Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேவைக்கு வராமலே மூழ்கியது அனலைதீவு அம்புலன்ஸ் படகு!

Featured Replies

சேவைக்கு வராமலே மூழ்கியது அனலைதீவு அம்புலன்ஸ் படகு!
சேவைக்கு வராமலே மூழ்கியது அனலைதீவு அம்புலன்ஸ் படகு!

அனலைதீவு பகுதி மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 60 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்து வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு சேவையை ஆரம்பிக்காமலேயே குறிகட்டுவான் துறைமுகப் பகுதியில் கடலில் மூழ்கியது.

குறிகட்டுவான் துறைமுகத்தில் இந்தப் படகு தரித்து நின்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாகவே மூழ்கியதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் சிறிய கடற்கொந்தளிப்பிற்கே ஈடுகொடுக்க முடியாத குறித்த படகை நோயாளர் சேவைக்கு எப்படி பயன்படுத்த முடியும் என அனலைதீவு பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன், இதுகுறித்த தமது அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

தமது அவசர மருத்துவ தேவகைளுக்காக அம்புலன்ஸ் படகொன்றை வழங்குமாறு அனலைதீவு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை ஏற்றே வடமாகாண சபை 60இலட்சடம் ரூபா செலவில் இந்தப் படகைக் கொள்வனவு செய்து வழங்கியது.இந்நிலையிலேயே சேவையை ஆரம்பிக்க முன்னரே அது கவிழ்ந்தது.

திட்டமிடல்கள் இன்றியும் குறித்த பகுதி கடலின் தன்மை குறித்து ஆராயாமலும் படகு கட்டுமானம் இடம்பெற்றமையே இந்நிலைக்குக் காரணமென அனலைதீவு பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பிரதேச கடல் ஓட்டிகளின் ஆலாசனைகளைப் பெற்று படகுக்கட்டுமானங்களை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான வீண் விரயத்தைத் தடுத்திருக்க முடியும் எனவும் அவர் கூறினர்.

மேலும் இந்தப் படகு தீவகக் கடற்பரப்பில் செலுத்துவதற்கு பொருத்தமானதல்ல. இதனை சேவையில் ஈடுபடத்துவதனூடாக விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

http://onlineuthayan.com/news/5811

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் விக்கி சம்பந்தப்பட்ட மாகாண சபை.. சம்பந்தப்பட்டிருப்பதால்.. படகு கவிழ்ந்தது.. பெரிய நஸ்டமாகக் காட்டி செய்தி போட்டிருக்கு உதயன் - நல்ல விடயம்.

ஏதோ மாகாண சபைதான் படகை கட்டின கணக்கா போகுது கதை. உதை வாங்கினது... ஏலவே திருத்ததிற்கு போனது.. இப்ப கவின்டிட்டுது. படகை கட்டி விற்றவையிடம் இது தொடர்பில் நஸ்ட ஈடு மற்றும் காப்புறுதி பணம் பெற்று கள நிலைமைக்கு ஏற்ற.. நல்ல படகா வாங்குவதே சிறந்தது.

 

===============================

யாழ் அனலைதீவு மக்களின் அவசர வைத்திய சேவைக்கென வடமாகண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் (5மில்லியன்) ரூபா செலவில் புதிதாக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு இன்று குறிகட்டுவான் இறங்கு துறை முகத்தில் பழுதடைந்த நிலையில் திருத்தப் பணிகளுக்காக மக்கள் சேவைக்கு என வரவளைக்கப் பட்ட படகு மாதங்கள் கடப்பதற்குள் இப்படி திருத்தப் பணிகளுக்காக சென்றால் அடுத்து என்ன நடக்கும் விரைந்து செயற்படுங்கள் மக்கள் தலைவர்களே.

ananalai_ambu_boat_01.jpg

ananalai_ambu_boat_02.jpg

ananalai_ambu_boat_03.jpg

ananalai_ambu_boat_04.jpg

ananalai_ambu_boat_05.jpg

படங்கள் + செய்தி (பழையது) நியூயவ்னா.கோ

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.