Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனவேதனை அளிக்கிறது: மஹிந்த மனவருத்தம்

Featured Replies

மனவேதனை அளிக்கிறது: மஹிந்த மனவருத்தம்
 

article_1446180393-mr.jpg

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவுக்கு வந்து செல்கின்றமை தனக்கு உளத் துன்புறுத்தலாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவுக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களிடமே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு நேற்று வியாழக்கிழமை சமுகமளித்திருந்தார்.

சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே மஹிந்த அழைக்கப்பட்டிருந்தார்.

இவர், ஆணைக்குழுவின் முன்னிலையில், கடந்த 15ஆம் 16ஆம் திகதிகளிலும் ஆஜராகியிருந்தார். அவர், இன்று வெள்ளிக்கிழமையும் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கப்படவேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பாக சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் உள்ளக கணக்காளர் மஞ்சுள அழகியவன்னவிடம் இதன்போது சாட்சியம் பதியப்பட்டது.

சுயாதீனத் தொலைக்காட்சி சேவையின் முன்னாள் தலைவர் அநுர சிரிவர்த்தன, பொது முகாமையாளர் அருண விஜேசிங்க, பிரதிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) உபாலி ரஞ்சித் மற்றும் சந்தைப்படுத்தல் பிரதி முகாமையாளர் திலிப் பிரியந்த விக்கிரமசிங்க ஆகியோரும் நேற்று  ஆஜராகியிருந்தனர்

- See more at: http://www.tamilmirror.lk/157882/மனவ-தன-அள-க-க-றத-மஹ-ந-த-மனவர-த-தம-#sthash.82a7FrtH.dpuf
  • தொடங்கியவர்
வாக்குமூலமளிக்க...
 
29-10-2015 04:36 PM
Comments - 0       Views - 170

article_1446117209-2.jpg

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று வந்தபோது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு  பிரதீப் பத்திரண)

article_1446117225-4.jpg

article_1446117236-5.jpg

article_1446117253-6.jpg

article_1446117263-20.jpg

article_1446117273-22.jpg

article_1446117283-23.jpg

article_1446117292-24.jpg

- See more at: http://www.tamilmirror.lk/157835/வ-க-க-ம-லமள-க-க-#sthash.fwM0Zysj.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கே மன வருத்தப்பட்டால்.....இன்னும் உள்ளே போடாமல் வைத்திருப்பதற்குச் சிங்கள மக்களுக்கு நன்றி கூற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வருந்துவது, அவரைத் தொடர்ந்தும் ஆட்சியில் அமர வைத்து அதன் மூலம் மக்களைப் பேய்க்காட்ட நினைத்த தரப்புக்களுக்கும் வருத்தமளிக்கலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.