Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

சீனாவின் விசித்திர கட்டடங்கள்: புகைப்படங்கள்

சீனாவில் விசித்திரமான தோற்றத்தில் கட்டப்படும் கட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், சீன அரசு அதற்குத் தடை விதித்திருக்கிறது. பல கட்டங்கள் பொருந்தாத அளவில் பெரியதாகவும், விசித்திரமானதாகவும் இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாகவே, அழகிய, வித்தியாசமான தோற்றமுடைய கட்டடங்களைக் கட்டுவதில் ஆர்வம்காட்டப்பட்டுவருகிறது. தேநீர் குடுவை போலெல்லாம் அங்கு கட்டங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

சீனாவில் தற்போது புதிதாக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளின்படி, கட்டங்கள் சிக்கனமானதாகவும் பயன்பாட்டுக்கு உகந்ததாகவும் அழகியல் ரீதியாக மகிழ்ச்சியூட்டுவதாகவும் சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் சமீபத்தில் கட்டப்பட்ட சில வித்தியாசமான கட்டங்களின் சில புகைப்பங்கள் இங்கே.

160226064003__88383149_b434_271015_4964.
 தி குவாங்ஸௌ சர்க்கிள் என்று அழைக்கப்படும் இந்தக் கட்டடத்தை வடிவமைத்தவர் இத்தாலிய கட்டடக் கலை நிபுணரான ஜோஸப் டி பாஸ்கல். முத்து ஆற்றின் கரையில் 2013ல் திறக்கப்பட்ட இந்தக் கட்டடம்தான் வட்டமாக கட்டப்பட்ட கட்டங்களில் உலகிலேயே உயரமானது. இதன் உயரம் 138 மீட்டர். 160226064003__88383151_rtr3g0hw.jpg சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்தில் இருக்கும் வுக்ஸியில்தான் இந்த தேநீர் குடுவை வடிவ கட்டடம் இருக்கிறது. முதலில் ஒரு விற்பனைக்கூடமாக திட்டமிடப்ப்டட இந்தக் கட்டடத்தில் தற்போது ஒரு கண்காட்சிக் மையமும் உள்ளது. 160226064004__88383154_f4t92h.jpg  சீன மத்திய தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமயகம் இது. உலகின் சிறந்த உயரமான கட்டடம் என்ற விருது 2013ல் இந்தக் கட்டடத்திற்கு அளிக்கப்பட்டது. ஆனாலும் இது, ஆண்களின் காற்சட்டைபோல இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். 160226064004__88383781_build_b434_236122  சீன அரசுக்குச் சொந்தமான பீப்பிள்ஸ் டெய்லியின் கட்டடம் இது. 150 மீட்டர் உயரமுள்ள இந்தக் கட்டடம் பெய்ஜிங் வர்த்தக மாவட்டத்தில் சீன தொலைக்காட்சி அலுவலகக் கட்டடத்திற்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. 160226064004__88383783_rexfeatures_38441 உஹானில் உள்ள தி பீனிக்ஸ் டவர் இது. இன்னும் சில ஆண்டுகளில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் இதன் உயரம் ஒரு கிலோ மீட்டராக இருக்கும். இதன் வெளிப்புறப் பகுதிகள் அனைத்திலும் சூரிய ஒளி தகடுகள் ஒட்டப்பட்டிருக்கும். 160226064004__88383785_gettyimages-45529  ஜுயாங்ஸு மாகாணத்தில் ஸுஜொ பகுதியில் கட்டப்பட்டுள்ள தி கேட் ஆஃப் தி ஓரியண்ட் 2014ல் திறக்கப்பட்டது. சீன தொலைக்காட்சி நிறுவனக் கட்டடத்தைப் போலவே இதுவும் காற்சட்டை போலவே இருப்பதாக வர்ணிக்கப்படுகிறது. 160226064004__88383788_e9gynw.jpg  பெய்ஜிங்கின் ஹுவய்ரௌவ் மாவட்டத்தில் யாங்கி ஏரிக்கு அருகில் உள்ள தி சன்ரைஸ் ஈஸ்ட் கெம்பின்ஸ்கி ஹோட்டல் இது. 160226064005__88385259_e640fb.jpg  இந்த பிரமிக்க வைக்கும் கட்டடம், ஹுஜொவில் உள்ள தாய்ஹூ ஏரியில் அமைந்திருக்கும் ஷெரட்டன் ஹாட் ஸ்பிரிங் ரிசார்ட்.

160226064005__88385263_gettyimages-12567

 ஆர்தோஸ் நகரில் மக்கள்தொகை குறைந்துகொண்டே வருவதால், அதை பேய் நகரம் என்றே அழைக்கிறார்கள். இருந்தாலும் இடதுபக்கம் அமைந்திருக்கும் நகர நூலகமும் ஆர்தோஸ் அருங்காட்சியகக் கட்டடமும் குறிப்பிடத்தக்கவை.

BBC

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

“ நயன்தாராவுக்கு 38 வயசு!”

 
நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: எல்.ராஜேந்திரன்

 

“நான் வாரா வாரம் புத்தகத்துல படிக்கும்போது அஞ்சு கேள்விகள்ல, ரெண்டுக்காச்சும் பதில் தெரிஞ்சிடும். இப்ப எத்தனை பதில் தெரியுதுனு பார்த்துரலாம். கேளுங்க” என ஆர்வமாகிறார் சுப.வீரபாண்டியன்.

“ஹிஸ்டரி, ஜியாகிரஃபி, பயாலஜினு எந்த சப்ஜெக்ட்ல வேணும்னாலும் கேளுங்க. நான் நல்லா படிக்கிற  பொண்ணு” என கெத்து காட்டுகிறார் பாடகி சக்திஸ்ரீ கோபாலன்.

“குற்றாலத்துல இருக்கேன். கொஞ்சம் குளிரா இருக்கு. சென்னையில வெயில் தொடங்கிருச்சா?” என அன்பாக விசாரிக்கிறார் கவிஞர் கலாப்ரியா.

“ஜாலி கொஸ்டீன்ஸா?  அய்யய்யோ... ஓகே.  இப்ப என்கிட்ட நாலு கேள்விகள் கேட்கப்போறீங்க... சூப்பர்” என உற்சாகமாகிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா.

p48a.jpg

“அமெரிக்க அதிபரின் சுற்றுப்பயணத்துக்காகப் பயன்படுத்தப்படும் பிரத்யேக விமானம் எது?”

விடை: ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம்.

சுப.வீரபாண்டியன்: “ ‘வெள்ளை மாளிகையில் கறுப்பு நிலா’ என அண்ணா எழுதிய வரிகள்தான் ஒபாமாவைப் பற்றிச் சொல்லும்போது ஞாபகத் துக்கு வருகின்றன. ஒபாமாவின் காலத்தில்தான் அண்ணா சொன்னது உண்மையாகியிருக்கிறது. ஆனால், அவர் பயன்படுத்தும் விமானத்தின் பெயர் சத்தியமா எனக்குத் தெரியாதே தம்பி.”

சக்திஸ்ரீ கோபாலன்: வேகமாகப் பதில் வருகிறது... “ஏர் ஃபோர்ஸ் ஒன். இப்படி ஈஸியாவே கேட்டீங்கன்னா, நான் நிச்சயம் குட் மார்க்ஸ் வாங்கிடுவேன்.”

கலாப்ரியா: “ஏர் ஃபோர்ஸ் ஒன். இந்தப் பேருல ஹாலிவுட்ல ஒரு படம்கூட வந்திருக்கு.”

பாவனா: “அய்யோ... செம ஈஸி. ‘இண்டிபெண்டன்ஸ் டே’னு ஒரு ஹாலிவுட் படம். அந்தப் படத்தை இதுவரை 40 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். ரொம்பப் பயங்கரமான சூழல்ல அமெரிக்க அதிபர் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ ஃப்ளைட்ல பறப்பார். அதனால எனக்குப் பதில் தெரியும். சூப்பர்ல!”

p49a.jpg

“ `இறுதிச்சுற்று' படத்தில் நடித்த பாக்ஸர் நாயகியின் பெயர் என்ன?”

விடை: ரித்திகா சிங்.

சுப.வீரபாண்டியன்: “ `இறுதிச்சுற்று' படமும் `விசாரணை'யும் ரொம்ப நல்ல படங்கள்’னு சொன்னாங்க. இன்னும் பார்க்க நேரம் அமையலை. கடைசியா ‘ரஜினிமுருகன்’, ‘தாரை தப்பட்டை’, ‘கதகளி’ படங்கள் பார்த்தேன்.   சரி, உங்கள் மனதில் எழும் கேள்வியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த நாயகியின் பெயர் எனக்குத் தெரியாது. போகிறபோக்கைப் பார்த்தால் ஐந்து கேள்விகளுக்குமே விடை தெரியாமல் போய்விடும் என நினைக்கிறேன்'' என சிரிக்கிறார்.

சக்திஸ்ரீ கோபாலன்: “எங்க அம்மா படம் பார்த்துட்டு வந்து, `ரொம்ப நல்ல படம். மிஸ் பண்ணிடாதே'னு சொல்லி ஹீரோயினைப் பத்தி பேசிட்டே இருந்தாங்க. அவங்க பேரு மனசுக்குள்ளயே இருக்குங்க. ‘சிங்’னு முடியும். ஆனா, இந்தப் படத்துல வந்த ‘ஏ சண்டைக்காரா...’ பாட்டை ரிப்பீட் மோடில் இப்ப கேட்டுட்டே இருக்கேன்.”

கலாப்ரியா: “இந்தக் கேள்வியை நான் எதிர்பார்த்தேன். ஆனால், இயக்குநர் பேருதான் கேப்பீங்கனு நினைச்சேன். நடிகை பேரு கேட்டுட்டீங்க. போன வாரம்தான் இந்தப் படத்தோட நடிகை ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டாங்க. அந்தப் பொண்ணு பேரு ரித்திகா சிங்” என உற்சாகமாகச் சிரிக்கிறார்.

பாவனா: “ரித்திகா சிங்... செம போல்டு. பசங்க எல்லாம் கொஞ்சம் தள்ளி நின்னுதான் ‘அக்கா, உங்ககூட செல்ஃபி எடுத்துக்கலாமா?’னு கேட்கிறாங்க. பொண்ணு ஒரு குத்து விட்டா அவ்ளோதான், ஆள் காலி” என்றவர் “நானும் பாக்ஸிங் கத்துக்கப்போறேன். சொல்லி அடிக்கப்போறேன் ஆமா!” எனப் பாட்டாகப் பாடுகிறார். (ஓ... பாட்டாவே பாடிட்டீங்களா?)

p50a.jpg

“ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் என்னதான் பிரச்னை?”

விடை: சத்தியமா பதில் தெரியாதுங்க.

சுப.வீரபாண்டியன்: இரண்டு நொடிகள் கழித்து பதில் வருகிறது... “என் பாணியிலேயே பதிலைச் சொல்லிடு றேனே... ஸ்டாலின், கட்சிக்காக ஒவ்வொரு நாளும் உழைக்கிறார். அவர் இல்லையெனில், இன்று கட்சி ரொம்பக் கடுமையான நிலைக்குச் சென்றிருக்கும். தலைவர் கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதிலேயே மீதி பதிலும் அடங்கியிருக்கே.”

சக்திஸ்ரீ கோபாலன்: ஷாக் ஆகிறார் “ஏங்க... ஹிஸ்டரி, ஜியாகிரஃபி பத்தி கேட்கச் சொன்னா,  பாலிட்டிக்ஸ் பத்தி கேட்கிறீங்களே... ஸ்டாலினும் அழகிரியும் கலைஞரோட சன்ஸ்னு தெரியும். ஆனா, என்ன ப்ராப்ளம்னு தெரியலையே. பிரதர்ஸுக்குள்ள ஆயிரம் சண்டை போட்டுப்பாங்க; அப்புறம் சேர்ந்துப்பாங்க. நமக்கு எதுக்கு அதெல்லாம்?”

கலாப்ரியா: “வேற என்ன, ரெண்டு பேருக்கும் ஆட்சித் தொட்டில் பிரச்னைதான்... ஸாரிங்க. ஆட்சிக் கட்டில் பிரச்னைதான். சரியா?”

பாவனா: பதறுகிறார்... “அய்யோ, நியாயமாரே... ஏன் இப்படி எல்லாம் கேட்கிறீங்க? பாலிட்டிக்ஸ்ல எனக்கு ஏ, பி, சி, டி-கூடத் தெரியாது. இந்த கொஸ்டீனை நான் பாஸ் செய்றேன் பாஸ்.”

“சமீபத்தில் உடைக்கப்பட்ட பழ.கருப்பையாவின் ‘கார்’ என்ன கார்?”

விடை: இன்னோவா.

சுப.வீரபாண்டியன்: “பழ.கருப்பையாவை நல்லா தெரியும். அவர் கார் என்னன்னு தெரியலையே. அவர் கார் எல்லாம் அடிச்சு உடைச்சதுக்கு அப்புறம் அவர் வீட்டுக்குப் போய்ப் பேசிட்டு வந்தேன். அப்பக்கூட அந்த கார் என்னன்னு கவனிக்கலையே. நேற்றுகூட ஒரு கூட்டத்தில் ‘மேசை தட்டினால்தான் அந்தக் கட்சியில் பொறுப்பய்யா... இல்லேன்னா நீங்க இன்னொரு பழ.கருப்பையா’னு பேசினேன். எல்லாரும் ரசிச்சு சிரிச்சாங்க. சரி, நம்ம பதிலுக்கு வருவோம். பழ.கருப்பையா பழைமை மாறாதவர். அதனால் அம்பாஸிடர் வைத்திருந்தாலும் ஆச்சர்யப்படு வதற்கு இல்லை. கூடவே இன்னோவாகூட வைத்திருக்கலாம்.”

சக்திஸ்ரீ கோபாலன்: சந்தேகமாக “சோஷியல் மீடியாவில் அடிக்கடி இன்னோவா காரைவெச்சு மீம்ஸ் பார்த்த மாதிரி ஒரு ஞாபகம். மே பி, அவரோட கார் இன்னோவாவா இருக்கலாம். சரியா?” ‘சரி’ என்றதும் குஷியாகிறார் “பார்த்தீங்களா... நம்ம கெஸ்ஸிங் எப்படி?”

கலாப்ரியா: “அடடா... `நாஞ்சில் சம்பத்தோட கார் என்ன?’னு கேட்டால் டக்குனு ‘இன்னோவா’னு சொல்லியிருப்பேன். `பழ.கருப்பையாவின் கார் என்ன?’னு கேட்கிறீங்களே. சரி, அவருக்கும் இன்னோவானு வெச்சுக்கோங்க.” பதிலைக் கேட்டவர் “அ.தி.மு.க-காரங்க எல்லாருமே இன்னோவாதான் வெச்சிருப்பாங்கபோல” சிரிக்கிறார்.

பாவனா: “அரசியல்வாதிகள் பெரும்பாலும் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி காரைத்தான் பயன்படுத்துவாங்க. இதுல ரெண்டுல ஏதாவது ஒரு காராகத்தான் இருக்கணும். சரியாஜி?” பதிலைக் கேட்டதும் “இன்னோவா பயன் படுத்துறாரா? ரொம்ப நேர்மையான பொலிடீஷியனோ... நமக்கு எதுக்குஜி இது எல்லாம்? நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்.”

 p50b.jpg

``நயன்தாரா மற்றும் த்ரிஷாவின் வயது என்ன?''

விடை: நயன்தாரா 31 வயது, த்ரிஷா - 32 வயது.

சுப.வீரபாண்டியன்: “ஹா... ஹா... ரெண்டு பேரோட வயதையும் சொல் லணுமா? அவங்க நடிக்க வந்த காலங்களில் இருந்து பார்க்கும்போது நிச்சயமாக அவங் களுக்கு 18, 20 எல்லாம் இருக்காது. த்ரிஷாவுக்கு 32, நயன்தாராவுக்கு 33 வயது இருக்கலாம்னு கருதுறேன். கொஞ்சம் கூடச் சொன்னால், அவங்க  கோபப்படப் போறாங்க” என்று சிரித்தவர், “என் மனைவி உள்ளே இருந்து பார்க்கிறாங்க, `என்ன இவரு திடீர்னு த்ரிஷா, நயன்தாரானு பேசுறார்'னு. அலைபேசியை வெச்சதும் அவங்ககிட்ட நீங்க கேட்ட கேள்விகளை எல்லாம் கேட்கப்போறேன்.”

சக்திஸ்ரீ கோபாலன்: “ரெண்டு பேருக்கும் ஒரே வயசாதான் இருக்கும். 31 வயசு. ரெண்டு பேரும் செம அழகு; நல்லாவும் நடிப்பாங்க. அதனாலதான் இத்தனை வருஷமா சினிமாவுல இருந்து சாதிக்கிறாங்க.”

கலாப்ரியா: “ `சந்திரமுகி’ படத்துலதான் முதன்முதலில் நயன்தாராவைப் பார்த்தேன். அந்தப் படம் வந்து 15 வருஷங்களுக்கு மேல இருக்கும். அப்படிப் பார்த்தா,  நயன்தாராவுக்கு 38 வயசு இருக்கும். த்ரிஷாவுக்கும் அதேதான். சரியா?” என்றவரிடம் பதிலைச் சொன்னால் “ஏங்க, அவங்களுக்கு இந்த வயசுதான்னு எதைவெச்சு முடிவு பண்ணீங்க? அவங்க உண்மையான வயதை வெளியே சொல்ல மாட்டாங்கங்க” எனச் சிரிக்கிறார்.

பாவனா: “குட் கொஸ்டீன்... நம்ம ஜி.வி.பிரகாஷ் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துல தன்னைவிட வயசு கம்மியான பொண்ணுங்களை லவ் பண்ணுவார். இப்ப ஜி.வி-க்கு 25 வயசு இருக்கும். அப்போ அவரைவிட கம்மியாதான் த்ரிஷாவுக்கும் நயன்தாராவுக்கும் இருக்கும். சரியா ப்ரோ... எப்படி எங்க லாஜிக்?” (பிரமாதம்போங்க!)

VIKATAN

  • தொடங்கியவர்

பெண்ணுக்கு பரிமாறப்பட்ட இத்தாலிய பாரம்பரிய கடல் உணவில் 87,000 ரூபா மதிப்புள்ள ஊதா முத்து

 


 
 
  •  

பெண்ணுக்கு பரிமாறப்பட்ட இத்தாலிய பாரம்பரிய கடல் உணவில் 87,000 ரூபா மதிப்புள்ள ஊதா முத்து

லின்ட்சே ஹாஸ் எனும் பெண் தன் கணவருடன் வொஷிங்டனில் உள்ள இத்தாலிய ஹோட்டல் ஒன்றிற்குச் சென்றிருந்தார்.

அங்கு அவர் Frutti di mare எனும் இத்தாலியப் பாராம்பரியக் கடல் உணவினை ஆர்டர் செய்தார்.

பரிமாறப்பட்ட உணவினை உண்டபோது, கடினமான பொருள் கடிபடுவதை உணர்ந்த லின்ட்சே, அதனைக் கையில் எடுத்துப் பார்த்துள்ளார்.

அது முத்து என சந்தேகித்த அவர், அதனை பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார்.

இதன்போது, மிக விலையுயர்ந்த, அரிதான Quahog எனப்படும் ஊதா நிற முத்து அது என கண்டறியப்பட்டது.

தற்போதைய சந்தை நிலவரப்படி அதன் மதிப்பு 87,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி பரவியதிலிருந்து, தமது ஹோட்டலுக்கு மக்கள் அதிகளவில் வருவதாகவும் பெரும்பாலானோர் லின்ட்சே ஆர்டர் செய்த Frutti di mare உணவினையே ஆர்டர் செய்வதாகவும் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

http://newsfirst.lk

  • தொடங்கியவர்

12512500_1270149479668127_55966197760957

இந்த படம் எப்ப ரிலீஸ்

  • தொடங்கியவர்

நோபல் பரிசுக்கு பெடலை அழுத்தும் ஆப்கன் பெண்கள் சைக்கிளிங் அணி!

 

ப்கானிஸ்தானில் ஒரு பெண் சைக்கிள் ஓட்டுவது என்பது, சமுதாயத்தைக் கெடுக்கும் ஒரு விளைவு என்ற கருத்தாகவே இருந்தது. இது போன்று, பல இடங்களில் மதத்தை முன்னிறுத்தி பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவது ஆப்கான் போன்ற நாடுகளில் மிகவும் சாதாரணம். 

ஆனால் இன்று நிலைமைகள் மாறி வருகின்றன. இரு சக்கரங்கள் கொடுக்கும் சுதந்திர உணர்வை வெகு நாட்களாகவே அந்நாட்டின் சில பெண்கள் கண்டறிந்து வந்தனர்.

sportsgirls_vc1.jpg

 ஆப்கானிஸ்தானின் இந்த தேசிய பெண்கள் சைக்கிளிங் அணியே, அந்நாட்டில் பெண்கள் இருசக்கர வாகனங்களை, பொது சமூகச் சூழல்களில் ஓட்ட வழி வகுத்து வகுத்து வருகிறது.
 
அவர்கள் சந்திக்கும் பல்வேறு தடைகளில் பாலின பாகுபாடு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால், அதையும் போராடி, அவர்கள் பெடலை மிதித்து முன்னேறிச் செல்கிறார்கள் என்பது பாராட்டிற்குரிய விஷயம். சமூக நீதிக்காகவும், சமூகத்தில் படிந்துள்ள கறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகவும் சைக்கிள் ஓட்டும் இவர்கள், தங்களை அறியாமலேயே உலகம் முழுவதும் இருக்கும் பெண்களை ஊக்குவித்து வருகிறார்கள்.
இத்தாலியைச் சேர்ந்த 118 அமைச்சர்கள் இவர்களின் சைக்கிளிங் அணியை "2016-ம் ஆண்டிற்கான நோபல் பரிசி" ற்கு பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு அப்பெண்களின் ஈடுபாடும் கடின உழைப்பே காரணம் என்று கூறுகின்றனர்.

40 பேர் கொண்ட இக்குழுவிற்கு சாரா ஹுசைனி என்ற பெண் தலைமை தாங்குகிறார். பல இடைஞ்சல்களையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி இவர்கள் பங்கேற்கிறார்கள்.
 
அணியில் இடம் பெற்றுள்ள ஒரு பெண் கூறுகையில்,  "இங்கு இருக்கும் பெரியவர்கள் ஒரு சைக்கிள்,  பெண்ணின் எதிர்காலத்தையே பாதித்து விடும் என்று கூறுவர். இது போன்ற விஷயங்களை காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் எங்களால், வீடு தாண்டி வெளியே வந்திருக்கக் கூட முடியாது" என்றார்.

இதை மையமாகக் கொண்ட "ஆப்கான் சைக்கிள்ஸ்" (AFGHAN CYCLES) என்ற ஆவணப் படமும் விரைவில் வெளியாக உள்ளது.
 
இந்த முயற்சி ஒரு புரட்சியை ஏற்படுத்துமா என்று கேட்டால், கட்டயாமாக !

பாகிஸ்தானில் மலாலா அனுபவித்த துயரத்தைப் போல், பல்வேறு பெண்கள் தினந்தினம் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து வருகின்றனர். தங்களுக்கும், பல போர்களால் முடங்கிப் போன ஆப்கான் நாட்டிற்கும், இவர்கள் தேடித் தரப் போகும் பெருமை, அந்நாட்டு பெண்கள் போக்குவரத்திற்காக சைக்கிள் பயன்படுத்த வழி வகுக்கும் (கொடுக்கும்) என உலகமே நம்புகிறது.

விகடன்

  • தொடங்கியவர்

'அன்புடன் மெஸ்சி' சிறுவனுக்கு சர்பரைஸ்!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஏழை சிறுவன் மூர்த்தாசா அஹ்மதிக்கு கால்பந்து வீரர் மெஸ்சி என்றால் உயிர். பிளாஸ்டிக் பை மீது, 'மெஸ்சி 10' என எழுதி அதை அஹ்மதி அணிந்திருந்த புகைப்படம் செம வைரல். இந்நிலையில் அஹ்மதிக்கு சர்பரைஸ் கிப்டாக தான் கையெழுத்திட்ட ஜெர்சியை அனுப்பியுள்ளார் சூப்பர் ஸ்டார் மெஸ்சி.

12794368_683570778412134_270415147297430

  • தொடங்கியவர்

குழந்தைகளுக்கான எளிய முறை பெருக்கல்கள்.

  • தொடங்கியவர்

எஸ்ஸா... நோவா?: சுவிஸ் நாட்டில் ஈழ தமிழர்களுக்கு ஒரு அக்னி பரீட்சை!

 

னைத்து நாடுகளையும் கைப்பற்றி வந்த ஹிட்லரிடம்,  ஏன் சுவிட்சர்லாந்தை விட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது,  "அமர்ந்து கொண்டு சமாதானம் பேச ஒரு நாடு தேவை" என்றார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் உட்பட அகதிகள் மறுவாழ்வு, குழந்தைகள் நலம் என ஐக்கிய நாடுகளின் சுமார் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள்,  முக்கிய அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நாடு சுவிட்சர்லாந்து.

8 கோடி பேர்தான் மக்கள் தொகை என்றாலும் மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, பொருளாதார பலம் என பல்வேறு சிறப்பு தன்மைகளில் உலகின் ஒரு உதாரண நாடு அது. ஆனால் ஹிட்லரே விட்டு வைத்த அந்த நாட்டை, அதன் மனிதாபிமானத்தை அசைக்க தொடங்கி  இருக்கிறது பல்வேறு நாடுகளில் வசித்து வந்தவர்களை அகதிகளாக்கி கொண்டு இருக்கும் மறைமுக ஆயுத விற்பனைகளும் அதன் விளைவான பயங்கரவாதமும், போர்களும்.

சமாதானத்தை விதைக்க வேண்டிய பூமியில் சண்டைகளை விதைத்துக் கொண்டு அகதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து  கொண்டு இருக்கிறார்கள் உலகின் மறைமுக முதலாளிகள். அதன் விளைவுகள்,  இப்போது சமாதான பூமியான சுவிஸ்சில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.

sri_2.jpgஇப்படிதான் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள்.

சுவிஸ் நாட்டில் 20 லட்சம் பேர் வெளிநாட்டினர். இதில் பல லட்சம் பேர் அந்நாட்டின் குடியுரிமை பெறாத அகதிகள். அதில் ஈழத்தமிழர்கள் மட்டும்  60 ஆயிரம் பேர். இதில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அந்நாட்டின் குடியுரிமை  பெற்றவர்கள்.  சுற்றி  உள்ள நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு யுத்தங்கள் காரணமாக அகதிகள் உருவாகி வருகின்றனர். அவர்கள் ஐரோப்பாவை நோக்கியே தள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரவேண்டிய நிலைக்கு அந்நாடுகள் ஆளாக்கப்படுகின்றன. அவ்வாறு அடைக்கலம் தேடுவோர்கள் பலர்,  கடல் பயணத்தில் உயிர் இழப்பதை நாம் அடிக்கடி செய்திகளில் பார்க்க முடிகிறது.

இவ்வாறு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் தற்போது ஜெர்மன் முதலிடம் வகிக்கிறது. பிற நாடுகளும் அடைக்கலம் கொடுக்க தொடங்கி இருக்கின்றன. எப்போதுமே நிம்மதியாக பலர் வாழும் ஒரு ஊரில்,  பிழைப்பு தேடி வருகின்றவர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே அந்த ஊர் மக்கள் அவர்களை மதிப்பார்கள். இந்த உளவியலை மிகச் சரியாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறது சுவிஸ் நாட்டின் ஆளும்கட்சி.

அந்நாட்டில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு இருக்கும் குடியுரிமை பெறாத வெளிநாட்டினர்,  சிறு குற்றங்கள் புரிந்தாலும் அவர்களை நாடு கடத்த வேண்டும் என்ற ஒரு பொது வாக்கெடுப்புக்கு தற்போது அந்நாட்டின் ஆளும்கட்சி ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த வாக்கெடுப்பு பிப்ரவரி 28 ல் நடை பெறுகிறது. நல்லதுதானே என்று எண்ணலாம். சிறு குற்றங்கள் வரிசையில் எதுவெல்லாம் வருகிறது என்றால் அதிர்ச்சியாக இருக்கும்.

முன்னதாக அந்த நாட்டின் குற்ற பட்டியலின் ஒரு உதாரணம்...

போக்குவரத்து விதிகளின்படி' 60 கிலோ மீட்டர் வேகம்' என்று ஒரு சாலையில் போடப்பட்டு இருக்குமேயானால், அதில் தப்பித் தவறி 65 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்டினால் குற்றம், அதற்கு அபராதம். மக்கும் குப்பை மக்காத குப்பை என்பதை மாற்றி போட்டால் குற்றம், அதற்கும் அபராதம். வீட்டில் நீங்கள் சற்று உரக்க பேசி அதிக ஒலியை உண்டாக்கி,  அது பக்கத்துக்கு வீட்டுக்காரரின் தனிமைக்கு, சுதந்திரத்துக்கு இடர் ஏற்படுத்தினால் அதுவும் குற்றம், அதற்கும் அபராதம் உண்டு. குழந்தையை தப்பி தவறி திட்டியோ,  அடித்தோ விட்டால் அதுவும் குற்றம், அதற்கும் அபராதம் உண்டு....

sri_1.jpg

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவ்வாறு குற்றம் செய்பவர்கள் அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்கள் என்றால் அவர்கள் தண்டனையை ஏற்று அபராதமோ, சிறையோ, உரிமம் ரத்தோ பெற்று அரசின் உதவியோடு அங்கு வாழலாம். ஆனால் குடியுரிமை பெறாதவர்கள் இப்படி ஏதாவது தவறு செய்தால் அவர்கள் நாடு  கடத்தப்படவேண்டும். இதுதான் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெறும் பொது வாக்கெடுப்பின் அம்சம்.

இப்படி ஆண்டுக்கு 10 ஆயிரம் பேரை வெளியேற்ற இந்த வாக்கெடுப்பு வலியுறுத்துகிறது. இந்த வாக்கெடுப்பு அநீதி என்கிறார் சுவிஸ் நாட்டின் ஓல்டேன் மாநகராட்சி  உறுப்பினரும், வெளிநாட்டவர் உறவுகளின் பிரதிநிதியுமான தமிழர்,  ஸ்ரீ ராசமாணிக்கம். அவரிடம் பேசினோம்.

" 30 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் இங்கு வசிக்கிறோம். இந்த தேசம் மனிதாபிமான தேசம். இங்கே அகதிகளை சமமாக மதிக்கிறார்கள் மக்கள். ஆனால் இப்படி ஒரு பொது வாக்கெடுப்பை  நடத்துவதன் மூலமாக ஒவ்வொரு அகதியும் சிறைக்குள் இருப்பது போலவே அஞ்சி, நடுங்கி வாழ வேண்டிய  சூழல் இருக்கும். ஈழ தமிழ் அகதிகளை பற்றி மட்டுமே நான் பேசவில்லை. அவ்வாறு குடியுரிமை பெறாமல் இருப்பதில்  அவர்களின் எண்ணிக்கை வெறும் 35 ஆயிரம் பேர்தான். ஆனால் நான் குறிப்பிட்டதைப்போல 30 நாடுகளை சேர்ந்த பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே இந்த பொது வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் பாதிக்கப்படுவார்கள்.

எனவே ஒவ்வொருவரும் இந்த பொது வாக்கெடுப்பில் " நோ " என்று வாக்களிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். ஆனால் எனது கவலை எல்லாம் இதுதான்... வாக்களிக்கும் உரிமை பெற்ற, குடியுரிமை பெற்ற 25 ஆயிரம் ஈழத் தமிழர்களில்,  நாட்டின் பொதுத் தேர்தலின்போதே வெறும் 5 ஆயிரம் பேர் மட்டுமே வாக்களித்தார்கள். அதாவது, ஒரு வேற்று நாட்டில், தஞ்சம் புகுந்த நாட்டில், சொந்த நாட்டில் அடையாளம் இழந்த தமிழ் மக்களுக்கு இன்னொரு நாட்டில் வாக்களிக்கும் உரிமை கொடுத்தும்கூட,  அவர்களில்   25 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேர்தான் வாக்களித்தார்கள். இது அவர்களின் தமிழ் சொந்தமான மீதமுள்ள குடியுரிமை பெறாத 35 ஆயிரம் பேரையும் பாதிக்கும். இந்த பிப்ரவரி 28 வாக்கெடுப்பில் எத்தனை பேர் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை எண்ணும்போது கவலையாக இருக்கிறது " என்றார்.

சுவிஸ் நாட்டில் இது போன்றதொரு பொது வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால் அது சட்டமாகிவிடும். ஆனால், சுவிஸ் நாட்டின் பெரும்பான்மை மண்ணின் மைந்தர்கள் இந்த வாக்கெடுப்பில் "நோ" என்றுதான் வாக்களிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

vikatan

  • தொடங்கியவர்

கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்

 

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. பிப்ரவரி 27: எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு

>>>>> ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

>>> நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'!

1658.jpg



>>>>> முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

>>> பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

>>>>> இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த்தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

>>> முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

121563.jpg



>>>>> 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

>>> சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

>>>>> ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகை களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

>>> தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

25458.jpg



>>>>> சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

>>> சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

>>>>> கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

>>> ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

>>>>> உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

>>> புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

98737.jpg



>>>>> ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

>>> 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

>>>>> சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது!

 

121558.jpg



>>> இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

>>>>> அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

>>> பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

143716.jpg



>>>>> பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

>>> கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

>>>>> சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா.

vikatan

  • தொடங்கியவர்

30 வருடங்களுக்கு முன்னர் எரிமலைக் குமுறலின் போது பிரிந்த சகோதரிகள் மீண்டும் இணைந்தனர் 

 

கொலம்பியாவில் 30 வரு டங்களுக்கு முன் இடம் பெற்ற எரிமலைக் குமுற லொன்றின் போது ஒருவரை யொருவர் பிரிந்து சென்ற இரு சகோதரிகள் தற்போது மீளவும் இணைந்துள்ளனர்.Colombia_sisters_reunited_30_years_after

1985 ஆம் ஆண்டு அர் மெரோ நகரில் ஜக்குலின் மற் றும் லோரெனா சான்செஸ் ஆகிய மேற்படி சகோதரிகள் வாழ்ந்த பிராந்தியத்திற்கு அருகிலுள்ள தொலிமா எரிமலை குமுறியபோது அவர்கள் இரு வரும் பிரிந்தனர்.

இந்த எரிமலைக் குமுறலில் அந்தப் பிராந்தியத்தில் வசித்த 20,000 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஜக்குலினும் லோரெனாவும் வெவ்வேறு குடும் பங்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜக்குலின், சமூக இணையத்தளத்தில் தனது சகோதரி லோரெனா எரிமலை அனர்த்தத்தில் காணாமல்போன தனது குடும்ப உறுப்பினர்கள் எவராவது உயிருடன் இருந்தால் அறியத் தருமாறு விடுத்திருந்த கோரிக்கையை அவதானித்து அவ ருடன் தொடர்பு கொண்டார்.

தொடர்ந்து மேற்படி பிராந்தியத்தில் அனர்த்தங்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் முகமாக செயற்பட்டு வந்த அர்மண்டோ அர்மெரோ மன்றம் என்ற தொண்டு ஸ்தாபனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளின் மூலம் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/3644

  • தொடங்கியவர்

இந்த கட்டடங்களைப் பார்த்ததும் காமிக்ஸ் புத்தகத்தில் இருக்கும் பக்கங்களைப் போலத் தெரிகிறதா?! அமெரிக்க ஆர்ட்டிஸ்ட் ஜேம்ஸ் ரிச்சி, ஜெர்மனியில் உள்ள பழையக் கட்டடங்களுக்கு கலக்கல் டிசைன்ஸ் தீட்டி இருக்கிறார்.
இவருடைய திமைக்கும் பொறுமைக்கும் சல்யூட்.

12376307_683642298404982_155385654761349

1621775_683642291738316_5434001121673947

12495261_683642295071649_311609124875173

12718136_683642328404979_246741575338638

12742160_683642325071646_155604432617226

12790918_683642335071645_468563581421490

 

  • தொடங்கியவர்

இவ்வளவுதான் வாழ்க்கை.

  • தொடங்கியவர்

பிப்ரவாரி 26-ம் தேதி உக்ரைனைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவர் olegskavysh என்பவர், 38 டன் எடைக்கொண்ட டிராம் வண்டியை 14 மீட்டர் (46 அடி) தூரத்துக்கு தன் பற்களால் இழுத்து அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளார். 2014-ல் ரஷ்யாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டதை நினைவூட்டும் விதத்தில் இச்சாதனையை செய்துள்ளார்.
இடம்: Lviv, western Ukraine

12799314_684032535032625_233212986819289

12802766_684032531699292_719265103185094

vikatan

  • தொடங்கியவர்
பெப்ரவரி 29 லீப் நாளின் சிறப்புக்களை பற்றி உங்களுக்கு தெரியுமா?

 

 

leapyear.jpg



நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அரிய தினம் பிப்ரவரி 29. லீப் ஆண்டில் வரும் நாள் என்பதால் பெரும்பாலான தாய்மார்கள் தங்களின் குழந்தை பிறப்பை ஒரு நாள் தள்ளிவைத்திருக்கின்றனர்.

அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று நினைத்தும், பிப்ரவரி 29 அதிர்ஷ்டமற்ற தினம் என்று எண்ணியும் சிசேரியன் செய்ய மறுத்துள்ளனர்.

லீப் ஆண்டில் வரும் பிப்ரவரி 29-ந்தேதியை உலகம் முழுவதிலும் அரிதான நாளாக கருதப்படுகிறது. பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்களையும், 5 மணிநேரம், 49 நிமிடங்கள், 19 விநாடிகளை எடுத்துக்கொள்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது கணக்கிடப்பட்டு லீப் வருடமாக ஒரு வருடத்திற்கு 366 நாட்களாக கணக்கிடப் படுகிறது. லீப் வருடத்தில் பிப்ரவரிக்கு 29 நாட்கள் வரும். இந்த நாள் உலகம் முழுவதும் அரிய நாளாக கொண்டாடப்படுகிறது.

துரதிர்ஷ்ட தினம்
பிப்ரவரி 29-ந்தேதி அன்று திருமணம் செய்தால் 4 ஆண்டுக்கு ஒருமுறைதான் திருமண நாள் கொண்டாட முடியும் என்பதால் நிறைய ஜோடிகள் இன்று நடக்க இருந்த திருமணத்தை வேறு தேதிகளுக்கு தள்ளி வைத்தனர்.

இதனால் பெரும்பாலான திருமண மண்டபங்கள் வெறிச்சோடி காணப்படும் . ஆனால் இது தவறான கருத்து என்று பெரும்பாலோனோர் தெரிவித்துள்ளனர்.

கின்னஸ் சாதனை
ஆனால் அயர்லாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று தலைமுறைகளாக பிப்ரவரி 29 ம் தேதி பிறந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். 1940 பிப்ரவரி 29 ல் தாத்தா பீட்டர் அந்தோனி பிறந்தார்.

அவரது மகன் பீட்டர் எரிக் பிறந்தது 1964 பிப்ரவரி 29. அதேபோல் பீட்டர் எரிக்கின் மகள் பெத்தானி வெல்த் பிறந்தது 1996 பிப்ரவரி 29ம் தேதி. இந்த சாதனைக்காக இவர்களின் குடும்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் பிப்ரவரி 29ம் தேதி பிறந்த மொராய்ஜி தேசாய் நாட்டின் பிரதமராக உயர்ந்தார்.

எனவே பிப்ரவரி 29 என்பது துரதிர்ஷ்ட தினம் அல்ல அதிர்ஷ்ட தினமே என்பது பெரும்பாலோனோரின் கருத்து.

  • தொடங்கியவர்

கணித மேதை இராமானுஜத்தின் கதை ஹாலிவுட்டிலும் கால் பதித்துவிட்டது...

தி மேன் ஹூ நியூ இன்ஃபினிட்டி - டிரெய்லர்

எப்ப வரும் என்று பார்த்திருக்கின்றேன்.

  • தொடங்கியவர்

12771612_992629034119124_311654126553099

உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும், தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான கிரேம் பொல்லோக்கின் பிறந்தநாள்

  • தொடங்கியவர்

அமிதாப் பச்சனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கிறிஸ் கெயில்

 
கிறிஸ் கெய்ல். | கோப்புப் படம்.
கிறிஸ் கெய்ல். | கோப்புப் படம்.

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தனது கிரிகெட் பேட்டை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கிறிஸ் கெயில், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இந்தியா வரும் போது எல்லாம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படங்களை அடிக்கடி பார்ப்பாராம்.

அவருக்கு பிடித்த படம் 'ஷான்ஷா' எனவும் கெயில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது கையெழுத்திட்ட பேட்டை அமிதாப் பச்சனுக்கு பரிசாக அளித்துள்ளார் கெயில்.

இது பற்றி கெயில் டுவிட்டரில்,"ஜாம்பவான் அமிதாப் பச்சனுக்கு எனது 'ஸ்பார்டன்' கிரிக்கெட் மட்டையை பரிசாக அளித்ததில் பெருமை அடைகிறேன். அவரது படங்கள், ஸ்டைல் என அனைத்தும் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அமிதாப் பச்சன். "கெயில், என்ன ஒரு மரியாதை, என்னை பற்றி உங்களுக்கு தெரியும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் உங்களின் தீவிர ரசிகர்கள்" என்று பதிலளித்துள்ளார்.

அமிதாப் நன்றி தெரிவித்த நிலையில், விரைவில் உங்களை இந்தியாவில் சந்திக்கிறேன் என பதில் டிவிட் செய்துள்ளார் கெய்ல்.

கெய்ல் பேட் வழங்கிய மகிழ்ச்சியை தனது முகநூல் பக்கத்திலும் பகிர்ந்துகொண்டுள்ளார் அமிப்தாப் பச்சன்.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

வெற்றி என்பதற்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம்?

சுஜாதா நினைவு நாள் பகிர்வு!

சுஜாதா

 

p166.jpg ங்களை எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் வெற்றிக்கு உதவ சில குறிப்புகளை என்னால் தர முடியும்.

முதலில், வெற்றி என்பதற்கு உங்கள் அகராதியில் என்ன அர்த்தம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். சிலர் இருப்பதை அப்படியே கவனித்து ‘ஏன்?’ என்று கேட்பார்கள். சிலர் இல்லாததைக் கனவு கண்டு ‘ஏன் முடியாது?’ என்று கேட்பார்கள். நீங்கள் எந்த ரகம்? அதற்கேற்ப உங்கள் வெற்றித் தேடல் மாறும்; மாற வேண்டும்.

முதலில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிப் பார்த்தால், நீங்கள் என்ன ரகம் எனபதை அடையாளம் காணமுடியும். (நன்றி: டாக்டர் சிட்னி சைமனின் பயிற்சிப் புத்தகம்) அதேபோல் உங்களுக்குத் தெரிந்த வெற்றி பெற்ற மனிதர்களிடமும் இந்தக் கேள்விகளைக் கேட்டு விடைபெறலாம்; தெளிவு பெறலாம்.

1. இதுவரை நீங்கள் செய்ததில் எதை மிகப்பெரிய சாதனை என்று கருதுகிறீர்கள்?

2. உங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய சாதனை என்று எதைக் கருதுகிறீர்கள்?

3. உங்களை மகிழ்விக்க மற்றவர் செய்யக்கூடிய ஒரே ஒரு காரியம் என்னவென்று கருதுகிறீர்கள்?

4. உங்கள் வாழ்வில் மிகப்பெரிய தோல்வி என்று எதைக் கருதுகிறீர்கள்?

5. உங்களுக்கு வாழ ஒரு வருஷம்தான் தரப்பட்டுள்ளது; நீங்கள் எடுக்கும் முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எனில், எந்தக் காரியத்தை எடுத்துக்கொள்வீர்கள்?

6. இன்று இறந்துபோனால், உங்களைப் பற்றி மற்றவர் பேசிப் பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய மூன்று விஷயங்கள் என்ன?

வெற்றி பெற்றவர்கள் நிச்சயம் தயங்காமல் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள்.

p166a.jpg

இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை எழுதிவிட்டு, ஓரிரு தினங்கள் கழித்து அதைப் படித்துப் பார்த்தால், உங்கள் கருத்தில் வெற்றி என்பது என்ன என்பதை உங்களால் அறியமுடியும். அது பதவி உயர்வா, உதவித் தொகையா, வெளிநாடு செல்வதா, திரும்புவதா, மேற்படிப்பா, சொந்தத் தொழிலா, பரிசு பெறுவதா, விரிசல் அறுவதா, சதம் அடிப்பதா, அடிப்பதை நிறுத்துவதா...

இன்னமும் தென்படவில்லை என்றால், கீழ்க்காணும் கேள்விகளுக்கு ஒன்றிரண்டு வாக்கியங்களில் பதில் அளித்துப் பாருங்கள்.

1. இதுவரை, உங்கள் வாழ்வின் மிகச் சந்தோஷமான வருஷம் அல்லது பருவம் எது?

2. உங்களால் எதை நேர்த்தியாக, மிக நன்றாகச் செய்ய முடியும்?

3. உங்கள் வாழ்வில் திருப்புமுனை ஏதாவது இருந்ததா?

4. மிக மோசமான கணம்?

5. எப்போதாவது மிக மிகத் துணிச்ச லாகச் செய்த காரியம் உண்டா?

6.எ தையாவது நிறுத்த விரும்புகிறீர்களா?

7. எதையாவது இப்போதைவிட இன்னும் சிறப்பாகச் செய்ய விரும்பு கிறீர்களா?

-இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில்களை எழுதி, உங்களுக்குப் பிரிய மானவர்களிடம் அல்லது நண்பர்களி டம் காட்டுங்கள்; அல்லது, நீங்கள் பெரிதாக மதிப்பவர் யாரிடமாவது படித் துக் காட்டுங்கள். அவர் உடனே உங்கள் வாழ்வில் வெற்றி என்பதற்கு என்ன அடையாளம், என்ன சாத்தியம் என இரண்டையும் சொல்லி விடுவார். அதை அறிந்தபின் நீங்கள் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி வரும்.

நீங்கள் இப்போது வாழும் வாழ்க்கையில் ஒரு முக்கியமான, துணிச்சலான காரியம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கேற்ற மனபலம் உங்களிடம் இருக்கும். பணபலமும், பக்கபலமும் நலம் விரும்பிகள் கொடுப்பர். அப்படிக் கொடுக்கவில்லை என்றாலும், அதற்குத் தனிப் போராட்டம் துவங்கவும் தயாரா வீர்கள்.

உங்களைச் சுற்றிலும் வெற்றி பெற்ற எவரையும் கேட்டுப் பாருங்கள்... அவர்கள் எல்லோர் வெற்றியிலும் ஒரு பொது அம்சம் இருக்கும். வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில், ஒரு துணிச்சலான முடிவெடுத்திருப்பார்கள்.

விகடன்

  • தொடங்கியவர்

பூச்சிகளும் வண்டுகளும் ஆபத்தில்'

 

மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், மற்றும் ஏனைய பூச்சி வகைகளும் அதிக அச்சுறுத்தலை எதிர் கொள்வதால், உலகெங்கும் உள்ள உணவுப் பயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

151125192615_hooney_bees_512x288_thinkst

 

குறிப்பாக, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்க நாடுகளில் பல்வகை தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் அழிவுப் பாதையில் உள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுடுள்ளது.

ஹமிங் பறவைகள், வண்டுகள், மற்றும் வெளவால்களும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

 

151224121208_hummingbird_512x288_andrewb

 

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பூமியில் உள்ள பல்உயிரினங்கள் பற்றிய மதிப்பீடு ஒன்றை மேற்கொண்டுவரும் உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களின் ஆய்வின் முடிவாகவே, இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்களில் ஒருவரான இங்கிலாந்தின் ரெடிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சைமன் பொட்ஸ், மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகள் தேனீக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியன,உணவு மற்றும் அவை வாழ ஏற்ற சூழலையும் இழந்து வருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம், மற்றும் பூச்சிகொல்லிகளும் கூட இவற்றிற்கு பெரும் சவாலாக உள்ளதாக தெரிவித்தார்.

மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகள் மற்றும் வண்டுகளினதும் அழிவு, எமக்கு மோசமான நிதி மற்றும் சுகாதார தாக்கங்களை உண்டுபண்ணும் என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

151103221736_butterfly_eyes_512x288_robe

 

ஆண்டொன்றிற்கு 577 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான விளைச்சல் உற்பத்தியில் இவை நேரடியாக பங்களிப்பு செய்கின்றன.

மகரந்த சேர்க்கைக்கு உதவும் வண்டுகளும் பூச்சிகளும் பெருமளவில் இல்லாமல் போனால், முக்கியமான விளைச்சல்கள் சில இல்லாமல் போகும், அல்லது அதன் உற்பத்தி வீழ்ச்சியடையலாம் என்றும், பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

160225091403_cn_myanmar_kachin_poppy_512

 

இவ்வாறு மனிதனுக்கு பல வழிகளில் பெரும் உதவியாக இருக்கும் இவ்வகையான பூச்சிகளையும் வண்டுகளையும் அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு என தெரிவித்துள்ள அவர், இவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத வகையில் களை மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவது சிறந்தது என்பதுடன், இதனை அரசாங்கம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும் உதவும் வகையில் நாம் வீட்டுத் தோட்டங்களில் பூச்செடிகளை நடலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

BBC

  • தொடங்கியவர்

ரசிகருக்கு நகைச்சுவையாக பதிலளித்த அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவிட்டரில் எப்போதும் ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டவர். ரசிகர்களின் கிண்டல் கேள்விகளுக்கும், தனக்கு எதிரான பல கேள்விகளுக்கும் கோபப்படாமல் அசால்டாக பதிலளிப்பார்.

http://p.imgci.com/db/PICTURES/CMS/202700/202701.1.jpg

இந்நிலையில் டுவிட்டரில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், “அஸ்வின் நீங்கள் விதிமுறையை மீறி பந்துவீசி கொண்டிருக்கிறீர்கள். எங்கே அந்த சர்வதேச கிரிக்கெட் வாரியம்?” என்று சீண்டினார். இதை பார்த்த அஸ்வின் சற்றும் கோபமடையாமல், “அது துபாயில் இருக்கிறது” என்று கூலாக பதிலளித்து பதிலடி கொடுத்தார்

  • தொடங்கியவர்

ஹான் ஜெயிங்

p29b.jpg

சீ்னாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஹான் ஜெயிங் (Han Jiaying) நினைத்தால், எந்த விலங்கையும் சில நிமிடங்களில் தூங்கவைக்க முடியும். சீனத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹான் ஜெயிங், முயல், நாய், கோழி, ஓணான் மற்றும் தவளை ஆகியவற்றை மெள்ளத் தடவி, ஓரிரு நிமிடங்களில் தூங்கவைத்தது, இப்போதைய இன்டர்நெட் சென்சேஷன்.

எப்படி இது சாத்தியம்? ‘இது, ஒருவகை ஹிப்னாட்டிசம். இதைச் செய்ய பல வருடப் பயிற்சி அவசியம்’ என்கிறார்கள் ஹிப்னாட்டிச வல்லுநர்கள். ‘விலங்குகளுக்கு ‘டானிக் இம்மொபிலிட்டி’ என்ற குணம் உண்டு. தன்னைவிட வலிமையான உயிரினம் நெருங்கினால், இறந்ததுபோல நடிக்கும். இது ஒரு தற்காப்பு முயற்சி. இதைத் தூண்டித்தான், ஹான் ஜெயிங் விலங்குகளைத் தூங்கவைக்கிறாள்’ என்கிறார்கள் சில மருத்துவர்கள். இது, ஹான் ஜெயிங்குக்கு எப்படித் தெரியும்? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நவீனன்! 
விதம் விதமாக செய்திகளை இணைக்கின்றீர்கள். அத்தனையும் அலுப்புத்தட்டாமல் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது. செய்திகளை தேடி வாசிக்கும் என் போன்றவர்களுக்கு மன உழைச்சல்  இல்லாமல் ஒரே இடத்தில் சகல செய்திகளையும் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.
நன்றிக்கடனுடன்
குமாரசாமி

  • தொடங்கியவர்

வாடவே வாடாத பூ!

 
poo_2749334f.jpg
 

உள்ளத்தைக் கொள்ளை கொள்வதில் பூக்களுக்குத் தனி இடம் உண்டு. என்னதான் பேரழகு என்றாலும் பூக்களுக்கு ஒரே ஒரு நாள்தான் ஆயுள். பூக்கள் மட்டும் பல மாதங்களுக்கு வாடாமல் உயிர் வாழ்ந்தால் எப்படியிருக்கும்? இந்தப் பேராசையை அறிவியல்பூர்வமாக அமெரிக்காவில் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஹெய்னாவ் என்ற பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. இங்கே ஆண்டு முழுவதும் வாடாத பூக்களை உற்பத்தி செய்கிறார்கள். இவற்றை பிளாஸ்டிக் பூக்கள் அல்லது பேப்பர் பூக்கள் என்று நினைத்துவிட வேண்டாம். நிஜப் பூக்களைத்தான் தயாரிக்கிறார்கள். இந்தப் பூக்கள் ஓராண்டு வரையிலும்கூட வாடாமல் இருக்கின்றன. இந்த வாடாத பூக்களை எப்படித் தயாரிக்கிறார்கள்?

விசேஷமாக எதையும் கொண்டு இந்தப் பூக்களைத் தயாரிப்பதில்லை. வழக்கமாகத் தோட்டங்களிலிருந்துதான் பறிக்கிறார்கள். பின்னர், அந்தப் பூக்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு, வாடாத தன்மையைக் கொடுக்கும் ஒரு வேதிப்பொருளை அதற்குள் செலுத்துகிறார்கள். அந்த வேதிப்பொருள்தான் பூக்களை வாசனையாகவும் மலர்ச்சியுடனும் வைத்துக்கொள்கிறது. இந்தப் பூ ஒன்றின் விலை 15 டாலர் (ஒரு டாலர் = 68 ரூபாய்) முதல் 545 டாலர்வரை விற்கப்படுகிறது.

tamil.thehindu.

  • தொடங்கியவர்

12802912_1080697375322385_39526672534956

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.