Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதன்முறையாக மனம் திறக்கிறார் மகிந்தா ராஜபக்சே......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதன்முறையாக மனம் திறக்கிறார் மகிந்தா ராஜபக்சே...

இலங்கையில் என்னதான் நடக்கிறது?

மகிந்தா ராஜபக்சே ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப் பாட்டை மிகக் கடுமையாக முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்திருக்கிறது இலங்கை அரசு. ஏ&9 பாதையை மூடியதால், ‘தமிழர்களெல்லாம் பட்டினி கிடந்து இறக்க வேண்டும். என்ற முடிவோடு செயல்படு கிறார் இலங்கை அதிபர்’ என்ற கூக்குரலை எழுப்பி வருகிறது விடுதலைப் புலிகள் தரப்பு. இது, உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் முன்வைத்து நியாயம் கேட்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் இதுநாள் வரையில் கடைபிடித்து வந்த போர்நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டு மீண்டும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இரண்டு தரப்புமே தங்களை வலுப்படுத்திக் கொள்ளும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கின்றன.

p44ard5.jpg

இந்த சூழ்நிலையில், கிட்டத்தட்ட ஒரு நெருப்பு வளை யத்துக்குள் வந்துவிட்டுப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்நிய நாட்டு அதிபர் ஒருவர் இந்தியாவுக்குள் இத்தனை பலமான எதிர்ப்பைக் கண்டதில்லை. இருப் பினும், இந்திய அரசு அவருக்கு முறைப்படி வரவேற்பு அளித்து, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை மகிழ்ச்சிகரமாகத் திருப்பி அனுப்பி வைத்தது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கருத்துக்களை அறிவதற் காக, சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூதரகத் தின் மூலம் அவரைத் தொடர்பு கொண்டோம். மிக நெருக்கடி யான பணி பளுவுக்கு நடுவிலும், ஜூ.வி. வாசகர்களுடன் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வந்தார் இலங்கை அதிபர். இலங்கை அதிபர் ஆங்கிலத்தில் அளித்த பேட்டியின் தமிழாக்கம் இதோ&

‘‘எப்படி இருந்தது உங்கள் இந்திய பயணம்?’’

‘‘மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதுகுறித்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனை இந்திய பிரதமரிடம் மீண்டும் எடுத்துச் சொல்லி, அதற்கான ஆதரவைப் பெறுவதற்காகத்தான் எனது இந்திய பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். நினைத்தபடியே அதைச் செய்தும் முடித்திருக்கிறேன்.’’

‘‘ஏ&9 பாதையை மூடினீர்கள். அதற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு வந்தபின் மறுபடி திறந்திருக்கிறீர்கள்... ஏன் இதெல்லாம் நடக்கிறது?’’

‘‘நான் உங்கள் கேள்வியையே முதலில் திருத்த விரும்புகிறேன். ஏ&9 நெடுஞ்சாலை என்றைக்குமே மூடப்படவில்லை. ஏ&9 பாதையில் உள்ள முகமாலை சோதனைச் சாவடி மட்டும்தான் பொதுமக்களின் போக்குவரத்திலிருந்து மூடப்பட்டது. மக்களின் பாதுகாப்புக் காரணமாகவே இந்த முடிவை அரசு செயல்படுத்தியது.

ஏ&9 நெடுஞ்சாலை பல வருடங்கள் மூடப்பட்டு, 2002&ம் ஆண்டில்தான் திறக்கப்பட்டது. அது மூடப்பட்டிருந்தபோது, 2002&ம் ஆண்டுக்கு முன்னர் வட இலங்கைப் பகுதியிலிருந்து உணவு பற்றாக்குறை என்று எந்த புகாரும் எழவில்லை. பொது மக்களிடம் சட்டவிரோத வரிவிதிப்பு மற்றும் சுங்க வரி மூலம் விடுதலைப் புலிகள், இலங்கை ரூபாய் 28 மில்லியன் அளவுக்கு தினம்தோறும் வசூலிப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.

இன்னும் சொல்வதானால், பொதுமக்கள் நடமாட் டத்துக்காக இந்த நெடுஞ்சாலை, முகமாலை சோதனைச் சாவடி வரை எப்போதும் திறந்தே இருக்கிறது. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள், இலங்கை அரசு ராணுவ படைகள் மீது தாக்குதல்களை அதிகப்படுத்தியிருப்பதால் முகமாலை சோதனைச் சாவடியின் முகப்பை மூடி வைத் திருப்பதே பாதுகாப்புக்கு ஏற்றது என்று முடிவெடுக்கப் பட்டது. எனினும், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற முறையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மனதில் கொண்டு, தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருட்களை கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்கமாகவும் அனுப்ப விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஏ&9 பாதைக்கு மாற்றாக, சங்குப்பிட்டி வழியாக வேறொரு பாதையை எங்கள் அரசு விடுதலைப் புலிகளுக்கு பரிந்துரைத்தபோது, அவர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்காமல் மறுத்து விட்டார்கள். மேலும், எனது அரசு மக்களின் உணவுப் பிரச்னைக்குத் தீர்வாக ஏராளமான உணவுப் பொருட்களை ஒரே தட வையாக அனுப்ப விருப்பப் பட்டபோது, அதையும் விடு தலைப் புலிகள் நிராகரித்தார்கள்.ÕÕ

‘‘சமீபகாலமாக இலங்கை அரசு, அமெரிக்காவின் கைக்கூலியாக மாறிவிட்டதாக உலகளாவிய கருத்து இருக் கிறதே... திரிகோணமலையில் அமெரிக்க அரசாங் கம் ராணுவ தளத்தை அமைக்கப் போவதாகத் தொடர்ந்து வரும் செய்திகள், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச் சுறுத்தலாக அமையும் என்றும் சொல்லப்படு கிறதே...’’

‘‘ஒரு விஷயத்தை முத லில் தெளிவுபடுத்துகிறேன். தன்னுடைய மண்ணை எந்த அயல்நாட்டுக்கு எதிராகவும் உபயோகிக் கக் கூடாது என்பது இலங்கையின் உறுதி யான கொள்கை. எனவே, இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான விஷயங்களுக்கு இலங்கை துணை போகும் என்ற எண்ணத்துக்கே இட மில்லை.

அடுத்து, இலங்கை தனித் துவமும் இறையாண்மையும் கொண்ட சுதந்திர நாடு. அது அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல் லுறவோடு இருக்க விரும்பு கின்றது. இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடும் டோக்கியோ நன்கொடை அமைப்பு நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றுதான். தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான அமெரிக்காவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்கே தடை செய்திருப்பதோடு, இலங்கையின் நிலவரத்தைப் புரிந்தும் வைத்துள்ளது.’’

‘‘நீங்கள் தமிழர்களுக்கு எதிரானவராகவும் சிங்கள இனவாத பிரதிநிதியாகவும் தோற்றம் இருக்கிறதே..?’’

p45bak2.jpg

‘‘என்னுடைய அரசியல் வாழ்க்கையை தெளிவாக ஆராய்ந்து பார்க்கும் எவ ருமே இந்தக் கருத்து ஆதாரமற் றது என்பதைப் புரிந்து சொள் வார்கள். நான் மனித உரிமைக் காகப் போராடுபவன். இலங்கை யின் மக்கள் தொகையில் தமிழர் களும் ஒரு முக்கியமான அங்கம் என்பதை தொடர்ந்து வலி யுறுத்தி வருகிறேன். இலங்கை யில் வாழும் மக்கள் அனைவரும் உரிமைகளையும் சலுகைகளை யும் சமமாக அனுபவிக்க வேண் டும் என்பதையும் வலியுறுத்தி வந்திருக்கிறேன். தொடர்ந்தும் அதையே செய்வேன்.’’

‘‘இலங்கையில் தங்கள் அரசை எதிர்த்துப் போராடி வரும் விடுதலைப் புலிகளை இந்திய அரசு தடை செய்துள்ளது. ஆனால், இலங்கையில் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை களை உங்கள் அரசு புறக்கணிப்பதுதான் பிரச்னையைப் பெரிதாக்குகிறது என்று விடுதலைப் புலிகள் தரப்பில் உறுதியாகச் சொல்கிறார்களே..?’’

‘‘இந்தியாவும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடுதான். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உங்களுடைய சொந்த மண்ணிலேயே வெளிநாட்டு தீவிர வாத இயக்கமான விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். தனித்துவமும் இறையாண்மையும் மிக்க பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை அந்த நாட்டிலேயே ஒரு வெளி நாட்டுத் தீவிரவாத குழு கொலை செய்தது. எனினும், எனது அரசு தொடர்ந்து விடுதலைப் புலிகளை பேச்சுவார்த்தை மூலம் இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வுகாண வருமாறு அழைத்துக்கொண்டேதான் இருக்கிறது. இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழர்களும் ஏனைய இனத்தவர்களுடன் சம உரிமைகளைப் பெற்று வாழ்கிறார்கள். பெரும்பாலான தமிழர்கள் வடஇலங்கைக்கு வெளியே வாழ்வது உங்களுக் குத் தெரிந்திருக்கும். இத்தமிழர்கள் அனைவரும் மற்ற சமூகத்தினருடன் அமைதியாக வாழ்வதோடு அவர்கள் அனுபவித்து வரும் அதே வாய்ப்புகளை, உரிமைகளை மற்றும் சலுகைகளை அவர்களும் அனுபவித்து வருகிறார்கள். இந்த உரிமைகளை நாங்கள் ஒருபோதும் தடுத்த தில்லை...’’

‘‘பாகிஸ்தான் அதிபர் இந்தியாவுக்கு வந்தபோதுகூட எந்தவிதமான எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும் நடை பெறவில்லை... ஆனால், தங்களின் சமீபத்திய இந்திய வருகை பலத்த எதிர்ப்புக்குள்ளானதே... அது ஏன்?’’

‘‘இந்தப் போராட்டங்களும் எதிர்ப்புகளும் பெரும் பாலான தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தையோ, பெரும் பான்மையான இந்திய மக்களின் எண்ணத்தையோ பிரதிபலிப் பதாக நான் நினைக்கவில்லை. அதனால் இந்த விஷயத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை...’’

‘‘உலகில் எங்கும் நடந்திராத கொடூரம் செஞ்சோலைச் சம்பவம்... சின்னஞ்சிறு குழந்தைகளைக்கூட குண்டுகளுக்குப் பலியாக்கியது இலங்கை ராணுவம்... இது எந்த வகையில் நியாயம்?’’

‘‘விடுதலைப் புலிகளும் அதன் துணை அமைப்புகளும் முறையிடுவதுபோல செஞ்சோலையிலுள்ள அந்தக் குறிப்பிட்ட பகுதி, என்றைக்குமே ஒரு அனாதை இல்லமாக இருந்ததேயில்லை. இது ஒரு அடையாளம் காணப் பட்ட புலிகளின் பயிற்சிப் பாசறை. அந்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று இளம் பெண்களின் வாக்குமூலம் என்ன தெரியுமா? ‘புலிகளின் குழந்தை ராணுவப் பிரிவினை பலப்படுத்த தேவையான ராணுவப் பயிற்சியைத் தரவே அவர்கள் வலுக்கட்டாயமாக விடுதலைப் புலிகளாகக் கடத்தி வைக்கப்பட்டிருந்தனர்Õ என்பதுதான்.ÕÕ

‘‘இலங்கையில் அமைதி திரும்ப நார்வே தூதுக் குழு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், இலங்கை அரசு தரப்பில் இதில் விருப்பம் காட்டாததால்தான், அமைதி முயற்சிகள் எடுபடவில்லையா?’’

‘‘வடக்கு&-கிழக்கு பிரச்னைக்கு சமரச அரசியல் தீர்வுகாண வேண்டும் என்பதில், இலங்கை அரசு என்றுமே உறுதி பூண்டுள்ளது. இதற்காக பிரபாகரனை நேருக்குநேர் சந்திக்க தயார் என்றும் பலமுறை நான் கூறியுள்ளேன். இலங்கை அதிபர் என்ற முறையில் என்னை பலமுறை சந்திக்க முடிகிற நார்வே தூதுக்குழுவினரால் விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க முடியவில்லை என்பதை தாங்கள் இந்த நேரத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.’’

‘‘உங்கள் ஆட்சியைப் பின்னிருந்து இயக்குவதே சிங்கள இனவாத புத்த பிட்சுக்கள்தானா?’’

‘‘இது ஆதாரமற்ற மற்றொரு புகார். வணக்கத்துக்குரிய புத்த பிட்சுக்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஜாதிக உரிமய கட்சி (யிபிஹி) கூட அமைதி முயற்சிகளை ஆதரித்ததோடு அனைத்துக் கட்சி மாநாட்டிலும் அரசியல் தீர்வு காணும் முயற்சியில் ஆர்வமுடன் பங்கேற்று வருகிறது.’’

‘‘இலங்கையில் தமிழர்கள் வம்சாவழி குடிமக்கள். ஆனால், அரசே தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபடலாமா?’’

‘‘தமிழ் சமூகம் எங்கள் நாட்டின் ஒரு முக்கிய அங்கம். அவர்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள். அப்பணியைத் தொடர்ந்தும் செய்து வருகிறார்கள். ராணுவம் உட்பட சகல அரசுப் பணிகளிலும் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வகித்து வருகிறார்கள்.

புலம்பெயர்ந்த இலங்கை மாணவர்களின் நன்மைக்காகத் தமிழ்நாட்டில் கல்வி பொது தராதர தேர்வை (நம்மூர் பத்தாம் வகுப்பு) நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது எமது அரசாங்கம் அதற்கு இசைந்தது. ஒரு அரசாங்கம் அயல்நாட்டுக்குப் புலம்பெயர்ந்த தன்னுடைய குடிமக்களுக்கு உதவிசெய்ய இப்படிப்பட்ட ஒரு நடவடிக்கையை மேற்கொள்வது இதுவே முதன்முறையாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு இலங்கை அரசு முழு ஈடுபாட்டோடு உதவி செய்யும். அவர்களுக்காக கடமையாற்றும் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி.’’

p47kc1.jpg

‘‘தமிழர்கள் வாழும் பகுதிகளில் செயற்கையான உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தியதாக இலங்கை அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டு இருக்கிறதே..?’’

‘‘எமது அரசாங்கம் யாழ்ப்பாணத்திலுள்ள மக்களுக்காக உணவுப் பொருட்களை கடல் மார்க்கமாகவும், ஆகாய மார்க்க மாகவும் தொடர்ந்து அனுப்பி வருகிறது. யாழ்ப்பாணத் துக்கு தேவைப்படும் அளவுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தாலும், அவற்றை விநியோகிப்பதில் பிரச்னை உள்ளது. விடுதலைப் புலிகள், ஒரு செயற்கை பற்றாக்குறையை உண்டாக்கி அதன் மூலம் தங்களுக்குப் பரிதாபத்தைத் தேடிக்கொள்ளும் பொருட்டு, யாழ்ப்பாணத் திலுள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கடை உரிமை யாளர்களை மிரட்டி அவர்களின் கடைகளை மூட உத்தர விட்டதே இதற்கு காரணம். சர்வதேச சமூகம், குறிப்பாக இந்திய தமிழ்ப் பத்திரிகைகள், மேற்கண்ட காரணத்தைக் கோடிட்டுக் காட்டி இந்தக் கடைகளை திறக்கச் செய்தால் அங்கு உணவு பஞ்சமே இருக்காது. எனினும், எமது அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் மற்ற அனைத்து சாத்திய மான வழிகளின் மூலமாகவும் உணவை விநியோகிக்க தன்னாலான முயற்சிகளை செய்து வருகிறது. நான் ஏற்கெனவே கூறியது போல, அமைதி ஒப்பந்தத்துக்கு முன்னால் யாழ்ப்பாணத்தை கடல் மார்க்கமாகவோ அல்லது ஆகாய மார்க்கமாகவோ மட்டும்தான் சென்றடைய முடி யும். ஆனாலும் அச்சமயத்தில் தனியார் வியாபாரிகள் சுதந்திர மாக வியாபாரம் செய்ய முடிந்ததால் அப்பொழுது பற்றாக் குறை ஏற்படவில்லை.’’

‘‘இலங்கைப் பிரச்னையில் தமிழக அரசு மற்றும் தமிழகக் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி என்ன நினைக் கிறீர்கள்?’’

‘‘தமிழக முதல் அமைச்சர், இலங்கைப் பிரச்னையை பொறுத்தவரையில், மத்திய அரசின் கொள்கையை தானும் பின்பற்றுவதாகக் கூறியுள்ளார். மத்திய அரசும் இலங்கை அரசின் நிலையை தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளது. ஆகவே, விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள், பெரும் பாலான தமிழக மக்களின் கருத்தை என்றுமே பிரதிபலிக்க வில்லை.’’

‘‘இலங்கை ராணுவ விமானிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கும் இந்தியாவிடமிருந்து ரேடார் போன்ற உளவுக் கருவிகள் மற்றும் வெடிமருந்து பொருட்களை இந்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவதற்காகத்தான் சமீபத்தில் இந்தியா வந்ததாக சொல்கிறார்களே...’’

‘‘இன்றைய காலகட்டத்தில் எமது அரசாங்கத்தின் நிலை என்ன என்பதை நான் இந்திய தலைவர்களுடனான எனது சந்திப்பின்போது அவர்களுக்கு விளக்கியுள்ளேன். எங்களது உரையாடலில் இரு நாட்டு ஒத்துழைப்பு, வணிகம், முதலீடு மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகிய விஷயங்கள் தான் விரிவாக இடம் பெற்றன.’’

‘‘சமீபத்தில் உங்கள் சகோதரர் மீது மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் முயற்சி நடந்திருக்கிறதே...’’

‘‘இது விடுதலைப் புலிகளின் தீவிரவாத யுக்திக்கு மற்று மொரு உதாரணம். இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகள், அனைத்து சமூகத்தினரும் அமைதியாகவும் ஒற்றுமையாக வாழும் விதத்தில் நாங்கள் எடுக்கும் அமைதி முயற்சிகளை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதை எமது அரசாங்கம் உறுதியுடன் வலியுறுத்த விரும்புகிறது!’’ & விகேஷ்,

பாரதிதமிழன்

http://www.vikatan.com/

விகடன் குழுமம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுதுவதாக ராஜாதிராஜா சொன்னார், நல்ல ஆதரவு? :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் ஜெனிவாவுக்க போன எங்கடை ரிவிக்காரர் அரச தரப்பினரை சிக்கலுக்க உள்ளாக்கும் எந்த கேள்வியும் கேட்காமல் தேமே என்று இருந்தார்களே.. அப்படி இருக்க சொல்கிறீர்களா..

விகடனின் எந்த கேள்வியும் மகிந்தவை தலையில் வைத்து கொண்டாட வில்லையே.. எங்களிடம் உள்ள பழக்கமே இது தான்..

ஏன் ஐபிசியில டக்ளசை பேட்டி கண்டால் சுத்தி சுத்தி கேள்விகள் கேட்டு மடக்கலாமே.. எங்களுக்குத்தான் அந்த பழக்கமே இல்லையே.. நாங்கள் திரும்ப திரும்ப எஙஇகடை ஆக்களையெ கூட்டி வந்த நாங்கள் சொல்லுறதையே அவரும் சொல்ல.. அவர் சொல்வதையே நாங்கள் சொல்ல..

அண்டைக்க ஜெனிவாவில நாக்கை பிடுங்கிற மாதிரி அத்தனை பேருக்கும் முன்னாலை வைச்சு நாலு கேள்வி கேட்காமல் விட்டதற்கும் உது தான் காரணம்.. ரிரிஎன் நிமல் சிறிபால டி சில்வாவை பேட்டி கண்டது.. பிறகென்ன அது ஈழ ஆதரவு ரிவி எண்டு ஆரும் சொல்லிவிடுவினம் எண்ட பயம்தான்.

அல்லது தங்களுக்க எதிரானவர்களை எப்படி பேட்டி காண்பது எண்ட அனுபவமே கிடையாதது தான்.

காவடி நான் பேட்டி கண்டதைப்பற்றிச் சொல்ல வில்லை, கேள்விகள் கேட்ட விதம் மற்றும் பேட்டி எழுதப்பட்ட விதம்.இவற்றை கூர்ந்து நோக்கினால் தெரிவது தமிழ் நாட்டு தமிழர்களை நோக்கி தன் மீதான ஆதரவைப் பெருக்கும் உக்தி தன்.இங்கே இந்தப் பேட்டி இவ்வாறு வருவதற்கு ராஜபக்ஷ்ச மட்டும் காரணம் அல்ல ,பேட்டியை இவ்வாறு போட்டதற்கு விகடன் குழுமமும் காரணம்.

உதாரணத்திற்கு சென்சோலைத் தாக்குதல் பற்றி ராஜபக்ஸ கூறியவற்றிற்கு, அந்த சம்பவம் தொடர்பாக பல செய்திகள் இணயத்தில் இருக்கும் போது சரியான தாயரிப்புடன், சென்று ராஜாபக்ஷவிடம் எதிர்க் கேள்விகளைக் கேட்டு அவரின் பொய்மையை வெளிக் கொணர்ந்திருக்க வேண்டும். இங்கே பேட்டி கண்டவருக்கோ அதனை இவ்வாறு வெளியிட்ட விகடன் குழுமத்திற்கோ இருக்கும் நோக்கம் என்ன என்பது இதில் இருந்து புலப்படவில்லையா?

இவ்வாறான பேட்டிகள் தற்செயலாக நிகழ்வதில்லை.பேட்டியை ஒழுங்கு படுத்த தொடர்புகள், திட்டமிடல், பின்புலம் சார்ந்தே வெளிவருகின்றன.ஆகவே தமிழ் நாட்டில் எழுந்துள்ள அலையை முறையடிக்கும் ஒரு பிரச்சார உத்தியின் ஒரு பகுதியாகவே இந்தப்பேட்டி வந்திருகிறது.இதற்கு விகடன் குழுமம் ஒத்துழைப்பு வழங்கி உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர் ஜெனிவாவுக்க போன எங்கடை ரிவிக்காரர் அரச தரப்பினரை சிக்கலுக்க உள்ளாக்கும் எந்த கேள்வியும் கேட்காமல் தேமே என்று இருந்தார்களே.. அப்படி இருக்க சொல்கிறீர்களா..

விகடனின் எந்த கேள்வியும் மகிந்தவை தலையில் வைத்து கொண்டாட வில்லையே.. எங்களிடம் உள்ள பழக்கமே இது தான்..

ஏன் ஐபிசியில டக்ளசை பேட்டி கண்டால் சுத்தி சுத்தி கேள்விகள் கேட்டு மடக்கலாமே.. எங்களுக்குத்தான் அந்த பழக்கமே இல்லையே.. நாங்கள் திரும்ப திரும்ப எஙஇகடை ஆக்களையெ கூட்டி வந்த நாங்கள் சொல்லுறதையே அவரும் சொல்ல.. அவர் சொல்வதையே நாங்கள் சொல்ல..

அண்டைக்க ஜெனிவாவில நாக்கை பிடுங்கிற மாதிரி அத்தனை பேருக்கும் முன்னாலை வைச்சு நாலு கேள்வி கேட்காமல் விட்டதற்கும் உது தான் காரணம்.. ரிரிஎன் நிமல் சிறிபால டி சில்வாவை பேட்டி கண்டது.. பிறகென்ன அது ஈழ ஆதரவு ரிவி எண்டு ஆரும் சொல்லிவிடுவினம் எண்ட பயம்தான்.

அல்லது தங்களுக்க எதிரானவர்களை எப்படி பேட்டி காண்பது எண்ட அனுபவமே கிடையாதது தான்.

இது ஊடகத்துறையில் மட்டுமல்ல எம்மவர் மத்தியில் எல்லாவிடயத்திலும் எல்லாத்துறையிலும் இருக்கும் ஒரு குணாதிசயம். எதிர்த்தால் துரோகி என்றும், ஆதரித்தால் தேசபக்தன் என்றும் முத்திரை குத்தும் வழக்கம் தான் மேலோங்கி நிற்கிறது.

:blink: ஆதரித்தாலும் எழுதுவதற்கு யாழ் இணையத்தளத்திலும் எனக்குத் தடை.....இதுதான் தழிழரின்.....தேனி இணையதளம் சிறப்பாக எம் மக்களை திசைதிருப்பும் போது என் போன்றவர்களுக்கு தடை போடுகிறார்கள்.....நம்மவர்கள்.....
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: ஆதரித்தாலும் எழுதுவதற்கு யாழ் இணையத்தளத்திலும் எனக்குத் தடை.....இதுதான் தழிழரின்.....தேனி இணையதளம் சிறப்பாக எம் மக்களை திசைதிருப்பும் போது என் போன்றவர்களுக்கு தடை போடுகிறார்கள்.....நம்மவர்கள்.....

விகடனின் தலைப்பே தவறு! மகிந்த ராஜபக்ச எங்கே மனம் திறந்திருக்கிறார்?

பொய்மாலை புனைந்து விகடனுக்கு காதில் சுற்றி விட்டு இருக்கிறார். இது போன்ற பேட்டிகள், எதிர்கேள்விகள், மடக்கல்கள் எதுவும் அற்ற பேட்டிகள், விகடனுக்கு தான் அவமானம்.

விகடனுக்கு ஒரு விளக்கம் :-

ஒரு டாக்டர் ஒரு நோயாளியிடம், உங்கள் உடலில் எல்லா இரத்தக் குழாய்களும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் இதயத்தின் இரத்த குழாய்கள் மட்டும் தான் அடை பட்டு இருக்கிறது. இதை போய் பெரிது படுத்துகிறீர்களே என்று சொன்னால், ஒன்றில் அந்த டாக்டர் ஒரு போலி டாக்டராக இருக்க வேண்டும் அல்லது பைத்தியமாக இருக்கவேண்டும்.

இது போன்றது தான் A9 பாதை முகமாலையில் மட்டும் தான் மூடப்பட்டு இருக்கிறது என்று சொல்லும் மகிந்த ராஜபக்சவின் விளக்கம். 10 கிலோ மீட்டர் தூரம் ஓடும் மின்சார கம்பியை இடையில் ஒரு 10 அங்குலம் அறுத்துவிட்டு, ஐயோ இது என்ன 10 அங்குலம் தானே அறுத்து இருக்கிறேன், இதை போய் பெரிது படுத்தலாமா? மின்சாரம் பாய தடை ஒன்றும் இல்லையே என்று சொல்வது போல் தான் இதுவும். விகடன் போன்ற ஒரு பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு மகிந்த ராஜபக்ச போன்ற, அரசியல் கற்றுகுட்டிகள் காதில் பூ சுற்றுவது விகடனுக்கு தான் அவமானம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடனின் தலைப்பே தவறு! மகிந்த ராஜபக்ச எங்கே மனம் திறந்திருக்கிறார்?

பொய்மாலை புனைந்து விகடனுக்கு காதில் சுற்றி விட்டு இருக்கிறார். இது போன்ற பேட்டிகள், எதிர்கேள்விகள், மடக்கல்கள் எதுவும் அற்ற பேட்டிகள், விகடனுக்கு தான் அவமானம்.

விகடனுக்கு ஒரு விளக்கம் :-

ஒரு டாக்டர் ஒரு நோயாளியிடம், உங்கள் உடலில் எல்லா இரத்தக் குழாய்களும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் இதயத்தின் இரத்த குழாய்கள் மட்டும் தான் அடை பட்டு இருக்கிறது. இதை போய் பெரிது படுத்துகிறீர்களே என்று சொன்னால், ஒன்றில் அந்த டாக்டர் ஒரு போலி டாக்டராக இருக்க வேண்டும் அல்லது பைத்தியமாக இருக்கவேண்டும்.

இது போன்றது தான் A9 பாதை முகமாலையில் மட்டும் தான் மூடப்பட்டு இருக்கிறது என்று சொல்லும் மகிந்த ராஜபக்சவின் விளக்கம். 10 கிலோ மீட்டர் தூரம் ஓடும் மின்சார கம்பியை இடையில் ஒரு 10 அங்குலம் அறுத்துவிட்டு, ஐயோ இது என்ன 10 அங்குலம் தானே அறுத்து இருக்கிறேன், இதை போய் பெரிது படுத்தலாமா? மின்சாரம் பாய தடை ஒன்றும் இல்லையே என்று சொல்வது போல் தான் இதுவும். விகடன் போன்ற ஒரு பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு மகிந்த ராஜபக்ச போன்ற, அரசியல் கற்றுகுட்டிகள் காதில் பூ சுற்றுவது விகடனுக்கு தான் அவமானம்

முற்றிலும் உண்மை. விகடன் ஊடகவியலாளர்கள் என்றால் என்ன அதிக திறமைவாய்ந்தவர்களா என்ன? எதோ அங்கிங்கு ஓடி யாரையாவது எவரையாவது பேட்டி எடுத்து பக்கங்களை நிரப்புவதுதானே அவர்களின் நோக்கம். பேட்டி எடுத்தவருக்கு யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கிலிருக்கிறதா அல்லது தெற்கிலிருக்கிறதா என்று ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்லத்தெரியுமோ என்னவோ. தனக்குத்தெரிந்த அளவுக்குத்தானே அவரால் கேள்வி கேட்கமுடியும்.

சமையல் குறிப்பும், அழகுக்குறிப்பும், குடும்பச்சண்டையும் எழுதத்தான் விகடன் லாயக்கு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பேட்டியினை வாசிக்க எட்டப்ப ஊடகங்களிலும், பி.பி.ஸி தமிழ்ச்சேவையிலும் வாசிப்பது/கேட்பது போலவே இருக்குது.

இது ஊடகத்துறையில் மட்டுமல்ல எம்மவர் மத்தியில் எல்லாவிடயத்திலும் எல்லாத்துறையிலும் இருக்கும் ஒரு குணாதிசயம். எதிர்த்தால் துரோகி என்றும், ஆதரித்தால் தேசபக்தன் என்றும் முத்திரை குத்தும் வழக்கம் தான் மேலோங்கி நிற்கிறது.

தமிழ் மகன் நீர் ரட்ணஜீவன் கூலை நினைச்சுக் கொண்டுதான் இதை சொல்லுறீர் எண்டு தெரியுது.

நீர் என்னதான் கத்தினாலும்

ரட்ணஜீவன் கூல் ஒரு துரோகியேதான். அதாவது எமது போராட்டத்திற்கு எதிராக. அதனை மழுங்கடிக்க வேண்டும் என்ற நோக்குடன் பரப்புரை செய்பவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்றிலும் உண்மை. விகடன் ஊடகவியலாளர்கள் என்றால் என்ன அதிக திறமைவாய்ந்தவர்களா என்ன? எதோ அங்கிங்கு ஓடி யாரையாவது எவரையாவது பேட்டி எடுத்து பக்கங்களை நிரப்புவதுதானே அவர்களின் நோக்கம். பேட்டி எடுத்தவருக்கு யாழ்ப்பாணம் இலங்கையின் வடக்கிலிருக்கிறதா அல்லது தெற்கிலிருக்கிறதா என்று ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்லத்தெரியுமோ என்னவோ. தனக்குத்தெரிந்த அளவுக்குத்தானே அவரால் கேள்வி கேட்கமுடியும்.

சமையல் குறிப்பும், அழகுக்குறிப்பும், குடும்பச்சண்டையும் எழுதத்தான் விகடன் லாயக்கு என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

ஆமாண்டா செல்லம்!!

முந்தாநாட்த்தான் அது எழுத்துலகில் காலடிவைத்திருக்கு, அதுக்கு போய் சொல்லிக்கொடு பாடம்.

வினாவிடை வடிவில் தயார் செய்யப்பட்ட அரச கொடுமையின் நியாயப்படுத்தல்களுக்கு தங்களின் பங்குக்கும் முடிந்தவரை முட்டுக் கொடுக்கின்ற ஊடகங்கள் அதுக்கு இன்னுமொரு முட்டா ஐயா தாங்கள். ஒன்றுமே விளங்காதமாதிரி

பொழிப்பு சொல்லவந்துட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.