Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரியின் பதவிக்காலம் முடிந்த பின்னரே நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படும்! - மங்கள சமரவீர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mangala-Samaraweera-400-seithy.jpg

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிந்த பின்னரே நடைமுறைக்கு வரும் என, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

   

நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=145138&category=TamilNews&language=tamil

2020 இல் நிறைவேறும் நிறைவேற்று அதிகார ஒழிப்பு
 
2020 இல் நிறைவேறும் நிறைவேற்று அதிகார ஒழிப்பு
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி முறை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிலேயே ஒழிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
 
இன்று பிற்பகல், ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
வரலாற்றில் முதன் முறையாக, பதவியில் இருக்கும்போதே தனது அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனும் வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் தெரிவித்தார்.
 
தற்போது பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி நிறைவடைந்ததை அடுத்தே தற்போதுள்ள ஜனாதிபதி முறை மாற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
 
இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்காக முன்வைத்த யோசனைக்கும், புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கும் அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளதோடு, அதற்கு  ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுவும் நேற்றைய தினம் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலையிருந்து என்ன தெரியுது??? சிங்களவனுக்கு உடம்பு முழுக்க மூளை ....

  • கருத்துக்கள உறவுகள்

வாறவை வரமுதல், ஜனாதிபதி முறையை ஒழிப்போம் எண்டுதான் சொல்லிக்கொண்டு வருகினம், பிறகு போகேக்கை ஒழிக்கிறோம் எண்ணுகினம். உப்பிடியே வாறவை எல்லாரும் சொல்லிக்கொண்டு சுகம் அனுபவிக்க வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.