Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

12687794_987854581285151_317199128860509

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12705718_982695658445795_381788425766917


நடிகை சரண்யா மோகனின் பிறந்த நாள்

  • தொடங்கியவர்

ஜப்பானில் தொடரும் திமிங்கில வேட்டை

 

 

  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

 

p88_1.jpg

ஸீட்!

தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் ரமேஷ்!

 - கண்ணன்

பணம்

p88_2.jpg

பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்... இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத டீச்சர்!

VIKATAN

  • தொடங்கியவர்

சமந்தா 100 கிலோ வெயிட் தூக்குனா என்ன ஆகும் தெரியுமா?

 

ஹீரோயின்களில் டாப் டார்லிங் சமந்தா. அழகிக்கு நடிப்பு மீது எவ்வளவு ஆர்வமோ, ஃபிட்னஸ் மீதும் அவ்வளவு இஷ்டம் கொண்டவர்.

சமீபத்தில் சமந்தாவின் உடற்பயிற்சியாளர் குணல், சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமந்தா, 100 கிலோ (225lbs) எடையை தூக்கி பயிற்சி எடுத்திருக்கிறார். அதுவும் மூன்று முறை ரிப்பீட் செய்வது ஆஸம். அந்த வீடியோ இணையத்தில் வெளியான உடனேயே வைரல் லிஸ்டில் எகிறிவருகிறது.

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

வாலி  இதோட  காலி....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

சமந்தா 100 கிலோ வெயிட் தூக்குனா என்ன ஆகும் தெரியுமா?

 

ஹீரோயின்களில் டாப் டார்லிங் சமந்தா. அழகிக்கு நடிப்பு மீது எவ்வளவு ஆர்வமோ, ஃபிட்னஸ் மீதும் அவ்வளவு இஷ்டம் கொண்டவர்.

சமீபத்தில் சமந்தாவின் உடற்பயிற்சியாளர் குணல், சமந்தாவின் ஒர்க் அவுட் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சமந்தா, 100 கிலோ (225lbs) எடையை தூக்கி பயிற்சி எடுத்திருக்கிறார். அதுவும் மூன்று முறை ரிப்பீட் செய்வது ஆஸம். அந்த வீடியோ இணையத்தில் வெளியான உடனேயே வைரல் லிஸ்டில் எகிறிவருகிறது.

விகடன்

இப்படி வெயிட் அடித்தால் பெண்மைக்குரிய மென்மை கெட்டுப்போகாதா :cool:

  • தொடங்கியவர்
1996 : உலக செஸ் சம்பியனை முதல் தடவையாக கணினி வென்றது
 

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி - 10

 

662varalaru.jpg1355 : இங்­கி­லாந்து, ஒக்ஸ்போர்ட் நகரில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கும் உள்ளூர் மக்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற கல­வ­ரத்தில் 63 மாண­வர்­களும், 30 பொது மக்­களும் கொல்­லப்­பட்­டனர்.

 

1763 : தற்­போது கன­டாவின் ஒரு பகு­தி­யா­க­வுள்ள கியூபெக் மாநி­லத்தை ஐக்­கிய இராச்­சி­யத்­திற்கு பிரான்ஸ் அளித்­தது.

 

1815 : கண்டி இராச்­சி­யத்தைக் கைப்­பற்றும் நோக்கில் பிரித்­தா­னியர் கண்­டி­யினுள் நுழைந்­தனர்.

 

1846 : பிரித்­தா­னிய கிழக்­கிந்­தியக் கம்­ப­னிக்கும் பஞ்­சாபின் சீக்­கி­ய­ருக்கும் இடையில் இடம்­பெற்ற போரில் பிரித்­தா­னியர் வெற்றி பெற்­றனர்.

 

1863 : அலன்சன் கிரென், தீய­ணைக்கும் கரு­வியின் காப்­பு­ரிமம் பெற்றார்.

 

1870 : கிறிஸ்­தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCAA) அமைக்­கப்­பட்­டது (நியூயோர்க் நகரம்).

 

1897 : மட­கஸ்­காரில் மதச் சுதந்­திரம் அறி­விக்­கப்­பட்­டது.

 

1914 : யாழ்ப்­பா­ணத்தின் அரச அதி­ப­ராக சார்ள்ஸ் கம்­பர்லாண்ட் நிய­மிக்­கப்­பட்டார்.

 

1954 : வியட்நாம் போர்: அமெ­ரிக்க அதிபர் டுவைட் ஐசன்­ஹோவர் வியட்நாம் மீது ஐக்­கிய அமெ­ரிக்கா தாக்­குதல் நடத்தும் என எச்­ச­ரித்தார்.

 

1964 : அவுஸ்­தி­ரே­லி­யாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS எச்.எம்.ஏ.எஸ். மெல்பேர்ன் என்ற விமா­னந்­தாங்கிக் கப்­பலும் HMAS எச்.எம்.ஏ.எஸ். வொயேஜர் என்ற கடற்­படைக் கப்­பலும் மோதிக் கொண்­டதில் 82 பேர் கொல்­லப்­பட்­டனர்.

 

1969 : தமிழ் நாட்டின் முத­ல­மைச்­ச­ராக மு. கரு­ணா­நிதி  முதல் தட­வை­யாக தெரிவு செய்­யப்­பட்டார்.

 

1981 : அமெ­ரிக்­காவின் லாஸ் வேகாஸ் நக­ரி­லுள்ள கசினோ ஒன்றில் ஏற்­பட்ட தீ விபத்­தினால் 198 பேர் உயி­ரி­ழந்­தனர்.

 

1989 :  அமெ­ரிக்க ஜன­நாயக் கட்­சியின் தேசிய குழுவின் தலை­வ­ராக ரொன் பிரவுண் தெரி­வானார். அமெ­ரிக்­காவின் பிர­தான அர­சியல் கட்­சி­யொன்றில் இத்­த­கைய பத­வியை வகித்த முத­லா­வது ஆபி­ரிக்க அமெ­ரிக்கர் ரொன் பிரவுண் ஆவார்.

 

1996 : ஐ.பி.எம். நிறு­வ­னத்தின் கணி­னி­யான "டீப் புளு" உலக முதற்­த­ர­வீரர் காரி கஸ்­ப­ரோவை முதல் தட­வை­யாக வென்­றது.

 

2009 : தகவல் தொடர்பு செயற்­கைக்­கோள்­க­ளான அமெ­ரிக்­காவின் இரி­டியம் – 33, ரஷ்­யாவின் கொஸ்மோஸ் – 2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.

 

2013 : இந்தியாவின் அலஹாபாத்தில் கும்பமேளாவின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததுடன் 39 பேர் காயமடைந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=662#sthash.a6395qsA.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காதலர் தினம் கொண்டாட கடன்... விண்ணப்பித்த வங்கி அதிகாரி!

 

லகம் முழுவதும் காதலர் தினம், வரும் பிப்.14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் காதலர் தினம்  குறித்த பல்வேறு சுவையான தகவல்களும், செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது. அதில் குஜராஜ் மாநிலத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில், அதிகாரி ஒருவர்,  காதலர் தினம் கொண்டாட முன் கடன்தொகை வழங்க கோரி விண்ணப்பித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கியின் சுடா கிளையில்,  திக்விஜய் சிங் என்பவர் புரபசனரி அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள்,  பண்டிகைக் காலங்களில் ஒரு மாத ஊதியத்தை கடனாக பெற சலுகைகள் உள்ளது. அந்த கடன் தொகையை 10 தவணையாக ஊழியர்கள் செலுத்தலாம்.

loveloan_vc1.jpg


25 வயதுடைய திக்விஜய் சிங்,  காதலர் தினத்திற்காக ரூ.42,970 கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்து இருந்தார். இந்த விண்ணப்பத்தைக் கண்ட வங்கி நிர்வாகம் அதிர்ச்சியடைந்து, அந்த அதிகாரியின் விண்ணப்பத்தை  நிர்வாகம் நிராகித்துள்ளது. முன் கடன் தொகை கொடுக்கும் பண்டிகை பட்டியலில் காதலர் தினம், அன்னையர் தினம் இல்லை என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கு செலவு ஏற்படுவது சகஜம்தான்.  அதற்காக வங்கியில் கடன் வாங்குவது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் பாஸ்..!

vikatan

  • தொடங்கியவர்

பிப்ரவரி 10: எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன் நினைவு தின சிறப்பு பகிர்வு..

 

எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த ராண்ட்ஜன்  மறைந்த தினம் இன்று  . இளம் வயதில் அறிவியலின் மீது தீராத ஆர்வம் கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார் . ஜெர்மனியில் பல்வேறு பல்கலைகழங்களில் வேலைபார்த்த அவர், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார் .

williamrontgen.jpg

பேரியம் பிளாடினோ சயனைட் பூச்சு பூசிய திரை,மற்றும் க்ரூக்ஸ் குழாய் ஆகியவற்றை கருப்பு கார்ட்போர்டில் சுற்றி வைத்துக்கொண்டு கேதோட் கதிர்களை பற்றி ஆய்வு செய்கிற பொழுது திரையில் மங்கலான பச்சை ஒளிரலை அவர் கண்டார் . அதற்கு காரணமான கதிரை எக்ஸ் கதிர் என அழைத்தார் . அந்த கதிரின் பண்புகள் புரியாததால் அவர் அப்படி அழைத்தார். அவரின் பெயரையே அதற்கு சூட்டவேண்டும் என்று பிறர் சொன்ன பொழுது ,"எத்தனையோ பேர் கடந்து வந்த பாதையை பின்பற்றி இந்த கதிர்களை கண்டிருக்கிறேன் நான். அதற்கு என் பெயரை வைப்பது சரியல்ல !" என்று அழுத்தமாக மறுத்தார்.

அவை புத்தகங்கள் ,வழியாகவும் மனித உடல்களின் வழியாகவும் கடந்து போவதை கண்டார் ;நடுவில் இந்த கதிர்களின் மீது மனைவியின் கைபட்டு அவரின் எலும்புகள் அப்படியே பதிவான பொழுதுதான் எலும்புகளை கடந்து எக்ஸ் கதிர்கள் செல்லாது என்பதும் அதைக்கொண்டு  குண்டுகள் ,ஏதேனும் குறைகள் மற்றும் எலும்பு முறிவுகள் இருப்பின்  கண்டறிய பயன்படுத்தலாம் என உணர்ந்து அதை செயல்படுத்தினார் . பியரி கியூரியை போலவே தன் கண்டுபிடிப்புகளை அவர்
காப்புரிமை செய்யவில்லை .மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார் .

அவருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது ;அதில் கிடைத்த பணத்தை தான் வேலை பார்த்த பல்கலைகழகத்திற்கே கொடுத்து விட்டார் . உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு அவரும் பசியால் பல நாட்கள் வாட நேர்ந்தது. அவரின்  நிலையறிந்து வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் நிறைய வெண்ணெய்  கட்டிகளை அனுப்பிவைத்தார். அதை உடனிருந்த எண்ணற்ற சகாக்கள் மற்றும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டே இவர் நிறைவடைந்தார்.  பல்வேறு அயனிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்த இவர் இதே நாளில் மறைந்தார் .அவரின் பெயரில் தனிம அட்டவணையின் 111 வது தனிமம் வழங்கப்படுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

தமிழக தேர்தல் சர்வே வித் பேய்... தெறிக்க விடும் ஆவி ஆராய்ச்சியாளர் (வீடியோ)

 

'இது முற்றிலும் கற்பனையே... யாரையும் குறிப்பிடுவன அல்ல' என சினிமாவுல கேப்ஷன் கொடுக்கிறதைப் பார்த்திருக்கீங்கள்ல? அதுமாதிரி... இந்தக் கருத்துக் கணிப்புக்கும் மனிதர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. முக்கியமாக, இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மேற்கொள்ளப்பட்ட விஷயமே தவிர, எந்தக் கட்சியையும் தாக்குவதற்கு அல்ல! - ஏன் இவ்வளவு பெரிய ட்விஸ்ட்?

11105df6-1a5d-4168-9c93-47e5dfdfa35f.jpg


ஏன்னா, இது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் குறித்து, பேய், பிசாசுகளிடம் நடத்தப்பட்ட சர்வே!

அரசியல் தலைவர்களுக்குத் 'திகில்' கிளப்ப,  ஏராளமான எலெக்‌ஷன் கருத்துக்கணிப்புகள் மக்களைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையிலேயே திகில் கிளப்ப... ஏன் ஆவிகளிடம் சர்வே எடுக்கக்கூடாது? என்று தோன்றவே, மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆவியுலக ஆராய்ச்சியாளர் ரமணி என்பவரைத் தொடர்பு கொண்டோம்.

தேர்தல் குறித்த ஆறு கேள்விகளுடன் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்த (?!)  100 பேய்களைத் தனது உடம்புக்குள் இறக்கிக்கொண்டு (சிரிக்கக்கூடாது பாஸ்!), ஆவிகளிடம் பொறுமையாகப் பேசி, இந்தக் கருத்துக் கணிப்புக்கு உறுதுணையாக இருந்தார் ரமணி. இதோ,  ஆவிகளிடம் நடத்தப்பட்ட டரியல் கிளப்பும் சர்வே ரிப்போர்ட்!

Aavi

தமிழக அரசியல் சூழலை எப்போதும் நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பது, அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்தான்! எனவே, தற்போதைய அ.தி.மு.க எப்படி இருக்கிறது என்பதை ரமணனின் உடலுக்குள் ஆவியாகப் புகுந்து கொண்டு பேசினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

''தற்போதைய அ.தி.மு.க., கொள்கையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டது. ஜெயலலிதா கோவிலுக்குப் போவதுகூட பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டிருந்தேன்.

கட்சித் தொண்டர்களையும் தனக்குக் காவடி, பால்குடம் தூக்கவைத்து, திராவிடக் கட்சி என்ற வார்த்தையின் வலுவை முற்றிலும் இழக்கச் செய்துவிட்டார். அதை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று கொஞ்சம் கோபமாகவே பேசினார் ரமணி ஸாரி... அவர் உடம்புக்குள் புகுந்த எம்.ஜி.ஆர்.

அண்ணாவின் ஆவியோ, அப்படியே நேரெதிர்! (ஆஹாங்) ''கட்சிக்குள் இருப்பவர்கள் கோவிலுக்குப் போவது, சாமி கும்பிடுவது போன்ற செயல்களைச் செய்தாலும், கட்சிக்கு வெளியே திராவிடக் கொள்கைகளைப் பரப்புகிறது.

என் கணிப்புப்படி, இந்தமுறை தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. அதேசமயம், கருணாநிதியின் வாரிசுகள் திராவிடக் கொள்கைகளை வளர்ப்பார்கள் என்று ஒருபோதும் தொண்டர்கள் நினைத்துவிடாதீர்கள்!'' என்கிறார் அண்ணா. 


தவிர, 'தற்போதைய அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் இடத்தை, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு எந்தத் தலைவர்கள் நிரப்புவார்கள்?' என்ற கேள்விக்கு 'இந்தியா வல்லரசு ஆகவேண்டும்' என்று கனவு கண்ட அப்துல்கலாமின் ஆவி பதில் சொல்லியிருக்கிறது.

''அடுத்த ஐம்பது ஆண்டுகள் கழித்து தமிழக அரசியலில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நபர் இன்னும் பிறக்கவில்லை. இரண்டு எழுத்துகளைத் தன்னுடைய பெயராகக் கொண்டிருக்கப்போகும் அவர், தன் 21 வயதில் அரசியலின் மிக முக்கியமான இடத்தில் இருப்பார்'' என்று பதில் சொன்னதோடு, அவருடைய முதல் எழுத்து 'எஸ்' என்ற ஆங்கில எழுத்தும் துவங்கும் என்ற க்ளூ-வையும் கொடுத்துவிட்டுச் சென்றது அப்துல்கலாமின் ஆவி.

ஆகவே மக்களே... பேய்களிடம் நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பு ஜாலியாக முடிந்தாலும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என்ற முடிவு சமமாக இருப்பதால், உங்களுக்குத் தெரிந்த ஹன்சிகா, த்ரிஷா போன்ற அழகுப் பேய்களிடம் பேசிப் பார்த்தீங்கன்னா, கருத்துக் கணிப்புக்கு நல்ல முடிவு கிடைக்கும்!

vikatan

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

100 வீடுகளை உடைத்தது: சிலிகுரியை துவம்சம் செய்த யானை (வீடியோ )

 

மேற்கு வங்கம் சிலிகுரியில் காட்டு யானை ஒன்று புகுந்து நகரையே துவம்சம் செய்தது. இரு சக்கர வாகனங்கள், கார்கள்,  வீடுகளை அடித்து நொறுக்கிய அந்த யானையை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

              

கையறு நிலையை அடைந்த மக்கள் தலை தெறிக்க ஓடினர். கிட்டத்தட்ட 100 வீடுகளை உடைத்து அந்த யானை சேதப்படுத்தியது. சிலிகுரியை மிரள வைத்த இந்த சம்பவத்தில் பொதுமக்கள் அதிர்டவசமாக உயிர்  தப்பினர்.

 

  • தொடங்கியவர்

சகோதரர்களே.... உங்கள் சகோதரிகள் நலமா?

 

girl%20rape%20400.jpgநண்பர்களிடையே ஒருவருக்கு ஒருவர் "மச்சான், மாமா, மச்சி" என்று ஜாலியாக அழைத்துக்கொள்வது போன்று, நண்பனின் தங்கையை காதலிப்பது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

ஏனெனில் பெண்களை சக மனுஷியாக மதிக்கும் பக்குவம் இன்னும் முழுமை யாக ஆண்களுக்கு கை கூடவில்லை. எந்தவொரு நாளாகட்டும்,  செய்தித்தாள்களில் 'பாலியல் வல்லுறவு' என்ற வார்த்தை இடம்பெறாமல் இருப்பதில்லை. இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த நிர்பயாவின் விஷயத்திலிருந்து,  தினம் தினம் மறைக்கப்படும் ஏராளமான பெண்களின் மனக்குமுறல்கள் வரை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள். 

நாம் தவறு செய்வது எங்கே?

ஊடகங்கள் பெரிதாக்கும் ஒவ்வொரு வன்கொடுமைக்கும் நாம் உடனடியாக கொந்தளிக்கிறோம். ஆர்ப்பாட்டங்கள்,  மறியல்கள், விவாதங்கள் செய்கிறோம். அரசுகளும் அறிக்கைகள் விடும். ஆனால் அதன் தாக்கம் ஒரு வாரம் கூட நிற்பதில்லை. வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எந்த ஒரு  கடுமையான சட்டத்திருத்தமோ அல்லது தண்டனைகளோ எப்போதுமே குற்றங்களைக் குறைத்தது இல்லை என்பது அனைவருமே ஒப்புக்கொள்ள வேண்டிய உண்மை. நாம் எங்கே தவறு செய்கிறோம்? நாம் என்னதான் செய்ய வேண்டும்?

ஏன் இயல்பு வன்கொடுமையாகிறது?

பாலியல் வன்கொடுமைகள், ஈர்ப்பு மற்றும் ஆசையின் உச்சக்கட்ட வெறிபிடித்த நிலை என்று கூறலாம். எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்பது அனைத்து பாலினத்திற்கும் இயல்பான ஒன்று. ஆனால் அது வக்கிரமாக மாறும்போதுதான் இயல்பு,  தவறான செயலாக மாறுகிறது. இந்த வக்கிர செயல்களுக்கு சிறுமிகளிலிருந்து வயதான கிழவிகள் வரை இரையாகியிருக்கிறார்கள் என்பதற்கு பதிவுகள் இருக்கின்றன. ஏன் இறந்த பிணங்களைப் புணர்ந்த கதைகளும் இருக்கின்றன.

ஏன் இயல்பான ஈர்ப்பு இவ்வளவு கொடூரமானதாக வேண்டும்? நமக்குள் இருக்கும் பிரச்னைதான் என்ன? பொதுவாக இதுவரை வெளியாகிய குற்றங்கள் அனைத்திலும் விளிம்பு நிலை மனிதர்களே குற்றவாளிகளாக உள்ளார்கள். அவர்கள் மட்டும்தான் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகிறார்களா? அப்படியென்றால் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள மனிதர்களிடையே பாலியல் சுரண்டல்கள் நடப்பதில்லையா? அவர்கள் ஏன் குற்றவாளிகளாக்கப்படுவதில்லை?

women%20rap%20protest%20550%203.jpg

முதலில் நிறுத்துங்கள்

பெண் இந்த நேரத்தில் எதற்காக வெளியே போக வேண்டும்? அவள் ஏன் கிளர்ச்சியூட்டும்படியான உடைகளை அணியவேண்டும் என்பது போன்ற வினாக்களை முற்போக்குவாதிகளும்,  நாசூக்காக பெண்ணின் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்களின் சுதந்திரத்தை கையகப்படுத்தும் செயலாகத்தான் செய்துவருகிறார்கள். இதுதான் நாம் கொண்டாடும் சுதந்திரமா?

இவற்றையெல்லாம் காரணமாகக் காட்டி,  பெண்களை வன்கொடுமை செய்வதோடு மட்டுமில்லாமல் பெண்களை குறை கூறியே தப்பிக்க நினைக்கும் ஆணாதிக்கக் கூட்டத்தின் செயலை என்னதான் சொல்வது? 

இப்போதிருக்கும் சமூகத்தில் ஒரு பெண்மீது நிகழ்த்தப்படும் வன்மமும் காழ்ப்புணர்வும் அவளது வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. என்னதான் பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக இருந்தாலும், அவள் மீது விழும் மற்றவர்களின் பார்வை அடியோடு மாறிவிடுகிறது. ஏன் சொந்த வீட்டிலேயே அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதெல்லாம் அவர்களின் கவலையைத் தங்கள்  முகத்தினின்று மறைத்துவிட முடியுமா? ஏனென்றால் எவ்வளவோ வளர்ந்து விட்டாலும் ஒரு பெண்ணின் உணர்வுகள் குடும்பத்தின் கெளரவத்தோடு பிணைக்கப்பட்டுவிட்ட அவலம்தான் இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தொடர்கிறது. அதிலிருந்து ஒரு பெண் விடுபடுவது மிகக் கடினம்.

women%20rap%20protest%20550%201%281%29.j

இதன் காரணமாகவே ஒவ்வொரு பாலியல் வன்கொடுமைக்குப் பின்னும், எத்தனை மரணங்கள், எத்தனை தற்கொலைகள் நடக்கிறது என்பதை நாம் கண்டுகொள்வதே இல்லை. அதனால் தயவு செய்து பெண்ணைக் காரணம் காட்டுவதை முதலில் நாம் நிறுத்திவிட்டு நம் பிரச்னை என்ன என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆண்களின் பிரச்னை என்ன?
 
பாலியல் உணர்வுகள்,  ஆண்களை விடப் பெண்ணுக்குத்தானே அதிகம் என்று அறிவியல் சொல்கிறது. ஆனால் பாலியல் வன்கொடுமையை செய்வது பெண்களா... ஆண்களா? இங்குதான் ஆண்களின் பிரச்னையே ஆரம்பமாகிறது. ஆண்டாண்டுகளாக பெண்ணின் மீது நடத்திவந்த ஆணாதிக்க மனப்பான்மை,  நம் விருப்பத்துக்கு பெண்களை இணங்க வைக்க முயற்சி செய்வதில் வந்து நிற்கிறது. அதற்கான வாய்ப்புகளை காதல் வலையோ, பணமோ ஏற்படுத்தி தருகிறது என்றால்,  வன்கொடுமைகள் மிக சாதாரணமாக பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தாமல் நடந்து முடிந்து விடுகிறது.

இவை இரண்டும் கைக்கொடுக்காத பட்சத்தில்,  வன்முறையைக் கையில் எடுக்கிறது ஆண் வர்க்கம். தான் ஆண் என்று மார்தட்டும் இவர்கள்,  இருட்டும் தனிமையும் கிடைத்தால் பெண்களைச் சூறையாட தயங்குவதில்லை.

womens%20issue%20leftt.jpgஎங்கும் ஆண்களே இருந்தால்... பிறகு எப்படி?

இன்னமும் நம் சமூகத்தில் ஆண் பெண் சமநிலை ஏற்படவில்லை. எல்லா இடங்களிலும் ஆண்களே அதிகமிருக்கிறார்கள். பாலியல் குற்றங்களுக்கெதிராய் பேசுபவர்களிலும்,  சட்டமியற்றுபவர்களிலும் ஆண்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். அவர்களும் சுற்றி வளைத்து பெண்ணின் பாதுகாப்பு என்று சொல்லி அவள் மீதே குற்றம் சொல்கிறார்கள்.  பெண்ணுக்கு மட்டும் கட்டுப்பாடுகள். ஆனால் ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் கடந்து வர நாம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்க வேண்டுமோ?. சரி, கலாச்சார உடைகளில் முழுவதுமாக போர்த்திக்கொண்டு வந்தால் மட்டும் பெண்களை,  ஆண்கள் என்ன தங்கள் சகோதரியாகவா பார்க்கிறார்கள்? இங்கு தனிமையும் வலிமையும்தான் ஒரு பெண்ணை அடையப் போதுமானதாக இருக்கிறது.

வேரூன்றிக் கிடக்கும் வக்கிரம்

பால் உறுப்புகள் பற்றிய வக்கிரங்கள்,  இந்த சமூகத்தால் குழந்தைகளின் அறியா பருவத்திலிருந்தே விதைக்கப்படுகிறது. கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொள்வதிலிருந்து ஆரம்பமாகிறது. குடிசைப் பகுதிகளிலும் கிராமங்களிலும் இருக்கும் சூழலும், நாகரிகம் என்ற பெயரில் நகரத்தில் தகாத வார்த்தைகள் ஆங்கிலத்திற்கு மாறியிருப்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். உறுப்புகளைச் சொல்லி திட்டுவது, கழிப்பறைகளில் கிறுக்குவது  தொடங்கி ஒரு பெண்ணை பொதுவெளியில் அவமானப்படுத்தி, அவளுடைய பிறப்புறுப்பை சிதைப்பதில் போய் முடிகிறது.

பெண்கள் தங்களையும்,  ஆண்களையும்,  மனித வாழ்க்கையையும் புரிந்துகொண்டிருக்கும் அளவுக்கு ஆண்களுக்கு ஏன் புரிவதில்லை. பெண்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்ட ஆண் என்று செய்திகள் எதுவும் இங்கே வருவதில்லையே...! ஆண்களுக்கு மட்டும் எப்படி தோன்றுகிறது? பாலுறவில் இருவரும் மனம் ஒத்து ஈடுபட்டால்தான் இன்பம் என்பதை ஏன் ஆண்கள் உணர்வதே இல்லை?

women%20issue%20250.jpgஆண் பெண் இருவரும் விருப்பத்துடன் ஈடுபடவேண்டிய பாலுறவை, விரும்பாத ஒருவரின் மீது பிரயோகிப்பதில் எந்த இன்பமும் இல்லை என்பதை புரிந்துகொள்ள,  ஆண் மட்டும் ஏன் மறுக்கிறான். இதற்கு ஒவ்வொரு ஆண் மனதிலும் பல நூறு ஆண்டுகளாய் வேரூன்றிக் கிடக்கும் ஆதிக்க மனப்பான்மை மட்டுமே காரணம்.

பெண்ணை புரிந்துகொள்ளுங்கள்

ஒரு பெண் நினைத்தால்,  மெய்மறந்த நிலையில் ஆணின் உறுப்பை அறுத்தெறிய அவளால் முடியும். ஆனால் அவர்கள் ஆண்களைப் போல வக்கிரமாக,  கொடூரமாக நடந்துகொள்வதில்லை. அவர்கள் மென்மையானவர்கள். அதனாலேயே அவர்கள் மீது ஆண்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை.

சகோதரர்களே... சகோதரிகளைப் பார்த்துக்கொள்ளுங்கள்

ஒவ்வொரு ஆணும் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. பெண்ணைப் பார்க்கும் பார்வை மாற வேண்டியிருக்கிறது. இதற்கான விழிப்புணர்வை,  புரிதலை ஆண்கள் தங்களுக்குப் பகிர்ந்துகொள்ள வேண்டியது அவசியம். பாலியல் பிரச்னைகள் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு யாரும் இங்கு வாழவே முடியாது. ஆண்களும் பெண்களும் இணைந்ததுதான் சமூகம் ஒருவரை ஒருவர் மதிப்பதும் புரிந்துகொள்வதும் இங்கே அவசியமாகிறது. ஆண் பெண் இணைந்து வாழும் அழகான வாழ்வின் அர்த்தத்தை உணரவேண்டும். பெண்களை, சகோதரிகளாக வேண்டாம் குறைந்தபட்சம் சக மனுஷியாய் நினைக்க வேண்டும். இது ஒவ்வொரு குடும்பத்திலிருந்து முதலில் தொடங்க வேண்டும்.

vikatan

  • தொடங்கியவர்

தொடை இடையில்  தர் பூசணிக்காயை வைத்து உடைக்கும்  உலக சாதனை  (வீடியோ)

 

அவுஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த முதலாவது சாம்பியன் கை மல்யுத்த வீராங்கனை புதிய சாதனை  படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தமது தொடை இடையில்  தர் பூசணிக்காயை வைத்து உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய இந்த வீடியோ இதுவரை  57 லட்ச மக்கள் பார்வை இட்டுள்ளனர்.

310B631A00000578-3439966-image-a-83_1455

310B633A00000578-3439966-image-a-69_1455

310B631600000578-3439966-image-a-81_1455

virakesari

  • தொடங்கியவர்

போர்முனையில் சொந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்கும் யுக்ரெயின் தம்பதியர்

  • தொடங்கியவர்

 

10 செகண்ட் கதைகள்

p88_3.jpg

தமிழன்டா!

 

சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்... “அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!”

- சுந்தரம் ராமசாமி

திருட்டு!

p88_4.jpg

``பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க’’ எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், `‘திருடுறது தப்பு... `பென்சில் வேணும்’னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டுவந்திருப்பேன்ல!” என்றார் அப்பா.

விகடன்

  • தொடங்கியவர்

மூன்றும் ஒரே நாழில் அதிர்ச்சியில் மகல

February 10, 2016

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே தனது மனைவி கூறிய ஒரு சுவாரஸ்ய தகவலால் வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஜெயவத்தனே விமானப் பணிப்பெண்ணான கிறிஸ்டினியா மல்லிகா சிறிசேனா என்பவரை காதலித்து 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

191705

இவர்கள் காதலித்த காலத்தில் ஜெயவர்த்தனே கிரிக்கெட்டிலும், மல்லிகா தனது வேலையிலும் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் ஜெயவர்த்தனே சுற்றுப்பயணத்தில் இருந்த போது மல்லிகா அவரின் பிறந்த நாளை ஜெயவர்த்தனேவின் வீட்டிலே கொண்டாடி இருக்கிறார். பின்னர் இது தொடர்பான தகவலை டென்மார்க்கில் உள்ள தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது தனக்கும் அதே தினத்தில் தான் பிறந்த நாள் என்று அவரது பாட்டி மல்லிகாவிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் வியப்பில் இருந்த மல்லிகாவுக்கு மீண்டும் பாட்டியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ’உனது பிறந்த தினமும் உனது தாத்தாவின் பிறந்த தினமும் ஒரேநாள்’ என்றும் வந்திருந்தது.

அதெப்படி இது போன்று நடக்கும் என்று மல்லிகா வியப்பில் உறைந்து போனாராம். இந்த தகவலை ஜெயவர்த்தனேவிடம் அவர் தெரிவிக்க இது நம்பமுடியாத படி உள்ளதாக அவரும் வியந்து போனாராம். இந்த சுவாரஸ்ய தகவலை ஒரு பேட்டியின் போது மல்லிகா தெரிவித்திருந்தார்.

http://www.onlineuthayan.com/sports/?p=9039&cat=2

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

100 வீடுகளை உடைத்தது: சிலிகுரியை துவம்சம் செய்த யானை (வீடியோ )

 

மேற்கு வங்கம் சிலிகுரியில் காட்டு யானை ஒன்று புகுந்து நகரையே துவம்சம் செய்தது. இரு சக்கர வாகனங்கள், கார்கள்,  வீடுகளை அடித்து நொறுக்கிய அந்த யானையை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறினர்.

              

கையறு நிலையை அடைந்த மக்கள் தலை தெறிக்க ஓடினர். கிட்டத்தட்ட 100 வீடுகளை உடைத்து அந்த யானை சேதப்படுத்தியது. சிலிகுரியை மிரள வைத்த இந்த சம்பவத்தில் பொதுமக்கள் அதிர்டவசமாக உயிர்  தப்பினர்.

 

சே... ஒரு யாணை இவ்வளவு அட்டகாசம் செய்யுது, இவ்வளவு பேரும் தெறிச்சு ஓடினமே தவிர ஒருத்தருக்காவது அங்கன ஊருற ஒரு எறும்பைச் சின்னி விரலால் பிடித்து அதன் மூக்குக்கு கிட்டக் காட்டத் தோணவில்லையா....!

  • தொடங்கியவர்

படம் பார்க்கப் போனா நீங்க தான் ராஜா! சென்னையைக் கலக்கும் தியேட்டர் (வீடியோ)

 

பளபள ‘பலாசோ’, வடபழனி ஃபோரம் மாலில் அமைந்திருக்கும் அரண்மனைக்கு ஒப்பான தியேட்டர். உள்ளே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களை மன்னராக உணரச் செய்யுமளவு, இழைத்து இழைத்துச் செய்யப்பட்ட திரை அரங்கு.

உலகப் புகழ்பெற்ற டிசைனரால் வடிவமைக்கப்பட்டு, கால் வைத்ததுமே, இத்தாலியில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் பலாசோவின் அழகு இந்த வீடியோவில்..

விகடன்

  • தொடங்கியவர்

இப்படி தேநீர் போடமுடியுமா

  • தொடங்கியவர்
1979 : ஈரா­னிய இஸ்­லா­மிய புரட்சி வெற்­றி­ய­டைந்­தது
2016-02-11

வரலாற்றில் இன்று....

பெப்ரவரி-11

 

663iran_rev_anniv_0210-vralru.jpgகிமு 660 : ஜிம்மு பேர­ர­ச­ரினால் ஜப்பான் அமைக்­கப்­பட்­டது.

 

55 : ரோமப் பேர­ரசின் முடிக்­கு­ரிய பிரிட்­டா­னிக்கஸ் ரோம் நகரில் மர்­ம­மான முறையில் இறந்தார். நீரோ பேர­ர­ச­னா­வ­தற்கு இது வழி வகுத்­தது.

 

1531 : இங்­கி­லாந்தின் எட்டாம் ஹென்றி மன்னன் இங்­கி­லாந்துத் திருச்­ச­பையின் தலை­வ­ராகத் தெரி­வானார்.

 

1659 : சுவீடன் படை­களின் டென்மார்க் கொப்­பன்­ஹேகன் நகரத் தாக்­குதல் பலத்த உயி­ரி­ழப்­பு­க­ளுடன் முறி­ய­டிக்­கப்­பட்­டது.

 

1752 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் முதலா­வது மருத்­து­வ­மனை பென்­சில்­வே­னி­யாவில் திறக்­கப்­பட்­டது.

 

1809 : ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் பட­குக்­கான காப்­பு­ரிமம் பெற்றார்.

 

1814 : நோர்­வேயின் சுதந்­திரம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

 

1873 : ஸ்பானிய உயர் நீதி­மன்றம் முதலாம் அமெ­டியஸ் மன்­னனை பதவி விலக்கி ஸ்பெயின் நாட்டைக் குடி­ய­ர­சாக அறி­வித்­தது.

 

1933 : ஹரிஜன் என்ற பத்­தி­ரி­கையை மகாத்மா காந்தி  தொடங்­கினார்.

 

1942 : இரண்டாம் உலகப் போர்: சிங்­கப்­பூரில் பூக்கிட் டீமா என்ற இடத்தில் நேச நாடுகள் அணிக்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் சமர் நிகழ்ந்­தது.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: யால்ட்டா உச்சி மாநாடு முடி­வ­டைந்­தது.

 

1953 : சோவியத் ஒன்­றியம் இஸ்­ரே­லுடன் தூத­ரக உறவை முறித்துக் கொண்­டது.

 

1964 : சீனக் குடி­ய­ரசு (தாய்வான்) பிரான்­ஸூடன் தூத­ரக உறவை முறித்துக் கொண்­டது.

 

1968 : இஸ்ரேல்- – ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்­பித்­தது.

 

1971 : ஐக்­கிய அமெ­ரிக்கா, ஐக்­கிய இராச்­சியம், சோவியத் ஒன்­றியம் உட்­பட 87 நாடுகள் சர்­வ­தேச நீர்ப்­ப­ரப்பில் அணு­வா­யுதத் தடையைக் கொண்­டு­வர முடி­வெ­டுத்­தன.

 

1973 : வியட்நாம் போர்: அமெ­ரிக்கப் போர்க் கைதி­களின் முத­லா­வது தொகு­தியை விடு­விக்கும் நிகழ்வு வியட்­நாமில் இடம்­பெற்­றது.

 

1979 : ஆய­துல்லா கொமெய்­னியின் தலை­மையில் ஈரானில் இஸ்­லா­மியப் புரட்சி வெற்றி அடைந்­தது.

 

1990 : தென் ஆபி­ரிக்­காவில் நெல்சன் மண்­டேலா 27 ஆண்­டுகள் சிறை­வா­சத்தின் பின்னர் விடு­த­லை­யானார்.

 

1997 : டிஸ்­க­வரி விண்­ணோடம் ஹபிள் விண்­வெளித் தொலைக்­காட்­டியைத் திருத்தும் நோக்கில் விண்­ணுக்கு ஏவப்­பட்­டது.

 

2008 : கிழக்குத் திமோரின் ஜனா­தி­பதி ஜொசே ரமோஸ் ஹோர்ட்டா அவ­ரது வீட்டில் வைத்து தீவி­ர­வா­தி­களால் சுடப்­பட்டுப் படு­கா­ய­ம­டைந்தார்.

 

2011: 30 வரு­ட­காலம் எகிப்­திய ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்த ஹொஸ்னி முபாரக் ராஜி­னாமா செய்தார்.

 

2013 : பாப்­ப­ரசர் 16 ஆம் ஆசிர்வாதப்பர் ஓய்வுபெறுவாக அறிவித்தார்.  1415 ஆம் ஆண்டின் பின் இவ்வாறு ஓய்வு பெற்ற முதலாவது பாப்பரசர் இவராவார்.

 

2014 : அல்ஜீரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 77 பேர் உயிரிழந்தனர்.

 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=663#sthash.uUkEGVWL.dpuf
  • தொடங்கியவர்

பிப்ரவரி 11: கண்டுபிடிப்பு நாயகன் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தின சிறப்பு பகிர்வு...

10399697_1070789579646498_13827179964482

 

தாமஸ் ஆல்வா எடிசன் இளம் வயதில் பள்ளிக்கு வெகு சில நாட்களே போனார். ஒரு நாள் வகுப்பை விட்டு வரும் பொழுது அவரின் பாக்கெட்டில் ஒரு துண்டு சீட்டு இணைக்கப்பட்டு இருந்தது. அதை அவரின் அன்னை எடுத்து பார்த்தார். கண்களில் நீர் முட்டிக்கொண்டது. "டாமி படிக்க லாயக்கில்லை ! வீட்டிலேயே வைத்துக்கொள்ளவும் !" என்று அந்த கடிதம் சொன்னது.

வீட்டில் அன்னையே எடிசனுக்கு ஆசிரியை ஆனார். டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டு பள்ளியில் படிக்க லாயக்கில்லை என துரத்தப்பட்ட எடிசன் அன்னையின் அரவணைப்பில் கல்வி கற்றார்.

உள்நாட்டு போர் நடந்த பொழுது சுடசுட செய்திகளை தொடர்வண்டியிலேயே அச்சிட்டு விற்றார் .ரயிலில் ஆய்வு செய்து கொண்டிருந்த பொழுது ஒரு பெட்டியில் தீ பற்றிக்கொண்டதற்காக ரயில்வே மாஸ்டரிடம் அறை வாங்கி ஒரு
பக்கம் கேட்கும் திறனை இழந்த எடிசன் தன் ஓயாத உழைப்பால் பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்.

ஊமைப்படங்களை பேச வைக்கும் போனோக்ராஃபை ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த ஒரு வாரத்தில் உருவாக்கி காட்டினார். குண்டு பல்பின் இழைக்காக மலேசியா வரை ஆளை அனுப்பி பொருட்களை தேடிப்பார்த்தார். பத்தாயிரம் முறை தேடியும்
பொருள் சிக்கவில்லை ,"நான் பத்தாயிரம் முறை தோல்வியடைந்தேன் என சொல்ல மாட்டேன் ;பத்தாயிரம் பொருட்களில் இருந்து பல்பை ஒளிர வைக்க முடியாது !என கற்றுக்கொண்டேன் என்றார்.எடிசன் இறுதியாக பல்பை டங்ஸ்டனை கொண்டு ஒளிர வைத்தார் .

அதை சாதித்த பொழுது நள்ளிரவு .மனைவியிடம் ஆர்வமாக காண்பித்த பொழுது ,"நடுராத்திரியில் தூக்கத்தை கெடுத்துக்கிட்டு ;கண்ணு கூசுது விளக்கை அணையுங்க !" என்றார் .அவர் எப்படி மற்ற கண்டுபிடிப்பாளர்களில் இருந்து தனித்து நிற்கிறார் என்றால் தான் கண்டுபிடித்ததை வெற்றிகரமாக அவர் சந்தைப்படுத்தினார்.

காய்கறி விற்பனை,செய்தித்தாள் விற்றல் ,பள்ளியை விட்டு மூன்றே மாதத்தில் வெளியேற்றம் என விரக்தியான வாழ்வில் 1,093 காப்புரிமைகளை பெற்று இருந்தார் என்பதற்கு பின் எத்தகு உழைப்பு இருக்கும் என உணர வேண்டும் . வாழ்க்கையில் வலிகள் மிகுந்திருந்த பொழுது ஓயாத உழைப்பை கொட்டிய அவர் வெற்றியை ஓயாத உழைப்பே தீர்மானிக்கிறது என அடித்து சொன்னவர் .

ஒன்றுக்கும் உதவாத எடிசன் எனப்பட்டவர் மறைந்தார்;அமெரிக்காவில் விளக்குகள் சிலநிமிடம் அணைந்தன .ரேடியோ கரகரத்தது,"எடிசன் வருவதற்கு முன் உலகம் இப்படித்தான் இருந்தது !" மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்து ஊரே மின்னியது ரேடியோ சன்னமாக சொன்னது ,"எடிசன் பிறந்ததற்கு பின் உலகம் இப்படித்தான் இருந்தது !".அவரின் அம்மா எனும் ஆசிரியரால் வார்க்கப்பட்ட அந்த வெளிச்ச நாயகன் போராட்ட இருட்டில் மூழ்கி இருக்கும் எல்லாருக்கும் தன்னம்பிக்கை

vikatan

12715406_983956738319687_579591505080858

கண்டுபிடிப்புக்களின் தந்தை என்று போற்றப்படும், ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கிய உலகின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரும் தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த விஞ்ஞானியுமான
தொமஸ் அல்வா எடிசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.

இவரைப் பெருமைப்படுத்த அமெரிக்கா இவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் கண்டுபிடிப்பாளர் நாள் என்று சிறப்பிக்கிறது.

  • தொடங்கியவர்

12698326_983956281653066_335718848385826

ஹிந்தித் திரையுலகின் கவர்ச்சிக்கன்னி ஷெர்லின் சோப்ராவின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

சென்னையில் ஒரு பெண் கழிப்பறை தேடி என்ன பாடுபடுகிறாள்... பாருங்கள்! #WhereisMyToilet

 

“ச்சீ... ச்சீ செல்லப்பா...” - நிச்சயம் நீங்கள் இந்த வாசகத்தைக் கடந்து வந்திருப்பீர்கள். திறந்த வழியில் மலம், ஜலம் கழிக்கும் மக்களை கிண்டல் செய்து அரசு வெளியிட்ட விளம்பர வாசகம் இது.

'கண்டிப்பாக இயற்கையின் அழைப்பை கழிப்பறைகளில்தான் கழிக்க வேண்டும்;  திறந்த வெளியில் சென்றால் நோய் தொற்று ஏற்படும்' என தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான சுவர்களில் அரசு விளம்பரம் செய்தது. ஆனால், அரசு சாமானியர்களை கிண்டல் செய்வதற்கு முன், அரசு அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறதா....?

இந்தப் பிரபலமான கதையை நீங்கள் படித்திருப்பீர்கள். ஒரு நாள் விஜயநகர அரண்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள். விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "உண்பதில்தான் என்ன சுகம்” என்றார். இதைக் கேட்ட தெனாலிராமன், "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில்தான் தனிச் சுகம் இருக்கிறது" என்றார் . ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! உண்பதில்தான் சுகம்" என்றார். தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனி சுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். சில மணி நேரங்கள் கழிந்த பிறகு உள்ளேயிருந்த குருவுக்கு மலம் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார். அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவறை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கச் சொன்னார். "அப்பாடா! ராமா! கழிப்பதுதான் தனிசுகம்தான்...ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

ஆம். நாம் உண்ணாமல் கூட சில நாட்கள் இருந்துவிடலாம். ஆனால், உண்டதை கழிக்காமல் நிச்சயம் இருக்க முடியாது. அது சென்னை பெருமழையில் சிக்கியவர்களுக்கு நன்கு தெரியும்.

விமான நிலையம், துறைமுகம், மெட்ரோ ரயில் என எல்லாம் உள்ள சென்னையில், போதுமான பொது கழிப்பிடங்கள் இருக்கிறதா... ? அதுவும் சென்னை கிண்டியில் இருந்து தேவி தியேட்டர் வரை வரும் ஒரு பெண்,  தன் இயற்கை உபாதையைத் தணிக்க இந்த மாநகரில் வசதி, வாய்ப்புகள் இருக்கிறதா..? ’இங்கே லேடீஸ் பப்ளிக் டாய்லட் எங்கே இருக்கு?’ என்று ஒரு பெண் கேட்டால், அதற்கு நம் மக்கள் தரும் ரியாக்‌ஷன் என்ன? இறுதியில் அந்தப் பெண்ணால், எப்படித்தான் தன் உபாதையை தணிக்க முடிகிறது? இதற்கு எதற்கு அரசாங்கமும் சமூக அமைப்புகளும்..!

இந்த வீடியோவைப் பாருங்கள்... உங்களுக்கே தெரியும்!

vikatan

  • தொடங்கியவர்

'காதலர் தினத்தில்' அதிகம் செலவிடுவது... ஆண்களா... பெண்களா?

 

lovers%20day%20lefttt.jpgகாதலர் தினம் வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தை கொண்டாட,  உலகம் முழுவதும் காதலர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் அன்பை வெளிப்படுத்தும் காதலர் தினத்தில்,  யார் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது குறித்து கிப்ட்ஈஸ்.காம் எனும் தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தி முடிவினை வெளியிட்டுள்ளது.

அந்த ஆய்வின் ருசிகரத் தகவல் உங்களுக்காக...

காதலிக்கு பரிசு

மெட்ரோ நகரங்களில் வசிக்கும் 18 முதல் 45 வயதுடைய 3 ஆயிரம் ஆண்கள், பெண்களிடம் காதலர் தினம் குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் காதலர் தினத்தன்று செலவு செய்வதில் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்களும் நிரூபித்துள்ளனர்.

காதலர் தினத்தன்று ஆண்கள்,  தங்களின் அன்புக் காதலிகளுக்கு பரிசுப் பொருட்கள் வாங்க சராசரியாக 740 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்துள்ளனர். இதேபோல, பெண்களும் தங்களின் கனவு நாயகர்களுக்காக சராசரியாக 670 ரூபாய் செலவு செய்வதாக தெரிவித்தனர். ஆக காதலர் தினத்தில் ஆண்கள்தான் அதிகமாக செலவு செய்கிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. இதில் சுவாரஸ்யம் என்னவெனில்,  'காதலர் தினத்தன்று, என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என்ற கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்தான்.

முதல்முறையாக டேட்டிங்

இந்த ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதம் பேர்,  காதலர் தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாட விருப்பம் தெரிவித்துள்ளனர். 37 சதவிகிதம் பேர் தங்கள் காதலி/ காதலருடன் தனிமையில் செலவிட விரும்புவதாகவும், 22 சதவிகிதம் பேர் நண்பர்களுடனும் செல்ல விரும்புவதாகவும், 8 சதவிகிதம் பேர் முதல்முறையாக டேட்டிங் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

lovers%20day%20600%203.jpg

இதில் காதலர் தினத்தன்று,  பரிசுப் பொருட்களை பொருத்தமட்டில் ஆண்கள் 42 சதவிகிதம் பேர் மலர்களை வைத்தே காதலிகளிடம் காதலை தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர். 27 சதவிகிதம் பேர் சாக்லேட்டு களையும், 19 சதவிகிதம் பேர் வாசனை திரவியங்களையும், 17 சதவிகிதம் பேர் மிகவும் வித்தியாசமான பரிசுகளையும் அளிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

தேசிய விடுமுறை

இதில் திருமணமான ஆண்களில் 41 சதவிகிதம் பேர் இன்னும் காதலர் தினம் கொண்டாட ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேசமயம், திருமணமான பெண்களில் 31 சதவிகிதம் பேர் மட்டும் இந்த நாளை கொண்டாட விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஆய்வில், 15 சதவிகிதம் பேர் காதலர் தினத்தை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

lovers%20day%20600%201.jpg

ஆனால், ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளில் 29 சதவிகிதம் ஆண்களும், 31 சதவிகிதம் பெண்களும் ஒவ்வொரு முறையும் தங்களின் ஜோடிகளை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆய்வு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் காதலர்களே... காதலர் தினத்தன்று உங்கள் மனம் கவர்ந்தவருக்கு என்ன பரிசு கொடுத்து அசத்தப்போகிறீங்க...  உங்களில் யார் அதிகமா செலவு பண்ணப்போறீங்க...!?

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.