Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும் : யாழ்.இந்தியத் துணைத்தூதுவர்

Featured Replies

ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும் : யாழ்.இந்தியத் துணைத்தூதுவர்
 
ரயில் கடவைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும் : யாழ்.இந்தியத் துணைத்தூதுவர்
வடக்கில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அனைத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று யாழ்.இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்தார்.
 
ரயில்வே புனரமைப்பிற்காக இரு நாட்டிற்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசாங்கமே சம்பந்தப்பட்ட அமைச்சின் ஊடாக இச்செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கில் அதிகரித்துச் செல்லும் ரயில் விபத்துச் சம்பவத்தில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வுயிரிழப்பிற்கான விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பற்ற ரயில் கடவைகளிலேயே நடைபெற்றுள்ளது.
 
இந்நிலையில் வடபகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பினை மேற்கொண்ட இந்திய அரசாங்கம் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா என்று யாழ்.இந்திய துணைத்தூதுவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வடபகுதியிலிருந்து ரயில் பாதையினை புனரமைத்துக் கொடுப்பதற்கான ஒப்பந்தமே இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசாங்கம் செய்து கொண்டது.
 
இதன்படி வடபகுதிக்கான ரயில் பாதையும்,புனரமைத்துக் கொடுக்கப்பட்டுவிட்டது.தற்போது புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
 
ஆனால் புகையிரதக் கடவைகளை அமைப்பது இலங்கை அரசாங்கத்தின் வேலை.அவர்கள் அது சம்பந்தமான அமைச்சுடன் தொடர்பு கொண்டு அத்திணைக்களத்தின் ஊடாக புகையிரதக் கடவைகளை அமைக்க வேண்டும்.இதன்படி பாதுகாப்பற்ற ரயில் கடவைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியதும் அந்த திணைக்களங்களே என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்

ச்சா.. அப்படி எல்லாம் சொறீலங்கா அரசுக்கு வேலை சொல்லப்படாது. மக்களா பார்த்து கவனிச்சு போக வேண்டியான்... இல்ல செத்துத் தொலைய வேண்டியான். ஜேர்மனில இல்ல.. கொலன்டில இல்ல.. ஏன் நம்மூரில.. மாடு கடக்கல்ல....

ஒரு இந்திய தூதனுக்கு உள்ள சராசரி மனிதப் புரிந்துணர்வு கூட யாழ் களத்தில் உள்ள சில சிங்களச் சொறீலங்கா விசுவாசிகளிடம் இல்லாமல் போனமை வேதனை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உள் நாட்டு விவகாரத்தில் இந்திய தூதர் தலையிடக்கூடாது.....சிறிலங்காவின் இறையாண்மை இது ஒரு சவால்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.