Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது நல்லது. இன்று ஸ்வீட் கார்ன், பாதாம் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்
 
தேவையான பொருட்கள் :

கார்ன் முத்துக்கள் - ஒரு கப்,
பாதாம் - 10
ஃப்ரெஷ் க்ரீம் - சிறிதளவு,
சர்க்கரை - சிட்டிகை,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு.

201711040921591400_1_AlmondSweetCornSoup._L_styvpf.jpg

செய்முறை :

ஸ்பீட் கார்ன் முத்துக்களை வேகவைத்து கொள்ளவும்.

பாதம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரிக்கவும்.

உரித்த பாதாமுடன் வேக வைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

அதனுடன் சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
Link to comment
Share on other sites

சோள ரவை உப்புமா

 

மாலை நேரத்தில் சத்து நிறைந்த உணவான சோள ரவை உப்புமாவை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.

சோள ரவை உப்புமா
 
தேவையான பொருட்கள்:

சோளம் – 1 கப்
அரிசி ரவை – 1 கப்
கோதுமை ரவை – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 1
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – சிறிதளவு
கடலைப்பருப்பு – சிறிதளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு
முந்திரி –  தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சோளத்தை ரவையாக உடைத்துக்கொள்ள வேண்டும்.

அரிசி ரவை, கோதுமை ரவை, சோள ரவை மூன்றையும் ஒன்று சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நசுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

கலந்து வைத்திருக்கும் ரவையின் அளவில் 1 பங்குக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும்.

பிறகு உப்பு சேர்த்து, கொதித்ததும் கலந்து வைத்திருக்கும் ரவையைத் தூவிக் கிளறி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும்.

 பிடித்தமான காய்கறிகளை சேர்த்தும் சோள ரவை உப்புமா தயாரிக்கலாம். விருப்பப்பட்டவர்கள் சட்னியுடன் சாப்பிடலாம்.
Link to comment
Share on other sites

ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை

 
ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை

அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்

பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

அகத்திக்கீரை சொதி என்னென்ன தேவை?

 

அகத்தி கீரை- 1 கட்டு
பெரிய வெங்காயம்- 1
தக்காளி-2
பச்சை மிளகாய்-4
பால் – 1கப்
உப்பு- 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு

எப்படி செய்வது?

கீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து கழுகி கொள்ளவும்.

அகத்திக்கீரையை காம்பிலிருந்து சீராக உருவிக்கொள்ளவும்.

பின் உருவிய கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசிக்கொள்ள வேண்டும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும்.

அதில் மறக்காமல் உப்பு சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போடுங்கள் மேலும் சிறிது நேரம் கொதிக்கட்டும்.

கீரை சுலபமாக வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள்.

பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு இறக்கிவிடலாம். அகத்திக்கீரை சொதி தயார்.

இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி

 

மட்டன் கீமா புலாவ் செய்வது எப்படி
 
தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 2 கப்
மட்டன் கொத்துக்கறி - 300 கிராம்
தயிர் - 2 கப்
ப.மிளகாய் - 5
வெங்காயம் - 1 
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

201711111513406707_1_muttonkeemapulao._L_styvpf.jpg
 
செய்முறை :

மட்டன் கொத்துக்கறியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், ப.மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும்.

இப்போது போதுமான உப்பு சேர்க்கவும். 

தேவையான தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி 3 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும். 

பிரஷர் போனதும் குக்கர் மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.
Link to comment
Share on other sites

சிறுதானியச் சிறப்பு ரெசிப்பி

 

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், தே.அசோக்குமார்

 

p27a.jpg

ழந்தமிழர் உணவில் பெரும்பங்கு வகித்தவை சிறுதானியங்களே. உடலுக்குத் தேவையான  ஊட்டச்சத்துகளைச் சிறுதானியங்கள் சிறப்பான முறையில் அளிக்கின்றன. வரகு, கேழ்வரகு, கம்பு, தினை ஆகிய சிறுதானியங்களிலிருந்து சுவையான இனிப்பு, காரம், பானம் ஆகியவற்றைத் தயாரிக்கும் ரெசிப்பிகளை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர்  ஜெ.கலைவாணி.

p27aa.jpg

வரகு காரத் தட்டை

தேவையானவை:

 வரகு அரிசி - 2 கப்
 பொட்டுக்கடலை - அரை கப் 
 கடலைப் பருப்பு - கால் கப்
 தேங்காய் - அரை மூடி (துருவியது)
 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

p27aaa.jpg

செய்முறை:

வரகு அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, கிரைண்டரில் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பவுடராக்கிச் சலித்து எடுக்கவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். அரைத்த வரகு அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, ஊறவைத்த கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசையவும். அதை சிறு உருண்டைகளாக உருட்டி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்துத் தட்டைகளாகத் தட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.


வேர்க்கடலை - கம்பு சிப்ஸ்

தேவையானவை:

 கம்பு - ஒரு கப்
 வேர்க்கடலை - அரை கப்
 கோதுமை மாவு - அரை கப்
 பொட்டுக்கடலை - கால் கப்
 பொடித்த மிளகு - சீரகம் -
ஒரு டீஸ்பூன்
 வெண்ணெய் - 2 டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

p27b.jpg

செய்முறை:

கம்பு, வேர்க்கடலையைத் தனித்தனியே வறுத்து மிக்ஸியில் மாவாக்கவும். பொட்டுக் கடலையையும் மாவாக்கிக்கொள்ளவும். இவற்றுடன் பொடித்த மிளகு - சீரகம், கோதுமை மாவு, வெண்ணெய், உப்பு  சேர்த்து, தண்ணீர் தெளித்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.

சிறிதளவு மாவை எடுத்து உருண்டையாக்கி, சற்று கனமான சப்பாத்தியாக இட்டு வட்டம், சதுரம் எனத் தேவையான வடிவில் சிப்ஸாகச் செய்து, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மாவு முழுவதையும் இதுபோல செய்து கொள்ளவும். சுவையான, கரகரப்பான வேர்க்கடலை - கம்பு சிப்ஸ் ரெடி.


கேழ்வரகு இனிப்புப் புட்டு

தேவையானவை:

 கேழ்வரகு மாவு - ஒரு கப்
 நாட்டுச் சர்க்கரை - முக்கால் கப்
 தேங்காய்த் துருவல் - அரை கப்
 ஏலக்காய் - ஒன்று (தூளாக்கவும்)
 நெய் - 2 டீஸ்பூன்
 தண்ணீர் - கால் டம்ளர்
 உப்பு - அரை டீஸ்பூன்

p27bb.jpg

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் சிறிதளவு உப்பு கலந்த நீரைத் தெளித்துப் பிசையவும். கட்டிகள் இல்லாதவாறு நன்கு உதிர்த்து எடுக்கவும். அனைத்து மாவும் நீருடன் கலந்து மென்மைத் தன்மை வந்ததும், காட்டன் துணியை நனைத்து நன்கு பிழிந்துவிட்டு, அதில் இந்த மாவைக் கொட்டி, மூடி இட்லித் தட்டில் வைத்து, 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். இதை முதல்நாள் இரவு செய்து வைத்து கொள்ளவும். அடுத்த நாள் காலை மீண்டும் இந்த மாவில் உப்பு கலந்த நீரைத் தெளித்து, உதிர்த்துக் கலந்து, 20 நிமிடத்தில் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அதில் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை,  ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நெய்விட்டுப் பரிமாறவும்.

குறிப்பு:

முளைகட்டிய கேழ்வரகு மாவாக இருந்தால் கூடுதல் சத்து கிடைக்கும். உடனே சாப்பிட வேண்டும் என்றால் ஒருமுறை ஆவியில் வேகவைத்தால் போதுமானது. இருமுறை வேகவைப்பதால் சுவை அதிகரிப்பதுடன் புட்டு, பூ போன்று மென்மையாகும்.


தினை அப்பம்

தேவையானவை:

 தினை - 2 கப்
 தேங்காய் - அரை  மூடி
 பொடித்த வெல்லம் - ஒரு கப்
 வாழைப்பழம் - ஒன்று
 ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 நெய் - பொரிக்கத் தேவையான அளவு

p27bbb.jpg

செய்முறை:

தேங்காயைத் துருவி கெட்டியாகப் பால் எடுத்துக்கொள்ளவும். தினை அரிசியை வறுத்து மாவாக அரைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தேங்காய்ப்பால், தினை மாவு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழம் சேர்த்து நன்கு கெட்டியாகக் கரைக்கவும். பணியாரக் கல்லில் நெய்விட்டு ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடிவைத்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


கம்பு - தேன் லட்டு

தேவையானவை:

 கம்பு மாவு - 1 கப்
 கேழ்வரகு மாவு - கால் கப்
 பொட்டுக்கடலை மாவு - கால் கப்
 தேன் - முக்கால் கப்
 ஏலப்பொடி - அரை டீஸ்பூன்
 நெய் - கால் கப்
 முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன் (நறுக்கியது)

p27c.jpg

செய்முறை:

கம்பு மாவு, கேழ்வரகு மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் கலந்துகொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை சேர்த்து லேசாக வதங்கியதும் மாவையும் சேர்த்து வறுத்து இறக்கி, சில நிமிடங்கள் ஆறவிடவும். சூடு குறைவதற்குள் மேலும் சிறிது நெய் விட்டு கலந்து, தேனும் ஊற்றி மாவை உருண்டையாகப் பிடித்து வைக்கவும். ஆறவிட்டு டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் வரை கெடாது. காலை நேரப் பசிக்கு மிகவும் ஏற்றது.


வரகு இலை அடை

தேவையானவை:

 வரகு மாவு - 1 கப்
 வெல்லம் - 200 கிராம்
 நெய் - 2 டீஸ்பூன்
 துருவிய தேங்காய் - 1 கப்
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
 வாழை இலை - 5 சதுரங்கள்
 உப்பு - அரை டீஸ்பூன்

p27cc.jpg

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன் வடிவட்டி வைக்கவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைப் போடவும். நன்கு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதில் வெல்லத்தை ஊற்றவும். நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய்த்தூள் போட்டு நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விட்டு கெட்டி பதம் வந்ததும் நெய்விட்டு பூர்ணமாக்கி இறக்கிவிட்டு ஆறவிடவும்

வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு பாத்திரத்தில் வரகு மாவை இட்டு அதில் நெய்விட்டு, கொதிக்கும் நீரை வேண்டிய அளவு ஊற்றி வேகமாகக் கிளறவும். மாவு இறுக்கமாக கொழுக்கட்டைப் பிடிக்கும் பதம் வந்ததும் நெய் தடவிக்கொண்டு, பந்து போல் பிடித்து வைக்கவும். வாழை இலையில் நெய் தடவி வரகு பந்தை வைத்து வட்டமாகத் தட்டிக் கொள்ளவும். அதன் நடுவில் தேங்காய் பூர்ணத்தை வைத்து இலையோடு சேர்த்து மடித்து வைத்துக்கொள்ளவும். இட்லிக் குக்கரில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்க வாசமான வரகு இலை அடை ரெடி.


தினை மில்க் ஷேக்

தேவையானவை:

 தினை மாவு - அரை கப்
 தண்ணீர் - ஒரு கப்
 பால் - 1 கப்
 பேரீச்சம் பழம் - 5
 ஏலத்தூள் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை அல்லது நாட்டுச்
சர்க்கரை - அரை கப்

p27ccc.jpg

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தினை மாவைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி கலந்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் ஆறவிட்டு 20 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர், எடுத்து அதில் ஏலத்தூள், பேரீச்சம் பழம், நாட்டுச் சர்க்கரை, பால், தண்ணீர் சேர்த்து ஜூஸரில் நன்கு அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி, பரிமாறவும். சுவைகேற்ப சர்க்கரையின் அளவைக் கூட்டிக்கொள்ளவும்.


கேழ்வரகு கொள்ளு கருப்பட்டி பானம்

தேவையானவை:

 கேழ்வரகு - கால் கப்
 கொள்ளு மாவு - கால் கப்
 கருப்பட்டி - 1 கப் (தூளாக்கியது)
 ஏலத்தூள் - அரை டீஸ்பூன்
 தண்ணீர் - தேவையான அளவு

p27d.jpg

செய்முறை:

குக்கரில் கேழ்வரகு மாவு, கொள்ளு மாவு, கருப்பட்டி, ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர்விட்டு கரைத்து, குக்கரை மூடி 3 முதல் 4 விசில் விட்டு வேகவைத்து எடுக்க, சுவையான கேழ்வரகு - கொள்ளு - கருப்பட்டி பானம் ரெடி


தினை பாயசம்

தேவையானவை:

 தினை மாவு - 1 கப்
 வெல்லம் - 1 கப்
 பாசிப்பருப்பு - கால் கப்
 ஏலத்தூள் - அரை டீஸ்பூன்
 நெய் - 2 டீஸ்பூன்
 முந்திரி, திராட்சை - தலா 1 டீஸ்பூன்

p27dd.jpg

செய்முறை:

வெல்லத்தைப் பொடித்து நீரில் கரைத்து அடுப்பில் வைக்கவும். முழுவதும் கரைந்தவுடன் வடிகட்டிக்கொள்ளவும். பாசிப்பருப்பை வேகவிடவும். பருப்பு பாதி வெந்ததும் தினை மாவை வெல்லத்துடன் கலந்து அதில் சேர்க்கவும். இரண்டும் சேர்ந்து வெந்து வரும்போது, ஏலத்தூள் தூவி, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துச் சேர்க்கவும்.


தினை பூரணக் கொழுக்கட்டை

தேவையானவை:

 தினை மாவு - ஒரு கப்
 பச்சரிசி மாவு - கால் கப்
 உப்பு - கால் டீஸ்பூன்
 சுடுநீர் – தேவையான அளவு

p27ddd.jpg

பூரணம் செய்ய:

 வறுத்த எள் - ஒரு கைப்பிடி அளவு
 தேங்காய் - அரை மூடி (துருவவும்)
 வெல்லம் – அரை கப்

செய்முறை:

தினை மாவுடன் பச்சரிசி மாவு, உப்பு, சுடுநீர் சேர்த்து நன்கு கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்குப் பிசையவும். எள்ளுடன் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதுவே பூரணம். பிசைந்து வைத்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கித் தட்டி, நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
 
குறிப்பு: வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு, ஒரு கொதிவிட்டு கரைந்தபின் வடிகட்டி, அதிலும் மாவைப் பிசைந்துச் செய்யலாம்.

Link to comment
Share on other sites

பாஸ்தா

 

 

த்தாலியர் ஒருவரை ஆத்திரப்படுத்த வேண்டுமென்றால், ‘பதின்மூன்றாம் நூற்றாண்டு வெனிஸ் நகரப் பயணி மார்க்கோ போலோதான் நூடுல்ஸை இத்தாலிக்கு அறிமுகப்படுத்தினாரா?’ என்று மட்டும் கேளுங்கள்.

அவ்வளவுதான். தங்கள் தேசத்தின் புகழையே அவமதித்துவிட்டதாகக் கருதி, தாம்தூம் என்று குதிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏன்? சீனர்களுக்கு எப்படி `நூடுல்ஸ்’ஸோ, அதேபோலத்தான் இத்தாலியர்களுக்கு `பாஸ்தா’. நூடுல்ஸ் வேறு; பாஸ்தா வேறு. ‘அது இத்தாலியர்களுக்கே சொந்தமானது.எங்கள் உணவுக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது’ என்று இத்தாலியர்கள் வாதம் செய்யக்கூடும்.

 

‘நூடுல்ஸ் நூல்நூலா மட்டும்தான் இருக்கும். பாஸ்தா பார்த்திருக்கியா? வட்டமா, சதுரமா, தட்டையா, உருளையா, நீளமா, கோணலா... இப்படி பல டிசைன்ல டக்கரா இருக்கும். எப்படிப் பார்த்தாலும் பாஸ்தாதான் பிஸ்தா!’ என்று பஞ்ச் பேசவும் வாய்ப்பிருக்கிறது.சரி, பாஸ்தாவின் வரலாறு என்ன? அது இத்தாலியர்களுடைய கண்டுபிடிப்பா?

‘இன்ன தேதியில், இந்த நபர். இன்ன மாதிரி பாஸ்தாவைப் படைத்தார்’ என்று தெளிவாகச் சொல்லும் சரித்திரக் குறிப்பெல்லாம் கிடையாது. தவிர, பாஸ்தா இத்தாலியர்களுடைய கண்டுபிடிப்பும் கிடையாது.  ஆனால், இத்தாலியர்களின் கலாசார அடையாளமாக உலகப்புகழ் பெற்றது என்று சொல்லலாம்.

p90b.jpg

பாஸ்தாவின் வேரைத் தெரிந்துகொள்ள, அதன் மூதாதைய உணவுப்பொருள்கள் சிலவற்றின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. கிரேக்கர் களுடைய நெருப்புக் கடவுள் Hephaestus. கிரேக்கப் புராண நளன் என்று சொல்லலாம். அவர்தான், மாவையும் நீரையும் கலந்து தனலால் (அதாவது நெருப்பால்) வாட்டி, பாஸ்தா போன்ற ஒரு பதார்த்தத்தைக் கண்டுபிடித்தார் என்பது அவர்களுடைய புராண நம்பிக்கை.

Lagonon  அல்லது  Tracta என்பது  பண்டைய கிரேக்கர்களும் ரோமானி யர்களும் சமைத்த ஒரு மாவுப் பண்டம். தண்ணீர்சேர்த்துப் பிசையப்பட்ட மாவை, வறுத்துத் தயாரிக்கப்படும் உணவு இது. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிரேக்கர்களின் உணவுப் பழக்கத்தில் இது இருந்திருக்கிறது. மாவும் தண்ணீரும் சேர்த்து, நெருப்பில் வாட்டி செய்யப்பட்ட விதத்தில் பாஸ்தாவின் ஆதி வடிவமாக Lagonon-ஐ சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். சிலர் மறுக்கிறார்கள். ஆனால், தண்ணீரையும் மாவையும் கலந்து, அதை ஏதோ ஒரு வடிவில் செய்து காயவைத்து, பின் சுடுநீரில் வேகவைத்துத் தயாரிக்கப்பட்ட எந்த ஓர் ஆதி உணவும் பாஸ்தாவின் மூதாதையரே என்று சொல்லலாம்.

 

பாஸ்தா தயாரிப்புக்கு ஆதாரமான தானியம், Durum Wheat என்ற வகை கோதுமை. இந்தக் கோதுமை அதிக புரோட்டின் சத்துகொண்டது. கடினமானது. இவ்வளவு கடினமான கோதுமையை நூடுல்ஸ் தயாரிப்பதற்குப் பயன்படுத்த மாட்டார்கள். பாஸ்தா வேறு, நூடுல்ஸ் வேறு என்பதற்கு அதன் மூலப்பொருளான Durum Wheat-ம் ஒரு சாட்சி.

இந்த வகை கோதுமையை அரைத்துப் பொடி செய்யப்பட்ட ரவையை (Semolina) பல நூற்றாண்டுகளாக உபயோகித்து வந்தவர்கள் அரேபியர்கள். ஆக, ரவையின் ஆதி வடிவம் அரேபியர் களால் கண்டுபிடிக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த வகை ரவையில் பாஸ்தா தயாரிக்கும் கலையை இத்தாலியர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் அரேபியர்கள் என்றும் ஒரு கருத்து உண்டு. Isho bar Ali என்ற ஒன்பதாம் நூற்றாண்டு அரேபிய மருத்துவர் தொகுத்த அகராதியில், இந்த ரவையைத் தண்ணீர்கொண்டு பிசைந்து, நீள வடிவில் உருட்டி, காய வைத்து, பின் சமைத்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன. அதன் பெயர் Itriyya.இத்தாலியின் தீவு நகரமான சிசிலியில் இருந்து பதினோராம் நூற்றாண்டில் Itriyya அதிக அளவில் தயாரிக்கப்பட்டு கப்பல்களில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் குறிப்புகள் உள்ளன.

பதினான்காம் நூற்றாண்டு வரை பாஸ்தா தயாரிப்பது மிகக் கடினமான வேலையாக இருந்தது. அதிக நேரமும் பொறுமையும் மனித உழைப்பும் தேவைப்பட்டன. அதனால் பாஸ்தாவின் உற்பத்தி குறைவாக இருந்தது. விலை அதிகமாகவே இருந்தது. ஏழைகளுக்கு எட்டாக்கனி. பணக்காரர்களின் உணவுத் தட்டுகளில் மட்டும் சுடச்சுட பாஸ்தாவின் ஆவி பறந்தது.

p90d.jpg

பதினைந்தாம் நூற்றாண்டில் இத்தாலியில் ‘பாஸ்தா புரட்சி’ நடந்தது.அப்போது இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரத்தில் பாஸ்தா தயாரிப்பதற்கான இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன.பாஸ்தாவைத் தயாரித்துக் காயவைத்து பத்திரப்படுத்திவிட்டால் அது ஒரு நல்ல உணவுப்பொருள். நல்ல வணிகப் பொருளும்கூட என்று இத்தாலியர்கள் உணர்ந்துகொண்டார்கள். இயந்திரங்கள் வந்துவிட்டதால் மனித உழைப்பு குறைவாகத் தேவைப்பட்டது. நேரம் மிச்சமானது. உற்பத்தி அதிகமாக, அதன் விலையும் குறைந்துபோனது.ஆகவே, படிப்படியாக நடுத்தர, ஏழை மக்கள் மெனுவிலும் பாஸ்தா இடம்பெற ஆரம்பித்தது.

Pasta என்ற இத்தாலிய வார்த்தைக்கு Paste என்று பொருள். லத்தீனில் மாவு என்று அர்த்தம். Croseti, Formentine, Maccaroni, Quinquinelli, Ravioli, Tortelli, Vermicelli என்று ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு விதமான பாஸ்தா போன்ற உணவுகள் புழக்கத்துக்கு வந்தன.பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை ‘பாஸ்தா’ என்ற பொதுச்சொல் புழக்கத்தில் இல்லை.

இத்தாலியின் தீவான சார்தீனியாவைச் சேர்ந்த வியாபாரிகள், பதினான்காம் நூற்றாண்டில் obra de pasta (dried pasta) என்று தங்கள் ஏற்றுமதி செய்த பாஸ்தாவைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதற்குப் பிறகே பாஸ்தா என்ற பொதுச்சொல் அதிக அளவில் புழக்கத்துக்கு வந்திருக்கலாம்.

இன்றைக்குப் புழக்கத்திலிருக்கும் புகழ்பெற்ற பதார்த்தம் லஸாங்னே (Lasagne). தட்டையான வடிவம்கொண்ட பாஸ்தா இது. இறைச்சி, மசாலா, கீரை, காய்கறி, சாஸ், சீஸ் என்று பல லேயர்களுக்கிடையில் திணித்து உண்கிறார்கள். இந்த வடிவ பாஸ்தாவின் தாயகம், இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரம்தான்.

இதுகுறித்த முதல் சமையல் குறிப்பு, பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, யார் எழுதியது என்றே தெரியாத, Liber de Coquina என்ற சமையல் புத்தகத்தில் இருக்கிறது. அதே சமையல் புத்தகத்தில் பாஸ்தாவையும் கோழிக்கறியையும் சேர்த்துச் சமைத்து அதன்மேல் பாலாடைக்கட்டி,கோழிக்கறியின் கொழுப்புகொண்டு அழகு செய்வது பற்றிய சமையல் குறிப்பு இருக்கிறது.

Spaghetti – இது நூடுல்ஸ் வடிவிலான, நீண்ட கயிறு போன்ற பாஸ்தா பத்தொன்பதாம் நூற்றாண்டில் Spaghetti தயாரிக்கும் தொழிற்கூடங்கள் இத்தாலியில் பெருகின. தெருவோரக் கடைகள் தொடங்கி ரெஸ்ட்டாரன்ட்கள் வரை எங்கும் மக்கள் உண்ணக்கூடிய அடிப்படை உணவுகளில் ஒன்றாக Spaghetti வகை பாஸ்தா மாறிப்போனது. பிறகு, அமெரிக்காவின் ரெஸ்ட்டாரன்ட்களிலும் Spaghetti Italienne என்று இந்த பாஸ்தா விருப்பத்துக்குரிய உணவாகிப்போனது.

p90e.jpg

அமெரிக்காவில் பாஸ்தா அறிமுகமானது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில். முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெபர்சன், பிரான்ஸுக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்தபோது அங்கே maccaroni வகை பாஸ்தாவைச் சாப்பிட்டிருக்கிறார். சற்றே தயக்கத்துடன் அதைச் சாப்பிட ஆரம்பித்தவர், உடனே அதன் சுவையில் மயங்கிக் கிறங்கியிருக்கிறார். அவரது விருப்பத்துக்குரிய உணவுகளில் ஒன்றாக பாஸ்தா இதயத்தில் இடம்பிடித்தது. யாம் பெற்ற பாஸ்தா இன்பம் அமெரிக்கர்களும் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், பாஸ்தா தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை ஆர்டர் செய்தார். அதை அமெரிக்காவுக்குக் கொண்டுசென்றார்.

அங்கும் தாமஸ் ஜெபர்சன் புண்ணியத்தால் maccaroni வகை உற்பத்தி ஆரம்பமானது. தாமஸ் ஜெபர்சன் அதிபராக இருந்த காலத்தில் அதிபர் மாளிகை விருந்துகளில் maccaroni-யும் தவறாமல் இடம்பெற்றது. இப்படியாக பாஸ்தா வகைகளை அமெரிக்கர்களின் விருப்பத்துக்குரிய உணவாக மாற்றியதில் ஜெபர்சனுக்கும் பெரும் பங்கு உண்டு.

முதலில் ஒரு மார்க்கோ போலோ விஷயம் பார்த்தோமே... சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஓர் அமெரிக்க நிறுவனம் தனது பாஸ்தா தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்த பொய் பரப்புரையே அது. மார்க்கோ போலோ இத்தாலிக்குக் கொண்டுவந்த உணவுப் பொருள்தான் பாஸ்தா என்று அமெரிக்கர்களைக் கவர்ந்திழுக்க விளம்பரத்தினார்கள். அது இத்தாலியர்களுக்கு ரத்தக் கொதிப்பைக் கொடுத்தது. ஆம், இதுகூட அமெரிக்கச் சதிதான்.


Pasta Bytes

 உருளையாக, சதுரமாக, வட்டமாக, தட்டையாக, குழல் வடிவில், நட்சத்திர வடிவில் என்று உலகமெங்கும் சுமார் 310 விதமான வடிவங்களில் பாஸ்தா தயாரிக்கப்படுகிறது. அதில் 1,300 வகை பாஸ்தாவின் பெயர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

 ஆண்டொன்றுக்கு உலகம் முழுவதும் சுமார் 14.3 மில்லியன் டன் பாஸ்தா வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 உலகில் அதிக  அளவில் பாஸ்தா  உற்பத்தி செய்யப்படும் நாடு இத்தாலிதான்.அங்கே ஆண்டொன்றுக்குச் சுமார் 34,08,500 டன் பாஸ்தா உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாமிடத்தில் அமெரிக்கா. 20,00,000 டன் அங்கே உற்பத்தி நடக்கிறது.

 ஆசியாவிலும் ஆஸ்திரேலியாவிலுமே பாஸ்தா உற்பத்தி மிகக்குறைந்த அளவில் நடைபெறுகிறது.

Source: International pasta Organisation.


லகிலேயே பாஸ்தா அதிகம் உண்பவர்கள் இத்தாலியர்களே. பாஸ்தா அதிகமாக உண்ணும் தேசங்களின் டாப் 6 பட்டியல்.

தேசம் - கிலோ அளவில் (ஒரு வருடத்தில் ஒரு மனிதர் சராசரியாக உண்ணும் அளவு)

1. இத்தாலி 25.3
2. துனிசியா 16.0
3. வெனிசுவேலா 12.2
4. கிரீஸ் 11.5
5. சுவிட்சர்லாந்து 9.2
6. அமெரிக்கா 8.8

Source: International pasta

Organisation - Annual Survey on World Pasta Industry (2014)


பாஸ்தாவின் காதலி!

ரோமியோ ஜூலியட், லைலா மஜ்னு, அம்பிகாவதி அமராவதி காவியக் காதலர்களின் வரிசையில் பாஸ்தா – தக்காளி சாஸையும் சேர்த்தே ஆக வேண்டும். ஆம், தக்காளி சாஸ் இன்றி பாஸ்தாவைத் தனியாக நினைத்துப் பார்க்க முடியாது. எப்படி பாஸ்தா காதலனாகவும், தக்காளி சாஸ் காதலியாகவும் ஜோடி சேர்ந்தார்கள்? அந்த அமர காவியக் காதல் கதை என்ன?

p90f.jpg

தக்காளியின் பூர்வீக மண் மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா.கி.பி.1492 கொலம்பஸின் அமெரிக்கக் கண்ட வருகைக்குப் பிறகு, அங்கே ஸ்பெயினின் காலனியாதிக்கம் பரவியது.ஸ்பானியர்களே அமெரிக்கக் கண்டத்தின் தக்காளியை ஐரோப்பியக் கண்டத்துக்குக் கொண்டு சென்றனர். பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளிலெல்லாம் ஐரோப்பியர்கள் தக்காளியைப் பரிசு கொடுக்க உகந்த அலங்காரப் பொருளாகத்தான் பார்த்தனர்.அதற்குப் பிறகே அது உணவாக உருமாற ஆரம்பித்தது.

தக்காளி சாஸை உருவாக்கியவர்கள் இத்தாலியர்கள் அல்ல. கி.பி.1692-ல் நேப்பிள்ஸ் நகரத்தில் ஸ்பானிய வைஸ்ராயின் செஃப்பாகப் பணியாற்றியவர் அண்டோனியோ லாடினி. இத்தாலியர். அவர் தக்காளியைக் கொண்டு ஸ்பானிய ஸ்டைலில் alla spagnuola என்ற சாஸைத் தயாரித்தார்.

Lo scalco alla moderna என்ற அண்டோனியோ எழுதிய சமையல் புத்தகத்தில் இந்த சாஸ் இடம்பெற்றிருக்கிறது. அது பாஸ்தாவோடு பரிமாறப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

கி.பி. 1790-ல் ரோமன் செஃப் பிரான்செஸ்கோ லியோனார்டி என்பவர் எழுதி வெளியிட்ட L’Apicio moderno என்ற இத்தாலிய பாணி சமையல் புத்தகத்தில் பாஸ்தாவோடு தக்காளி சாஸும் சேர்த்துச் சமைக்கப்பட்ட ரெசிப்பிகள் உள்ளன. இப்படியாக இத்தாலியில் ஜோடி சேர்ந்த பாஸ்தா – தக்காளி சாஸின் காவியக் காதல், இன்றுவரை உலகமெங்கும் கமகமத்துக் கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

அருமையான சைடிஷ் கருணைக்கிழங்கு பொடிமாஸ்

 

தயிர் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் கருணைக்கிழங்கு பொடிமாஸ்.

அருமையான சைடிஷ் கருணைக்கிழங்கு பொடிமாஸ்
 
தேவையான பொருட்கள் : 

கருணைக்கிழங்கு - அரை கிலோ, 
கடுகு - அரை டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், 
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிதளவு,
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், 
 தனியாத்தூள் - 1 டீஸ்பூன், 
எலுமிச்சம் பழம் - 1, 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

201711231526173144_1_karunaikizhangupodimas._L_styvpf.jpg

செய்முறை : 

கருணைக்கிழங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய கருணைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும். 

கருணைக்கிழங்கு வேகும் வரை மூடி போட்டு அடுப்பை மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் ஊற்றிக்கூடாது.

கருணைக்கிழங்கு முக்கால் பாகம் வெந்தவுடன்  மஞ்சள்தூள்,  மிளகாய்த்தூள்,  தனியாத்தூள், உப்பு போட்டு வதக்கவும்.

கருணைக்கிழங்கு வெந்தவுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சேர்த்து இறக்கவும்.

சூப்பரான கருணைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சாதத்திற்கு அருமையான வெஜிடபிள் மசாலா

 

 
 

சப்பாத்தி, பூரி, தோசை, நாண், சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
சாதத்திற்கு அருமையான வெஜிடபிள் மசாலா
 
தேவையான பொருட்கள்:
 
கேரட் - 2
உருளைக்கிழங்கு - பெரியது
பச்சைப்பட்டாணி - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
முட்டைக்கோஸ் - 100 கிராம்
காலிப்ளவர் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சோம்பு, பட்டைகிராம்பு, ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு.
 
201712011514537271_1_vegetable-masala12._L_styvpf.jpg
 
செய்முறை :
 
வெங்காயம், பீன்ஸ், கோஸ், காலிப்பிளவர், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 
 
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும். 
 
அடுத்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
 
அடுத்து அதில்  மிளகாய்த்தூள், மல்லித்தூள்,  மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு குக்கரை மூடி விசில் போடவும். 
 
வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைக்கவும்.
 
விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.
Link to comment
Share on other sites

கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: பனை ஓலை கொழுக்கட்டை

திருக்கார்த்திகை தினமான இன்று தீபம் ஏற்றும் போது இறைவனுக்கு பனை ஓலை கொழுக்கட்டையை படைத்து வழிபாடு செய்யலாம்.

கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: பனை ஓலை கொழுக்கட்டை
 
தேவையானப்பொருட்கள் :
 
பனை ஓலை(நடுப்பகுதி)- 10 முதல் 15 துண்டுகள் (ஆறு அங்குல நீளம்)
பச்சரிசி மாவு - 3 கப்
கருப்பட்டி அல்லது வெல்லத்தூள் - 2 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1 கப்
 
201712021516351229_1_panaiolai._L_styvpf.jpg
 
செய்முறை :
 
கருப்பட்டியில் அரை கப் தண்ணீரைச் சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
 
பச்சரிசி மாவுடன் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், வடிகட்டிய கருப்பட்டி நீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியாக இல்லாமல் சிறிது குழைவாக உள்ளவாறு நீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும். மிகவும் குழைவாக இருக்க கூடாது.
 
ஒரு ஓலையை விரித்து நடுவில் மாவை வைத்து, மற்றொரு ஓலையால்  அழுத்தி, மூடவும். ஓலை பிரிந்து விடாமல் இருக்க ஒரு நார் அல்லது நூல் கொண்டு கட்டி வைக்கவும்.
 
இதேபோல் மீதமுள்ள மாவு அனைத்தையும் தயார் செய்து இட்லி தட்டில் வைத்து 15 அல்லது 20 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
 
சற்று ஆறியபின், ஓலையைப் பிரித்து கொழுக்கட்டையைத் தனியாக எடுத்து வைக்கவும்.
 
சூப்பரான பனை ஓலை கொழுக்கட்டை ரெடி.
 
இந்தக் கொழுக்கட்டை, திருக்கார்த்திகைத் தினத்தன்று, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் செய்யப்படும் ஒரு சிறப்பு பலகாரம்.
 

 

 

கார்த்திகை வாழைப்பழ அப்பம்

கார்த்திகை தீபமான இன்று கடவுளுக்கு வாழைப்பழ அப்பம் படைத்து வழிபடலாம். இன்று இந்த அப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
கார்த்திகை வாழைப்பழ அப்பம்
 
தேவையான பொருட்கள் :
 
அரிசிமாவு - 1 கப்
வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை
நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
 
201712021140401191_1_bananaappam._L_styvpf.jpg
 
செய்முறை :
 
1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
 
வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
 
அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
 
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு சிறிய கரண்டி மாவை எடுத்து எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்யவும்.
 
சூப்பரான கார்த்திகை வாழைப்பழ அப்பம் ரெடி.
 
குறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.
 
மேலும், இதை எண்ணெயில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்

 

 

கார்த்திகை வெல்ல பொரி

கார்த்திகை தீபமான இன்று கடவுளுக்கு வெல்ல பொரி படைத்து வழிபடலாம். இன்று இந்த வெல்ல பொரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
கார்த்திகை வெல்ல பொரி
 
தேவையான பொருட்கள் :
 
அவல் பொரி - 8 கப்
வெல்லம் பொடி செய்தது - 2 கப்
பொட்டுகடலை - 1 கப்
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய்த் தூள் - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன்
201712021302069678_1_Poriurundai._L_styvpf.jpg
 
செய்முறை :
 
தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெறும் வாணலியில் போட்டு சிறிது சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும்.
 
பொரியை நன்றாக புடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
 
சுத்தம் செய்த பொரி, பொட்டுக்கடலை இரண்டையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
 
அடி கனமான ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும், அதை வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கெட்டி பாகு காய்ச்சவும். சிறிது பாகை தண்ணீரில் விட்டால், அது கரையாமல் அப்படியே கெட்டியாக இருக்கும். அதை கைகளால் எடுத்து உருட்டினால் உருட்ட வரும். இதுதான் சரியானப் பதம். இப்பொழுது அதில் ஏலக்காய்த்தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி, கீழே இறக்கி வைக்கவும்.
 
உடனே அதில் பொரியைக் கொட்டை நன்றாகக் கிளறி விடவும். பொரி சூடாக இருக்கும் பொழுதே உருண்டைப் பிடிக்கவும். ஆறினால் பிடிக்க வராது.
 
உருண்டை பிடிக்க வரவில்லை என்றால், அப்படியே உதிரியாக விட்டு விடவும். இதுதான் கார்த்திகைப் பொரி.
 
குறிப்பு: நெல்பொரியிலும் மேற்கண்டப் பொரியைச் செய்யலாம்.  
Link to comment
Share on other sites

உருளைக் கிழங்கைப் பற்றி 5 மொறு மொறு தகவல்கள்

 

 
potato-fry

 

உருளைக் கிழங்கை நன்றாக மொறு மொறுவென்று வறுத்து, சாம்பார் அல்லது தயிர் சாதத்துடன் சாப்பிடும்போது, எளிமையான அந்த உணவு அதீதமாக ருசிக்கும். அரிசி, கோதுமைக்கு அடுத்து மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கைத்தான் என்கிறது ஒரு புள்ளிவிபரம். எல்லா நாட்டிலும், எத்தகைய தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் உருளை உள்ளது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் ஏதாவது ஒரு வடிவத்தில் இந்தப் பதார்த்தத்தைப் பார்க்கலாம்.

potato-vepudu-1.jpg

100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97. இதில் ஈரப்பதம் 75%, புரதம் 2%, கொழுப்பு 0.1%, தாது உப்புகள் 0.61%, நார்ச்சத்து 0.41% மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவைத் தவிர வைட்டமின் சி 17 மில்லி கிராமமும், கால்ஷியம் 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லி கிராமும், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாஷியம் ஆகியவையும் இதிலுள்ளன.

potato.jpeg

உருளைக் கிழங்கை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ சமைத்து சாப்பிட்டாலும் அதன் மருத்துவக் குணம் மாறவே மாறாது என்கின்றனர் ஊட்டச் சத்து நிபுணர்கள்.

Spicylittlepotatoroast-3-1024x1024.jpg

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய உணவுப்பொருள் உருளைக்கிழங்கு. எளிதில் ஜீரணிக்கக் கூடியதும் என்பது இதன் சிறப்பம்சம்.

53957285.jpg

தினமும் பாலும், உருளைக்கிழங்கும் சாப்பிட்டால் ஒருவர் உடலுக்குத் தேவையான எனர்ஜி கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட் உருளைக்கிழங்கில் அதிகளவில் உள்ளது. 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

கொள்ளு - கருப்பு உளுந்து வடை

 

மாலையில் சூடாக சாப்பிட கொள்ளு - கருப்பு உளுந்து வடை சூப்பராக இருக்கும். இன்று வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
கொள்ளு - கருப்பு உளுந்து வடை
 
தேவையான பொருட்கள் : 
 
முளை விட்ட கொள்ளு - 200 கிராம், 
கருப்பு உளுந்து - 50 கிராம், 
பச்சரிசி - ஒரு டீஸ்பூன், 
புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு, 
பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப), 
நறுக்கிய சின்ன வெங்காயம்  - கால் கப், 
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 
உப்பு, சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு, 
எண்ணெய் - தேவையான அளவு.
 
201712041503335505_1_kolluy._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
புதினா, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
கருப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். 
 
முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கருப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
 
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
கடாயை எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.
 
சூப்பரான கொள்ளு - கருப்பு உளுந்து வடை ரெடி.
Link to comment
Share on other sites

30 வகை செட்டிநாடு ஸ்பெஷல்

 

1.jpg

2.jpg

தண்ணிக்குழம்பு

தேவை:     துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:    புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் துவரம்பருப்புடன் வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று விசில்விட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த கலவை, தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும் (ரசம் போல தண்ணீர் அதிகமாகச் சேர்த்து இளங்குழம்பாகத் தயாரிக்கவும்).


3.jpg

சும்மா குழம்பு 

தேவை:     தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பூண்டு - 3 பல்  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:    புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் புளிக்கரைசல், மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகுச் சாம்பார் பொடி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.


4.jpg

பாசிப்பயறு இளங்குழம்பு

தேவை:     பாசிப்பயறு - அரை கப்  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்) சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     பட்டை - சிறிய துண்டு  காய்ந்த மிளகாய் - 4  பூண்டு - 4 பல் (தட்டவும்)  கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை:    புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் பாசிப்பயறைச் சேர்த்து வாசனைவரும் வரை வறுத்து வேகவைத்து எடுக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, புளித்தண்ணீர்  சேர்த்துக் கொதிக்கவிடவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, கொதிக்கும் குழம்புடன் சேர்த்து இறக்கவும்.


5.jpg

எண்ணெய்க் கத்திரிக்காய்க் குழம்பு

தேவை:      குட்டி கத்திரிக்காய் - 10 (நான்காகப் பிளந்து, உப்பு கலந்த நீரில் கழுவி எடுக்கவும்)  தோலுரித்த சின்ன வெங்காயம் - 15  பூண்டு - 10 பல்  தக்காளி - 3 (விழுதாக அரைக்கவும்)  புளி (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்) - சிறிதளவு  சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்  வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்  எண்ணெய்  உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     கடுகு - கால் டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்  வெந்தயம் - கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும். வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி விழுது, சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு, 2 கப் தண்ணீர், கத்திரிக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கத்திரிக்காய் நன்றாக வெந்த பின் வேர்க்கடலைப் பொடியைத் தூவி, குழம்பு நன்கு கெட்டியானதும் இறக்கவும்.


6.jpg

பறங்கிக்காய்க் குழம்பு

தேவை:     பறங்கிக்காய் - ஒரு கீற்று (தோலுடன் பெரிய சதுரத் துண்டுகளாக்கவும்)  தோலுரித்த சின்ன வெங்காயம் - 15  பூண்டு - 10 பல்  தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்)  சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்  வறுத்துப் பொடித்த வேர்க்கடலை - 2  டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:    குக்கரில் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, பறங்கிக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு, சாம்பார் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து, புளிக்கரைசல், 2 கப் தண்ணீர் ஊற்றி மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு திறந்து, லேசாக மசித்து, வேர்க்கடலைப் பொடியைத் தூவி மீண்டும் கொதிக்கவிடவும். குழம்பு நன்றாக கெட்டியானதும் இறக்கவும்.


7.jpg

பலாக்காய்ப் பிரட்டல்

தேவை:     பலாக்காய் – அரை கிலோ  உருளைக்கிழங்கு – 2  வெங்காயம் – ஒன்று  மஞ்சள் தூள் - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:     தேங்காய்த் துருவல் - கால் கப்  தக்காளி - 2  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்  இஞ்சி – ஒரு துண்டு  பூண்டு - 3 பல்  சோம்பு, சீரகம், கசகசா – தலா ஒரு டீஸ்பூன்  முந்திரி - அரை டேபிள்ஸ்பூன் (நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்).

தாளிக்க:     சோம்பு - கால் டீஸ்பூன்  பட்டை - சிறிய துண்டு  பிரியாணி இலை - ஒரு துண்டு.

செய்முறை:    உருளைக்கிழங்கு, பலாக்காயைத் தோல் நீக்கிப் பெரிய துண்டுகளாக நறுக்கி மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேகவைத்து வடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து சற்று நிறம் மாறும் வரை வதக்கவும். அரைத்த மசாலா, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு, வேகவைத்த பலாக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி, நன்கு சுருள வதக்கி இறக்கவும்.


8.jpg

வெண்டைக்காய்ப் பச்சடி

தேவை:     வெண்டைக்காய் – கால் கிலோ (சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ளவும்)  துவரம்பருப்பு (மலர வேகவைத்தது) - அரை கப்  தக்காளி – மூன்று (பொடியாக நறுக்கவும்)  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  கறிவேப்பிலை – சிறிதளவு  புளி – நெல்லிக்காய் அளவு (ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும்)  சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     கடுகு - கால் டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - சிறிதளவு  காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை:    கடாயில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கும் பொருள்களைத் தாளித்து, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு, வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும். சாம்பார் பொடியைச் சேர்த்து லேசாகக் கிளறி, புளித்தண்ணீரை ஊற்றிக் கலக்கவும். வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பச்சை வாசனை போய், காய்கள் நன்றாக வெந்த பின் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


9.jpg

கத்திரிக்காய்த் திரக்கல்

தேவை:     கத்திரிக்காய் - 4 (பொடியாக நறுக்கவும்)  உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கவும்)  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  பிரியாணி இலை - ஒன்று  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:     தேங்காய்த் துருவல் - கால் கப்  தக்காளி - 2  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்  பூண்டு - 3 பல்  சோம்பு - ஒரு டீஸ்பூன்   பொட்டுக்கடலை, உடைத்த முந்திரி - தலா அரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி பட்டை, பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். பிறகு அரைத்த விழுது, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும்.

இதைக் குழிப்பணியாரம், ரவா இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தியுடன் பரிமாறலாம்.


10.jpg

டிபன் சாம்பார்

தேவை:     துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப்  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு - தலா ஒன்று (சதுர துண்டுகளாக்கவும்)  கீறிய பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  தோலுரித்த சின்ன வெங்காயம் - 10  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்  வெந்தயம் – கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:    புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சாம்பார் பொடி, கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


11.jpg

முனுக்கி வைத்த சாம்பார்

தேவை:      வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க:      துவரம்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்  பச்சரிசி, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 6 (இதுவே முனுக்கிய பொடி)

தாளிக்க:     கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை:    வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சேர்த்து வறுத்து பவுடராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் முனுக்கிய பொடியை மூன்று கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


12.jpg

இனிப்புச் சீயம்

தேவை:     பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா அரை கப்  உப்பு - ஒரு சிட்டிகை  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

பூரணம் செய்ய:     மலர வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப்  தேங்காய்த் துருவல் - அரை கப்  பொடித்த வெல்லம் - ஒன்றரை கப்  ஏலக்காய்த்தூள் - 2 சிட்டிகை  நெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:    வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வறுக்கவும். அதனுடன் வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு சுருளக் கிளறவும். பிறகு, பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி, இறக்கி ஆறவிடவும். இதுவே பூரணம். பச்சரிசியுடன் உளுத்தம்பருப்பு சேர்த்துக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மிக்ஸியில் நைஸாக இட்லி மாவு பதத்துக்கு அரைத்து, உப்பு சேர்த்துக் கரைக்கவும். பூரணத்தை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, பூரண உருண்டைகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


13.jpg

கவுனி அரிசி கீர்

தேவை:     கவுனி அரிசி - கால் கப்  காய்ச்சாத பால் - ஒரு லிட்டர் சர்க்கரை - முக்கால் கப்  கண்டன்ஸ்டு மில்க் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    கவுனி அரிசியைக் கழுவி மூன்று கப் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதே தண்ணீருடன் குக்கரில் வைத்து மூடி, ஒரு விசில் வந்ததும், அடுப்பை சிறுதீயில் 15 நிமிடங்கள் வைத்து,  பிறகு  இறக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டராகும் வரை காய்ச்சவும். இதனுடன் அரைத்த கவுனி சாதம், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து ஒரு கொதிவிடவும். இறுதியாக சர்க்கரை சேர்த்துக் கிளறி நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம்.


14.jpg

கவுனி அரிசி இனிப்பு

தேவை:     கவுனி அரிசி - ஒரு கப்  சர்க்கரை - ஒன்றரை கப்  தேங்காய் - ஒரு மூடி (துருவவும்)  நெய் - 3 டேபிள்ஸ்பூன்  முந்திரி - 10.

செய்முறை:    வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரி சேர்த்து லேசாக வறுத்துத்  தனியாக வைக்கவும். கவுனி அரிசியைக் கழுவி 3 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அதே நீருடன் குக்கரில் வைத்து மூடி ஒரு விசில் வந்ததும், சிறு தீயில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியவுடன் திறந்து சர்க்கரை, தேங்காய்த் துருவல் சேர்த்து, முந்திரியை நெய்யுடன் சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும்.


15.jpg

கும்மாயம்

தேவை:     உளுத்தம்பருப்பு - ஒரு கப்  பச்சரிசி - கால் கப்  பாசிப்பருப்பு - அரை கப்  பொடித்த கருப்பட்டி (அ) வெல்லம் - 2 கப்  நெய் - கால் கப்.

செய்முறை:    உளுத்தம்பருப்பு, அரிசி, பாசிப்பருப்பைத் தனித்தனியாக வெறும் வாணலியில் சேர்த்து மிதமான தீயில் சிவக்க வறுத்து எடுக்கவும். ஆறிய பின் ஒன்றாகச் சேர்த்து மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும். கருப்பட்டி (அ) வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும். அதனுடன் அரை கப்  மாவைச் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாதியளவு நெய்விட்டுச் சூடாக்கவும். அதனுடன் கரைத்த மாவைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, மீதி நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து கையில் ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.


16.jpg

ரங்கூன் புட்டு

தேவை:     வறுத்த ரவை, வெல்லத்தூள் - தலா ஒரு கப்  வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப்  நெய் - கால் கப்  முந்திரி - 10  காய்ச்சாத பால் - இரண்டரை கப்  ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - அரை கப்.

செய்முறை:    வாணலியில் நெய்விட்டு உருக்கி, முந்திரி சேர்த்து லேசாக வறுக்கவும். அதனுடன் ரவை, தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுக்கவும். வெல்லத்துடன் கால் கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். பாத்திரத்தில் பாலைவிட்டு கொதிக்கவிடவும். அதனுடன் ரவை - தேங்காய்த் துருவல் கலவையைச் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வேகவைக்கவும். பிறகு, வெல்லக் கரைசல், பாசிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.


17.jpg

மகிழம்பூப் புட்டு

தேவை:     பாசிப்பருப்பு - ஒரு கப்  கடலைப்பருப்பு - கால் கப்  சர்க்கரை - முக்கால் கப்  நெய் - 5 டீஸ்பூன்  முந்திரி - 10  ஏலக்காய்த்தூள்  -  அரை டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - அரை கப்  உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:    பருப்பு வகைகளை ஒன்றாக சேர்த்து ஒருமணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும், உப்பு சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கெட்டியாக அரைத்து எடுக்கவும். மாவை இட்லித்தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். ஆறிய பிறகு இட்லிகளை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றுவிட்டு உதிர்த்து எடுக்கவும். சர்க்கரையுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். உதிர்த்த பருப்புடன் பாகை சிறிது சிறிதாகச் சேர்த்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறவும். இதனுடன் முந்திரி, நெய், ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


18.jpg

தக்காளித் துவையல்

தேவை:     தோலுரித்த சின்ன வெங்காயம் - அரை கப்  தக்காளி - ஒன்று (நறுக்கவும்)  புளி - நெல்லிக்காய் அளவு  காய்ந்த மிளகாய் - 4  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் -  தலா அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வெங்காயத்துடன் புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு:     வெங்காயம், தக்காளியை வதக்கத் தேவையில்லை.


19.jpg

டாங்கர் சட்னி

தேவை:     பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்  பூண்டு - 10 பல்  தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்)  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்  பொடித்த வெல்லம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். பிறகு வெல்லம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும். சூடான இட்லி, தோசை, சப்பாத்தியுடன் பரிமாறவும். வெளியூர் பயணம் செல்லும்போது எடுத்துச் செல்லலாம். இரண்டு நாள்கள் வரை கெடாது.


20.jpg

ரோஜாப்பூச் சட்னி

தேவை:     காய்ந்த மிளகாய் - 20  புளி - சிறிய எலுமிச்சை அளவு  கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மிளகாய் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து இறக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து அதே சூட்டில் வறுக்கவும். இதை ஆறவைத்து தண்ணீர் தெளித்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.  வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, சட்னியில் கலந்து பரிமாறவும். சட்னி ரோஜாப்பூ நிறத்தில் இருக்கும்.


21.jpg

காலிஃப்ளவர் சூப்

தேவை:     துவரம்பருப்பு வேகவைத்த நீர் - 2 கப்  நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)  பட்டை - சிறிய துண்டு  பிரியாணி இலை - ஒன்று  காய்ச்சி ஆறவைத்த பால் - அரை டம்ளர்  நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    நறுக்கிய காலிஃப்ளவரை உப்பு கலந்த சூடான நீரில் போட்டுக் கழுவி எடுக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி பட்டை, பிரியாணி இலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பருப்பு நீர், நறுக்கிய காலிஃப்ளவர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாக பால் சேர்த்துக் கலந்து உடனே இறக்கிப் பரிமாறவும்.


22.jpg

கீரை மண்டி

தேவை:     ஏதாவது ஒரு வகை கீரை - ஒரு கட்டு (ஆய்ந்து, நறுக்கவும்)  தோலுரித்த சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)  பூண்டு - 5 பல்  பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)  அரிசி கழுவிய மண்டி – இரண்டு கப் (அரிசி கழுவிய தண்ணீரைத் தெளியவிட்டு அடியில் தங்கும் மண்டியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்)  தேங்காய்ப்பால் - கால் கப்  கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, வெந்தயம்,  பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் கீரையைச் சேர்த்து வதக்கவும்.  கீரை நன்கு வெந்ததும் மண்டி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாகத் தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


23.jpg

வெண்டைக்காய் மண்டி

தேவை:     வெண்டைக்காய் - கால் கிலோ (பெரிய துண்டுகளாக்கவும்)  கத்திரிக்காய் - 2 (பெரிய துண்டுகளாக்கவும்)  உருளைக்கிழங்கு - ஒன்று (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்)  அரிசி களைந்த நீர் - 2 கப்  புளி - பெரிய நெல்லிக்காய் அளவு  கீறிய பச்சை மிளகாய் - 7 (அல்லது காரத்துக்கேற்ப)  தோலுரித்த சின்ன வெங்காயம் - 15  கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  பூண்டு - 10 பல்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    புளியை அரிசி களைந்த நீரில் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வெண்டைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, எல்லாம் சேர்ந்து வரும்போது இறக்கிப் பரிமாறவும்.


24.jpg

குழிப்பணியாரம்

தேவை:     பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப்  உளுத்தம்பருப்பு - அரை கப்  ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன்  வெந்தயம் - ஒரு டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - கால் கப்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    பச்சரிசியுடன் புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து 3 மணி நேரம் ஊறவிடவும். பிறகு ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். அரிசி கலவையை முதலில் மாவாக அரைக்கவும். அதனுடன் ஜவ்வரிசி சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். மாவுடன் உப்பு சேர்த்துக் கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, மூடிபோட்டு வேகவைக்கவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


25.jpg

பீட்ரூட் வடை

தேவை:     பீட்ரூட் துருவல் - ஒன்றரை கப்  கடலைப்பருப்பு - ஒரு கப்  துவரம்பருப்பு - கால் கப்  பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்  காய்ந்த மிளகாய் - 8  சோம்பு - அரை டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    பீட்ரூட் துருவலைப் பிழிந்து சாறு எடுக்கவும். பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, தேவையான அளவு பீட்ரூட் சாறு சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு,  உருண்டைகளை வடைகளாகத் தட்டிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


26.jpg

புடலங்காய் ரிங்ஸ்

தேவை:     நீளமான மெல்லிய புடலங்காய் - ஒன்று (மெல்லிய வில்லைகளாக நறுக்கவும்)  கடலை மாவு, அரிசி மாவு - தலா அரை கப்  கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - கால் கப்  மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    புடலங்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு புடலங்காய்களைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


27.jpg

ரவா கிச்சடி

தேவை:     ரவை - ஒரு கப்  பாசிப்பருப்பு - அரை கப்  உருளைக்கிழங்கு, கேரட் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)  முந்திரி - 6  தக்காளி, வெங்காயம் - தலா 2 (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்  நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:     கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:    வெறும் வாணலியில் ரவை, பாசிப்பருப்பைத் தனித்தனியாக மிதமான தீயில் வறுத்து எடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு தாளிப்புப் பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் சேர்த்து வதக்கி ரவை, பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை,  உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, 5 கப் சுடுநீர் ஊற்றி மூடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து, பத்து நிமிடங்கள் கழித்து இறக்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


28.jpg

வாழைப்பூ கோலா

தேவை:      வாழைப்பூ- ஒன்று (ஆய்ந்து நறுக்கவும்)  கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப்  காய்ந்த மிளகாய் - 8  சோம்பு - அரை டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்  நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, தண்ணீரை நன்கு வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, வாழைப்பூ சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த கலவையும் உப்பும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும்.


29.jpg

மரக்கறி தோசை

தேவை:     துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப்  பாசிப்பருப்பு - முக்கால் கப்  காய்ந்த மிளகாய் - 15  சோம்பு -  2 டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தேங்காய்த் துருவல் - ஒரு கப்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    பருப்பு வகைகளை நன்கு கழுவி ஒன்றாகச் சேர்த்து ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை நன்கு வடித்துவிட்டு காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை மாவு பதத்துக்குக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் வெங்காயம், தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து சிறிதளவு எண்ணெய் தடவி, மாவைச் சிறிய தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, தோசைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


30.jpg

சேனைக்கிழங்குப் பொரியல்

தேவை:     சேனைக்கிழங்கு - கால் கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்)  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

அரைக்க:      தேங்காய்த் துருவல் - ஒரு டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்  தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு  பூண்டு - 3 பல்  சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை:    சேனைக்கிழங்குடன் மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வேகவைத்து, நீரை வடியவிடவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து மிதமான தீயில் கிளறி இறக்கவும்.


311.jpg

சேனைக்கிழங்கு மசியல்

தேவை:     சேனைக்கிழங்கு - அரை கிலோ (தோல் சீவி, பெரிய துண்டுகளாக்கவும்)  எலுமிச்சைச் சாறு -  5 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  பூண்டு - 3 பல் (தட்டவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கீறிய பச்சை மிளகாய் - 8 (அல்லது காரத்துக்கேற்ப)  சோம்பு, சீரகம் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:    சேனைக்கிழங்குடன் மஞ்சள்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து வடித்து எடுக்கவும். ஆறிய பிறகு கையால் நன்கு மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, சீரகம்  தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மசித்த கிழங்கு சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் பிரிந்துவரும் வரை வதக்கவும் (மசியல் வெந்ததும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும். அதுவே தயாரான பக்குவம்). கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கவும்.


32.jpg

ணவுக்கும் உபசரிப்புக்கும் புகழ்பெற்றது செட்டிநாடு. நறுமணம் கமழும் இந்த உணவுகளில் ஆரோக்கியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. செட்டிநாட்டு மதிய உணவில் உப்பு முதல் மோர் வரை பரிமாறப்படுவதற்கு ஓர் இலக்கணமே உண்டு. தலைவாழை இலையில் இனிப்புப் பலகாரம், சித்ரான்னம், தயிர் பச்சடி, கூட்டு, பொரியல், பச்சடி, பிரட்டல், மண்டி, ஊறுகாய், வடை, சிப்ஸ், அப்பளம், அன்னம் (சாதம்) என எல்லாம் இடம்பெறும். முதலில் அன்னத்துக்குப் பருப்பு மற்றும் நெய் பரிமாற வேண்டும். பிறகு குழம்பு, பிறகு ரசம், பிறகு மோர். இப்படி கமகமக்கும் செட்டிநாடு சமையலின் சிறப்பான உணவு வகைகளை அழகிய படங்களோடு அளிக்கிறார் Classic Chettinad Kitchen வலைதளத்தை நடத்தும் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா

சிக்கனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து குருமா செய்தால் சூப்பராக இருக்கும். இதை இட்லி, தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

 
சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா
 
தேவையான பொருட்கள் :
 
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 10
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 தனியா தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
 
தாளிக்க :
 
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
 
201712061223049114_1_chicke._L_styvpf.jpg
 
செய்முறை:
 
சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.
 
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
தேங்காயை அரைத்து திக்காக பால் எடுக்கவும். 
 
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 
தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் மஞ்சள்தூள்,  தனியா தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.
 
அடுத்து அதில் சிக்கனை சேர்த்து வதக்கவும். இப்போது சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
 
சிக்கன் வெந்ததும், அரைத்த தேங்காய்ப்பாலை ஊற்றி குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும். 
 
சூடான, சுவையான சிக்கன் தேங்காய்ப் பால் குருமா ரெடி.
 
Link to comment
Share on other sites

லெமன் பெப்பர் மீன் வறுவல்

குழந்தைகளுக்கு மீன் மிகவும் பிடிக்கும். இன்று லெமன், பெப்பர் சேர்த்து மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
லெமன் பெப்பர் மீன் வறுவல்
 
தேவையான பொருள்கள் :
 
வஞ்சிரம் மீன் - அரை கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
லெமன் சாறு - 3 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு
பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
 
201712111547580183_1_lemonpepperfishfry._L_styvpf.jpg
 
செய்முறை :
 
வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
 
ஒரு கடாயில் மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை போட்டு பொன்னிறமாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். 
 
ஒரு தட்டில் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த மிளகு பொடி, எலுமிச்சை சாறு, உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். 
 
இந்த கலவையில் மீன் துண்டுகளை எடுத்து கலவையில் நன்கு புரட்டி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
 
பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி மீன்களை போட்டு இருபுறமும் பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.
 
சுவையான லெமன் பெப்பர் மீன் வறுவல் ரெடி

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

சத்தான சுவையான மாதுளை எலுமிச்சை சாதம்

 

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டியான, சத்தான உணவு கொடுக்க விரும்பினால் மாதுளை எலுமிச்சை சாதம் செய்து கொடுக்கலாம்.

 
 
சத்தான சுவையான மாதுளை எலுமிச்சை சாதம்
 
தேவையான பொருட்கள் : 
 
உதிரியாக வடித்த சாதம் -  ஒரு கப், 
மாதுளை பழம் - 1, 
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், 
இஞ்சி - சிறிய துண்டு, 
 மஞ்சள்தூள் - சிறிதளவு,
கொத்தமல்லி - சிறிதளவு,
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
 
தாளிக்க :
 
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன், 
கடுகு  - கால் டீஸ்பூன், 
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், 
பெருங்காயம் - அரை டீஸ்பூன், 
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு.
 
201712151033099701_1_pomegranate-rice._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
மாதுளை முத்துக்களை தனியாக உதிர்த்து வைக்கவும். 
 
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
 
எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து வைக்கவும். 
 
கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, கடுகு, உளுத்தம்பருப்பு. பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். 
 
இதனுடன் மாதுளை முத்துக்கள், வடித்த சாதம், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும். 
 
சுவையான மாதுளை எலுமிச்சை சாதம் ரெடி! 
Link to comment
Share on other sites

“புதுமையான ரெசிப்பிகளே என் பலம்!”

ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

 

106p1.jpg

குக்கரி வெப்சைட்’டில் கலக்கும் ஷர்மிலி

“ஐ.டி நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். திருமணத்துக்குப் பிறகும் சமைக்கக் கற்றுக்கொள்ளவில்லை. இன்று என் வாழ்க்கை அப்படியே என்னை வேறு திசையில் கொண்டுவந்து வெற்றியாளராக நிறுத்தியிருக்கிறது” உற்சாகமாகப் பேசுகிறார், கோயம்புத்தூரில் வசிக்கும் ஷர்மிலி ஜெயப்பிரகாஷ்.sharmispassions.com என்ற தன் குக்கரி வெப்சைட்டில் பிஸியாக இருப்பவர், அது உருவான கதையைச் சொன்னார்...

``எம்.சி.ஏ முடித்த பின்னர், பல ஆண்டுகளாக ஐ.டி வேலையில் இருந்தேன். திருமணத்துக்குப்  பின்னர்தான்  என் தோழிகள் பலரும் சமைக்கக் கற்றுக் கொண்டனர். ஆனால், எனக்கு அப்போதும் அந்த அவசியம் ஏற்படவில்லை. ஏனெனில், என் அம்மா என்னுடன் இருந்ததால், தண்ணீர் குடிக்க மட்டுமே கிச்சனுக்குள் சென்றுவந்தவளாக இருந்தேன். ஒரு திருப்பமாக நான் கர்ப்பமடைந்த பின், நான் சாப்பிடுவது எனக்குள் வளரும் குட்டி உயிருக்குமானது என்றான பிறகு, சாப்பாட்டின் மீது என் கவனம் அதிகரித்தது.

106p2.jpg

ரோக்கியமான உணவுகள் பற்றி இணையத்தில் தேட ஆரம்பித்தபோது, `உணவு என்பது இவ்வளவு பெரிய உலகமா?’ என்று அசந்தே விட்டேன்.

‘நெட்டில் நீ பார்த்து வியக்கும் அந்த உலகம் ஆரம்பிப்பது, நம் வீட்டுக் கிச்சனில் இருந்துதான்’ என்று அம்மா சொல்ல, ஆசை ஆசையாகச் சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 2009-ல் ஃபுட் ப்ளாகிங் (Food Blogging) எழுத ஆரம்பித்தேன். அது நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பு இன்றுவரையும் தொடர்கிறது.

2012-ல் என் ஐ.டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு குழந்தை வளர்ப்பிலும், ரெசிப்பிகளிலும், என் வலைதளத்திலும் கவனம் செலுத்தினேன்.

106p3.jpg

அம்மாவின் கைப்பக்குவமே நான் படித்த பாடங்கள். புதுமையான ரெசிப்பிகளே என் வலைதளத்தின் பலம். என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புகள் சூழ்ந்திருப்பதால், வீடியோக்களில் கவனம் செலுத்த இயலவில்லை.  என் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கணவர் கிடைத்திருப்பதால், என் எண்ணங்கள் எல்லாம் செயலாகி வருகின்றன. எனவே, விரைவில் வித்தியாசமான ரெசிப்பிகளை வீடியோக்களுடனும் பதிவிடுவேன்.

பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கலாசாரங்களை இணைத்துச் செய்யப்படும் உணவுகளுக்கு ‘ஃப்யூஷன் ரெசிப்பிகள் (Fusion Recipes)’ எனப் பெயர். இதற்கென வரைமுறைகள் எதுவும் இருக்காது. விருப்பம்போல் செய்து சாப்பிடலாம். நம் கற்பனைத்திறனுக்குச் சவால் என்றே சொல்லலாம். இங்கு ஐந்து ஃப்யூஷன் ரெசிப்பிகளை வழங்குகிறேன்... வாருங்கள் சுவைக்கலாம்!”

செஷ்வான் தோசை

தேவையானவை:

 தோசை மாவு  -  ஒரு  கப்
 பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் (வெள்ளை) - ஒரு டீஸ்பூன் 
 பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் (பச்சை) -  ஒரு டேபிள்ஸ்பூன்
 நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் -  கால் கப்
 நீளவாக்கில் நறுக்கிய பச்சை நிற குடமிளகாய்  -  2 டேபிள்ஸ்பூன்
 நீளவாக்கில் நறுக்கிய கேரட் -  கால் கப்
 நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் -  கால் கப்
 செஷ்வான் சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

106p4.jpg

106p5.jpg



106p6.jpg


பீட்சா பராத்தா

தேவையானவை:

 சப்பாத்தி மாவு - அரை கப்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2  டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய சிவப்பு குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன் 
 உலர்ந்த ஆரிகானோ தூள் - கால் டீஸ்பூன்
 உலர்ந்த மிளகாய் செதில்கள் -  கால் டீஸ்பூன்
 வேகவைத்த சிறிய சோளம் -  2
 பீட்சா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீஸ் துருவல் – கால் கப்
 உப்பு - தேவையான அளவு

106p7.jpg

106p8.jpg

106p9.jpg


பீட்சா பணியாரம்

தேவையானவை:

 தோசை மாவு -  ஒரு கப்
 நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2  டேபிள்ஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பச்சை குடமிளகாய் - அரை  கப்
 கேரட் துருவல் - கால் கப்
 உலர்ந்த ஆரிகானோ தூள் - கால் டீஸ்பூன்
 உலர்ந்த மிளகாய் செதில்கள் - கால் டீஸ்பூன்
 பீட்சா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 சீஸ் துருவல் – கால் கப்
 உலர்ந்த ஆரிகானோ தூள், உலர்ந்த மிளகாய் செதில்கள் (மேலே தூவ) - சிறிதளவு
 எண்ணெய், உப்பு – தேவையான அளவு

106p10.jpg

106p11.jpg

106p12.jpg


இட்லி சாண்ட்விச்

தேவையானவை:

 இட்லி - 3
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2  டேபிள்ஸ்பூன்
 கேரட் துருவல் - கால் கப்
 உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)
 மஞ்சள்தூள் -  கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் -  அரை டீஸ்பூன்
 கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
 வெண்ணெய் -  ஒரு டேபிள்ஸ்பூன்
 தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெங்காயத் துண்டுகள் - 3
 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

106p13.jpg

106p14.jpg

106p15.jpg


வெங்காய தோசை வாஃபிள்ஸ்

தேவையானவை:

 தோசை மாவு - 2 கப்
 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - கால்  கப்
 பச்சை மிளகாய் -   2 (பொடியாக நறுக்கவும்)
 இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டீஸ்பூன்
 கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்
 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

106p16.jpg

106p17.jpg

106p18.jpg

Link to comment
Share on other sites

கிச்சடி

 

 

ர் உணவு ஒரு நாட்டின் தேசிய உணவாக என்னென்ன கல்யாண குணங்கள் தேவை?

அந்த உணவு, அந்த தேச மக்களின் அடிப்படை உணவுகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த உணவு, அந்த தேசத்துக்கே உரிய முக்கியமான விளைபொருள்களைக் கொண்டு சமைக்கப்படுவதாக இருக்க வேண்டும். அந்த உணவு, அந்த தேச மக்களின் பாரம்பர்ய உணவாக, கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். முக்கியமான பண்டிகைக் கால உணவாகவும் இருக்க வேண்டும்.

சரி, இத்தனைக் குணாதிசயங்களும் பொருந்திய இந்தியாவின் தேசிய உணவு எது?

86p1_1511852722.jpg

‘எதுவுமில்லை’ என்பது பதில் இல்லை. மேலே சொன்ன செம்மையான குணங்களுடன் பல உணவுகள் இருப்பதால் எதைச் சொல்வது என்பதில் குழப்பமுண்டு. காரணம், பல இன மக்களும், உணவுக் கலாசாரமும் கொண்ட இந்தியாவில், தேசிய உணவு என்று ஏதேனும் ஒன்றை மட்டும் அறிவிப்பது கடினமான காரியமே. இருந்தாலும், கிச்சடி அந்தத் தகுதியுடன் பார்க்கப்படுகிறது. அது அவ்வளவு பாரம்பர்யமான உணவா? இந்திய மக்களின் உணவுக் கலாசாரத்துடன் அது பின்னிப்பிணைந்ததா? அதன் வரலாறு என்ன?

`கிச்டி’ அல்லது `கிச்சிரி’ அல்லது `கிச்சடி’ என்பது தெற்காசிய உணவு. அதன் வயது இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேல் இருக்கலாம். khicc என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைத்தது என்று பொருள். Khichdi அல்லது Khichiri என்ற சொல்லுக்கு மூலம் அதுவே.
86p2_1511852737.jpg
அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைக்கப்படும் உணவான கிச்சடி என்பது இந்தியாவின் பழைமையான ஆயுர்வேத நூல்களில் மருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சந்திரகுப்த மௌரியர் காலத்தில், அதாவது கி.மு 305 சமயத்தில் இந்தியாவுக்கு வந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் தளபதி செலூகஸ் நிகாடர், ‘அரிசியையும் பருப்பையும் சேர்த்துச் சமைத்து உண்பது இந்த மக்களின் முக்கிய உணவு’ என்று பதிவு செய்துள்ளார்.

முகலாயர்களின் அரண்மனைகளில் தினசரி உணவாக கிச்சடி கமகமத் திருக்கிறது. அரிசி, பாசிப்பருப்பு, நெய் சம அளவில் எடுக்கப்பட்டு, அவற்றுடன் சில மசாலாக்களும் சேர்த்துச் செய்யப்பட்ட கிச்சடி, பேரரசர் அக்பரின் விருப்பத்துக்குரிய உணவாக இருந்திருக்கிறது. அக்பரின் அவைக்குறிப்புகளைச் சொல்லும் Ain-i-Akbari-ல் விதவிதமான கிச்சடிகளின் செய்முறைகள் சொல்லப்பட்டுள்ளன. பேரரசர் ஜஹாங்கீர் என்றைக்கெல்லாம் உணவில் இறைச்சியைத் தவிர்க்க விரும்பி னாரோ அன்றைக்கெல்லாம் `லஸிஸா’ விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். அது, குஜராத்திய பாணி கிச்சடி. ஆடம்பரத்தையும் சிறப்பு உணவுகளையும் ஒதுக்கிய பேரரசர் ஔரங்கசீப்பின் வாய்க்குப் பிடித்த உணவாகவும் கிச்சடி இருந்திருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவாத் சமஸ்தானத்தின் நவாப்பாக இருந்த நஸ்ருதீன் ஷா, போஜனப் பிரியர். அவருக்கு அரிசி, பருப்புடன் பாதாம், பிஸ்தா, உயர்ரக மசாலாக்கள் எல்லாம் கலந்து குறைந்த நெருப்பில் நீண்ட நேரம் வேகவைத்துத் தயாரிக்கப்படும் ராயல் கிச்சடி விருப்பத்துக்குரியதாக இருந்திருக்கிறது.

86p3_1511852762.jpg

காலனியாதிக்கக் காலத்தில் கிச்சடியின் சுவை பிரிட்டிஷாரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. அந்த பிரிட்டிஷ் இந்தியக் கிச்சடியின் பெயர் Kedgeree. இது அசைவ கிச்சடி. அரிசி, பதப்படுத்தப்பட்ட மீன், வோக்கோசு என்ற மல்லி வகை, கறி மசால், முட்டை, வெண்ணெய் போன்ற பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்திய-ஐரோப்பியக் கலவை கிச்சடி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே Kedgeree-ஐ பிரிட்டிஷார் லண்டனுக்குக்கொண்டு சென்றுவிட்டனர். அங்கேயும் காலை நேர உணவாக அது பரவ ஆரம்பித்தது. அப்போதைய சமையல் குறிப்புப் புத்தகங்கள் சிலவற்றிலும் Kedgeree இடம்பிடித்தது. சுதந்திரத்துக்குப் பிறகு ஆங்கிலோ-இந்தியர்கள் மத்தியில் இது முக்கியமான உணவாக இருந்தது.

கிழக்கே வங்கப் பகுதியில் எட்டிப்பார்த்தால் கிச்சடி அங்கே Khichuri என்றழைக்கப்படுகிறது. நெய்யின் சுவை தூக்கலாக இருக்கும். கிச்சுரிக்குப் பக்கபலமாகப் பெங்காலி பாணி ஊறுகாய், ஆம்லெட், இறைச்சி, மீன், உருளை வறுவல் போன்றவை பரிமாறப்படுகின்றன. அரிசியுடன் பல்வேறு தானியங்கள் சேர்த்துச் சமைக்கப்படும் Joga Khichuri வங்க மக்களின் விருப்பத்துக்குரிய உணவு. மேற்கில் குஜராத்தின் சில பகுதிகளில் மஞ்சள்தூள் சேர்த்துச் சமைக்கப்பட்ட சோறுடன் கடலை மாவும் மசாலாக்களும் கொண்டு தயாரிக்கப்பட்ட குழம்பு (Khadi) சேர்த்து உண்பதே கிச்சடி என்றழைக்கப்படுகிறது. குறைவான எண்ணெயும் காரமும் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கிச்சடி, குஜராத்தியர்களால் பத்திய உணவாகவும் கருதப்படுகிறது.

86p4_1511852820.jpg

பீகார் மக்களையும் கிச்சடியையும் பிரிக்கவே முடியாது. அரிசி, பருப்பு, கரம் மசாலா சேர்த்துத் தயாரிக்கப்பட்ட கிச்சடி, சில வகை பராத்தாக்களுமே அவர்களது தினசரி மதிய உணவு. குறிப்பாக, நமக்கு ‘சனி நீராடு’ என்பதுபோல, அவர்கள் சனிக்கிழமைதோறும் கிச்சடி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஹரியானாவின் கிராமப் பகுதிகளில் கம்பும் பாசிப்பருப்பும் சேர்த்துத் தயாரிக்கப்படும் கிச்சடி, அன்றாட உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதில் தயிரும் சர்க்கரையும் கலந்து இனிப்பாக உண்ணும் வழக்கத்தையும் வைத்திருக்கிறார்கள். ஒடிஸாவில் இந்த உணவு, Khechidi என்றழைக்கப்படுகிறது. பூரி ஜெகன்னாத் கோயில் பிரசாதங்களில் Adahengu khechidi என்பதும் ஒன்று.

இங்கே தெற்குப்பக்கம் எட்டிப் பார்த்தால், ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம்களின் மெனுவிலும் கிச்சடி முக்கிய உணவாக இருந்திருக்கிறது. அவை Keeme ki khichdi என்ற அசைவ கிச்சடி. மேற்படி கிச்சடியுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட இறைச்சியையும் சேர்த்துச் சமைத்திருக்கிறார்கள். அதற்குத் துணையாக Khatta என்ற புளிப்புச் சுவை தூக்கலான சூப்பையும் (புளி, வெங்காயம், சீரகம், மிளகாய் கலந்தது) பரிமாறியிருக்கிறார்கள்.

கர்நாடகாவுக்கு வந்தால், அங்கே Bisi bele huli anna என்பதும் கிச்சடி வகையில் தான் வருகிறது. அரிசி, பருப்பு, அந்தப் பருவத்தில் கிடைக்கும் காய்கறிகள், புளி, வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், சீரகம், கொத்தமல்லி, தேங்காய், காய்ந்த மிளகாய், மராட்டி மொக்கு உள்ளிட்டவை எல்லாம் சேர்த்துச் சமைக்கப்படும் பிசிபேளா பாத்தே அது. இந்த வகை உணவு, மைசூர் அரண்மனையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. மைசூர் ராஜ குடும்பத்தினரது விருப்பத்துக்குரிய உணவாகவும் இது காலம் காலமாக இருந்து வருகிறது.

86p5_1511852799.jpg

இன்னும் தெற்கே நம் தமிழகத்துக்கு வந்தால், மேற்படி தென்னிந்தியக் கிச்சடி யின் சற்றே மாறுபட்ட வடிவம்தான் நமக்கு கூட்டாங்சோறு. அதில் காய்கறிகள் சேராமல் பாசிப்பருப்புக்குப் பதிலாக, அரிசியுடன் துவரம்பருப்பு சேர்த்துச் சமைக்கப்படுவது பருப்புச் சோறு அல்லது துவரம்பருப்புச் சோறு. கொங்கு மண்டலத்தில் அதுவே ‘அரிசியும் பருப்பும்’ என்று அழைக்கப்படுகிறது. அரிசி, பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துச் சமைக்கப்படும் தென்னிந்தியர்களின் காலை உணவுகளின் ஒன்றான பொங்கல் / வெண்பொங்கலையும் இந்த வகையில்தான் சேர்க்க வேண்டும். அரிசியும் பருப்பும் சேர்த்துச் சமைத்து உண்பது என்பது தென்னிந்திய மக்களின் பழைமையான உணவுக் கலாசாரம்தான்.

ஆக, அரிசியும் பருப்பும் சில நறுமணப் பொருள்களும் சேர்த்துச் சமைக்கப்படுவது என்பது இந்தியா முழுக்க எளிய மக்களின், விவசாய மக்களின் அடிப்படை உணவாக, காலம் காலமாக இருந்து வருகிறது. அரிசியுடன் சேர்க்கப்படும் பருப்பு மாறுபடலாம். மசாலாக்கள் மாறுபடலாம். செய்முறையில் வித்தியாசம் இருக்கலாம். பிராந்தியத்துக்கேற்ப ருசி மாறுபடலாம். ஒவ்வொரு இன மக்களும் அதற்கு ஒவ்வொரு பெயர் வைத்திருக்கலாம். காரத்துக்குப் பதில் சிலர் இனிப்பைச் சேர்த்துச் சமைக்கலாம். சைவத்துக்குப் பதில் இறைச்சியும் சேர்த்துச் சமைக்கலாம். இப்படி அரிசி, பருப்பு பிரதானமாக இருக்க, அதனுடன் கூடுதலாகச் சில பல நறுமணப் பொருள்கள் சேர்த்து வேகவைத்துச் சமைக்கப்படும் பதார்த்தங்கள் அனைத்தையுமே ‘கிச்சடி’ என்ற பொதுச்சொல்லின் கீழ் நம் வசதிக்காக வகைப்படுத்தலாம்.

எனவே, தேசமெங்கும் வியாபித்திருக்கும் கிச்சடியை India’s superfood என்கிறார்கள். ‘இந்திய உணவுகளின் ராணி’ என்றும் அழைக்கிறார்கள். அதை ‘கிச்சடி’ என்ற பொதுப்பெயருடன் தேசிய உணவாக அறிவிக்க இயலாது என்றாலும், பல்வேறு இந்திய மாநிலங்களின் அடிப்படை உணவு என்ற அந்தஸ்து அதற்கு என்றும் உண்டு.


அயல்தேச கிச்சடிகள்

* Khichra என்பது தெற்காசிய நாடுகளில் இஸ்லாமியர்கள் உண்ணும் கிச்சடி வகை உணவு. குறிப்பாக ரமலான் நோன்பு காலத்தில் இந்த உணவு அதிகம் சமைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் மக்களின் அன்றாட உணவுகளில் Khichra-ம் ஒன்று. இறைச்சியும் பருப்பு வகைகளும் சேர்த்துச் சமைக்கப்படும் இது, அங்கே சாலையோரக் கடைகளில்கூட தாராளமாகக் கிடைக்கும் உணவு.

* கிச்சடியின் எகிப்திய வடிவம்தான் குஷாரி. அரிசி, பருப்பு, மக்ரோனி கலவையுடன் சாஸ் வகைகள், வினிகர், வெங்காயம், கொண்டைக்கடலை உள்ளிட்டவை சேர்த்துத் தயாரிக்கப்படும் பழைமையான உணவு. இதில் அசைவம் சேர்க்கப்படுவதில்லை. 

* பிஜி தீவுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் பிற இன மக்கள் மத்தியிலும் கிச்சடி முக்கியமான உணவு. இங்கே அரிசி, பருப்பு, மசாலா, வெங்காயம், பூண்டு போன்றவற்றையெல்லாம் சேர்த்து வறுத்தும் வதக்கியும் பின்பு தண்ணீர் சேர்த்து வேகவைத்தும் கிச்சடி தயாரிக்கிறார்கள். ஒருமுறை அக்பர் பீர்பாலிடம் சவால் விட்டாராம். கீழே நெருப்பு இருக்க, மேலே மிக உயரத்தில் உள்ள பாத்திரத்தில் கிச்சடியை வேக வைத்துத் தயாரிக்க வேண்டுமென்பதே சவால்.

இந்த நாடோடிக் கதை அங்கே பிரபலம் என்பதால், குறிப்பிட்ட பணியை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதை, ‘கிச்சடி தயாராக எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று பொதுவாகக் கேட்பது அந்த மக்களது வழக்கமாக இருக்கிறது.


86p6_1511852849.jpg

இவையும் கிச்சடியே!

* வடதமிழகத்தில் ரவையும் மசாலாக்களும் கொண்டு தயாரிக்கப்படும் உணவுக்கு ‘கிச்சடி’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. `ரவாபாத்’ என்றும் இதை அழைக்கலாம். உப்புமா வகையான இந்த உணவு பெரும்பாலான உணவகங்களில் கிடைக்கிறது.

* தென்தமிழகத்தில் கத்திரிக்காய், பீர்க்கங்காய், சௌசௌ போன்ற காய்கறிகளைக்கொண்டு தயாரிக்கப்படும் குழம்பு வகைக்கு ‘கிச்சடி’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. இவை இட்லி, தோசை வகைகளுடன் சாம்பாருக்குப் பதிலாக உண்ணப்படுகிறது.

* கேரளாவில் ஓணம் விருந்தில் கிச்சடி என்ற பதார்த்தமும் ஒன்று. வெண்பூசணி, வெள்ளரி, சீரகம், தயிர் எல்லாம் சேர்த்துச் செய்யப்படும் கூட்டு வகை அது.

Link to comment
Share on other sites

மஷ்ரூம் ரெசிப்பிக்கள்

 

II மஷ்ரூம்  ஸ்டஃப்டு பரத்தா  II மதுரை காளான்  II மஷ்ரூம் செட்டிநாடு
II காரைக்குடி பொரித்த மஷ்ரூம் II மஷ்ரூம் மிளகு சூப்

p97.jpg

மஷ்ரூம்  ஸ்டஃப்டு பரத்தா


தேவையானவை:

கோதுமை மாவு- கால் கிலோ
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்)
முழு பூண்டு -1  (பொடியாக நறுக்கவும்)
மஷ்ரூம் - 100 கிராம்  (பொடியாக நறுக்கவும்)
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு

p97a.jpg

செய்முறை:

ஒரு பவுலில் கோதுமை மாவு உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல், பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மஷ்ரூம், பூண்டு போட்டு வதக்கி மிளகுத்தூள், கரம்மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி வேக வைக்கவும். பிசைந்து வைத்து இருக்கும் மாவை சிறிய வட்டமாக தேய்த்து, அதில் கிளறிய ஸ்டஃபிங்கை நடுவில் வைத்து  மூடி, மீண்டும் உருண்டையாக்கி வட்டமாக தேய்க்கவும். இனி தோசைக்கல்லில் நெய் ஊற்றி சப்பாத்தியாக வேக வைத்து எடுக்கவும்.


மதுரை காளான்

தேவையானவை:

காளான் - 200 கிராம்
முழு பூண்டு - 1 (இடித்துக்கொள்ளவும்)
கறிவேப்பிலை - சிறிதளவு (இடித்துக்கொள்ளவும்)
சோள மாவு -ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை - 1 (சாறு எடுக்கவும்)
காய்ந்த மிளகாய்- 3 (இடித்துக்கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் - 5 (ஊற வைத்து அரைத்து, பேஸ்ட்டாக ஆக்கிக் கொள்ளவும்)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

p97b.jpg

செய்முறை:

காளானைக் கழுவி இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் இதனுடன் சேர்த்துக் கிளறி, எண்ணெயில் இரண்டு நிமிடம் போட்டு பொரித்து எடுக்கவும்.

* மஷ்ரும் ரெசிப்பிகளை வழங்கியவர் செஃப் பழனிமுருகன்


மஷ்ரூம் செட்டிநாடு

தேவையானவை:

மஷ்ரூம் - 200 கிராம்
தக்காளி- 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்- அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
அன்னாசிப் பூ - 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு

p97c.jpg

வறுத்து அரைக்க :

 தேங்காய் துருவியது  - 2 டேபிள் ஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 4
 மிளகு - ஒரு டீஸ்பூன்
 சீரகம் - அரை டீஸ்பூன்
 பொட்டுக்கடலை - அரை டேபிள்ஸ்பூன்
 மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

வறுத்து அரைக்க வேண்டியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அன்னாசிப் பூ, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை போனதும் தக்காளி, அரைத்து வைத்திருக்கும் மசாலா, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கிளறவும். இதில் நறுக்கிய மஷ்ரூம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்தபின், கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கிவிடவும்.


காரைக்குடி பொரித்த மஷ்ரூம்

தேவையானவை:

மஷ்ரூம் - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  - அரை டேபிள்ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு -  ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சை - 1 (சாறு எடுத்து வைக்கவும்)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -  அரை டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
ஸ்பிரிங் ரோல் ஆனியன் - சிறிதளவு

p97d.jpg

வறுத்து அரைக்க :

மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
சோம்பு - கால் டீஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு டீஸ்பூன்
(எண்ணெய் விடாமல் வறுத்து பேஸ்டாக்கி கொள்ளவும்)

செய்முறை:

மஷ்ரூமை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.  ஒரு பவுலில் மஷ்ரும் வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, எலுமிச்சைச் சாறு, வறுத்து அரைத்த பேஸ்ட், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) போன்றவற்றைச் சேர்த்து  பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருண்டையில் மசாலா ஒட்டவில்லை என்றால், ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து  பிசைந்து கொள்ளலாம். இதை எண்ணெயில் பொரித்து எடுத்து ஸ்பிரிங் ரோல் ஆனியனால் அலங்கரித்துப் பரிமாறவும்.


மஷ்ரூம் மிளகு சூப்

தேவையானவை:

மஷ்ரூம் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 5  (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
புதினா - சிறிது (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை - சற்று அதிகமாக எடுத்துக்கொள்ளவும்
கறிவேப்பிலை -சிறிதளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு

p97e.jpg

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, மஷ்ரூமை சேர்த்து வதக்கவும். மஷ்ரூம் லேசாக வதங்கும்போது தக்காளியையும் போட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு கொதிக்கவிடவும். இறக்கும்போது மிளகுத்தூள், உப்பு போட்டு இறக்கவும்.

Link to comment
Share on other sites

வேஸ்ட் டு டேஸ்ட் ரெசிப்பி

 

 

2_1513680827.jpg

இடியாப்ப பிரியாணி

தேவையானவை:   மீதமான இடியாப்பம் - 3 (உதிர்க்கவும்)  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தக்காளி - பாதி (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  அன்னாசி மொக்கு, ஏலக்காய் - தலா 2  பிரியாணி இலை - ஒன்று  கிராம்பு - 3  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்) -  ஒன்றரை டீஸ்பூன்  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது -  ஒரு டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:         வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மேலும் வதக்கவும். அதனுடன் இடியாப்பம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.


3_1513680846.jpg

ஆலு பராத்தா

தேவையானவை:      கோதுமை மாவு - ஒரு கப்  மீதமான உருளைக்கிழங்கு மசியல் - கால் கப்  உப்பு - கால் டீஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:        கோதுமை மாவுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்திகளின் நடுவே சிறிதளவு உருளைக்கிழங்கு மசியலை வைத்து மூடி, மீண்டும் உருட்டித் தேய்க்கவும்.  தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடான ஆலு பராத்தா ரெடி.


4_1513681234.jpg 

கறிவேப்பிலை இட்லி

தேவையானவை:     மீதமான இட்லி - 3 (துண்டுகளாக நறுக்கவும்)  கடுகு - அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு  கறிவேப்பிலை பொடி, எண்ணெய் -  தலா 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:        வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் இட்லித் துண்டுகள், கறிவேப்பிலை பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.   இரும்புச் சத்துமிக்க இந்த கறிவேப்பிலை இட்லி, அனைத்து வயதினருக்கும் ஏற்றது.


5_1513681252.jpg

உப்புமா லட்டு

தேவையானவை:      மீதமான ரவை உப்புமா - ஒரு கப்  தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை - தலா கால் கப்  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். உப்புமாவைச் சிறிய  உருண்டைகளாக உருட்டவும். ஒரு தட்டில் நாட்டுச் சர்க்கரையைப் போட்டு, இன்னொரு தட்டில் வறுத்த தேங்காய்த் துருவலைப் போடவும். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை நாட்டுச் சர்க்கரையில் புரட்டி எடுக்கவும். பிறகு தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும்.


6_1513681274.jpg

கீரை தோசை

தேவையானவை:    மீதமான அரைக்கீரை மசியல் - 2 டேபிள்ஸ்பூன்  தோசை மாவு - ஒரு கப்  எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:  தோசை மாவுடன் கீரை மசியலைச் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். அனைவரும் விரும்பி உண்ணும் இந்தக் கீரை தோசையில் இரும்புச் சத்து அதிகம்.


7_1513681293.jpg

கேக் பாப்ஸ்

தேவையானவை:    மீதமான கேக்  துண்டுகள் - ஒரு கப்  வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உருக்கிய சாக்லேட் -  கால் கப்.

செய்முறை:   கேக்குடன் வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். பிறகு, உருண்டைகளை உருக்கிய சாக்லேட்டில் முக்கி எடுக்கவும்.


8_1513681311.jpg

சப்பாத்தி நூடுல்ஸ்

தேவையானவை:     மீதமான சப்பாத்தி - 3 (நீளவாக்கில் நறுக்கவும்)  கேரட் துருவல், வேகவைத்த ஸ்வீட் கார்ன், வேகவைத்த பச்சைப் பட்டாணி – தலா 2 டேபிள்ஸ்பூன்  குடமிளகாய் - பாதி (நீளவாக்கில் நறுக்கவும்)  நறுக்கிய வெங்காயத்தாள் - அரை டேபிள்ஸ்பூன்  சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கேரட் துருவல், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் ஸ்வீட் கார்ன், பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். பிறகு, சப்பாத்தியைச் சேர்த்து மேலும் வதக்கவும். அதன்மீது சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். இறுதியாக வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் இந்த உணவு, இரும்புச் சத்து மிகுந்த உணவாகும்.


9_1513681328.jpg

கொத்து பரோட்டா

தேவையானவை:   மீதமான பரோட்டா - 2 (சிறிய துண்டுகளாக்கவும்)  தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்  மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்  மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    பரோட்டா துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுவிட்டு உதிர் உதிராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி   சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு உதிர்த்த பரோட்டா, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.


10_1513681350.jpg

இட்லி டிக்கா

தேவையானவை:     மீதமான மினி இட்லி - 3  இட்லி மிளகாய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்  பொடியாக நறுக்கிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு) - ஒரு கைப்பிடி அளவு  பனீர் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு  வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு, சூடானதும் மினி இட்லி, இட்லி மிளகாய்ப்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். தோசைக்கல்லில் மீதமுள்ள வெண்ணெய்விட்டுச் சூடாக்கி குடமிளகாய், பனீர் துண்டுகள் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். டூத் பிக்கில் முதலில் ஒரு குடமிளகாய் துண்டு குத்தவும். அதன்மீது ஒரு பனீர் துண்டு. அடுத்து மினி இட்லி என வரிசையாக அடுக்கி பரிமாறவும். 


11_1513681368.jpg

கொத்து பனீர் ரொட்டி

தேவையானவை:   மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 4 (சதுர துண்டுகளாக்கவும்)  துருவிய பனீர் - ஒரு கைப்பிடியளவு  பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்  வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கவும்)  கடுகு - அரை டீஸ்பூன்  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் ரொட்டித் துண்டுகளைப் போட்டு வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள வெண்ணெயைச் சேர்த்துச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், கோஸ் சேர்த்து வதக்கவும். பிறகு பனீர் துருவல், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இறுதியாக வறுத்த ரொட்டியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


12_1513681395.jpg

சீஸ் தோசை

தேவையானவை:    மீதமான கேரட் பொரியல் - 2 டேபிள்ஸ்பூன்  தோசை மாவு - அரை கப்  சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:    தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசையாக ஊற்றவும். அதன்மீது கேரட் பொரியல், சீஸ் தூவி மூடி வேகவிடவும். சீஸ் உருகியதும் எடுத்துப் பரிமாறவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்த சீஸ் தோசை.


13_1513681412.jpg

சில்லி பரோட்டா

தேவையானவை:   மீதமான பரோட்டா - 3 (சதுரத் துண்டுகளாக்கவும்)  கேரட் துருவல், நறுக்கிய முட்டைகோஸ், நறுக்கிய குடமிளகாய் – தலா கால் கப்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய வெங்காயத்தாள், சோயா சாஸ், தக்காளி சாஸ் - தலா அரை டேபிள்ஸ்பூன்  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் -  3 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் கேரட், முட்டைகோஸ், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, பரோட்டாக்களைச் சேர்த்துக் கிளறவும். அதனுடன் சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு சேர்த்துக் கலந்து வெங்காயத்தாள், மிளகுத்தூள் தூவிக் கிளறி இறக்கவும்.


14_1513681431.jpg

சாத அடை

தேவையானவை:    மீதமான சாதம் - ஒரு கப்  கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்  வற்றல் பொடி -  அரை டீஸ்பூன்  தயிர் -  2 டேபிள்ஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   சாதத்துடன் கடலை மாவு, வற்றல் பொடி, தயிர், வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். பிறகு, சிறிதளவு தண்ணீர்விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய்விட்டுத் தேய்த்து, மாவை அடையாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.


15_1513681451.jpg

சீஸ் பால்ஸ்

தேவையானவை:   மீதமான சாதம் - ஒரு கப்  ஆரிகானோ, தைம், மிளகுத்தூள் -  தலா ஒரு சிட்டிகை  கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டேபிள்ஸ்பூன்  மோசரெல்லா சீஸ் துண்டுகள், பிரெட் தூள் - தலா ஒரு கைப்பிடியளவு  உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:    சாதத்துடன் ஆரிகானோ, தைம், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பிறகு, சிறிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும் சீஸ் துண்டுகளை வைத்து உருட்டவும். கார்ன்ஃப்ளாருடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். உருண்டைகளை கார்ன்ஃப்ளார் கரைசலில் முக்கி எடுத்து, பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு உருண்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


16_1513681467.jpg

முருங்கைக்கீரை போண்டா

தேவையானவை:     மீதமான முருங்கைக்கீரை பொரியல் - கால் கப்  கடலை மாவு - முக்கால் கப்  உப்பு - தேவையான அளவு  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:    வாய் அகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, உப்பு சேர்த்து போண்டா பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும். இதில் முருங்கைக்கீரை பொரியல் சேர்த்து நன்கு கிளறவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, மாவை போண்டாக்களாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து அதிகம் என்பதால் எல்லா வயதினரும் சாப்பிடலாம்.


17_1513681489.jpg

டிபன் சாம்பார்

தேவையானவை:   மீதமான பருப்பு - அரை கப்  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பருப்பு, தேவையான அளவு தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


18_1513681507.jpg

பீட்ரூட் சாதம்

தேவையானவை:    மீதமான சாதம் -  ஒரு கப்  வெங்காயம் -  ஒன்று (பொடியாக நறுக்கவும்)  கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை -  சிறிதளவு  பீட்ரூட் துருவல் - கால் கப்  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு பீட்ரூட் துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துள்ள இந்தச் சாதத்தைக் குழந்தைகளுக்குக் கொடுப்பது மிக நல்லது.


19_1513681524.jpg

பிரெட் ஃபிங்கர்ஸ்

தேவையானவை:    மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 4 (விரல் போல நீளவாக்கில் நறுக்கவும்)  கடலை மாவு - அரை கப்  மிளகாய்த்தூள்  உப்பு -  தலா அரை டீஸ்பூன்  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:    கடலை மாவுடன் மிளகாய்த்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, பிரெட் துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.


20_1513681584.jpg

ஸ்பிரிங் ரோல்

தேவையானவை:   மீதமான கோஸ் பொரியல் - கால் கப்  கோதுமை மாவு - ஒரு கப்  உப்பு - கால் டீஸ்பூன்  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:    கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கிச் சப்பாத்திகளாகத் தேய்க்கவும். சப்பாத்திகளின் நடுவே கோஸ் பொரியலை வைத்து, பாய் போலச் சுருட்டி, தண்ணீர்தொட்டு ஓரங்களை ஒட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு, சுருட்டிய ரோல்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.


21_1513681596.jpg

பிரெட் குலாப் ஜாமூன்

தேவையானவை:    மீதமான பிரெட் ஸ்லைஸ்கள் - 7  சர்க்கரை - ஒரு கப்  ரோஸ் எசென்ஸ் - 2 துளி  பால் பவுடர், பால் - தலா 4 டேபிள்ஸ்பூன்  ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்  ஏலக்காய் - 2 (தட்டவும்)  எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:   பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டுத் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டுப் பொடித்து எடுக்கவும். அதனுடன் பால் பவுடர், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துக் கலக்கவும். பிறகு, பாலை சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். அதனுடன் ரோஸ் எசென்ஸ், தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். பிறகு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் உருண்டைகளைப் பொரித் தெடுக்கவும்.  பொரித்த உருண்டைகளைச் சர்க்கரைப் பாகில் ஊறவிட்டுப் பரிமாறவும்.


22_1513681617.jpg

கேரட் - பீட்ரூட் சாலட்

தேவையானவை:    மீதமான பீட்ரூட் பொரியல் - அரை கப்  பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப்  கேரட் துருவல் - கால் கப்  எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  பீட்ரூட் பொரியலுடன் வெள்ளரிக்காய், கேரட், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள கேரட் - பீட்ரூட் சாலட் ரெடி.

குறிப்பு:        வெள்ளரிக்காய், உப்பு ஆகியவற்றைப் பரிமாறும்போது சேர்க்கவும். இல்லையென்றால் சாலட் நீர்த்துவிடும்.


23_1513681628.jpg

வாழைப்பழப் பணியாரம்

தேவையானவை:    மீதமான தோசை மாவு - 3 கரண்டி  வாழைப்பழம் - 2 (தோல் நீக்கி, துண்டுகளாக்கி மசிக்கவும்)  உப்பு, ஏலக்காய்த்தூள் - தலா ஒரு சிட்டிகை  நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை:          தோசை மாவுடன் உப்பு, ஏலக்காய்த்தூள், வாழைப்பழ விழுது சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக்கல்லைச் சூடாக்கி, குழிகளில் நெய்விட்டு உருக்கி, மாவை ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


24_1513681639.jpg

மசாலா சாதம்

தேவையானவை:    மீதமான சாதம் - ஒரு கப்  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  அன்னாசி மொக்கு - 2  பிரியாணி இலை - ஒன்று  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடியளவு  எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். இறுதியாக சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.


25_1513681652.jpg

வடைகறி

தேவையானவை:    மீதமான மசால்வடை (அ) பருப்பு வடை - 3 (சிறிய துண்டுகளாக்கவும்)  வெங்காயம்- ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தக்காளி - ஒன்றரை (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  அன்னாசி மொக்கு - 2  பிரியாணி இலை - ஒன்று  ஏலக்காய் - 2  கிராம்பு - 3
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது  மல்லித்தூள் (தனியாத்தூள்) - தலா 2 டீஸ்பூன்  தேங்காய்ப்பால் - 4 டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:  வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் பட்டை, அன்னாசி மொக்கு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு தாளிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பிறகு வடைத் துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். இறுதியாகத் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.


26_1513681665.jpg

நம்ம ஊரு ஹுமூஸ்

தேவையானவை:    மீதமான வெள்ளைக் கொண்டைக்கடலை சுண்டல் - ஒரு கப்  எலுமிச்சைச் சாறு -அரை டீஸ்பூன்  பூண்டு - 2 பல்  ஆலிவ் எண்ணெய் - கால் கப்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   சுண்டலுடன், உப்பு, பூண்டு சேர்த்து மிக்ஸியில் போட்டு, தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்து எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பிரெட்டுடன் பரிமாறவும். நம்ம ஊரு ஹுமூஸ், இரும்புச் சத்து மிகுந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காளான் ஆயிட்டங்கள் அத்தனையும் சூப்பர்.....!  :108_metal:

  • Thanks 1
Link to comment
Share on other sites

சிறுதானிய உணவுகள்

 
 

 

 

119p1_1513675032.jpg

ன்றைய தலைமுறையினர் சிறுதானிய உணவுகளின் மீது அதிக நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை பல உணவகங்களின் இன்றைய ஸ்பெஷலில் காண முடிகிறது.

சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவில் பெரும்பங்கு வகித்தது என்பதை பல்வேறு சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது. பாரம்பர்ய உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

119p2_1513675054.jpg

அப்படிப்பட்ட சிறுதானிய உணவுகளை முழு நாளுக்கும் திட்டமிடும் வகையில் செய்து நமக்கு அளிக்கிறார் சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி.


119p3_1513675073.jpg

குதிரைவாலி கிச்சடி

தேவையானவை:

 குதிரைவாலி அரிசி - ஒரு கப்
 காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - ஒரு கப்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 4 (இரண்டாகக் கீறவும்)
 இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
 நெய் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 பட்டை, லவங்கம் - 2
 பிரியாணி இலை - 2
 மராத்தி மொக்கு - ஒன்று
 எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.


119p4_1513675091.jpg

கம்பு - பருப்பு சோறு

தேவையானவை:

 கம்பு - ஒரு கப்
 துவரம்பருப்பு - அரை கப்
 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
 பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
 உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

 கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
 தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


119p5_1513675111.jpg

வரகு - அன்னாசிப்பழக் குழைச்சல்

தேவையானவை:

 வரகு அரிசி – ஒரு கப்
 அன்னாசிப்பழம் - 4 ஸ்லைஸ் (அரைத்து 2 கப் சாறு எடுக்கவும்)
 அன்னாசிப்பழத் துண்டுகள் - அரை கப்
 வெல்லம் – அரை கப்
 சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
 சர்க்கரை - 2 டீஸ்பூன்

செய்முறை:

குக்கரில் வரகு அரிசியுடன் அன்னாசிப் பழச்சாறு, சர்க்கரை சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். வெல்லத்துடன் தண்ணீர்விட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும். அதை கடாயில் சேர்த்து அதனுடன் சுக்குத்தூள், வேகவைத்த சாதம், அன்னாசிப்பழத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, அடுப்பை ஐந்து நிமிடங்கள் சிறு தீயில் வைத்து, கொதிக்கவிட்டு இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு: மெதுவடையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


119p6_1513675128.jpg

தினை - தேங்காய்ப்பால் புலாவ்

தேவையானவை:

 தினை அரிசி - ஒரு கப்
 தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தண்ணீர் - ஒரு கப்
 பச்சைப் பட்டாணி - அரை கப்
 இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
 எண்ணெய் - 4 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

 பட்டை - 2
 சோம்பு - கால் டீஸ்பூன்
 பிரியாணி இலை - ஒன்று
 ஏலக்காய் - ஒன்று

செய்முறை:

தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி - பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.

தினை-தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

குறிப்பு:

அகலமான பாத்திரத்திலும் செய்யலாம். எளிதில் வெந்துவிடும். சாதமும் உதிரியாக இருக்கும்.


119p7_1513675148.jpg

சாமை - நெல்லிக்காய்ப் புட்டு

தேவையானவை:

 வடித்த சாமை சாதம் - ஒரு கப்
 நெல்லிக்காய் (சீவியது) - ஒரு கப்
 வெண்ணெய் - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

 பொட்டுக்கடலை - கால் கப்
 கசகசா - அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 4
 கடலைப்பருப்பு - 3 டீஸ்பூன்
 தனியா - 2  டீஸ்பூன்

செய்முறை:

வறுத்து அரைக்கக் கொடுத்தவற்றை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக வறுத்து, அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். வடித்த சாமை சாதத்தில் துருவிய நெல்லிக்காய், வறுத்து அரைத்த பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டு சாதத்தைச் சேர்த்து மெதுவாகக் கிளறி ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால், சாமை - நெல்லிக்காய் புட்டு தயார்.


119p8_1513675186.jpg

சோளம் - ஜவ்வரிசி மசாலா புலாவ்

தேவையானவை:

 ஜவ்வரிசி - ஒரு கப்
 வறுத்த வேர்க்கடலைப் பொடி - அரை கப்
 வறுத்த வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன் (தோல் நீக்கவும்)
 பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)
 சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
 வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – தேவையான அளவு
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
 சீரகம் - கால் டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஜவ்வரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, உலரவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு வேர்க்கடலை, சீரகம் தாளிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், ஸ்வீட் கார்ன் முத்துகள், ஜவ்வரிசி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், வேர்க்கடலைப் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். ஜவ்வரிசி வெந்து கண்ணாடி போல் ஆனதும் இறக்கி, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.


119p9_1513675208.jpg

ஸ்நோ ஸ்வீட் போளி

தேவையானவை:

 பனிவரகு மாவு - ஒரு கப்
 கோதுமை மாவு, வெல்லம் - தலா அரை கப்
 எண்ணெய் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

 நெய் - கால் கப்
 தேங்காய்த் துருவல் - ஒரு கப்
 பொடித்த வெல்லம் - அரை கப்
 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

119p10_1513675224.jpg

செய்முறை:

வெல்லத்துடன் அரை கப் தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டவும். அதனுடன் பனிவரகு மாவு, கோதுமை மாவு சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, அந்த மாவை எடுத்துச் சிறிய உருண்டைகளாக்கி, சப்பாத்திகளாகத் திரட்டவும்.

வாயகன்ற பாத்திரத்தில் பூரணம் செய்ய கொடுத்துள்ள வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும்.

வாணலியில் நெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் வெல்லக்கரைசல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய்விட்டு கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறிய பிறகு சிறிய உருண்டைகளாக்கவும். திரட்டிய சப்பாத்தியின் நடுவே பூரண உருண்டைகளை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் வட்டமாகப் போளி போல தேய்க்கவும். எண்ணெய்விட்டு, சப்பாத்திக்கல்லைக் காயவைத்து போளிகளைப் போட்டு சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து பூரி போல பொரித்தும் எடுக்கலாம்.


119p11_1513675239.jpg

வரகு - மிளகு கிச்சடி

தேவையானவை:

 வரகு அரிசி - ஒரு கப்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 கறிவேப்பிலை - சிறிதளவு
 மிளகு - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடித்தது)
 தோல் நீக்கிய பூண்டு - 5 பற்கள்
 கடுகு – கால் டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வரகு அரிசியைப் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பிறகு பொடித்த மிளகு, உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது வரகு அரிசியைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு வேகவிடவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து சிறிதளவு எண்ணெய்விட்டு மீண்டும் மூடி, வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.


119p12_1513675254.jpg

ராகி சேமியா மசாலா கிச்சடி

தேவையானவை:

 ராகி சேமியா - ஒரு பாக்கெட்
 வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 இஞ்சி - பூண்டு விழுது -   கால் டீஸ்பூன்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்)
 கேரட், பீன்ஸ், பட்டாணி -   தலா கால் கப்
 சோம்பு - கால் டீஸ்பூன்
 எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ராகி சேமியாவுடன் மூழ்கும் அளவு வெந்நீர்விட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சோம்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு காய்கறிகள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி மூடிபோட்டு, மிதமான தீயில் வேகவிடவும். பின்னர் மூடியைத் திறந்து ராகி சேமியாவைச் சேர்த்து லேசாகக் கிளறி, சிறிதளவு தண்ணீர் தெளித்து மீண்டும் மூடிவைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்துத் திறந்து தீயை அதிகப்படுத்தி, சிறிதளவு எண்ணெய்விட்டு அடிபிடிக்காமல் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


119p13_1513675272.jpg

சாமை - பூண்டு மசியல் சாதம்

தேவையானவை:

 சாமை சாதம் - ஒரு கப்
 தோல் நீக்கிய பூண்டு - 20 பற்கள்
 காய்ந்த மிளகாய் - 4
 புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
 பெருங்காயத்தூள் - சிறிதளவு
 கறிவேப்பிலை - சிறிதளவு
 கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
 நல்லெண்ணெய் - கால் கப்
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். ஆறிய பிறகு விழுதாக அரைத்து எடுக்கவும். அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து, அரைத்த விழுது சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடான சாமை சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அப்பளத்துடன் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

நாட்டுக் காய்கறி சமையல்

 
 

 

 

2_1514974509.jpg

முக்கூட்டு மசியல்

தேவை:     தோல், விதை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிய பரங்கி, பூசணி, சுரைக்காய் கலவை - ஒன்றரை கப்  துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 50 கிராம்  பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப், சீரகம் - 2 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 3
 சோம்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:   அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். பருப்பு வகைகளுடன் தண்ணீர் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் பருப்புடன் காய்கறிகள், தேவையான தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுது, வேகவைத்த காய்கறிகள், பருப்புக் கலவை, மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு கிளறி இறக்கவும்.


3_1514974527.jpg

மஞ்சள் பூசணி பாயசம்

தேவை:    தோல் சீவி, விதை நீக்கி துருவிய மஞ்சள் பூசணி - ஒரு கப்  சர்க்கரை - ஒரு கப்  பால் - ஒரு லிட்டர்  கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்  குங்குமப்பூ - சிறிதளவு  தேங்காய்த் துருவல் - கால் கப்  ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை  நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  நெய் - சிறிதளவு  நெய்யில் வறுத்த உலர் பூசணி விதை - ஒரு டீஸ்பூன்  வெனிலா எசென்ஸ் - ஒரு துளி.

செய்முறை:    வாணலியில் சிறிதளவு நெய்விட்டு பூசணித் துருவல் சேர்த்து வதக்கவும். அதனுடன் பால் ஊற்றி (சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்) நன்றாக வேகவிடவும். பிறகு ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிறு தீயில் வைத்து தேங்காய்த் துருவல், முந்திரி, பாதாம், கண்டன்ஸ்டு மில்க், குங்குமப்பூ, பூசணி விதை சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே வெனிலா எசென்ஸ் விட்டுச் சூடாகவோ அல்லது குளிரவைத்தோ பரிமாறவும். பூசணிக்காய் வயிற்றுப்புண்ணை ஆற்றும்.


4_1514974546.jpg

சுண்டைக்காய் கொத்சு

தேவை:     சுண்டைக்காய் - அரை கப் (நறுக்கி தண்ணீரில் போடவும்)  பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்  பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப்  கடுகு - அரை டீஸ்பூன்  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  எள் - ஒரு டேபிள்ஸ்பூன்  புளி - எலுமிச்சை அளவு (கரைக்கவும்)  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 4  சீரகம் - அரை டீஸ்பூன்  தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்  கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து, பிறகு சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும். பின்பு புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். அதனுடன் அரைத்த விழுது, எள் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து, கொதிக்கும் கலவையில் ஊற்றிக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இரும்புச் சத்துமிக்க சுண்டைக்காய் கொத்சு வயிற்றில் கிருமிகள் வராமலும் தடுக்கும்.


5_1514974564.jpg

ஸ்டஃப்டு வெண்டைக்காய்

தேவை:    பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ (இரு முனைகளையும் நீக்கி, நீளவாக்கில் நடுவே கீறி விதைகளை எடுக்கவும்)  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு - தலா ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்  பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்  பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்  தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை:   வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கவும். ஆறிய பிறகு இந்த மசாலாவைக் கீறிவைத்துள்ள வெண்டைக்காய்க்குள் அடைக்கவும். கடலை மாவுடன் அரிசி மாவு, மைதா மாவு, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஸ்டப்ஃபிங் செய்த வெண்டைக்காயை மாவில் முக்கி எடுத்துப்போட்டுப் பொரித்தெடுக்கவும் (மெதுவாக திருப்பிப் போட்டு வேகவிடவும்). இதை சாதத்துடன் பரிமாறலாம். அல்லது, சாஸ் தொட்டுத் தனியாகவும் சாப்பிடலாம்.


6_1514974583.jpg

முருங்கைக்காய் மசாலா

தேவை:     முருங்கைக்காய் - 3 (விரல் நீள துண்டுகளாக்கவும்)  பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - தலா அரை கப்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  சோம்பு - ஒரு டீஸ்பூன்  கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை:  வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி அரைக்கக் கொடுத் துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறிய பிறகு அதனுடன் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, முருங்கைத் துண்டுகளைப் போட்டு மூழ்கும்வரை தண்ணீர்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேகவிடவும்.  தண்ணீர் வற்றி காய் வெந்த பிறகு இறக்கிப் பரிமாறவும். முருங்கையில் இரும்புச் சத்து, கொழுப்புச் சத்து வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. இது நரம்புகளுக்கு நல்லது.


7_1514974599.jpg

சுரைக்காய் பர்ஃபி

தேவை:     தோல், விதை நீக்கி துருவிய சுரைக்காய் - ஒன்றரை கப்  தேங்காய்த் துருவல் - அரை கப்  மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு - தலா கால் கப்  நெய் - சிறிதளவு  பச்சை நிற ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை  ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  சர்க்கரை - ஒரு கப்  கண்டன்ஸ்டு மில்க் - அரை கப்  நட்ஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:  சுரைக்காய் துருவலில் நீர் இல்லாமல் ஒட்டப்பிழிந்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெறும் வாணலியில் மைதா மாவு சேர்த்துச் சிவக்க வறுத்து எடுக்கவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிட்டு ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சவும். அதனுடன் மைதா மாவு, பொட்டுக்கடலை மாவு, நெய், சுரைக்காய்த் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். பிறகு ஃபுட் கலர், நெய், ஏலக்காய்த்தூள், கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துச் சுருள கிளறி இறக்கி நெய் (அ) வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலே நட்ஸ் தூவி கொஞ்சம் ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.


8_1514974639.jpg

பாகற்காய் பிட்லை

தேவை:    வட்டமாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப்  வெல்லம் - சிறிதளவு  புளி - நெல்லிக்காய் அளவு (ஊறவைத்து கரைக்கவும்)  துவரம்பருப்பு - ஒரு கப்  தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய் - சிறிதளவு  உப்பு - தேவையான அளவு. அரைக்க: காய்ந்த மிளகாய் - 8  தனியா (மல்லி) - ஒரு டீஸ்பூன்  மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - கால் கப்  எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை:   வாணலியில் எண்ணெய்விட்டு அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து வறுத்து எடுத்து விழுதாக அரைக்கவும். துவரம்பருப்புடன் பெருங்காயத்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு மசிக்கவும். நறுக்கிய பாகற்காயில் சிறிதளவு உப்பு தூவி அரைமணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து ஒட்டப்பிழிந்து எடுக்கவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் , பாகற்காய் சேர்த்து வேகவிடவும். பிறகு மசித்த பருப்பு, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து குழம்பு கெட்டிப்படும் வரை வேகவிடவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தேங்காய்த் துருவலைச் சேர்த்து வறுத்துக் குழம்பில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்தப் பாகற்காய் பிட்லை.


9_1514974656.jpg

பீர்க்கங்காய் பஜ்ஜி

தேவை:     லேசாக தோல் சீவி வட்டமாக நறுக்கிய பீர்க்கங்காய்த் துண்டுகள் - ஒரு கப்  கடலை மாவு - ஒரு கப்  அரிசி மாவு - அரை கப்  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  ஓமம் - அரை டீஸ்பூன்  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு சிட்டிகை  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:    கடலை மாவுடன் அரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், ஓமம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு பீர்க்கங்காய் துண்டுகளை மாவில் முக்கி எடுத்துப் போட்டுப் பொரித்தெடுக்கவும். பீர்க்கங்காயில் நீர்ச்சத்து உள்ளதால் உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.


10_1514974674.jpg

நாட்டுக் காய்கறிக் கலவை ஊறுகாய்

தேவை:    பொடியாக நறுக்கிய, விருப்பமான நாட்டுக் காய்கறிகள் கலவை (மாங்காய், கொத்தவரை, பூண்டு என சேர்க்கலாம்) - 2 கப்  மிளகாய்த்தூள் - 50 கிராம்  கடுகு - ஒரு டீஸ்பூன்  எலுமிச்சைப் பழம் - 3  வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன்  சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  எண்ணெய் - 100 மில்லி  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  காய்கறிகளை ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பிறகு சுத்தமான துணியில் உலரவிடவும். எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வடிகட்டவும். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். ஈரமில்லாத பாத்திரத்தில் காய்கறிக் கலவை, எலுமிச்சைக் கலவையைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, காய்கறிக் கலவையுடன் சேர்க்கவும். மேலே வெந்தயப்பொடி, சீரகத்தூள் சேர்த்துக் கிளறி, காற்றுப்புகாத பாட்டிலில் கைபடாமல் ஸ்பூனால் எடுத்துப் போட்டுச் சேகரிக்கவும். நன்கு குலுக்கிவிடவும். இதை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். இரும்புச் சத்து மிகுந்த இந்த ஊறுகாயைப் பரிமாறும்முன் ஒவ்வொரு முறையும் நன்கு கிளறிவிட்டுப் பரிமாறவும்.


11_1514974690.jpg

வெள்ளைப் பூசணி - பயறு கூட்டு

தேவை:    விதை, தோல் நீக்கி சதுர துண்டுகளாக்கிய பூசணி - ஒரு கப்  முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப்  கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு  தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - சீரகம் - தலா அரை டீஸ்பூன்  சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கவும்).

அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப்  சோம்பு - அரை டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 4.

செய்முறை:   அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களை விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் தேவையான அளவு தண்ணீர்விட்டு முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து வேகவிடவும், பாதி வெந்ததும் பூசணித் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். அதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். மற்றொரு வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சிறிதளவு தேங்காய் எண்ணெயில் தாளித்து கூட்டுடன் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். மேலே மீதமுள்ள தேங்காய் எண்ணெய் சேர்த்துச் சாதத்துடன் பரிமாறவும். பூசணி வயிற்றுப் புண்ணில் இருந்து நிவாரணம் அளிக்கும்.


12_1514974707.jpg

பரங்கிக்காய் சட்னி

தேவை:     தோல், விதை நீக்கி சதுரமாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப்  தேங்காய்த் துருவல் - கால் கப்  புளி - சிறிதளவு  வெங்காயம், தக்காளி - தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)  பச்சை வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்  தோல் சீவிய இஞ்சி - கால் இன்ச் துண்டு  பூண்டு - 2 பல்  கடுகு - அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், பரங்கிக்காய், தக்காளி, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி ஆறவிடவும். அதனுடன் தேங்காய்த் துருவல், புளி, வேர்க்கடலை, இஞ்சி சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலந்து பரிமாறவும்.


13_1514974725.jpg

மிக்ஸ்டு நாட்டுக் காய்கறி அவியல்

தேவை:  நாட்டுக் காய்கறிகள் கலவை (தோல், விதை நீக்கி நீளவாக்கில் நறுக்கியது) - ஒரு கப் (வாழைக்காய், பூசணி, முருங்கை, புடலை இப்படி சேர்த்துக்கொள்ளலாம்)  கெட்டித் தயிர் - ஒரு கப்  காய்ந்த மிளகாய் - 3  கறிவேப்பிலை - சிறிதளவு  கடுகு - ஒரு டீஸ்பூன்  தேங்காய் எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்  உப்பு - சிறிதளவு  வாழை இலை - பாத்திரத்தை மூடிவைக்க தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் -  ஒரு கப்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 2  பச்சரிசி - 2 டேபிள்ஸ்பூன் (15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்)  உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். குக்கரில் காய்கறிகளுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் காய்கறி கலவை, தயிர், அரைத்த விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி சேர்த்து நன்கு கலக்கவும். இதை வேறு பாத்திரத்துக்கு மாற்றி வாழை இலையால் மூடவும். பிறகு, அதன்மீது மற்றொரு மூடியை வைக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பிறகு பரிமாறவும். தேங்காய் எண்ணெய் மற்றும் வாழை இலை மணத்துடன் காய்கறி அவியல் மிகவும் சுவையாக இருக்கும்.


14_1514974743.jpg

கொத்தவரங்காய் - பருப்பு உசிலி

தேவை:   பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய் - ஒரு கப்  பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு (சேர்ந்து) - கால் கப்  காய்ந்த மிளகாய் - 4  கடுகு - அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  நறுக்கிய கொத்தமல்லித்தழை -  ஒரு டேபிள்ஸ்பூன்  உடைத்த உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   பருப்பு வகைகளுடன் மிளகாய் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். கொத்தவரங்காய், அரைத்த பருப்புக் கலவையைத் தனித்தனியாக ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்த பருப்புக் கலவையை மீண்டும் மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வேகவைத்த கொத்தவரங்காய், உப்பு, அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும். சாதத்துக்குத் தொட்டு சாப்பிடலாம். பிரெட், சப்பாத்தி நடுவே வைத்தும் சாப்பிடலாம்.


15_1514974767.jpg

வாழைப்பூ அடை

தேவை:    இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ -  தலா ஒரு கப்  மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை  காய்ந்த மிளகாய் - 8  கறிவேப்பிலை - சிறிதளவு  தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்  கடுகு, உடைத்த உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்  நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, 6 மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மீதமுள்ள மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், இஞ்சி, மஞ்சள்தூள், வாழைப்பூ, உப்பு சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து எண்ணெய் தடவி, மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


16_1514974783.jpg

வெண்டை - சுண்டை சூப்

தேவை:    பிஞ்சு வெண்டைக்காய் - 3 (பொடியாக நறுக்கவும்)  சுண்டைக்காய் - 6  (இரண்டாக நறுக்கவும்)  பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்)  மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்  துவரம்பருப்பு வேகவைத்த நீர் - ஒரு கப்  சீரகத்தூள் - அரை டீஸ்பூன்  நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு  வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்  லவங்கம் - ஒன்று  பட்டை - சிறிய துண்டு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, லவங்கம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெண்டைக்காய், சுண்டைக்காய் சேர்த்து வதக்கி உப்பு, பருப்பு வேகவைத்த நீர், சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி, வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் விட்டுச் சூடாகப் பரிமாறவும். இரும்புச் சத்து மிகுந்தது, இந்த சூப்.


17_1514974804.jpg

வாழைத்தண்டு ரசம்

தேவை:  வாழைத்தண்டு (சிறியது) - ஒன்று (பொடியாக நறுக்கவும்)  ரசப்பொடி - 2 டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு  எலுமிச்சைப் பழம் - அரை மூடி (சாறு எடுக்கவும்)  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)  வெந்தயப்பொடி, கடுகு - தலா அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து மசிக்கவும். பாதி வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.  பருப்புடன் வாழைத்தண்டு சாறு, தக்காளி, மீதமுள்ள வாழைத்தண்டு, உப்பு, பெருங்காயத்தூள், ரசப்பொடி சேர்த்து நன்கு கரைத்துக் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி தாளித்து ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிட்டு, எலுமிச்சைச் சாறு கலந்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


18_1514974821.jpg

நாட்டுக் காய்கறிகள் மசாலா சாட்

தேவை:   துண்டுகளாக நறுக்கிய நாட்டுக் காய்கறிகள் கலவை - ஒரு கப்  சாட் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்  ரெடிமேட் சிவப்பு இனிப்பு சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன்  ரெடிமேட் கிரீன் சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன்  வெங்காயம், தக்காளி -  தலா 2 (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்  ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை)  உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:   காய்கறிகள் கலவையை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். அகலமான  பாத்திரத்தில்  காய்கறிகளுடன் உப்பு, தக்காளி, கிரீன் சட்னி, இனிப்பு சட்னி சேர்த்துக் கிளறவும். பிறகு கொத்தமல்லித்தழை, வெங்காயம்,  சாட் மசாலாத்தூள் தூவிக் கிளறவும். இரும்புச் சத்து மிகுந்த இந்த மசாலா சாட் பரிமாறும்போது ஓமப்பொடி தூவவும்.


19_1514974845.jpg

மாங்காய் தால்

தேவை:    மாங்காய்த் துருவல் - ஒரு கப்  பாசிப்பருப்பு, துவரம்பருப்பு (சேர்த்து) - அரை கப்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  கடுகு - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்  எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:  துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து எடுத்து மசிக்கவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் மாங்காய்த் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். அதனுடன் பருப்புக் கடைசல் சேர்த்துக் கலந்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்தி, நாண் வகைகளுக்குத் தொட்டுக்கொள்ளலாம். சாதத்திலும் சேர்ந்து சாப்பிடலாம். மாங்காய் நார்சத்து உள்ள காயாகும். பசியைத் தூண்டும்.


20_1514974864.jpg

துவரை மசாலா சுண்டல்

தேவை:    உரித்த பச்சை துவரை - ஒரு கப்  சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்  கடுகு - அரை டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு எடுக்கவும்)  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. அரைக்க: தேங்காய்த் துருவல் - கால் கப்  தோல் சீவிய இஞ்சி - கால் இஞ்ச் துண்டு  சோம்பு - அரை டீஸ்பூன்  கொத்தமல்லித்தழை - கால் கப் (அலசி ஆய்ந்தது)  பூண்டு - 2 பல்  எள் - ஒரு டீஸ்பூன்  பச்சை மிளகாய் - ஒன்று.

செய்முறை:   துவரையைத் தண்ணீரில் ஒருமணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கி, துவரையைப் சேர்த்துப் புரட்டி சாட் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.


21_1514974879.jpg

வாழைக்காய்ப் பொடி

தேவை:    நாட்டு வாழைக்காய் - 2  புளி - நெல்லிக்காய் அளவு  முழு வெள்ளை உளுத்தம்பருப்பு - அரை கப்  காய்ந்த மிளகாய் - 6  பூண்டு - 3 பல்  பெருங்காயத்தூள் -  ஒரு சிட்டிகை  சுக்குப் பொடி - அரை டீஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:   வாழைக்காயைத் தோலோடு தீயில் சுட்டு எடுக்கவும். பிறகு தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், சுக்குப் பொடி, பூண்டு, உப்பு சேர்த்து வறுத்து  எடுக்கவும். ஆறிய பிறகு புளி சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். அதனுடன் வாழைக்காய் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றி எடுக்கவும். எலும்புகளுக்கு உறுதி தரக்கூடிய சத்தான, சுவையான பொடி தயார். இதைச் சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய்  சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். பொரியல் செய்யும்போது இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.


22_1514974895.jpg

அவரை - துவரைப் பொரியல்

தேவை:    நாட்டு அவரைக்காய் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)  மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்  உரித்த பச்சை துவரை - 50 கிராம்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  நறுக்கிய  வெங்காயம் - அரை கப்  மல்லித்தூள்  (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்  தேங்காய்த் துருவல் - கால் கப்  தக்காளி - ஒன்று  கொத்தமல்லித்தழை - சிறிதளவு  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு  உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை:   தக்காளியை வெந்நீரில் போட்டுச் சில நிமிடங்கள் கழித்து எடுத்துத் தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். துவரையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளிச் சாறு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு அவரைக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் வெந்த துவரையைச் சேர்த்துக் கிளறி தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.


23_1514974912.jpg

புடலை மசாலா பாத்

தேவை:    நறுக்கிய புடலங்காய் - ஒரு கப்  நறுக்கிய பீர்க்கங்காய் - கால் கப்  பாஸ்மதி அரிசி - ஒரு கப்  மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்  வெங்காயம் - ஒன்று (நீளவாக்கில் நறுக்கவும்)  கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. அரைக்க: பச்சை மிளகாய் - 2  பூண்டு - 3 பல்  தேங்காய்த் துருவல் - கால் கப்  சீரகம் - ஒரு டீஸ்பூன்  சோம்பு, ஓமம் - தலா அரை டீஸ்பூன். தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன்  கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்  காய்ந்த மிளகாய் - 2  கறிவேப்பிலை - சிறிதளவு. 

செய்முறை:    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடானதும் அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுக்கவும். அரிசியுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு உதிர் உதிராக வடித்து எடுக்கவும். அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச்  சூடானதும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், புடலங்காய் சேர்த்து வதக்கவும். பிறகு பீர்க்கங்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவிடவும். காய் வெந்த பிறகு அரைத்த விழுது, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி ஆறவிடவும்.  இந்த மசாலாவைச்  சாதத்தில் சேர்த்துக் கிளறி பரிமாறவும். புடலங்காய் புரதச்சத்து நிறைந்தது.


24_1514974929.jpg

கத்திரி - முருங்கைக் கறி

தேவை:   முருங்கைக்காய்த் துண்டுகள் - ஒரு கப்  புளி - எலுமிச்சை அளவு  நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காய் - ஒரு கப்  தேங்காய்த் துருவல் - கால் கப்  நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - அரை கப்  நெய் - சிறிதளவு  கடுகு - ஒரு டீஸ்பூன்  கறிவேப்பிலை - சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வாங்கிபாத் பவுடர் செய்ய: காய்ந்த மிளகாய் - 5  மல்லி (தனியா) , கடலைப்பருப்பு, வெந்தயம் -  தலா ஒரு டீஸ்பூன்  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை  பட்டை - சிறிய துண்டு  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:     புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கெட்டியாகக் கரைக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் வாங்கிபாத் பவுடர் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், முருங்கை, கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கிளறி மூடி, குறைந்த தீயில் வேகவிடவும். காய்கள் நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் வாங்கிபாத் பவுடர், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்து மிகுந்த உணவு இது.


25_1514974947.jpg

கொத்தவரங்காய் வற்றல்

தேவை:    கொத்தவரங்காய் - கால் கிலோ  உப்பு - தேவையான அளவு  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:      கொத்தவரங்காயின் இரு ஓரங்களையும் நீக்கவும். பிறகு அலசி உப்பு, மஞ்சள்தூள், மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். கொத்தவரங்காய் நன்கு வெந்ததும் இறக்கி வடிகட்டவும். இதை வெயிலில் நன்கு காயவிடவும் (முறுகலாக உடையும் பதம் வரை காயவிடவும்). பிறகு, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இதை வற்றல் குழம்பு செய்யும்போது சேர்க்கலாம். அல்லது, தனியாக எண்ணெயில் பொரித்து ரசம் சாதம், மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம். கொத்தவரங்காய் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.


26_1514974965.jpg

பாகற்காய் - கோதுமை புலாவ்

தேவை:     விதை நீக்கி, பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப்  கோதுமை ரவை - ஒரு கப்  சிறிய பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)  பட்டை - சிறிய துண்டு  கடுகு - ஒரு டீஸ்பூன்  கிராம்பு, ஏலக்காய் - தலா 2  பிரியாணி இலை - ஒன்று  இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்  மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி (சேர்த்து) - கால் கப்  உப்பு, நெய், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:    வாணலியில் நெய், எண்ணெய்விட்டுச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தாளிக்கவும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு பாகற்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். அதனுடன் வறுத்த கோதுமை ரவையைச் சேர்த்துக் கிளறி, சிறிதளவு நெய்விட்டுக் கிளறவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பச்சை மிளகாய் தாளித்து புலாவில் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரும்புச் சத்துமிக்க இந்த புலாவ் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.


27_1514974984.jpg

``நாம் எத்தனையோ பல நல்ல விஷயங்களைப் பயன்படுத்துவதைச் சென்ற தலைமுறையோடு மிகவும் குறைத்துவிட்டோம். இந்தப் பட்டியலில் நாட்டுக் காய்கறிகளும் அடங்கும். முருங்கைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், கத்திரிக்காய், அவரை, துவரை, சுண்டைக்காய், பாகற்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், மாங்காய், கொத்தவரங்காய், கோவக்காய், வாழைக்காய், தேங்காய் இவையெல்லாம் நம்மூர் பாரம்பர்யக் காய்கறிகள். நம் வீட்டுத் தோட்டத்திலேயேகூட பயிரிடலாம். இவை சத்தில், சுவையில் இங்கிலீஷ் காய்கறிகளுக்குச் சற்றும் சளைத்தவை அல்ல.

நாட்டுக் காய்கறிகள் இரும்புச்சத்து மிக்கவை. பாகற்காய், கொத்தவரை, புடலை, சுண்டைக்காய் அவரைக்காயில் சுண்ணாம்பு சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன. கத்திரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச் சத்து உள்ளது. முருங்கைக்காயில் இரும்புச் சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. நாட்டுக் காய்கறிகளை உணவில் அதிக அளவு சேர்த்துக் குடும்ப ஆரோக்கியத்தை உயர்த்துவோம்’’ என்று சொல்லும் சமையல் கலைஞர் சுதா செல்வகுமார், நாட்டுக் காய்கறிகளில் மசியல், பஜ்ஜி, கூட்டு, ஊறுகாய், அவியல், பாயசம், சூப், சாட் என சுவையான ரெசிப்பிகளை இங்கே வழங்குகிறார். இவற்றை எல்லாம் செய்து பரிமாறினால்... குடும்பம், உறவு, நட்பு வட்டத்தில் உங்கள் பெருமை கொடிகட்டிப் பறக்கும்.

Link to comment
Share on other sites

சப்பாத்திக்கு அருமையான வெள்ளரிக்காய் கூட்டு

 
அ-அ+

சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெள்ளரிக்காய் கூட்டு. இன்று இந்த கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சப்பாத்திக்கு அருமையான வெள்ளரிக்காய் கூட்டு
 
தேவையான பொருட்கள் : 
 
வெள்ளரிக்காய் - 3, 
பாசிப்பருப்பு - 1 கப், 
தேங்காய் - துருவல் - 4 டீஸ்பூன், 
சீரகம் - 1 டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் - 1, 
கறிவேப்பிலை - சிறிதளவு, 
கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
 
201801161513583369_1_gfg._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 
 
பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ளவும். 
 
காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். 
 
வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் சேர்த்து நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
 
அருமையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி. 
Link to comment
Share on other sites

குழந்தைகளுக்கு சத்தான வெஜிடபிள் புட்டு

 
அ-அ+

காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு காய்கறியை சேர்த்து புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த வெஜிடபிள் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
குழந்தைகளுக்கு சத்தான வெஜிடபிள் புட்டு
 
தேவையான பொருட்கள் :
 
அரிசி மாவு - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
தேங்காய் துருவல் - அரை கப்
கேரட் - 2
பீன்ஸ் - 15
பட்டாணி - சிறிதளவு
 
201801221133098368_1_vegetableputtu._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
கேரட், பீன்ஸை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதனுடம் பொடியாக நறுக்கிய காய்கறிகள், தேங்காய் துருவல் சேர்த்து அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
 
புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு குழாயில், இந்த மாவை நிரப்பி புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
 
சூப்பரான சத்தான வெஜிடபிள் புட்டு ரெடி.

 

 

சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு

 
அ-அ+

அரிசியை விட சிவப்பரிசியை உணவில் அதிகளவு சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று சிவப்பரிசியில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு
 
தேவையான பொருட்கள் : 
 
சிவப்பரிசி மாவு - 4 கப் 
தேங்காய் துருவல் - 1 கப் 
தண்ணீர் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு
 
201801221111598361_1_redriceputtu._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.) 
 
புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை இந்த முறையில் மாவை நிரப்பவும். 
 
பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். 
 
பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.
 
சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி.
 
அதனை சன்னாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

ஜீரண சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை சாதம்

 

வயதானவர்கள், அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலை சாதத்தை செய்து சாப்பிடலாம். இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் வெற்றிலை சாதம்
 
தேவையான பொருட்கள் : 
 
வெற்றிலை - 4, 
கடுகு - அரை டீஸ்பூன், 
மிளகு - அரை டீஸ்பூன், 
சீரகம் - அரை டீஸ்பூன், 
பூண்டு - 2 பல், 
சின்ன வெங்காயம் - 6,        
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, 
எலுமிச்சம்பழம் - பாதி மூடி 
சாதம் - ஒரு கப், 
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு.
 
201801231030115363_1_Betelleafrice1._L_styvpf.jpg
 
செய்முறை : 
 
வெற்றிலை, மிளகு, சீரகத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். 
 
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம், மஞ்சள்தூள் போட்டு நன்றாக வதக்கவும். 
 
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்த வெற்றிலைக் கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 
 
அடுத்து அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலக்கவும். 
 
கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.
 
இந்த சாதம் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

http://www.maalaimalar.com/

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.