Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்

கேரளாவில் சிக்கிய மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன்!

 

மனித முகம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று கேரளாவில் மீனவர் ஒருவர் வலையில் சிக்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டினம் கிராமத்தில் வசித்து வருபவர் கடிகை அருள்ராஜ். நாவல் ஆசிரியரான இவர், கேரளா மாநிலம் முனம்பம் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

Kerala%20fish.jpg

கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு அருள்ராஜ், ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்களுடன் மீன்பிடி சென்றுள்ளார். இன்று காலை படகுடன் அருள்ராஜ் கரை திரும்பினார். அப்போது, அவரது வலையில் மனித உருவம் கொண்ட அபூர்வ வகை மீன் ஒன்று சிக்கி கிடந்தது.

பேத்தை வகையை சேர்ந்த இந்த மீன், நான்கு வகைகளை கொண்டது. இந்த மீன்களை சாப்பிடவோ, வளர்க்கவோ முடியாதாம். ஆழ்கடலில் வாழும் ஓர் அரிய வகை மீன் இனம் ஆகும்.

மனித உருவம் கொண்ட இந்த அபூர்வ வகை மீன் அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

vikatan

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பெண்மையைப் போற்றும் படங்கள் - மகளிர் தின ஸ்பெஷல் அலசல்!

 

ருப்பு வெள்ளை படங்கள் தொட்டு, சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் வரை பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்குத்தான் மவுசு அதிகம். நண்பி, காதலி, மனைவி, தாய் என்று உறவுகள் வேறாயினும்.. பெண்ணின் பெருந்தக்க யாவுள?

மார்ச் 8. மகளிர் தினம். 

நம்மூரில் எல்லாக் கதைகளுமே, ஹீரோக்களை காம்பஸ் முள்ளாக வைத்து தான் அவர்களை சுற்றி வட்டம் போடும். அப்படி இருக்கும் இந்த ஆணாதிக்க-சண்முகத்தில் பெண்களை, கேர்ள்'ஸை, லேடிஸை, விமன்'ஸை..அட ஆமாப்பா..  அவங்கள மையமா வெச்சு வந்த சில அட்ரா சக்கை படங்களைப் பார்ப்போம்.

அவள் ஒரு தொடர்கதை 

மிடில்க்ளாஸ் குடும்பம், விதவையான அக்கா, தங்கை, உதவாக்கரை தம்பி, ஒரு பார்வையில்லாத சின்னத் தம்பி, வயதான அம்மா என மொத்த குடும்ப பாரத்தையும் தாங்கி நிற்கும் பெண்ணாக சுஜாதா நடித்திருப்பார், கண்களிலேயே வீட்டில் உள்ளோரை மிரட்டுவதும், விரக்தி, கைகூடாத காதல், குடும்பம் பாரம், எல்லாவற்றையும் தியாகம் செய்து மீண்டும் குடும்பத்தை காப்பற்ற வேலைக்கு செல்வது என சுஜாதாவின் கேரக்டர் பாலசந்தரின் மொத்தக் கதையையும் தாங்கி நிற்கும்.

~கண்ணிலே என்ன உண்டு~

மனதில் உறுதி வேண்டும்

பல போராட்டங்களை சந்திக்கும் ஒரு நர்ஸ். குடும்பம், ஓடிப்போகும் சகோதரி, சகோதரன் மரணம், கணவனின் விவாகாரத்து என அவ்வளவு போராட்டங்களை ஒரு சேர சந்திக்கும் பெண் அவளது வாழ்வு என அந்தக் கேரக்டருக்கு அளவான நடிப்பும், மிடுக்கும் கொடுத்து அப்ளாஸ் அள்ளியதோடு பல பெண்களுக்கு மனதில் உறுதி வேண்டுமென வகுப்பெடுத்ததும் சுகாசினியாகத்தான் இருக்கும்.

 ~சங்கத் தமிழ் கவியே ~

புதுமைப் பெண்

 தவறேதும் செய்யாமல் ஜெயிலுக்குப் போன கணவனை காப்பற்ற போராடும் பெண்.ஓயாமல் உழைத்து , பல துன்பங்கள், போராட்டங்களைக் கடந்து வெளியே வரும் கணவன் தன்னைத் தவறாகப் பேச அதே பெண் எப்போது என் குணத்தில் சந்தேகப்பட்டாயோ உன்னோடு வழ முடியாது என தூக்கி எரிந்து வீட்டை விட்டு வெளியேறும் புரட்சி பெண். “ எண்ணை ஊத்தி திரியப் போட்டாதான்யா விளக்கெரியும், எரிக்கமாலயே எரியறது பொம்பள மனசு தான்” இந்த வசனத்தை உச்சரிக்காத தமிழ் சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. பாரதிராஜா செதுக்கிய பாத்திரத்தை மிக அழகாக திரையில் கொண்டு வந்திருப்பார் ரேவதி.

~ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே ~

வைஜெயந்தி IPS

என்னா அடி, என்னுமளவிற்கு ஆக்‌ஷன், வில்லன்களின் சூழ்ச்சி வலை, அரசியல்வாதிகளின் கிடுக்கிப் பிடி என இப்போது வரை ஆக்‌ஷன் குயின் என்றால் தமிழ் சினிமாவின் விஜய சாந்தி தான் என்னும் அளாவிற்கு அவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியாது போனதற்கு இந்தப் படம் தான் முக்கியக் காரணமும் கூட. கோட் சூட், போனி டெயில் ஹேர் ஸ்டைல், என வைஜெயந்தி IPS சபாஷ் பெண் கேரக்டர்.

~ தி லேடி சூப்பர் ஸ்டார் ~ 

கல்கி

ஆதிக்கம் செலுத்தும் கணவன் அவரது அடுத்தடுத்த பெண் தேடல் திருமணம் என அவரை திருத்த களமிறங்கும் பெண், படம் முழுக்க பெண் சுதந்திரத்தை மிக ஆழமாக அழுத்தமாக சொல்லிய படம். தவறாக பேசும் பாஸை அறைவது, ஷாப்பிங் மாலில் ரவுடியை பொறுமையாக அடக்குவது, எய்ட்ஸ் விளம்பரத்தில் ஒரு பெண் நின்றால் தவறா என கேட்பது இப்படி படம் முழுக்க ஆண் ஆதிக்கத்தைப் பேசிய பெண் ஆதிக்கப் படமாகவே இருக்கும். ஒரிரு படங்களே நடித்த ஸ்ருதியை ஒரு நடிகையாக கல்கி மறக்க முடியாதபடி செய்துவிட்டது.

~எழுதுகிறேன் ஒரு கடிதம் இந்தப் பாடலை முணுமுணுக்காத வாய்கள் தாம் உண்டோ~

 கன்னத்தில் முத்தமிட்டால் :

கொஞ்சம் சென்சிடிவான படம். இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைகளில் ஒரு பெண் விடுதலைப் புலியாக நந்திதா தாஸ், உடையில் கம்பீரமும், தன் குழந்தையைப் பல ஆண்டுகள் கழித்து பார்க்கும் போது நம் கண்களில் ஈரமும் ஏற்படச் செய்துவிடுவார்.  மாதவனும் சிம்ரனும் தன் பெற்றோர் இல்லை என்பதை அறியும் ஒன்பது வயதாகும் கீர்த்தனா உடைந்துப் போவது, நம்மை உருக்கிவிடும். தொலை தூரத்தில் இருக்கும் தாயையும், அவளின் தொடர்கதையாக இருக்கும் மகளையும் வைத்து இந்தப் படம் அடுத்தக் கட்டத்திற்கு இந்தப் படத்தை எடுத்துபோகும். 

~இலங்கையில் பெண்களின் நிலை பற்றி பேச வேண்டிய பதிவு~

அபியும் நானும் :

சின்னப் பாப்பாவாக இருக்கும் த்ரிஷாவை பிரகாஷ் ராஜ் ஸ்கூலில் சேர்ப்பதில் இருந்து தொடங்குகிறது அப்பா-மகள் அன்பு அட்ராசிட்டீஸ். சைக்கிள் ஓட்டும் போது, பாடிகார்டாக பின்னாலேயே போவது, காலேஜில் ஒரு பையன் பிரப்போஸ் செய்யும் போது அதை பக்குவமாய் ஹேண்டில் செய்ய கற்றுக் கொடுப்பது என அக்மார்க் அப்பாவிற்கு இருக்கும் எல்லா அடையாளங்களையும் பிரகாஷ் ராஜ் கொண்டிருப்பார். ஆனால், சிங் பையனுடன் லவ் என்று வந்தவுடன்,   பாசத்தில் கொந்தளிப்பவர், அதை ஓப்பனாக வெளிக் காட்ட முடியாமல், சப்பாத்தி-ராஜாம்மா? இட்லி இல்லையா? என வெடிப்பார். இறுதியில் டாடி'ஸ் டாட்டருக்கு டான்ஸோடு டும்டும்டும். 

~ஐ நோ வாட் அயம் டூயிங் குழந்தைகள் இன்று ஜாஸ்தியாகி விட்டனர்~

அழகி :

சின்ன வயதில் நாம் பார்த்து பின்னால் சுற்றிய பெண்ணொருத்தி, பின்னாளில் நம் வீட்டிலேயே வேலையாளாகச் சேர்ந்தால், இருவருக்கும் ஏற்படும் மனோபாவம் குறித்தே கதை பேசுகிறது. ஏழையாகப் பொலிவிழந்து வரும் நந்திதாவும், கணவனை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் தேவயாணியும், பார்த்திபன் கனவிலும் நினைக்காத சூழலைத் தந்து, அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்படுத்தச் செய்வதே இந்தப் படம்.  

மொழி :

காது கேட்காத வாய் பேச முடியாத பெண் மீது ஒரு இசை அமைக்கும் ஹீரோவிற்கு காதல் வருகிறது. அவள் அவனை ஏற்க மறுக்கிறாள். ஏதேதோ காமெடி செய்து மனதில் இடம் பிடித்துவிட்டாலும், ரியாலிடிக்கு இது செட் ஆகாது என நினைக்கும் ஜோ'விடம் அவர் மொழியிலேயே பேசி, அவரையும் சேர்த்து, நம்மையும் அழவைத்து விடுவார் ப்ரித்வி ராஜ். கைத் தாளங்களில் இருந்து ஓசையை உணர முயல்வது, கார் ரேடியோவில் வால்யூமை ஏற்றி, பக்கத்தில் இருப்பவரை குதிக்க வைப்பது என இந்தப் படம் பேசாமல் பேசிய மொழிகள் ஏராளம்.

~காற்றின் மொழி ஒலியா இசையா?~

பச்சைக்கிளி முத்துச் சரம் :

மிஸ்டர் மெட்ராஸ் சரத் குமாரை நேருக்கு நேர் சந்திக்க, பல வில்லன்களே முந்தைய படங்களில் பயந்து போக, ஒரு லேடி டான் எதிர்த்தால் எப்படி இருக்கும்? அதுவும் அது ஜோதிகாவாக இருந்தால்?
திருமணமாகிக் குழந்தை இருக்கும் கட்டத்தில் சரத்திற்கு ஜோவின் மேல் ஒரு காதல் வருகிறது. அது காதல் அல்ல, ஒரு பண மேட்டரில் இவரை சிக்க வைக்க, ஜோ விரித்த வலை என்பது தெரிய வருகிறது. படம் நெடுக சேலையில் வருபவர், க்ளைமாக்சில் மட்டும் ஜீன்ஸ் ஷர்ட் என வாயில் பீடா போட்டு, அசல் டானைப் போலவே வந்து நிற்பது ஒரு செக்கண்ட் அல்லு.  

~டானுக்கெல்லாம் டான் நம்ம ஜோதிகா தான்~

நீ எங்கே என் அன்பே

 கணவனைத் தேடிச் செல்லும் ஒரு மனைவியின் போராட்டம். அவள் சந்திக்கும் பிரச்னைகள். அதே வேளையில் அந்தக் கணவன் கெட்டவன் எனத் தெரிந்தது தைரியமாக எடுக்கும் முடிவு என நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக மாறினார் என்பதற்கு மைல் கல் படங்களில் நீ எங்கே என் அன்பே படத்தின் அனாமிகா கேரக்டரை தவிர்க்கவே முடியாது.

~அனேகமா தங்கத் தாரகை பட்டம் அடுத்து இவங்களுக்குதானோ~ 

ஆரோகணம்

பைபோலார் டிஸ்ஸார்டர் பெண். ஆனாலும் குடும்பச் சூழல் ஏழ்மை. இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட கணவன். இங்கே குழந்தைகள் என விஜி சந்திரசேகர் நடிப்பில் பின்னியெடுத்திருப்பார். அந்தப் படம் சரியாக ஓட வில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது படத்திற்கு சரியான விளம்பரம் இல்லை என்பதே உண்மை. மக்களிடம் படம் குறித்த தகவல் சென்றைடையும் போது படம் தியேட்டரை விட்டே சென்றுவிட்டது. இந்தப் படமும் விஜி சந்திரசேகரின் வித்தியாச நடிப்பிற்காகவும் கேரக்டர் வடிவைமைப்பிற்காவும் பெரிதாக பேசப்பட்ட படம். 

~அன்னையின் அற்புதத்தை வித்யாசமாக காட்டிய படம்~ 


அருந்ததி :

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் என்று கதை சொல்லிய காலம் எல்லாம் போக, பெருமையாக ஒரு ஊர்ல ஒரு ராணி இருந்தாங்களாம் ! என சொல்ல வைத்த படம் இது. அப்படிப் பட்ட ஒரு வெயிட்டான கதாப்பாத்திரம். பல ஆண்டுகள் கழித்து, "அந்த" ஊருக்கு வரும் அனுஷ்காவின் மேல் அவரது ஆவி குடி ஏறிக் கொள்கிறது. அதை வைத்து அழுக்கு வில்லனாக "பொம்மாயி..." என பல்லு விலக்காமலேயே பாட்டு பாடும் சோனு சூதை எப்படி விரட்டி அடிக்கிறார் என்பதே கதை. அனுஷ்காவின் உயரம் ஒரு படத்தில் அவரை உயரத் தூக்கி சென்றதென்றால், அது அருந்ததி தான்.

~நல்லவங்களுக்கு அருந்ததி. கெட்டவங்களுக்கு அருந்த தீ தான் !~

36 வயதினிலே

மேரேஜ் ஆன பிறகு ஒரு பெண்ணை அவுட்ரேஜ் ஆகச் செய்யும் சமூகம். ஸ்மூத்தாக பயணித்துக் கொண்டிருக்கும் கதையில் திடீரெனெ ஒரு ஸ்பீட்பிரேக்கராக, கணவனும் பிள்ளையும் படிப்பிற்காக வெளி நாடு சென்று விடுகின்றனர். அப்போது இந்தப் பெண் தனிமையில் தன்னை உணர ஆரம்பிக்கிறாள். மாடித் தோட்டம் போட்டு, இயற்கை காய்கறிகள் செய்கிறாள். இறுதியில் ஒரு செம்ம மெசேஜோடு படம் "சுபம்" ஆகிறது.

~இந்தப் படம் பார்த்து மாடியில் தோட்டம் போட்ட பொண்ணுங்களும், சுந்தரி சில்க்ஸிற்கு விசிட் அடித்த பொண்ணுங்களும் ஏராளம்~

இறுதி சுற்று :

எத்தனை நாளைக்குத் தான் பையன்களே பாக்சிங் செய்வது? பாக்சிங் ரிங்கிற்கே அலுத்துப் போய் விட்டது என்பதற்கு, எதிராளியை ஜெயித்து விட்டு ரித்திகா சிங் போட்ட குத்து டான்ஸே சாட்சி. அந்தக் கடவுளே மாஸ்ட்டரா வந்தாலும் நான் இப்படித் தான் என அதகளம் செய்யும் இவரது சேட்டைகள் ஒரு கட்டத்தில் இவருக்கு நிலைமையை உணர்த்த, கோச் மாதவன் போட்ட கோட்டில் பயணித்து, கடைசியில் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கி, குட்டிப் பிள்ளையாட்டம் எகிறி, மாதவனைத் தொற்றிக் கொண்டு கெத்து காட்டும் சாதனைப் பெண்!

~கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து !~

vikatan

  • தொடங்கியவர்

நின்று வென்ற லியோ!

 

வால்டர் ஒய்ட்

 

‘காட்டு எருமையின் ஈரல்’ போலவே ஒரு டூப்ளிக்கேட்டைத் தயாரித்து வைத்திருந்தது ‘ரெவனென்ட்' படப்பிடிப்புக் குழு. லியோ அதைக் கடித்துத் தின்பதுபோல காட்சி. கசப்பு இருக்கக் கூடாது என இனிப்பாக போலி ஈரல் ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தனர். அதை வாங்கிப் பார்த்த லியோ, `இது வேண்டாம்' என மறுத்துவிட்டார். ‘எனக்கு நிஜ லிவர் கிடைக்குமா?’ கேட்டதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. காரணம், லியோ சுத்தமான வெஜ்ஜி; அடுத்து, அதை அசைவம் சாப்பிடுபவரால்கூட முகர்ந்துபார்க்க முடியாது.

‘எனக்கு நிஜ லிவர்தான் வேண்டும். ரெடி பண்ணுங்க’ என உறுதியாகச் சொல்லிவிட, இரண்டொரு நாட்களில் படப்பிடிப்புக் குழு தயார்செய்து தந்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு அந்த ரத்தம் சொட்டும் துர்நாற்றம் அடிக்கும் காட்டு எருமையின் ஈரலை, மூக்குக்கு அருகே கொண்டுசெல்ல கொடூரமாகக் குமட்டுகிறது. மீண்டும் மீண்டும் எனப் பலமுறை அந்தக் காட்சிக்காக மெனக்கெடுகிறார். சரியாக வரவில்லை. -40 டிகிரி குளிரில் நடுங்கியபடி இப்படி ஒரு விஷயத்தைச் செய்யவேண்டிய அவசியம் லியோனார்டோவுக்கு இல்லவே இல்லை. பாப்புலாரிட்டி கோபுரத்தின் மொட்டைமாடியில் நிற்கும் மிஸ்டர் ஹாலிவுட். ஆனால், `எத்தனை முறையானாலும் செத்தேபோனாலும் செய்தே தீருவேன்' என அந்த ரத்தம் வழியும் பச்சை ஈரலைக் கடித்துத் தின்ன ஆரம்பிக்கிறார். அவருக்கான ஆஸ்கர் அப்போதே ரிசர்வ் செய்யப்படுகிறது.

p110a.jpg

ஒரு சினிமாவில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வருத்திக்கொள்ள முடியுமோ... அந்த எல்லை களை அநாயாசமாகத் தாண்டவேண்டியிருந்தது `ரெவனென்ட்' படத்துக்காக. மைனஸ் குளிரில் உறைந்துபோன ஆற்றில் இறங்கி ஓடவேண்டும். சும்மா கிடையாது... 45 கிலோ எடை உள்ள கரடித் தோலைத் தோளில் சுமந்தபடி ஓடவேண்டும். தண்ணீரில் இறங்கிவிட்டால் கரடித்தோல் நீரை உறிஞ்சி இரண்டு மடங்கு எடை கூடிவிடும். தண்ணீரில் சில நிமிடங்கள் நின்றாலும் கால் ஃப்ரீஸ் ஆகி நரம்புகள் இழுக்கத் தொடங்கிவிடும். ஒருமுறை ஷூட்டிங்கின்போதே ஐஸ் தண்ணீரில் மூழ்கி எமதர்மன் வீட்டு என்ட்ரன்ஸ் வரைக்கும் போய்விட்டுத் தப்பித்திருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. அந்த உண்மையான அர்ப்பணிப்புக்குத்தான் இப்போது ஆஸ்கர்.

p110b.jpg

இந்த ஆஸ்கருக்குப் பின்னால் 22 ஆண்டுகாலக் காத்திருப்பு இருக்கிறது. இதுவரை ஐந்து முறை ஆஸ்கருக்காக நாமினேட் செய்யப்பட்டு, ஐந்து முறையும் ஜஸ்ட் மிஸ்ஸானது லியோவின் வேதனை ஹிஸ்ட்ரி மிஸ்ட்ரி. 1994-ம் ஆண்டில் தொடங்கியது இந்த ஆஸ்கர் வேட்டை. ‘வாட்ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்’ என்ற படத்துக்காக, சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டபோது அவரை வீழ்த்தியது `டாமி லீ ஜோன்ஸ்'.

p110c.jpg

லியோ பிறந்து வளர்ந்த ஏரியா, ரெளடிகளின் பிறப்பிடம். திரும்பிய பக்கம் எல்லாம் விபசாரம். தடுக்கி விழுந்தால் போதைப்பொருள். பள்ளிகளுக்குச் சென்றால், நிச்சயம் கெட்டுச் சீரழிவது உறுதி. 15-வது வயதில் வீட்டில் ‘எனக்கு ஸ்கூல் எல்லாம் வேண்டாம். நான் நடிக்கிறேன்’ எனச் சொல்லிவிட்டான் சிறுவன் லியோ. அப்போது இருந்தே அவனுடைய அம்மாதான் ஒவ்வொரு நாளும் நடிகர் தேர்வுகளுக்கு அழைத்துச்செல்வார். சின்னச்சின்னப் படங்களில் நடிக்க ஆரம்பித்த லியோவுக்கு, ராபர்ட் டிநீரோதான் திருப்புமுனையாக இருந்தார். 1993-ம் ஆண்டில் வெளியான ‘தி பாய்ஸ் லைஃப்’ படத்துக்கான ஆடிஷனில் அவராகவே பார்த்து தேர்ந்தெடுத்த திறமைசாலி ‘லியோ!’
 
1996-ம் ஆண்டில் வெளியான ‘ரோமியோ + ஜூலியட்’ அவரை சாக்லேட் ஹீரோவாக, இளசுகளின் டார்லிங்காக மாற்றியது. `டைட்டானிக்' அவர் மேல் பித்துப்பிடிக்கவைத்தது. `டைட்டானிக்'குக்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றதும், ‘ஓட்டுக்களை ஒழுங்கா எண்ணுங்கடா’ என ஆஸ்கர் கமிட்டிக்கு  இமெயில் அனுப்பி தெறிக்கவிட்டனர் அவரது ரசிகர்கள்.

p110d.jpg

2002-ம் ஆண்டில் `கேங்ஸ் ஆஃப் நியூயார்க்', கொஞ்சம் வளர்ந்த வேறு ஒரு லியோவை அறிமுகப்படுத்தியது.

2004-ம் ஆண்டில் வெளியான `ஏவியேட்டர்' மெச்சூர்டு நடிகனாக நிலைநிறுத்தியது. வயது ஏற ஏற, சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். புகழின் உச்சியில் இருக்கும்போதே ‘ஜாங்கோ அன்செயின்ட்’ படத்தில் கொடூரமான கொலைகார ஸ்மைலிங் வில்லனாக நடிப்பதற்கு எல்லாம் தனி கெத்து வேண்டும்.

p110e.jpg

‘உல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்துக்காக, 2014-ஆம் ஆண்டே கிடைத்திருக்கவேண்டிய அங்கீகாரம் ஆஸ்கர். ஆனால் கிடைக்கவில்லை. அதற்காக சோர்ந்துவிடாத லியோ 100 மடங்கு உழைப்புடன் ‘ரெவனென்ட்'-டில் திரும்பி வந்தார். அந்த உறுதிதான் லியோ. 40 வயதில் வாழ்க்கை தொடங்கு வதாகச் சொல்வார்கள். ஆஸ்கர் நாயகன் லியோவுக்கு, இப்போது வயது 41. மைல்ஸ் டு கோ!

விகடன்

  • தொடங்கியவர்
84 வயதில் விஜய் டிவி ஓனர் செய்துகொண்ட 4வது திருமணம்

84 வயதில் விஜய் டிவி ஓனர் செய்துகொண்ட 4வது திருமணம்

Posted By: ShanthiniPosted date: March 08, 2016in: உலகம்

ஊடக உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ராபர்ட் முர்டோச், தனது 84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது ராபர்ட்டிற்கு நான்காவது திருமணம் ஆகும்.

ஆஸ்திரேலியாவில் பிறந்தாலும் அமெரிக்க குடியுரிமை பெற்று அமெரிக்கராக வாழ்பவர் ராபர்ட் முர்டோச். பரம்பரை தொழிலே பத்திரிகையாகக் கொண்ட இவர், நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சினிமா தயாரிப்பு நிறுவனங்கள், செய்தி இணையதளங்கள் என ஊடகத்துறையின் முடிசூடா மன்னனாக விளங்குகிறார்.

தலைமைப் பொறுப்பு…

தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தவர் முர்டோச். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த தனது பத்திரிகையை இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளுக்கு அவர் விரிவு படுத்தினார்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு…

அதிரடிச் செய்திகள் மூலம் அவரது பத்திரிகைகள் பிரபலமானது என்று கூறினால் மிகையில்லை. குறிப்பாக இங்கிலாந்தில் மன்னர் குடும்பத்தினர், பிரபல நடிகர் – நடிகைகள், ராணுவ வீரர்கள் என பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுகேட்டு வெளியிட்டது இவரது நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை.

சொத்து மதிப்பு அதிகரிப்பு…

அது மட்டுமின்றி உலகில் பிரபலமாக விளங்கிய பல்வேறு ஊடகங்களை விலை கொடுத்து வாங்கினார் முர்டோச். நம்ம விஜய் விஜய் டிவியின் உரிமையாளரும் இவரே. இதன் மூலம் அவரது சொத்து மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

77வது பணக்காரர்…

கடந்தாண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட கணக்குப்படி, முர்டாக்கின் சொத்து மதிப்பு 74 ஆயிரத்து 810 கோடி ரூபாய் ஆகும். உலகின் 77வது பணக்காரராக முர்டோச் இருக்கிறார்.

முடிசூடா மன்னர்…

தனது 22 வயதில் ஊடகத்துறையில் நுழைந்த முர்டோச், தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 120க்கும் அதிகமான பத்திரிகைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதுதவிர பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அவர் உரிமையாளர் ஆவார்.

சொந்த வாழ்க்கையில்…

ஊடக வாழ்க்கையைப் போலவே அவரது சொந்த வாழ்க்கையிலும் அடுத்தடுத்து மாற்றங்கள். ஆனால் வெற்றிக்கு பதிலாக சொந்த வாழ்க்கையில், நடைபெற்ற மூன்று திருமணங்களும் முர்டோச்சிற்கு தோல்வியையேத் தந்தன.

முதல் திருமணம்…

கடந்த 1956ம் ஆண்டு முதலில் விமானப் பணிப்பெண் ஒருவரை மணந்தார் முர்டோச். ஆனால், 1967ம் ஆண்டு இருவரும் விவாகரத்து மூலம் பிரிந்தனர். பின்னர் பத்திரிகையாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட முர்டோச், 1999ம் ஆண்டு அவரையும் பிரிந்தார்.

மூன்றாவது திருமணம்…

மூன்றாவதாக சீனாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருடன் 14 ஆண்டுகள் வாழ்ந்து, கடந்த 2013ம் ஆண்டு அவரையும் பிரிந்தார்.

மாடலுடன் காதல்…

அதனைத் தொடர்ந்து 59 வயது ஜெர்ரி ஹால் என்ற மாடலுடன் காதலில் விழுந்தார் முர்டோச். இவர் நடிகையும் கூட. அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெர்ரி ஹாலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

டும்.. டும்… டும்…

இந்நிலையில், இவர்களது திருமணம் லண்டனில் பிளீட் தெருவில் உள்ள செயின்ட் பிரைட்ஸ் தேவாலயத்தில் சனிக்கிழமையன்று நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் முர்டோச்சின் 3 மனைவிகளின் 4 மகள்களும், ஜெர்ரியின் முதல் கணவருக்கு பிறந்த 2 மகன்களும் கலந்து கொண்டனர்.

குழந்தைகள்…

முன்னதாக நடந்த மூன்று திருமணங்கள் மூலம் முர்டோச்சிற்கு 6 குழந்தைகளும், ஜெர்ரிக்கு 3 மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

UTHAYAN

  • தொடங்கியவர்

12799452_1053586868033660_52319685105808

நடிகைகளின் மகளிர் தின ஸ்பெஷல் செல்ஃபி!

  • தொடங்கியவர்

பெண்கள் தின வாழ்த்துக்களை வெறும் வார்த்தைகளில் மட்டும் பகிராதீர்...!

 

முகநூல் முழுவதும் வாழ்த்து மழை நிரம்பி வழிகிறது. தம் தங்கைகளை, அக்காக்களை, அம்மாக்களை இந்த நன்நாளில், சமூகம் கொண்டாடி தீர்க்கிறது. நிச்சயமாக மகிழ்வான விஷயம்தான். ஆனால், பெண்களை அவர்கள் போக்கில் வாழவிடாத நாம், பெண்கள் தின வாழ்த்துகள் கூற தகுதியானவர்களா...? 

பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் நான் தருகிறேன், அவர்களை நான் சமமாக நடத்துகிறேன் என்று நாம் கூறுவோம் எனில், நம்மைவிட வக்கிரம் பிடித்தவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆம். பெண்களுக்கு உரிமைகளை வழங்கிட நாம் யார்...?

பெண்களும், விளம்பரங்களும்:

"ச்சும்மா... பெண்ணியம் பேசாதீங்க சார்... இப்ப பெண்கள் என்ன அடிமையாகவா இருக்காங்க...?"  என்று வாதம் செய்யும் அனைவரும் அந்த விளம்பரத்தை கடந்து  வந்திருப்பார்கள். “பெண் குழந்தை பிறந்துருச்சுல, இப்பவே நகை சேர்த்து வைக்க வேண்டும்,” என  நவீன பெண்ணடிமை பேசும் விளம்பரம் அது. பெண் குழந்தை பிறந்தால் சுமை, கல்யாணம் பண்ணி தர வேண்டும், வரதட்சணை தர வேண்டும், செலவு அதிகம் என்று பெண் சிசுக்கொலை செய்த சீல்படிந்த இந்திய மனநிலையின் நவீன வடிவம்தான் அந்த விளம்பரம். இந்த ஒரு விளம்பரம் மட்டுமல்ல, ஏறத்தாழ அனைத்து விளம்பரங்களும், பெண்கள் மீது அதீத அக்கறை காட்டி கொள்வது போல், அவர்களை சிறுமைப்படுத்துவதாகவே இருக்கும்.

நாம் யாரைக் கண்டு அதிகம் அஞ்சுகிறோமா,  அவர்களுக்கு எதிராக இரண்டு விஷயங்களை செய்வோம். ஒன்று, அவர்களை தவறாக சித்தரிப்போம், தாம் பலமானவர்கள் என்ற எண்ணத்தை உடைக்க அவர்களை மட்டம் தட்டுவோம். நம் உள்ளுணர்வுக்கு நன்கு தெரியும், பெண்கள் நம்மை விட பலமானவர்கள் என்று. இதுவே அவர்களை நாம் தவறாக சித்தரிக்கவும், மட்டம் தட்டவும் காரணம். 

நாகரிகத்தின் தொடக்க காலத்தில், நாம் தாய் வழிச்சமூகமாக இருந்தோம். அதாவது, சமூகத்தின் அனைத்து அதிகாரங்களும் பெண்களிடம்தான் இருந்தது. பலப் போராட்டங்களுக்கு பிறகு, அதிகாரம் ஆணிண் கைக்கு  வந்தது. அந்த அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், பெண்களை தாங்கள் பலவீனமானவர்கள் என்ற தாழ்வு மனப்பான்மையில் வைத்திருக்க வேண்டும். இதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள, அவர்கள் மீது அதீத அக்கறை செலுத்துவதுபோல், அவர்களை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறோம்.

கஸ்தூரிபா, ஈரோம் சர்மிளா மற்றும் சேவியரம்மா... :

rsz_1rsz_kasturba_gandhi__post_card.jpgநாம் அங்கீகரித்தாலும், மறுத்தாலும், பெண்கள் எப்போதுமே பலமானவர்கள். காந்தி,  தாம் கஸ்தூரிபாவிடமிருந்தே அஹிம்சையை பயின்றதாக கூறுகிறார். “கஸ்தூரிபா எதற்கும் பணிந்து போகிறவரோ அல்லது எதற்கும் முந்திக்கொண்டு சண்டைக்குப் போகிறவரோ இல்லை. அதே சமயம், தான் எது நியாயமானது, சரியானது என்று கருதுகிறாரோ அதை நிலை நிறுத்த தயாராக இருப்பவர்.  இதுதான் அஹிம்சை தத்துவத்தின் உண்மையான சாறு” என்கிறார் காந்தி.

ஆம். ஆண்களை விட பெண்கள் எப்போதும் தாங்கள் நம்புவதை நிலைநிறுத்த பிடிவாதமாக இருப்பார்கள்...எந்த அடக்குமுறைக்கும் அஞ்சமாட்டார்கள்.  இந்திய அரசின் ராணுவ அதிகார சிறப்பு சட்டத்தை எதிர்த்து கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பட்டினிப்போராட்டம் நடத்தும் ஈரோம் சர்மிளாவும், கூடங்குள போராட்டத்தை முன்னெடுத்த சேவியரம்மாவும்  நம் சமகாலச் சான்று. 

“என் உயிரை ஆயுதமாக்கி போராடி வருகிறேன், என் உயிரை அழிக்கும் உரிமை எனக்கோ, இந்த அரசுக்கோ, அரசியல் அமைப்பிற்கோ கிடையாது...” என்கிற உறுதி ஈரோம் சர்மிளாவின் அடையாளம் மட்டுமல்ல, அது பெண்களின் அடையாளம்.

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமராக இருந்த மார்க்ரெட் தாட்சர்  ஒரு முறை கூறி இருந்தார், "வெறும் நாவன்மையை வேண்டினால் ஆணிடமும், செயல்திறனை வேண்டினால் பெண்ணிடமும் பொறுப்பை ஒப்படையுங்கள்...” என்று. ஆண்கள் செயல்திறன் அற்றவர்கள் அல்ல... ஆனால், பெண்களை சிறுமைப்படுத்துவது மூலம் தம் இருப்பை ஆண்கள் உறுதி செய்து கொள்ளும் இந்த காலக்கட்டத்தில், தாட்சரின் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

rsz_irom_sharmila.jpg

'நீ அவனை காதலிச்ச, உன் மேல லாரியை விட்டு ஏத்திடுவேன்' என்ற வாட்ஸ் அப்  குரலில் ஒளிந்திருந்தது, சாதிய வன்மம் மட்டுமல்ல... பெண்களை வெறும் பண்டமாக மட்டும் பார்க்கும் ஆதிக்க மனநிலையும்தான்.

உண்மையான, பெண்கள் தின வாழ்த்து என்பது, வெறும்  வார்த்தைகளில் இல்லை... அவர்களின் போராட்டங்களுக்கு துணை நிற்பது, அவர்களை அங்கீகரிப்பது. முக்கியமாக, அவர்களின் சுயத்தை இழக்க நேரிடும்  அழுத்தங்களை  தராமல் இருப்பது. சுருக்கமாக, அவர்களை, அவர்கள் இயல்பில் வாழவிடுவது.

vikatan

  • தொடங்கியவர்

”பாலிவுட் ராட்சஸிகள்” மகளிர் தின ஸ்பெஷல்

 

ம்பர் ஒன் நடிகைகளாக லைம்லைட்டில் இல்லை; கோடிகளில் முத்துக் குளிக்கும் பாலிவுட் பதுமைகளும் இல்லை. ஆனால், மாற்று சினிமாவோ, கமர்ஷியல் சினிமாவோ, இந்தியாவையும் தாண்டி உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த நடிப்பு ராட்சஸிகள் சிலரைப் பற்றி இங்கே...

ரிச்சா சத்தா

p58a%281%29.jpg

மாடலிங் பைங்கிளி. தேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். திபாகர் பானர்ஜி, அனுராக் காஷ்யப் கண்டெடுத்த நடிப்பு முத்து! 'ஓயே லக்கி... லக்கி ஓயே’, 'கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படங்களில் அசத்தல் நடிப்பில் அந்த கேரக்டராக மாறியவர். அந்தப் பட பெர்ஃபார்மன்ஸ் காரணமாக, 11 படங்கள் வாய்ப்பு வந்தது. ஆனாலும், வந்ததை வாரிக்கொள்ளாமல் செலக்டிவான படங்களில் மட்டுமே நடிக்கிறார். 'ஃபக்ரி’, 'கோலியோன் கி ராஸ்லீலா’ ஆகிய படங்களில் சின்ன ரோலாக இருந்தாலும், அப்படியே கேரக்டராக மாறிவிடுகிறார் என விமர்சகர்கள் பாராட்டினர். பெரிய பெரிய சினிமாக்களை மட்டும் பாக்கெட் செய்யாமல், 'நடிப்பு என்றால் எல்லாமே நடிப்புதான்’ என வீதி நாடகங்கள், 'எபிலோக்’ என்ற குறும்படம் எனப் பல தளங்களிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார். கண்டங்கள் தாண்டி கலக்கும் மீரா நாயர் உள்ளிட்ட 9 இயக்குநர்களின் இயக்கத்தில் ரிலீஸான, 'வேர்ட்ஸ் வித் காட்ஸ்’ என்ற படத்தில் மீரா நாயரின் 'காட் ரூம்’ என்ற குறும்படத்தில் பிரமாதமாக நடித்திருந்தார்.

இந்த ஆண்டு ரிலீஸான 'மாஸான்’ திரைப்படத்தில் பிரதான கேரக்டரில் நடித்து கேன்ஸ் வரை கொண்டாடப்பட்டார். காசி நகரத்து லாட்ஜ் ஒன்றில் காதலனோடு உறவுகொள்ளும்போது, போலீஸாரால் பிடிபட்டு, உளவியல் ரீதியாக டார்ச்சரைத் தாங்கி மேலே முன்னேறிவரும் பெண்ணாக யதார்த்த நடிப்பில் சிலிர்க்கவைத்தார். காத்திரமான காட்சிகளில் நடிப்பதற்காகவே, இப்போது எக்கச்சக்க பாலியல் தொழிலாளி பாத்திரங்கள் வருகிறதாம்.

'முத்திரை குத்த வேண்டாம். வேற... வேற’ என்கிறார். சபாஷ்!

ஹியூமா குரேசி

p58c%281%29.jpg

இவரும் அனுராக் ஸ்டூடன்ட்தான்! தியேட்டர் டு சினிமா ரூட் பிடித்தவர் 'கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தில் நவாஜுதீனுக்கு ஜோடி. அடுத்தடுத்த படங்களில் நெகட்டிவ் ரோல்களில் ஈர்த்தார். 'ஏக் தி தாயன்’ சூன்யக்காரி, 'தேத் இஸ்க்கியா’ சீட்டிங் கேர்ள், 'டி டே’ ரா அதிகாரி, 'பத்லாப்பூர்’ பாலியல் தொழிலாளி என வெரைட்டி ரோல்களில் வெறித்தனம் காட்டினார். அனுராக் தயாரிப்பில் வந்த 'ஷார்ட்ஸ்’ படத்தில் 'சுஜாதா’ என்ற ஷாக்கிங் ரோலில் கண்ணீர் சிந்தவைத்திருந்தார். அண்ணன் முறை கொண்ட ஒருவனால் தொடர்ந்து பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகி, கொதிக்கும் எண்ணெய் கொண்டு கொலை செய்பவராக மிரட்டியிருந்தார்.

பட்சி விரைவில் தமிழுக்கு வருவார் என எதிர்பார்க்கலாம்!

ஸ்வேதா திரிபாதி

p58e.jpg

லேடி விஜய் சேதுபதி! இங்கே நாளைய இயக்குநர் சீஸன்கள் பட்டையைக் கிளப்பிய நேரத்தில், அங்கே குறும்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். பாராட்டுக்கள் குவிய, நிறைய குறும்படங்கள் நடித்தார். 'கியா மஸ்த் ஹே லைஃப்’ என்ற டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 'த்ரிஷ்னா’ நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க, அனுராக்கின் சிஷ்யர் இயக்கிய 'மாஸான்’ படத்தில் அழகுக் குட்டிச் செல்லமாக ஹீரோயின் ரோலில் நெகிழவைத்தார். விடுவாங்களா பாலிவுட் டைரக்டர்ஸ்? ஸ்லோக் சர்மா என்ற நியூ ஏஜ் சினிமா இயக்குநரின் 'ஹராம்கொர்’ என்ற படத்தில் இவருக்கு சவாலை பெட்ஷீட்டாகப் போர்த்திக்கொண்டு தூங்கும் பாத்திரம். ஆம், ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையே நிகழும் காதலைப் பேசுகிறது.

அப்படிப் போடு!

திலோத்தமா ஷோமே

p58g.jpg

கொல்கத்தா ரசகுல்லா. நியூயார்க்கில் நடிப்பு பயின்றவர். மீரா நாயரின் 'மான்ஸ¨ன் வெட்டிங்’ மற்றும் 'ஷேடோஸ் ஆஃப் டைம்’ போன்ற ஹாலிவுட் படங்களில் கலக்கியவர். பெங்காலி சினிமாவின் அதிர்ச்சி டைரக்டர் கௌஷிக் முகர்ஜியின் 'தாஷேர் தேஷ்’ படத்தில் பின்னியவர். பாலிவுட்டின் ஹிட் 'ஷாங்காய்’ படத்தில் இவர் நடிப்பு விமர்சகர்களால் ஏகத்துக்கும் பாராட்டப்பட்டது. 'கிஸ்ஸா’ என்ற இந்திய - ஜெர்மன் படத்தில் ஆணாக மாற விரும்பும் பெண்ணாக ஹீரோயின் பாத்திரத்தில் நடித்து, அனைத்து சர்வதேச படவிழாக்களிலும் பல விருதுகளை வாரிக்குவித்தார். திலோத்தமா இப்போது மாற்று சினிமாக்கள், குறும்படங்கள் என ஏகத்துக்கும் பிஸி!

கொங்கனா சென்

p58i.jpg

நடிப்பும் கலைவெறியும் ரத்தத்திலேயே ஊறிக்கிடக்கு. அம்மா அபர்ணா சென் 3 தேசிய விருதுகள், 9 சர்வதேச விருதுகளை பெங்காலி சினிமாவுக்காக வாரிக் குவித்த பன்முக சினிமா ஆளுமை. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பாயாதா? கமர்ஷியல் தாண்டிய மாற்று சினிமாவின் புதிய முயற்சி என்றால், கண்டிப்பாக அந்த ஸ்கிரிப்ட்டில் கொங்கனா இருப்பார். அம்மா அபர்ணா இயக்கத்தில் 'மிஸ்டர் அண்டு மிஸஸ் ஐயர்’ ஆங்கிலப் படத்துக்காக தேசிய விருதை வாங்கினார். 'ஓம்காரா’, 'லைஃப் இன் மெட்ரோ’ படங்களிலும் முத்திரை நடிப்பு. பல சர்வதேச விருதுகளை வீட்டில் குவித்துவைத்திருக்கிறார். 2007-ல் தன் காதலர் நடிகர் ரன்வீர் ஷோரேவை மணந்து, ஒரு குழந்தைக்கு அம்மாவாகியும் இன்னமும் போல்டான கேரக்டர்களாக பெங்காலி மற்றும் இந்தி சினிமாக்களில் கலக்கி எடுக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் ரிலீஸாகப்போகும் இந்தி 'மௌனகுரு’வான 'அகிரா’ படத்தில் தமிழில் உமா ரியாஸ் செய்த இன்ஸ்பெக்டர் கேரக்டரில் மிரட்டி எடுக்கப்போகிறார். 'மௌனகுரு’வைப் பார்த்துவிட்டு தமிழில் நடிக்கும் ஆர்வம் வந்திருக்கிறதாம்.

வெல்கம் டு கோடம்பாக்கம்!

vikatan

  • தொடங்கியவர்

`@' குறியீடு பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது எப்படி?

 

மின் அஞ்சல் மற்றும் இணையதளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் `@' குறியீடு, 1971க்குப் பிறகே இணையத்தில் புழக்கத்திற்கு வந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

160308174215_at_2_512x288_istock_nocredi

இந்த குறி, ஒரு காலத்தில் தெளிவற்ற சின்னமாக இருந்தது. அப்போது கணக்கேட்டுப் பதிவாளர்களால் மட்டுமே இந்த @ குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அந்த நிலையை மாற்றி, இந்த எலெக்ட்ரானிக் யுகத்தில் அதனை அனைவர் மத்தியிலும் புழக்கத்துக்கு கொண்டுவந்தவர் மின் அஞ்சலைக் கண்டுபிடித்தவர் என தெரிவிக்கப்படும் றே டொம்லின்சன் ஆவார்.

தனது அலுவலகத்தில் மின் அஞ்சலை பரிமாற்றிக் கொள்வதற்கு, அவர் 1971ல் இந்த @ குறியை பயன்படுத்தினார். மின் அஞ்சல் அனுப்புபவரின் பெயருக்கும் சென்றடையும் விலாசத்திற்கும் இடையே இது அப்போது இடப்பட்டுள்ளது.

முன்னர் கணிணி தொழில்நுட்பத்தில் @ குறியீட்டின் பயன்பாடு மிகவும் அரிதாகவே இருந்ததால், கணிணியில் பயன்படுத்தப்பட்ட புரொகிராம் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றில் @ இன் பயன்பாடு சிக்கலை தோற்றுவித்திருக்கவில்லை.

14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில் @ குறியீட்டை காணமுடிகிறது  14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில் @ குறியீட்டை காணமுடிகிறது

19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதிக்கு முன்னதாகவே தட்டச்சு இயந்திரங்களின் பயன்பாட்டில் @ இருந்துள்ளது என நூலாசிரியர் ஹெய்த் ஹவுஸ்டன் தெரிவிக்கிறார். பின்னர் அது முறையான கணிணி விசைப் பலகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர்.

வர்த்தக கணக்குகளில், எத்தனை பொருள், என்ன விலையில் என்பதை சுருக்கமாக தெரிவிக்கும் ஒரு குறியீடாக, @ பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த ஹெய்த், முன்னர் கணிணி வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதால், அதில் @ குறியீடும் உள்வாங்கப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆனாலும் @ குறியின் வடிவமைப்பைக் கொண்டு, அனேக நாடுகள் வெவ்வேறு விடயங்களை குறிக்கும் குறியீடாக பயன்படுத்துகிறார்கள் என்ற விளக்கத்தை அளித்துள்ளார் இத்தாலி கல்வியாளரான ஜோர்ஜியோ ஸ்டாபிள்.

   150212105248_varieties_of_roses_512x288_

துருக்கியில், @ குறியீடு ரோஜாமலரைக் குறிக்கிறது.

160115064824_taiwan_pig_farmer_512x288_b

நார்வேயில், @ குறியீடு பன்றியின் வாலைக் குறிக்கிறது.

140826112843_medagascar_pochard_duck_512

கிரேக்கத்தில், @ குறியீடு தாராக் குஞ்சைக் குறிக்கிறது.

ஹங்கேரியில், @ புழுவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

பிரான்ஸ், இத்தாலி போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அது அரோபா எனப்படும் எடையை அளவீடு செய்யும் அலகாகக் கருதப்படுகிறது.

இத்தாலியில் அது அம்போரா என அழைக்கப்படுவதுடன், பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்படும் நீண்ட கழுத்துடனான மட்பாட்ட ஜாடிகளை குறிப்பதாகவும் உள்ளது.

15 ஆம் நூற்றாண்டில் இது வர்த்தகப் பயன்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளதாக இத்தாலி கல்வியாளரான ஜோர்ஜியோ ஸ்டாபிள் தெரிவித்துள்ளார்.

BBC

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

ஆண்களுக்கு மட்டுமே தெரியும்... பெண்கள் மீதான பிரியம் எல்லாம் காதல் மட்டுமே இல்லையென்று!

 

ந்த கட்டுரைக்கு பின்னால் உங்களுக்கு தெரிஞ்ச பல பெண்கள் இருக்கலாம் என்பதுதான் உண்மை. இந்த கட்டுரையை அன்புள்ள அம்மா, சகோதரி, தோழி, காதலி என எப்படி வேண்டுமானாலும் ஆரம்பித்து கொள்ளுங்கள். கட்டாயம் இந்த அழகான ராட்சசி உங்க வாழ்க்கைல கண்டிப்பா இருப்பா...!

நாம‌ என்ன செய்தாலும், அது சரி என நம்புவதற்கு ஒரு தைரியம் வேண்டும். எவ்வளவு கோபப்பட்டாலும் பேசாமல் போனாலும், அடுத்த நாள் காலை அலைபேசியில் ஒரு குரல் 'சாப்ட்டியா...?' என்ற வார்த்தையோடு ஆரம்பிக்கும். அதுதான் அம்மா.

வேலைக்காக வெளியூரில் வசிப்பவர்களில் பல பேருக்கு தெரியும், செல்போன் சார்ஜ் இல்லாமல் போன் செய்ய மறந்தாலோ, தியேட்டர் சினிமாக்களில் மூழ்கி இருக்கும் போது அழைப்பை ஏற்க மறுத்தாலோ அடுத்த நிமிடம் பதறிப்போய் எங்கு இருக்கிறானோ என பதறும் அம்மாவை. நம‌க்கே தெரியும் நாம‌ சொதப்புவோம்னு. ஆனால் இந்த அம்மாக்கள் மட்டும்,   'நீ இருக்கும்போது வேற யாரு ஜெயிப்பாங்க?'னு சொல்றதுதான் நம்மளை ஓட வைக்கும் மந்திரம். அதெல்லாம் 'ஆடி போய் ஆவணி வந்தா என் மகன் டாப்பா வருவான்'னு சொல்லுற அம்மாக்கள்தான் வேலையில்லா பட்டதாரிகளை விஐபி ஆக்குறாங்க.

indian-moms.png

எல்லாரோட லைஃப்லயும் ஒரு  டாம் அண்ட் ஜெர்ரி கேரக்டர் இருக்கும். அது அவங்களோட அக்காவோ, தங்கச்சியோ, அத்தை/மாமன் பொண்ணாவோ இருக்கும். அடி வாங்குற‌து ஆரம்பிச்சு,  நம்ம‌ மொபைல்ல எந்த பொண்ணு போன் நம்பர் இருந்தாலும் அந்த பொண்ண நம்மளோட  சேர்த்து வைச்சு கலாய்க்கற வரைக்கும் எல்லாமே அவங்களால மட்டும்தான் முடியும். எல்லா அண்ணன் தம்பிகளுமே அவுங்க அக்கா/தங்கச்சிக்கு மரப்பாச்சி பொம்மைதான். ஹேர் ஸ்டைலிஸ்ட், பியூட்டிசியன்னு பல வேலைகள டெஸ்ட்டிங்கா நம்மள வைச்சு சோதிப்பாங்க அவங்க. அம்மா திட்டினா... அப்பா அடிச்சா அவுங்க முன்னாடி எதுவும் பேசாம தனியா கூப்பிட்டு அட்வைஸ் பண்ணும்போதும், ’டேய் நா வேற வீட்டுக்கு கல்யாணம் ஆகி போகப்போறேன்’னு சொல்லும்போதும் ஆட்டோமேட்டிக்கா கண்ணு வேர்க்கும்.

boy-claire-colburn-drew-baylor-elizabeth

அடுத்து ரொம்ப முக்கியமான கேரக்டர். அம்மா, தங்கச்சி தாண்டி நம்மளை நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கற ஒரு கேரக்டர். ’மச்சான்... அவ உன்னதான்டா பாக்குறா’னு சொல்ல நிறைய பசங்க இருப்பாங்க. ’ஏய் அவன் நல்லவன்... அவன் உனக்கு செட் ஆவான்’னு நம்ம சார்பா பேச ஒரு பொண்ணு வேணும். அந்த மாதிரி ஃப்ரெண்ட்தான் இந்த கேரக்டர்.

ஆரம்பத்துல நிறைய பேர் கலாய்ப்பாங்க, சேர்த்து வைச்சு பேசுவாங்க. இதெல்லாம் தாண்டி ’நீ என் ஃப்ரெண்டு... மத்தவங்க சொல்றதுக்கு நா ஏன் ஃபீல் பண்ணனும்’னு சொல்ற இந்த கேரக்டர்தான் பல நேரங்கள்ல நம்மளோட ஸ்ட்ரெஸ் பஸ்டர். நம்மளோட பல மாற்றங்களுக்கு காரணமா இருக்கறதும் இந்த ஃப்ரெண்டுதான். மொக்கையா ட்ரெஸ் பண்ற‌ங்கறதுல ஆரம்பிச்சு, ’நீ சைட் அடிக்குற பொண்ணு அழகா இருக்குனு என்கிட்டயே சொல்வ... அது செம கடுப்பா இருக்கும்’னு பொசஸிவ்வா பொங்குற‌ வரைக்கும்னு எல்லாமே.... க்யூட்டி நாட்டியா பண்ணுவாங்க!

guys-and-girls-friends.jpg

வாழ்க்கைல காபியே குடிக்காதவனை நாலு மணி நேரம் காஃபி ஷாப்ல காத்திருக்க வைக்க இந்தப் பொண்ணாலதான் முடியும். ஞாயித்துக்கிழமை 12 மணி வரைக்கும் தூங்குறவனை காலை 8 மணி ஷோவுக்கு கெளம்பி ஓட வைக்க அவளாலதான் முடியும். ராத்திரி 10-11 மணிக்குலாம் குட்-நைட் சொல்லி பழக்கப்பட்டவனை அர்த்த ஜாமம் 2 மணிக்கு ’குட் நைட் சொல்றதா... இல்ல குட் மார்னிங் சொல்றதா’னு யோசிக்க வைக்க அந்தப் பொண்ணாலதான் முடியும். ஒரு நாள்கூட மிஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்க வைக்கிற இந்த பொண்ணுக்கு காதலி, பெட்டர் ஹாஃப்னு என்ன பேர் வேணும்னாலும் வைச்சுக்கலாம்.

Facebook%20Cover%20Wallpapers%20Lonely%2

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்... மகள்கள்தான் அவர்களுக்கு எல்லாமே என்று. எல்லா வீட்லயும் பையன் அம்மா செல்லமா இருப்பான்...ஆனா பொண்ணுங்க,  அப்பா செல்லமா மட்டுமே இருக்கும். தனக்கு ஒரு பையன புடிச்சிருக்குங்கறது ஆரம்பிச்சு,  'அப்பா எனக்கு இப்ப இந்த கல்யாணம் வேணாம்ப்பா, நா படிக்க போறேன்'ங்ற வரைக்கும் சொல்லுற எல்லாத்தையும், இல்லனு சொல்லாம செய்ய வைக்க இந்த மகள்களுக்குதான் தெரியும்.

இவுங்க யார்கிட்டயுமே நாம‌ ரொம்ப அன்பாவோ இல்ல கோவப்படாமலோ பேசினதே கிடையாது. நம்மளோட‌ எல்லா எமோஷன்களும் இவங்களுக்கு நல்லா தெரியும். இவங்கள சில சமயம் காயப்படுத்தியிருக்கோம், திட்டி இருக்கோம். ஆனா அதெல்லாம் எதையுமே பொருட்படுத்தாம, மறுநாள் காலைல 'என்னப்பா சாப்ட்டியா...?னு கேக்குற அம்மா, "டேய் கொட்டிக்கிட்டியா...?"னு கேக்குற தங்கச்சி, "சாப்பாடு இருக்கு... சாப்பிட போலாமா?" னு கேக்குற ஃப்ரெண்ட், "டேய் என்ன விட்டுட்டு சாப்பிட்ட‌ கொன்றுவேன்..."னு மிரட்டுற‌ காதலி, " அப்பா நீ சாப்பிடலனா நா சாப்பிட மாட்டே"ன்னு அடம்பிடிக்குற பொண்ணு....இப்படி எல்லாரும் நம்ம‌ மேல வைச்சிருக்கறது ஒரே மாதிரியான பாசம். இவுங்க இல்லனா நாம‌ இல்லை....இவங்களை எங்க வேணும்னாலும் பாக்கலாம்... இப்பகூட இந்த கட்டுரைய படிச்சுட்டு, ’ஏய் இந்த லைன்ல இருக்கறது நான்தானே’ கேக்குற எல்லாருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்!

vikatan

  • தொடங்கியவர்
1945 : ஜப்­பானின் டோக்­கியோ மீது அமெ­ரிக்கா தீவிர குண்­டுத்­தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தது
 

வரலாற்றில் இன்று......

மார்ச் - 09

 

681Tokyo_kushu_1945-3.jpg1796 : நெப்­போ­லியன் போனபார்ட் தனது முதல் மனைவி ஜோசப்­பினை திரு­மணம் செய்தார். 

 

1842 : அமெ­ரிக்­காவின் கலி­போர்­னியா மாநி­லத்தில் தங்கம் கண்­டு­பிடிக்­கப்­பட்­டது. அங்கு நடை­பெற்ற  ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட்ட முத­லா­வது தங்­கக்­கண்­டு­பி­டிப்பு இது­வாகும். 

 

1847 : ஐக்­கிய அமெ­ரிக்­காவின் படைகள் ஜெனரல் வின்ஃபீல்ட் ஸ்கொட் தலை­மையில் மெக்­சிக்­கோவைத் தாக்­கினர்.

 

1919 : எகிப்தில் 1919 புரட்சி வெடித்­தது.

 

1945 : இரண்டாம் உலகப் போரில் அமெ­ரிக்க பி- 29 போர் விமா­னங்கள் டோக்­கி­யோவில் தீவி ர குண்­டுத்­தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தன. 

 

1956 : ஜோர்­ஜி­யாவில் இடம்­பெற்ற மாபெரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் சோவியத் இரா­ணு­வத்­தி­னரால்  அடக்­கப்­பட்­டது.

 

1957 : அமெ­ரிக்­காவின் அலாஸ்­காவில் அண்ட்­றி­யானொவ் தீவு­களில் ஏற்­பட்ட 8.3 ரிச்டர் அள­வி­லான பூகம்­பத்தால் பலத்த சேதமும் ஆழிப் பேர­லையும் ஏற்­பட்­டது.

 

1959 : நியூயோர்க்கில் நடை­பெற்ற அமெ­ரிக்க சர்­வ­தேச பொம்மை சந்­தையில் பார்பி பொம்மை முதன் முத­லாக விற்­ப­னைக்கு வந்­தது. 

 

1976 : இத்­தா­லியின் டிறெண்டோ என்ற இடத்தில் ஆகா­யத்தில் நகர்ந்து கொண்­டி­ருந்த கேபிள் வாகனம் கீழே விழ்ந்து 15 சிறார்கள் உட்­பட 42 பேர் கொல்­லப்­பட்­டார்கள்.

 

1986 : விபத்­துக்­குள்­ளான சலெஞ்சர் விண்­ணோ­டத்தின் அழிந்த சிதை­வு­களை ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆழ்­கட­லோ­டிகள் கண்­டு­பி­டித்­தனர். இறந்த ஏழு விண்­வெளி வீரர்­க­ளி­னதும் உடல்கள் உள்ளே இருந்­தன.

 

2006 : சனியின் துணைக்­கோ­ளான என்­செ­லா­டசில் திரவ நிலையில் நீர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 

2011 : நாசாவின் டிஸ்­க­வரி விண்­வெளி ஓடம் தனது 39 ஆவதும் கடைசியுமான பயணத்தின் பின் தரையிறங்கியது.

 

2015 : ஆர்ஜென்டீனாவில் இரு ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி க்கொண்டதால் 10 பேர் உயிரி ழந்தனர்.

metronews.lk

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நூற்றாண்டின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்!

 

இந்த நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணி விடலாம், அதுவும் பெண் எழுத்தாளர்கள் என்றால் யோசிக்காமல் நினைவுக்கு வரும் பெயர் ஹார்பர் லீ. பெண் எழுத்தாளர்கள் பலரும் புனை பெயர்களில் எழுதுவது வழக்கம். அடையாளம் தெரியாத பெயர்களையே பயன்படுத்துவர். இதற்கெல்லாம் முன்னோடி ஹார்பர் லீதான்.

பெண்களுக்கு உரிமைகளே குறைவாக இருந்த காலத்தில்,  ஒரு பெண் எழுத்தாளராக அனைவரையும் தன் எழுத்தில் கட்டி போட்டவர் அனேகமாக இவராகத்தான் இருக்கும்.

மறைந்த எழுத்தாளர் ஹார்பர் லீ எழுதிய 'டு கில் அ மாக்கிங் பர்ட்'  புத்தகத்தைதான் புத்தக வாசிப்பை துவங்கும் அனைத்து இளம் பிள்ளைகளுக்கு இன்றும் பரிந்துரை செய்கின்றனர். புத்தகம் வெளிவந்து 50 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், இதன் மதிப்பும் புகழும் குறையாமல் இருப்பதுதான் லீ யின் வெற்றி.

writter_vc1.jpg

ஹார்பர் லீ,  ஏப்ரல் 28, 1926 -ம் ஆண்டு தென் அமெரிக்காவில் உள்ள மன்ரோவில் எனும் ஊரில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் உள்ள இவர்,  பள்ளி முடிந்ததும்  சட்டம் படித்தார். படிக்கும்போதே அங்குள்ள பல்கலைக்கழக செய்திதாளில் எழுதினார். எழுத்தில் ஆர்வம் அதிகரிக்க,  சட்டப் படிப்பை முடிக்காமலே கல்லூரியை விட்டு நின்றார். அதன் பின்னர்  பல சின்ன சின்ன வேலைகள் செய்தபடியே,  மீதி நேரத்தில் எழுதத் தொடங்கினார். கூடவே தனது புத்தகத்தை வெளியிட  பதிப்பாளரை தேடி அலைந்தார்

முதன்முதலில் அவர் தனது பதிப்பாளரிடம் காட்டியது “கோ செட் வாட்ச்மேன்” கதையைதான். இதனை பார்த்த டே ஹோஹாஃப்,  ஒரு பெரிய எழுத்தாளருக்கான அறிகுறி அவரது எழுத்தில் தென்பட்டதை அப்போதே கண்டறிந்தார். ஆனால் கதையில் சில திருத்தங்கள் தேவைப்படவே,  அதனை மாற்றியமைக்க கூறி,  பின் 1960-ல் “ டு கில் மாக்கிங் பர்ட்” என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த புத்தகத்தை வெளியிடுகையில்,  லீ தனது முதல் பெயரான நெல் என்பதை தவிர்த்து ஹார்பர் லீ என்ற பெயரிலேயே  வெளி உலகத்திற்கு அறிமுகமானார்.

இந்த புத்தகம் தனது முதல் பதிப்பில் 5000 பிரதிகள் விற்றது, ஹார்பர் லீ கையெழுத்திட்ட முதல் பதிப்பு புத்தகம்,  20,000 டாலர்களுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது. இது வரை 40 மில்லியன் பிரதிகளை விற்று இன்றும் அதிகமாக விற்கப்படும் ஒரு புத்தகமாக திகழ்கிறது. 40 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் பெருமை.

“டு கில் அ மாக்கிங் பர்ட்”  1960-ல் வெளியானதுமே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. 1961-ம் ஆண்டில் சிறந்த கற்பனை கதைக்கான புலிட்சர் பரிசை வென்றது. கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த புத்தகம் என்ற பெருமையை அடைந்திருக்கும் வெகு சில புத்தகங்களில் இதுவும் ஒன்று.

இது தென் அமெரிக்காவில்,  கறுப்பின மக்களுக்கு எதிராக அநீதிகள் நிகழ்ந்த காலக்கட்டத்தில் நடக்கும் கதை.  மேரிகோம்ப் எனப்படும் கற்பனை நகரில், வெள்ளையர் இன பெண் ஒருவரை, கருப்பர் இனத்தை சார்ந்த டாம் ராபின்சன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறார்.. இவர் சார்பாக வாதாட களம் இறங்குகிறார் அட்டிகஸ் ஃபின்ச் எனும் வழக்கறிஞர். இவரது ஆறுவயது மகள் ஸ்கௌடின் பார்வையிலேயே  நகர்கிறது கதை.

அவர் சிறு  வயதில் பார்த்து வளர்ந்த ஆலபாமாவில் உள்ள மன்ரோவில் நகரத்து மனிதர்களையும் நிகழ்வுகளையும் தழுவி எழுதப்பட்டதே இந்த நாவல்.

writter_vc6.jpg

 


இந்த நாவலில் வரும் டில் என்ற கதாபத்திரம் அவரது உயிர் நண்பன் கபோட் என்பவரை மனதில் கொண்டு எழுதப்பட்டது. அட்டிகஸ் ஃபின்ச் என்பது தனது தந்தையை ஒட்டி எழுதப்பட்ட கதாபாத்திரம். ஸ்கௌட் என்பது,  லீ அவரே தனது சிறுவயதில் இருந்ததை வைத்து எழுதியது.

'டு கில் அ மாக்கிங் பர்ட்' என்பதின் அர்த்தம் கதையிலேயெ வருகிறது. ஒரு முறை வேட்டையாடும்போது தனது குழந்தைகளிடம்,  'எத்தனை ப்ளூ ஜே பறவைகளை வேண்டுமானால் சுடலாம்; ஆனால் யாருக்கும் தீங்கு விளைவிக்காத மாக்கிங் பறவையை கொன்று விடக்கூடாது' எனக் கூறுவார். ஒரு குற்றமும் அறியாத டாம் ராபின்சனை தூக்கிலிட நினைக்கும் சட்டத்தை குறிக்கிறது இந்த ஒப்பிடுதல்

இந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டபோது,  8 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 3 விருதுகளை வென்றது. இந்த படத்தில் அட்டிகஸ் ஃபின்ச் என்ற கதாபாத்திரத்தில் நடித்த க்ரெகொரி பெக் என்பவருக்கு,  லீ தனது தந்தையின் பாக்கெட் கடிகாரத்தை பரிசாக கொடுத்தார்.  இதுவரை ஒரு நாவல் படமாக்கப்பட்டு இவ்வளவு சிறப்பாக இருந்ததே இல்லை என்று சிலாகித்துக் கொள்வாராம் . அந்த கடிகாரத்தை அணிந்து கொண்டுதான் க்ரெகொரி பெக்  சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்றார்.

நன் கதாபாத்திரங்களை காலத்துக்கும் மறக்க முடியாதவாறு உருவாக்கிய இவர்,  நிஜ வாழ்க்கையில் முற்றிலும் மாறுபட்டவர். நேர்காணல்களை பெரிதாக விரும்பாத இவர்,  ஒரு கட்டத்தில் அவற்றை முற்றிலும் தவிர்த்து விட்டார்.  பல உயரிய அமைப்புகள் இவருக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வாரி வழங்க,  இவர் தனிமையையே விரும்பினார். ஊடக வெளிச்சத்தில் இருந்து தள்ளி இருக்கவே விரும்பிய இவர் எப்படி இருப்பார் என்பது கூட பலருக்கு தெரியாது.

“டு கில் அ மாக்கிங் பர்ட்” புத்தகத்திற்கு பின் வேறொரு புத்தகம் எழுத மாட்டாரா என்று காத்துக் கிடந்த இவரது பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு 2015-ல்  வந்தது பேரின்ப அதிர்ச்சி. லீயே மறந்து போயிருந்த “கோ செட் அ வாட்ச்மேன்” என்ற அவரின் முதல் புத்தகத்தை அவரது வழக்கறிஞர் கண்டெடுத்தார். புத்தக கதைகள் எல்லாம் இரவு முழுவதும்  திறந்திருந்து வாசகர்களின் தேவைகளை பூர்த்தி செய்தனர்.

“கோ செட் அ வாட்ச் மான்” நாவலின் கதை  20 வருடங்கள் கழித்து நடப்பது போன்ற கதை. நியீயார்க்கில் படித்து விட்டு திரும்பும் ஸ்கௌட்டுக்கு தன் சொந்த ஊரில் ஏற்படும் அனுபவங்களாக எழுதப்பட்டிருந்தது.

ஒரே ஒரு புத்தகம் மறக்க முடியாத சில கதாபாத்திரங்கள் காலத்துக்கும் அழியாத இவரது எழுத்து இவரை உலகின் தலைச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக அறிய செய்தது. வளரும் எழுத்தாளர்களுக்கு லீயிடம் கற்க வேண்டிய பாடங்கள் பல உண்டு. தனக்கு தெரிந்த விஷயங்களை எந்த ஒரு மேல் பூச்சும் இல்லாமல் எதார்த்தமாக கொண்டு செல்வதில் தான் இருக்கிறது அழகே. மிகவும் சர்சைக்குரிய விஷயமான இன பாகுபாடை கூட தனக்கே உரிய  லேசான நகைச்சுவையுடன் கொண்டு செல்வார் ஹார்பர் லீ. ஒரு குழந்தைக்குரிய மனதின் வழியே  பெரியவர்களின் உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த புத்தகம் பல பல்கலைகழகங்களிலும் பள்ளி பாட த்திட்டங்களிலும் இடம் பெற்றுள்ளது.

இவர்  பிப்ரவரி 19 தனது மன்ரோவில் வீட்டில் தூக்கத்திலேயே இயற்கை எய்தினார். உலகம் இவரையும் இவரது எழுத்தையும் இன்னும் பல ஆண்டு காலம் மறக்காது என்பதும் மட்டும் உறுதி.

vikatan

  • தொடங்கியவர்

12800326_998080286907332_853168623279027

இளவயதில் சதுரங்க Grand Master பட்டம் வென்ற மேதை பொபி பிஷரின் பிறந்தநாள்.

  • தொடங்கியவர்

மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!

 

கேரளத்தில் மார்புக்கு வரி விதிக்கும் முறை இருந்த கொடுமையான காலக்கட்டம் அது. நாஞ்செலி, ஒடுக்கப்பட்ட சாதியை  சேர்ந்த அழகான பெண். 30 வயதினை நெருங்கிக் கொண்டிருந்தாள். இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கெண்டிருந்தாள்.  திருவாங்கூர் அரசுக்கு மார்பு வரி செலுத்தவும் மறுத்து விட்டாள். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் வரி கட்டவில்லை. அதாவது மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரி இது. மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது.

tax.jpg

ஒரு நாள்  அரசின் வரிவிதிப்பாளர் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். உனது மார்புக்கு வரி கட்டிவிட்டாயா? என்று கோபமாக கேட்டார். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் என்றார் நாஞ்செலி . 'சரி,   ...பொருளை எடுத்து வருவாள் ' என்பது வரிவிதிப்பாளரின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள். இது இருந்தால்தானே வரி கேட்பாய்? என்றவாரே தனது இரு கொங்கைகளையும் வரி விதிப்பாளர் கண் எதிரிலேயே வெட்டி எறிந்தாள். அவளது இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. உயிரும் பிரிந்தது.

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டுமல்ல நாஞ்செலியின் இந்த செயலால் அதிர்த்து போன திருவாங்கூர் அரசு, இந்த வரிவிதிப்பை ரத்து செய்யவும் வைத்த சம்பவம் அது.  கேரளத்தில் சேர்தலா அருகே முலைச்சிபரம் என்ற இடத்தில் இந்த துயரம் நிறைந்த வரலாற்று  சம்பவம்
நடந்துள்ளது.   ஊரின் பெயர்க்காரணமும் இதுதான். ஆனால் நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்த பகுதியிலும் ஒரு நினைவுச்சின்னமோ சிலையோ கூட கிடையாது.

தற்போது நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளார். அவர் நாஞ்செலிக்கு பேத்தி முறை. 67 வயதாகும் அவரது பெயர் லீலாம்மா. இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ''  நாஞ்செலி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரியின் பேத்தி நான். எனது முன்னோர்கள் நாஞ்செலியின் அழகை பற்றி கூறியுள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் விளக்கியுள்ளனர். துணிச்சலான அவரது செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்ததாகவும் கூறுவார்கள்'' என்றார்.

கோட்டயத்தை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜே சேகர், ''  மனித உரிமைக்கே சவால் விடுகின்ற இது போன்ற வரிவிதிப்புகளை எதிர்த்து போராடிய அந்த பெண்ணை தற்போதைய காலத்தவர்கள் மறந்து விட்டனர். இவர்களை போன்றவர்களை மறப்பது மனசாட்சியற்ற செயல்'' என்கிறார்.

எத்தனையோ மகளிர் தினம் கொண்டாடிவிட்டோம். எத்தனை மகளிருக்கு நாஞ்செலியின் துணிச்சல் மிக்க இந்த செயல் தெரியும் என்றும் தெரியவில்லை. வரலாற்றையும் வீரப்பெண்களையும் அடையாளப்படுத்த சமூகம் மறந்து விடக் கூடாது!

vikatan

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நவீனன் said:

மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!

 

கேரளத்தில் மார்புக்கு வரி விதிக்கும் முறை இருந்த கொடுமையான காலக்கட்டம் அது. நாஞ்செலி, ஒடுக்கப்பட்ட சாதியை  சேர்ந்த அழகான பெண். 30 வயதினை நெருங்கிக் கொண்டிருந்தாள். இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கெண்டிருந்தாள்.  திருவாங்கூர் அரசுக்கு மார்பு வரி செலுத்தவும் மறுத்து விட்டாள். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் வரி கட்டவில்லை. அதாவது மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரி இது. மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது.

tax.jpg

ஒரு நாள்  அரசின் வரிவிதிப்பாளர் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். உனது மார்புக்கு வரி கட்டிவிட்டாயா? என்று கோபமாக கேட்டார். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் என்றார் நாஞ்செலி . 'சரி,   ...பொருளை எடுத்து வருவாள் ' என்பது வரிவிதிப்பாளரின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள். இது இருந்தால்தானே வரி கேட்பாய்? என்றவாரே தனது இரு கொங்கைகளையும் வரி விதிப்பாளர் கண் எதிரிலேயே வெட்டி எறிந்தாள். அவளது இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. உயிரும் பிரிந்தது.

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டுமல்ல நாஞ்செலியின் இந்த செயலால் அதிர்த்து போன திருவாங்கூர் அரசு, இந்த வரிவிதிப்பை ரத்து செய்யவும் வைத்த சம்பவம் அது.  கேரளத்தில் சேர்தலா அருகே முலைச்சிபரம் என்ற இடத்தில் இந்த துயரம் நிறைந்த வரலாற்று  சம்பவம்
நடந்துள்ளது.   ஊரின் பெயர்க்காரணமும் இதுதான். ஆனால் நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்த பகுதியிலும் ஒரு நினைவுச்சின்னமோ சிலையோ கூட கிடையாது.

தற்போது நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளார். அவர் நாஞ்செலிக்கு பேத்தி முறை. 67 வயதாகும் அவரது பெயர் லீலாம்மா. இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ''  நாஞ்செலி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரியின் பேத்தி நான். எனது முன்னோர்கள் நாஞ்செலியின் அழகை பற்றி கூறியுள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் விளக்கியுள்ளனர். துணிச்சலான அவரது செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்ததாகவும் கூறுவார்கள்'' என்றார்.

கோட்டயத்தை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜே சேகர், ''  மனித உரிமைக்கே சவால் விடுகின்ற இது போன்ற வரிவிதிப்புகளை எதிர்த்து போராடிய அந்த பெண்ணை தற்போதைய காலத்தவர்கள் மறந்து விட்டனர். இவர்களை போன்றவர்களை மறப்பது மனசாட்சியற்ற செயல்'' என்கிறார்.

எத்தனையோ மகளிர் தினம் கொண்டாடிவிட்டோம். எத்தனை மகளிருக்கு நாஞ்செலியின் துணிச்சல் மிக்க இந்த செயல் தெரியும் என்றும் தெரியவில்லை. வரலாற்றையும் வீரப்பெண்களையும் அடையாளப்படுத்த சமூகம் மறந்து விடக் கூடாது!

vikatan

இந்தக் கொடிய வழக்கத்தை சட்டம் போட்டு நிறுத்தியவன் ஒரு முகலாய நவாப் என்று அறிந்த போது மிகவும் ஆச்சரியம் அடைந்தேன்!

  • தொடங்கியவர்

பெண்களை பிற்போக்குத்தனமாக காட்டும் 'மகளிர் மட்டும்' விளம்பரங்கள்!

 

பாலினப் பகுபாடு என்பது இந்திய சமுதாயத்தில் இரண்டற கலந்து விட்ட ஒரு பிரச்னையாகவே இருக்கிறது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... நமக்கு ஒரு கோபம் வந்தால் உடனே அதை தாயிடம்தான் காட்டுவோம். தந்தை நினைவுக்கு வரமாட்டார். ஏனென்றால் அத்தனை உரிமையும் எடுப்பது அங்கேதான்.

நமது தொலைக்காட்சி விளம்பரங்களை எடுத்துக் கொண்டால் கூட ஒரு விஷயம்தான் திரும்ப திரும்ப காட்டப்படும். அதாவது பெண்கள் என்றால் துணி துவைப்பது, சமைப்பது, நகைகளை கண்டால் ஆசைப்படுவது போன்ற சில பிற்போக்குத்தனமான விளம்பரங்களே காட்டப்படும். 'அப்போதானே நானும் அவனும் ஈக்குவல் ஈக்குவல்'  போன்ற விளம்பரங்கள் எப்போதாவது தலையை காட்டும். அண்மை காலத்தில் வெளிவந்த விளம்பரங்களில் பெண்களை ஸ்டீரியோடைப்பாக காட்டும் விளம்பரங்களில் சிலவற்றை பார்த்தால், அந்த விளம்பரத்திற்கு பெண்கள் மத்தியில் கூட அமோக வரவேற்பு இருந்திருக்கும்.


                    

அதில் மிக முக்கியமானது பஜாஜ் சி.எப்.எல் பல்பு . இந்த விளம்பரம் போல வேறு எந்த ஒரு விளம்பரமும் பெண்களை அவமதித்து விட முடியாது. ஒரு பெண்ணிடம்,  நாளை உன்னை பெண் பார்க்க வருகிறார் என்கிறார் அவரது  தாய். 'அய்யோ எனது முகமெல்லாம் பொட்டு பொட்டாக இருக்கிறதே' என்கிறார் அந்த பெண். அப்படியென்றால் முகப்பொழிவுக்கு க்ரீம் பயன்படுத்த வேண்டுமே என்ற கவலை அவருக்கு. அந்த பெண்ணின் தோழி இப்போது இதுவெல்லாம் தேவையல்ல. பெண் பார்க்க வரும் போது முகம் பொலிவாகத் தெரிய பஜாஜ் சி.எப்.எல் பல்பு மாட்டினால் போதும் என்கிறார். அதன்படி பல்பு மாட்டப்படுகிறது பெண்ணின் அழகில் மாப்பிள்ளை மயங்கி விடுகிறார். அப்படி இந்த விளம்பரம் போகிறது. அதாவது பெண்கள் என்றால் அழகாக இருந்தால் மட்டுமே போதும் என்பது போல ஒரு ஸ்டீரியோ டைப் விளம்பரம் இது. இந்த விளம்பரம் வைரலாகவும் ஆனது.

 


                 

அடுத்து 'டைட் நேச்சுரல்ஸ் ' விளம்பரத்துக்கு வருவோம். கணவர் தனது மனைவிக்கு டைட் நேச்சுரல்ஸ் வாஷிங் பவுடர் வாங்கிக் கொடுக்கிறார். அதனை பார்த்தவுடன் அவரது  மனைவி மிகுந்த சந்தோஷமடைகிறார். அன்பு மிளிர்கிறது. ஆனால் அந்த கணவர் தனது மனைவிக்கு துணியை துவைக்கவோ அல்லது அதனை உலர்த்தவோ எந்த உதவியும் செய்ய மாட்டார். மாறாக மனைவிக்கு டைட் பவுடரை வாங்கிக் கொடுத்து விட்டு, போய் அமர்ந்து விடுவார். துணி துவைத்த பின், மனைவி வந்து கணவருக்கு காபியும் கொடுப்பார். அப்போது தனது மனைவியின் உள்ளங்கையை பார்க்கிறார் கையில் எந்த காய்ப்பும் இல்லை. ஆக தனது துணைக்கு எந்த உதவியும் செய்யாத கணவர்களை ஊக்கப்படுத்தும் விளம்பரமாக இது அமைகிறது.
                      

அடுத்து தனிஷ்க் ஸ்டோரில் அடுக்கப்பட்டிருக்கும் நகைகளை பார்த்தவுடன் பெண் ஒருவர்,  திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார். அதாவது நகைகள்தான் பெண்களை கவரும் முதல் ஆயுதம் என்பதை போல இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்கும். பெண்ளுக்கு நகைகளை காட்டினால் போதும் என்பது போல இந்த விளம்பரம் போகிறது. 

vikatan

  • தொடங்கியவர்

12802998_998080100240684_395600886308281

 
 
விண்வெளியில் பறந்து - பயணித்த முதலாவது மனிதர் என்ற சாதனை படைத்த ரஷ்யரான யூரி ககாரின் பிறந்தநாள்.
  • தொடங்கியவர்

'நோட்டா'வா... அப்படின்னா...? (வீடியோ)

 

'யாரும் ஒழுங்காக இல்லை... எதுக்கு சார் ஓட்டு போடணும்...?' என்று அழுத்துக் கொண்டு, நம்மில் பலர், நம் ஜனநாயக கடமையை நிறைவேற்ற மறுக்கிறோம். தேர்தல் நாள், நமக்கொரு விடுமுறை நாளே...

வேட்பாளர்கள், கட்சிகள் மீது விருப்பம் இல்லாதவர்களையும், ஜனநாயக கடமையை நிறைவேற்ற வைக்க, தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது தான் ‘நோட்டா’. அதாவது எனக்கு எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று அர்த்தம். முன்பு, இதை தனி தாளில், எழுதி தர வேண்டும். ஆனால், இந்த முறை நோட்டாவிற்கென்று தனி சின்னம் ஒதுக்கி, அதையும் வாக்கு இயந்திரத்தில் சேர்த்துள்ளது தேர்தல் ஆணையம்.

ஆனால், வாக்காளர்களுக்கு நோட்டா குறித்த விழிப்புணர்வு இருக்கிறதா...? நோட்டா வெற்றி பெறுமா...? நோட்டா மாற்றத்தை ஏற்பட்டுத்தும் என்று மக்கள் நம்புகிறார்களா...?

வாருங்கள் மக்களிமே கேட்டு தெரிந்து கொள்வோம்...

vikatan

  • தொடங்கியவர்

முழுக்க வெள்ளையாகக் காட்சியளிக்கும் இந்த புத்தர் கோயிலை வெள்ளைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இந்தன் உண்மையான பெயர் வாட் ராங் கூன் (wat rong khun).
இடம்: தாய்லாந்து

12794794_688288027940409_317259575205829

  • தொடங்கியவர்

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29+

முழு சூரிய கிரகணம்: இருளில் மூழ்கிய இந்தோனேசியாவின் சில பகுதிகள்

  • தொடங்கியவர்

துணிச்சல் பெண்மணி ஆர்.மீனாட்சி!

 

''நான் ஆர்.மீனாட்சி. கடந்த 2000-வது வருடம் எனக்கு எச்.ஐ.வி இருப்பது மருத்துவ சிகிச்சை மூலம் எனக்கு தெரியவந்தது. முற்றிலும் உடைந்து போனேன். அந்த காலக் கட்டத்தில் எய்ட்ஸ் இருந்தால் இறப்பு நிச்சியம். அது ஒரு உயிர் கொல்லி என எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள் செய்து வந்தார்கள். ஏன் மருத்துவமனைகளிலேயே கூட எய்ட்ஸ் வந்துவிட்டால் மரணம் தான் என எழுதப்பட்டிருந்தது. இதனால், மனதளவில் பெரும் பாதிப்பு அடைந்தேன்.

Meenachi01.jpg

ஆனால் என் வீட்டிலோ எய்ட்ஸ் நோயாளி என்ற எந்த ஒரு பாகுபாடும் பார்க்கவில்லை. என்னை சம்மமாகவே நடத்தினார்கள். எனக்கு பல வழிகளில் உற்சாகம் அளித்தார்கள். அதன் மூலம் மரணக் கனவிலிருந்து என்னை மீட்டெடுத்தார்கள். ஆனால், அப்போது என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையை அனுபவித்து வந்தார்கள். மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோயாளி பிரிவுகளில் ஒருத்தர் பக்கத்திலும் ஒரு அட்டண்டர் கூட இருக்கமாட்டார். எய்ட்ஸ் நோயாளிகள் பக்கத்தில் பொதுமக்கள் நிற்பதற்கும் கூட பயப்பட்டனர். அதனால் எய்ட்ஸ் நோயாளிகள் சமூகத்தில் ஒழிந்தும், மறைந்துமே வாழ்ந்து வந்தார்கள். ஆனால், நானோ மாறாக சமூகத்தோடு ஒற்றி வாழ்ந்தேன். என்னைப் போன்ற பலரது நிலையை மாற்ற எண்ணினேன். அதனால் தான், 2002-ம் வருடம், விசு நடத்திய அரட்டை அரங்கத்தில், முதன் முதலில் நானே விருப்பப்பட்டு கலந்துகொண்டு, எச்.ஐ.வி பற்றி உண்மையான விளக்கத்தை மக்களுக்குக் கூறினேன். எய்ட்ஸ் பற்றி நான் பேசுவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் கவுன்சிலர் (மனச்சிக்கல்கள்) ஆனந்த் குமார் மற்றும் கோவை அரசு மருத்துவர் மாகதேவன் ஆகியோர்தான்.

wo1.jpg



அதன் மூலம் பலரது வாழ்வில் மாற்றம் நடந்ததை நான் உணர்ந்தேன். அதற்கு பின் மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோயாளிகள் பிரிவில் அட்டண்டர் கூடவே இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். நான் அரட்டை அரங்கத்தில் கூறியவுடன், பல ஊடகங்கள் எனது பர்ஸ்னல் வாழ்வை அவர்களது  ஊடகங்களில் போட்டு, என்னை சில மனச்சிக்கல்களுக்கும் ஆளாக்கினர். அதுவும் ஒரு புறம் இருந்தது. நான் முன்னாடி ஜெராக்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தேன். ஒன்பதாவதே படித்திருந்தேன். பின் 2003-ம் வருடம் சென்னையில் கவுன்சிலிங்கில் டிப்ளமோ முடித்தேன். அடுத்து எம்.ஏ சமூகவியலியும் கரஸில் படித்து முடித்தேன். 2003-ம் வருடமே எனக்கு எச்.ஐ.வி இருப்பதை ஒரு விளம்பரத்தின் (போஸ்டர்) மூலம் தமிழ்நாடு முழுக்க ஒட்டி பலரது வாழ்வில் ஊக்கத்தை ஏற்படுத்தினேன். அதனையடுத்து 2005-ம் ஆண்டு சிறந்த சேவைக்கான விருதை தமிழக அரசு வழங்கியது.

Meenachi02.jpgஅதனைத் தொடர்ந்து நான் இங்கு வந்து எய்ட்ஸ் பற்றி முறையான கருத்துக்களை மக்களுக்கு பரப்ப ஈடுபட்டு, சமூக சேவகராக மாறினேன். இப்போது நான் கவுன்சிலராக பணி புரிந்து வருகிறேன். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து CDHUNS என்ற சங்கத்தைத் தொடங்கினோம். அந்த CDHUNS என்றால் கோவை டிஸ்ட்ரிக்ட் எச்.ஐ.வி உள்ளோர் நலச் சங்கம். அதன் மூலம் நாங்கள், முதலில் மக்கள் முன்னிலையில் சென்று பியர் கவுன்சிலிங் கொடுக்க ஆரம்பித்தோம். அதாவது நாங்கள் எய்ட்ஸ் மூலம் அனுபவித்த சொந்தக் கருத்துக்களை கூறி மற்றவர்களை ஊக்கப்படுத்துவது, அடுத்து காய்கறி சந்தை, ஆட்டோ ஓட்டுனர்கள் என பலரது முன்னிலையில் முகாமிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு செய்தோம். பல கல்லூரிகளுக்குச் சென்று அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் எடுத்தோம்.

இந்த எய்ட்ஸைப் பொருத்தவரை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கட்டுப்பாடோட இருப்பது அவசியம். மன ரீதியாக இருப்பதற்கு சிறந்த கவுன்சிலிங் பெறுவதும். யோகா போன்று செய்து வருவதும் நல்லது. உடல் ரீதியாக என பார்க்கும் போது, எய்ட்ஸ் மூலம் வரும் பக்கவிளைவுகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும், எச்.ஐ.வி டி.பி (Tuberculosis) முக்கியமானது. இதைக் குணப்படுத்த ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்து அதன்படி நடந்து வந்தாலே போதுமானது. இடையில் நெஞ்சு வலியோ, மூட்டு வலியோ வந்தால் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வர வேண்டும்.

womnnnnsq1.jpg



இப்போதைய சூழ்நிலையில் எய்ட்ஸை மட்டும் தான் முழுமையாக குணப்படுத்த நம்மிடம் சிகிச்சை இல்லை. மற்ற படி எய்ட்ஸை கட்டுப்படுத்தவும், அதனால் வரும் சந்தர்ப்பவாத நோய்களைக் குணப்படுத்தவும் நம்மிடம் மருந்து உள்ளது. கட்டாயம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை CD4 டெஸ்டை எடுத்துக்கொண்டு, அதன் படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் எச்.ஐ.வி.யைக் கட்டுப்படுத்த ART (Anti Retro viral Therapy) கூட்டு மருந்தை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கும். அந்த மாத்திரையை வாங்குவதற்கு மாதத்தில் ஒரு நாள் வேலைக்கு லீவ் போட்டுவிட்டு வரவேண்டியதுள்ளது. அதனால் எங்கள் சங்கம் சார்பாக அரசு மருத்துவமனைகளில் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது ART கூட்டு மருந்தை விற்குமாறு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம்'' என தைரியமும், தன்னம்பிக்கையும் கண்ணில் மிளிர முடிக்கிறார் ஆர்.மீனாட்சி.

vikatan

  • தொடங்கியவர்

பூரண சூரிய கிரகணம்
==================
இந்தோனேசியாவில் பூரண சூரிய கிரகணம் ஒன்று தென்பட்டுள்ளது. சூரியனுக்கு குறுக்காக சந்திரன் வர, சூரியன் மறைக்கப்பட்டு கிட்டத்தட்ட முழுமையான இருள் ஏற்பட்டது.

இந்தோனேசியாவில் மாத்திரந்தான் இதனை முழுமையாக பார்க்ககூடியதாக இருந்தது.

பலீடாங் தீவில் உள்ள மக்கள் இதனை கண்டு கழித்தனர்.

BBC

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
 

இப்படி மாம்பழம் சாப்பிட்டால் எப்படி இருக்கும் ??

  • தொடங்கியவர்

வலைபாயுதே V 2.0

 
சைபர் ஸ்பைடர்

 

twitter.com/Itzmejaanu: பைக்ல போறப்போ போன் பேசறவங்களைப் பார்த்து, `மச்சி... உன் டாக் டைம் முடியப்போகுது’னு சொல்லணும்போல இருக்கு!

twitter.com/SettuOfficial: `யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் நண்பன்;  `இப்ப யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் உயிர் நண்பன்!

p99c.jpg

twitter.com/gokila_honey: ‘என் கட்சியை யாரும் உடைக்க முடியாது’ - அ.தி.மு.க-வுக்கு, சரத்குமார் சவால் # ராகவா... நீ பரோட்டா மாஸ்டர், கராத்தே மாஸ்டர் இல்லை! 

twitter.com/naiyandi: ரீசார்ஜ் செய்யக்கூட காசு இல்லை என்பதுதான் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது!

twitter.com/aashiqali500: சாராயம் வித்த அரசுக்கே இவ்வளவு கடன்னா... குடிச்ச மக்களுக்கு எவ்வளவு கடன் இருக்கும்?!

p99a.jpg

twitter.com/im6adhana: ஆட்டோவின் பின்புறம் எழுதியிருக்கும் வாசகங்கள், கடந்துபோகும் சில மனிதர்களின் சூழ்நிலை சிக்கல்களுக்கு... பதிலாக, ஆறுதலாக அமைந்துவிடுகின்றன!

twitter.com/snake_tweetz: `ஒழுங்காப் படிக்கலைன்னா, இன்ஜினீயரிங் சேர்த்துவிட்ருவேன்’னு புள்ளைங்களைப் பயமுறுத்தி வளர்க்க ஆரம்பிக்கும் காலம், வெகுதூரத்தில் இல்லை!

twitter.com/meenammakayal: `இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது!

twitter.com/vivika_suresh: சினிமாவுலதான் ‘உன்னை எல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்டா’ டயலாக். ஆனா, வாழ்க்கையில ‘உன்னை எல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தி வருவாடா’தான்!

twitter.com/sikkandarbabu11: `உன் மொபைல் நம்பர் என்ன?’ என்பதில் ஆரம்பிக்கும் காதல், `இனிமே எனக்கு போன் பண்ணாதே!’ என்பதிலேயே முடிகிறது!

twitter.com/Sakthi_Twitz: பஸ்ல ஒரு பையன் தனியா ஏறினது குத்தமாயா? `இங்குட்டு மாறி உக்காரு... அங்குட்டு மாறி உக்காரு’னு பாடாப்படுத்துறாய்ங்க!

twitter.com/iam_brashu: உலகின் முதல் லிவிங் டுகெதர் கப்பிள், ஆதாம் ஏவாள்தான்!

twitter.com/thirumarant: அம்மாவை வீட்டைவிட்டு வெளியே கூட்டிட்டு வர தி.மு.க கோடிக்கணக்குல செலவு பண்ணவேண்டியிருக்கு!

p99b.jpg

twitter.com/Babbuk3: ஆறு மாதக் குழந்தையோட டி-ஷர்ட்டைப் போட்டுட்டுத் திரியுற இந்த இந்திக்காரனுங்க, என்ன சொல்ல வர்றானுங்கனே புரியலை!

twitter.com/Lalithajeyanth:

நான்: வாவ்..! Rainbow பாருடா!
மகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்மா.
நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை?
மகன்: சொன்னா, நீ rainbow-க்கு ஸ்பெல்லிங் கேப்ப.

p99d.jpg

Whatsapp: ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதைக் கேள்!” என்றது.

“என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே அவருக்கு முக்கியமா இருக்கக் கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர், நான் இல்லாம எங்கேயும் போகக் கூடாது.”

“அப்புறம்..?”

“எம்மேல ஒரு கீறல் பட்டாலும் அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சுபோயிடணும்.”

“அப்புறம்..?”

“அவ்வளவுதான்.”

பூதம், அந்தப் பெண்ணை ஸ்மார்ட்போனாக மாற்றியது!

facebook.com/saravn24: இப்ப எல்லாம் சைட் அடிச்சா, முறைக்கிறதுக்குப் பதிலா மொபைல் எடுத்து அவங்க ஆளுகூட கடலைபோட ஆரம்பிச்சுடுறாங்க! #TechnologyDeveloped

VIKATAN

  • தொடங்கியவர்

இசை இதற்குத்தான் பயன்பட வேண்டும்!'' - யுனிலிவரை வீழ்த்திய சோஃபியா

 


"Kodaikanal won't Kodaikanal won't
Kodaikanal won't step down until you make amends now..."

என்று துவங்கும்  இந்த பாடலை நிச்சயம் நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்... எந்த வெகுஜன ஊடகங்களிலும் இந்த பாடல் ஒளிப்பரப்பபடவில்லை... ஆனால், இந்த பாடல் யுனிலிவருக்கு எதிரான கொடைக்கானல் மக்கள் போராட்டத்திற்கு முக்கிய ஆயுதமாக இருந்தது.

001%281%29.jpg

 

அந்த பாடலில் வரும்  ராப் இசையுடன் கூடிய அந்த பெண்ணின் அலட்சிய குரல், யுனிலிவரை கிண்டல் செய்தது, கோபக் கேள்விகளை வீசியது, மக்களை திரட்டியது, யுனிலிவரின் முதல் செயல் அதிகாரியின் தூக்கத்தை கலைத்தது. இறுதியாக, அந்த மக்களுக்கு ஒரு தீர்வையும் தேடித்தந்துள்ளது. ஆம். யுனிலிவர், மெர்குரி நச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ஒரு தொகையை தர முன்வந்துள்ளது.  

ஆப்பிரிக்கா, அமெரிக்க மக்கள் பாடல்களை ஒரு போராட்ட வடிவமாக முன்னெடுத்து இருக்கிறார்கள். அதில், பல வெற்றிகளையும் கண்டு இருக்கிறார்கள். நம் நாட்டின் சுதந்திரத்திற்கும் பாடல்கள் ஒரு முக்கிய போராட்ட கருவியாக இருந்திருக்கிறது. சமகாலத்தில்,  உலகத்தின் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஒன்றான யுனிலிவரை இந்த பாடல் பணியவைத்து இருக்கிறது.

rsz_sofi_006.jpg



2001-ம் ஆண்டு யுனிலிவரின் நிறுவனம் மூடப்படுகிறது. அதற்குள் அது நூற்றுகணக்கான மக்களை பெரும் நோயில் தள்ளியும், ஆயிரக்கணக்காண ஏக்கர் நிலங்கள், நீர் நிலைகளை மாசுப்படுத்தியும் விடுகிறது. அதற்கு இழப்பீடு கேட்டு அந்த மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அந்த மக்களின் எந்த போராட்டத்திற்கும் செவி சாய்க்காத யுனிலிவரின் தலைமை செயல் அதிகாரி பால் போல்மேன், ‘Kodaikanal Won't ' பாடல் வெளியான சில தினங்களில், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இது சம்பந்தமாக ஒரு ட்விட் இடுகிறார்.

பின் அந்த பாடல் முப்பது லட்சம் மக்களை சென்றடைந்து, பெருவாரியான மக்களை இந்த பிரச்னை குறித்து பேசச் செய்தது. இப்போது இதற்கு ஒரு தீர்வையும் தேடி தந்துள்ளது. அந்த பாடலை எழுதி, பாடியவர் சோஃபியா அஷ்ரஃப்.  அவருடன் உரையாடுவது அலாதியான அனுபவமாக இருக்கிறது. உற்சாகத்தை சில நொடிகளில் நம்மிடம் கடத்தி விடுகிறார்.

அவருடன் உரையாடியதிலிருந்து...

உங்களை நான் மத பின்புலத்தில் பார்க்கவில்லை. ஆனால், இதை நான் கேட்டுதான் ஆக வேண்டும். இஸ்லாமிய மதத்திலிருந்து வந்துவிட்டு உங்களால் எப்படி இவ்வளவு தைரியமாக செயல்பட முடிந்தது. நான் இஸ்லாமிய பெண்கள் எல்லாம் பிற்போக்குவாதிகள் என்று சொல்லவில்லை, ஆனால், சில தடங்கல்கள் இருக்கத்தானே செய்கிறது... ?
 
ஆம். ஆனால், என் குடும்பம் எனக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது. என் குடும்பமும் போராட்டங்களில் கலந்து கொண்ட பின்னணி கொண்ட குடும்பம். அவர்களிடமிருந்து தூண்டப்பட்டுதான், நான் இது போன்ற தளத்தில் இயங்க ஆரம்பித்தேன். எல்லாரையும் போல், என் ஆன்மாவும் நேர்மையின் பக்கம் நில், நியாயத்தின் பக்கம் நில், தீமைக்கு எதிராக நில் என்றது. சிறு சிறு வயதிலிருந்தே எனக்கு கலைகள் மீது ஈடுபாடு அதிகம். அதை என் குடும்பமும் ஊக்குவித்தது. தரமான படைப்பு உண்மையிலிருந்தும், நியாயத்திலிருதும்தான் ஜனிக்கும். கலைஞன் ஒரு விஷயத்தில் தன்னை பறிக்கொடுக்கமல், பாதிக்கப்படாமல், ஒரு நல்ல படைப்பை தந்துவிட முடியாது.  கொடைக்கானல் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளை,   சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராம் என்னிடம் கூறினார். அந்த கதைகள் என் தூக்கத்தை களவாடியது. அந்த அழுத்தங்களிலிருந்து தான் இந்த பாடல் பிறந்தது.

rsz_sofia001.jpg



பாடலை ஒரு போராட்ட வடிவமாக மாற்ற முடியுமென்று எப்படி கருதினீர்கள்...?

ராப் இசையே ஒரு போராட்ட வடிவம்தான். இப்போது வேண்டுமானால் அந்த இசை  வேறு தளங்களில் பயன்படுத்தப்படலாம். ஆனால், அந்த இசை தோன்றிய காலத்தில் அது போராட்டங்களுக்கு மட்டும்தான் பயன்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக நித்தியானந்த் தந்த ஊக்கம்தான் ஒரு முக்கிய காரணம்.

அந்த பாடல் இந்தளவிற்கு மக்களை சென்றடையுமென்று எதிர்பார்த்தீர்களா...?

நிச்சயம் இல்லை. மக்களின் வலியை சமூகத்தின் பெரு மக்களிடம் ஒரு பாடல் மூலமாக கொண்டு சேர்த்தது தனிப்பட்ட முறையில் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

புரிகிறது. நீங்கள் யுனிலிவருக்கு  விளம்பரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்தீர்கள் அல்லவா...?

ஆம். அதிர்ஷ்டவசமாக நான் மெர்குரி பாடல் வெளிவருவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேறிவிட்டேன். அங்கிருந்து மட்டுமல்ல, விளம்பர துறையிலேயே நான் இப்போது இல்லை.

என்ன சொல்கிறீர்கள்... காரணத்தை தெரிந்து கொள்ளலாமா?

எந்த அறமும் இல்லாமல் விளம்பர நிறுவனங்கள் இயங்குகின்றன. மக்களின் நுகர்வு வெறிதான் பல சூழலியல் பிரச்னைகளுக்கு காரணம். நான் சூழலியல் தளத்தில் செயல்பட்டுக் கொண்டே, நுகர்வு வெறியை தூண்டும் நிறுவனத்தில் வேலை பார்ப்பது முரண்தானே, அதனால்தான் அங்கிருந்து வெளியேறினேன். நிச்சயமாக சொல்ல முடியும், கலைஞர்களுக்கு ஏற்ற இடமாக விளம்பரத் துறை இல்லை.

rsz_sofi_004.jpg



அப்படியானால், ஒரு கலைஞனாக நிச்சயம் சமூகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் எதிராக போராடுவீர்கள்தானே...?

அதிலென்ன சந்தேகம். தொடர்ந்து நான் செயற்பட்டு கொண்டுதான் இருக்கிறேன். கலைஞனாக என்னால் என்ன பங்களிப்பை எவ்வளவு அளிக்க முடியுமோ, அவ்வளவுக்கு நிச்சயம் அளிப்பேன். அதுதான் அந்த கலைக்கான நியாயமும் கூட.

சொல்லி முடித்த அவரது ஒவ்வொரு சொல்லிலும் உறுதி தெறிக்கிறது. இப்போது ஷோஃபியா அஷ்ரஃப், ஷோஃபியா தேன்மொழி அஷ்ரஃப். ஆம். குக்கூ குழந்தைகள், இவரின் பாடலை கேட்டு விட்டு, தேன்மொழி என்ற கூப்பிட்டுள்ளன. இப்போது தேன்மொழியையும் தன் பெயரில் இணைத்துவிட்டார்.

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.