Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் காணாமல் போன எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பி.டி.பி. உறுப்பினருடன் கண்டனா்

Featured Replies

யாழில் காணாமல் போன எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பி.டி.பி. உறுப்பினருடன் கண்டனா்

1
யாழில் காணாமல் போன எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பி.டி.பி. உறுப்பினருடன் கண்டனா்

யாழில்.காணாமல் போன எனது மகனை கொள்ளுப்பிட்டியில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவருடன் வீதியில் கண்டுள்ளனர் என மகனை பறிகொடுத்த தந்தையர் ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் சாட்சியம் அளித்துள்ளார்.

 
திருநெல்வேலி தெற்கை சேர்ந்த நாகலிங்கம் சத்தியவாகீஸ்வரன் என்பவரே அவ்வாறு சாட்சியம் அளித்தார். அது தொடர்பில் தொடர்ந்து தெரிவிக்கையில், 
 
எனது மகனான சத்தியவாகீஸ்வரன் இரஜீவன் (காணாமல் போகும் போது 32 வயது , திருமணமாகி 15 நாட்கள்.) என்பவர்  தகவல் தொழினுட்ப பூங்காவில் (IT Park ) உதவி தொழினுட்ப உத்தியோகஸ்தராக  கடமையாற்றி வந்த வேளை கடந்த 2006ம் ஆண்டு 9ம் மாதம் 10ம் திகதி இரவு 12.15 மணிக்கு  வீடு புகுந்து இராணுவத்தினரால் கடத்தப்பட்டார்.
 
 
எனது மகனை கடத்திய இராணுவ குழுவில் அப்போதைய திருநெல்வேலி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி சஞ்ஜெய் லியனகே என்பவர் உட்பட 15க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு வான்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள் சிவில் உடையில் வந்தே மகனை கடத்தி சென்றனர்.
257zm6w.jpg
அதன் பின்னர் 2007ம் ஆண்டு 12ம் மாதம் 31ம் திகதி நண்பன் வீட்டுக்கு சென்று இருந்தேன் அப்போது அங்கே திருநெல்வேலி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி வந்து என்னை கண்டதும் உடனே திரும்பி சென்றுவிட்டார். அதன் பின்னர் அந்த நண்பனிடம் இராணுவ பொறுப்பதிகாரி எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என கூறியுள்ளார்.
 
அதன் பின்னர் 2013ம் ஆண்டு 8ம் மாதம் 15ம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் எனது மகன் ஆரம்ப கல்வி கற்ற யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை , இடைநிலைக்கல்வி உயர் கல்வியை கற்ற யாழ்.மத்திய கல்லூரி ஆகியவற்றுக்கு சென்று எனது மகன் தொடர்பான தகவல்களை பெற்று சென்றுள்ளனர்.
 
 
அதேவேளை 2013ம் ஆண்டு நடுப்பகுதியில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவருடன் எனது மகனை கொழுப்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் எனது மகனின் நண்பர் ஒருவர் கண்ணுற்று வந்து என்னிடம் கூறினார்.   அதன் பின்னர் எனது மகன் பற்றிய எந்த தகவலும் இல்லை என சாட்சியம் அளித்தார்.
 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.