Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் விக்கி சந்திப்பு இணக்கம்- தமிழ் மக்களின் நலனுக்காக முடிவுகள் எடுக்கப்படும் என உறுதி

Featured Replies

சம்பந்தன் விக்கி சந்திப்பு இணக்கம்- தமிழ் மக்களின் நலனுக்காக முடிவுகள் எடுக்கப்படும் என உறுதி

சம்பந்தன் விக்கி சந்திப்பு இணக்கம்- தமிழ் மக்களின் நலனுக்காக முடிவுகள் எடுக்கப்படும் என உறுதி:

 

 
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையில் நடந்த இரகசியப் பேச்சு வார்த்தை இணக்கத்துடன் முடிவடைந்ததுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 
 
இதன்படி தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பது தொடர்பில் இருவரும் உறுதியளித்துள்ளதாகவும் எதிர்காலத்திலும் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
 
இந்த சந்திப்பு நடந்தது உண்மை என்று தெரிவித்த வடக்கு முதலமைச்சர் இருவரும் பேச வேண்டிய அவசிய விடயங்கள் குறித்து இதில் ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார். 
 
இந்த சந்திப்பு சுமுகமாக நடைபெற்றதாக தெரிவித்த அவர் எம்மால் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் தமிழ் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
கடந்த தேர்தலில் நடுநிலமை வகித்த விடயம் தொடர்பில் தன்னிடம் சம்பந்தன் கேட்டதாகவும் அதற்கான தன்னுடைய விளக்கத்தை அளித்தாகவும் வடக்கு முதலமைச்சர் இதன்போது கூறினார்.
 
எதிர்வரும் நாட்களில் இன்னும் பல விடயங்கள் பேசப்படவுள்ளது என்றும் வடக்கு முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
 
கடந்த சில மாதங்களாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தலமைக்கும் இடையில் சில முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. 
 
வடக்கு மாகாண சபை முதலமைச்சர் கொண்டு வந்த இனப்படுகொலை குறித்த தீர்மானம் மற்றும் கடந்த பொதுத்தேர்தலில் நடுநிலை வகிப்பதாக விக்கினேஸ்வரன் அறிவித்தமை உள்ளிட்ட விடயங்கள் முரண்பாடுகளுக்கு காரணமாக கூறப்படுகின்றன. 
 
எனினும் நேற்று கொழும்பில் நடந்த சந்திப்பின் ஊடாக இருவரும் தமிழ் மக்களின் நலனுக்காக இணக்கப்பாட்டுடன் செல்வதாகவுத் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127244/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் நலனை முதன்மைப்படுத்தியே செயற்படுகிறார் சம்பந்தன் – விக்னேஸ்வரன்

DEC 26, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மக்களின் நலனை முதன்மைப்படுத்தியே செயற்படுவதாக, அவருடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் மூலம் தெரியவந்திருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றுமாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் நடத்திய மூன்று மணிநேரப் பேச்சுக்களின் பின்னரே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக அவர், கருத்து வெளியிடுகையில், “எனக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்றை கனகஈஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.  இந்தப் பேச்சுக்கள் சுமுகமான முறையில் இடம்பெற்றிருந்தன.

எம்மிடையே நீண்ட தொடர்பாடல் இடைவெளியொன்று ஏற்பட்டிருந்தது. இதனால் என்ன நடைபெறுகின்றதென்பதே தெரியாதிருந்தது.

அவ்வாறான நிலையில் எமக்கிடையில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தொடர்பாக  நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடி முடிவுக்கு வந்துள்ளோம்.

இந்தப் பேச்சுக்களில் எமக்கிடையில் ஒரு ஒற்றுமையை கண்டுள்ளோம். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படுவதும் மற்றும், மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் செயற்படுவது எம் இருவரும் இடையில் ஒரேவிதமான கருத்தே உள்ளது.

இதனால், மக்களின் நலன் மற்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கேற்றவாறு எமது கடமைகளை புரிய வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் நான் நடுநிலை வகித்தமை தொடர்பாக இரா.சம்பந்தன் தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதேவேளை அந்த முடிவை எடுத்தமைக்கான காரணம் மற்றும் எனது செயற்பாடுகள் குறித்த எனது கருத்துக்களை நான் வெளியிட்டிருந்தேன்.

இது ஓரிரு நாட்களுக்குள் பேசித் தீர்க்கின்ற விடயமல்ல. இன்னும் பேசிக் கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. எனவே தொடர்ந்து பேச இணங்கியிருக்கிறோம்.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்படுவது பற்றி இரா.சம்பந்தன் எடுத்துக் கூறினார். எனினும், இதுபற்றி வெளிப்படையாகப் பேச முடியாதுள்ள நிலையையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எந்தக் கருத்தை வெளியிட்டாலும், அதனை சிங்கள மக்களிடம் எதிர்மறையாக எடுத்துச் சென்று பரப்புரை செய்யப்படும் சூழல் ஒன்று உள்ளதால், இதுபற்றிய அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுக்களின் விபரங்களை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், இந்தப் பேச்சுக்களில் எத்தகைய முடிவு எடுக்கப்பட்டாலும், அது பற்றி எமக்குத் தெரியப்படுத்தப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டே, நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இரா.சம்பந்தனின் கருத்துக்களில் இருந்து மக்களின் நலனையே அவர் முதன்மைப்படுத்தவதாக தெரிகிறது. இதனைத் தான் நாமும் வலியுறுத்தி வருகிறோம்.

எங்களுடைய கருத்தில் நோக்கில், ஒருமைப்பாடு இருப்பதை நான் காண்கிறேன். பாதைகள் வேறுபட்டதாக இருந்தாலும், எடுத்திருக்கும் முடிவுகள் ஒரே நோக்கை கொண்டிருப்பதாக இருப்பதால், எம்மால் சேர்ந்து இணைந்து முன்னேற முடியும் என்று கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/12/26/news/12261

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

மக்களின் நலனை முதன்மைப்படுத்தியே செயற்படுகிறார் சம்பந்தன் – விக்னேஸ்வரன்

DEC 26, 2015

இந்தப் பேச்சுக்களில் எமக்கிடையில் ஒரு ஒற்றுமையை கண்டுள்ளோம். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படுவதும் மற்றும், மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் செயற்படுவது எம் இருவரும் இடையில் ஒரேவிதமான கருத்தே உள்ளது.

எங்களுடைய கருத்தில் நோக்கில், ஒருமைப்பாடு இருப்பதை நான் காண்கிறேன். பாதைகள் வேறுபட்டதாக இருந்தாலும், எடுத்திருக்கும் முடிவுகள் ஒரே நோக்கை கொண்டிருப்பதாக இருப்பதால், எம்மால் சேர்ந்து இணைந்து முன்னேற முடியும் என்று கருதுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவை தொடரும்.....

  • தொடங்கியவர்

சம்பந்தருடனான சந்திப்பில் புரிந்துணர்வு ஏற்பட்டது: விக்னேஸ்வரன்

சம்பந்தருடனான தனது முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்

 சம்பந்தருடனான தனது முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனும் வெள்ளியன்று மாலை நேரில் சந்தித்து பல மணிநேரம் பேசியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் நிலவிய முறுகல் நிலை மாறி புரிந்துணர்வு நிலை ஏற்பட்டிருப்பதாகத் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

கொழும்பில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில் "முரண் நிலைக்குக் காரணமான பல விடயங்கள் குறித்து, மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி விரிவாகவும் சுமுகமாகவும் பேசப்பட்டதாக" விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சி வி விக்னேஸ்வரனும் இரா சம்பந்தரும் (ஆவணப்படம்)சி வி விக்னேஸ்வரனும் இரா சம்பந்தரும் (ஆவணப்படம்)

இந்தப் பேச்சுக்களையடுத்து தனக்கும் சம்பந்தனுக்கும் இடையில் "பல விடயங்களில் நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் தொடர்பின்றியும் கருத்துக்களைப் பரிமாறாதிருந்தமையுமே தவறான புரிதல்கள் அல்லது முரண்பட்ட நிலைமைக்குக் காரணம் என்பதைத் தாங்கள் இப்போது உணர்ந்துள்ளதாகவும்" விக்னேஸ்வரன் பிபிசியிடம் கூறினார்.

அண்மையில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு விக்னேஸ்வரன் தலைமை தாங்கியமை பற்றியும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்கள் பேரவையானது அரசியல் அமைப்பல்ல என்று கூறிய விக்னேஸ்வரன், இந்த அமைப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதல்ல என்பதை சம்பந்தனுக்கு தான் எடுத்துக் கூறியதையடுத்து மக்களுக்கு நன்மை செய்யத்தக்க காரியங்கள் பிழையானதல்ல என்பதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151226_vigneswaran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.