Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி

 

வேலுர் மட்டன் தம் பிரியாணி மிகவும் பிரபலம். இன்று வீட்டிலேயே எளிய முறையில் வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
வேலூர் மட்டன் ‘தம்’ பிரியாணி செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

மட்டன் - ஒரு கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
இஞ்சி விழுது - 50 கிராம்
பூண்டு விழுது - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
தயிர் - 200 மி.லி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ஏலக்காய் - 2
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
புதினா - 4 சிறிதளவு.
எலுமிச்சை - ஒரு பழத்தின் ஜூஸ்
ரீஃபைண்டு கடலை எண்ணெய் - 1/4 லிட்டர்
அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாஸ்மதி) - ஒரு கிலோ
உப்பு - தேவையான அளவு

201705251525313481_mutton-dum-biryani._L

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

* ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணெய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும் வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.

* இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

201705251525313481_mutton-dum-biryani._L

* அடுத்து மிளகாய் தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.

* தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் வேக விட வேண்டும்.

* பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும். அதில் ஊற வைத்த அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேக விட்டு தண்ணீரை வடித்து விட வேண்டும். எலுமிச்சைச் சாறு விடுவதால் அரிசி உடையாது.

* இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சைச் சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை வதக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.

* அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில்(ஓரத்தில்) ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.
தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம்.

* 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
Link to comment
Share on other sites

ஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார்

சின்ன வெங்காயத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சின்ன வெங்காயத்தை வைத்து ஈஸியான முறையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார்
 
தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 20 (தோல் உரிக்கவும்),
புளி - எலுமிச்சைப் பழ அளவு,
தக்காளி - 1
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 3,
கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

201705271210383631_small-onion-sambar._L

செய்முறை :

* துவரம்பருப்பை குழைவாக வேக வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்.

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

* தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர், தக்காளியை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொதித்ததும் கரைத்த புளியை ஊற்றவும்.

* அடுத்து அதில் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

* இதனுடன் வேகவைத்து மசித்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.  

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ஈஸியான சின்ன வெங்காய சாம்பார் ரெடி.
Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு விருப்பமான கிரீன் மசாலா மீன் பிரை

 

குழந்தைகள் மீன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். மீனில் குழம்பு, வறுவல் செய்து இருப்பீங்க. ஆனால் கிரீன் மசாலா வைத்து செய்யும் இந்த மீன் பிரை சூப்பராக இருக்கும்.

 
குழந்தைகளுக்கு விருப்பமான கிரீன் மசாலா மீன் பிரை
 
தேவையான பொருட்கள் :

துண்டு மீன் - ½ கிலோ
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

அரைக்க :

பூண்டு - 6 பல்
பச்சைமிளகாய் - 5
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
சோம்பு - ¼ தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிதளவு
புதினா - ஒரு கைப்பிடி

201705261258319820_green-masala-fish-fry

செய்முறை :

* முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

* மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மீனில் தடவி பிரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீனை போட்டு பொரித்தெடுக்கவும்.

* சுவையான கிரீன் மசாலா மீன் பிரை தயார்.
Link to comment
Share on other sites

சூப்பரான சைடிஷ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி

பிரியாணி, புலாவ், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் இந்த மட்டன் சாப்ஸ். இன்று இந்த மட்டன் சாப்ஸை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

 
 
சூப்பரான சைடிஷ் மட்டன் சாப்ஸ் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

மட்டன் - 1 கிலோ
தேங்காய்ப்பால் - அரை கப்(திக்கான பால்)
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்பொடி - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
கரம்மசாலா பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

201705301256532169_Mutton-Chops._L_styvp

செய்முறை :

* மட்டனை கழுவி சுத்தம் செய்த பின் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு அதனுடன் தேங்காய்ப்பால், மஞ்சள்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, கரம் மசாலா பொடி, உப்பு மற்றும் மிளகாய்ப்பொடி போட்டு பிசறி 1/2 மணி நேரம் ஊற விடவும்.

* ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் ஊறவைத்துள்ள மட்டனை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து தண்ணீர் வற்றும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

* மட்டனில் தண்ணீர் வற்றியதும் மட்டன் நிறம் மாறும்.

* அப்போது அரை டம்ளர் தண்ணீர் தெளித்து கிளறி விட்டு குக்கரை மூடி 8விசில் விட்டதும் இறக்கவும்.

* குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளறவும்.

* மசாலா அனைத்து மட்டனுடன் சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான மட்டன் சாப்ஸ் ரெடி.
Link to comment
Share on other sites

ஸ்பைஸி காளான் பிரியாணி செய்வது எப்படி

 

அசைவத்திற்கு இணையான மாற்று காளான். இன்று காளான் வைத்து ஸ்பைஸியான பிரியாணியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
ஸ்பைஸி காளான் பிரியாணி செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - ஒரு கப்,
நறுக்கிய பட்டன் காளான் - ஒரு கப்,
தக்காளி, வெங்காயம் - தலா 2
ரெட் சில்லி சாஸ், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சி - சிறிய துண்டு,
உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - நெய் கலவை, உப்பு - தேவையான அளவு.

201706011253280763_spicy-Mushroom-biryan

செய்முறை :

* இஞ்சி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* அரிசியைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.

* வாணலியில் சிறிதளவு நெய் விட்டு அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

* தக்காளியைச் சுடுநீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, தோலை உரித்து விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய் - நெய் கலவையைச் சேர்த்து, சூடானதும் பட்டன் காளான் சேர்த்து... இஞ்சி, வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து அதில் தக்காளிச் சாறு ஊற்றி பச்சை வாசனை போன வதக்கவும்.

* அடுத்து தேவையான நீர் சேர்த்துக் கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, குக்கரை `வெயிட்’ போட்டு மூடி, 2 விசில் வந்த உடன் நிறுத்தவும்.

* ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கிளறி சூடாகப் பரிமாறவும்.

* சூப்பரான ஸ்பைஸி மஷ்ரூம் பிரியாணி ரெடி.
Link to comment
Share on other sites

சத்து நிறைந்த குடமிளகாய் - அன்னாசி சாலட்

உடல்பருமன் உள்ளவர்களுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இந்த சாலட் மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஒரு சாலட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

 
சத்து நிறைந்த குடமிளகாய் - அன்னாசி சாலட்
 
தேவையான பொருட்கள் :

அன்னாசிப்பழம் - 3 துண்டுகள்,
குடமிளகாய் - 1,
வெள்ளரிக்காய் - பாதி,
உப்பு - தேவைக்கு,
மிளகுத் தூள் - அரை ஸ்பூன்,
ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - தேவைக்கு,
எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு.

201706020907562031_capsicum-pineapple-sa

செய்முறை :

* அன்னாசிப்பழம், வெள்ளரி, குடமிளகாயைச் சதுரமாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய அன்னாசிப்பழம், வெள்ளரி, குடமிளகாயை போட்டு அதனுடன் உப்பு, மிளகுத் தூள், ரெட் சில்லி ஃப்ளேக்ஸைத் தூவி நன்றாக கிளறவும்.

* கடைசியாக அதில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு பரிமாறவும்.

* குடமிளகாய் - அன்னாசி சாலட் ரெடி.
Link to comment
Share on other sites

சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி

சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்தது இந்த கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி. இன்று இந்த இட்லி செய்முறையை பார்க்கலாம்.

 
சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி
 
தேவையான பொருட்கள் :

ரவை - 1 கப்,
உப் - தேவைக்கு,
தயிர் - 1 கப்,
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பச்சைப்பட்டாணி யாவும் கலந்து - 1 கப்,
வெங்காயம் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 4,
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
நெய் - 1 டீஸ்பூன்.

201706050908583106_wheat-rava-vegetable-

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிது நெய் விட்டு ரவையை வறுத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையை போட்டு அதனுடன் தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.

* கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் கேரட், பச்சைப்பட்டாணி, பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.

* காய்கறிகள் நன்கு வதங்கியதும் பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த ரவை கலவையில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.

* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

* சத்தான சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் இட்லி ரெடி.
Link to comment
Share on other sites

சப்பாத்தி, பரோட்டாவிற்கு சூப்பரான சைடிஷ் பஞ்சாபி சிக்கன்

 

சப்பாத்தி, பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். பஞ்சாபி சிக்கன் கறி எப்படி சமைப்பது எனப்பார்ப்போம்.

 
சப்பாத்தி, பரோட்டாவிற்கு சூப்பரான சைடிஷ் பஞ்சாபி சிக்கன்
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
தயிர்  -  3/4 கப்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு.

அரைப்பதற்கு :

பெரிய வெங்காயம் -  3
தக்காளி - 3
கிராம்பு - 2
மிளகு - 5
ஏலக்காய் - 3
மல்லித்தூள்  - 1 டீஸ்பூன்

201706061255491960_punjabi-chicken-curry

செய்முறை :

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.

* மசாலா நன்றாக வதங்கியதும் அதில் சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு அடுப்பை மிதான தீயில் வைத்து சிக்கனை வேக விடவும்.

* சிக்கன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான பஞ்சாபி சிக்கன் ரெடி.

* இந்த பஞ்சாபி சிக்கன் சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஏற்ற பக்கா உணவாகும்.
Link to comment
Share on other sites

சூப்பரான சத்தான டபுள் பீன்ஸ் பிரியாணி

 

பிரியாணியில் நிறைய வெரைட்டிகள் உள்ளது. இன்று டபுள் பீன்ஸ் வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான சத்தான டபுள் பீன்ஸ் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - ஒரு கப்,
டபுள் பீன்ஸ் - அரை கப்,  
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு,
வெஜிடபிள் ஸ்டாக் - 2 கப்
அன்னாசிப்பூ, உலர்வெந்தயக்கீரை - சிறிதளவு.
கொத்தமல்லி தழை - சிறிதளவு

அரைக்க :

பட்டை - அரை அங்குலத் துண்டு,
இஞ்சி - அரை அங்குலத் துண்டு,
சின்ன வெங்காயம் - 10 (உரிக்கவும்),
பச்சை மிளகாய் - 4,
பூண்டுப் பல் - 2,
க்ரீன் சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,

201706071241022678_double-beans-biryani.

செய்முறை :

* அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு சிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக்கொள்ளவும்.

* அரிசியை 10 நிமிடங்கள் நீரில் ஊறவைத்து, நீரை வடிக்கவும்.

* வாணலியில் நெய்விட்டு சூடாக்கி, அரிசியைச் சில நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்.

* குக்கரில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, டபுள் பீன்ஸ், உப்பு சேர்த்துக் கிளறவும்.

* அடுத்து அதில் க்ரீன் சில்லி சாஸ், அன்னாசிப்பூ, உலர் வெந்தயக் கீரைச் சேர்த்துக் கிளறவும்.

* பிறகு, வெஜிடபிள் ஸ்டாக் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசி சேர்த்து, குக்கரை மூடி வெயிட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆவி விட்டதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லி தழை தூவிப் பரிமாறவும்.

* சூப்பரான டபுள் பீன்ஸ் பிரியாணி ரெடி.

குறிப்பு: வீட்டில் இருக்கும் காய்கறிகளை அலசி, நறுக்கி நீர்விட்டு குக்கரில் வேகவிட்டு மசித்து நீரை வடிகட்டி, பயன்படுத்தவும். இதுவே வெஜிடபிள் ஸ்டாக் ஆகும்.
Link to comment
Share on other sites

சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் சாதம்

 

வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெண்டைக்காயை வைத்து செட்டிநாடு முறையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் சாதம்
 
தேவையான பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் - 1 1/2 கப்
வெண்டைக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கெட்டியான புளிக்கரைசல் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

201706081313109157_Chettinad-Vendakkai._

செய்முறை :

* வெங்காயம், வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை இட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும்.

* வெண்டைக்காய வெந்ததும் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பட்டை பொடி, மிளகுத்தூள், உப்பு, கெட்டியான புளிக்கரைசல் சேர்த்து வெண்டைக்காயை நன்றாக கிளறி விட்டு வேக வைக்கவும்.

* மற்றொரு கடாயை எடுத்து 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, முந்திரி இட்டு பொரிந்ததும் அதில் வெண்டைக்காயை கலவையைச் சேர்க்கவும்.

* அதனுடன், வேக வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.

* குறைவான தீயில் 5 நிமிடங்கள் கிளறி விட்டு உப்பு சரிபார்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான செட்டிநாடு வெண்டைக்காய் சாதம் ரெடி!
Link to comment
Share on other sites

சன்டே ஸ்பெஷல்: சூப்பரான சுறா புட்டு

மிகவும் எளிதில் செய்யகூடியது இந்த சுறா புட்டு. இந்த சுறா புட்டை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

 
சன்டே ஸ்பெஷல்: சூப்பரான சுறா புட்டு
 
தேவையான பொருட்கள் :

சுறா மீன் - 1/4 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை  - சிறிதளவு
கடுகு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -  சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

201706101533458254_sura-meen-puttu._L_st

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சுறா மீனை சுத்தம் செய்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் வேக வைக்கவும். வெந்ததும் அதை ஆறவைத்து நன்றாக ஆறியதும் சுறா மீனின் தோலை நீக்கி நன்றாக உதிர்த்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு பொரிந்ததும் பொடியாக பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

* பின்னர், இஞ்சி, பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அடுப்பின் தீயை குறைத்து அதில், உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து நன்றாக கிளறவும்.

* மீன் நன்றாக உதிரி உதிரியாக வரும் வரை கிளறி விடவும்.

* கடைசியாக உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

* நாக்கை சுண்டி இழுக்கும் சுறா புட்டு ரெடி!
Link to comment
Share on other sites

சூப்பரான சைடிஷ் முட்டை பக்கோடா குழம்பு

முட்டையில் ஆம்லெட், போண்டா, செய்து இருப்பீங்க. ஆனால் இன்று ஆனால் முட்டையைக் வைத்து பக்கோடா செய்து, அந்த பக்கோடாவை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான சைடிஷ் முட்டை பக்கோடா குழம்பு
 
தேவையான பொருட்கள் :

பக்கோடாவிற்கு...
 
 
முட்டை - 4
உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

குழம்பிற்கு...

வெங்காய பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

201706131557214414_egg-pakoda-curry._L_s

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

* கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு ஸ்பூன் கொண்டு கிளறி விட வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் 1 டேபிள் ஸ்பூன் முட்டைக் கலவையை ஊற்றி பக்கோடா போன்று, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் பக்கோடாக்களாக போட்டுக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காய பேஸ்ட் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி பச்சை வாசனை போனவுடன் அரைத்த தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து  நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்பு உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரைட்டி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

* இறுதியில் பொரித்து வைத்துள்ள பக்கோடாக்களைப் போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவி இறக்கி பரிமாறவும்.

* சுவையான முட்டை பக்கோடா குழம்பு ரெடி.
Link to comment
Share on other sites

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

சப்பாத்தி, பூரி, நாண், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா சூப்பராக இருக்கும். இன்று இந்த குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு…

சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 8
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி - 3 டேபிள் ஸ்பூன்
புதினா - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 1/2 கப்

201706141528080264_chettinad-chicken-kur

செய்முறை :

* புதினா, கொத்தமல்லி, தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

* மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கிய பின்னர், தக்காளியை சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்து-5 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 8 நிமிடம் கிளறி விட வேண்டும்.

* பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா ரெடி.
Link to comment
Share on other sites

ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் சாப்பிட கோங்கூரா சிக்கன் சூப்பராக இருக்கும். இன்று கோங்கூரா சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
ஆந்திரா ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
புளிச்சக்கீரை / கோங்குரா  - 1 கட்டு
 
பெரிய வெங்காயம் - 1+1
பச்சை மிளகாய் - 6
இஞ்சி பூண்டு நறுக்கியது - தலா 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் குவியலாக
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -  ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு.

201706151519211876_Gongura-Chicken._L_st

செய்முறை :

* கீரையை நன்றாக மண் போக அலசிக் கொள்ளவும். பின்பு இலையை மட்டும் உபயோகிக்கவும்.

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சுத்தம் செய்த கீரை, சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இது வெண்டைக்காய் மாதிரியே கொஞ்சம் கொழ கொழன்னு வரும். கீரை நல்ல புளிப்பாக இருக்கும். நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

* அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

* அடுத்து சிக்கனை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.

* மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சிக்கன் சுவைக்கு உப்பு சேர்த்து வதக்கவும்.

* அரை கப் தண்ணீர் சேர்த்து சிக்கனை மூடி வேக விடவும்.

* சிக்கன் வெந்த பின்பு தயார் செய்த கோங்குரா விழுதை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும். நன்றாக கொதித்து சிக்கனும் கீரை விழுதாக சேர்ந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

* கீரையே புளிக்கும், தயிரோ தக்காளியோ சேர்க்க தேவையில்லை. இதற்கு காரம்,உப்பு சிறிது அதிகமாகத் தேவைப்படும்.

* சுவையான ஆந்திரா கோங்கூரா சிக்கன் ரெடி.

* இது சாதம், சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரியாணியுடன் கூட பரிமாறலாம். பருப்பு சோற்றுடன் சூப்பர்.
Link to comment
Share on other sites

சூப்பரான சிக்கன் - முட்டை பொடிமாஸ்

ஞாயிற்றுக்கிழமைகளில் வித்தியாசமாக ஏதாவது செய்து சாப்பிட விரும்பினால் சிக்கன் - முட்டை பொடிமாஸ் செய்யலாம். இந்த பொடிமாஸ் செய்முறையை பார்க்கலாம்.

 
சன்டே ஸ்பெஷல் சூப்பரான சிக்கன் - முட்டை பொடிமாஸ்
 
தேவையான பொருட்கள் :
 
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
சோம்பு
வெங்காயம்  -  2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/ 4டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கரம்மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
முட்டை - 2
கொத்தமல்லி - சிறிதளவு

சிக்கனை வேக வைக்க :

சிக்கன் - அரை கிலோ
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

201706171523437724_chicken-egg-podimas._

செய்முறை :

* தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதில் நிறைய நீர் விட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வேக வைக்கவும்.

* சிக்கன் நன்றாக வெந்ததும் தண்ணீரில் இருந்து தனியாக எடுத்து ஆறவைத்து உதிரி உதிரியாக உதிர்த்து கொள்ளவும்.

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, மஞ்சள் தூள். மிளகாய்த்தூள், உப்பு, 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள், சிக்கன் ஸ்டாக் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் சிக்கன் பொடிமாஸை சேர்த்து டிரையாக உதிரியாக வரும் வரை வதக்கவும்.

* இப்போது அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும்.

* சிக்கன் உதிரியாக பொடிமாஸ் போல் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான சிக்கன் பொடிமாஸ் ரெடி.
Link to comment
Share on other sites

சூப்பரான மதிய உணவு வெஜிடபிள் புலாவ்

 

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக இந்த வெஜிடபிள் புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த புலாவ் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

 
சூப்பரான மதிய உணவு வெஜிடபிள் புலாவ்
 
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 2 கப்
தனியாப் பொடி - 2 டீஸ்பூன்
கரம் மசாலாபொடி - 1 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
தனி மிளகாய்ப் பொடி- தேவைகேற்ப
உப்பு- தேவைகேற்ப
கேரட் - 100 கிராம்
குடைமிளகாய் -  சிறியது 1
வெங்காயம் - 2
பீன்ஸ் - 100 கிராம்
உரித்த பட்டாணி - 1/2 கப்
தக்காளி - 3
காலிபிளவர் - பாதி
கொத்தமல்லி - சிறிதளவு.

அரிசியுடன் தாளிக்க :

ஏலக்காய் - 6
பட்டை - 4
கிராம்பு- 6
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

201706221525395917_Vegetable-Pulao._L_st

செய்முறை :

* கொத்தமல்லி, காலிபிளவர், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாய், கேரடை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

* பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்து கொள்ளவும்.

* கு‌க்க‌ரி‌ல் வெண்ணெயை போட்டு லேசாக உருகியதும் சோம்பு, ஏலக்காய் பட்டை கிராம்பு போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த அரிசியைப் போட்டு, வாசனைவரும் வரை லேசாக வறுக்கவும். 1 : 2 என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைக்க வேண்டும். அ‌ரி‌சியை உ‌தி‌ரியாக வேக வை‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

* வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதற்குள் காரட் பீன்ஸை குக்கரில் ஆவியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் சத்து வீணாகாமல், குழையாமல், நிறம் மாறாமல் இருக்கும்.

* .வெங்காயம் வதங்கிய பிறகு, குடமிளகாய், பட்டாணி, காலிபிளவர் போட்டு நன்கு வதக்கவும். நிறம் மாறாமல், மிருதுவாக ஆன பின் கேரட், பீன்ஸ் போட்டு, பொடி வகைகளையும் போட்டு வதக்கவும். காய்கறி கலவையை அதிகமா வதக்க கூடாது.

* கடைசியில் தக்காளி சேர்த்து வதக்கி, உப்புப் போட்டு பின் கீழே இறக்கி வைக்கவும்.

* ஒரு அகன்ற பாத்திரத்தில் தயாராக இரு‌க்கு‌ம் சாதத்தையும், காய்கறிகளையும் போட்டு கலக்கவும்.

* நன்கு கலந்த பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.

 

 

சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

ஐயங்கார் ஸ்டைல் உணவுகளின் சுவையே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு
 
தேவையான பொருட்கள் :

வெண்டைக்காய் - 10
கத்திரிக்காய் - 1
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு…

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 5
எண்ணெய் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

201706221256099160_vendhaya-kulambu._L_s

செய்முறை :

* வெண்டைக்காய், கத்தரிக்காயை சமமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாதும் ‘வறுத்து அரைப்பதற்கு’ கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* பிறகு அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.

* சிறிது உப்பு சேர்த்து 15 நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்த, பின் இறுதியில் அதனை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு ரெடி!!!

 

 

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

 

சாதம், தயிர் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மிளகு வறுவல். இன்று இந்த வறுவல் செய்முறையை பார்க்கலாம்.

சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
 
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 200 கிராம்
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 அல்லது 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகு  - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்றவாறு

201706201525023601_potato-pepper-fry12._

செய்முறை :

* மிளகை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும்.

* அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும்.

* அனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.

* அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

* சூப்பரான சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.
Link to comment
Share on other sites

சன்டே ஸ்பெஷல் முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

 முனியாண்டி விலாஸ் ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்துவது என்று பார்க்கலாம்.

சன்டே ஸ்பெஷல் முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - 1 கிலோ (தோல் நீக்கியது)
வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 3 மீடியம் சைஸ்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சிக்கன் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தே.அளவு
அரைத்த தேங்காய் விழுது - 1/2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி இழை - 10 தண்டுகள்
வெங்காயத்தாள் - 1 தண்டு (optional)
எண்ணெய் - 3 டே.ஸ்பூன்

அரைக்க :

இஞ்சி - 2 இஞ்ச் அளவு
பூண்டு - 10 பெரிய பல்
வரமிளகாய் - உங்கள் சுவைக்கு ஏற்ப
கிராம்பு/லவங்கம் - 10
பட்டை - 2 இஞ்ச்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்

201706241520039750_Muniyandi-Vilas-Chick

செய்முறை :

* முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* தக்காளி, வெங்காயத்தாள், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* ஒரு அடி கனமான அழமான பத்திரத்துல 3 டே.ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* பச்சை வாசனை போன பிறகு நீளமா நறுக்கி வச்ச வெங்காயம் கூட கொஞ்சமா உப்பு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கணும்.

* இப்போ மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிக்கன் மசாலா தூள் சேர்த்து 1 நிமிஷம் கிளறவும்.

* அடுத்து அதில் நறுக்கின தக்காளி, கறிவேப்பிலை சிறிதளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கணும்.

* இந்த ஸ்டேஜ்ல சிக்கன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் விட தேவையில்லை. வேகும் போது சிக்கனில் இருந்து தண்ணீர் விடும். அதுவே போதுமானது.

* சிக்கன் நன்றாக வெந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல கொதிக்க விட்டு எண்ணெய் மிதக்கும் போது அடுப்பை அணைத்து நறுக்கிய கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து கிளறி மூடி வச்சுடுங்க.

* சூப்பரான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு ரெடி.

* இது ரைஸ், பரோட்டா, சப்பாத்தி, குஸ்கா, பிரியாணி எல்லாத்துக்குமே நல்ல காம்பினேசன்.
Link to comment
Share on other sites

மொகல் மட்டன் பிரியாணி

 

பிரியாணியில் பல வகைகள் உண்டு. இன்று ரம்ஜான் ஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
ரம்ஜான் ஸ்பெஷல் மொகல் மட்டன் பிரியாணி
 
தேவையான பொருட்கள் :

மட்டன் - 1/2 கிலோ
பாசுமதி அரிசி - 2 கப்
தயிர் - 1 கப்
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
மிளகு - 6
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
பிரியாணி இலை - 1
குங்குமப்பூ - 1 சிட்டிகை
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

201706261301223349_mughlai-mutton-biryan

செய்முறை :

* மட்டனை சிறிது துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

* வெங்காயம், ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைக்கவும்.

* மட்டனை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக பிரட்டி, 45 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி விட வேண்டும்.

* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் ஊற வைத்துள்ள மட்டனை போட்டு வதக்க வேண்டும். அதுவும் மட்டனில் அனைத்து மசாலாக்களும் சேருமாறு வதக்கி, மூடி போட்டு 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து மட்டனை வேக வைக்க வேண்டும்.

* அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, மிளகு, ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து 1 நிமிடம் தாளிக்க வேண்டும்.

* அடுத்து முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு தீயை குறைவில் வைத்து வதக்கி விட்டு, பாசுமதி அரிசியை நீரில் கழுவி குக்கரில் போட்டு, அரிசியை 5 நிமிடம் வறுக்க வேண்டும்.

* மட்டனானது பாதி அளவு வெந்து கிரேவி பதம் வந்தவுடன் அதை எடுத்து குக்கரில் அரிசியுடன் சேர்த்து பிரட்டி, 3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, விசில் போடாமல் குக்கரை மூடி 20 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

* மட்டன் மற்றும் அரிசியானது நன்கு வெந்துவிட்டால், அதன் மேல் குங்குமப்பூ பாலை ஊற்றி கிளறி, இறக்கி விட வேண்டும்.

* சூப்பரான மொகல் மட்டன் பிரியாணி ரெடி.
Link to comment
Share on other sites

முட்டை மிளகு மசாலா !!!


வேகவைத்த முட்டை-12
நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
தக்காளி-3
பூண்டு- 6 முதல் 7(நறுக்கப்பட்டது)
மிளகு-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
இஞ்சி- சிறிதளவு
தக்காளி சாஸ்-1/4 கப்


எப்படிச் செய்வது?


கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும். முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி..

Bild könnte enthalten: Essen
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சூப்பரான சைடிஷ் ஆந்திரா குண்டூர் சிக்கன்

ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் ரைஸ், புலாவ், சப்பாத்தி, பரோட்டாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று குண்டூர் சிக்கன் செய்முறையை பார்க்கலாம்.

 
சூப்பரான சைடிஷ் ஆந்திரா குண்டூர் சிக்கன்
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
காய்ந்த சிவப்பு மிளகாய் - 6 (காரம் அவரவர் விருப்பம்)
தனியா - 3 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி (ஏலம், பட்டை, கிராம்பு கலவை)
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 150 கிராம்
புளிக்காத தயிர் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.

201707061252022529_Andhra-Guntur-Chicken

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் துருவல் சேர்த்து இளஞ்சிவப்பாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்கு வதங்கி வாசனை வந்ததும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலா மற்றும் தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி விடவும்.

* கொதி வந்ததும் மூடி போட்டு 20 நிமிடம் தீயை மிதமாக வைத்து வேக விடவும். அடிக்கடி திறந்து பிரட்டி விடவும். எண்ணெய் தெளிந்து கிரேவி கெட்டியாகி இருக்கும்.

* சிக்கன் வெந்த பின்னர் மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

* சூப்பரான குண்டூர் சிக்கன் ரெடி.
Link to comment
Share on other sites

ஆரோக்கியமான சாலட் வகைகள்

 

 

p119a.jpg

``சாலட் என்பது இலையின் ஓர் ஓரத்தில் கொஞ்சமாக வைப்பது இல்லை. வெளிநாடுகளில் ஒரு பெரிய பவுல் நிறைய சாலட் மட்டும் சாப்பிடுவார்கள். அதிலேயே பழங்கள், நட்ஸ், சிறு தானியங்கள், ஸ்ப்ரவுட்ஸ், கொண்டைக்கடலை, ஆலிவ் ஆயில் போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் ஒரு கம்ப்ளீட் உணவாகிவிடும். சாலட்டில் வெறும் காய்கறிகள் / பழங்கள் மட்டுமன்றி சாலட் டிரெஸ்ஸிங் என்று ஒன்றைச் செய்து கலப்பது வழக்கம். இதில் பொதுவாக ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, மயோனைஸ் ஆகியவை சேர்க்கப்படும் (ஆலிவ் ஆயிலுக்குப் பதிலாக ரிஃபைண்ட் ஆயிலை சேர்க்கலாம்). `டயட்’டை மேற்கொள்பவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் ஒரு பவுல் சாலட்டை ஒருவேளை உணவுக்குப் பதில் சாப்பிட்டால் மிகவும் நல்லது’’ என்று சொல்லும் ஹெல்த்தி ஃபுட் எக்ஸ்பெர்ட்  ஜானகி அஸாரியா, இங்கே சத்தான, சுவையான சாலட் வகைகளை வழங்குகிறார்.          

p119n.jpg

வேர்க்கடலை சாலட்

தேவையானவை:

கேரட் - ஒன்று
வெள்ளரிக்காய் - ஒன்று (தோல் சீவவும்)
குடமிளகாய் - பாதியளவு
வெங்காயம் - ஒன்று
வேகவைத்த கார்ன் - அரை கப்
வறுத்த வேர்க்கடலைப்பொடி - 2  டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப           

p119b.jpg

செய்முறை:

கேரட், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைத் துருவிக்கொள்ளவும். வெங்காயம், குடமிளகாய், வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் வேகவைத்த கார்ன், உப்பு, வேர்க்கடலைப்பொடி, எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.


ரஷ்யன் சாலட்

தேவையானவை:

பீன்ஸ் - 10
கேரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
ஆப்பிள் - ஒன்று
தயிர் - ஒரு கப்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு பேஸ்ட் அல்லது கடுகுப் பொடி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப     

p119c.jpg

செய்முறை:

கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். தயிரை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும். பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு  ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி, வேகவைத்து நன்றாக ஆறவிடவும். பிறகு, பொடியாக நறுக்கிய ஆப்பிள், வடிகட்டிய தயிர், உப்பு, மிளகுத்தூள் கடுகு பேஸ்ட் (அ) பொடி ஆகியவற்றை ஆறவைத்த காய்கறிகளுடன்ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: பொதுவாக ரஷ்யன் சாலட்டில் மயோனைஸ் கலப்பது வழக்கம். அதைவிட தயிர் ஆரோக்கியமானது என்பதால் இங்கு தயிர் கொடுக்கப்பட்டுள்ளது.


கொண்டைக்கடலை சாலட்

தேவையானவை:

கொண்டைக்கடலை - அரை கப்
வெங்காயத்தாள் (ஸ்ப்ரிங் ஆனியன்) - 2
சிவப்பு குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், பச்சை குடமிளகாய் - தலா பாதியளவு
லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4
ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - ஒரு பல் (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப      

p119d.jpg

செய்முறை:

கொண்டைக்கடலையை ஊறவைத்து லேசாக உப்பு போட்டு வேகவைக்கவும். வெங்காயத்தாளின் அடியிலுள்ள வெள்ளை வெங்காயம், மூன்று நிற குடமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும்.           

p119m.jpg

வெங்காயத்தாளின் பச்சை பாகத்தைப் பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, உப்பு, நறுக்கிய பூண்டு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி நன்றாக குலுக்கினால் சாலட் டிரெஸ்ஸிங்  தயார்.

வேகவைத்த கொண்டைக்கடலை, நறுக்கிய காய்கறிகள், லெட்யூஸ் இலைகள், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு, சாலட் டிரெஸ்ஸிங்கைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் பச்சை பாகத்தை மேலே தூவிப் பரிமாறவும்


கிரீக் சாலட்

தேவையானவை:

வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய், சிவப்பு குடமிளகாய் - தலா ஒன்று
தக்காளி (கெட்டியானது) - 2
லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4
பனீர்  - 100  கிராம்
ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன்
ஓரிகானோ - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
பூண்டு பவுடர் - அரை டீஸ்பூன் (அல்லது பொடியாக நறுக்கிய பூண்டு - 2 பல்)
உப்பு - தேவைக்கேற்ப     

p119e.jpg

செய்முறை:

குடமிளகாய்கள், தக்காளி ஆகியவற்றை விதைகளை எடுத்துவிட்டு சதுரங்களாக வெட்டவும். வெங்காயம், வெள்ளரிக்காய், பனீர் ஆகியவற்றையும் சதுரமான துண்டுகளாக வெட்டவும். லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். இவை எல்லாவற்றையும் ஒரு பெரிய பவுலில் சேர்க்கவும்.

அகலமான வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ், ஓரிகானோ, பூண்டுப் பொடி அல்லது நறுக்கிய பூண்டு எல்லாவற்றையும் போட்டு மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங். நறுக்கிய காய்கறி கலவையுடன் சாலட் டிரெஸ்ஸிங்கை நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: வெளிநாடுகளில் கிரீக் சாலடில் ஃபெட்டா சீஸ் என்னும் சீஸ் வகையைச் சேர்ப்பது வழக்கம். இதற்குப் பதில் நம் நாட்டில் பனீர் சேர்க்கலாம்).


ஆப்பிள் சாலட்

தேவையானவை:

சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் - தலா ஒன்று
வால்நட் - கால் கப்
உலர்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
லெட்யூஸ் (சாலட் இலைகள்) - 4
வெங்காயத்தாள் (ஸ்ப்ரிங் ஆனியன்) - 3
ஆரஞ்சு ஸ்க்வாஷ் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
கடுகு பேஸ்ட் அல்லது கடுகு பவுடர் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப         

p119f.jpg

செய்முறை:

சிவப்பு ஆப்பிள், பச்சை ஆப்பிள் இரண்டையும் ஒரு மெலன் ஸ்கூப்பர் வைத்து உருண்டை உருண்டையாக வெட்டிக்கொள்ளவும் (மெலன் ஸ்கூப்பர் இல்லையென்றால் கத்தியால் மெல்லிய ஸ்லைஸ்களாக வெட்டிக்கொள்ளவும்). லெட்யூஸ் இலைகளைக் கைகளால் பெரிய துண்டுகளாகப் பிய்க்கவும். வெங்காயத்தாளில் பச்சை பாகத்தைப் பொடியாக நறுக்கவும். அதன் அடியில் உள்ள வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயைச் சூடாக்கி வால்நட்டைப் போட்டு லேசாக ரோஸ்ட் செய்யவும். கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கிறது. கிடைக்காவிட்டால்  ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும்.

அகலமான  வாயுள்ள பாட்டிலில் ஆலிவ் ஆயில், ஆரஞ்சு ஸ்க்வாஷ், எலுமிச்சைச் சாறு, உப்பு, சில்லி ஃபிளேக்ஸ், கடுகு பேஸ்ட் அல்லது கடுகு பவுடர் ஆகியவற்றைப் போட்டு, மூடி கொண்டு மூடியை நன்றாக குலுக்கினால், சாலட் டிரெஸ்ஸிங் தயார்.

சாலட் டிரெஸ்ஸிங் உடன் (வெங்காயத்தாளின் பச்சை பாகம் தவிர) மற்ற எல்லாவற்றையும்  சேர்த்து  நன்றாகக்  கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் பச்சை பாகத்தை மேலே தூவி அலங்கரிக்கவும்.


பச்சை பப்பாளி சாலட்

தேவையானவை:

பப்பாளிக்காய் - ஒன்று (சிறியது)
கேரட், வெங்காயம் - தலா ஒன்று
சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு பவுடர் - ஒரு டீஸ்பூன் (அல்லது நறுக்கிய பூண்டு - 2 பல்)
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலைப்பொடி, -  2 டேபிள்ஸ்பூன்
வறுத்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப          

p119g.jpg

செய்முறை:

பப்பாளிக்காய், கேரட், வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக மெல்லிய குச்சி போல வெட்டி ஒரு பெரிய பவுலில் போடவும். ஒரு பாட்டிலில் வேர்க்கடலைப் பொடி, ஆலிவ் ஆயில், சோயா சாஸ், பூண்டுப் பொடி அல்லது நறுக்கிய பூண்டு, உப்பு, மிளகுத்தூள், சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி, நன்றாகக் குலுக்கவும். இதுதான் சாலட் டிரெஸ்ஸிங்.  இந்த டிரெஸ்ஸிங்கை நறுக்கிய காய்கறிகளுடன் கலந்து, வறுத்த வெள்ளை எள்ளை அதன் மேலே தூவிப் பரிமாறவும்


கேபேஜ் கோல்ஸ்லா

தேவையானவை:

நறுக்கிய பச்சை கோஸ், நறுக்கிய சிவப்பு கோஸ் - தலா ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
வினிகர்  அல்லது எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
கடுகு பேஸ்ட் அல்லது கடுகுப்பொடி - ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப     

p119h.jpg

செய்முறை:

பச்சை கோஸ், சிவப்பு கோஸ், வெங்காயம் ஆகிய காய்கறிகளை நன்றாகக் கழுவி துடைத்து, நீள நீளமாக மெல்லிய குச்சியைப் போல நறுக்கவும். கடுகு பேஸ்ட் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. கிடைக்காவிட்டால் ஒரு டீஸ்பூன் கடுகை மிக்ஸியில் பொடி செய்துகொள்ளவும். தயிரை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி 2 அல்லது 3 மணி நேரம் தொங்கவிட்டு தண்ணீரை வடியவிடவும். வடிகட்டிய தயிருடன் சர்க்கரை, உப்பு, கடுகு பேஸ்ட் (அ) பொடி, மிளகுத்தூள், வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு ஆகிவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் டிரெஸ்ஸிங் தயார். நறுக்கிய காய்கறிகளை ஒரு பெரிய பவுலில் போடவும். இதனுடன் டிரெஸ்ஸிங்கை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: பொதுவாக கோஸ் கோல்ஸ்லாவில் மயோனைஸ் கலப்பது வழக்கம். அதைவிட தயிர் ஆரோக்கியமானது என்பதால் இங்கு தயிர் கொடுக்கப்பட்டுள்ளது.


ராஜ்மா சாலட்

தேவையானவை:

ஊறவைத்து, வேகவைத்த ராஜ்மா, வேகவைத்த கார்ன் - தலா அரை கப்
அவகாடோ, வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், பச்சை மிளகாய், கெட்டியான பெரிய தக்காளி - தலா ஒன்று                                   
பூண்டு - 2 பல்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு டீஸ்பூன்
ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு - தலா 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப      

p119i.jpg

செய்முறை:

பச்சை குடமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.  வெள்ளரிக்காய், அவகாடோ இரண்டையும் தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும் (அவகாடோ கிடைக்கவில்லை என்றால் அதை சேர்க்கத் தேவையில்லை). வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வேகவைத்த ராஜ்மா, வேகவைத்த கார்ன், நறுக்கிய பச்சை குடமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, வெள்ளரிக்காய், அவகாடோ, வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை, புதினா, எலுமிச்சைச் சாறு, உப்பு, ஆலிவ் ஆயில் எல்லாவற்றையும் ஒரு பவுலில் போட்டு கலந்து பரிமாறவும்.


ரோஸ்டட் வெஜிடபிள் கோதுமை ரவை சாலட்

தேவையானவை:

கோதுமை ரவை - கால் கப்
வெங்காயம், வெள்ளரிக்காய், பச்சை குடமிளகாய், சிவப்பு குடமிளகாய், மஞ்சள் குடமிளகாய் - தலா ஒன்று
புரோக்கோலி - பாதியளவு
கெட்டியான தக்காளி - 2
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு - 2 பல்
எலுமிச்சைச் சாறு -  2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு - 7 அல்லது 8
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப     

p119j.jpg

செய்முறை:

கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும். மூன்று கலர் குடமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும். புரோக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

‘அவன்’ ட்ரேயில் ஆலிவ் ஆயிலை ஊற்றி நறுக்கிய கலர் குடமிளகாய், பூண்டு, புரோக்கோலி ஆகியவற்றைப் போட்டு 15 - 20 நிமிடங்கள் நிறம் மாறாமல் ரோஸ்ட் செய்யவும் (இல்லையென்றால் ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய கலர் குடமிளகாய், பூண்டு, புரோக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும்). பிறகு, வதக்கிய குடமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (புரோக்கோலியை நறுக்கத் தேவையில்லை).
வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த கினுவா என்ற தானியம், அல்லது வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்..


ஸ்ப்ரவுட்ஸ் சாலட்

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப்
வேகவைத்து, தோல் உரித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ஒன்று
வேகவைத்த வேர்க்கடலை - அரை கப்
கேரட் - ஒன்று (துருவவும்)
கிளிமூக்கு மாங்காய் - பாதியளவு
(பொடியாக நறுக்கவும்)
வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று
இஞ்சி - சிறிய துண்டு (தோல் சீவவும்)
தோல் சீவி வேகவைத்த பீட்ரூட் (சிறியது) - ஒன்று
சில்லி ஃபிளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப       

p119k.jpg


செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். வேகவைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை தோல் உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். தோல் சீவி வேகவைத்த பீட்ரூட்டை நீள மெல்லிய குச்சிகளாக வெட்டிக்கொள்ளவும். முளைகட்டிய பச்சைப் பயறை லேசாக ஆவியில் வேகவைத்து நன்றாக ஆறவைக்கவும்.

பச்சை பயறு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு துண்டுகள், வேகவைத்த வேர்க்கடலை, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய மாங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை, உப்பு, சில்லி ஃபிளேக்ஸ், எலுமிச்சைச் சாறு எல்லாவற்றையும் ஒரு பெரிய பவுலில் போட்டு நன்றாகக் கலக்கவும். நீளமாக நறுக்கிய பீட்ரூட்டை மேலே தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.   

Link to comment
Share on other sites

சுவையான யாழ்ப்பாண ஒடியல் கூழ் செய்வது எப்படி என்று தெரியுமா?

 
சுவையான யாழ்ப்பாண ஒடியல் கூழ் செய்வது எப்படி என்று தெரியுமா?

யாழ்ப்பாணம் என்றால் நினைவிற்கு வரும் உணவுகளில் பிரதானமானது ஒடியல் கூழ். நினைக்கும்போதே நாவில் சுவையூறும் யாழ் ஒடியல் கூழ் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்

ஒடியல் மா : 1/2 கிலோ
மீன் : 1 கிலோ ( சிறு மீன்கள் உங்கள் விருப்பம்போல்)
நண்டு : 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் மிகவும் நல்லது)
இறால் : 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் : 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் : 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
அரிசி : 50 கிராம்
செத்தல் மிளகாய் : 15 அரைத்தது
பழப்புளி : 100 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.

செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக பசை போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும். அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேசக் கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் சிக்கக் கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம், கூழின் காரத் தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

https://news.ibctamil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஆகா பிளாவில் கூழ் குடிக்கிறார், யாழ்பாணத்தில வடலிக்கு எங்க போறது , பிலா இலைதான் தஞ்சம் ....!  tw_blush:

பெரிய மீன் தலை சேர்க்க வேண்டும்.....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

 

சிக்கன் பிரியாணியில் பல்வேறு வகைகள் உள்ளது. அந்த வகையில் இன்று சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

சிக்கன் - அரை கிலோ
சீரக சம்பா அரிசி - 2 டம்ளர் (அரை கிலோ)
பெரியவெங்காயம் - 2 + ஒன்று
தக்காளி - 3
பட்டை - ஒன்று
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - பூண்டு விழுது - இரண்டரை டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
தயிர் - அரை கப்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - கால் கப்
நெய் - கால் கப்
முந்திரி - 10
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
பால் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201707111520090778_12malabar-chicken-bir

செய்முறை :

* சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* ப.மிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

* மிக்ஸியில் துருவிய தேங்காய், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

* பாலில் குங்குமப்பூவை ஊற வைக்கவும்.

* ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி, எண்ணெயில் பிரவுன் நிறத்துக்கு வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

* ஒரு பவுலில் சிக்கன், கால் கப் தயிர், 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், நீளமாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மீதமிருக்கும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

201707111520090778_malabar-chicken-biriy

* இத்துடன் பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரைய வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் பச்சை வாசனை போக வதக்கியதும் மஞ்சள் தூள், சிக்கன் சேர்த்து வதக்கவும்.

* இத்துடன் கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குறைந்த தீயில் சிக்கனை வேகவிடவும்.  தண்ணீர் சேர்க்க வேண்டாம். தயிர் மற்றும் சிக்கனில் உள்ள தண்ணீரே வேக போதுமானது. வெந்ததும் தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைக்கவும்.

* அரிசியை நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரை எடுத்து சுடவைத்துக் கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தை அடுப்பில்  வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து வதக்கி, அரிசியைச் சேர்த்து லேசாக வதக்கவும்.

* பிறகு சுடுநீரை ஊற்றி, உப்பு போட்டு முக்கால் பாகம் வெந்ததும் இறக்கிவிடவும்.

* மீண்டும் அடுப்பில் மற்றொரு வாயகன்ற பெரிய பாத்திரத்தை வைத்து, நெய் ஊற்றி சிக்கன் மசாலாவை சேர்த்துப் பரவலாக்கவும். அதன் மீது வெந்த நெய் சோறு, பிறகு வறுத்த பிரவுன் நிற பெரியவெங்காயம் சிறிதளவு தூவவும்.

* இப்படி சிக்கன் கலவை, நெய்சோறு, வறுத்த வெங்காயக் கலவை என்கிற விகிதத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் பரப்பவும். குங்குமப்பூ ஊறிய பாலை அப்படியே பிரியாணி முழுக்க ஊற்றி, பாத்திரத்தை இறுக்கமாக மூடி, அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து, 5 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி தயார்.

* சூப்பரான மலபார் சிக்கன் பிரியாணி ரெடி.
Link to comment
Share on other sites

சூப்பரான சைடிஷ் பட்டர் சிக்கன் கிரேவி

 

சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த பட்டர் சிக்கன் கிரேவி அருமையான சைடிஷ். இன்று இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 
 
 
 
சூப்பரான சைடிஷ் பட்டர் சிக்கன் கிரேவி
 
தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ
கெட்டியான தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சிவப்பு தந்தூரி கலர் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 4
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 4 டேபிள் ஸ்பூன்
க்ரீம் - 1 கப்
முந்திரி - சிறிது
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201707121525072762_butter%20chicken._L_s

செய்முறை:

* சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

* கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* முந்திரியை பேஸ்ட் செய்து கொள்ளவும்.

* தயிரில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சிவப்பு தந்தூரி கலர் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* சிக்கனில் கலந்த மசாலாவை ஊற்றி நன்கு பிரட்டி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு மணிநேரம் ஆனப் பின்பு, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் போட்டு, ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயத்தைப் போட்டு வறுத்து, 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து வெண்ணெயை போட்டு, தட்டு கொண்டு மூடி, தீயை குறைவில் வைத்து தக்காளியை வேக வைக்க வேண்டும்.

* எண்ணெயானது தனியே பிரியும் போது, அதில் 1 டீஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா, க்ரீம், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள சிக்கனைப் போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியில் அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து கடைசியாக அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.

* இப்போது சூப்பரான பட்டர் சிக்கன் ரெடி!!!
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.