Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படைக்கு நாகபுரியிலிருந்து வெடிபொருள் ஏற்றிவந்த லாரி பிடிபட்டது

Featured Replies

பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் - சுப.வீ எழுதிய இந்நூலுக்கான இன்குலாபின் விமர்சனம்.

தமிழ்த் தொன்மை மாயைகளை உடைத்த முதல் சிந்தனையாளர் - இன்குலாப்

தமிழ்ச் சிந்தனைகள், வரலாற்று அடிப்படையில் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. பிற துறைகளில் காணப்படும் வரலாற்று வறட்சிக்குத் தமிழ்ச் சிந்தனை மரபும் தப்பியதாகத் தெரியவில்லை. ஆளும் வர்க்கங்களின் கருத்துகளே தமிழ்ச் சிந்தனையின் ஆதியும் அந்தமாய் காட்டப்படும் போக்கு, இன்றும் அதிகாரத்தில் இருக்கிறது. இந்தப் பழமைப் பிடிப்பு, காலமாற்றங்களை மறுதலிக்கும் ஒரு நோய் மனோபாவத்தை உண்டாக்கி வருகிறது.

சாதியொழிந்த விடுதலை பெற்ற மானுடம் என்ற கோட்டில் அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்தே செல்லுவதை நாம் பார்க்க முடியும். இப்படி மானுட விடுதலையை முன்னிறுத்திய இந்தச் சிந்தனையாளர்கள் மீது விமர்சனம் என்ற பெயரில், அவதூறுகளும் கண்டனங்களும் எழுவது புதிதல்ல. இத்தகைய அவதூறுகளுக்கு பதிலுரையாக பெரியாரியத்தின் பகுத்தறிவு, தன்மானம், பெண் விடுதலை, சமத்துவம், தமிழர் விடுதலை முதலிய பன்முகப் பார்வைகளின் தொகுப்பு நோக்காக “பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ என்ற நூலை சுப. வீரபாண்டியன் எழுதியுள்ளார்.

“இந்திய விடுதலையும் பகத்சிங்கும்’ நூலுக்குப் பிறகு சுபவீயின் ஆய்வு முயற்சியுடன் கூடிய நூலாக இந்நூல் அமைந்திருக்கிறது. அய்ந்து இயல்களாக இயங்கும் இந்நூலில் 2, 3, 4 இயல்களில் பெரியாரியத்தின் தேசியப் பார்வை, பல்வேறு தரவுகளுடனும் தர்க்கங்களுடனும் விளக்கப்படுகிறது. “தேசிய இனச் சிக்கலும் தமிழ்த் தேசியம்’ என்ற முதல் இயலும், “தமிழ்த் தேசியம் இன்றைய சூழலில்’ என்ற இறுதி இயலும், நூல் நுதலும் பொருளுக்கான முன்னுரைகளாகவும், முடிவுரைகளாகவும் அமைந்திருக்கின்றன. முதல் இயலில், தமிழ்த் தேசியம் என்ற கருத்தாக்கம் எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது என்பதை இலக்கியத்தரவுகளிலிருந்து கட்டமைக்கிறார். இக்கட்டமைப்பு, மரபுவழிப்பட்ட புலவர்களின் பார்வையை ஒத்தே தொடக்கத்தில் செல்கிறது.

சமண பவுத்தர்களை தமிழறியாதவர்கள் என்று சைவக் குரவர்கள் சொல்வதை சுபவீ சுட்டிச் செல்கிறார். இந்தக் கூற்றின் மீது வரலாற்று வகைப்பட்ட திறனாய்வைச் செய்திருக்க வேண்டும். ஏனெனில், அய்ம்பெருங்காப்பியங்களும், அய்ந்து இலக்கணங்களும் சமண பவுத்தர் தொட்டதனால் தோன்றியவை. அதற்கும் அப்பால், வேள்வியாலும் வேதங்களாலும் அதிகாரத்தில் அமர்ந்து வைதீகத்துக்கு அறைகூவல்களாகவும் விளங்கியவை சமண பவுத்தங்களே. சைவ வைணவத்தின் பெயரால், பார்ப்பனிய அதிகாரம் தன்னைப் பதுக்கிக் கொண்டது தமிழ்ச் சமுதாயம் இன்றளவும் உணராமல் இருக்கிற அறியாமையாகும்.

இந்நூலின் தலைப்பு, இரண்டு வகையான விளக்கங்களைப் பெறுதல் வேண்டும். “பெரியாரின் இடதுசாரித் தமிழ்’ என்றும், “பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ என்றும் அவ்விளக்கங்கள் அமைதல் வேண்டும். இடதுசாரித் தமிழ் என்பது, மொழிவகைப்பட்ட, பண்பாட்டு வகைப்பட்ட அனைத்து மூடத்தனங்களுக்கும் எதிராக நிற்பது. மொழித் தோற்றம் என்பதை தெய்வீகம் சார்ந்ததாக சைவம் உள்ளிட்ட வைதீக நோக்கர்கள் கதை கட்டிய காலத்தில், மொழிக்கு அறிவியல் அடிப்படையில் விளக்கம் சொன்னது சமணம் பவுத்தம்தான். “மொழி முதற்காரணமாம் அணுத்திரள் ஒலி எழுத்து என்பது சமணர் தேற்றம்’ அதனால் பெரியாரின் இடதுசாரித் தமிழ் குறித்த தேடுதலுக்குச் சமண பவுத்த சமயங்களின் பங்களிப்புதான் பேரளவுக்கு உதவும்.

எனினும், தமிழ் உணர்வை சைவ மரபில் தேடும் ஆய்வாளர்கள், சமணம் பவுத்தம் தமிழுக்கும், கலைகளுக்கும் எதிராக நின்றன என்ற கூற்றை தமிழ்ச் சிந்தனை மரபில் உடுக்கடித்துப் பதிய வைத்துள்ளனர். சமயம் தவிர்த்த மொழியை முன்னிறுத்திய பெரியாரின் பார்வையை இன்றளவும் தனித்தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும் புறந்தள்ளுவதற்கான கால வித்து இங்குதான் அமைந்திருக்கிறது.

விரிவான இந்த இயலில் வேறொரு செய்தியும் பேசப்பட்டிருக்க வேண்டும். செவ்விலக்கிய தமிழ் மரபுக்கு உழைக்கும் மக்கள் வழங்கிய பங்களிப்பு, இன்னும் விரிவாக ஆராயப்பட வேண்டும். வடமொழியும், தெலுங்கும், உருதும், ஆங்கிலம், பிரெஞ்சும் அதிகார மொழிகளாகக் கோலோச்சிய காலங்களில், பீடத்திலிருந்தோர் எல்லாம் இம்மொழிகளின் அன்பர்களாக நின்றார்கள். பக்தி சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய புலவர்களுக்கு, வடமொழியின் இருப்பும் பயன்பாடும் உறுத்தியதாகத் தெரியவில்லை.

இக்கால கட்டங்களில் எல்லாம், தமிழின் தனித்தன்மையைக் காப்பாற்றி நின்றவர்கள் உழைக்கும் வெகுமக்களே. அவர்கள் “நீரை’ “ஜலம்’ ஆக்கவில்லை. “சோற்றை’ “சாதம்’ ஆக்கவில்லை. செவ்விலக்கியங்களாக அவர்கள் எதையும் வழங்கவில்லைதான். இருந்தாலும், முத்தமிழின் இசையை அவர்கள் வயல்களிலும் வாய்க்காலிலும், கடலிலும் கரையிலும், தொட்டிலிலும் கட்டிலிலும் வளர்த்தார்கள். ஒருபோதும் எழுத்தாக்கப்படாத நாடகத்தை, தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் கூத்தாக ஆடினார்கள்.

இந்நூலில் மிகச் சரியாக விமர்சிக்கப்படும் ம.பொ. சிவஞானத்தின் வடமொழி ஆதரவு, அவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து நின்றதிலோ, தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியதிலோ தோற்றம் கொள்ளவில்லை. பழஞ் சைவ மரபின் புதுக் கொழுந்துதான் சிவஞானம் என்பதைச் சேர்த்துச் சுட்ட வேண்டும். தமிழ்த் தேசியத்தின் தோற்றுவாய்களை சுப. வீரபாண்டியன் பெருமுயற்சி செய்து தொகுத்திருக்கிறார். எனினும், மேற்சொல்லப்பட்ட திறனாய்வுப் பார்வைகள், இன்னும் வாய்க்கவிருக்கும் கருத்துகள், இந்த இயலுக்கு வலுவூட்டும். உ.வே.சா.வின் பதிப்பு முயற்சிகளை நன்றியோடு நினைவுகூறும் சுபவீ, அவரின் வடமொழிச் சார்பையும் சாதியத் தள்ளாட்டத்தையும் தெளிவாகவே அடையாளம் காட்டுகிறார். இத்தகைய அடையாளம் காட்டும் முயற்சிகள்தாம், ஒரு இடதுசாரித் தமிழ்ப் பார்வையை அடைய உதவும்.

மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும், உலக இடதுசாரிகள் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றன. ருஷ்ய மொழியின் தனித்துவத்திலும் தூய்மையிலும் அக்கறை கொண்டவர் லெனின். அது அவரது தாய்மொழி. ஆனால், ருஷ்ய மொழி ருஷ்யா முழுவதுக்கும் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டபோது, அதை லெனின் மறுத்தார். “சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்து ஒரேயொரு ஆட்சி மொழியை கொண்டது அல்ல. ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியன் ஆகிய மூன்று ஆட்சி மொழிகளைப் பெற்றுள்ளது. இதனால், அதற்கு எந்தக்கேடும் ஏற்பட்டு விடவில்லை; நன்மையே உண்டாகி இருக்கிறது'’ (”தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க தேசியவாதம்’ பக்கம்: 20).

தமிழின் மீது சமஸ்கிருத அதிகாரத்தை எதிர்த்தது போலவே, தமிழின் சைவ, வைணவ சாதிய அதிகாரத்தையும் பெரியார் எதிர்த்தார். தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார். இதுதான் அவரை, மறைமலை அடிகள் போன்ற வலதுசாரித் தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. பெரியாரின் இந்தத் தனித் தன்மையை சுபவீ, எவ்விதத் தயக்கமுமின்றி விளக்குகிறார்:

“முதலாவதாக, தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்…'’ இது தொடர்பான கருத்துகளை இன்னும் நெடிதாகவே மேற்கோள் காட்டி ஏற்கும் சுபவீ, இதைத் தொடர்ந்து கூறுவது மிக மிகச் சரியானதாகும்: “தமிழரின் முன்னேற்றம், தமிழரின் மேம்பாடுபற்றியே காலமெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த பெரியார், அதற்குத் தடையாக எது வந்தாலும் அது தமிழாகவே இருந்தாலும் எதிர்த்தார் என்பதைத்தான் மேற்காணும் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன'’ (பக்கம்: 138).

பெரியாரின் மனித விடுதலையை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய பார்வைதான்,பெண் விடுதலை என்ற நோக்கில் திருக்குறளையும் கேள்வி கேட்க வைத்தது. வள்ளுவர் பாராட்டும் கற்பு, கணவனைத் தொழுதெழுதல், பரத்தைமையைக் கண்டித்தல் இவற்றையெல்லாம், எவ்விதத் தயக்கமின்றிப் பெரியார் கேள்வி கேட்டார். திருக்குறளை அவர் பாராட்டினார் என்பது உண்மைதான். ஆனால் நிபந்தனைகள் எதுவுமில்லாமல் பாராட்டவில்லை.

மொழி பற்றிய பெரியாரின் இந்த அணுகுமுறை, பெர்டோல்ட பிரக்ஸ்ட் என்ற ஜெர்மானிய நாடகாசிரியரின் ஒரு கூற்றை எனக்கு நினைவுபடுத்துகிறது: “ஜெர்மானிய மொழியை நாம் சலவை செய்ய வேண்டும்.'’ இதை நான் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறேன். அத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்கிறேன்: “தமிழ் மொழியையோ வெறும் சலவை செய்தால் போதாது; அதை வெள்ளாவிப் பானையில் வைத்து அவிக்க வேண்டும்.'’

பெரியாரின் ஆங்கில ஆதரவு, தமிழன்பர்களால் கண்டனம் செய்யப்படுகிறது. இது குறித்தும் சுபவீ தெளிவான வாதங்களை முன்வைக்கிறார். இதில் சுபவீ, மறைமலை அடிகளின் ஆங்கில நாட்குறிப்பு, தேவநேயப் பாவாணரின் ஆங்கிலம் குறித்த கருத்து (பக்கம்: 142), “தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தெனக் கற்க ஆங்கிலம் பெறுகவே'’ என்று பெருஞ்சித்திரனாரைக் காட்டும் மேற்கோள் ஆகியவை, ஆங்கிலத்தை தன்மைப்படுத்தும் நோக்கிலானவை அல்ல; தமிழுக்குரிய தலைமையை உறுதிப்படுத்த வேண்டும், அதே நேரத்தில் உலகத் தொடர்புகளை மேம்படுத்த ஆங்கிலத்தின் தேவையை மறுதலிக்க முடியாது என்ற நோக்கில்தான்.

இந்நூலின் மிக முதன்மையான பகுதி “பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்’ என்பதுதான். இதில் பெரியாரின் தமிழ் குறித்த பார்வை, திராவிடம் - திராவிட நாடு என்று முதலில் கூறினாலும், அது தமிழ்த் தேசியமாகவே உருவான தன்மை, தனித் தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளோடு பெரியார் முரண்பட்ட நூலை, பெரியாருக்கு முந்தியே தமிழின உணர்வு, சமூக விடுதலை ஆகியவற்றை முன்மொழிந்த அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு, அதன் நிறை குறைகள், இப்படி நிறையவே பெரியாரியத்தை வகைப்படுத்திக் கொண்டு வந்தவர், பெரியாரியத்தின் சாரமாகப் பின்வரும் முடிவைக் கண்டடைகிறார்:

“… சமூக மொழித் தேசியவாதத்தை, இடதுசாரித் தன்மையுடன் முன்னெடுத்த பெரியார், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டினையும் தமிழ்த் தேசியத்தின் இரு கூறுகளாகக் காலம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார்.'’

இத்துடன் கூட ஒன்றையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். புராண மாயைகளை மட்டுமின்றி, தமிழ்த் தொன்மை குறித்த மாயைகளையும் உடைத்த முதல் சிந்தனையாளர் பெரியார்தான். தமிழ் மாயைகளை மறுத்த பெரியாரை, தமிழ்த் தேசிய மறுப்பாளராகவே சித்தரிக்க முயலும் அ. மார்க்சையும் உரிய வகையில் சுபவீ மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பெரியார் எழுதியதையும் பேசியதையும் போராடியதையும் சுபவீ விரிவாகவே எழுதியுள்ளார். ரவிக்குமாரின் பெரியார் மறுப்பு வாதங்களுக்கு இப்பகுதியும் வலுச்சேர்க்கும். பெரியார், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்பது இல்லாத ஒன்று என்றும் கருணானிதி போன்றோர் சந்தப்ப வாதிகள் என்று நீர் தான் எழுதுனீர் ,இப்போது திமுகா ஆட்சி பிடித்தது என்கிறீர்.அன்ணா ஏன் பெரியாருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுக்க வேண்டும்.திராவிடக் கட்சிகள் பெரியாரிடம் இருந்து பிரிந்தால் இன்னும் ஏன் பெரியார் படத்தையும் அவர் சொன்ன வற்றையும் சொல்லிக் கொண்டு இருகிறார்கள்.ஏன் பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் செய்கிறார்கள்? ஏன் பெரியாருக்கு விழா எடுகிறார்கள் ஏன் அவருக்கு அஞ்ஞலி செய்கிறார்கள்?திராவிடம் என்பதை அப்போ யார் முன் மொழிந்தார்கள்?அண்ணா எங்கிருந்து வந்தார்?

திராவிடம் இல்லை திராவிடக் கட்சிகள் எல்லாம் மோசடி நாம் இந்துக்கள் எமக்கு இந்தியாவில் இந்துக்கள் ஆதரவு செய்வார்கள் என்று எழுதுனீர் இப்போது ஏன் உங்கள் இந்துக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு ஏன் இன்னும் பதில் இல்லை?

ஈழ ஆதரவு விளம்பரதுக்கு என்றால் ஏன் அவர்களிடம் ஆதரவு கோருகிறீர்கள்? ஏன் இந்த விளம்பரத்தைக் கூட பாஜாகவோ காங்கிரசோ இல்லை சஙகர மடமோ செய்ய வில்லை?ஈழ ஆதரவு விளம்பரம் ஏன் அவர்களுக்குத் தேவை? முன்னர் இன ரீதியான ஆதரவு என்றீர் இப்போது விளம்பரம் என்கிறீர் நிலையாக எதாவது உம்மிடம் இருந்து வருமா?

திராவிடம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று எங்காவது சொன்னமா? திராவிடம் என்பது பெரியாருக்கு சொந்தமானதல்ல. திராவிடக் கோட்பாடுகள் பெரியார் தனது அரசியல் தேவைக்காகப் பாவித்துக் கொண்டார்.

அண்ணா பெரியாரின் வாலாய் இருந்து பின்னர் முரண்பட்டார் விலகினார். பெரியாரின் பேச்சுக்கும் செயலுக்குமிடையில் வேறுபாடுகள் இருந்ததால் அவரைவிட்டு விலகினார் அண்ணா. திமுக வை அமைத்தார். பின்னர் தேர்தலிலும் நின்று வென்றார்கள் திமுகவினர். பெரியாரின் கொள்கை முழக்கங்களால் தான் கவரப்பட்டு அரசியலுக்கு நுழைந்ததற்கு நன்றியாக பெரியாருக்கு முதல்வர் பதவியளிக்க முன்வந்தார். அதற்காக அவர் பெரியாரை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியாருடன் முரண்பாடுகள் இருந்த போதும் அதைப் பெரிதுபடுத்தாமல் செயற்பட்டார். பெரியாரின் கூட்டத்தில் இருந்தே பெரியாருடன் முரண்பட்டிருக்கிறார்கள் என்பது பெரியாரின் செயற்பாடுகளில் தெளிவற்ற தன்மைகள் இருந்துள்ளமையைக் காட்டுகிறது. அந்த ஒரு வாய்ப்பே பெரியாருக்கு கிடைத்த முதலும் கடைசியுமான சந்தர்ப்பம். தனது இயலாமை கருதியே பெரியார் பொறுப்பை ஏற்கவில்லை. அத்தோடு பெரியாருக்கு மக்கள் எதிர்ப்பும் இருந்தது. அதன் பின்னர் பெரியாரின் கட்சிக்கு மக்கள் ஒருபோதும் ஆணை வழங்கவே இல்லை தங்கள் பிரதிநிதிகளாக இருக்க.

திமுக அதிமுக மதிமுக பாமக தேமுதிக எவை என்றாலும் பெரியாரின் சில கொள்கைகளை தங்களின் அரசியல் தேவைக்காக உச்சரிக்கின்றனவே தவிர அவை பெரியார் வழியில் நடக்கும் கட்சிகள் அல்ல. தமிழகத்தில் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது. மனைவி என்ற நிலை கூடாது. அவள் எவனோடும் விரும்பிறபடி வாழலாம்..தெருநாய் போல் ஆணும் பெண்ணும் வாழலாம் என்று பெரியார் போதித்ததைச் சட்டம் ஆக்குவதாக இந்தக் கட்சிகள் கூறமுடியுமா?????! கூறினால் அடுத்த தேர்தலிலேயே முகவரி இல்லாமல் போவார்கள். சாதி ஒழிப்பு என்று சொல்லி பிராமணர்களை ஒழிக்க திட்டமிட்ட பெரியாரை வன்னியர்களுக்கு கட்சி நடத்தும் பாமக ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றால்...அது வன்னியர் கட்சியாயிற்று என்று அது பெரியார் கொள்கைக்கு முரணே என்று கைவிட்டுத்தான் போய்விடுவார்களா?

ஆக பெரியார் பெரிய முரண்பாடு என்றால் இவர்கள் சிறிய முரண்பாடுகள். அது அவர்களின் அரசியல் தளம். அதை நாம் விமர்சிக்க முடியாது. அவர்கள் வன்னியர்களோ பெரியார் வால்பிடிகளோ பிராமணர்களோ அதுவல்ல ஈழத்தமிழரின் தேவை. அவர்கள் தங்களுக்குள் எப்படியாவது பிரிந்து நின்று கட்சி வளர்க்கட்டும். ஆனால் தமிழர்கள் என்ற வகையில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பூர்வீகத் தொடர்புகளின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதில் அவர்களுக்குள்ள தார்மீகக் கடமையை மறுக்க முடியாது என்ற நிலையிலேயே ஈழத்தமிழர்கள் அவர்களின் அரசியலுக்கு அப்பால் நின்று ஆதரவுக் குரல் எழுப்புகின்றனர். அவர்களும் ஈழத்தமிழர்களின் அரசியலுக்குள் நுழையாமல் வெளியில் இருந்து தார்மீக ஆதரவைத் தந்து வருகின்றனர். அது என்றும் வரவேற்கப்படும். மதிக்கப்படும். இதில் பெரியார் என்ற வர்க்க வெறியரைச் சம்பந்தப்படுத்தி தமிழகக் கட்சிகளின் ஆதவுக்கு பெரியார் கொள்கைதான் காரணம் என்ற தோற்றப்பாட்டை உங்களின் தேவைகளுக்காக நிறுவ முயல்வதை நிறுத்துங்கள். :icon_idea:

காங்கிரஸ் பாஜக நேரடி ஆதரவு அளிக்க நினைத்தாலும் அளிக்க முடியாது. காரணம் அவை இந்திய தேசியக் கட்சிகள். திமுக அதிமுக போன்று மாநிலக் கட்சிகள் அல்ல. திமுக உத்தரப்பிரதேசத்தில் போய் நாடாளுமன்றத் தேர்த்தலில் நிற்க முடியுமா?? இல்லை. ஆனால் காங்கிரஸ் பாஜக இந்தியா பூரா எங்கே என்றாலும் நிற்க முடியும். எனவே அவர்கள் இந்திய தேசியம் முழுவதும் மக்களின் எதிர்பார்ப்புக்களை திருப்தி செய்வதில் தான் கவனம் செலுத்துவர். அந்த வகையில் அவர்களின் நேரடி ஆதரவு என்பது இந்தியப்படைகளுடனான யுத்தம் ராஜீவ் துன்பியலுக்குப் பிறகு சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு முதல் வாழைப்பாடி பண்டுருட்டி சிதம்பரம் சுப்பிரமணியம் சுவாமி கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அதை நீங்கள் இல்லை என்று மறுப்பீர்களா..??!

சமகால அரசியல் களத்துக்கு ஏற்ப நேரடி ஆதரவு நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்த முடியாமல் இருப்பதானது அவர்களின் ஆதரவு இல்லை என்று முற்றாகத் தீர்மானித்துவிட முடியாத அளவுக்கே உண்டு. ஆனால் பிராந்திய திராவிடக் கட்சிகளுக்கும் இதர கட்சிகளுக்கும் அந்த நிலையில்லை என்றாலும் அவர்களும் கூட்டணி அரசியல் நடத்துவதால் தேசியக் கட்சிகளின் வாய் அசைவோடுதான் ஆதரவுக் குரல் எழுப்புகின்றனர். மீறி எழுப்பினால் வைகோ போன்று உள்ளேதான் இருக்க வேண்டி வந்திருக்கும். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலான் மற்றும் இவர் போன்றவர்களே,

அவர்கள் தேனியென்றால் நீங்கள் தோட்டக்காரனாக முயற்சிக்க வேண்டாம்!

சிந்திக்கத் தொடங்கினால் கேள்விகள் தோன்றும்!

கேள்விகள் தோன்றினால் கேட்கவிடுங்கள்!

உங்களுக்கு பதில் தெரியாவிட்டால் பரவாயில்லை!

தவறுகளை யார் செய்தாலும் தட்டிக் கேளுங்கள்.

அதற்காக துரோகி என்று முதுகில் முத்திரை குத்தாதீர்கள்.

நீங்களே எதிரிகளை உருவாக்கி பின்னர் அவர்களுடன் போராடி காலத்தை கடத்தாதீர்கள்.

உங்களை போலவே அவர்களும் பதிலுக்கு புலிவால் என்று கூறிவிட்டு பதில் சொல்லாமல் தப்பிவிடுகின்றனர்.

திராவிடம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று எங்காவது சொன்னமா? திராவிடம் என்பது பெரியாருக்கு சொந்தமானதல்ல. திராவிடக் கோட்பாடுகள் பெரியார் தனது அரசியல் தேவைக்காகப் பாவித்துக் கொண்டார்.

அண்ணா பெரியாரின் வாலாய் இருந்து பின்னர் முரண்பட்டார் விலகினார். பெரியாரின் பேச்சுக்கும் செயலுக்குமிடையில் வேறுபாடுகள் இருந்ததால் அவரைவிட்டு விலகினார் அண்ணா. திமுக வை அமைத்தார். பின்னர் தேர்தலிலும் நின்று வென்றார்கள் திமுகவினர். பெரியாரின் கொள்கை முழக்கங்களால் தான் கவரப்பட்டு அரசியலுக்கு நுழைந்ததற்கு நன்றியாக பெரியாருக்கு முதல்வர் பதவியளிக்க முன்வந்தார். அதற்காக அவர் பெரியாரை அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியாருடன் முரண்பாடுகள் இருந்த போதும் அதைப் பெரிதுபடுத்தாமல் செயற்பட்டார். பெரியாரின் கூட்டத்தில் இருந்தே பெரியாருடன் முரண்பட்டிருக்கிறார்கள் என்பது பெரியாரின் செயற்பாடுகளில் தெளிவற்ற தன்மைகள் இருந்துள்ளமையைக் காட்டுகிறது. அந்த ஒரு வாய்ப்பே பெரியாருக்கு கிடைத்த முதலும் கடைசியுமான சந்தர்ப்பம். தனது இயலாமை கருதியே பெரியார் பொறுப்பை ஏற்கவில்லை. அத்தோடு பெரியாருக்கு மக்கள் எதிர்ப்பும் இருந்தது. அதன் பின்னர் பெரியாரின் கட்சிக்கு மக்கள் ஒருபோதும் ஆணை வழங்கவே இல்லை தங்கள் பிரதிநிதிகளாக இருக்க.

திமுக அதிமுக மதிமுக பாமக தேமுதிக எவை என்றாலும் பெரியாரின் சில கொள்கைகளை தங்களின் அரசியல் தேவைக்காக உச்சரிக்கின்றனவே தவிர அவை பெரியார் வழியில் நடக்கும் கட்சிகள் அல்ல. தமிழகத்தில் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது. மனைவி என்ற நிலை கூடாது. அவள் எவனோடும் விரும்பிறபடி வாழலாம்..தெருநாய் போல் ஆணும் பெண்ணும் வாழலாம் என்று பெரியார் போதித்ததைச் சட்டம் ஆக்குவதாக இந்தக் கட்சிகள் கூறமுடியுமா?????! கூறினால் அடுத்த தேர்தலிலேயே முகவரி இல்லாமல் போவார்கள். சாதி ஒழிப்பு என்று சொல்லி பிராமணர்களை ஒழிக்க திட்டமிட்ட பெரியாரை வன்னியர்களுக்கு கட்சி நடத்தும் பாமக ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றால்...அது வன்னியர் கட்சியாயிற்று என்று அது பெரியார் கொள்கைக்கு முரணே என்று கைவிட்டுத்தான் போய்விடுவார்களா?

ஆக பெரியார் பெரிய முரண்பாடு என்றால் இவர்கள் சிறிய முரண்பாடுகள். அது அவர்களின் அரசியல் தளம். அதை நாம் விமர்சிக்க முடியாது. அவர்கள் வன்னியர்களோ பெரியார் வால்பிடிகளோ பிராமணர்களோ அதுவல்ல ஈழத்தமிழரின் தேவை. அவர்கள் தங்களுக்குள் எப்படியாவது பிரிந்து நின்று கட்சி வளர்க்கட்டும். ஆனால் தமிழர்கள் என்ற வகையில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் பூர்வீகத் தொடர்புகளின் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதில் அவர்களுக்குள்ள தார்மீகக் கடமையை மறுக்க முடியாது என்ற நிலையிலேயே ஈழத்தமிழர்கள் அவர்களின் அரசியலுக்கு அப்பால் நின்று ஆதரவுக் குரல் எழுப்புகின்றனர். அவர்களும் ஈழத்தமிழர்களின் அரசியலுக்குள் நுழையாமல் வெளியில் இருந்து தார்மீக ஆதரவைத் தந்து வருகின்றனர். அது என்றும் வரவேற்கப்படும். மதிக்கப்படும். இதில் பெரியார் என்ற வர்க்க வெறியரைச் சம்பந்தப்படுத்தி தமிழகக் கட்சிகளின் ஆதவுக்கு பெரியார் கொள்கைதான் காரணம் என்ற தோற்றப்பாட்டை உங்களின் தேவைகளுக்காக நிறுவ முயல்வதை நிறுத்துங்கள். :icon_idea:

காங்கிரஸ் பாஜக நேரடி ஆதரவு அளிக்க நினைத்தாலும் அளிக்க முடியாது. காரணம் அவை இந்திய தேசியக் கட்சிகள். திமுக அதிமுக போன்று மாநிலக் கட்சிகள் அல்ல. திமுக உத்தரப்பிரதேசத்தில் போய் நாடாளுமன்றத் தேர்த்தலில் நிற்க முடியுமா?? இல்லை. ஆனால் காங்கிரஸ் பாஜக இந்தியா பூரா எங்கே என்றாலும் நிற்க முடியும். எனவே அவர்கள் இந்திய தேசியம் முழுவதும் மக்களின் எதிர்பார்ப்புக்களை திருப்தி செய்வதில் தான் கவனம் செலுத்துவர். அந்த வகையில் அவர்களின் நேரடி ஆதரவு என்பது இந்தியப்படைகளுடனான யுத்தம் ராஜீவ் துன்பியலுக்குப் பிறகு சாத்தியமில்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. அதற்கு முதல் வாழைப்பாடி பண்டுருட்டி சிதம்பரம் சுப்பிரமணியம் சுவாமி கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். அதை நீங்கள் இல்லை என்று மறுப்பீர்களா..??!

சமகால அரசியல் களத்துக்கு ஏற்ப நேரடி ஆதரவு நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்த முடியாமல் இருப்பதானது அவர்களின் ஆதரவு இல்லை என்று முற்றாகத் தீர்மானித்துவிட முடியாத அளவுக்கே உண்டு. ஆனால் பிராந்திய திராவிடக் கட்சிகளுக்கும் இதர கட்சிகளுக்கும் அந்த நிலையில்லை என்றாலும் அவர்களும் கூட்டணி அரசியல் நடத்துவதால் தேசியக் கட்சிகளின் வாய் அசைவோடுதான் ஆதரவுக் குரல் எழுப்புகின்றனர். மீறி எழுப்பினால் வைகோ போன்று உள்ளேதான் இருக்க வேண்டி வந்திருக்கும். :rolleyes:

இந்தியத் தேசியக்கட்ச்சிகள் என்றால் என்ன? இவை ஏன் தமிழர்களைன் பால் கரிச்னை அற்றவையாக இருகின்றன? ஏன் திராவிடக் கட்ச்சிகளுக்கு மட்டும் கரிசனை?

ஏன் விடுதலைப்புலிகள் இந்திய இராணுவத்துடன் போர் புரிந்தார்கள்? இந்தியா எமக்கு எதிராகத் திரும்பியதன் பின்னர் தான் ராஜிவ் படு கொலை நடை பெற்றது, அதற்கு முன்னரே நீர் கூறும் பார்ப்பனர்கள் புலிகளின் மேல் பாயத் தொடங்கி விட்டனர்.இந்திய மத்திய அரசு தனது சுய லாபத்துக்காக ஈழப்போராட்டத்தை ஆரம்ப்பத்தில் ஊக்குவித்தது என்பது தான் உண்மையான வரலாறு.இதனை மறுதலிக்கும் ஈழத்தமிழர் நீராகத் தான் இருக்கும்.ஏன் இந்தியா தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்திற்கு எதிராக இருக்கிறது?இந்தியத் தேசியம் என்றால் என்ன? ஏன் இந்தியாவில் மொழி வாரி மானிலங்கள் இருக்கின்றன?

பெரியார் திராவிட அரசியல் இயக்கத்தைக் கட்டாமல் இருந்தால் இன்று திராவிடக் கட்சிகள் இருக்குமா?

காங்கிரசும் பாஜாகுவும் ஈழத் தமிழர்களுக்கு உதவிக் கரம் நீட்டி இருக்குமா இல்லை சிங்களத்தவரோடு சேர்ந்து எம்மை அழித்து ஒழித்து இருக்குமா? இந்தியா எம்மீது இன்று பாயாது இருப்பதற்குக் காரணம் தமிழ் நாட்டில் உள்ள திராவிட அரசியல் அன்றி வேறொன்றும் இல்லை.இன்று மத்திய அரசு கூட்டரசாக , பலமற்று இருக்கிறது. இல்லாது விடில் தமிழ் நாட்டு அரசு நிர்க்கத்தியான நிலையில் இருந்திருக்கும். நாமும் நாதியற்று இருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி அண்ணாமாரே...

இப்ப ஒரு புதுச் சந்தேகம்....

இந்திய மத்திய அரசை மீறி தமிழக மக்களோ அல்லது மாநில அரசோ செய்யக்கூடிய நடவடிக்கைகள் என்ன?

அல்லது அவர்களால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் இந்திய மத்திய அரசின் கொள்கைய மாற்றும் என்று தலைவர் எதிர்பார்கிறாரோ?

இதில் எதுவுமே சாத்தியப்பாடானதாக தெரியவில்லையே?

நடமுறையில் இந்தியா இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளை அதிகரித்துக் கொண்டு தானே போகிறது?

இந்தியா இறுதியா தனது ராணுவத்தையும் விமானப்படையையும் அனுப்பி குண்டு போடாதது மட்டுமே பாக்கி!

  • கருத்துக்கள உறவுகள்

certenly tamilnadu politicians can change the central government if they really want to help tamil Eelam tamils.because there is 40 members from dmk in loaksaba.

  • கருத்துக்கள உறவுகள்

I HAVE BEEN READING YOUR ARTICLE IN VARIOUS SITES.WHAT YOU HAVE BEEN DOING IS CRITIZIZING THE LTTE AND TAMILS.BUT NEVER EVER SCURNIZING.THAT WHY PEOPLE LIKE YOU CALLED A TRAITOR.THEY ARE SUCKS.

  • கருத்துக்கள உறவுகள்
Yes, you r RIGHT as per your capacity!
  • கருத்துக்கள உறவுகள்

DON'T THINK YOU ARE GOOD ANALIST. ACUTULLY YOU ARE A JERK.

:D

என்னடா இது வெடிகுண்டு கொண்டுவந்த லாறி பிடிபட்டதென்று பார்த்தால் இஞ்.ச ஆளாளுக்கு வெடி குண்டே வைக்கிறாங்களே.

ஆமாம்.

இவர்களின் இம்சை தாங்க முடியவில்லையப்பா. களத்தினுல் எங்கே போனாலும் பெரியார் புராணமும், பெரியார் எதிர்ப்பு புராணமுமாக இருக்கிறது. இதை எப்ப தான் நிப்பாட்ட போரிங்க? இல்லாத மதசண்டைய்ய உருவாக்க நிக்கிராங்க. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.