Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஎஸ் ஐஎஸ் நடத்தும் பள்ளிக்கூடம்!

Featured Replies

ஐஎஸ் ஐஎஸ் நடத்தும் பள்ளிக்கூடம்!

 

ரு சிறிய பள்ளி, பத்து வயது கூட  ஆகாத குழந்தைகள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஆசிரியர் போல நிற்கும் ஒருவர் கரும்பலகையில் இருக்கும் உருது வார்த்தையை காண்பித்து, இது என்னவென்று கேட்கிறார். மாணவர்கள்(சிறுவர்கள்) ஒருமித்த குரலில் சொல்லும் வார்த்தை... 'ஜிகாத்'!

இந்தக் காட்சி நடப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறு கிராமத்தில். மாணவர்கள்
அமர்ந்திருக்க, ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா' என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர்,  அவர்கள் முன்னிலையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பாடம் என்றால் வாழ்க்கைப் பாடமல்ல... மாறாக பலரின் வாழ்க்கையை அழிக்கும் துப்பாக்கியையும். வெடி குண்டையும் பற்றிப் படிக்கும் பாடம்.

jika_vc_vc1.jpg

ஆசிரியர்  போல நிற்கும் அந்த நபர்,  ஒவ்வொரு சிறுவனாக எழுப்பி, 'நாம் யாரைக் கொல்ல வேண்டும், எதற்காக கொல்ல வேண்டும்?' என்று கேட்கிறார். மாணவர்களிடம் எறி குண்டுகளைக் கொடுத்து, 'எப்படி பயன்படுத்த வேண்டும்?' என்று கேட்கிறார். துப்பாக்கிகளைக் கொடுத்து, 'எப்படி சுட வேண்டும்?' என சொல்லித் தருகிறார். ஒவ்வொரு கேள்விக்கும் மாணவர்கள் திறமையாக (?) பதில் சொல்கிறார்கள்.....காணொளியில் காட்சிகள் நீள்கிறது.

jika_vc_vc2.jpg

இறுதியில் பள்ளி முடிகிறது. அடுத்தத்  தலைமுறைக்கான ஐஎஸ் ஐஎஸ்  தீவிரவாதிகள் இங்கிருந்து உருவாக்கப்படுகிறார்கள். கூரான பிஞ்சு மனங்களை ஐந்திலேயே வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தீவிரவாதத்தை வெட்ட வெளிச்சமாக கற்றுத் தருகிறார்கள்.

ஜிகாத் என்றால் கடவுளின் பாதையில் செல்வது. ஆனால் ஒரு சிறுவன் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கற்றுத் தருவது எந்த விதத்திலும் கடவுளின் பாதையில் செல்வதாகாது. தீவிரவாதம் எதற்கும் தீர்வாகாது என்பது அந்த பிஞ்சு மனங்களுக்கு என்றேனும்  ஒருநாள் தெரியும்......அன்று உலகம் அழகு பெறும்.

http://www.vikatan.com/news/article.php?aid=55309

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சில பேஸ்புக் பக்க சொந்தக்காரர்கள்..... புலிகள் இன்றும் இருந்திருந்தால் இதேமாதிரி பள்ளிக்கூடங்களை அவர்களும் ஆரம்பித்திருப்பார்கள் என எழுதியிருந்தார்கள்.

அவர்கள் ஒற்றுமை வேற்றுமை தெரியாத மாற்றுக்கருத்து மாணிக்க திலகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்... பாரீஸில் நிகழ்ந்த தாக்குதலுக்கு பின்னர் யாழிலும்... முகநூலிலும் தமிழ் புத்த மகான்கள் சிலர் தாந்தோன்றித்தனமாக தோன்றி புலிகளை இழுத்துவிட்டு கோர்த்துவிட்டு தங்களின் மனிதபிமான மேலீட்டை இனங்காட்டிச்சினம்.

 அதில் ஒருவர் புலிகளும் மக்களை இலக்கு வைத்து தாக்கினர் நாமும் இதே குற்றத்தை செய்தோம் என்று புத்தபிரானுக்கு பக்கத்தில போதிமரத்துக்கு அடியில் இருந்தவர் போல எழுதித் தள்ளி இருந்தார்.

இந்தப் புத்தமகான்களிடம் ஒரு கேள்வி... 1952 இல் இருந்து அப்பாவி தமிழ் பொதுமக்களை சிங்கள அரச பயங்கரவாதிகள்.. சர்வதேச அரச பயங்கரவாதிகளின் ஒத்துழைப்போடு கொன்று வருகிறார்களே.. இதற்கு தங்களின் மனிதாபிமானத்தில் என்ன கண்டனம் பதிவாகிறது..??! அதற்கு முடிவு என்ன.

ஐ எஸ் எவ்வளவு மிலேச்சத்தனமானதோ.. அதே போன்றது அண்மையில்.. ஆப்கானிஸ்தானில் ஆஸ்பத்திரி மீது குண்டு வீசி அப்பாவி மக்களை கொன்றுவிட்டு.. அதனை கெட்டித்தனமாக மூடி மறைத்த அமெரிக்க அரச பயங்கரவாதம். இதே பிரான்ஸ்.. இன்றும் ஆபிரிக்க காலனித்துவ நாடுகளில் படைகள் இருத்தி வைச்சு செய்து வரும் அநியாயங்களுக்கு மிலேச்சத்தனங்களுக்கு.. உங்கள் அகராதியில் என்ன பதில்.

நவாலி தேவாலயக் குண்டு வீச்சு.. யாழ் தேவாலயக் குண்டு வீச்சு.. நாகர்கோவில் பள்ளிக்கூடம் மீதான குண்டு வீச்சு.. மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிப்பு..  புதுக்குடியிருப்பு சந்தை மீதான குண்டு வீச்சு.. மடு தேவாலயம் மீதான குண்டு வீச்சு.. செஞ்சோலை குண்டுவீச்சு... கொக்கட்டிப் படுகொலை.. இப்படி.. புலிகள் செய்த குண்டு வெடிப்புக்களை விட பல மடங்கு மனித இனப்படுகொலைகளை நிகழ்த்திய சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு இந்த புதிய புத்த பிரான்களின் போதனை தான் என்ன..???!

விடுதலைப்புலிகள் இறுதி வரை ஒரு அந்நிய நாட்டின் சாதாரண பிரஜையும் இலக்கு வைத்து.. படுகொலை செய்ததில்லை. கட்டுநாயக்கா வரை தாக்குதல் நடத்திய போதும். இலக்குகள் எப்போதும் இராணுவ.. பொருண்மிய..  இலக்குகளாகவும்.. சில பழிவாக்கல் இலக்குகளாகவுமே இருந்துள்ளன. சில விபத்துக்களாகின. மற்றும்படி.. புலிகள் அந்நிய நாட்டு அப்பாவி மக்களை குறி வைத்து எங்கும் தாக்குதல் செய்யவில்லை.. எனலாம். அவர்களை ஐ எஸ் பயங்கரவாதத்தோடு ஒப்பிட்டு பேசுவதே மிலேச்சத்தமான செயல். :rolleyes:

மேலும் தற்கொலை படை கலாசாரத்தை ஆரம்பித்தது.. அமெரிக்காவும்.. நேசப்படைகளும்.. ஜப்பானும் தான். இரண்டாம் உலகப் போரின் போது. எல்லா மனித அழிவுகளுக்கும் மூல காரணம் அமெரிக்காவும் அதன் பயங்கரவாத ஊக்குவிப்புச் செயற்பாடுகளும்.. அதற்கு முண்டுகொடுக்கும் அரச பயங்கரவாதிகளும் தான். ஐ எஸ்ஸின் உருவாக்கம் கூட இவர்களின் இந்த நடவடிக்கைகளால் தான்... என்றால் மிகையில்லை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

12241596_1720039328229767_71387586323317

12243177_1720039341563099_77606790119055

12227018_1720039364896430_20819666146232

12249980_1720039394896427_45609763664849

12243455_1720039411563092_17310314898362

12246628_1720039458229754_75922596429322

12241513_1720039478229752_81658457017275

12246744_1720039498229750_49140771096447

12119016_1720039524896414_14269257114426

12250158_1720039548229745_66038270195407

12246823_1720039568229743_70729062427212

12234935_1720039608229739_62608218798988

12243159_1720039654896401_82040817956253

12250129_1720039698229730_72432430550801

12243166_1720039768229723_56818884285134

12246905_1720039798229720_76323972872424

11998895_1720039858229714_69905817851168

12249773_1720039874896379_60692157533774

12208301_1720039911563042_54845989590603

12239710_1720039931563040_15051262153711

12240063_1720039958229704_51201097830762

12241738_1720039988229701_62680830998225

12239660_1720040014896365_49316167577885

 

IS பயங்கரவாதிகளுக்கும் மேலுள்ள பட அவலத்தின் காரரணர்த்தாக்களுக்கும் என்ன வித்தியாசம்?????

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆரம்பத்தில் ஒரு கட்டுக்குள் கொண்டுவந்து அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து போராட்டத்தில் ஈடுபடச்செய்வதும் பின்பு அவர்களைத் தறிகெட்டு ஓடப்பண்ணி கண்டுக்காமல்விட்டு எங்களுக்கு எதுவும் தெரியாது இது உலகமகா பயங்கரவாதம் எனக்கூறுவது அமெரிக்காவின் எந்த அழிறப்பர்கொண்டும் அழிக்கப்படமுடியாத பொதுக்கொள்கை. 

இதில் அவர்களது இலக்கு எண்ணைவள நாடுகளைப் பூச்சாண்டிகாட்டி பெற்றோலியத்தைச் சுரண்டுவது அப்பெற்றோலியத்துக்குக்கொடுக்கும் அடிமாட்டு விலையில் உனக்குப் பாதுகாப்புக் கட்டமைப்புகள் செய்துதருகிறேன் அதற்கான தொழில்நுட்பம் வலைப்பின்னல்களை நிர்மாணிச்சுத்தருகிறேன்பேர்வழி எனும் பெயரில் பாதிக்குப்பாதிதான் பெற்றோலிய நாடுகளுக்குப் போய்சேரும்.

அப்படிப்போய்ச்சேர்ந்த மிகுதிப்பணத்தில் அதிகாரவர்க்கமும் அரசகுடும்பமும் தேவடியாள் வீட்டுக்குபோனது, தனிவிமானத்தில் நாடுநாடாகத் திரிந்தது, உள்ளூரிலேயே உல்லாசமாக இருந்தது இவைகள் போக இன்னோரன்ன செலவுகள் தவிர்ந்து மிகுதிப்பணமே சாமானியனுக்குச் செல்லும் அந்தச் சாமானியன் யாரெனில் கக்காவுக்குப் போவதே அல்லாவின் செயல் என வெறியூட்டப்பட்ட மிஸ்டர் பொதுஜனம்.

ஐ எஸ் அமைப்பு இவ்வளவு ஹைடெக்காக இயக்கத்தை நடத்துகிறதே ஏதாவது நல்வழியில் இந்த இயக்கத்தைக் கொண்டுசெல்லலாம்தானே. அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் எண்ணை தரவேண்டாம் நாங்கள் நேரடியாகவே நுகரும் நாடுகளிடம் டீல் வைக்கிறம் எனக்கூறலாம் தானெ ம்ம்ம்கும் அப்படி டீல் வைக்க முடியாது ஏனெனில் அரபுச் ஸேக்குகள் ஐ எஸ் க்கும் லஞ்சம் கொடுத்துப் பழக்கிவிட்டான் அல்லாவின் பெயரால் சண்டைபிடியுங்கோ அமெரிக்கா சொல்படி நாங்கள் உங்களுக்கு வெட்டுறதை வெட்டுறம் என.

செய்கூலி சேதாரம் இல்லாமல் அமெரிக்காவின், ஆயுத வியாபாரம், பயங்கரவாதத்தை ஒடுக்கும் அமைதி வியாபாரம் இரண்டும் சமாந்தரமாகப் பயணிக்கும்.

இதில் ஆகக் கேவலமென்னவென்றால் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் அகதிகள் நுளையும் பாதைகள் அனைத்தும் அடைத்தாயிற்று, ஒரு அகதியின் உடையிலுள்ள புளுதிகூட இருநாடுகளின் எல்லைகடந்து போகமுடியாது. பாவம் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே ஸ்பெயின் கிறீஸ் போர்த்துக்கல் இத்தாலி  ஐஸ்லாந் போன்றவைகள் திண்டுபோட்டு ஏப்பம்விட்ட கடனை அடைப்பதற்கே அல்லாடிக்கொண்டிருக்கு, இப்போ வரும் அகதிக்குச் சோத்துப்பாசல் அதுக்குள்ள ஊடறூத்துவரும் குண்டுகட்டிய முசிலீமுக்குக் காவல்காப்பது என அல்லாடுது.

இதுக்கு ஒரே வழி

விடுதலைப்புலிகள் இருபத்துநான்கு மணிநேரத்தில் குடாநாட்டிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதுபோல் தங்கள் நாடுகளில் வாழும் அனைத்து வெளிநாட்டினரையும் நாடுகடத்துவதே. என்னையும் சேர்த்து.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.