Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சித் தலைமையை எமக்கே வழங்க வேண்டும் : அடம்பிடிக்கிறது மகிந்த அணி

Featured Replies

எதிர்க்கட்சித் தலைமையை எமக்கே வழங்க வேண்டும் : அடம்பிடிக்கிறது மகிந்த அணி
எதிர்க்கட்சித் தலைமையை எமக்கே வழங்க வேண்டும் : அடம்பிடிக்கிறது மகிந்த அணி

எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமக்கே வேண்டும் என மஹிந்த ஆதரவு அணி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்தும் கோரிவரும் மஹிந்த ஆதரவு அணி, இந்த விடயத்தில் சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு வலியுத்தினார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,

நாடாளுமன்றத்தில் நாம் 48 பேர் இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணைந்து 22 பேர் தான் இருக்கின்றனர். இதனை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.ஆனால், சபாநாயகரான கரு ஜயசூரிய யதார்த்தத்தைப் புரிந்து செயற்படுகின்றாரில்லை.

இது நாடாளுமன்றத்தின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவேண்டும். மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கவேண்டும். இந்த நிலைமையை மாற்றவேண்டும். இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என சபாநாயகரிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

http://onlineuthayan.com/news/2177

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுடைய உரிமைகளுக்கும் நாங்கள் மதிப்பளித்து பாதுகாக்கிறோம் என்று சிங்கள அரசு உலகத்திற்கு படம்போட்டுக் காட்டுவதற்கு அளித்துள்ள சந்தர்ப்பத்தினைத் தவிர.... எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட திருவாளர் சம்பந்தன் அவர்களால் இதுவரை தமிழர்களுக்குக் கிடைத்த நன்மைகள் என்ன ?? இந்தப் பதவி இருந்தாலென்ன? போனால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

திரு பஞ்ச்அவர்களே, கடந்த எழுபது வருட வரலாற்றில் எல்லா தலைமைப் பதவிகளும் எமது விடுதலை அஞ்சலோட்டத்துக்கு பங்களிப்பு செய்துள்ளன இன்னும் யாரும் இந்த அஞ்சல் ஓட்டத்தை முடித்து வைக்கவில்லை. நாம் செல்லும் வழி

சம்பந்தரிடம் விழுந்து முறிந்த ஆழணி மட்டுமே உள்ளது. பெரும் ஆயுத பலம் ஏதும் இல்லை. அவரே இப்பதான் எழுந்திருக்கிறார்... 

தொலைவு நண்பரே.எழவேமுடியாது என்றிருந்த மாபெரும் பெரும் தோல்விக்குப் பிறகு ஒரு இனக்கொலை அரசுடன் வெறும்கையோடு சமாளிக்க வேண்டிய சூழல். விழுந்து நொந்துபோயிருக்கும் மக்கள். சம்பந்தர் மக்கள் இந்த் தொல்விப் புதைகுழியில் இருந்து மக்கள் வெளியே வர உதவினாலே போதும். அடுத்த தலைமுறை அஞ்சலோட்டக்காரர்கள் வருவார்கள்.

பஞ்ச்.....நீங்கள் உங்கலால் இயன்ரதை செய்யுங்கள் எல்லோரும் சேர்ந்து எங்கள் வரலாற்றுத்  தேரை இழுப்போம்

 

 

 

 

மைத்திரி/ரணில் நரிகள் பதவி ஏற்ற பின் .. உள்நாட்டில் தமிழர்களின் வாய்களுக்கு பூட்டு போட(கடந்த மகிந்த அரசு போல் வன்முறை அல்லாமல்), செய்த இரு முக்கிய நகர்வுகளை செய்தார்கள் ... 

1. ஒன்று மனோ கணேசனுக்கு ஓர் உப்புச்சப்பைல்லாத அமைச்சர் கதிரை .... அக்கதிரைக்குள் சுருண்டு விழுந்தவர் ... இனி எழவே முடியாது ... கேட்டால் இன்று இலங்கை முழு ஜனநாயகத்து திரும்பி விட்டதாக அளக்கிறார் ..!

2. இரண்டாவது சம்பந்தருக்கு, சம்பந்தருக்கே புரியாத எதிர்க்கட்சி கதிரை! ஏதாவது அதிகாரங்கள்????? ... அது வரை ஏதாவது அறிக்கைகளையாவது விட்டு வந்த கூத்தமைப்பு, தம் வாய்களுக்கு தாமே பூட்டை போட்டு ... முடங்கியுள்ளனர்!

.... "இதயங்களால் ஒன்றுபட்டுவிட்டவர்கள்" நாம் விடுகிறோம், இந்த எதிர்க்கட்சி கதிரையை என்று சொன்னாலும் ... சிங்களம் எழவே விடாது!!!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லீம் பாராளு மன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பித்து அவர்களே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டாலும்
இதயத்தால் இணைந்தவர்களுக்குப் பாதிப்பு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.