Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

வயிறே வங்கி!

 

கோபம் என்றால் இப்படியா வரவேண்டும்? கொலம்பிய நாட்டுப் பெண்ணுக்கு வந்த கோபம், கடைசியில் அவரின் வயிற்றிலே கத்தி வைத்து ஆபரேஷன் செய்யுமளவு நிலைமையை சீரியஸாக்கும் என கடவுள் மேல் பிராமிஸாக அவரே நினைத்திருக்க மாட்டார். கொலம்பிய நாட்டைச் சேர்ந்த அந்த பெண்மணிக்கு அன்று கணவரோடு கடும் வாக்குவாதம். ஏன்? அவரின் கணவருக்கு ஏதோ அவசரச் செலவுக்கு பணம் தேவைப்பட, மனைவி வைத்திருந்த கோடைகால டூர் சேமிப்பை கேட்டிருக்கிறார்.
21.jpg
இதனால் கண், காது சிவக்கும்படி ஆத்திரமான அவரது மனைவி ‘உனக்கெதற்கு தரவேண்டும்’ என வைராக்கியமாக ஒன்றல்ல இரண்டல்ல, ஒட்டுமொத்தமாக 5700 டாலர்களை அப்படியே விழுங்கிவிட்டார். பிறகு மருத்துவமனைக்கு எமர்ஜென்சி விளக்கு சுழல என்ட்ரியானவரை ஆபரேஷன் பண்ணி அவரையும் கரன்சியையும் காப்பாற்றிவிட்டனர். அம்மணியின் குடலில் இருந்த நூறு டாலர் நோட்டுகளின் எண்ணிக்கை, 57!

 

 

தலைகீழ் சாதனை!

சாதனை செய்வதில் இந்தியர்கள் சளைத்தவர்களா என்ன? உலகிலுள்ள மனிதர்கள் மட்டுமல்ல, குரங்கு களையே மலைக்க வைக்கும்படி உயரமான மரங்களில் தலைகீழாக ஏறி இறங்கி பதற்றம் தருகிறார் இந்த ஹரியானா மனிதர். 50 அடி உயர மரத்திலும் அநாயாச மாக 5 நிமிடங்களுக்குள் சரசரவென பாய்ந்து ஏறும் முகேஷ்குமார், சிறுவயது முதலே மரம் என்றால் பாய்ந்து விடுவாராம்.
17.jpg
பக்கத்து வீட்டில் அவை இருந்தாலும் பாய்ந்து பிடித்து ஏறிவிடுவது அவர் வழக்கமாம். நல்ல உயரமாய், அதுவும் நேராக இல்லாமல் தலைகீழாய் விறுவிறு வேகத்தில் ஏறுவது முகேஷின் ஸ்பெஷாலிட்டி. இப்போது கட்டிடத் தொழிலாளராக பணிசெய்து வரும் இவர் தனது தலைகீழாக மரம் ஏறும் திறமையின் மூலம் கின்னஸ் வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறாராம். ஏறிக்காட்டுங்க முகேஷ்!   

www.kungumam.co

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

விருந்தோம்பலுக்கு உதாரணமான கொக்கு..! நட்பை உணர்த்தும் கதை...

 

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்'

என்னும் குறளில் பிறப்பால் அனைத்து உயிர்களும் சமமானவையே என்பதை வள்ளுவர் நமக்குத் தெளிவாக விளக்குகிறார். மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்களே. ஆனால், அவர்களின் குணங்களே அவர்கள் நல்லவரா? தீயவரா என்பதைத் தீர்மானிக்கின்றன.

மகாபாரதம், சாந்தி பருவத்தில் ஓர் அழகிய கதை இருக்கிறது. அந்தக்கதையை விரிவாகப் பார்ப்போம்.கொக்கு

கௌதமன்! உயர்ந்த குலத்தில் பிறந்தவன். அவனது தந்தையோ சகல கலைகளையும் அறிந்த பண்டிதர். ஆனால். அவரது பிள்ளையான, இவனோ தீய குணங்களால் நிறைந்தவன் . கடுகளவும் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றாதவன். அவனுடைய காலத்தில் தேவர்களாலேயே போற்றிப் புகழப்படும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு ஒன்றும் வாழ்ந்து வந்தது. தான் பிறந்த பறவைகளின் குலத்தையே அனைவரும் பெருமையாக பார்க்கும்படி வாழ்ந்த அந்த கொக்கின் பெயர் ராஜசிம்மன்.

 
 
 உயர்ந்த நற்குணங்களைக் கொண்டவனாக விளங்கினான்.

கௌதமனோ மிகப்பெரிய சோம்பேறி, பிறரது உழைப்பிலேயே காலத்தைக் கழித்து விடவேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தான். அவனுடைய தந்தையான பண்டிதர் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வந்தான்.

'பெற்ற பிள்ளை வெட்டியாக இப்படி சுற்றித் திரிகிறானே' என்ற துயரம் தாங்காமலேயே பண்டிதர் ஒரு நாள் மண்ணை விட்டு மறைந்தார். தந்தை மறைந்ததால், பண்டிதரின் உழைப்பிலேயே காலம் தள்ளிய கௌதமனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இதற்கு இடையில் அவனுக்கு திருமணம் வேறு ஆகியிருந்தது.

'வேட்டையாடிப் பிழைக்கலாம்' என்ற முடிவுக்கு வந்து அப்படியே தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு நாள் பண்டிதரின் நண்பர் ஒருவர் கௌதமன் வேட்டையாடித் திரிவதைக் கண்டார். அவர் கௌதமனிடம் 'உன் தந்தை எப்பேர்பட்டவர். அவருடய மகனாக இருந்துகொண்டு பிற உயிர்களைக் கொல்லலாமா, ஏதாவது வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்! தயவுசெய்து வேட்டையாடுவதை விட்டுவிடு" என்றார்.

 
 
 
 
 

காட்டில் கௌதமன்

அவர் தந்தை செய்த புண்ணியத்தால்தானோ என்னவோ இந்த அறிவுரையைக் கேட்டுக் கொண்டான். வியாபாரம் செய்ய முதலில் வியாபாரிகளோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ளவும் முடிவு செய்தான். அப்படியே ஒரு வியாபாரக் குழுவோடு இணைந்து, அவர்களுடன் காட்டு வழியே சென்றுகொண்டிருந்தான். அப்போது காட்டில் மதம் பிடித்த யானைக்கூட்டம் ஒன்று சுற்றித் திரிந்தது. இவர்களைக் கண்டதும் தாக்க ஆரம்பித்தது. எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு திசையில் ஓடினர். கௌதமன் மட்டும் ஒரு மரத்தின் மேல் அமர்ந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டான்.

யானைகள் சென்ற பிறகு, மரத்தில் இருந்து இறங்கி அருகில் நந்தவனம் போல் இருந்த பகுதிக்கு வந்தான். பசியோடு இருந்ததால் அங்கு இருந்த மரங்களில் கனிகளைப் பறித்து உண்டான். அப்படியே அருகில் இருந்த ஆலமரத்தில் படுத்து உறங்க ஆரம்பித்தான். தூங்கிக்கொண்டிருக்கும் போது அவன் மீது சில்லென்று தென்றல் போன்ற காற்று வீசுவதை உணர்ந்தான். கண் விழித்துப் பார்க்கவே, கொக்கு ஒன்று அவனுக்கு தனது சிறகுகளால் விசிறிக் கொண்டிருந்தது.

அந்த கொக்கிடம் 'யார் நீ' என்று விசாரித்தான். உடனே கொக்கு, ' என் பெயர் ராஜசிம்மா. இந்த மரம் என் வீடு. நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி. நீங்கள் தூங்கும் போது உங்கள் நெற்றியில் வியர்வை பூத்துக் கொண்டிருந்தது. அதனால்தான் விசிறிக் கொண்டிருக்கிறேன்' என்றது. மேலும், 'நீங்கள் என்ன நோக்கத்துக்காக காட்டிற்குள் வந்தீர்கள்" என்றும் அன்போடு கேட்டது. கௌதமனும் தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் ராஜசிம்மனிடம் கூறினான்.

கௌதமனின் வறுமை நிலையைப் புரிந்துகொண்டது ராஜசிம்மன். அவனுக்கு உதவ நினைத்தது. கௌதமனிடம், 'என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் விரூபாட்சன். நாளை அவனிடம் செல்லுங்கள். என் நண்பன் என்று அறிமுகம் செய்துகொள்ளுங்கள். பின்பு உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள் அவன் செய்து தருவான்' என்றது ராஜசிம்மன். அதேபோல் அடுத்த நாள் விரூபாட்சனை சந்தித்தான் கௌதமன். ராஜசிம்மனின் நண்பன் என்றதுமே, மிகுந்த அன்போடு உபசரித்து வேண்டிய செல்வத்தை அள்ளிக் கொடுத்து அனுப்பினான் விரூபாட்சன்.

கௌதமனும் அங்கிருந்து கிளம்பி ராஜசிம்மனைச் சந்தித்து தன் நன்றியைத் தெரிவித்தான். இரவு நெடுநேரமாகிவிட்டதால், அங்கேயே தங்கவும் முடிவு செய்தான். கொக்கும் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தது. மேலும் கௌதமனை விலங்குகள் எதுவும் தாக்காமல் இருக்க, சற்றுத் தூரத்தில் நெருப்பு மூட்டியது. தானும் அங்கேயே படுத்து உறங்கியது.

சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்தான் கௌதமன். அருகே இருந்த பெரிய கொக்கைப் பார்த்தான். தொலைவில் எரியும் நெருப்பையும் பார்த்தான். அவனுக்கு ஆசை தலைக்கேறியது. அப்படியே எழுந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த கொக்கைத் தூக்கி நெருப்பில் போட்டான். அதன் மாமிசத்தை எடுத்து, சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டான். காலை விடிந்ததுமே அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

 

இதையெல்லாம் தேவலோகத்தில் இருந்து, தேவேந்திரன் பார்த்துக் கொண்டிருந்தார். கௌதமனின் செயலைக் கண்டு ஆச்சரியத்தில் திகைத்தார்.

மறுபுறம் தினமும் தன்னைச் சந்திக்க வரும் ராஜசிம்மன் இன்று ஏன் வரவில்லை என்று விரூபாட்சன் யோசித்துக் கொண்டிருந்தான். நேற்று வந்த கௌதமன், எதாவது செய்திருப்பானோ என்கிற சந்தேகமும் அவனுக்கு வந்தது. எனவே தன் படைவீரர்களை அனுப்பி தன் நண்பன் கொக்கின் நிலையை அறிந்து வரச் சொன்னான். நண்பனின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விரூபாட்சனனுக்கு தன் நண்பனின் இறக்கைகளை மட்டும் வீரர்கள் கொண்டு வந்ததைக் கண்டதும் மிகுந்த துயரமடைந்தான். கோபத்துடன் கௌதமன் எங்கிருந்தாலும், அவனை இழுத்து வரச் சொன்னான்.

படைவீரர்களும் உடனடியாக கௌதமனை இழுத்து வந்தனர். அவனைக் கண்டதும், 'உடனடியாக இவனைக் கொன்று, இவன் மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்' என்று உத்தரவிட்டான். உடனே வீரர்களில் ஒருவன், ' இதோ இப்போதே இவனைக் கொல்கிறோம். ஆனால், நன்றி கெட்ட இவன் மாமிசத்தைச் சாப்பிடும் அளவுக்கு நாங்கள் தரம் கெட்டவர்கள் அல்ல' என்றான் . காட்டு விலங்குகளுக்கு கௌதமனின் உடல் வீசப்பட்டது, காட்டு விலங்குகளும் அவன் உடலை உண்ண மறுத்தன.

சோகத்துடன் தன் நண்பனான ராஜசிம்மனை எரிக்க முற்பட்டான், விரூபாட்சன். அப்போது வானுலகத்தில் இருந்து தேவேந்திரர் தோன்றி 'இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பித்துத் தருகிறேன்' என்று கூறி உயிர்ப்பித்துத் தந்தார். விரூபாட்சன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

'நட்பில், விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் இந்தக் கொக்குக்கு வரம் ஓன்றும் தர விரும்புகிறேன்' என்றார் தேவேந்திரர். 'என்ன வரம் வேண்டும்?' என்று கொக்கிடம் கேட்டார். உடனே கொக்கு, 'என் நண்பனான கௌதமன் மீண்டும் உயிர்ப்பிழைக்க தாங்கள் வரம் அருள வேண்டும்' இது தான் நான் விரும்பும் வரம் என்றது.

கொக்கின் இந்தப் பண்பைக் கண்டு விண்ணுலகத்தில் இருந்து அத்தனைத் தேவர்களும் கொக்கின் மீது பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தனர். உயிர் பெற்று எழுந்த கௌதமன் கண்ணீர் மல்க கொக்கிடம் மன்னிப்புக் கேட்டான். கொக்கு அவன் கண்ணீரைத் துடைத்தது.

குலம் எதுவாக இருந்தாலும், குணத்தால் தான் உயர்ந்தோர் தாழ்ந்தோர் தீர்மானிக்கப்படுகின்றனர் என்பது இந்தக் கதை மூலம் தெளிவாகின்றது. அது மட்டும் அல்லாமல் நன்றியுணர்வு, விருந்தோம்பலின் பெருமைகளையும் நமக்கு அழாகாக எடுத்துச் சொல்கிறது.

http://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்
On ‎15‎/‎05‎/‎2017 at 3:22 PM, நவீனன் said:

குட்டி மஹேந்திர பாகுபலி பற்றி ஒரு சுவாரஸ்யம்!

'பாகுபலி' படத்தில், குட்டி மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தை நட்சத்திரம்குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

ddd_13569.png

'பாகுபலி' படத்தில், பாகுபலியை ரசித்த அனைவரும் கண்டிப்பாக மகேந்திர பாகுபலியையும் ரசித்திருப்பார்கள். 'இரண்டு பாகுபலியாகவும் நடித்தது பிரபாஸ்தானே... அப்புறம் எப்படி ரசிக்காமல் இருப்பார்கள்' என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால், இரண்டு பாகுபலியைவிட ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கியது, ரம்யா கிருஷ்ணன் கையில் படத்தின் ஆரம்பக் காட்சியில் தோன்றிய குட்டி மகேந்திர பாகுபலிதான். 

இப்போது, அந்த குட்டி மகேந்திர பாகுபலியைப் பற்றி, மலையாள செய்தி ஊடகமான  மனோரமாவில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, உண்மையாகவே குட்டி மகேந்திர பாகுபலி ஒரு பெண் குழந்தையாம். பிறந்து 18 நாளே ஆன அக்‌ஷிதா வால்ஸ்லேன்யைத் தான் பாகுபலி படத்துக்காக நடிக்க வைத்துள்ளனர். அக்‌ஷிதா நடித்த காட்சிகளை மட்டும் எடுத்து முடிக்க  ஐந்து நாள்கள் ஆனதாம்.  

 

குழந்தை அக்‌ஷிதாவின் தந்தை வால்ஸ்லேன், கேரள திரைப்படத் தயாரிப்பின் மேற்பார்வையாளர் ஆவார். அக்‌ஷிதாவுக்கு, பாகுபலி படத்தின்மூலம் ஒரு மகத்தான வாய்ப்பு கிடைத்துவிட்டதாகப் பலரும் கருதுகின்றனராம். அக்‌ஷிதாவுடன் பிரபாஸ் இருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் இன்றளவும் வைரல்!

http://www.vikatan.com

சின்னப் பாகுபலி அழகு அதை விட பெரிய பாகுபலி இன்னும் அழகுtw_blush:

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று: மே 17
 
 

article_1431842378-p10feature.jpg1590: டென்மார்க்கை சேர்ந்த இளவரசி ஆன், ஸ்கொட்லாந்து மகாராணியாக முடிசூடப்பட்டார்.

1792: நியூயோர்க் பங்குச் சந்தை திறக்கப்பட்டது.

1914: நோர்வே மன்னராக டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் கிறிஸ்ரியன் பிரெட்ரிக், நோர்வே நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.

1865: சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது.

1940: பெல்ஜியம் மீது ஜேர்மனி படையெடுத்தது.

1980: தென்கொரிய அரசாங்கம் ஜெனரல் சுன் டூ ஹ்வானின் கட்டுப்பாட்டில் வந்தது.

1983: லெபனானிலிருந்து இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெறப்படுவது தொடர்பாக, லெபனான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தமொன்று கையெழுத்திடப்பட்டது.

1990: உளவியல் நோய்களின் பட்டியலிலிருந்து ஓரின சேர்க்கையை உலக சுகாதார ஸ்தாபனம் நீக்கியது.

1997: லோரன்ட் கபீலாவின் படைகள் ஸயர் நாட்டின் தலைநகர் கின்ஷசாவுக்குள் பிரவேசித்தன. அந்நாட்டிற்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1998: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

2007: வட கொரியா, தென் கொரியாவுக்கிடையில் முதல் தடவையாக ரயில் சேவைகள் இடம்பெற்றன.

2014: வடக்கு லாவோஸில் இடம்பெற்ற விமான விபத்தில் 17 பேர் பலியாகினர்.

tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘பிறந்த மண்ணை விற்கவியலாது’
 

article_1494936464-6b8784bf9ad8c41740283நரிக்குணம் கொண்ட, சுயநல எண்ணம் கொண்டோரிடம் ஆலோசனை கேட்பது ஆபத்தானது. இத்தகையோர் எப்பொழுதும் பிறரிடத்தில் தமக்காக ஆதாயங்களை நோக்கியே காய்களை நகர்த்துவார்கள்.

எமது நாட்டில் யுத்தம் சூழ்ந்த காலத்தில் இத்தகைய பேர்வழிகள் செய்த அடாத காரியங்கள் எண்ணிலடங்காதவை.

இந்தக் காணி, வீடுகளை இங்கே வைத்து, என்ன செய்யப் போகின்றீர்கள்? பேசாமல் வந்த விலைக்கு விற்று எங்காவது சென்று விடுங்கள். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்து தருகின்றேன் என்று ஆலோசனைகளை இலவசமாக வழங்கி, மறுபுறம் அடாத, குறைந்த விலைக்கு அவைகளை விற்கவைத்துப் பொருளீட்டுவதுடன் தாங்களும் மேலதிகமாக வீடு, வாசல், காணிகளை வாங்கிக் குவித்தார்கள். இன்று இவைகளின் பெறுமதி பன்மடங்கானது.

ஆனால், இன்று அதனை விற்றவர்கள் தங்கள் செயலுக்காக மீளாத்துயரில் இருக்கின்றனர். பிறந்த மண்ணை விற்கவியலாது. சொந்த மண் சொர்க்கத்திலும் மேலானது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கூரியரில் வந்த கின்னஸ் சான்றிதழ்! ஆஸ்திரேலியரின் சாதனையை முறியடித்த சென்னை இளைஞர்

 

ஒரு நிமிடத்தில் 2109 தடவை ‘டிரம்ஸ்’ இசைக் கருவியில் ஒலி எழுப்பி,  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்  20 வயது சென்னை இளைஞர் சித்தார்த் நாகராஜன்.  

drums
 

’ஆசியாவின் அதிவேக டிரம்மர்’, ’இந்தியாவின் இளம் டிரம்மர்’ என்று அழைக்கப்படும் சித்தார்த், இரண்டரை வயதில் இருந்து டிரம்ஸ் வாசிக்க துவங்கிவிட்டார். இரண்டரை வயதிலேயே லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுவிட்டார். இவரின் தந்தை நாகி, இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர். 

drummer sid
 

கடந்த மார்ச் மாதம் கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கில், ஒரு நிமிடத்தில் 2109 ’பீட்’களை வாசித்து சாதனை புரிந்துள்ளார் சித்தார்த். இந்த சாதனையை ஸ்கைப் மூலம் கின்னஸ் குழு உறுப்பினர்கள் கண்டு மதிப்பீடு செய்துள்ளனர். இதுவரை யாரும் 60 வினாடிகளில் 2109 பீட்கள் வாசித்ததில்லை என்பதை உறுதிபடுத்திய பின்னர், சித்தார்த்துக்கு கின்னஸ் சான்றிதழ் வழங்கி உள்ளது கின்னஸ் குழு. இவருக்கு முன்பு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஒரு நிமிடத்தில் 1589 ’பீட்’ களை வாசித்ததே சாதனையாக இருந்தது.

 

 

 

கின்னஸ் சாதனை அனுபவத்தை பற்றி சித்தார்த்திடம் கேட்டபோது, “கின்னஸ் சாதனை என்பது என் வாழ்நாள் கனவாக இருந்தது. நீண்ட நாள்கள் பயிற்சி எடுத்த பின்னர், 60 விநாடிகளில் 2109 ’பீட்’களை வாசித்தேன். கின்னஸ் குழு ஆன்லைன் மூலம் என் சாதனையை மதிப்பீடு செய்தது. கின்னஸ் புத்தகத்தில் என் பெயர் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் எனக்கு கூரியரில்தான் வந்தது. கூரியர் பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் கின்னஸ் சாதனை சான்றிதழ் இருந்தது. அந்த தருணம்தான் என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். என் ஆர்வம், எதிர்காலம், வாழ்க்கை எல்லாமே ட்ரம்ஸ் தான்” என்றார் உற்சாகத்துடன்!  

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்? #MorningMotivation

 

‘எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!’ - என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள் ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம். இருந்தாலும், `நமக்கு அவசியம் இல்லாதவற்றை வாழ்க்கைக்குள் அனுமதிக்காதே!’ என்றும் சொல்கிறது ஜென். துறவி வூ லீ (Wu Li) ஒருபடி மேலே போய், ``நீங்கள் ஞானம் பெறுவதற்கு முன்னர் ஒரு மரத்தை வெட்டி, ஒரு செடிக்கு நீர் வார்த்தீர்களா? சரி... இப்போது என்ன ஞானம் பெற்றுவிட்டீர்களா? ஒரு மரத்தை வெட்டுங்கள்; ஒரு செடிக்கு நீர் ஊற்றுங்கள்!’ என்கிறார். அதாவது என்ன பெற்றாலும், `நீ நீயாக இரு!’ என்பதே இதன் பொருள். 

ஜென்

அவன் ஒரு தொழிலாளி; கல் உடைப்பது தொழில். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஒரே மாதிரியான வேலை; அதிகம் உயராத சம்பளம்; வீட்டில் மனைவி, குழந்தைகள், வயதான பெற்றோர், பிக்கல், பிடுங்கல், வறுமை..! ஒருகட்டத்தில் அவன் அயர்ந்து போனான். அவனுக்குத் தன் மீதும், தான் வாழும் வாழ்க்கை மீதும் வெறுப்பு வந்தது. இப்படியே கழிந்துவிடுமா வாழ்க்கை என்கிற வெறுமை அவனைப் பிடித்து ஆட்டியது. 

ஒருநாள் வழக்கம்போல அவன் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். தோளில் தொங்கிக்கொண்டிருந்த பையில் கல்லை உடைக்கும் ஆயுதங்கள் கனத்துக்கிடந்தன... அவன் இதயத்தைப் போலவே! கூவிக் கூவி மீன்களையும் முட்டைகளையும் விற்றுக்கொண்டுபோன தெரு வியாபாரிகள்... வானில் எழுந்து வெயிலை உடலில் வெப்பமாக இறக்கிக்கொண்டிருந்த சூரியன்... கிளைவிட்டு கிளைதாவிப் போய்க்கொண்டிருந்த குரங்குகள்... சாலையின் குறுக்கும் நெடுக்குமாக ஓடி விளையாடிய சிறுவர்கள்... எதுவும் அவனுக்கு உறைக்கவில்லை. நடந்துகொண்டே இருந்தான். அது வழக்கமாக அவன் நடக்கும் பாதைதான். ஓர் இடத்தில் அவனை அறியாமல் அவன் பார்வை திரும்பியது. 

ஜென் - வணிகர்

அது ஒரு வணிகரின் வீடு. அன்றைக்கு என்னவோ அந்த வீட்டை அப்போதுதான் புதிதாகப் பார்ப்பதுபோல அவனுக்கு இருந்தது. அந்த வணிகர், பல வெளிநாடுகளுக்குச் சென்று வியாபாரம் செய்பவர். செல்வம் அவர் வீட்டு வெளிக்கதவில் இருந்து, வீட்டுக்கூரை வரை தன் செழிப்பைப் பதித்திருந்தது. பார்த்தாலே பிரமிக்கவைக்கும் பிரமாண்ட மாளிகை. ஏவலுக்கு ஓடி வரும் பணியாட்கள். அவரைப் பார்க்க சதா காத்திருக்கும் ஊர்ப் பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள். இன்றைக்கும் அவரைப் பார்ப்பதற்காக ஒரு கூட்டம் காத்திருந்தது. அவன் பெருமூச்சுவிட்டான். `சே! நானும் இவரைப்போல் ஒரு வணிகராக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று நினைத்தான். 

அவ்வளவுதான். அந்த மாயாஜாலம் நிகழ்ந்தது. அவன் மிகப் பெரும் வணிகனாக உறுமாறிவிட்டான். செல்வம், செழிப்பு, வேலையாட்கள் எதற்கும் குறைவு இல்லை. ஆனால், முக்கியமான ஒன்று அவனிடம் இப்போது இல்லை. அது, நிம்மதி. அவனைவிட வசதி குறைந்தவர்களின் பொறாமையையும் பகைமையையும் அவன் சம்பாதிக்கவேண்டி இருந்தது. ஒருநாள் அவன் மாளிகை மாடத்தில் இருந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தான். சாலையில் அரவம். இவன் என்னவென்று எட்டிப் பார்த்தான். 

ஜென் - பல்லக்கு

மணியோசையும் எக்காளமும் முழங்க ஓர் ஊர்வலம். முன்னும் பின்னும் ஊழியர்கள், பாதுகாப்புக்குக் காவலர்கள், நடுவில் ஒரு பல்லக்கில் ஒய்யாரமாக அமர்ந்தபடி அரசின் உயர் அதிகாரி ஒருவர் போய்க்கொண்டிருந்தார். சாலையில் இருந்தவர்கள் ஊர்வலத்துக்கு மரியாதையோடு வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள். அந்த அதிகாரியை எல்லோரும் சிரம் தாழ்த்தி வணங்கினார்கள்... ஏழை, செல்வந்தன், வணிகன், எல்லோரும். இதைப் பார்த்த அவன் பெருமூச்சுவிட்டான். `நானும் இவரைப்போல ஓர் உயர் அதிகாரியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான். 

அவ்வளவுதான். அந்த அற்புதம் நடந்தது. அவன் ஓர் உயர் அதிகாரி ஆகிவிட்டான். போகிற இடத்தில் எல்லாம் அவனுக்கு மரியாதை கிடைத்தது. பாதுகாவலுக்கு ஆள் படை. ஆனாலும் அவனுக்கு இன்னமும் திருப்தி இல்லை. ஒருநாள் பல்லக்கில் அடுத்த ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தான். அது வெயில் காலம். சுட்டெரித்தது அனல். போதாக்குறைக்கு காற்று வேறு. பல்லக்குத் தூக்கிகள் வேகமாகப் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு போய்க்கொண்டிருந்தாலும், அவனால் உள்ளே அமர முடியவில்லை. வெப்பம் தாங்காமல் தலையை வெளியே நீட்டி அன்னாந்து பார்த்தான். வானில் தெரிந்த சூரியன் இவனைப் பார்த்து சிரிப்பதுபோல் இருந்தது. `நான் மட்டும் சூரியனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான். 

சூரியன்

அவ்வளவுதான். இப்போதும் அதிசயம் நிகழ்ந்தது. அவன் சூரியனாக உருமாறிவிட்டான். வானில் சுதந்திரமாக வலம் வந்தான். கிழக்கே உதித்து, மேற்கில் மறையும் வரை உலகை உயரே இருந்து பார்ப்பது ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால்..? தகிக்கும் இவனுடைய வெப்பத்தில் சிக்கியவர்கள் இவனைக் கண்டபடி திட்டினார்கள். விவசாயிகள் சாபம் கொடுத்தார்கள். பகலில் வேலை பார்த்த தொழிலாளர்கள் கரித்துக்கொட்டினார்கள். இவனுக்கும் பூமிக்கும் இடையே சில நேரங்களில் கருமேகங்கள் திரண்டன. அவை, இவனுடைய வெப்பத்தை பூமிக்கு அனுப்பாமல் தடுத்தன. `அட... இந்தக் கருமேகங்களுக்கு இவ்வளவு சக்தியா? நானும் கருமேகமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என நினைத்தான் அவன். 

இப்போது அவன் கருமேகமாக உருமாறியிருந்தான். இஷ்டப்பட்டால் மென்மையான மழையைப் பொழிவான். கொஞ்சம் கடுப்பேறியது என்றால் மழையைப் பொழிந்து தள்ளி, கிராமங்களையும் வயல்வெளிகளையும் வெள்ளக்காடாக மாற்றுவான். இவனைப் பார்த்து மனிதர்கள் அச்சப்படுவது இவனுக்கு பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது. ஆனாலும், இவனுக்குள் ஓர் உணர்வு. இவனை யாரோ பிடித்து தள்ளுவது போன்ற உணர்வு. அது யார் என்பதையும் அவன் தெரிந்துகொண்டான். அது, காற்று! `இந்தக் காற்றுக்கு என்னையே பிடித்துத் தள்ளும் அளவுக்கு சக்தியா? நான் ஒரு காற்றாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ நினைத்தான். காற்றாகவே மாறிப் போனான். 

காற்றா அவன்? தென்றலாகவும் வீசுவான்; நினைத்தால் சூறாவளியாகவும் மாறுவான். அவனுக்கென்னவோ சூறாவளியாக இருப்பதுதான் பிடித்திருந்தது. வீட்டுக் கூரைகளைப் பிய்த்து எறிவது; மரங்களைச் சாய்பது, ஆடுகளையும் மாடுகளையும்... ஏன் மனிதர்களையுமே நடுநடுங்க வைப்பது அவனுக்கு தினசரி பொழுதுபோக்காக ஆனது. அவன் மாபெரும் சக்தி படைத்தவனாகத் தன்னை எண்ணி இறுமாந்து போனான். காற்றாக அவன் அலைந்துகொண்டிருந்தபோது ஓர் இடத்தில் அதைக் கண்டான். மலை, சற்று உயரமான மலை. பெரும் சூறாவளியாக மாறி அதை நோக்கிப் போனான். அவனால், அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. வலுவையெல்லாம் கூட்டி மோதிப் பார்த்தும்... ம்ஹூம்... அதை துளிகூட அசைக்க முடியவில்லை. `என்னைவிட வலுவானதா இந்த மலை? நான் இப்படி ஒரு மலையாக மாறினால் எப்படி இருக்கும்!’ அவன் நினைத்தான். மலையாக மாறினான். 

உயர்ந்து நிற்பது அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னைவிட வலுவானது உலகில் வேறு எதுவும் இல்லை என்கிறே நினைப்பே மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அவனின் கால்களுக்குக் கீழே ஏதோ குடைச்சல். `டொக்... டொக்... டொக்...’ என சத்தம். யாரோ அவன் கால் விரலைக் குத்திக் கிழிக்கிறார்கள்; துளையிடுகிறார்கள்... இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனுடைய ஒரு விரலைக்கூட வெட்டி எடுத்தாலும் எடுத்துவிடலாம். அவன் பயத்தோடு யார் என்று குனிந்து பார்த்தான். கல் உடைக்கும் தொழிலாளியின் கை ஒன்று ஓர் உளியை மலை அடிவாரத்தில் பதித்து, ஓங்கி ஓங்கி சுத்தியலால் வெட்டிக்கொண்டிருந்தது.  

*** 

 

இந்தச் சம்பவங்கள் அவனுடைய கனவில் நிகழ்ந்திருக்கலாம்; ஜென் துறவி யாராவது அவனுக்கு உண்மையை உணர்த்த இந்த வரத்தைத் தந்திருக்கலாம்; அவன் மீது பரிதாபப்பட்ட தேவதையோ, தெய்வமோகூட இப்படியெல்லாம் அவன் உருமாற உதவியிருக்கலாம்; அல்லது இப்படி ஒன்று நடக்கவே நடக்காமலும் போயிருக்கலாம். இதைத் தாண்டி, இந்த ஜென் கதை உணர்த்துவது `நீ நீயாக இரு’ என்பதைத்தான். நம் ஊரில் இதைத்தான் `இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்படாதே!’ என்கிறார்கள். ஒவ்வொரு மனிதப் பிறவியுமே மகத்தானது. அதை சீரும் சிறப்புமாக, நேர்மையாக வாழ்ந்து கழிப்பதே நம் கடமை!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

Enter the Robot DRAGON!

 

உலகில் எந்த மூலையிலும் கிடைக்கும் குண்டூசி முதல் சூப்பர் டெக்னோ கம்ப்யூட்டர் வரை எதை பார்ட் பார்ட்டாக பிரித்தாலும் பொருட்கள் மாறுமே தவிர, ‘Made in China’ ஸ்டிக்கர் மட்டும் மாறவே மாறாது. எலைட் போனான ஆப்பிளிலும் கூட சீனாவின் சரக்குண்டு. தில்லுக்கு துட்டு என இறங்கி அடித்து, அமெரிக்காவுக்கே பீதி கிளப்பும்படி டன் கணக்கிலான மனித வளத்தின் மூலமே தன் சல்லீசு ரேட் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டியாளும் டிராகன் தேசம் அது.
2.jpg
கட்டரேட் கில்லி என்றாலும், ரோபாட்டுகளை பயன்படுத்தி அப்பேட் ஆவதில் கடைசி ஆளாகத்தான் சீனா நிற்கிறது. இப்படியே இருந்தால் எப்படி என தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டார்களோ என்னவோ... 2025ம் ஆண்டுக்குள் சில சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் களமிறங்கி இருக்கிறது.

ரயில்கள் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் துறையில் உள்ள ரோபாட்டுகளின் வளர்ச்சி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், டிரைவரில்லாத கார்கள், டிஜிட்டலாக இணையும் பொருட்கள்... என காலத்துக்கு ஏற்ப அப்டேட் ஆக முடிவு செய்துவிட்டார்கள். ‘‘சீன வளர்ச்சியின் அடிப்படையே புதிய விஷயங்களை வேகமாகக் கற்று அதனைப் பின்பற்றுவதுதான்.
2a.jpg
இங்கு கேள்வி அவை புதுமையானதா, இல்லையா என்பதுதான்!’’ என அதிரடிக்கிறார் மாசாசூசெட்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு ரோபாட் நிறுவனமான ஐரோபாட் நிறுவனத்தின் இயக்குநரான கோலின் ஏஞ்சல். ரோபாட்டுகளை பயன்படுத்துவதில் தென்கொரியா, ஜெர்மனி, அமெரிக்காவுக்குப் பிறகே சீனாவுக்கு இடம். இதை மாற்றத்தான் குவாங்டாங் பகுதியிலுள்ள இரண்டாயிரம் கம்பெனிகளுக்கு 137 பில்லியன் டாலர்களை மானியமாக அள்ளிக் கொடுத்துள்ளது சீன அரசு.

எதற்கு? வீட்டுப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் உள்பட அனைத்து தொழிற்சாலைகளையும் ரோபாட்டுகளால் நவீனப்படுத்தத்தான். உள்நாட்டிலுள்ள இ தியோடர், அன்ஹூயி, ஷியாசன் ஆகிய நிறுவனங்களோடு, ஜப்பானின் ஃபானக், அமெரிக்காவின் அடெப்ட் ஆகிய வெளிநாட்டு உதவிகளையும் மறுக்காமல் ஏற்று சீனா தன்னை ரோபாட்டிக்ஸ் துறையில் வளர்க்க நினைப்பது காலத்தின் கட்டாயம்.
2b.jpg
கடந்தாண்டு 90 ஆயிரம் ரோபாட்டுகளை வேகமாக நிறுவியிருப்பதும் கூட இந்த நோக்கத்தில்தான். இதில் அட்டகாச முன்னேற்றமாக ஸெங்சூ ரயில்வே ஸ்டேஷனிலுள்ள காற்று மாசு ரோபாட், 6 ஆயிரம் மீட்டர் கடலில் செல்லும் ஆழ்கடல் ரோபாட் ஆகிய இரண்டையும் குறிப்பிடலாம்.

‘மேக் இன் சீனா 2025’ என்ற ஐந்தாண்டு திட்டப்படி, 31% ரோபாட்டுகளாக இருக்கும் இப்போதைய நிலையை, 50% ஆக உயர்த்துவதுதான் இதன் லட்சியம். இதற்காக இலவச நிலம், குறைந்த வட்டியில் கடன்கள் என அரசு அள்ளித்தரும் சலுகைகளைப் பெற சீன நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இந்த சூழலில்தான் முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார் ஷின்குவா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் இணைய வர்த்தக தொழில்நுட்ப துறையின் இயக்குநரான சாய் யூதிங்.
2c.jpg
‘‘ஜப்பான், அமெரிக்காவிலிருந்து பாகங்களைப் பெற்று அதில் தங்கள் பிராண்ட் பெயரை இணைத்து ரோபாட்டுகளை உருவாக்கினால் சீனா எப்படி வளரமுடியும்? இங்கு பல புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இப்படித்தான் செயல்படுகின்றன!’’ என்கிறார். சரி. தொழிலாளர்களின் கதி? ‘‘திறமையான தொழிலாளர்கள் இப்போது குறைவு.

உயர்ந்து வரும் சம்பளம், ஒரே மாதிரியான வேலையை செய்ய விருப்பமில்லாத இன்றைய இளைஞர்களின் மனநிலை ஆகியவை எல்லாம் ரோபாட்டுக்கு ஆதரவாக இருக்கின்றன...’’ என்கிறார் ஏபிபி ரோபாட்டிக்ஸ் இயக்குநரான ஜேம்ஸ் லீ. இ தியோடர் என்ற ஸ்டார்ட் அப்பை 2015ம் ஆண்டு தொடங்கிய நிங்போ டெக்மேஷன் நிறுவனத்தின் மேலாளரான மேக்ஸ் சூ, ‘‘மக்கள் எங்களிடம் நீங்கள் எதுவரை ரோபாட்டுகளை தயாரிப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.
2d.jpg
பதில் ரொம்பவே சிம்பிள். தொழிற்சாலையில் ஒரு மனிதர் கூட வேலை செய்யக்கூடாது என்ற நிலை வரும் வரையில் தயாரிப்போம்...’’ என புன்னகைக்கிறார். ஆக, மனிதர்களுக்கும் ரோபாட்டுகளுக்குமான போட்டி தொடங்கிவிட்டது!

ரோபாட் டேட்டாஸ்

தென் கொரியா 531 ரோபாட்டுகள்.
ஜெர்மனி 301 ரோபாட்டுகள்.
அமெரிக்கா 176 ரோபாட்டுகள்.
சீனா 49 ரோபாட்டுகள்.
தானியங்கி ரோபாட்டிக்ஸ் சந்தை மதிப்பு 5.07 பில்லியன் டாலர்கள் (2016).
2021ல் உயரும் ரோபாட்டிக்ஸ் மதிப்பு - 8.44 பில்லியன் டாலர்கள்.
(researchandmarkets.com தகவல்படி)

சீன ரோபாட்டுகளில் பிறநாட்டுப் பொருட்கள் 69%
2020ல் உயரும் ரோபாட்டுகளின் அளவு 1 லட்சம்
உலகச்சந்தையில் சீனாவின் பங்கு 27 (தொழிற்சாலை ரோபாட் தயாரிப்பு)
ரோபாட்டுகள் இறக்குமதிச் செலவு 3 பில்லியன் டாலர்கள்
பில்லியன் டாலர்கள்
(stats.gov.cn தகவல்படி)

www.kungumam.co

  • தொடங்கியவர்

 

வெனிஸ் திருவிழாவில் கலைஞர்களுக்கான கற்பனை நாடு

தற்போது நடந்துவரும் வெனிஸ் பெனாலே சர்வதேச கலைத்திருவிழாவில், ஒவ்வொரு நாடும் தமது கலைப்படைப்புக்களை காட்சிப்படுத்த ஒரு கலையரங்கு ஒதுக்கப்படும் நடைமுறைக்கு கலைஞர்கள் சிலர் எதிர்ப்பை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.

  • தொடங்கியவர்

காரணம் ஆயிரம்: இரவைப் பகலாக்க முடியுமா?

 

 
kaaranam_3165285f.jpg
 
 
 

உங்களுக்குப் பகல் பிடிக்குமா, இரவு பிடிக்குமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? பகலைத்தான் சொல்வீர்கள் இல்லையா? பகலில்தான் பயமில்லாமல் இருக்கிறோம், நன்றாக விளையாடுகிறோம், விருப்பம் போலச் சுற்றுகிறோம். அது மட்டுமல்ல, இருட்டு என்றாலே கொஞ்சம் பயம். பகலில் சர்வசாதாரணமாக நடமாடிய பகுதிகளில் இரவில் செல்லவே பயப்படுகிறோம்.

உண்மையில் இரவுதான் உன்னதமானது. பகலைவிட இரவில்தான் நாம் நிறைய விழிப்புணர்வோடு இருக்கிறோம். மிகக் கவனமாக இருக்கிறோம். மிக மெதுவாக அடியெடுத்து வைக்கிறோம். சத்தங்களைக் கவனத்துடன் கேட்கிறோம். பொருட்களைத் தெளிவாகப் பார்த்து, அது என்ன பொருள் என்று முடிவு செய்கிறோம். சுருக்கமாகச் சொன்னால் நமது ஐம்புலன்களும் இருட்டில்தான் விழிப்போடு இருக்கின்றன.

ஆனாலும் உங்களைப் போற்ற குழந்தைகளுக்குப் பிடித்தது பகல் பொழுதுதான் அல்லவா? ‘காலை எழுந்தவுடன் படிப்பு. மாலை முழுவதும் விளையாட்டு’ என்று பகல் பொழுதில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, இரவில் தூங்கப் போய்விடலாம். இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது பகல் நேரம் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

இரவைப் பகலாக்கும் முயற்சியில். சில விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள். ‘என்னது? இரவைப் பகலாக்கும் முயற்சியா?, இது நடக்குமா, சாத்தியமா?’ என்று

இரவை எப்படிப் பகலாக்க முடியும் ?

பகல் இரவு ஆட்டம் நடக்கும் ஸ்டேடியம் மாதிரி ஒரு நாடு முழுக்க லைட் போட்டுவிட முடியுமா? அப்படிப் போட்டால் மின்சார விளக்குதானே எரியும்? பகலில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்காதே!.

சூரியன் பக்கம் பூமியைத் திருப்பினால்தான் இரவைப் பகலாக்க முடியும். பூமியைச் சூரியன் பக்கம் திருப்ப முடியாது. ஆனால், சூரியனின் ஒளியைத் திருப்ப முடியும் அல்லவா? அப்படியொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள், ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள்.

kaaranam_2_3165286a.jpg

அதாவது வானவெளியில் பிரம்மாண்டமான கண்ணாடிகளை நிறுவி, அங்கிருந்து சூரியனின் ஒளியைப் பூமிக்குப் பிரதிபலிக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் ஒரு வரி தத்துவம்.

வானவெளியில் அப்படியொரு பிரம்மாண்டமான கண்ணாடியை எப்படி நிறுவுவது? ஒரு பெரிய செயற்கைக்கோளில் கிட்டத்தட்டப் பத்தாயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கண்ணாடியை நிறுவி, அதிலிருந்து இருட்டான இடங்களுக்குச் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்ய முடியும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் ரஷ்ய விஞ்ஞானிகள். இன்னும் 50 ஆண்டுகளுக்குள் இந்தத் திட்டம் வெற்றி பெற்றுவிடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

இந்தப் பெரிய கண்ணாடி என்பது நாம் முகம் பார்க்கிற கண்ணாடி மாதிரி இருக்காது. சூரிய ஒளியைப் பிரதிபலிக்கச் செய்வதற்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்டுள்ள அந்தக் கண்ணாடி - சூரியப் பிரதிபலிப்பான் (Solar Reflector).

பத்து பவுர்ணமி நிலவுகள் சேர்ந்து பூமிக்கு வெளிச்சம் கொடுத்தால் எவ்வளவு வெளிச்சம் கிடைக்குமோ, அந்த அளவுக்கு இந்தச் சூரியப் பிரதிபலிப்பான் மூலம் ஒளியைப் பெற முடியும். இதன் மூலமாகச் சில முக்கிய நகரங்களின், சில சிறிய நாடுகளின் பகல்பொழுதை நீடிக்கச் செய்ய முடியும்.

இப்படி இரவைப் பகலாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்குவதற்குக் காரணம், பகல் எல்லோருக்கும் பிடித்ததாக இருப்பதுதான். அது மட்டுமல்ல, பகலை அதிகரிக்கச் செய்வதன் மூலம் மனித குலத்துக்கு நிறைய நன்மைகளைச் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது, குளிர்காலங்களைவிட வெயில் காலங்களில்தான் குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள். குளிர்காலத்தில் குழந்தைகள் வளர்வதைவிட வெயில் காலத்தில் இரண்டு மடங்கு அதிகமாக வளர்ச்சி அடைகிறார்கள். நுட்பமாகச் சொன்னால் இரவைவிட பகலில் குழந்தைகளின் வளர்ச்சி ஹார்மோன்கள் அதிகம் தூண்டப்படுகின்றன. கண்ணுக்குத் தெரியாத வளர்ச்சி நமக்கு 40 வயது வரை நடந்துகொண்டே இருக்கிறது.

மேலும் பயிர்களில் ஒளிச்சேர்க்கை நிகழ்ந்து பகலில் நன்றாக வளர்ச்சி அடைகின்றன. குளிர் பனியில் பயிர்களுக்கு ஏற்படும் நோய்களைக் குறைத்து, விளைச்சலை அதிகரிக்கச் செய்ய முடியும். இதனால் உணவு உற்பத்தியை அதிகரிக்கலாம்.

ஆக, பகலை அதிகரிப்பதன் மூலம் மனித குலத்துக்குப் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு. அதே நேரம் இயற்கைக்கு மாறாக செய்யப்படும் இந்த முயற்சியே தேவையற்றது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இரவைப் பகலாக்க முடியுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

(காரணங்களை அலசுவோம்)

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

திருப்பதியைத் தாக்கிய ‘ரான்சம்வேர்’ வைரஸ்!

 

உலகை அதிரவைத்து வரும் ‘ரான்சம்வேர்’ வைரஸ் தற்போது ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்திலுள்ள கணினிகளைத் தாக்கியுள்ளது.

திருப்பதி

கடந்த சில நாள்களாகவே உலக நாடுகளைப் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதல். ஒவ்வொருவரது கணினியிலும் உள்ள முக்கியத் தகவல்களை எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளைத் தாக்கியுள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான சர்வர்களைத் தாக்கி தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்ட இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸ் பல மடங்கு வேகத்தில் செயல்படவுள்ளது என சைபர் க்ரைம் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் டிரம்ப் அரசாங்கமும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க பலவாறு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியுள்ளது. இதனால், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதில் பாதிப்பு ஏதும் ஏற்படாது எனவும் சர்வர்கள் சரி செய்யப்பட்டுவிட்டன என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 

இந்த வைரஸ் தாக்குதலின் பின்னணி குறித்துத் தெரியாதிருந்தநிலையில், தற்போது இதில் பயன்படுத்தப்படும் குறீயீடுகள் வடகொரியாவைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் புதிய பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்!

 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ‘குளோபல் கேம் சேஞ்சர்’ பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானி

4ஜி நெட்வொர்க் சேவை மூலம் தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. அம்பானிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை புதிய வெற்றியாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தனது தொழிற்சாலைகள் மூலம் பலரது வாழ்வையும் மாற்றி அமைத்ததற்காக முகேஷ் அம்பானிக்கு ‘குளோபல் கேம் சேஞ்சர்’ விருதுப் பட்டியலில் முதலிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

’குளோபல் கேம் சேஞ்சர்ஸ்’ பட்டியல் என்பது உலகிலுள்ள முன்னணி தொழிலதிபர்களில் துணிச்சல் மிகுந்தவர்கள், சிறந்த நிர்வாகிகள், தங்களது தொழில் திறமையால் பல்லாயிரக்கணக்கானோர் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்களின் பட்டியல் ஆகும். இப்பட்டியலில் அனைத்திலும் சிறந்து விளங்கி முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் 25 பேர் கொண்ட இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா போன்ற நாடுகளைச் சேர்ந்த முன்னணித் தொழிலதிபர்கள் இடம்பெற்றுள்ளானர்.

 

4ஜி அலைக்கற்றை போன்ற தொலைத்தொடர்பு துறையில் மட்டுமல்லாது பெட்ரோல், எரிவாயு, உணவகத்தொழில், ஆடைகள் என பல தொழில்களிலும் முன்னணியில் உள்ளார். இதுபோன்ற சிறந்த தொழிலதிபர்களுக்கான பட்டியலைத் தான் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கெளதம் கார்த்திக்கின் 'ரங்கூன்' பட ட்ரெய்லர்..!

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி, கெளதம் கார்த்திக் நடித்திருக்கும் படம் 'ரங்கூன்'.

ar_18498.jpg

சிறிது நாள்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இன்று சிவகார்த்திகேயன் ட்விட்டரில் 'ரங்கூன்' படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

  • தொடங்கியவர்

அபூர்வ திமிங்கிலங்களின் அறியப்படாத கொம்பு வேட்டை

நார்வெல் எனப்படும் பிரத்யேக கொம்புடைய திமிங்கிலங்கள் தங்கள் கொம்புகளை எதற்கு பயன்படுத்துகின்றன என்பது இதுவரை புரியாத புதிராக இருந்தது.


இவை தொலைதூரங்களில் வாழ்வதோடு கண்காணிக்கப்படுவதை விரும்புவதில்லை. எனவே இவைகுறித்த பரவலான புரிதல் இல்லை.


தற்போது ஆளில்லா விமானங்களை பயன்படுத்திய கேனடா விஞ்ஞானிகள் இவை குறித்த புதிய தகவல்களை கண்டறிந்துள்ளனர்.


நார்வல் திமிங்கிலங்களின் வேட்டைப்பல்லே அவற்றின் கொம்பாக நீள்கிறது. திமிங்கிலங்கள் தம் உணவை வேட்டையாட இது உதவுகிறது.


ஆர்க்டிக் காட் மீன்கள் மீது தம் கொம்புகள் மூலம் இந்த திமிங்கிலங்கள் வேகமாக தாக்குகின்றன.


அதனால் அந்த சிறு மீன்கள் நிலைகுலையும் போது அவற்றை இவை எளிதில் வேட்டையாடி உண்கின்றன.

  • தொடங்கியவர்

பிரெட்ரிக் எம்.ஜோன்ஸ்

 
gh_3165261f.jpg
 
 
 

அமெரிக்க கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர்

அமெரிக்க கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான பிரெட்ரிக் மெக்கின்லி ஜோன்ஸ் (Frederick McKinley Jones) பிறந்த தினம் இன்று (மே 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர் அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் சின்சினாட்டியில் (1893) பிறந்தார். பிறந்ததும் தாயை இழந்த வர், 9 வயதில் தந்தையையும் இழந் தார். கென்டகியில் ஒரு பாதிரியாரின் பராமரிப்பில் வளர்ந்தார். 6-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார்.

* சிறுவயது முதல், இயற்கையாகவே இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்டி ருந்தார். எதைப் பார்த்தாலும் அக்குவேறு ஆணிவேறாகக் கழற்றி, மீண்டும் சரியாகப் பொருத்திவிடுவார். கிடைத்த வேலைகளைச் செய்துவந்தார். ஓய்வு நேரத்தில் இயந்திரங்கள், மின்சாதனங்கள், தொழில்நுட்பம் தொடர்பாக கையில் கிடைக்கும் புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்.

* 14-வது வயதில் ஒரு ஆட்டோமொபைல் கேரேஜில் மெக்கானிக்காகப் பணியாற்றத் தொடங்கினார். கார்கள் இவரை வசீகரித்தன. பந்தய கார்களை வடிவமைத்தார். பிரபல பொறியாளர் ஒருவர் இவரது திறமையைக் கண்டார். அவரது உதவியுடன் பொறியாளர் தேர்வு எழுதி அதற்கான உரிமம் பெற்றார்.

* அமெரிக்க ராணுவத்தில் எலெக்ட்ரீஷியனாக சேர்ந்தார். பின்னர் ராணுவ சேவையில் இருந்து விடுபட்டு, எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கும் முனைப்புகளில் ஈடுபட்டார். தானாகவே ஸ்டார்ட் ஆகும் கேஸோலின் மோட்டார் தயாரித்தார். அப்போது வளர்ந்துவந்த சினிமா துறைக்கான பல சாதனங்களைக் கண்டறிந்தார்.

* தனக்கு எது தேவை என்றாலும் கண்டுபிடித்துவிட முடியும் என்னும் நம்பிக்கை இவரிடம் இருந்தது. கடுமையான பனிப்பொழிவு நாட்களில் வேகமாகவும், சுலபமாகவும் பனியில் சென்றுவர ஒரு வாகனம் தயாரிக்க விரும்பினார். உடனே செயலில் இறங்கினார். தூக்கி எறியப்பட்ட விமான பாகம் உள்ளிட்ட தேவையில்லாத பொருட்களைக் கொண்டு ‘ஸ்நோமொபைல்’ வாகனத்தைத் தயாரித்தார்.

* தொடர்ந்து பல்வேறு துறைகளில் ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே இருந்தார். 1935-ல் முதல் தானியங்கி குளிர்பதன அமைப்பை வடிவமைத்தார். வாகனங்கள், கார்கள், கப்பல்களில் எடுத்துச் செல்லப்படும் உணவுப் பொருட்கள் வெகுநாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க இது உதவியது.

* இரண்டாம் உலகப்போரின்போது, ராணுவத்தினருக்கு உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல இது பயனுள்ளதாக இருந்தது. இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேலும் பலவற்றைக் கண்டுபிடித்தார். இவர் கண்டறிந்த மொபைல் ஏர் கண்டிஷனிங் யூனிட், ரத்தம் சேகரிக்கவும், மருந்துகளைப் பாதுகாக்கவும் பயன்பட்டது. எக்ஸ்ரே இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்டவற்றைக் கண்டுபிடித்தார்.

* தனது கண்டுபிடிப்புகளை அதிக அளவில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தன் பழைய முதலாளியுடன் சேர்ந்து தெர்மோ கிங் நிறுவனத்தைத் தொடங்கினார். இவரது குளிர்பதன சாதனங்கள் அமெரிக்க உணவுத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி, பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது.

* வயர்லெஸ் ஒலிபரப்பு டிரான்ஸ்மிட்டர், டூ-சைக்கிள் காஸ் இன்ஜின், ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர், ரோட்டரி கம்ப்ரஸர் என 60-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் பெற்றார். உரிமம் பெறாத இவரது கண்டுபிடிப்புகளும் ஏராளமாக உள்ளன.

* அமெரிக்காவின் தொழில்நுட்பச் சாதனைக்கான மிக உயரிய கவுரவமான தேசியப் பதக்கம் வென்றார். ‘கிங் ஆஃப் கூல்’ என அழைக்கப்பட்டார். அமெரிக்காவின் மிக முக்கிய கண்டுபிடிப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிரெட்ரிக் மெக்கின்லி ஜோன்ஸ் 68-வது வயதில் (1961) மறைந்தார்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஐபிஎல் ‘சியர்ஸ் கேர்ள்ஸ்’-இன் சம்பளத்தை கேட்டா ஆடிபோய்டுவீங்க..!

 

ஐபில் கிரிக்கெட் போட்டிகளைக் கூடுதல் கவர்ச்சியுடன் காண்பிக்கச் சியர்ஸ் கேர்ள்ஸ் நடனம் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறினால் அது மிகையல்ல. ஐபிஎல் போட்டிகளில் கிரெக்கெட் வீரர்கள் அடிக்கும் ஒவ்வொரு பவுன்டிரிக்கும், விக்கெட்டுக்கும் இவர்கள் ஆடும் நடனம் தொலைக்காட்சியில் பார்வையாளர்களுக்கு ஒரு விருந்தாகவும் அமையும்.

அதே நேரம் இவர்கள் நடனம் ஆடுவதைப் பார்க்கும் பலருக்கு இவர்கள் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்றும் எந்நத்தில் ஓடியிருக்கும். அப்படிப்பட்டவர்களா நீங்கள், இதோ 4 வருடம் இஞ்சினியரிங் படித்து வேலைபார்ப்பவர்களை விட அதிகச் சம்பளம் வாங்குபவர்களின் விவரங்கள் உங்களுக்காக..

அறிக்கை

அறிக்கை

நமக்குக் கிடைத்த தகவலின் படி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சியர்ஸ் கர்ல்ஸாக நடனம் ஆடுபவர்களுக்கு ஒரு போட்டிக்கு 18,000 முதல் 30,000 வரை சம்பளமாக வழங்கப்படுகின்றது. இதுவே அவர்கள் நடனம் ஆடும் அணி வெற்றி பெற்றால் போனஸ் தொகையும் உண்டு.

ஐபிஎல் சீசன்

ஐபிஎல் சீசன்

ஐபிஎல் சீசன் 10 இப்போது நடந்து வரும் நிலையில் குறைந்த பட்சம் ஒவ்வொரு அணிகளும் 14 போட்டிகளில் விளையாடுகின்றனர். அப்படியானால் 14 போட்டிக்கு இந்தச் சியர்ஸ் கர்ல்ஸ் 4 லட்சம் சம்பளமாகப் பெறுவார்கள். இதுவே கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் ஆகியவற்றுக்கு அணிகள் செல்லும் போது கூடுதலாகப் பணத்தை அள்ளுவார்கள்.

 

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெறும் அணிகளுடன் நடத்தப்படும் போட்டோ ஷூட்டில் பங்கு பெற்றால் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

போனஸ்

போனஸ்

தங்கள் ஆதரித்து நடனமாடும் ஐபிஎல் அணி போட்டிகளில் வெற்றி பெறும் போது குறைந்தது 3,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை போனஸ் அளிக்கப்படும்.

போட்டிக்குச் சம்பளம்

 

போட்டிக்குச் சம்பளம்

ஒரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடனம் ஆடினால் 9,000 ரூபாய் முதல் 18,000 ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகிறார்கள்.

பார்டி அல்லது நிகழ்ச்சிகள்

பார்டி அல்லது நிகழ்ச்சிகள்

தங்கள் அணி சார்பாக அல்லது ஐபிஎல் நிர்வாகம் நடத்தும் பார்ட்டி அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அதற்கு 10,000 சம்பளமாக வழங்கப்படுகின்றது.

 

கூடுதல் தோற்றம்

கூடுதல் தோற்றம்

போட்டிகளின் போது கூடுதலாகத் தங்களது தோற்றத்தைக் காட்டி நடனம் ஆடும் போது 7,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகின்றனர்.

இந்திய சியர்ஸ் கர்ல்ஸ் சம்பளம்

இந்திய சியர்ஸ் கர்ல்ஸ்

சம்பளம் அன்மை காலமாக இந்திய சியர்ஸ் கர்ஸ்களும் போட்டிக்கிடையில் நடனம் ஆடுவதைப் பார்க்க முடியும். இவர்களுக்குச் சம்பளமாக 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை அளிக்கப்படுகின்றது.

கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் சியர்ஸ் கர்ல்ஸ்

கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் சியர்ஸ் கர்ல்ஸ்

கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் அணிக்காகச் சியர்ஸ் கர்ல்ஸ் ஆக நடனம் ஆடுபவர்கள் சம்பளமாக 15,000 ரூபாயும், போனஸ் 4,000 ரூபாயும், கூடுதலாக நடனம் ஆட 12,000 ரூபாயும் சம்பளமாகப் பெறுகின்றனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சியர்ஸ் கர்ல்ஸ் சம்பளமாக 12,000 ரூபாயும், போனஸ் 4,000 ரூபாயும், பார்டி அல்லது நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் போது 12,000 ரூபாயும் பெறுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பிற அணிகள்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பிற அணிகள்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பிற அணி சியர்ஸ் கர்ல்ஸ் 8,000 முதல் 10,000 ரூபாய் வரையிலும், போனஸ் 4,000 ரூபாயும் பெறுகின்றனர். பார்டி அல்லது நிகழ்ச்சிகளில் பங்கு பெறப் போட்டியை பொருத்துச் சம்பளம் அளிக்கப்படுகின்றது.

குறிப்பு

குறிப்பு

இந்தச் சம்பளங்கள் லீக், கால் இறுதி, அரை இறுதி, இறுதி போட்டிகளைப் பொருத்து மாறும்.

http://tamil.oneindia.com/

 

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தான் பெண் விமானியின் உலக சாதனை பயணம்..!

ஆப்கானிஸ்தானில் பிறந்த பெண் விமானி ஒருவர் தனியாக உலகம் முழுவதும் விமானத்தில் சுற்றி உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

_NCS_modified_20170516182512_MaxW_640_im

ஷயஸ்தா வயஷ் என்ற பெண் விமானி, சுமார் 40,000 கிலோ மீற்றர் தூரம் பறந்து உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார். 

மேலும் தனியாக தனது பயணத்தை அமெரிக்காவின் புளோரிடாவில் மாநிலத்திலுள்ள டேடோனா கடற்கரை விமான நிலையத்திலிருந்து இம்மாதம் 13 ஆம் திகதி ஆரம்பித்துள்ள நிலையில், அவர் ஸ்பெயின், எகிப்து மற்றும் இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

image__1_.jpg

சோவியத் போர் இடம்பெற்ற காலத்தில் ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாமில் பிறந்துள்ள இவர், அமெரிக்காவில் விமானி பயிற்சியை பெற்று, ஆப்கானிஸ்தான் பயணிகள் விமானத்தின் மிக இளமையான விமானியாக பணியாற்றுபவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk

  • தொடங்கியவர்

உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17)

ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 
உலக உயர் ரத்த அழுத்த தினம் (மே 17)
 

ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும்.

உலக சுகாதார அமைப்பானது, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒரு உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை 2005-ல் தொடங்கியது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் மே 17-ம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினமாக அனுசரிக்க முடிவு செய்து அறிவித்தது.

இந்த நாளில் உலக நாடுகள் அனைத்தும், அரசாங்கங்கள், தொழில்முறை சமுதாயங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து பொது பேரணிகள் மூலம் உயர் ரத்த அழுத்த விழிப்புணர்வை ஊக்குவித்து வருகின்றன. இணையதளம் மற்றும் தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இடம்பெறுகின்றன.

http://www.maalaimalar.com

  • தொடங்கியவர்

பிரபல கடல் உடும்பு காணொளிக்கு பாஃப்தா விருது

புதிதாகப் பிறந்த கடல் உடும்பு குஞ்சு ஒன்று பெரும் பாம்புப் படையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைக்கும் பிபிசி பிளானெட் எர்த் 2ன் காணொளி.

  • தொடங்கியவர்

புதிய ஓ.எஸ், கூகுள் VR, ஆண்ட்ராய்டு ஓ... என்னென்ன ஆச்சர்யங்கள் தரவிருக்கிறார் சுந்தர்பிச்சை? #GoogleIO

வ்வொரு வருடமும் I/O டெவலப்பர் மாநாட்டினை நடத்தி புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவது கூகுளின் வழக்கம். எப்படி கட்சியின் திருப்புமுனை மாநாடுகள் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதுபோலவே டெக் உலகில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்று இந்த கூகுள் டெவலப்பர்கள் மாநாடு. கடந்த வருடம் மே மாதம் நடந்த டெவலப்பர்கள் மாநாட்டில்தான் கூகுள் டூயோ, அலோ ஆப், கூகுள் அசிஸ்டன்ட் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது கூகுள். அதேபோல இந்த வருடமும் ஆண்ட்ராய்டு ஓ, ஆண்ட்ராய்டு வியர்கள் என ஆச்சர்ய அறிவிப்புகளை கூகுளின் சி.இ.ஓ சுந்தர்பிச்சை வெளியிடுவார் எனக் காத்திருக்கின்றனர் டெக்கீஸ். இந்த ஆண்டிற்கான கூகுள் I/O டெவலப்பர் நிகழ்ச்சி இன்று இரவு 10.30 மணி முதல் தொடங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த டெவலப்பர் மாநாட்டிற்கு முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகளும், யூகங்களும் கிளம்பும்.  அப்படி இந்த முறை அதிகம் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் இவைதாம்!

சுந்தர்பிச்சை

ஆண்ட்ராய்டு ஓ:

நௌகட்டிற்கு அடுத்து, ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன்தான் இந்த ஆண்ட்ராய்டு ஓ. சில நாட்களுக்கு முன்னர்தான் இதன் டெவலப்பர் ப்ரிவ்யூவை வெளியிட்டது கூகுள். மேற்படி எந்த விவரங்களும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த நிகழ்வில் இதுகுறித்த கூடுதல் தகவல்களை கூகுள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த பேட்டரி பயன்பாடு, நோட்டிஃபிகேஷன் சானல்கள், ஆட்டோஃபில் API போன்றவை இதன் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள். 

ஆண்ட்ராய்டு ஆட்டோ : அடுத்து என்ன?

ஆண்ட்ராய்டு ஆட்டோ

ஆண்ட்ராய்டு ஆபரேட்டிங் சிஸ்டம் மொபைலைப் பொறுத்தவரை ராஜாதான். ஆனால் மொபைல், டேப்லட் போன்றவற்றோடு மட்டும் ஆண்ட்ராய்டின் சாம்ராஜ்யத்தை நிறுத்தாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நினைக்கிறது கூகுள். இதன் முதல்கட்டமாக ஆடி மற்றும் வால்வோ கார்களின் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன்களில் ஆண்ட்ராய்டு இடம் பெறவிருக்கிறது. இதன்மூலம் காரின் இன்ஃபோடெயின்மென்ட் திரையிலேயே ஆண்ட்ராய்டு  மற்றும் கூகுளின் வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். இதற்கான அறிவிப்பு சமீபத்தில்தான் வந்தது. எனவே இதுகுறித்த கூடுதல் தகவல்கள் இந்த நிகழ்வில் இடம் பெறலாம்.

கூகுள் அசிஸ்டன்ட்:

கடந்த வருட டெவலப்பர் நிகழ்வில்தான் கூகுளின் AI அசிஸ்டன்ட் என்ட்ரி கொடுத்தது. இந்த ஆண்டும் அதிகம் கவனிக்கப்படும் அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது கூகுள் அசிஸ்டன்ட். கூகுளின் வாய்ஸ் அசிஸ்டன்ட்டாக மட்டும் இல்லாமல், வேறு பிளாட்பார்ம்களில் ஆண்ட்ராய்டு, ஹோம் அப்ளிகேஷன்களில் ஆண்ட்ராய்டு போன்றவை கூகுளின் அடுத்த மூவ் ஆக இருக்கலாம். இதன்மூலம் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட்களின் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும் என்பதால், இதுகுறித்த விவரங்களும் டாக் ஆப் தி ஈவன்ட் ஆக இருக்கும்.

கூகுள் டெவலப்பர்கள் மாநாடு Google IO 2017

ஆண்ட்ராய்டு வியர்:

அதிகம் சென்றடையாத கூகுளின் புராஜெக்ட்களில் ஒன்றாக இருக்கிறது ஆண்ட்ராய்டு வியர். எனவே இதுகுறித்த மேம்பாடுகள் தொடர்பான தகவல்கள் இன்றைய நிகழ்வில் இடம்பெறலாம்.

புதிய மாற்றங்கள்:

 

மேலே பார்த்த விஷயங்கள் அனைத்தும் ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான். ஆனால் இவற்றைத் தவிர்த்து இன்னும் புதிய விஷயங்களை கூகுள் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்டட் ரியாலிட்டி, கூகுளின் புதிய ஓ.ஸ். ஆன பியூசியா போன்றவை குறித்த புதிய அப்டேட்ஸ் வெளிவரலாம். இந்த நிகழ்வு இன்று இரவு 10.30 மணிக்கு துவங்குகிறது.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

வைரலாகும் ஷாருக்கானின் மார்க் ஷீட்..!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை 'DU Times'  என்னும் ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Bild könnte enthalten: 1 Person

நாடு முழுவதும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான  'DU Times'  என்னும் ஊடகம் நடிகர் ஷாருக்கானின் ப்ளஸ் 2 மார்க் ஷீட்டை வெளியிட்டுள்ளது. ஷாருக்கான் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேருவதற்காகத் தன் பன்னிரண்டாம் வகுப்பு மார்க் ஷீட்டை சமர்ப்பித்துள்ளார். தற்போது 'DU Times' அதைத் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த மார்க் ஷீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், அவர் மற்ற பாடப்பிரிவுகளை விட ஆங்கிலத்தில் 51/100 எனக் குறைவான மதிப்பெண்ணே எடுத்துள்ளார். ஆங்கில பேச்சில் புலமையான அவர் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளாரே என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

http://www.vikatan.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: மே 18
 
 

article_1431935714-prabhakaran.jpg1498: போர்துக்கேய மாலுமி வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிகோடு துறைமுகத்தை அடைந்தார்.

1756: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் 7 ஆண்டு போர் தொடங்கியது.

1803: பிரான்ஸுக்கு எதிராக பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.

1804: நெப்போலியன் போனபார்ட் பிரான்ஸின் மன்னராக பிரெஞ்சு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார்.

1917: அமெரிக்காவில் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அந்நாட்டு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

1927: மிச்சிகனில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் பெரும்பாலும் குழந்தைகள் அடங்கிய 45பேர் கொல்லப்பட்டனர்.

1944: கிரிமிய தார்த்தார்கள் சோவியத் அரசினால் வெளியேற்றப்பட்டனர்.

1956: உலகின் 4ஆவது பெரிய மலையான லகோத்ஸே மலையின் உச்சியை முதன் முதலில் சுவிட்சர்லாந்து மலையேறிகள் எட்டினர்.

1969: அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1974: இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

1980: வாஷிங்டனில் சென் ஹெலன்ஸ் மலை தீக்கக்கியதில் 57 பேர் கொல்லப்பட்டனர். 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டது.

1984: அன்னலிங்கம் பகீரதன் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது விடுதலைப் புலிப் போராளி என்ற பெருமையைப் பெற்றார்.

1990: பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3 கி.மீ/மணி) சென்றது.

1991: ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.

1991: வடக்கு சோமாலியா சோமாலிலாந்து என்ற பெயரில் மீதமான சோமாலியாவில் இருந்து விடுதலையை அறிவித்தது. ஆனாலும், அனைத்துலகம் இதனை அங்கீகரிக்கவில்லை.

2006: இந்து ராஜ்யமான நேபாளத்தில் முடியாட்சியை நீக்கவும் மதசார்பற்ற நாடாக மாற்றவும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2009: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலியானதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

.tamilmirror.lk/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
‘அழுவது அழகு அல்ல; இழிவு’
 

article_1495018979-uft.jpgகாதலில் தோற்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுக் கொள்ள வேண்டும் எனச் சபதம் எடுக்க வேண்டும். அதனை விடுத்துக் கோழைகள்போல் அழுவது அழகு அல்ல; இழிவு. 

உண்மையான காதலில் தோற்றால், கவலை வராதா? அதனை அனுபவித்தால்தான் அதன் அருமை புரியும் எனக் காதலர்கள் புலம்புவதும் வியப்பு அல்ல.

எந்தத் தோல்விக்கும் பின்னர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்திக்காமல் சோகத்துடன் சிநேகம் கொள்வதனால் என்ன பயன்?  

சாதனைகள் செய்த பலரது வாழ்க்கையிலும் சோதனைகள் ஏற்படாமல் இருக்காது. காதல் தோல்வியால் தன்னை அழிக்க எண்ணுதலே சுயநலப் போக்குத்தான்.  

உலகில் இருந்து எல்லா நலன்களையும் பெற்று விட்டவர்கள், ஒருவிதத்தில் கடன்காரர்கள்தான். கடனைத் திருப்பிச் செலுத்துவது யார்? தோல்வியால் மரணிக்க விரும்புவது துரோகம். 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும் உலகின் அதிக நீளமான பூனை!

 
 
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற காத்திருக்கும் உலகின் நீண்ட பூனைபடத்தின் காப்புரிமை@OMAR_MAINECOON

தனது உரிமையாளர் ஸ்டெஃபி ஹிஸ்டால் 2013 ஆம் ஆண்டு வீட்டிற்கு அழைத்து வரும் போது பிற பூனைகளின் எடையில் தான் இருந்ததுஒமர்.

ஆனால் தற்போது 120 செ.மீ ( 3அடி 11 இன்ச்) நீளம் இருக்கும் ஒமர், உலகின் நீண்ட பூனையாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்த நீண்ட பூனையின் புகைப்படம் இணையத்தில் பரவியதை அடுத்து, கின்னஸ் உலக சாதனை அமைப்பு, தன்னைத் தொடர்பு கொண்டு பூனையின் அளவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கிறார் அதன் உரிமையாளர் ஹிஸ்ட்.

தற்போது 118 செ.மீ உள்ள பூனையே உலகின் நீண்ட பூனையாக உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன், ஒமருக்கான சமூக ஊடக கணக்கை தொடங்கினார் ஹிஸ்ட், அதில் அவர் பகிர்ந்த புகைப்படம் பூனைகளுக்கான இன்ஸ்டாகிராம் கணக்கில் 270,000 முறை பகிரப்பட்டது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற காத்திருக்கும் உலகின் நீண்ட பூனைபடத்தின் காப்புரிமை@OMAR_MAINECOON

அதிலிருந்து, அந்த சாதுவான பூனை பற்றிய செய்தி முக்கிய ஆஸ்திரேலிய செய்தித்தாள்களிலும், தேசிய தொலைக்காட்சிகளிலும் வந்தது.

இத்தனை கவனத்தை ஒமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; காலையில் அவன் மிகவும் சோர்வடைந்துவிட்டான் என பிபிசியிடம் தெரிவிக்கிறார் ஹிஸ்ட்.

ஒமர் 5 மணிக்கு எழுந்துவிடும், சிற்றுண்டியாக இரண்டு மூன்று தேக்கரண்டி உலர்ந்த பூனை உணவு, வீட்டைச் சுற்றி வரும், புழக்கடையில் விளையாடும், எகிறி குதித்து பயிற்சி செய்ய உதவும். மேசை மீது சிறு தூக்கம், மற்றும் பச்சை கங்காரு கறியை உண்ணும்.

"மனிதர்கள் உண்ணக்கூடிய கங்காரு கறியைத் தான் நாங்கள் வாங்குகிறோம்", அதை மட்டும்தான் ஒமர் உண்ண விரும்புகிறான் என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் ஹிஸ்ட்.

இந்த நீளமான பூனை அதிக குணாதிசயங்களை கொண்டுள்ளது; மேலும் அதன் முடி வீடு முழுவதும் உதிர்கிறது.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற காத்திருக்கும் உலகின் நீண்ட பூனைபடத்தின் காப்புரிமை@OMAR_MAINECOON

14 கிலோ எடையுள்ள ஒமரை தூக்குவது சிரமமாக உள்ளதால், விலங்குகள் நல மருத்துவர்களிடம் கூட்டிச் செல்லும் போது நாய்களுக்கான கூண்டை ஹிஸ்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது.

"மெத்தையில் ஒமருக்கு அதிக இடம் தேவைப்படுவதால் அவனை உறங்கும் அறைக்கு வெளியே பூட்ட வேண்டியுள்ளது" என ஹிஸ்ட் கூறுகிறார்.

சமையலறை அலமாரிகள், குளியலறை கதவுகள் மற்றும் துணி அலமாரிகள் என ஒமருக்கு கதவுகளை திறக்கும் திறன் உள்ளது.

எனது அனைத்து நண்பர்களும் எனது புகைப்படத்தை பார்த்து அது போலியா அல்லது இது உண்மையானதாக இருக்க முடியாது என கூறுகின்றனர். பிறகு ஒமரை நேரில் பார்த்ததும் அவர்கள் நம்புகின்றனர்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற காத்திருக்கும் உலகின்படத்தின் காப்புரிமை@OMAR_MAINECOON

கின்னஸ் சாதனைக்கான ஆதாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டால் அங்கிருந்து பதில் வர 12 வாரங்கள் ஆகும்.

ஆஸ்திரேலிய பிரதிநிதிகள் ஹிஸ்டின் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கவில்லை.

ஒமர் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்றே விரும்புவதாகவும், மேசை மீது குட்டித் தூக்கம், கங்காரு கறி, இரவில் எங்களை உறங்கவிடாமல் செய்வது போன்றவற்றை விரும்புவதாகவும் ஒரு வழக்கமான வீட்டுப்பூனையின் வாழ்விற்கு திரும்ப வேண்டும் என்பது தான் ஒமருக்கு மகிழ்ச்சி என்றும் ஹிஸ்ட் தெரிவிக்கிறார்.

ஆனால், புகழ் அதைத் துரத்துகிறது!

http://www.bbc.com

  • தொடங்கியவர்

நயன்தாரா முதல் அனுஷ்கா வரை... யார் யாரிடம் என்ன கார்? அதில் என்ன ஸ்பெஷல்?

 

‘ஓர் இடத்துக்குப் போக, வர எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கு’ என்பதைத் தாண்டி, கார் வைத்திருப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகிவிட்டது. நீங்கள் பயன்படுத்தும் காரை வைத்தே உங்கள் செல்வாக்கைத் தெரிந்து கொள்ளலாம். காமன் மேன்களுக்கே இப்படி என்றால், சினிமா வுமன்களுக்குக் கார் என்பது கெத்து. சினிமா பிரபலங்கள் கார் வைத்திருப்பதிலும் ராசி பார்ப்பார்கள். பிஎம்டபிள்யூ, ஆடி கார்களுக்குத்தான் சினிமாவில் மவுசு. பாலா, மாதவன், சிவக்குமார் என்று பென்ஸ் கார் வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள் ரொம்ப சொற்பம். நடிகர்கள் ஓகே! நடிகைகள் எப்படி? கோலிவுட் முதல் பாலிவுட் வரை, நடிகைகளின் கார் கலெக்ஷன் இது.

அனுஷ்கா

குந்தலதேசத்து யுவராணி ‘தேவசேனா’, எளிமைக்கு எடுத்துக்காட்டு. கர்நாடகத்தைச் சேர்ந்த அனுஷ்கா ஷெட்டி, ஆரம்பத்தில் காரே அனுஷ்காஇல்லாமல்தான் இருந்தாராம். யோகா ஆசிரியராக இருந்தபோது, வாடகை கார்களில்தான் பயணிப்பாராம். தயாரிப்புத் தரப்பில் வரும் கார்களில்தான் ஷூட்டிங்கே போவார். ‘எவ்வளவு பெரிய நடிகை; சொந்தமா கார் இல்லேனா எப்படி?’ என்ற குடும்பத்தினரின் ஆதங்கத்தின்படி, முதன் முதலாக 1.5 கோடி ரூபாய்க்கு ஜாகுவார் XJ மாடல் காரை வாங்கினார். இதை செலெக்ட் செய்தது அனுஷ்காவின் அண்ணன். அதற்கப்புறம் விழாக்களுக்குச் செல்வதற்கு ஒரு பிஎம்டபிள்யூ X5 காரும் பயன்படுத்தி வருகிறார். இந்தக் காரின் விலை சுமார் 70 லட்சம். ஷூட்டிங்குக்கு இப்போது ஜாகுவார்தான் அனுஷ்காவின் சாய்ஸ்.

நயன்தாரா

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவுக்கு, ரொம்பப் பிடித்த விஷயம் கார். அதிலும் பிஎம்டபிள்யூதான் அவரின் ஃபேவரைட். X3, X5, 7 சீரிஸ் என்று பிஎம்டபிள்யூ கார்கள்தான் நயனின் கராஜில் வரிசை கட்டி நிற்கின்றன. கார் பயணங்கள் என்றால் நயனுக்கு உயிர். சென்னையிலிருந்து கேரளாவுக்கு பிஎம்டபிள்யூ X3 காரை தானாகவே ஓட்டிச் சென்றுவிடுவாராம். இப்போது ‘நீயாலாம் கார் ஓட்டக் கூடாது’ என்று பாசமானவர்களின் அன்புக் கட்டளைக்குப் பிறகு, டிரைவர் வைத்துப் பயணிக்க ஆரம்பித்து விட்டார். நயனுக்கு கறுப்பு என்றால் இஷ்டம். அதனால், நயனின் பிஎம்டபிள்யூ கார்கள் எல்லாமே கறுப்புக் கலரில் ஜொலிக்கின்றன.

ஸ்ருதிஹாசன்

 

கார்


அப்பா மாதிரியே ‘ரஃப் அண்ட் டைப்’ கார்கள்தான் ஸ்ருதியின் ஃபேவரைட். தடாலடி காரான லேண்ட் க்ரூஸர் பயன்படுத்தி வந்த கமல்ஹாசன், இப்போதுதான் மென்மையான ஆடி A8-க்கு மாறியிருக்கிறார். ஸ்ருதிக்கு எப்போதுமே எஸ்யூவி கார்கள் மீதுதான் கண். இந்தியாவில் சாஃப்ட் ரோடராகவும் ஆஃப் ரோடராகவும் பட்டையைக் கிளப்பும் கார், ரேஞ்ச்ரோவர் மாடல்தான். இந்த எஸ்யூவியின் விலை 1.5 கோடி. இதை ஹைவேஸுக்கும் கரடுமுரடு சாலைகளுக்கும் ஏற்றபடி ஏர் சஸ்பென்ஷனை மாற்றி, காரின் உயரத்தை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம் என்பது ஸ்பெஷல். வீல் பேஸ் அதிகம் கொண்ட இந்த மாடலை விரட்டுவதில் ஸ்ருதிக்கு அலாதி பிரியம்.

த்ரிஷா

தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி 18 வருடங்கள் ஆனாலும், இன்னும் டீன் ஏஜைத் தாண்டாத த்ரிஷாவும் பிஎம்டபிள்யூ ரசிகைதான். ஆரம்பத்தில் இனோவா மற்றும் டொயோட்டா கேம்ரி கார்கள் பயன்படுத்தி வந்த த்ரிஷா, நயன்தாராவைப் பார்த்துத்தான் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் வாங்கியதாகச் சொல்கிறார்கள். ‘கேம்ரி கார் வெறும் 3 கி.மீ கூட மைலேஜ் தரமாட்டேங்குது; அதான் பிஎம்டபிள்யூவுக்கு மாறினேன்’ என்று ஒரு தடவை சொன்னார் த்ரிஷா. இது தவிர இன்னும் 2 கார்கள் த்ரிஷா வசம் உள்ளன. 

சமந்தா

 

சமந்தா


சமந்தாவும் சாட்சாத் பிஎம்டபிள்யூ ஃபேன்தான். தெலுங்கிலும் தமிழிலும் கலந்து கட்டி அடிக்கும் சமந்தாவிடம் இருப்பது பிஎம்டபிள்யூ X5 கார். எஸ்யூவியான இதன் விலை கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய். கறுப்புதான் சமந்தாவுக்கும் ஃபேவரைட். ‘சமந்தாவும் நயனுக்குப் போட்டியாக பிஎம்டபிள்யூ கார் வாங்கினார்’ என்று ஒரு செய்தி வர, ‘நயன் வைத்திருப்பது 5 சீரிஸ்; என்னிடம் இருப்பது X5' என்று பதிலடி கொடுத்தார். இதற்காகவே 70 லட்ச ரூபாய்க்கு ஜாகுவார் XF கார் ஒன்று வாங்கி தனது கராஜில் பார்க் செய்தார் சமந்தா. இப்போது லேட்டஸ்ட்டாக தன் கணவருக்கு பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரும், MV அகுஸ்டா பைக்கும் பரிசளித்து ‘சமத்து மனைவியாக’ கணவரைக் காதலித்து வருகிறார் சமந்தா.

அசின்

 

அசின்

மைக்ரோமேக்ஸ் அதிபரான அசினுக்குப் பிடித்தது ஆடி கார்கள். எஸ்யூவி ரகம்தான் அசினின் ஃபேவரைட். MH பதிவு எண் கொண்ட கறுப்பு நிற ஆடி Q7 எஸ்யூவி காரில்தான் அசினின் மும்பைப் பயணம் முழுதும். ஆனால், அசினின் கணவர் ராகுல் ஷர்மா செடான் பிரியர்.

காஜல் அகர்வால்

கார் கலெக்ஷனில் எல்லாம் காஜலுக்கு இன்ட்ரஸ்ட் இல்லை. ஆரம்பத்தில் அண்ணனின் காரில்தான் முழுப் பயணமும். இப்போது காஜலிடம் ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என கறுப்பு நிற பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் மட்டும்தான் இருக்கிறது. இதன் விலை கிட்டத்தட்ட 80 லட்ச ரூபாய்.

ஹன்ஸிகா மோத்வானி

 

ஹன்சிகா

இந்தப் புதுவருடத் துவக்கத்தில்தான் ஹன்ஸிகா, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் வாங்கினார். நேவி புளூ கலரில் உள்ள இந்த பிஎம்டபிள்யூ காரை டெலிவரி எடுத்த முதல் நாளே தன் குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு ஜாலி ரைடு போய்விட்டு வந்து ட்விட்டரில் பதிவிட்டதற்கு எக்கச்சக்க ரீ-ட்வீட்டுகளும் லைக்குகளும் குவிந்து விட்டன. ஹன்ஸிகாவின் ராசி எண் 9. அவரின் பிறந்த தேதி 9; புதிதாக அவர் வாங்கிய ஃப்ளாட்டின் கதவு எண் 9. இப்போது தனது காருக்கும் 9-லேயே ஃபேன்ஸி நம்பர் கிடைத்ததில் ஹன்ஸிகா ஹேப்பி அண்ணாச்சிகளே! பிஎம்டபிள்யூ 9 சீரிஸ் வந்தா வாங்கிப் போடுங்க அம்மணி!

ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவுக்கு கார் எந்தளவு பிடிக்கும் என்றால், கார் கம்பெனிகள் அழைப்பு விடுத்தால் முதல் ஆளாகக் கலந்துகொள்ளும் அளவுக்கு கார்கள் மேல் லவ். ஆடி Q3 காரை இந்தியாவில் அன்வெய்ல் பண்ணியதே ஆண்ட்ரியாதான். வின்டேஜ் கார் ராலி நடந்தாலும் கொடியசைத்துத் துவக்கி வைக்க ஆஜராவது ஆண்ட்ரியாவின் ஹாபி. இந்தப் ‘பச்சைக்கிளி முத்துச்சரத்துக்குப்’ பிடித்தது பிஎம்டபிள்யூ. 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ X1 காரில் இப்போது வலம் வருகிறார் ஆண்ட்ரியா. 

ரித்திகா சிங்

ரித்திகா சிங்கிடம் இப்போதைக்குக் கார் இல்லை. தயாரிப்பு தரப்பு வாடகை காரில்தான் ரித்திகாவின் பயணம். சொந்த ஊருக்குப் பயணம் என்றால் விமானம். மும்பையில் லோக்கல் பயணம் என்றால் அப்பாவின் கார். ஆனால், தனக்கு ஆடி கார்கள் மீதுதான் கண் இருப்பதாக அடிக்கடி சொல்வார் ரித்திகா. ‘சிவலிங்கா’ படப்பிடிப்பின்போது ராகவா லாரன்ஸின் ஆடி Q7 காரை இரவல் கேட்டு வாங்கிப் பயணித்தாராம் ரித்திகா சிங். அந்தளவு ஆடி வெறியை! 

நஸ்ரியா நசீம்

 

நஸ்ரியா


கார் என்றால் நஸ்ரியாவுக்குக் கொள்ளைப் பிரியம். தனது கார் மீது வெயில் அடித்தாலே நஸ்ரியாவால் தாங்க முடியாத அளவுக்குக் கார்களின் மீது பாசம் கொண்டவர். திருவனந்தபுரத்தில் ஒரு சின்ன மோதலில் தனது ரேஞ்ச்ரோவர் இவோக் காரின் பெயின்ட் உரிந்ததற்கே, அதற்குக் காரணமான வேறொரு கார் டிரைவரை நடுரோட்டில் இறங்கி ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வாங்கிவிட்டார். அதற்குப் பிறகு மறுபடியும் ஒரு குட்டி ஆக்ஸிடென்ட். ‘உனக்கு ரேஞ்ச்ரோவர் ராசி இல்லை செல்லம்’ என்று பென்ஸ் C க்ளாஸ் காரை வாங்கிப் பரிசளித்திருக்கிறார் அவரது கணவர் ஃபஹத் ஃபாசில். இதிலாவது கோடு விழாம ஓட்டணும்!

ஸ்ரீதிவ்யா

 

ஶ்ரீதிவ்யா


சொன்னா நம்பணும்! நயன்தாராவின் வெறித்தனமான ரசிகை ஸ்ரீதிவ்யா. நயன் பண்ணுவதை அப்படியே ஃபாலோ பண்ணும் ரசிகைகளில் ஸ்ரீதிவ்யாவுக்குத்தான் முதலிடம். ‘காஷ்மோரா’ பட ரிலீஸின்போது, தனது தலைவி வைத்திருப்பதுபோல் கறுப்பு நிற பிஎம்டபிள்யூ காரை வாங்கி, அவரிடமே ஆசீர்வாதமும் வாங்கிவிட்டாராம். ஹைதராபாத்தில் நடந்த ஒரு பிரஸ்மீட்டில், தனது பிஎம்டபிள்யூவைக் காட்டி ‘நயன்தாராவின் ஆசி தனக்கு எப்போதும் வேண்டும்’ என்று நெக்குருகவும் செய்தார். 

தமன்னா

 

தமன்னா


தமிழில் கலக்கினாலும் மும்பையில்தான் தமன்னாவைச் சந்திக்க முடியும். அதனால் MH ரிஜிஸ்ட்ரேஷனில்தான் தனது கார்களையும் பதிவு செய்திருக்கிறார். முன்பு அப்பாவின் மிட்சுபிஷி அவுட்லேண்டரில்தான் பயணம். இப்போது ஷூட்டிங், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு தமன்னாவின் ஆடி A6தான் பறக்கும். கிட்டத்தட்ட 90 லட்சம் மதிப்புள்ள A6 கார் தவிர்த்து, 20 லட்ச ரூபாய் மதிப்பில் மஹிந்திரா XUV5OO காரும் தமன்னாவிடம் இருக்கிறது.

நிக்கி கல்ராணி

 

நிக்கி

‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’ லக்கி கேர்ள் நிக்கி. ஆம்! பரம்பரைப் பணக்காரப் பொண்ணு நிக்கியின் கராஜில் பிஎம்டபிள்யூ, ஹோண்டா சிவிக் என்று ரக ரகமாக 5 கார்கள் இருக்கின்றன. ‘சொந்த காசில் ஆடி வாங்கணும்’ என்ற சபதத்தைப் போன வருடமே நிறைவேற்றிவிட்டார் நிக்கி. புதிதாக 90 லட்சத்துக்கு ஆடி A6 கார் வாங்கிவிட்டார். டிரைவர் இருந்தாலும், செல்ஃப் டிரைவிங்தான் நிக்கியின் சாய்ஸ்! 

அஞ்சலி

 

அஞ்சலி

 

அஞ்சலி விஷயத்தில், சித்தியில் இருந்து கார் வரை எல்லாமே சீக்ரெட்தான். ‘சிங்கம் 2’ குத்துப்பாட்டு ரிலீஸுக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு கறுப்பு நிற பிஎம்டபிள்யூவில் வந்திறங்கி ஷாக் கொடுத்தார். புதுசா வாங்கினதா? யாராவது கிஃப்ட் பண்ணினதா என்று ‘எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்’ ரேஞ்சில் சமூகப் போராளிகள் மண்டையைக் குடைந்து கொண்டிருக்க, கூலாக அந்த காருக்கு முன்பு எடுத்த போட்டோவைப் போட்டு நெட்டில் வைரல் ஆக்கிவிட்டது அஞ்சலிப் பாப்பா. யாருக்காவது உண்மை தெரிஞ்சா சொல்லிடுங்கப்பா!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

அட.. ‘சீஸ்'க்கு இப்படி ஒரு கதை இருக்கா?

மெல்ல எரியவிடப்பட்ட தீயின் மேல் பளபளக்கும் தவாவில் வெண்ணெய் உருக உருக, மேலே சீஸ் தூவப்பட்ட சாண்ட்விச் காய்கறிகளுடன் பொன் நிறத்தில் தயாராகும்போதே அதை அப்படியே அள்ளிச் சாப்பிட நினைத்திருக்கிறீர்களா? இல்லை வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்குடன், மசாலா பொருட்களும், சீஸூம் இணைந்த சீஸ் பால்களை மெல்லிய விளக்கொளியில் ஹோட்டல்களில் கபளீகரம் செய்வதை உங்களால் நிறுத்திக் கொள்ளத்தான் முடியுமா?

சீஸ்-வரலாறு

லத்தீன் மொழியில் சீஸ். தமிழில் பாலாடைக்கட்டி. சொல்லும்போதே நாவில் நீர் ஊற வைக்கும் உணவுப் பொருள். சீஸின் பூர்வீகம் பற்றி இதுவரையில் யாரும் ஆவணப்படுத்தவில்லை. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு 4000 வருடங்களுக்கு முன்பே சுமேரியர்களின் உணவுப் பழக்கத்தில் இந்த பாலாடைக்கட்டி இடம் பிடித்திருந்திருக்கிறது. பெரிய பெரிய ஜாடிகளில் பசு மற்றும் ஆட்டின் பாலை பதப்படுத்தி வைத்து உபயோகித்திருக்கிறார்கள். எகிப்தியர்களும் சீஸ் பயன்படுத்தியதற்கான சான்று அவர்களுடைய பழங்கால சுவரோவியங்களில் இடம்பெற்றிருக்கிறது. 

சீஸ் வகைப்பாடு மட்டும் உலகளவில் 500-க்கும் மேல் என்கின்றனர் உணவுப் பிரியர்கள்.  500 வகைகள் இருப்பதை உலகளாவிய உணவுப்பொருட்கள் தர கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், சரியான கணக்கு தெரியவில்லை. ஸ்காண்டிநேவியாவில் ரெயின் டீரில் இருந்தும், ஆப்ரிக்காவில் பன்றியின் பாலில் இருந்தும், இத்தாலியில் எருமைமாட்டு பாலிலும், திபெத்தில் யாக்கில் இருந்தும், ரஷ்யாவில் பெண் குதிரையிலிருந்தும் சீஸ் தயாரிக்கப்படுகிறது. சிடர் சீஸ் 1500 வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. பர்மேசன் சீஸ்-ன் வயது 1579 வருடங்கள்.

ஆசியாவின் நடுப்பகுதியில் இருந்துதான் சீஸின் பயணம் தொடங்கியிருக்கலாம் என்பதை உணவு ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக் கொள்கின்றனர். முதன்முதலில் நம்முடைய முன்னோர்கள் காட்டு விலங்குகளாய் இருந்த ஆடு, மாடு போன்றவற்றை மனிதனால் பழக்கப்படுத்தமுடியும் என்பதைக் கண்டறிந்த போதே சீஸின் வரலாறும் தொடங்கியிருக்கலாம். அதற்கு சான்றாக விலங்குகளின் தோலால் ஆன பைகளில் அவற்றின் பாலை சேகரித்து, புளிக்க வைத்து பயன்படுத்தியிருக்கின்றனர். விலங்கின் தோலில் இருந்த ஒருவகை நொதி, பாலை தயிராக திரிய வைத்துப் பின் கெட்டிப்படுத்தியிருக்கிறது. கூடவே வெயில், நீண்ட காலம் சேமிப்பு ஆகியவையும் அதை ஒரு தரமான பாலாடைக்கட்டியாக மாற்றியிருக்கிறது.

சீஸின் பயணம் ஆசியா, அரேபியா, எகிப்து, இங்கிலாந்து என்று நீள்கிறது. அதே போன்று வயதை வைத்தே ஒரு கட்டியின் தரமும் நிர்ணயிக்கப்படுகிறது. ஈரத்தன்மையும், அழுத்தமுமே ஒரு சீஸ்கட்டியின் மிருதுத்தன்மையை பறைசாற்றும்.சாஃப்ட் சீஸ் என்னும் மிருதுத்தன்மை கொண்ட பாலாடைக்கட்டி லிஸ்ட்டில் இடம்பெறும் கீரிம் சீஸ் வகைகள் அதிக காலம் பதப்படுத்தப்படாதவை. பிரிய் (Brie) மற்றும் நியுப்சாட்டெல் (Neufchatel) ஆகியவை மிருதுத்தன்மை கொண்ட சீஸ் வகைகள். இவை ஒருமாதத்திற்கும் மேலாக பதப்படுத்தப்படுபவை. நியுப்சாட்டெல், தயாரிக்கப்பட்டு பத்து நாட்கள் கழிந்தபிறகு தாராளமாக உபயோகப்படுத்தக் கூடிய சீஸ் வகை.

பாதி மிருதுத்தன்மை கொண்ட சீஸ்கட்டிகள், ஓரளவிற்கு ஈரப்பதம் கொண்டவையாக இருக்கும். சுவையும் சிறிது குறைவாகவே இருக்கும். ஹவார்ட்டி (Havarti), முன்ஸ்டர் (Munster), போர்ட் சலுட் (Port salut) ஆகியவை இதில் அடங்கும். சாஃப்ட்டாகவும் இல்லாமல், கடினமாகவும் இல்லாமல் நடுத்தரத்தில் இருக்கும் சீஸ் வகைகள் மீடியம் ஹார்டு லிஸ்ட்டில் அடங்குகின்றன. இவை கெட்டியான தன்மையைக் கொண்டிருக்கும். எமெண்ட்டல் (Emmental) அதான் டாம் அண்ட் ஜெரியில் ஜெரி அடிக்கடி திருடிக்கொண்டு ஓடுமே அதுபோன்ற ஓட்டைகள் நிறைந்த சீஸ் மற்றும் க்ரூயேர் (Gruyere) இதில் அடங்கும். சிலவகை பாக்டீரியாக்கள் இவற்றின் மணத்திற்கும், சுவைக்கும் உதவுகின்றன. இந்த வகை சீஸ்கள் உருகுவதற்கு நேரம் எடுக்கும் என்பதால் உணவிற்கு நல்ல மணத்தைத் தருகின்றன.

சற்றே கடினமான சீஸ் வகையில் ஈரப்பதம் மிகமிகக் குறைவாக இருக்கும். அதிக அழுத்தத்துடன் மோல்டுகளில் உருவாக்கப்படுவதால், இந்த கடினத்தன்மை வந்துவிடுகிறதாம். மேலும், நிறைய நாட்களுக்கு இவை பதப்படுத்தி வைக்கப்படுகின்றன. சிடர் சீஸ் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இங்கிலாந்தின் சிடர் என்னும் பெயர் கொண்ட கிராமத்தில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதால் இதற்கு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. கோல்பை மற்றும் மாண்டெரே ஜாக் ஆகியவையும் கடினமான சீஸ் வகைதான் என்றாலும் சிடர் அளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இவை உருவாக்கப்படுவதில்லை. 

கடினமான சீஸ் வகை....இதுதான் பெரும்பாலான இத்தாலிய உணவுகளின் ராஜா. இவற்றை துருவுதல் எளிது. பர்மேசன் சீஸ், பெக்கோரினோ ரோமானோ ஆகியவை பெருமளவில் தயாரிக்கப்பட்டு, மாதக்கணக்கில், வருடக்கணக்கில் பதப்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.  2013ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 21.3 மில்லியன் டன் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். அதில் அமெரிக்காவிலிருந்து மட்டும் இருபத்தைந்து சதவீதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கு அடுத்தடுத்த இடங்களை ஜெர்மனி, ப்ரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் தட்டிச் செல்கிறன. உலகளவில் இன்றுவரை அமெரிக்காதான்  இந்த மார்க்கெட்டில் நம்பர்  1.

 

சீஸ் பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. இருந்தாலும் இதில் கொழுப்புச்சத்தும் அதிகம் என்பதால், அளவோடு பயன்படுத்துவது நல்லது.  அதுவும் 40 வயதிற்கு மேலானவர்கள் சீஸ்-க்கு ஒரு பெரிய டாட்டா காட்டிவிடுவது நல்லது. எனினும், பீட்சாவிலும், சாண்ட்விச்சிலும், பாஸ்தாவின் மீதும், தோசையின் மீதும் அப்படியே உருகி வழியும் சீஸூடன் சுவைப்பதை கற்பனையுடன் நிறுத்திக் கொள்ள முடியாதே. அதனால், கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு, மறக்காமல் இந்த கட்டுரையைப் படித்துவிட்டு, தவறாமல் உடற்பயிற்சியும் செய்துவிடுங்கள்!

http://www.vikatan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.