Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

Cbrc5nNVAAMppty.jpg

போலீஸ் ஸ்டேஷன் ஏறி இறங்குகிறார் சிம்பு.. எமியுடன் ஒட்டி உறவாடுகிறார் அனிருத்!:grin:
  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

12771626_990754664306561_421436718833807

பாகிஸ்தானிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சமியின் பிறந்தநாள்.
Happy Birthday Mohammed Sami

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

 
சைபர் ஸ்பைடர்

 

facebook.com/jeevan.rajaram: பப்ளிக் டாய்லெட் போய்வரவேணும், பிராணாயாமம் கத்துக்கணும். #WhereisMyToilet?

facebook.com/vinayaga.moorthy.5070: எல்லா பசங்களும் ‘சிங்கிள்’னு அழுவுறாங்க. எல்லா பொண்ணுங்களும் ‘committed’னு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கே... ஒண்ணும் புரியலை. யாரு, யாரைத்தான் லவ் பண்றீங்க?

facebook.com/swaravaithee: ஐபோனுக்கும் எல்.கே.ஜி ஸீட்டுக்கும் விடிய விடிய வரிசையில் நிற்கும் சமூகம், ரேஷன் கடையில் அஞ்சு நிமிஷம்கூட காத்திருக்கத் தயாராக இல்லை என்பது எதைக் காட்டுகிறது?

facebook.com/suba barathi:  `ஒரு வாய் சாப்பாட்டுக்கோ, பிள்ளைங்க படிப்புக்கோகூட கை நீட்டி கடன் வாங்கினது இல்லை’னு பெருமைப்பட்ட வங்களோட பிள்ளைங்கதான், இன்னிக்கு வண்டியில இருந்து வாங்குற ஒவ்வொண் ணுக்கும் லோன் வாங்கிட்டு `லோ... லோ...’னு அலையுறோம்!

twitter.com/sundartsp: முன்னாடி எல்லாம் தெருவுல இருக்கும் பொண்ணுங்க பேரைக் கண்டுபிடிக்கக் கஷ்டப்படணும். இப்ப அவங்க அப்பனுங்களே கார்ல எழுதிடுறாங்க!

p108a.jpg

twitter.com/mofra2: அண்ணன் - தங்கை சண்டையில் பெரும்பாலும் உடைவது டி.வி-யின் ரிமோட்டுகள்தான்!

twitter.com/meenammakayal: எதைப் பற்றியும் ஓர் அளவுக்கு மேல் சிந்தித்தால், எல்லாம் முட்டாள்தனமாகத்தான் தோன்றுகிறது!

twitter.com/RowdyKavin:  படிச்சவன்தான் `வேலை கிடைக்கலை’னு சொல்லிட்டு வெட்டியா சுத்திட்டிருக்கான். படிக்காதவங்க எல்லாரும் டெய்லி கரெக்ட்டா வேலைக்குப் போயி சம்பாதிக்கிறாங்க!

twitter.com/skpkaruna: சென்னை முழுக்க நூற்றுக்கணக்கான மத்திய, மாநில அரசுகளின் கூட்ட அரங்குகள் இருக்க, தேர்தல் ஆணையம் தனது கூட்டத்தை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வைப்பது ஏன்?

twitter.com/mekalapugazh:  நல்லவனுக்கு கடவுள் பயமும், கெட்டவனுக்கு கடவுள் பக்தியும் அதிகம் இருக்கு!

twitter.com/indirajithguru: `செட்டில் ஆகிவிட்டேன்' என்பதை, ஷாட்ஸுடன் ஷட்டில் ஆடக் கிளம்புவதன் மூலம் மறைமுகமாக உணர்த்தப்பார்க்கிறார்கள்!

p108c.jpg

twitter.com/vikumj3:  Respect கொடுக்கிறவனைவிட Biscuit கொடுக்கிறவனைத்தான் நாய் நம்புது!

twitter.com/mani_kuttans:  வண்டியில்  லிஃப்ட் குடுத்த உடனே கேட்டுடுறாங்க, `சார், இங்கே பக்கத்துல `டாஸ்மாக்’ எங்கே இருக்கு?’னு. எப்படித்தான் மூஞ்சைப் பார்த்த உடனே கண்டுபிடிக்கிறாங்களோ!

twitter.com/skpkaruna:  பாஸ்போர்ட் முதல் கிரெடிட் / டெபிட் கார்டுகள் வரை இரு பக்கங்களையும் ஸ்கேன் செய்து, நம் போனில் வைத்துக்கொள்வது எப்போதாவது மிகவும் உதவும்!

twitter.com/radkrishvl:  அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து கல்யாணம் பண்ணா... அது Arranged marriage; மம்மி மிதிச்சு, டாடி உதைச்சு, கல்யாணம் பண்ணா...
அது love marriage!

twitter.com/riyazdentist: அட்மின் என்பது பண்ணையார், மிராசுதார், நிலக்கிழார் பட்டியலில் சேர்ந்த கெளரவப் பெயராகிவிட்டது என்றும் சொல்லலாம்!

p108d.jpg

twitter.com/MrElani:  வருஷம் முழுக்க படிக்காம, எக்ஸாமுக்கு மொத நாள் விழுந்து விழுந்து படிச்சா பாஸாகிடலாம்கிற மாதிரி இருக்கு, ஜெ. அறிமுகப்படுத்துற `குபீர்’  திட்டங்கள் எல்லாம்!

twitter.com/deebanece:  நான் கிஸ்ஸிங் ஸ்மைலி அனுப்பினதுக்கு, நீ செருப்பு ஸ்மைலி அனுப்புனியே அப்போ அது ‘லவ்’தானே ஜெஸ்ஸி?!

twitter.com/Dinavel27: முதல் குப்பை எங்கு விழுகிறதோ, அதுவே குப்பைத்தொட்டியாக மாறிவிடுகிறது!

p108b.jpg

twitter.com/skpkaruna: நேரெதிர் வீட்டில் மரணம். அவர்கள் சொல்லி அனுப்பவில்லை; அறிமுகமும் இல்லை. நான் போகணுமானு எனக்கும் தெரியலை... சென்னை வாழ்க்கை ஒரு விநோதம்தான்!

twitter.com/iMuthuram:  ‘நீ சீரியஸாவே இருக்க மாட்டியா?’னு யாராவது கேட்டா, நீங்கள் இந்த உலகை இயக்குபவர்களில் ஒருவர்!

twitter.com/kalasal:  முன்னாடி எல்லாம் ஜோடியா சுத்துறவங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கும். இப்ப எல்லாம் தனியா சுத்துற பசங்களைப் பார்த்தா பொறாமையா இருக்கு!

twitter.com/BulletJackie: காதலித்து பார்... பார்லதான்டா உட்கார்ந்திருக்கேன்.

p108e.jpg

facebook.com/magudeswaran.govindharajan: இந்தப் படத்தில் இருக்கும் இளைஞர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பெயர் சௌகான்; இன்னொருவர் பெயர் தாரா. அங்கு இருந்து திருப்பூர் வந்து, ஓர் அறை பிடித்துத் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கத்தரியும் சீப்பும் எடுத்துக்கொண்டு மரத் தடியில் வந்து மர்ந்துகொள்கிறார்கள். ஒருவர் அமர்ந்திருக்க, மற்றவர் பொறுமையாக முடிவெட்டிவிடுகிறார். ‘ஏன்... கடைக்குச் செல்ல மாட்டீர்களா?’ எனக் கேட்டேன். ஒருவருக்கு முடி வெட்ட 100 ரூபாய் செலவாகிறதாம். அதை மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்புகிறார்கள். காந்தியின் ஆசிரமத்தில் இந்த முறை பின்பற்றப் பட்டது. ஒருவருக்கொருவர் முடி வெட்டிவிட வேண்டும். எங்கோ இருந்து வந்து 100 ரூபாய் மீதமாக்கி வாழ்வில் ஈடேறத் துடிக்கிற இந்த இளைஞர்களை எண்ணிப் பெருமிதம் அடைவதா... அல்லது ஈட்டிய பணத்தை மதுக் கடையில் நூறு நூறாக இறைத்து, குடித்து அழியும் நம் மக்களை எண்ணி வேதனையுறுவதா?

Whatsapp:

அமெரிக்கர்: நாங்க ஒரு மெஷின் கண்டுபிடிச்சிருக்கோம்... அது முன்னாடி யாரும் பொய் பேச முடியாது.

தமிழர்: இது கண்டுபிடிப்பு இல்லை... நாங்க எல்லாம் அந்த மெஷினைத்தான் கல்யாணம் பண்ணியிருக்கோம்.

vikatan

  • தொடங்கியவர்

ISIS தலைவரைக் கொலை செய்யும் நபரை மணப்பேன்: எகிப்து நடிகை அறிவிப்பு

 

ISIS தலைவரைக் கொலை செய்யும் நபரை மணப்பேன்: எகிப்து நடிகை அறிவிப்பு

ISIS தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியைக் கொலை செய்யும் நபரை நான் திருமணம் செய்து கொள்வேன். அவர் யாராக இருந்தாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. திருமணத்திற்கான அனைத்து செலவையும் நானே ஏற்பேன். அவர் விரும்பும் இடத்திற்கு நான் செல்வேன். அவரின் சேவகியாக இருப்பேன். பாக்தாதியைக் கொலை செய்தால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் அமைதி திரும்பும்

தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ள ஷாஹின் தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

வரலாற்றில் இன்று.....

பெப்ரவரி - 25

 

6722015---afhghanistan.jpg1797 : வில்­லியம் டேட் தலை­மை­யி­லான சுமார் 1500 போர்­வீ­ரர்­களைக் கொண்ட பிரெஞ்சு படை­யினர் தமது பிரித்­தா­னியா மீதான கடைசிப் படை­யெ­டுப்பை அடுத்து சர­ண­டைந்­தனர்.

 

1836 : சாமுவேல் கோல்ட் சுழல் துப்­பாக்­கிக்­கான அமெ­ரிக்கக் காப்­பு­ரி­மத்தைப் பெற்றார்.

 

1837 : தோமஸ் டெவன்போர்ட் மின்­சா­ரத்தில் இயங்கும் மோட்­டா­ருக்­கான அமெ­ரிக்கக் காப்­பு­ரி­மத்தைப் பெற்றார்.

 

1921 : ஜோர்­ஜி­யாவின் தலை­நகர் திபி­லீசி ரஷ்­யாவின் கம்­யூனிஸ்ட் படை­க­ளினால் கைப்­பற்­றப்­பட்­டது.

 

1925 : சோவியத் ஒன்­றி­யத்­திற்கும் ஜப்­பா­னுக்கும் இடையில் ராஜ­தந்­திர உறவு ஆரம்­பிக்­கப்­பட்­டது.

 

1932 : அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்­ம­னியின் குடி­யு­ரி­மையைப் பெற்றார்.

 

1945 : இரண்டாம் உலகப் போர்: ஜேர்­ம­னிக்கு எதி­ராக துருக்கி போர்ப் பிர­க­டனம் செய்­தது.

 

1948 : செக்­கோஸ்­ல­வாக்­கி­யாவின் ஆட்­சியை அந்­நாட்டு கம்­யூனிஸ்ட் கட்சி கைப்­பற்­றி­யது.

 

1951 : முத­லா­வது பான் அமெ­ரிக்க விளை­யாட்டு விழா ஆர்­ஜென்­டீ­னாவில் ஆரம்­ப­மா­கி­யது. 

 

1956 : சோவியத் தலைவர் நிக்­கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்­சிக்­கால நிர்­வா­கத்தைக் கண்­டனம் செய்தார்.

 

1980 : சூரி­னாமில் இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியில் அர­சாங்கம் கவிழ்க்­கப்­பட்­டது.

 

1986 : பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி பேர்­டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்­சியை அடுத்து ஆட்­சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளி­யே­றினார். கொரசோன் அக்­கீனோ புதிய ஜனா­தி­ப­தி­யானார்

 

1988 : மாதிரி அணு­வா­யு­தத்தை கொண்ட இந்­தி­யாவின் முதல் ஏவு­கணை பிரு­திவி ஏவப்­பட்­டது.

 

1991 : வளை­குடாப் போர்: ஈராக்­கிய ஸ்கட் ஏவு­கணை ஒன்று சவூதி அரே­பி­யாவின் டாஹ்ரான் நகரில் அமெ­ரிக்க இரா­ணு­வத்­த­ளத்தில் வீழ்ந்து வெடித்­ததில் 28 அமெ­ரிக்க இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர்.

 

1991 : வோர்ஸோ உடன்­ப­டிக்கை கைவி­டப்­பட்­டது.

 

1992 : அசர்­பை­ஜானின் நகர்­னோ-­க­ரபாக் பகு­தியில் ஆர்­மே­னிய இரா­ணு­வத்­தினர் 613 குடி­மக்­களைப் படு­கொலை செய்­தனர்.

 

1994 : மேற்குக் கரை நக­ரான ஹெப்­ரோனில் மசூதி ஒன்றில் இஸ்­ரே­லி­ய­ரான பரூக் கோல்ட்ஸ்­டெயின் என்­பவர் சுட்­டதில் 29 பாலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்டு 125 பேர் காய­ம­டைந்­தனர். ஆத்­தி­ர­ம­டைந்த பாலஸ்­தீ­னர்கள் கொலை­யா­ளியை அடித்துக் கொன்­றனர். இத­னை­ய­டுத்து நிகழ்ந்த வன்­மு­றை­களில் 26 பாலஸ்­தீ­னர்­களும் 9 இஸ்­ரே­லி­யர்­களும் கொல்­லப்­பட்­டனர்.

 

2006 : உலகின் மக்கள் தொகை 650 கோடியை கடந்­தது.

 

2009 : பங்­க­ளாதேஷ் தலை­நகர் டாக்­காவில் எல்லை பாதுகாப்புப் படையினர் தமது தலைமையகத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் 50 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் உயிரிழந்தனர். 

 

2015 : ஆப்கானிஸ்தானில் பனிச்சரி வினால் சுமார் 310 பேர் உயிரிழந்தனர்.

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=672#sthash.oRYRXv76.dpuf
  • தொடங்கியவர்

நியூயார்க் புகைப்பட கலைஞர் Stephen McMennamy உருவாக்கிய புகைப்படங்கள் இவை. நாம் தினமும் பார்க்கும் பொருட்களை இணைத்து உருவாக்கப்பட்டது. பார்க்க சுவாரஸ்யமாக உள்ளதா!

12472544_683036048465607_829189756878501

12744047_683036218465590_569592217084445

12189091_683036181798927_505811805395575

12743694_683036168465595_834085893237545

12742252_683036165132262_852254983622007

12742768_683036135132265_478247441726508

12743910_683036125132266_215961213594704

12741879_683036095132269_419027328783415

12066003_683036055132273_583098715587569

12742371_683036051798940_300277404388324

vikatan

  • தொடங்கியவர்

வாழ்க்கை முரண் - 10 செகண்ட் கதைகள்

``மின்சாரம் கிடையாது; இணையம் பாதிப்பு. மொபைல் சிக்னல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே கிடந்து, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த காலத்தைத்தான் `இயல்பு வாழ்க்கை பாதித்தது’ என்கிறார்கள்’’ எனப் புலம்பினார் ராமசாமி தாத்தா!

 

 
Vikatan EMagazines Foto.

vikatan

  • தொடங்கியவர்

12764617_991282267587134_723517618802735

முன்னணி நாயகர்களின் வெற்றித் திரைப்பட இயக்குனர் - நவீன பாணி காதல் திரைப்படங்கள் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் தனியான இடம்பிடித்துள்ள இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனின் பிறந்தநாள் இன்று.
Happy Birthday Gautham Vasudev Menon

  • தொடங்கியவர்

ஷால் எத்தனை வகைகளாக போடலாம்...!

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்டு மிஸ்ஸிங்..., உத்தரத்தில கொழுவிப்போட்டு கழுத்தில முடிச்சுப் போடுறது.... !   கவனிச்சீங்களா நவீனன்...!  tw_blush:

  • தொடங்கியவர்

லீப் நாளில் பிறந்தால் எத்தனை வயது?

 
 
feb29_2749356f.jpg
 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனது 8-வது பிறந்த நாளைக் கொண்டாட ஆவலாக இருந்தாள் மது. அப்படி என்ன விசேஷம்? மதுவின் பிறந்த நாள் பிப்ரவரி 29, 2008. உலகில் இதுவரை பிப்ரவரி 29 அன்று பிறந்த லட்சக்கணக்கானோர் தங்களது சரியான பிறந்த நாளை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் லீப் நாளில்தான் கொண்டாடிவருகின்றனர். லீப் ஆண்டு அவர்களுக்கு விசேஷமானது.

2012-ல் மதுவின் நான்காவது பிறந்த நாள் கொண்டாடப்படும் சமயத்தில் லீப் நாள், லீப் ஆண்டு பற்றியெல்லாம் அவளுக்குத் தெரியாது. ஆனால் இப்போது மதுவின் அம்மா பத்மா லீப் நாள், லீப் ஆண்டு பற்றியெல்லாம் அவளுக்கு விளக்கமாகப் பல விஷயங்களைக் கூறியுள்ளார். அது பற்றி மது தனது குறிப்பேட்டில் எழுதியும் வைத்திருக்கிறாள். அதைத்தான் கீழே படிக்கிறீர்கள்:

இதுதான் லீப்

ஒரு வருடத்தில் பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகள். உதிரியாக இருக்கும் மணி நேரம், நிமிடங்கள், விநாடிகளை நான்கால் பெருக்கினால் வருகிற ஒரு நாள்தான் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் லீப் நாள்.

இன்று பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது கிரிகோரியன் நாட்காட்டி. இந்த நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்துக்கு நான்காண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் நான்கால் வகுபடும் ஆண்டுகளிலேயே இந்த லீப் ஆண்டு வருகிறது. அதுவே நூற்றாண்டு ஆண்டுகள் என்றால், 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே கூடுதலாக இந்த ஒரு நாள் சேர்க்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு 1600, 2000 ஆண்டுகள் லீப் ஆண்டுகள். ஆனால் 1700, 1800, 1900 ஆண்டுகள் லீப் ஆண்டுகள் கிடையாது.

ஏன் இப்படி?

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) சேர்க்கையில், 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடிகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதை சமன் செய்யவே நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் ஆண்டு கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

எல்லாம் சரி, லீப் நாளில் பிறந்தவர்கள் லீப் ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் எந்த நாளில் பிறந்த நாளை கொண்டாடுவார்கள்? பெரும்பாலும் மார்ச் 1-ம் தேதிதான். இந்த விசேஷ நாளில் பிறந்தவர்கள், இந்த முறை அவர்கள் பிறந்த நாளிலேயே கொண்டாடலாம் என்பதால், அவர்களுக்கு சிறப்புப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

(பின்குறிப்பு: லீப் நாளில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாட ஒரு வழி இருக்கிறது. ஆம், தமிழ் மாதங்களின் கணக்குப்படி உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடலாமே!)

tamil.thehindu.

  • தொடங்கியவர்

1915531_991283140920380_4333349572524213

நகைச்சுவை நடிகர், பாடகர், Rap கலைஞர், இசையமைப்பாளர் என்று பலரூபம் எடுக்கும் பிரேம் ஜி அமரனின் பிறந்தநாள் இன்று.

ஒரு கலைக்குடும்பத்தின் கடைக்குட்டி.
எல்லாவற்றுக்கும் மேலே இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி என்பது முக்கியமான அடையாளம்.

Happy Birthday Premgi Amaren

  • தொடங்கியவர்

12744303_1046060642119616_26883472180716

சன்னிலியோன் இப்படியும் நடிப்பார். வைரலாகும் புது வீடியோ

 

காமம், இறப்பு கலந்த ஓர் நாடகம் இதுவே சன்னிலியோன் நடித்து சமீபத்தில் வெளியாகி வைரல் ஹிட் அடித்துவரும் வீடியோ. யாரும் கற்பனைக் குதிரையை தட்டிவிட வேண்டாம். அந்த வீடியோ புகைபிடிப்பதற்கு எதிரான விழிப்புணர்வை ஏந்தி வருகிறது.

அந்த வீடியோ என்னன்னா,

வட இந்தியாவின் கிராமப்பகுதியில் இருக்கும் ஓர் இளைஞன். சீக்கிரம் இறந்துவிடுவார் என்று அந்த ஊர் மருத்துவர் சொல்லிவிடுகிறார். குடும்பத்தினர் அவனின் கடைசி ஆசை என்னவென்று கேட்கிறார்கள். அவன் தன்னுடைய செல்ஃபோனில் ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறான்.

அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணை வீட்டிற்கு அழைத்துவருகிறார். அந்தப் பொண்ணு வேற யாரு? சன்னிலியோன் தான். சன்னிலியோன் அவனின் அறைக்கு வந்து கதவையும் சாத்திகொள்கிறாள். அவனுக்கு பால் குடிக்கக் கொடுக்கிறாள். சன்னியைப் பார்த்து வழிந்து விழும் அவனுக்கு மூச்சு விடக் கூட முடியாத அளவுக்குக் காசநோய் வேறு. அதற்கடுத்து என்ன நடந்ததென்பதே இந்த வீடியோ.

மிக மோசமான கொடிய பழக்கங்களில் ஒன்று தான் புகைப்பழக்கம். அதற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவே “நோ ஸ்மோக்கிங்”. நாம் ஒவ்வொரு முறை புகைபிடிக்கும் போதும் நம்முடைய வாழ்வில் 11 நிமிடங்களை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்,  அடுத்தடுத்த சிகரெட்டை புகைக்கும் முன்பு சிந்தியுங்கள் என்ற கருத்துடன் வீடியோ முடிகிறது...

வீடியோவிற்கு:

vikatan

On 23/02/2016 at 1:04 AM, நவீனன் said:

உலகின் பிரம்மாண்ட வெங்காயம்!

ONION_2740226f.jpg

பெரியார் இவ்வளவு பெரிதாக வருவார் என்று தெரியாமப் போச்சு.

  • தொடங்கியவர்

மணிக்கு 10 கி.மீ வேகத்தில் செல்லும் தமிழக ரயில் : இந்தியன் ரயில்வே சில இன்ட்ரெஸ்டிங் தகவல்கள்!

 

ந்தியன் ரயில்வே,  உலகிலேயே 4வது மிகப் பெரிய நிறுவனம் ஆகும். தினமும் 1.30 கோடி பயணிகள் இதனை உபயோகப்படுத்துகின்றனர். ரயில்வே பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ள இந்த தருணத்தில், இந்திய ரயில்வே பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்...

ind.jpg


* இந்தியா முழுவதும்  60 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு இருப்பு பாதை உள்ளது. தினமும் 11 ஆயிரம் ரயில்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
 

* சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர். போர்ப்ஸ் பட்டியலின்படி உலகின் 4வது மிகப் பெரிய நிறுவனம் இது.

* கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ்  ரயில்தான் இந்தியாவிலேயே நீண்ட தொலைவு பயணிக்கிறது. சுமார் 4 ஆயிரத்து 286 கிலோமீட்டர் பயணிக்கும் இந்த ரயில்,  56 நிலையங்களில் நின்று செல்கிறது. மொத்த பயண நேரம் 82.30 மணி நேரம்.

* திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி நிஜாமுதீன் வரை செல்லும்  ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்,  528 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறது. இதில் வதோதரா மற்றும் கோட்டா நகரங்களுக்கிடையே எந்த ஒரு ரயில் நிலையத்திலும் நிற்காமல் சுமார் ஆறரை மணி நேரம் இந்த ரயில் செல்லும். ஹவுரா- அம்ரிஸ்தர் நகரங்களுக்கிடையே ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகபட்சமாக 115 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

* புது டெல்லி- போபால் இடையே ஓடும் சதாப்தி எக்ஸ்பிரஸ்தான் இந்தியாவிலேயே அதி வேகமாக செல்லும் ரயில் ஆகும். இந்த ரயில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். உதகை மலை ரயில்தான் இந்தியாவிலேயே குறைந்த வேகத்தில் செல்லும் ரயில். மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில்தான் இது செல்லும்.

mount.jpg

* அசாம் மாநிலம் குவஹாத்தியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் மொத்தம் 65 மணி நேரம் பயணம் மேற்கொள்ளும். ஆனால் குறைந்தது 12 மணி நேரம் தாமதமாக வருவதை இந்த ரயில் வழக்கமாக கொண்டுள்ளது.

* அரக்கோணம் - ரேணிகுண்டா பாதையில் உள்ள வெங்கடரநரசிம்மராஜுவரிபேட்டை என்ற பெயர் கொண்ட ரயில் நிலையம்தான் இந்தியாவிலேயே உச்சரிக்க முடியாத அளவிற்கு நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையம் . ஒரிசாவில் உள்ள' ஐபி,' குஜராத்தில் உள்ள 'ஒடி' ரயில்நிலையங்கள் அதற்கு நேர் எதிரானவை.

* இந்தியாவிலேயே இரு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே ரயில் நிலையம் நவ்பூர் ரயில்நிலையம்தான். இதன் ஒரு பகுதி மகராஷ்ட்ராவிலும் அடுத்த பகுதி குஜராத்திலும் அமைந்துள்ளது.

* மகாராஷ்ட்ராவின் அமகதுநகர் மாவட்டத்தில் ஒரே ரயில் பாதையில் எதிர் எதிராக இரு ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன. ஒன்று ஸ்ரீராம்பூர் மற்றொன்று பேலாபூர்.

* கடந்த 1981-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி,  பிகாரின் பாகமதி ஆற்றில் ரயில் கவிழ்ந்த விபத்தில் 800 பேர் இறந்து போனார்கள். இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்து இதுதான்.

vikatan

  • தொடங்கியவர்
5 hours ago, suvy said:

ஒன்டு மிஸ்ஸிங்..., உத்தரத்தில கொழுவிப்போட்டு கழுத்தில முடிச்சுப் போடுறது.... !   கவனிச்சீங்களா நவீனன்...!  tw_blush:

ஹா ஹா சுவி அண்ணா அவர்கள் அதை மாத்திரம் செய்யமாட்டார்கள்..tw_blush:

ஆனால் மற்றவர்கள் கழுத்தில் முடிச்சு போட தயங்கமாட்டார்கள்..:rolleyes:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தனி மனிதன் உருவாக்கிய காடு!

 
ருமபுரி என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் மனசித்திரம் எப்படி விரியும்...? அது ஒரு பாலை நிலம், பெண் சிசு கொலை அதிகம் நடந்த ஊர், சாதிக் கலவரங்கள், நக்சல் பகுதி... இப்படியானதாகதான் இருக்கும் rsz_1combine%282%29.jpgஉங்கள் எண்ணம்.
 
ஆம். எனக்கும் இப்படிதான் அந்த ஊர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அதில் உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால், அது மட்டுமே உண்மையும் இல்லை.... அந்த ஊருக்கென இன்னொரு முகம் இருக்கிறது, யாருக்கும் அதிகம் தெரியாத முகம். பசுமை முகம்.  இந்த கட்டுரை அந்த பசுமை முகத்தை பற்றி அல்ல. அதை விதைத்த ஒரு தனி மனிதனை பற்றி...  ஆம். வரலாறு நெடுகிலும் சில அற்புதங்கள் தனி மனிதர்களால் நிகழ்ந்து இருக்கிறது.
 
அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்திய ஒரு மனிதனை பற்றி 
 
 
உங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜாதவ் பயேங்கை தெரிந்து இருக்கும். யாரது என்கிறீர்களா...?  அசாமில் பிரம்மபுத்திரா மணல் படுகையில் ஒரு காட்டையே உருவாக்கியவர். அதற்காக பத்ம ஸ்ரீ விருது வரை வாங்கியவர்.   நம் ஊரிலும் ஒரு ஜாதவ் பயேங் இருக்கிறார்... அதுவும் தருமபுரியில்.  அவரை அறிமுகப்படுத்தவே இந்த கட்டுரை....  
 
தமிழகத்தின் ஜாதவ் பயேங்:
 
ஜாதவ் பயேங் உருவாக்கிய காடு அரசுக்கு தெரிய வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. ஊருக்குள் வந்த யானைகளை துரத்திக் கொண்டே சென்றவர்கள்,  கடைசியில் அடைந்த இடம் ஒரு காடு. தங்கள் வரைப்படத்தில் இல்லாத  காட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், இது எப்படி உருவானது என்ற தேடலுக்கான விடைதான் ‘ஜாதவ் பயேங்’. இதுபோல்தான் எனக்கும் தமிழகத்தின் ஜாதவ் பயேங் அறிமுகமானார்.  வேறொரு வேலையாக தருமபுரி மாவட்ட எர்ரப்பட்டிக்கு சென்று, அரசு வரைபடத்தில் இல்லாத ஒரு கானகத்தில் சிக்கி கொண்டேன். என்னை தொலைத்து அந்த அற்புத கானகத்தை கண்டடைந்தேன்.  அங்குதான் அந்த காட்டை உருவாக்கிய ‘பியுஷ் மனுஷ்’ அறிமுகமானார்... ராஜஸ்தான் பூர்வீகம். போன தலைமுறையில் தமிழகம் வந்து குடியேறியவர். 
 
 தமிழ் ஜாடையில் இல்லாத, ஆங்கிலத்தில் உரையை துவங்கிய அவருடன் என்னால் உடனே ஒட்ட முடியவில்லை. ஆனால் பேச ஆரம்பித்த சில மணிநேரங்களில் அவரின் உற்சாகம், என்னையும் தொற்றிக் கொண்டது. அவருடன் மாலை நேரத்தில் துவங்கிய இந்த உரையாடல் பின்னிரவு வரை நீண்டது...
 
rsz_3001%281%29.jpg
 
காடெனப்படுவது யாதெனில்...
 
இந்த காடு எப்படி உருவானது...? 
 
“2007 ல் இந்த பகுதிக்கு வேறு வேலையாக வந்தேன். இந்த பகுதியின் நில அமைப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அப்போது மழை தொடர்ந்து பல ஆண்டுகள் பொய்த்து இருந்ததால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று,  நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டு இருந்தார்கள். சூழலியல் மீது அக்கறை கொண்ட நண்பர்களிடம் பேசி நிதி திரட்டி, இடம்பெயர்ந்து கொண்டிருந்தவர்களிடமிருந்து நிலத்தை வாங்கினேன். ஏறத்தாழ நூறு ஏக்கர். நான் விவசாயி கிடையாது, விவசாயமும் தெரியாது.... ஆனால் கல்லூரிக் காலங்களில் ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டு இருக்கிறேன். அந்த  அனுபவத்தில் இந்த வறண்ட நிலத்தில், மரங்கள் நட துவங்கினேம். ஏக்கருக்கு 1300 மரங்கள் வீதம், இது வரை ஒரு லட்சத்து முப்பதாயிரம் மரங்கள் நட்டேன்...இப்படியாகதான் இந்த கூட்டுறவு காடு உருவானது...” என்று பியூஷ் தன் மழலை தமிழில் சொன்னார்.  
 
காடெனப்படுவது யாதெனில், வெறும் மரங்களின் தொகுப்பு மட்டுமல்ல.... ஓடைகள், குளங்கள், இதெல்லாம் இருக்க வேண்டும். அப்போதுதான் வனவிலங்குகள் வரும்... இப்போது இந்த காட்டில் ஒரு வற்றாத ஓடையும், 8 குளங்களும், 2 ஏரிகளும், 17 தடுப்பணைகளும் இருக்கிறது. அவ்வபோது காட்டு பன்றிகளும், எப்போதும் மயில்களும் வந்து போகிறது...
 
வளங்குன்றா வாழ்வும், பசுமை தொழிற்களும்
 
rsz_dsc_4620.jpg
 
இனி அவருடனான உரையாடலில் இருந்து...
 
வணிக குடும்பத்தில் பிறந்த உங்களை எது சூழலியல் செயற்பாட்டில் ஈடுபடத் தூண்டியது...?
 
நானும் ஒரு வணிகனாகத்தான் என் வாழ்க்கையை துவங்கினேன். கொசு வலை உற்பத்தி செய்யும் ஒரு சிறு தொழிற்சாலை வைத்து இருந்தேன். அப்போது, தினமும் காலையில் மிதிவண்டியில் செடிகளை சுமந்து கொண்டு வீதி, குளக்கரை ஓரங்களில் மரம் நடுவதை பழக்கமாக வைத்து இருந்தேன். ஆனால், இன்னொரு புறம், என் தொழிற்சாலையில் கொசு வலையில் சாயம் ஏற்றுவதற்காக நீர் நிலைகளை மாசுப்படுத்தி கொண்டிருந்தேன். இந்த முரணில் செயல்பட பிடிக்கவில்லை. தொழிற்சாலையை மூடினேன். பிறகு சூழலுக்கு மாசு உண்டாக்காத பசுமை தொழில்களை செய்ய துவங்கினேன். அதன் ஒரு பகுதிதான் இந்த காடும்.
 
என்ன... காடு உருவாக்குவது ஒரு தொழிலா...? அதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
ஆம் தொழில்தான்... சொல்லப்போனால் இதுதான் நீடித்த வருமானம் வரும் தொழில். பிற தொழிற்சாலைகள் உற்பத்தியை உண்டாக்குகிறோம் என்று இயற்கையை சுரண்டும் போது, நாங்கள் இயற்கைக்கு கொடுத்து அதிலிருந்து உரிமையுடன் எங்களுக்கு வேண்டியதை பெறுகிறோம்.
 
புரியவில்லையே...? 
 
நாங்கள் பத்து விதமான பசுமை தொழிற்களை பட்டியலிட்டுள்ளோம். மூங்கிலிலிருந்து மேசை, நாற்காலி உற்பத்தி செய்கிறோம், பழங்களை மதிப்புக்கூட்டி விற்கிறோம், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு என இயற்கையை சுரண்டாத தொழில்கள் செய்கிறோம்...
 
என்ன விளையாடுகிறீர்களா.... இதிலிருந்து எப்படி வருமானம் வரும் ?
 
உங்களின் இந்த பொது புத்திதான், பலர் இது போன்ற பசுமை தொழில்களுக்கு வராமல் இருப்பதற்கான காரணம். நாங்கள் உற்பத்தி செய்யும் மூங்கில் சாமான்களுக்கு, சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது.  சொல்லப்போனால், என்னால் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. என்னிடம் ஒரு பெரிய ஜீப் இருக்கிறது, பெரிய வீட்டில் குடி இருக்கிறேன். நம்புங்கள்.... இது  அனைத்தும் இங்கிருந்து கிடைக்கும் வருமானம்தான்... 
 
ஹோ... பொருட்களை மதிப்புக் கூட்டி விற்றால், வருமானம் வரும் என்கிறீர்கள்...? 
 
ஆம். மதிப்பு கூட்டுதல் மட்டுமல்ல... காலத்திற்கு ஏற்றார் போல் விவசாயத்தையும் நவீனப்படுத்தாமல், விவசாயம் நஷ்டம் தருகிறது என்று கூறுவது வெற்று பிதற்றல் என்கிறேன்.
rsz_004.jpg 
புரிகிறது. ஆனால், இதை எப்படி விவசாயிகள் செய்ய முடியும். அரசு தானே செய்ய வேண்டும்...?
 
ஆம். நான் அரசைத்தான் சொல்கிறேன். பன்னாட்டு நிறுவனங்கள், பல ஆயிரங்கள் முதலீடு செய்கிறது. ஆனால், அவர்கள் தரும் வேலை வாய்ப்பு சில ஆயிரங்கள்தான். ஆனால், நாங்கள் இது போன்ற பசுமை தொழிற்கள் மூலம், சில லட்சங்கள் முதலீட்டில், பல பேருக்கு வேலை தருகிறோம். வளங்குன்றா வாழ்விற்கு, இது போன்ற தொழிற்களே சிறந்தது என நான் நம்புகிறேன். இயற்கையை சுரண்டுவதும் இல்லை, சூழலை மாசுப்படுத்துவதும் இல்லை. இது போன்ற தொழிற்களை ஊக்கப்படுத்த அரசு முன் வர வேண்டும். அதேவேளை, இளைஞர்களும் பசுமை தொழிற் பக்கம் வர வேண்டும். நான் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். மகிழ்வானதும், நிரந்தர வருமானம் வரக்கூடியதும் இதுதான்.
 
இப்போது சூழலியல் குறித்து அதிக விழிப்புணர்வு  ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தளத்தில் மிக உற்சாகமாக வேலை பார்க்கிறார்கள். ஆனால், நான் ஆரம்பத்தில் செய்த தவறையே செய்கிறார்கள், இயற்கையை சுரண்டும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே, இயற்கையை காக்க போராடுகிறார்கள்... அவர்கள் பசுமை தொழில் செய்ய முன் வர வேண்டும்.  
 
இரவு அவருடைய கானகத்திலேயே தூங்கிவிட்டு காலை கிளம்பும் போது,  “பசுமை தொழிற்களில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு இந்த கூட்டுறவு காட்டின் வாசற்கள் திறந்தே இருக்கிறது. அவர்கள் இந்த இடத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளாலாம்”  என்று சொல்லி விடை கொடுத்தார்.
 
நுரையீரல் முழுவதும், கானகத்தின் சுத்தமான பிராணவாயுவை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

vikatan
  • தொடங்கியவர்

10 செகண்ட் கதைகள்

 

ஓவியங்கள்: செந்தில்

 

உணவின்றி...

``லன்ச் டைம்...

p56a.jpg

வெயிட் பண்ணுங்க’’

- காக்கவைத்தார் வங்கி மேலாளர், விவசாயக் கடன் கேட்டு வந்தவர்களை!

 - பாப்பனப்பட்டு வ.முருகன்

பழக்கதோஷம்

p56b.jpg

``டைனிங் டேபிளைத் தட்டி, ரசத்தை எல்லாம் கொட்டிட்டீங்களே!’’ தொலைக்காட்சியில் தலைவர் பேசி முடித்ததும், படபடவென மேஜையைத் தட்டிய முன்னாள் அமைச்சரைக் கடிந்துகொண்டார் அவரது மனைவி.

- சி.சாமிநாதன்

நீதிக்குத் தண்டனை

``குடிபோதையில கார் ஓட்டி, ரெண்டு பேரைக் கொன்னுட்டேன்’’ என்றார் அந்தப் பணக்கார க்ளையன்ட்.

p56c.jpg

``அப்ப, கீழ் கோர்ட்டுல ஒண்ணும் பண்ண முடியாது. ஹை கோர்ட்ல பார்த்துக்கலாம்” என்றார் வழக்குரைஞர்.

- அஜித்

எல்லாம் நேரம்!

p56d.jpg

ஆறு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்த டாக்டர் 10 மணிக்கு வந்து, ``கரெக்ட் டைமுக்கு சாப்பிடுங்க... தூங்குங்க’’ என்றார்.

- நந்தகுமார்

புதியன கழிதல்

p56e.jpg

``புதுப்படம் பார்க்கணும்போல இருக்குப்பா...’’ என்று மகள் கேட்டதற்காக, புதுப்பட திருட்டு டி.வி.டி ஒன்றை வாங்கிக்கொண்டு போனார் தியேட்டர் ஆபரேட்டர் தினேஷ்.

 - வெங்கடசுப்ரமணியன்

உண்மை

p56f.jpg

``சென்னைக்கு மிக அருகில் உள்ள வீட்டுமனை’’ என்று அந்தப் பிரபலம் சொல்லிக்கொண்டிருந்தபோது அவர் மொபைல் சிணுங்கியது. மொபைலை எடுத்து ``நான் இப்போ அவுட் ஆஃப் ஸ்டேஷன். சென்னை வந்தவுடன் கால் பண்றேன்’’ என்றார்.

- விஷ்ணுவர்தன்

 16 வயதினிலே - 2016

p56g.jpg

மயிலுக்கு மெயில் அனுப்பினான் பரட்டை. டாக்டரின் வாட்ஸ்அப்பை பிளாக் செய்த மயில், சப்பாணிக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தாள். பரட்டையை ட்விட்டரிலும் மீம்ஸிலும் வறுத்தெடுக்க, சப்பாணிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கித் தந்தாள் மயில்!

 - பிரகாஷ்

பயிற்சி

p56h.jpg

வாக்கிங் முடித்துவிட்டு வந்தவன், அடுக்குமாடிக் குடியிருப்பில் தன் வீட்டுக்குச் செல்லக் காத்துக்கிடந்தான் லிஃப்ட்டுக்காக!

- பெ.பாண்டியன்

மறதி

p56j.jpg

தன் கணவன் லட்சங்களில் சம்பாதிப்பதாகப் பெருமை அடித்தாள் ப்ரியா...

தன் தோழி எல்.ஐ.சி முகவர் என்பதை மறந்து!

 - ரூபிணி சுரேஷ்

தங்கமானவர்

p56k.jpg

``அசல்கூட கில்ட்டு நகையையும் சேர்த்து நைசா தள்ளப்பார்க்கிறியா? நம்பள்கி நேர்மை ரொம்ப முக்கியம்’’ என்றார் அடகுக்கடை சேட்டு, திருட்டு நகை விற்பவனிடம்.

- அஜித்

vikatan

  • தொடங்கியவர்

விமானத்தில் பறக்கும் பொழுது நிலநடுக்கத்தை உணர முடியுமா?

  • தொடங்கியவர்
1814 : எல்பா சிறையிலிருந்து நெப்போலியன் தப்பினார்
 

வரலாற்றில் இன்று.....

பெப்ரவரி - 26

 

673Untitled-4.jpg1606 : டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஜான்சூன், அவுஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியரானார்.

 

1658 : வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசர்; ஏறத்தாழ அரைப்பகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினார்.

 

1794 : டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.

 

1815 : பிரித்தானியரால் கைது கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் போனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினார்.

 

1848 : இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.

 

1914 : டைட்டானிக் கப்பலின் சகோதர கப்பலான ஆர்.எம்.எஸ்.பிரிட்டானிக், வெள்ளோட்டம் விடப்பட்டது.

 

1952 : பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.

 

1960 : இத்தாலியில் இடம்பெற்ற விமான விபத்தினால் விமானத் திலிருந்த 52 பேரில் 36 பேர் உயிரிழந்தனர். 

1972 : அமெரிக்காவின் மேற்கு வேர் ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக் கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.

 

1980 : எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ராஜதந்திர உறவு ஆரம்பமாகியது.

 

1984 : லெபனான் பெய்ரூத் நகரிலிருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.

 

1991 : உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை (பிரௌஸர்) அறிமுகப்படுத்தினார்.

 

1991 : வளைகுடாப் போரின்போது குவைத்தில் இருந்து ஈராக்கியப் படைகள் வெளியேறுவதாக ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைன் அறிவித்தார்.

 

1993 : நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

 

2001 : ஆப்கானிஸ்தானில் மிகப்பழைமையான இரண்டு புத்தர் சிலைகளை தலிபான் அரசு அழித்தது.

 

2004 : மஸிடோனியாவின் ஜனாதிபதி போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி பொஸ்னியா, ஹெர்சகோவினாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

 

2013 : எகிப்தில் வெப்ப வாயு பலூனொன்று உடைந்து வீழ்ந்ததால் 19 பேர் உயிரிழந்தனர். 

- See more at: http://www.metronews.lk/dayinhistory.php?historyno=673#sthash.IxJLoQ8o.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கலைஞர் வீட்டு கட்டுத்தறியும் 'கவி' பாடும்: ஜெயலலிதா பற்றி உதயநிதி கவிதை!

 

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு வஞ்ச புகழ்ச்சியில் பிறந்தநாள் கவிதை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி.
 

Udhayanith%20stalin.jpg

அந்த கவிதைக்கு, 'உலகம் காணாத தலைமை வாழ்த்துவதில் எத்தனை பெருமை' என தலைப்பிட்டுள்ளார்.

இதே அந்த கவிதை:

Udhayanith%20stalin%20Kavithai.jpg

vikatan

  • தொடங்கியவர்

12768245_991814727533888_491856866136018

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மட் பிரையர் பிறந்தநாள்
Happy Birthday Matt Prior

  • தொடங்கியவர்

2016 தவளை போல் தாவும் ஆண்டு

 
frog_2749358f.jpg
 

2016-ம் ஆண்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது 366 நாட்களைக் கொண்ட லீப் ஆண்டு என்பதுதான். இதோ அடுத்த வாரம் லீப் நாளும் (பிப். 29) வரப்போகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த விநோத நாள் குறித்து, மேலும் சில சுவையான தகவல்கள்:

* ஜூலியஸ் சீசர் காலம்வரை ஓர் ஆண்டுக்கு 355 நாட்கள்தான் இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 22 நாட்களைக் கொண்ட கூடுதல் மாதம் ஒன்று சேர்க்கப்பட்டு வந்தது. தன்னுடைய அரசவை வானியலாளர் சோசிஜீன்ஸிடம் நாட்காட்டிகளை எளிமைப்படுத்தும்படி கி.மு. 45-ல் ஜூலியஸ் சீசர் ஆணையிட்டார். அப்போதுதான் 365 நாள் கொண்ட நாட்காட்டியையும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாளை சேர்க்கும் நடைமுறையையும் சோசிஜீன்ஸ் அறிமுகப்படுத்தினார். அந்த கூடுதல் நாள் பிப்ரவரி மாதம் சேர்க்கப்பட்டதற்குக் காரணம், ரோமானிய நாட்காட்டியில் பிப்ரவரி கடைசி மாதமாக இருந்ததுதான்.

* ‘லீப் ஆண்டு' என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் நாட்காட்டி முறையை மேம்படுத்திய போப் கிரிகோரி. அவர் மேம்படுத்திய நாட்காட்டியே இன்றைக்கு உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* பிப் 29-ம் தேதியின் சின்னம் தவளை. தவளை தாவுவதைப் போல, லீப் நாளும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விட்டுவிட்டு வருவதால் இப்படி.

* லீப் நாளான பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர்கள் ஆங்கி லத்தில் லீப்லிங் (leapling) அல் லது லீப்பர் (leaper) என்று அழைக்கப்படுகிறார்கள்.

* ஒவ்வொரு நாளையும் போலவே, லீப் நாளின்போது சராசரியாக 3.5 லட்சம் பேர் புதிதாகப் பிறக்கிறார்கள்.

* டாஸ்மேனியாவின் எட்டாவது அதிபர் மில்ன் வில்சன் 1812-ம் லீப் நாளில் பிறந்து, 1880-ம் லீப் நாளில் இறந்தார்.

* ஹாங்காங்கில் லீப் நாளில் பிறந்தவர்களின் அதிகாரபூர்வ பிறந்த நாள் மார்ச் 1, அதேநேரம் நியூஸிலாந்தில் பிப்ரவரி 28.

* லீப் நாளில் (பிப். 29) பிறந்த பிரபலங்கள்: இந்திய முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), இந்திய நடனக்கலை முன்னோடியான ருக்மணி தேவி அருண்டேல் (1904) உள்ளிட்டோர்.

* அமெரிக்காவில் ஒவ்வொரு லீப் ஆண்டிலும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கும். ஒலிம்பிக் போட்டிகளும் லீப் ஆண்டுகளை ஒட்டியே வரும்.

* பிப். 29 அரிய நோய்கள் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது

tamil.thehindu.

  • தொடங்கியவர்

இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர், நாடகக்கலைஞர், நகைச்சுவையாளர் 'அண்ண ரைட்' புகழ் K.S.பாலச்சந்திரன் அவர்களின் நினைவு தினம்

12742050_991809234201104_541126467665198

  • தொடங்கியவர்

என்ன ஒரு பேரானந்தம்! :grin::grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.