Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசைப் புரிந்துகொள்வது எவ்வாறு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசைப் புரிந்துகொள்வது எவ்வாறு?

கலாநிதி சர்வேந்திரா

<p>சிறிலங்கா அரசைப் புரிந்துகொள்வது எவ்வாறு?</p>
 

 

புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் ஆட்சிமாற்றம் தொடர்பாக ஒருவகையான பரவச நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இருந்து வந்த கொடுங்கோலாட்சி காரணமாக ஆட்சிமாற்றம் அவர்களுக்கு இப் பரவசத்தினை ஏற்படுத்தியிருக்கக்கூடும். புதிய ஆட்சியாளர்களான மைத்திரி - ரணில் கூட்டு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருப்பதையும் உணர முடிகிறது. இதேவேளை சிறிலங்காவில் ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசு (State) மாறவில்லை என்பதனையும், சிறிலங்கா அரசு மாற்றத்துக்குள்ளாகாதவரை எந்த ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கப்போவதில்லை என்பதனையும் சுட்டிக்காட்டும் செயற்பாட்டாளர்கள் பலர் உள்ளனர். இப் பின்னணியில் இவ்வாரப் பத்தி சிறிலங்கா அரசினைப் புரிந்து கொள்வது எவ்வாறு என்பது தொடர்பான சில அவதானிப்புக்களைப் பதிவு செய்து கொள்கிறது.

சிறிலங்கா அரசு எத்தகையது என்பதனை புரிந்து கொள்வதற்கு நாம் சிறிலங்கா அரசு – சிறிலங்கா அரசாங்கம் இவை இரண்டையும் இவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். நம் மத்தியில் அரசு (State), அரசாங்கம் (Government) –இவை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடுகள் பற்றி அதிகம் சிந்தித்துக் கொள்ளாமல் இவற்றை ஒன்றுக்கொன்று மாறி மாறி பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. கோட்பாட்டு ரீதியில் அரசும் அரசாங்கமும் ஒன்றல்ல. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அரசின் ஒரு பகுதிதான் அரசாங்கம். அரசு என்பது ஒரு நாட்டின் ஆளுமை முறைமையின் ஒட்டுமொத்த வடிவமாக இருக்கும். ஒரு நாட்டின் சட்டங்களை இயற்றுவது, நாட்டை நிர்வகிப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, நீதி பரிபாலனம் செய்வது உட்பட ஒரு நாட்டை ஆளுகை செய்வதற்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்புக்களும் அரசின் அங்கங்களாக அமையும். ஜனநாயகப் பாரம்பரியத்தில் ஒரு நாட்டின் அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிமையப்படுவதனைத் தடுத்து அவற்றை வெவ்வேறு இடங்களில் பகிரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை நாம் பொதுவாக மூன்று வகையாகப் பகுத்துப் பார்க்கலாம்.

முதலாவது, ஒரு நாட்டை ஆளுகை செய்வதற்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம். இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சபையிடம் இருக்கும். சிறிலங்காவில் இது நாடாளுமன்றமாக இருக்கிறது. இரண்டாவது, நாட்டை ஆளுகை செய்யும் நிர்வாக இயந்திரம். இந்த நிர்வாக இயந்திரம்தான் அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. அதனை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூடுதலான ஆதரவைப் பெற்ற (பெரும்பான்மை அரசாங்கம்) அல்லது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மைப் பிரதிநிதிகளினால் நிராகரிக்கப்படாத (சிறுபான்மை அரசாங்கம்) கட்சியோ அல்லது கட்சிகளோ தலைமை தாங்கும். சிறிலங்காவில் சிறுபான்மை அரசாங்கம் அமைக்கும் நிலை இல்லை. மூன்றாவது, சுதந்திரமான ஒரு நீதி பரிபாலனத்துறை. மக்களின் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக நீதி நிர்வாக விழுமியங்களுக்கு உட்பட்டு ஒரு நாடு ஆளுகை செய்யப்படுவதனை உறுதிப்படுத்தும் ஒரு பொறிமுறையாக இது இருக்கும்.

இவையே பாரம்பரியமாக அரசின் அங்கங்களாகக் கருதப்படுபவை. ஆளுகைமுறையின் கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய ஒரு நிலை சுயாதீன ஊடகங்களுக்கு இருப்பதனால் ஊடகங்களையும் ஓர் அரசின் நான்காவது அங்கமாக வர்ணிக்கும் போக்கும் ஜனநாயக நாடுகளில் உண்டு. ஒரு நாட்டின் இறைமை மக்களின் கைகளில் இருப்பதாகக் கருதப்படுவதால் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக நாட்டை ஆளுகை செய்யும் முறை கட்டியமைக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் மக்களால் ஆட்சித் தலைவர் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் முறை உண்டு. இங்கு மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் முக்கியத்துவம் ஒப்பீட்டளவில் குறைந்து காணப்படும். சிறிலங்காவிலும் இந்த நடைமுறை உண்டு. இத்தகைய ஒரு பின்னணியில் இருந்து நாம் சிறிலங்கா அரசினைப் புரிந்து கொள்ள முயல்வோம். இப்பத்தி சிறிலங்கா அரசு குறித்து பத்து அவதானிப்புக்களைப் பதிவு செய்து கொள்கிறது.

முதலவாது, சிறிலங்கா அரசு மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளால் ஆளுகை மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையினை பின்பற்றி வருகிறது. இந்த நடைமுறை காரணமாக ஒரு ஜனநாயக நாடு என்ற பெயரை அனைத்துலக அரங்கில் பெற்றுள்ளது.

இரண்டாவது, சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குள் உள்ள ஓர் அரசு. இந்த அரசின் நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, நிர்வாக இயந்திரமான அரசாங்கமாக இருந்தாலும் சரி, நீதி பரிபாலனத்துறையாக இருந்தூலும் சரி, ஏன் ஊடகங்களாக இருந்தாலும் சரி – இவை அனைத்துமே சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்குள் இருக்கின்றன. மேலும், ஜனநாயக அடிப்படையிலான பெரும்பான்மையினரின் அதிகாரம் என்ற நடைமுறையினைப் பயன்படுத்தி பெரும்பான்மை இனத்தவரின் அதிகாரம் என்ற அடிப்படையில் சிறிலங்கா அரசு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதனால் இங்கு ஜனநாயகம் (Democracy) என்பது இனநாயகமாக (Ethnocracy) உள்ளது.

மூன்றாவது, சிறிலங்கா அரசு மகாவம்ச இதிகாச மயக்கத்தை வரலாற்று உண்மை என்று திரிபுபடுத்தி இந்தத் தளத்தில் இருந்து இந்தியாவுக்கும் தமிழருக்கும் எதிரான அரசாகக் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. இதில் தமிழர் எதிர்ப்பினை வெளிப்படையாக முதன்மைப்படுத்தி இந்திய எதிர்ப்பினை மறைமுகமாகப் புதைத்து வைத்திருக்கும் இராஜதந்திர அணுகுமுறையும் இணைக்கப்பட்டள்ளது.

நான்காவது, சிறிலங்கா அரசின் மீதான சிங்கள பௌத்த ஆதிக்கமானது மிகவும் இறுக்கமடைந்து ஒரு பேரினவாத அரசாக வலுவடைந்துள்ளது. மேலும் எந்த வகையான அரசு சீரமைப்பு முயற்சியினையும் (state reforms) இப் பேரினவாத நிறுவனம் எதிர்த்துப் போராடி முறியடிக்கும் வல்லமையினையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது.

<p>சிறிலங்கா அரசைப் புரிந்துகொள்வது எவ்வாறு?</p>

ஐந்தாவது, சிறிலங்கா அரசு தன்வசமுள்ள எந்தவித அதிகாரங்களையும் பங்கீடு செய்யத் தயாராக இல்லை. வரலாற்று ரீதியாகத் தமிழர் தலைமைகள் சிறிலங்கா அரசாங்கங்களுடன் நடாத்தி வந்த பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளும் தோல்வியில் முடிவடைந்ததற்கான ஒரு முக்கியமான காரணம் இது.

ஆறாவது, இலங்கைத்தீவில் இருப்பது ஒரு தேசம்தான், ஒரு தேசிய இனம்தான் – அது சிங்கள தேசமே – சிங்கள தேசிய இனமே – என்பதுதான் சிறிலங்கா அரசின் நிலைப்பாடு. ஏனையோர் சிறுபான்மையினர், வந்தேறுகுடிகள். உதிரிக் குடியினர். சிங்களதேசத்தின் தீர்மானத்தின்படி வாழவேண்டியவர்கள். தம்மை சிறிலங்கர் என்ற அடையாளத்துள் அமிழ்த்திக் கரைய வேண்டியவர்கள் என்பதே சிறிலங்கா அரசின் நிலைப்பாடு. இதனை இன்னொரு வகையில் கூறின் ஏனைய மக்கள் சிங்கள தேசம் எனும் மரத்தில் படரவேண்டிய கொடி செடிகளே. இந்த பேரினவாத நிலைப்பாடு சிறிலங்கா அரசின் ஆதார அடிப்படைகளில் முக்கியமானது.

ஏழாவது, சிறிலங்காவில் ஜனநாயகமுறையின் ஊடாக ஆட்சிமாற்றம் நடைபெறக்கூடிய நிலை இருப்பது சிறிலங்கா அரசின் உயிர்வாழ்வுக்கு உறுதுணையாக உள்ளது. அரசின் மீது எழும் எதிர்ப்பினை அரசாங்கத்தினைத் தலைமை தாங்கும் கட்சியின் மீதான எதிர்ப்பாக வெளிப்படுத்தி ஒவ்வொரு ஆட்சிமாற்றத்தின் ஊடாகவும் சிறிலங்கா அரசு தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. இதனால் சிறிலங்காவினைப் பொறுத்தவரை தேர்தல் ஜனாயகம் என்பது பேரினவாத அரசைப் பாதுகாக்கும் கருவியாகப் பயன்படுகிறது.

எட்டாவது, சிறிலங்கா அரசு ஒரு தேச-அரசு (Nation -State) அல்ல. மாறாக ஒரு பிரதேச எல்லை கொண்ட அரசு (territorial state). ஒரு தேச அரசு, ஒரு தேத்துக்குரிய அரசாக தனக்கென்ற வரையறுக்கப்பட்ட பிரதேச எல்லைகளைக் கொண்டிருக்கும். பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய அரசுகள் இத்தகைய தேச அரசுகளே. ஒன்றுக்கு மேற்பட்ட தேசங்களைக் கொண்ட நாடுகளிலும் ஒரு பொதுத் தேசக்கட்டுமானம் (Nation building) வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும்போது அவற்றையும் தேச-அரசாகக் கொள்ள முடியும். ஆனால் தனது பேரினவாத நிலைப்பாட்டால் சிறிலங்கா அரசால் 'இலங்கையர்' என்ற ஒரு பொதுத் தேசத்தை உருவாக்க முடியவில்லை. தற்போது 'சிறிலங்கர்' என்ற தேச உருவாக்கத்தை ஆக்கிரமிப்பின் ஊடாகச் செய்ய முயல்கிறது. இருப்பினும் இதில் சிறிலங்கா அரசால் வெற்றியடைய முடியவில்லை. இதனால் ஒரு தேச- அரசு என்ற நிலையை சிறிலங்கா அரசால் எட்ட முடியவில்லை.

ஒன்பதாவது, கடந்து முப்பதாண்டு காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எதிர் கொள்வதற்கும் விடுதலைப்புலிகள் அமைப்பை எதிர்த்துப் போராடுவதற்கும் கட்டி எழுப்பட்ட இராணுவ, புலனாய்வுக் கட்டமைப்புக்களால் சிறிலங்கா அரசு ஒரு வலுவான இராணுவத்தைக் கொண்ட, இராணுவ மையவாத அணுகுமுறை கொண்ட அரசாக மாற்றம் கண்டிருக்கிறது. இது மகிந்த இராஜபக்ச அரசாங்கத்தின் அணுகுமுறையாக மட்டும் இல்லாது சிறலங்கா அரசின் அணுகுமுறையாக வளர்ச்சி கண்டுள்ளதால் ஆட்சிமாற்றங்கள் அரசின் இராணுவத்தின் வகிபாகத்தை நிராகரிக்க முடியாத நிலை தோற்றம் பெற்றிருக்கிறது. புதிய ஆட்சியாளர்கள் யுத்தக்குற்றங்களில் இருந்து இராணுவத்தைப் பாதுகாப்பதில் காட்டும் சிரத்தை இதனை நன்கு வெளிப்படுத்துகிறது.

பத்தாவது, சிறிலங்கா அரசு தான் ஆளுகை செய்யும் இலங்கைத்தீவின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக உலகப் பெரும் நாடுகளை கவரும் தன்மையினைக் கொண்டுள்ளது. இதனால் தனது நலன்களுக்கேற்றவாறு உலகப் பெரும் நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பினைக் கொண்டதாக உள்ளது. ஆட்சியாளர்களின் அணுகுமுறைக்கேற்ப கூட்டணிகளில் மாற்றம் ஏற்பட்டாலும் சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக அரசுகளின் அரங்கில் நண்பர் வட்டம் இருந்து கொண்டிருக்கும்.

சிறிலங்கா அரசு தொடர்பான புரிதலை நாம் மேற்கூறப்பட்ட விடயங்களில் இருந்து நோக்கின் ஆட்சிமாற்றம் ஊடாக சிறிலங்கா அரசு அடிப்படையில் எந்த மாற்றத்துக்குள்ளாமலே தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது என்பதனை உணர முடியும். அனைத்துலக அரங்கிலும் தனக்கிருக்கும் அவப்பெயரையும் துடைத்துக் கொள்ளும் வாய்ப்பினையும் ஆட்சிமாற்றம் சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. சுருங்கச் சொன்னால் ஆட்சிமாற்றம் ஊடாக சிறிலங்கா அரசு எத்தகைய மாற்றத்துக்கும் உள்ளாகாமலே தன்னைப் பாதுகாத்திருக்கிறது. புதிய அரசாங்கம் பேசும் நல்லாட்சி என்பது அடிப்படையில் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசாக இருக்கின்ற சிறிலங்கா அரசை நல்ல முறையில் நிர்வாகம் செய்வது என்பதாக இருக்க முடியுமேயன்றி, சிறிலங்கா அரசின் அடிப்படைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்க மாட்டாது.

இதனால் தாயகத் தமிழர் தலைவர்கள் தமிழ் மக்களது உரிமைகளை வென்றெடுப்பது குறித்துச் சிந்திக்கும் போது புதிய ஆட்சியாளர்களின் நல்லெண்ணத்தில் மட்டும் நம்பிக்கை கொள்ளாது சிறிலங்கா அரசை எவ்வாறு கையாள்வது என்பது குறித்துச் சிந்தித்தல் அவசியமானது. 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=6565e810-9fdd-44c9-a675-8871868ef9ff

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு கிருபன்.
இலங்கை அரசியல் குறித்து விவாதிப்போர் மற்றும் பொதுவாக இலங்கையில் நிலவும் அரசியல் குறித்து அறிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் வாசித்து தெளிவு பெற இந்தப் பதிவு பெரிதும் உதவும்.
இதில் கூறப்பட்டுள்ள 10 குறிப்புகளும் மிகவும் ஆழமாக கடந்த காலத்து நிகழ்வுகளை மற்றும் சமகால நிகழ்வுகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

இவற்றை எல்லாம் தாண்டி தமிழர்கள் , தமிழ் அரசியல்வாதிகள் எதனை சாதித்து விடலாம் என்ற அங்கலாய்ப்பும் வந்து தொலைகின்றது!!
ஒரு வகையில் பார்க்கும் போது "புலிகளின் போராட்டம் மற்றும் அவர்களின் ராணுவ  பலம்"  எங்களை அவர்களோடு ஒரு சம நிலையில் வைத்து பேரம் பேசும் நிலைக்காவது கொண்டு சென்றது என்பதும் உண்மை.

இலங்கை அரசு / அரசியல் குறித்து மேற்குறிப்பிட்ட அவ்வளவு உண்மைகளையும் நன்கு அறிந்தும், தெளிந்தும் கொண்ட  சர்வதேசம் இன்னுமே அவர் அவர் சுய நலன் சார்ந்து முடிவுகள் எடுப்பது என்பது நம்மேல் இடப்பட்டுள்ள சாபம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதம் பச்சோந்தி கணக்கில் இபபோது ஒரு நிறமாற்றம் கண்டிருக்கிறது. அவ்வளவே.!

கட்டுரையாளர்  எம்மவர் சுதந்திரத்திற்கு பிறகு அரைக்கும் மாவையே திருப்பி அரைத்திருக்கின்றார் .புதிதாத எதுவும் இல்லை .புதிய அரசை எவ்வாறு கையாளுவது என்று சிந்திக்கவேண்டும் என்று முடித்திருக்கின்றார் ஆனால் அது எவ்வாறு என்று அவரால் சொல்ல முடியவில்லை ஏனென்றால் எவருக்கும் அது தெரியாது .

சிங்களம் எதுவும் தராது என்பதை விட இந்தா தருகின்றேன் அந்தா தருகின்றேன் என்று ஏமாற்றுவதுதான் வரலாறு .அது தெரிந்தும் சுதந்திரம் பெற்றத்தில் இருந்து இன்றுவரை தமிழர்களும் ஏதோ ஒரு விதத்தில் தமது உரிமைகளுக்காக போராடித்தான் வருகின்றார்கள் .சர்வதேச அழுத்தம் அன்றி குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இல்லாமல் சிங்களம் எதையும் தரபோவதில்லை . கூட்டமைப்பிற்கு சர்வதேசம் ,இந்தியா போய் கெஞ்சுவததை விட  வேறு தெரிவும் இல்லை மக்களும் அதற்கே  வாக்குகளும் போட்டார்கள் . 

எவராவது எமது பிரச்சனைக்கு தீர்வு என்ன அதை எப்படி சாத்தியமாக்குவது என்று எழுதி இதுவரை நான் வாசிக்கவில்லை ஏனெனில் எந்த ஒரு தீர்வையும் எழுதலாம் ஆனால் அதை எப்படி  நடைமுறை படுத்துவது என்று எவருக்கும் தெரியாது .

கட்டுரையாளர்  எழுதிய பல விடயங்களையும் தாண்டி இந்தியா பல நெருக்கடிகளின் பின் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை சிங்கள அரசை கைசாத்திட வைத்தது .

அதே போல இந்தியாவில் வந்த அரசியல் மாற்றம் வி பி சிங் அரசு இந்திய படைகளை திருப்பி எடுக்கவும் வழி வகுத்தது .ஆட்சியாளர்கள் (Government ) மாறினால் அரசையும் ( State)  மாற்றலாம் என்பதை கட்டுரையாளர் புரிந்துகொள்ளவில்லை .காங்கிரஸ் வென்றிருந்தால் இந்த நிலை வந்திராது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையாளர்  எம்மவர் சுதந்திரத்திற்கு பிறகு அரைக்கும் மாவையே திருப்பி அரைத்திருக்கின்றார் .புதிதாத எதுவும் இல்லை .புதிய அரசை எவ்வாறு கையாளுவது என்று சிந்திக்கவேண்டும் என்று முடித்திருக்கின்றார் ஆனால் அது எவ்வாறு என்று அவரால் சொல்ல முடியவில்லை ஏனென்றால் எவருக்கும் அது தெரியாது .

சிங்களம் எதுவும் தராது என்பதை விட இந்தா தருகின்றேன் அந்தா தருகின்றேன் என்று ஏமாற்றுவதுதான் வரலாறு .அது தெரிந்தும் சுதந்திரம் பெற்றத்தில் இருந்து இன்றுவரை தமிழர்களும் ஏதோ ஒரு விதத்தில் தமது உரிமைகளுக்காக போராடித்தான் வருகின்றார்கள் .சர்வதேச அழுத்தம் அன்றி குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இல்லாமல் சிங்களம் எதையும் தரபோவதில்லை . கூட்டமைப்பிற்கு சர்வதேசம் ,இந்தியா போய் கெஞ்சுவததை விட  வேறு தெரிவும் இல்லை மக்களும் அதற்கே  வாக்குகளும் போட்டார்கள் . 

எவராவது எமது பிரச்சனைக்கு தீர்வு என்ன அதை எப்படி சாத்தியமாக்குவது என்று எழுதி இதுவரை நான் வாசிக்கவில்லை ஏனெனில் எந்த ஒரு தீர்வையும் எழுதலாம் ஆனால் அதை எப்படி  நடைமுறை படுத்துவது என்று எவருக்கும் தெரியாது .

கட்டுரையாளர்  எழுதிய பல விடயங்களையும் தாண்டி இந்தியா பல நெருக்கடிகளின் பின் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை சிங்கள அரசை கைசாத்திட வைத்தது .

அதே போல இந்தியாவில் வந்த அரசியல் மாற்றம் வி பி சிங் அரசு இந்திய படைகளை திருப்பி எடுக்கவும் வழி வகுத்தது .ஆட்சியாளர்கள் (Government ) மாறினால் அரசையும் ( State)  மாற்றலாம் என்பதை கட்டுரையாளர் புரிந்துகொள்ளவில்லை .காங்கிரஸ் வென்றிருந்தால் இந்த நிலை வந்திராது .

உங்களைப்போன்றவர்கள் இருக்கும் வரை எழுதியும் பலனில்லை. செயல்பட்டும் பலனில்லை. நடைமுறைபடுத்தியும் பலனில்லை. இதை நாம் கண்கூடாக பார்த்த விடயம்.

99% நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு கட்டுக்கோப்புடன் இயங்கிய மாதிரி அரசாங்கத்தை சீர்குலைத்து அழிக்க குரல் கொடுத்தவர்களில் நீங்களும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்கா ஒரு பேரினவாத அரசு என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை!

அதற்கான காரணங்களில் முதன்மையானது மதம்!

முஸ்லிம்கள் மதத்தை எவ்வாறு பயன்படுத்திகின்றார்களோ.. அந்த அளவுக்குப் பௌத்த பிக்குகளும்.. தங்கள் சுயநலத்துக்காக அதைப் பயன்படுத்துகின்றார்கள்! 

பட்டினத்தார் ஏன் சாமியாரானார் என்று ஆராய்வது போலவே இதுவும்..!

உண்மை வெளிப்படையாகத் தெரிகின்றது!

காரணங்கள் தேடுவது ..மாமிசம் சாப்பிடுபவன் அதை நியாயப்படுத்துவதற்காகக்  காரணங்களைத் தேடுவது போன்றது! 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு யதார்த்தங்களையும், உண்மைகளையும் ஏற்கனவே நன்கு தெரிந்து கொண்டுள்ளதாக கூறும் சிலர் இன்றைய நாட்கள் வரைக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதோ ஒரு வகையில் தோள் கொடுப்பது போல் ஏன் கதை சொல்லி திரிகிறார்கள்.
நான் அறியேன் பராபரமே. 

 

 

புலிகள் விட்டு சென்ற சிந்தனைகளில் இதுவும் ஒன்று .

சுயமாக சிந்திக்காமல் புலிகள் சொன்னதை வேதவாக்காக எடுத்ததன் பலன் தான் நாம் எல்லோரும் இன்று அனுபவிப்பது .

தங்களுடன் இல்லாவிட்டால் அரசுடன் என்ற விசத்தை தெளிவாக விதைத்தார்கள் .இன்று வரை சிலர்  அதையே காவித்திரிகின்றார்கள் ஆனால் பலர் அந்த உண்மையை புரிந்துவிட்டார்கள் .

இதையே தான் சிங்கள அரசும் செய்தது தங்களுடன் இல்லாதவர்களை புலிகள் என்று முத்திரை குத்தி போட்டுதள்ளினார்கள் .

இலங்கை அரசிற்கும் சரி புலிகளுக்கும் சரி ஒன்று தெளிவாக தெரியும் சொல்லுவதற்கு எல்லாம் தலையாட்டும் கூட்டம் தான் உலகில் அதிகம் என்று சுய சிந்தனையாளர்கள் ஒரு சிறு பகுதி அதனால் அவர்களை பற்றி கவலைப்படுவதில்லை .

 

 

புலிகளுக்கு அரசுடன் நின்றவர்களை விட இடையில் நின்று உண்மை கதைப்பவர்களில் தான் பெரும்கோவம் ஏனெனில் அவர்கள் உண்மை சொல்லுகின்றார்கள் என்று புலிகளுக்கு தெரியும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.