Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரகு போண்டா

Featured Replies

 வரகு போண்டா

வாய்க்கு ருசியைத் தரும் வரகில், வற்றாத சத்துகள் உள்ளன. வரகின் தோலில் ஏழு அடுக்குகள் உள்ளன. கிராமங்களில் உரலில் போட்டு, வெகு நேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியது.

12376013_1040168099375313_28104604937849

பலன்கள்

நார்ச்சத்து நிறைந்திருப்பதால் சீக்கிரத்தில் செரிக்கக்கூடியது. அரிசிக்குப் பதிலாக வரகில் இட்லி, தோசை செய்யலாம். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும்.

வரகு போண்டா
300 கிராம் வரகு அரிசி மாவு,

200 கிராம் கடலை மாவு,

2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்,

100 கிராம் சின்ன வெங்காயம்,

ஒரு டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,

சீரகத் தூள்,

கறிவேப்பிலை,

கொத்தமல்லி,

பெருங்காயம்,

உப்பு

அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து, போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

வரகு என்டால் என்ன?...பார்க்க எப்படி இருக்கும்?

  • தொடங்கியவர்

http://mmimages.maalaimalar.com/Articles/2014/Jul/8de758c7-900f-449b-a9e5-1a3a51dd01e4_S_secvpf.gif

உங்கள் அண்ணை கடியனை அவிட்டு விடமுதல் ஓடி விடுங்கோ ரதி:)

இது தான் வரகு ரதி :)

 

IMG_3541

இணைப்புக்கு நன்றி சகோதரம்!

Edited by மீனா

19 minutes ago, ரதி said:

வரகு என்டால் என்ன?...பார்க்க எப்படி இருக்கும்?

எனது சிறு வயதில் குறைந்தது மாதமிருமுறை வரகுசோறு, குரக்கன் புட்டு, சாமைசோறு அம்மா செய்வா. 

சாமை என்ன குரக்கன் என்ன என்று கேட்டால் பதிலாக கடியன்தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நவீனன்,மீனா...இதில் புட்டும் அவிக்கலாமோ!

  • தொடங்கியவர்
20 minutes ago, ரதி said:

இணைப்புக்கு நன்றி நவீனன்,மீனா...இதில் புட்டும் அவிக்கலாமோ!

வரகு அரிசி சத்துக்கள்
 
 

 

வரகு அரிசி சத்துக்கள்
 
 

தானியங்களின் பெயர்கள் கூட தற்போதைய தலை முறையினருக்கு தெரிவதில்லை.சிறுதானியங்களில் முக்கியமானது வரகு.இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். வரகு அரிசி,கோதுமையை விட சிறந்தது.

இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும்.

இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது.  தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

வரகு,  பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.

இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி  இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம்,பொங்கல்,பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விபரங்களுக்கு நன்றி நவீனன். தமிழ்கடையில் போய் வரகரிசி இருக்கா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்

  • தொடங்கியவர்
13 hours ago, ரதி said:

மேலதிக விபரங்களுக்கு நன்றி நவீனன். தமிழ்கடையில் போய் வரகரிசி இருக்கா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்

தமிழ் கடையில் இல்லாவிட்டால் லண்டனில் health food store இல் நிச்சயம் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

Kambu.jpg

இது சாமை...!

kurakkan_3_63570_200.jpg

இது குரக்கன்.....!

thinai.jpeg

இது திணை....!

  • தொடங்கியவர்

யாரும் வந்து கேட்க முதல் சுவி அண்ணா முந்தி விட்டார்:)

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன்,நான் வாங்கி விட்டேன்.ஆனால் சமைச்சால் சாப்பிடேலுமோ தெரியல்ல!... நீங்கள் சொன்ன மாதிரி ஹொலன்ட் அன்ட் பானட்டில் தான் வாங்கினேன்.நன்றி சுவியண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.