Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லேயர் மீன் பிரியாணி

Featured Replies

16-bengali-style-fish-biryaniதேவையான பொருட்கள்:

 

* வஞ்சரை மீன் அல்லது பாறை மீன் – 2 கிலோ
* பாசுமதி அரிசி – 1 கிலோ
* எண்ணெய் – 200 மில்லி
* நெய் – 50 மில்லி
* வெங்காயம் – 1 கிலோ
* தக்காளி – 1 கிலோ
* மிளகாய் – 7-10 காரம் தேவைக்கு
* தயிர் – 100 மில்லி
* எலுமிச்சை – 1
* இஞ்சி பூண்டு – 2 மே.கரண்டி
* ஏலம்,பட்டை,கிராம்பு – தலா 2
* மிளகாய்த்தூள் – 2 – 3 மே.கரண்டி
* மஞ்சள் தூள் – 1 மே.கரண்டி
* கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன்
* புதினா – 2 டேபிள்ஸ்பூன்
* குங்குமப்பூ – சிறுது
* முந்திரி பருப்பு – தேவைக்கு
* உப்பு – தேவைக்கு

செய்முறை:

மீனை நன்றாக அலசி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிரட்டி அலசி தண்ணீர் வடிகட்டி வைக்கவும்.
சுத்தம் செய்த மீனில் தேவைக்கு மிள்காய்தூள் , மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து விரவி ஒரு மணி நீரம் ஊற வைக்கவும்.
பாஸ்மதி அரிசியினை இருபது நிமிடங்கள் அலசி ஊற வைக்கவும். ஊறிய பிறகு அரிசியினை வடிகட்டிவிடவும். ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஏலம்,பட்டை,கிராம்பு விரும்பினால் போட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது அரிசியினை போடவும். தேவைக்கு உப்பு சேர்க்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்த பின்பு அரிசியினை வடிகட்டி தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்த பின்பு மீனை போட்டு பொறித்து எடுக்கவும். அதிகமாக பொரியவிடாமல் சாப்ட்டாக பொறித்து தனியாக வைக்கவும். முந்திரி பருப்பு போட்டு பொன்வறுவலாக வதக்கி தனியாக வைக்கவும்.

அதே எண்ணெயில் மெலிதாக நீட்டமாக நறுக்கிய வெங்காயத்தினை போட்டு பொன்னிறமாக பொறிக்கவும்.
பொறித்த வெங்காயத்தில் பாதி வெங்காயத்தினை எடுத்து தனியாக வைக்கவும்.
வாணலியில் பொரிந்த வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர் ,ஏலம்,பட்டை,கிராம்பு போட்டு வதக்கவும் . பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்.

இதனுடன் தேவைக்கு மிளகாய்த்தூள் , இரண்டாக கீறிய பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, புதினா உப்பு சேர்த்து வதக்கவும் . நன்றாக வதங்கிய பிறகு பொறித்த மீன் துண்டுகளை போட்டு மூடி போட்டு குறைந்த தணலில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும். மீன் போட்ட பின்பு சட்டியினை கிளற வேண்டாம். அதிகம் கிளறினால் மீன் உடைந்துவிடும்.

லேயர் மீன் பிரியாணி தம் போடும் முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் சிறுது உதிரியாக வடித்த சாதம் அதன் மேலே சிறுது பொறித்த வெங்காயம் இதன் மேலே மீன் துண்டுகளுடன் இருக்கும் மசாலா போடவும் அடுத்த லேயர் சோறு மேலே பொறித்த வெங்காயம் மீன் கலவை இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக போடவும். கடைசி லேயர் மேலே பொறித்த மீன் கலவை போட்டு பொறித்த வெங்காயம், பொறித்த முந்திரி ,எலுமிச்சை சாறு, சிறுது பாலில் குங்குமப்பூ கலந்து பிரியாணி மேலே சுற்றி வரை ஊற்றவும்.
சட்டியினை இருக்கமான மூடி போட்டு மூடி அதன் மேலே கனமான பொருள் ஏதாவது வைத்து 15 – 20 நிமிடங்கள் குறைந்த தணலில் வேக வைக்கவும்.
கால் மணி நேரம் கழித்து மூடியினை திறந்து ஒரு பக்கமாக மேலிருந்து கீழே வரை மிக்ஸ் செய்து நடுவில் உள்ள மீன் உடையாமல் பரிமாறவும்.
சூடான சுவையான லேயர் மீன் பிரியாணி ரெடி…

http://ekuruvi.com/layer-of-fish-biriyaninov062014/ekuruviTamilNews

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரான அயிட்டம் .....! ஒரு பத்துப் பேருடன் விருந்து வைக்க ஏற்றது....! :)

நல்லாதான் இருக்கு.

நன்றி இணைப்பிற்க்கு...:)

  • கருத்துக்கள உறவுகள்

மீன் பிரியாணி நான் சாப்பிட்டதேயில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எப்போதும் புதுசு புதுசாக சமைத்து சுவைக்க ஆசை ..... அந்த ஆசையை பூர்த்தி செய்வதுபோல இந்த திரியில் பல புதிய சமையல் குறிப்புக்களை இணைத்து வருகின்ற உறவுகளுக்கு நன்றிகள் ...... அந்தவகையில் லேயர் மீன் பிரியாணியை இணைத்த மீனாவுக்கும் நன்றிகள் .. 

  • தொடங்கியவர்
14 hours ago, suvy said:

சூப்பரான அயிட்டம் .....! ஒரு பத்துப் பேருடன் விருந்து வைக்க ஏற்றது....! :)

நன்றி வரவுக்கும் கருத்துக்கும் சகோ!

8 hours ago, நவீனன் said:

நல்லாதான் இருக்கு.

நன்றி இணைப்பிற்க்கு...:)

நன்றி வரவுக்கும் கருத்துக்கும் சகோ!

8 hours ago, ரதி said:

மீன் பிரியாணி நான் சாப்பிட்டதேயில்லை

உங்க நாட்டில் தானே சுமோ இருக்கிறா ஒருக்கா விசிட் பண்ணுங்கோ... மீன் பிரியாணி ரெடியாய் வைத்திருப்பா :)

 

7 hours ago, தமிழரசு said:

எனக்கு எப்போதும் புதுசு புதுசாக சமைத்து சுவைக்க ஆசை ..... அந்த ஆசையை பூர்த்தி செய்வதுபோல இந்த திரியில் பல புதிய சமையல் குறிப்புக்களை இணைத்து வருகின்ற உறவுகளுக்கு நன்றிகள் ...... அந்தவகையில் லேயர் மீன் பிரியாணியை இணைத்த மீனாவுக்கும் நன்றிகள் .. 

நன்றி வரவுக்கும் கருத்துக்கும் சகோ!

இணைப்புக்கு நன்றி

வஞ்சிர மீன் என்பது king fish ஆ?

 

On ‎1‎/‎6‎/‎2016 at 9:34 AM, ரதி said:

மீன் பிரியாணி நான் சாப்பிட்டதேயில்லை

கேரள உணவுக் கடைகளில் மீன் பிரியாணிதான் ஸ்பெசல். லண்டன் பக்கம் கேரள உணவு விடுதி இருந்தால் ஒருக்கா போய் சாப்பிட்டு பாருங்கள்.

டொரொண்டோ வில் உள்ளவர்கள் கைரலி அல்லது காரைக்குடி யில் சாப்பிட்டு பார்க்கலாம். நன்றாக இருக்கும்

21 minutes ago, நிழலி said:

இணைப்புக்கு நன்றி

வஞ்சிர மீன் என்பது king fish ஆ?

 

கேரள உணவுக் கடைகளில் மீன் பிரியாணிதான் ஸ்பெசல். லண்டன் பக்கம் கேரள உணவு விடுதி இருந்தால் ஒருக்கா போய் சாப்பிட்டு பாருங்கள்.

டொரொண்டோ வில் உள்ளவர்கள் கைரலி அல்லது காரைக்குடி யில் சாப்பிட்டு பார்க்கலாம். நன்றாக இருக்கும்

அதேதான் நிழலி

 

English Name Hindi Name Tamil Name Malay Name
Shark   சுரா மீன் Ikan Yu
Sardines Chareeaddee Machli, Pedvey மத்தி மீன், சூடை மீன் Ikan Selayang, Ikan Tamban
Stingray   திருக்கை மீன் Ikan Pari
Seabass   கொடுவாய் மீன் Ikan Siakap
Saw fish   கோலா மீன்  
Squid   ஊசிக் கணவாய் Sotong
Shrimp, Prawn Jhinga இரால்  
Red Snapper Rane சங்கரா மீன், சிவப்பு மீன் Ikan Merah
Seer fish, King fish Surmai வஞ்சிரம் மீன்  
Little Tunny   சூரை  
Anchovies   நெத்திலி மீன், நெத்திலிப்பொடி Ikan Bilis
Crab   நண்டு Kekda
Cod Gobro பண்ணா மீன்  
Cat fish Sangot கெளுத்தி மீன் Ikan Duri
Cuttle   கணவாய் மீன் Sotong
Halibut   போதா மீன்  
Butter fish Paplet விரால் மீன்  
Barracuda   ஷீலா மீன்  
Pomfret   வௌவால் மீன் Ikan Bawal
Mackerel Tonki காணாங்கெளுத்தி மீன் Ikan Kembong
Eel   விலாங்கு மீன் Belut
Ribbon Bale வாலை மீன்  
Tilapia   கறி மீன்  
Leather skin fish   தேரா மீன்  
Malabar Trevally   பாரை மீன்  
Yellow Tuna  

கீரை மீன்

 

http://tamilcube.com/glossaries/indian-fish-namhttp://www.pinkandpink.com/2013/07/fish-names-in-English-Tamil-Telugu-Malayalam-Kannada-Hindi-Marati-Bengali.htmles.aspx

Ikan Kayu

 

 

 

 

 

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.