கு, 'லிட்டில் டிராகன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. புரூஸ் லீ, 1950 -களில் ஹாங்காங்கில் அனுபவித்த இளமைக் கால காதல், குடும்பத்தின் ஏமாற்றம், நட்பு, துரோகம், நிறவெறி எனப் பல பரிமாணங்களை வெளிக்கொண்டு வருமாம், இந்த 'லிட்டில் டிராகன்'. 

 

புரூஸ் லீ-யின் மகள், ஷேனன் லீ, இந்தப் படத்தின் கதை உருவாக்கத்தில் பங்கெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 'லிட்டில் டிராகன்' பற்றி இயக்குநர் சேகர் கபூர், 'புரூஸ் லீ மிகவும் திறமை படைத்த மற்றும் பிரபலமான தற்காப்புக் கலை வல்லுநர் என்பது தெரியும். இதைத் தவிர்த்து, புரூஸ் லீ என்பவர் யார் என்ற கேள்வியைத் தேடும் படைப்பாக இந்தப் படம் இருக்கும்' என்று கூறியிருக்கிறார். 

  • தொடங்கியவர்

சச்சின்... சச்சின்... 'சச்சின் ஆந்தம்' வீடியோ இதோ..!

சச்சின் பயோபிக் படத்துக்கு 'சச்சின் தி பில்லியன் ட்ரீம்ஸ்' எனப் பெயர் வைத்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ஏற்கெனவே, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்,தெலுங்கு, இந்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் வருகின்ற 26-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.

Sachin Anthem


இந்நிலையில், படத்தில் சச்சின் ஆந்தமை, சச்சின் மற்றும் ஏர்.ஆர். ரஹ்மான் இணைந்து வெளியிட்டுள்ளனர். மைதானத்தில் சச்சின்... சச்சின்... என்று எதிரொலித்த குரல்கள், சச்சினின் பெஸ்ட் இன்னிங்ஸ்களின் தொகுப்பு, மைதானத்துக்கு வெளியே சச்சினின் செயல்கள் என அனைத்தையும் இணைத்து சச்சின் ஆந்தமை வெளியிட்டுள்ளனர்.

 


 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பல வல்லரசுகளை இந்த குட்டித்தீவு எதில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது தெரியுமா?

"மூளையில் உள்ள நியூரான்களைப் போல தான், நாம் அனைவரும் இணையத்தால் கனெக்ட் செய்யப்பட்டிருக்கிறோம்" என இன்டர்நெட் பற்றிக் குறிப்பிடுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். தொலைந்துபோன பைக் சாவியைக் கூட கூகுளில் தேடும் அளவுக்கு, இணையம் என்பது வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. இவ்வளவு ஏன்... இணையம் இல்லை என்றால் இந்த வரிகளை இப்போது நீங்கள் படித்துக் கொண்டிருக்க முடியாது.

மனிதர்களுக்குப் பெயரைப் போலதான் இணையத்தில் ஒவ்வொரு இணையதளங்களும் தனித்தனி டொமைன் பெயர்களால் அடையாளம் காணப்படுகின்றன. Google.com என்பது கூகுள் நிறுவனத்தின் டொமைன் பெயர் ஆகும். இதில் .com என்பது டாப்-லெவல் டொமைன் (அதியுயர் ஆள்களப் பெயர்) என அழைக்கப்படுகிறது. இதே போல ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி டாப்-லெவல் டொமைன்கள் உண்டு. உதாரணமாக .in என்பது இந்திய நாட்டின் டாப்-லெவல் டொமைன். சில விதிகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி டொமைன் பதிவு செய்துகொள்ளலாம்.

இணைய சேவையைப் பொறுத்தவரை இந்தியா பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு வருகிறது. இந்தியாவில் இணைய தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016-ம் ஆண்டு டிசம்பர் வரை, இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 39 கோடியாகப் பதிவாகியுள்ளது. இந்நிலையில், இந்திய நாட்டின் டாப்-லெவல் டொமைனான .in என்பதன் கீழ், மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமான (22,21,531) இணையதளங்கள் பதிவாகியுள்ளன.

இன்டர்நெட் - டாப்-லெவல் டொமைன் மேப்

கிரேட் பிரிட்டனின் டாப்-லெவல் டொமைனை (.uk) பதிவு செய்யும் நிறுவனமான நாமினெட் (Nominet), டாப்-லெவல் டொமைன்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இணையதளங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலக நாடுகளின் மேப் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா தான் இதில் முதலிடம் பிடித்திருக்கிறது. சீனாவுக்குச் சொந்தமான .cn என்ற டொமைனில் 2 கோடிக்கும் அதிகமான இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக சுமார் 1.8 கோடி இணையதளங்களுடன் நியூசிலாந்து அருகே உள்ள டகலோ என்ற குட்டித்தீவுக் கூட்டங்களின் .tk டாப்-லெவல் டொமைனானது இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சுமார் 1.6 கோடி இணையதளங்களுடன் ஜெர்மனியின் டாப்-லெவல் டொமைனான .de மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. வெறும் இரண்டு இணையதளங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கும், ஆப்பிரிக்காவில் உள்ள கினி-பிசாவு நாட்டின் .gw என்ற டாப்-லெவல் டொமைன் தான் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

உலகில் அதிகம் பிரபலமான .com டாப்-லெவல் டொமைனின் கீழ் தான் அதிக இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் மொத்தம் 12.3 கோடி இணையதளங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது பொதுவான டொமைனாகப் பயன்படுத்தப்படுகிறது. இது எந்த நாட்டுக்கும் சொந்தமானது அல்ல.

டகலோ தீவு

உலக மேப்பில் லென்ஸ் வைத்துப் பார்க்கக்கூடிய அளவிலான சிறிய நாடான டகலோ, இந்த மேப்பில் சீனாவுக்கு அடுத்த பெரிய நாடாக உருவெடுத்துள்ளதுக்கு சுவாரசியமான பின்னணி இருக்கிறது. நான்கு சதுர மைல்களுக்கும் குறைவான பரப்பளவைக் கொண்ட நாடு தான் டகலோ. சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு சுமார் 1,500 பேர்தான் வசிக்கிறார்கள். டகலோ தீவுக்கூட்டத்துக்கு இன்னும் தனி நாடு அங்கிகாரம் இல்லை. நிதி நிலைமையைப் பொறுத்தவரை, இந்த நாடு இன்னும் நியூசிலாந்தைச் சார்ந்து தான் உள்ளது. 2012-ம் ஆண்டு இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு வருவாய் .tk என்ற டொமைன் மூலமாக தான் கிடைத்துள்ளது. தற்போதும் பெரும் அளவிலான வருவாய் டொமைன் பதிவுகளினால் கிடைத்து வருகிறது.

 

ஜூஸ்ட் ஜூர்பியர் என்ற டட்ச் நாட்டு தொழிலதிபர் இந்நாட்டின் டாப்-லெவல் டொமைனை தனது பெயரின் கீழ் பதிவு செய்துகொண்டார். இந்த டொமைனின் கீழ் இலவசமாக இணையதளங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் இணையதளத்தின் உரிமை ஜூர்பியரிடம் மட்டுமே இருக்கும். விருப்பமானவர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, இணையதளத்தின் உரிமையை பெற்றுக் கொள்ளலாம். இப்படி பதிவு செய்யப்படும் இணையதளங்களில் விளம்பரங்களை இடம்பெறச்செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பங்கை டகலோ நாட்டிற்கு ஜூர்பியர் வழங்கிவிடுகிறார். இலவசமாக இணையதளத்தைப் பதிவு செய்துகொள்ளலாம் என்ற காரணத்தினாலேயே இந்த டாப்-லெவல் டொமைன் பிரபலமானது. தங்கள் நாட்டிற்கு வருவாய் கிடைப்பதால், டகலோ நாட்டினரும் இதை வரவேற்கின்றனர்.

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.