Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலவந்தமாகக் காணாமல் செய்யப்படுதலில் இருந்து காப்பாற்றுதல் சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்து!

Featured Replies

பலவந்தமாகக் காணாமல் செய்யப்படுதலில் இருந்து காப்பாற்றுதல் சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்து!
 
பலவந்தமாகக் காணாமல் செய்யப்படுதலில் இருந்து காப்பாற்றுதல் சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்து!
அனைத்து நபர்களையும் பலவந்தமாகக் காணாமல்செய்யப்படுதலில் இருந்து காப்பாற்றுதல் குறித்த சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். 
 
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 
 
நியூயோர்க்கில் நேற்று இலங்கை இந்த சாசனத்தில் கைச்சாத்திட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை இந்த வருடம் இலங்கை வெறுமனே சம்பிரதாயபூர்வமாக மாத்திரம் கடைப்பிடிக்கவில்லை. மிகவும் அர்த்தபூர்வமான விதத்திலும் கடைப்பிடித்துள்ளது. இலங்கை இன்று (நேற்று) அனைத்து நபர்களையும் பலவந்தமாக காணாமற்செய்யப்படுதலில் இருந்து காப்பாற்றுதல் குறித்த பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளது. 
 
இன்றைய மனித உரிமைகள் தினம் மிகவும் விசேடமானது. 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடைப்பிடிக்கப்படும் முதலாவது மனித உரிமை தினமாகும். கடந்த அரசு மனித உரிமைகளை இலங்கைக்குத் தொடர்பில்லாத மேற்குலக கருத்து போன்று கருதிச் செயற்பட்டது. அவர்கள் இது எங்கள் இறைமையைப் பாதிக்கும் விடயம் எனத் தெரிவித்து வந்தனர். எனினும், அதனை நாங்கள் மாற்றியமைத்தோம். தேர்தல் மூலமாகவும், வாக்குகள் மூலமாகவும் உலகத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினோம். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்தோம். 
 
கடந்த புதன்கிழமை இரவு அமைச்சரவை பலவந்தமாக காணாமல்செய்யப்படுதலில் இருந்து காப்பாற்றுதல் குறித்த பிரகடனத்தில் கைச்சாத்திடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இது அரசின் மனித உரிமைகள் குறித்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. ஜனவரியில் இதனை நாடாளுமன்றத்திலும் அங்கீகரிக்கப் போகின்றோம். இந்த விடயம் நாட்டில் பல வருடங்களாகப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
வெள்ளை வான் கலாசாரத்தை மீண்டும் தலைதூக்க அனுமதிப்பதில்லை என நாங்கள் தீர்மானித்துள்ளோம். நாங்கள் முன்னெடுத்துள்ளது சிறிய நடவடிக்கையே. ஆனால், இந்த விவகாரத்தினால் நீண்ட காலமாக துயரத்தை அனுபவித்துள்ள நாட்டைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான விடயம். இவ்வாறான குற்றங்கள் மீண்டும் தலைதூக்குவதை நாங்கள் மீண்டும் அனுமதிக்கமாட்டோம்.
 
இதேவேளை, போர்க்குற்றங்கள் குறித்த உள்நாட்டுப் பொறிமுறையை அமைப்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம். மேலும், காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தையும் திறப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம். இது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளோம் என்றார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.