Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிற்கு ஆணைக்குழு வந்தால் செருப்பால் அடிப்போம்: காணாமல் போனோரின் உறவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jaffna_misingprotest.jpg
வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழு வடகிழக்கு மாகாணங்களுக்கு வரக்கூடாது. வந்தால் நாங்கள் சத்தியாகிரக போராட்டங்களை நடத்துவோம், ஆணைக்குழுக்கு செருப்பால் அடிப்போம் என வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்த காணமல்போனவர்களின் உறவுகள் கூறியிருக்கின்றனர்.

இன்றைய தினம் மேற்படி காணாமல்போனவர்களின் உறவுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவை புறக்கணிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தியிருந்தனர்.

குறித்த கூட்டத்தின் பின்னர் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக காணாமல்போனவர்களின் உறவுகள் நடத்திய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே உறவுகள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.

இதன்போது காணாமல்போனவர்களின் உறவுகள் குறிப்பிடுகையில், எங்களுடைய பிள்ளை களை படையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள், நாங்கள் படையினரிடம் ஒப்படைத்திருக்கின்றோம்.

அவர்கள் காணாமல்போனமைக்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். ஆனால் எமது உறவுகளை கண்டுபிடிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 3 வருடங்களில், எந்தவிதமான முன்னேற்றத்தையும் எமக்கு காண்பிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது மீண்டும் விசாரணைக்கு வருகின்றார்கள். எனவே நாங்கள் ஆணைக்குழு அமர்வுகளைப் புறக்கணிக்கின்றோம். அதனையும் மீறி நடைபெற்றால் அமர்வு இடம்பெறும் பகுதிக்கு முன்பாக நாங்கள் சத்தியா கிரகங்களை நடத்துவோம். மீறி நடைபெற்றால் ஆணைக்குழுவுக்கு நாங்கள் செருப்பால் அடிப்போம்.

jaffna_misingprotest_001.jpg

jaffna_misingprotest_002.jpg

jaffna_misingprotest_003.jpg

jaffna_misingprotest_004.jpg

jaffna_misingprotest_006.jpg

jaffna_misingprotest_007.jpg

jaffna_misingprotest_008.jpg

jaffna_misingprotest_009.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.