Jump to content

சமையல் செய்முறைகள் சில


Recommended Posts

p109h.jpg

சேமியா பிரியாணி

தேவையானவை:


 மட்டன் (அ) சிக்கன் - முக்கால் கிலோ
 சேமியா - 600 கிராம்
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
 பெரியவெங்காயம் - 5 (நீளமாக நறுக்கியது)
 தக்காளி - 4 (பெரியது நறுக்கியது)
 கொத்தமல்லித்தழை - 4 டேபிள்ஸ்பூன் (நறுக்கியது)
 புதினா இலை - 3 டேபிள்ஸ்பூன்
 பச்சைமிளகாய் - 6
 தயிர் - ஒரு கப்
 சின்னவெங்காயம் - ஒரு கைப்பிடி
 பட்டை - 5 பூண்டு
 கிராம்பு - 4
 ஏலக்காய் - 4
 நெய் - ஒன்றே கால் கப் - 4 டேபிள்ஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)
 தண்ணீர் - 600 மில்லி (கிரேவியுடன் சேர்த்து)
 உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து 4 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி சேமியாவை சேர்த்து பொன்னிறம் வரும் வரை நன்றாக வறுத்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் விட்டு சூடாக்கவும். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும். பெரியவெங்காயம் சேர்த்து 8 நிமிடங்கள் சிவக்கும் வரை வதக்கவும். இத்துடன் தட்டிய சின்னவெங்காயம், கீறிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து கரைய வதக்கி, புதினா, கொத்தமல்லித்தழை, தயிர், உப்பு, மட்டன்/சிக்கன் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கவும். கறியில் இருந்து வெளிப்படும் தண்ணீர், தயிர் மற்றும் தக்காளியில் இருந்து வரும் தண்ணீர் என கிரேவியில் இருந்து வெளிப்படும் தண்ணீரையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். இதையும் சேர்த்து நாம் ஊற்றும் தண்ணீர் ஒட்டு மொத்தமாக 600 மில்லி வரும் அளவு இருக்க வேண்டும். அதற்கேற்ப தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேகவிடவும். இனி, கிரேவியில் எலுமிச்சைச்சாறு, வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறி விட்டு 5 லிருந்து 8 நிமிடங்கள் குறைந்த தீயில் மூடி போட்டு வேகவிட்டு எடுத்தால் சேமியா பிரியாணி ரெடி. தயிர் சட்னியுடன் பரிமாறவும்.

பின்குறிப்பு:

1. பச்சைமிளகாயை முழுதாக நறுக்காமல் சேர்க்கவும்.

2. மட்டன் அல்லது சிக்கனுக்கு பதிலாக கலந்த காய்கறிகள் அதே அளவுக்கு சேர்த்து செய்யலாம்.


p109j.jpg

இடியாப்ப பிரியாணி

தேவையானவை:


 சிக்கன் - அரை கிலோ (சிறிய துண்டுகளாக நறுக்கியது)
 பெரியவெங்காயம் - 6 (நீளமாக நறுக்கியது)
 தக்காளி - 4 (நறுக்கியது)
 பச்சைமிளகாய் - 12 (கீறியது)
 கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
 புதினா இலை - ஒரு கைப்பிடி
 நெய் - 100 கிராம்
 பட்டை - ஒன்று
 கிராம்பு - 4
 ஏலக்காய் - 4
 இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
 தயிர் - ஒரு கப்
 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைச்சாறு - ஒரு பழம்
 முந்திரிப்பருப்பு - 10
 தேங்காய்த்துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
 ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு
 இடியாப்பம் - 15
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கழுவிய சிக்கனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தயிர், உப்பு சேர்த்து ஊற விடவும். வாய் அகன்ற பாத்திரத்ததில் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடிக்க விடவும். பெரிய வெங்காயம் சேர்த்து 15 நிமிடங்களுக்கு சிவக்க வறுக்கவும். இஞ்சி-பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பாதியளவு புதினா, நறுக்கிய தக்காளி, கீறிய பச்சைமிளகாய் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். இத்துடன் ஊற வைத்த சிக்கன், கொத்தமல்லித்தழை, மீதமுள்ள புதினா சேர்த்து 10 நிமிடங்கள் வதக்கி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
முந்திரிப்பருப்பையும் தேங்காய்த்துருவலையும் மிக்ஸியில் மை போல அரைத்து, ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி, வெந்துகொண்டிருக்கும் சிக்கன் கலவையில் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவையில் இருந்து நெய் பிரிந்துவரும் போது இறக்கி ஆறவிடவும். அதே நேரம் சிக்கனும் வெந்திருக்க வேண்டும். இடியாப்பத்தைப் பிய்த்து ஆறிய சிக்கன் குழம்புடன் கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி தயிர் சட்னியுடன் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

Chilli Fish : செய்முறைகளுடன்...!

 

chillifish.jpg

தேவையான பொருள்கள்: 

  • வஞ்சிரம் வறுவல் ஸ்லைஸ் - 8-10
  • பஜ்ஜிமிளகாய் - 2
  • குடைமிளகாய் - 1
  • வெங்காயம் - 1
  • சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
  • கிரீன்சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
  • ரெட்சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
  • டொமேட்டொ கெட்சப் - 2 டேபிள்ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - சிறிது
  • எண்ணெய் - தேவைக்கு
  • கார்ன்மாவு -1/2 டீஸ்பூன்
  • எலுமிச்சை - 1


செய்முறை: 
 

  • மிளகாய்த்தூளை உப்பு சேர்த்து சிறிது நீரில் பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  • இந்த பேஸ்ட்டில் மீன் துண்டங்களை தோய்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  • தவாவில் சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் சிவக்கும் வரை பொரித்துக்கொள்ளவும்.
  • வெங்காயத்தை நான்காக வெட்டி இதழ் இதழாக பிரிக்கவும்.
  • பஜ்ஜி மிளகாயை ரிங்ரிங் ஆக நறுக்கவும்
  • குடை மிளகாயை 1 இன்ச் நீளத்திற்கு சதுரமாக நறுக்கவும்.
  • வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு குழிக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சிவந்து விடாமல் வதக்கவும்.
  • நறுக்கிய குடை மிளகாய், பஜ்ஜி மிளகாய் சேர்க்கவும்.
  • அனைத்து சாஸ் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
  • 1/4 டம்ளர் நீரில் கார்ன்மாவை கரைத்து கொதிக்கும் கலவையில் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி அடுப்பை அணைக்கவும்.
  • சர்விங் பவுலில் மீன்களை வைத்து, கிரேவியை தேவையான அளவு ஊற்றவும்.
  • எலுமிச்சையை எட்டாக நறுக்கி பிளேட்டின் ஓரத்தில் வைத்து விரும்பினால் ஆனியன் ரிங்கால் அலங்கரித்து பரிமாறவும்.
Link to comment
Share on other sites

p37g.jpg

ஃபிஷ் பால்ஸ் இன் சிக்கன் சூப்

தேவையானவை:

 முழுசீலா மீன் - 2 (சதைப்பகுதி மட்டும்)

 கார்ன்ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்

 முட்டையின் வெள்ளைக்கரு - ஒரு முட்டையிலிருந்து எடுத்தது

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

சிக்கன் ஸ்டாக் தயாரிக்க:

 எலும்புள்ள சிக்கன் துண்டுகள் - 250 கிராம்

 ஸ்லைஸ்களாக்கிய பெரியவெங்காயம் - ஒன்று

 நறுக்கிய தக்காளி - ஒன்று

 பூண்டுப்பல் - 4

 மிளகு - ஒரு டீஸ்பூன்

 தண்ணீர் - 2 கப்

சூப் செய்ய:

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கியது) 

கொத்தமல்லித்தழை - கால் கப் (நறுக்கியது)

 தக்காளி - ஒன்று நறுக்கியது

 பட்டை - ஒன்று (அரை இஞ்ச்)

 சோம்பு - அரை டீஸ்பூன்

 மிளகுத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் ஸ்டாக் செய்யக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடுப்பில் வைத்து குறைந்த தீயில் அரை மணி நேரம் வேகவிடவும். சிக்கன் வெந்ததும் அடுப்பை அணைத்து, தண்ணீரையும், வெந்த காய்கறிகளையும் வடிகட்டி தனித்தனியாக பாத்திரங்களில் எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் சோம்பு சேர்த்துத் தாளித்து, பட்டை, பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை சேர்த்து தக்காளி கரையும்வரை வதக்கி, அடுப்பை அணைக்கவும். ஆறியதும், மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். இத்தோடு ஸ்டாக் செய்தபோது வடிகட்டிய கலவையைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். இனி, அரைத்தவற்றை சிக்கன் ஸ்டாக்கோடு சேர்த்துக் கலக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.

மீனை நன்கு கழுவி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் அரைத்த மீன் கலவை, கார்ன்ஃப்ளார், முட்டையின் வெள்ளைக்கரு, உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சூப் கொதிக்க ஆரம்பிக்கும்போது, மீன் உருண்டைகளை மெதுவாகச் சேர்த்து கொதிக்கவிடவும். மீன் உருண்டை வெந்து மிதந்து மேலே வரும்போது கொத்தமல்லித்தழை, மிளகுத்தூள் தூவி அடுப்பை அணைத்து பவுலில் ஊற்றிப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

 

சோன் பப்டி : செய்முறைகளுடன்...!

 

soonnpapdi.jpg

தேவையான பொருள்கள்: 

  • மைதா - 2 டேபிள் ஸ்பூன்
  • கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
  • ஜீனி - 1 கப் (Approx.200ml)
  • தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்
  • நெய் - 5 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி - 5
  • பாதாம் - 5
  • பிஸ்தா - 5
  • கலர் தேங்காய் பூ (சிவப்பு, பச்சை)- 2 ஸ்பூன்

செய்முறை: 
 

  • மைதா,கெட்டி தயிர், ஜீனி, தண்ணீர், பாதி நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் கலந்து, அடுப்பை சிம்மில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
  • மீதி நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கலவையில் சேர்க்கவும்.
  • பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது பிஸ்தா, பாதாம், முந்திரியை சிறு சிறு துண்டாக்கி கலக்கவும்.
  • சிறிது தளர இருக்கும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
  • அதன் மேலே கலர் தேங்காய் பூவை (சிவப்பு, பச்சை பூவை கலந்து) தூவி துண்டுகளாக்கவும்.
Link to comment
Share on other sites

‘எண்ணெயில்லா சமையல் ரொம்பப் பிடிக்கும்!’

வி.ஐ.பி. ரெசிப்பி!

 

p54a.jpg

‘‘என்னதான் ஸ்டார் ஹோட்டல்களில் வகை வகையாகச் சாப்பிட்டாலும், நம்மவீட்டுச் சாப்பாடுமாதிரி எங்கேயுமே வராது. அதிலும் என் மனைவி செய்ற மீன் வறுவலுக்கு நான் அடிமை!’’ என தன் மனைவி தெல்மாவைப் பார்த்துச் சிரிக்கிறார் ‘ஆச்சி’ மசாலாவின் நிறுவனர் பத்மசிங் ஐசக். பலரது சமையலறையையும் மணக்கச் செய்யும் ஆச்சி மசாலாவின் ஓனர் வீட்டுக் கிச்சனுக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாருங்கள்!

1.jpg

தெல்மாவுக்கு தன் கணவரின் உணவுப் பழக்கம் பற்றி எந்தப் புகாரும் இல்லை. நிம்மதியும் சந்தோஷமும் மட்டுமே.

‘‘எண்ணெய் இல்லாத எந்தச் சமையலும் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எங்கே வெளியே போனாலும், வீட்டுக்கு வந்துதான் சாப்பிடுவார். நாங்க எல்லோரும் ஹோட்டலுக்குக் கிளம்பினாகூட, ‘எனக்கு தயிர்சாதம் மட்டும் செஞ்சு வெச்சிட்டுப் போயேன்’னு சொல்லக்கூடிய ரகம். வாரத்தில் ரெண்டு நாட்கள் மட்டும் அசைவம் சாப்பிடுவார்” என்றபடியே ஐசக் விரும்பிச் சாப்பிடும் மீன் குழம்பு மற்றும் கேரளா கறி மீன் வறுவலுக்கான செய்முறைகளைத் தந்தார், தெல்மா. ‘‘தினமும் காலையில் டேபிள் டென்னிஸில் தொடங்கும் அவரோட ஒரு நாளின் ரொட்டீன் மெனு இதுதான்’’ என்ற தெல்மா தன் கணவரின் ஒரு நாள் உணவு சார்டும் தந்தார்.

p54b.jpg

மீன் குழம்பு

தேவையானவை:

 சின்னவெங்காயம் - ஒரு கைப்பிடியளவு

 நாட்டுத்தக்காளி - 2

 பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)

 பூண்டு - 4 பல்

 இஞ்சி - ஒரு துண்டு

 தேங்காய் விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 20 கிராம்

 மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்

 புளிக்கரைசல் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 வஞ்சிரம் மீன் - அரை கிலோ

 நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை - தலா ஒரு டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

வஞ்சிரம் மீனைக் குழம்புக்கு ஏற்றவாறு நறுக்கி, நன்கு கழுவி சுத்தம்செய்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். சின்னவெங்காயத்தில் பாதியளவை எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள சின்னவெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,  பச்சை மிளகாய் இஞ்சியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு அரைத்த வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் மற்றும் தேங்காய் விழுதை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். குழம்பு நன்கு கொதித்த பிறகு மீன் துண்டுகளைச் சேர்த்து அடுப்பைச் சீராக்கி மீன் வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

கேரளா கறிமீன் வருவல்

தேவையானவை:

 கேரளா கறிமீன் - ஒன்று (200 – 250 கிராம் எடையுள்ளது)

 பெரியவெங்காயம் - 2

 தக்காளி - ஒன்று

 குடமிளகாய் - ஒன்று

 வெங்காயத்தாள் - அரை கப்

 பூண்டு - 10 பல்

 இஞ்சி - ஒரு துண்டு

 சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்

 ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 காஷ்மீரி மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 மீன் வறுவல் மசாலாத்தூள் - 10 கிராம்

 வாழை இலை - ஒன்று

 சூரியகாந்தி எண்ணெய் - 50 மில்லி

p54c.jpg

செய்முறை:

முழுமீனைக் கழுவி அதன் மேல் மற்றும் அடிப்பகுதியில் ஆங்காங்கே கீறி விடவும். மீன் வறுவல் மசாலாத்தூளை மீன் மேல் முழுவதுமாகத் தடவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். மீன் நன்கு மசாலாவில் ஊறியவுடன் வாணலியில் எண்ணெய் சேர்த்து, அதில் பொரித்து எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தாள், பூண்டு மற்றும் இஞ்சியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் ஸ்வீட் சில்லி சாஸ், சோயா சாஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு வதக்கு வதக்கி எடுக்கவும்.

பிறகு, வாழை இலையில் மீனை வைத்து, வதக்கிய கிரேவியை மீனின் இருபுறமும் தடவிக் கொள்ளவும். இலையால் மீனை மூடி, இட்லித் தட்டில் 5 நிமிடங்கள் வேகவைத்து விடவும். இலை சற்று நிறம் மாறியதும் எடுத்துப் பரிமாறவும்.

பத்மசிங் ஐசக் உணவு சார்ட்!

p54d.jpg

காலை:

எழுந்தவுடன் ஒரு செம்பு நிறைய தண்ணீர்.

8 மணிக்கு: ராகி தோசை மாவு தோசை அல்லது இட்லி மற்றும் சட்னி.

11 மணிக்கு: வெள்ளரிக்காய், மாதுளம்பழம், வெஜ் சாலட்.

மதியம்:

1 மணிக்கு: கேரட் சூப்/பீட்ரூட் சூப்/புதினா கொத்தமல்லித்தழை சூப், சாதம் - 200 கிராம், ஏதாவது பொரியல் - 2

மாலை

இஞ்சி டீ மட்டும்

இரவு

சப்பாத்தி அல்லது இட்லி - 2, வெஜிடபிள் கிரேவி அல்லது மட்டன் கொத்தமல்லித்தழை கிரேவி.

Link to comment
Share on other sites

முருங்கை ரெசிப்பி

 

 

p123b.jpg

முருங்கைக்கீரை அடை 

தேவையானவை:

பச்சரிசி – அரை கப்

புழுங்கலரிசி – அரை கப்

உளுந்து – கால் கப்

துவரம்பருப்பு – அரை கப்

கடலைப்பருப்பு – அரை கப்

பாசிப்பருப்பு – அரை கப்

சிறுதானியம் (தினை, குதிரைவாலி, சாமை, வரகு) – அரை கப்

முருங்கைக்கீரை – ஒரு கப்

தேங்காய்த்துருவல் – அரை கப்

காய்ந்த மிளகாய்  12

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இரண்டு வகை அரிசி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாகச் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் பெருங்காயம், உப்பு, முருங்கைக்கீரை, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் மாவை ஊற்றி, அடைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.


p123c.jpg

முருங்கை மசாலா 

தேவையானவை:

முருங்கைக்காய் – 2

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று

பாசிப்பருப்பு  ஒரு கைப்பிடி

தக்காளி – ஒன்று

பூண்டு – 4

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு 

தாளிக்க:

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை  சிறிதளவு 

செய்முறை:

பாசிப்பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கி வேகவைத்துக்கொள்ளவும். வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி கரையும்வரை நன்கு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சாம்பார் பொடி, வேகவைத்த பருப்பு, முருங்கைக்காயைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் 5 நிமிடம் வேகவைத்திருந்து இறக்கவும்.


p123d.jpg

முருங்கைக்காய் பச்சடி 

தேவையானவை:

முருங்கைக்காய் – 2

கத்திரிக்காய் – 6

தக்காளி – 4

சின்ன வெங்காயம் – 8

துவரம்பருப்பு – அரை கப்

பச்சைமிளகாய்  4

சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை  சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் –அரை டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

புளி  சிறிய நெல்லிக்காய் அளவு 

தாளிக்க:

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுந்து –  ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை  சிறிதளவு 

செய்முறை:

முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவும். துவரம்பருப்பை அரை வேக்காட்டுப் பதத்துக்கு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து நிறம் மாறி கரையும் வரை நன்கு வதக்கவும். இத்துடன் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். பிறகு கெட்டியாக கரைத்த புளிக்கரைசல் ஊற்றி, வேகவைத்த பருப்பு,சாம்பார் பொடி, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். வேகவைத்த முருங்கைக்காய் சேர்த்துக் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


p123e.jpg

முருங்கைக்கீரைத் துவட்டல் 

தேவையானவை:

பாசிப்பருப்பு – கால்  கப்

முருங்கைக்கீரை – ஒரு கட்டு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய்  தேவையான அளவு 

தாளிக்க:

சீரகம் – அரை டீஸ்பூன்

உளுந்து – அரை ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2 

செய்முறை:

பாசிப்பருப்பை அரை வேக்காட்டுப் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் சுத்தம் செய்த கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை வெந்ததும் பாசிப்பருப்பு சேர்த்துக்கிளறி, உப்பு சேர்த்து லேசாக வதக்கிப் பரிமாறவும். 


p123f.jpg

முருங்கைக்கீரைபறங்கிக்காய்ப் பொரியல் 

தேவையானவை:

முருங்கைக்கீரை – ஒரு கப்

துண்டுகளாக நறுக்கிய

பறங்கிக்காய் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு 

தாளிக்க:

சீரகம் – அரை டீஸ்பூன்

உளுந்து – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2 

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். கீரை பாதி வெந்ததும், மீடியம் சைஸில் நறுக்கிய பறங்கிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்துக் கலந்து வேகவிடவும். பறங்கிக்காய் வெந்ததும் இறக்கி, விருப்பப்பட்டால் தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.


p123g.jpg

முருங்கைக்கீரைப் பொடி 

தேவையானவை:

முருங்கைக்கீரை – அரைக் கட்டு

எள் – கால் கப்

உளுந்து – கால் கப்

காய்ந்த மிளகாய் – 15

பூண்டு – 10 பல்

உப்பு – தேவையான அளவு

புளி –  சிறிய நெல்லிக்காய் அளவு 

செய்முறை:

முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து 2 நாட்கள் நிழலில் காய வைத்து, வெறும் வாணலியில் முறுகலாக வறுக்கவும். ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். உளுந்தையும் எள்ளையும் வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்தெடுக்கவும். சிறிது  எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். எல்லாம் ஆறியதும், முருங்கை இலை, உப்பு தவிர்த்து மற்றவற்றை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இறுதியாக, முருங்கை இலை மற்றும் உப்பைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்து ஆறவைத்துப் பயன்படுத்தவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருங்கைக்காயில இவ்வளவு  அயிட்டம் ....! பூவும், பொருக்கும் , வேரும்தான் பாக்கி ....! அதையும் சித்த வைத்தியத்துக்கு விட்டு வைச்சிருக்கு போல ....!

டிப்ஸ் : முருங்கைக்காயை  குழம்புக்கு வெட்டும்போது சரிபாதி துண்டாக வெட்டாமல்  முக்கால் பகுதியுடன் வெட்டை நிப்பாட்டவும் . அப்பொழுது காய் மூடியபடி குழம்பில் அவியும் . மசாலாவும் உள்ளே ஊறி ருசியாய் இருக்கும் .....! tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

p113b.jpg

மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம் 

தேவையானவை:

தோசை மாவு  அரை கிலோ

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  ஒன்று

பொடியாக நறுக்கிய தக்காளி  ஒன்று

பொடியாய நறுக்கிய கேரட்  2

சிக்கன்  200 கிராம்

இட்லி பொடி  2 டேபிள்ஸ்பூன்

சீஸ்  25 கிராம்

வெண்ணெய்  25 கிராம்

உப்பு  தேவையான அளவு 

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், சிறிது வெண்ணெய் தடவி, தோசைமாவை ஊத்தப்பம் போன்று ஊற்றவும். இதன் மீது வெங்காயம், கேரட், தக்காளி, சிக்கன் துண்டுகளையும் வைக்கவும். பின் ஊத்தப்பத்தின் எல்லா இடங்களிலும் படுமாறு இட்லிப் பொடியைத் தூவவும். சுற்றிலும், வெண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் சீஸ் தூவி இறக்கிப் பரிமாறவும். 

Link to comment
Share on other sites

 

ரிச்கேக் : செய்முறைகளுடன்...!

 

 

cake.jpg


தேவையான பொருட்கள்: 
 

  • ரவை - 1 கிலோ
  • சீனி - 2 கிலோ
  • முட்டை - 60
  • மாஜரீன் - 1 கிலோ
  • இஞ்சிப்பாகு - 900 கிராம்
  • பூசணி அல்வா - 900 கிராம்
  • செளசெள - 900 கிராம்
  • முந்திப்பருப்பு - 1500 கிராம்
  • உலர்ந்ததிராட்சை - 2 கிலோ
  • பேரீச்சம்பழம் - 2 கிலோ
  • பிராண்டி - 2 கிலாஸ் [வைன் கிலாஸ்]
  • கண்டிபீல்(candi peel) - 500 கிராம்
  • செரீஸ்(cheris) - 500 கிராம்
  • தேன் - 250 கிராம்
  • கோல்டன் சிராப்(Golden sirop) - 2 கிலாஸ்
  • பன்னீர்(Rosewatter) - 2 சிறிய போத்தல்
  • அல்மண்ட் எசன்ஸ்(Almond essence) - 2 போத்தல்
  • வெனிலா - 6 போத்தல்
  • ஏலக்காய்த்தூள் - 10 தேக்கரண்டி
  • ஜாதிக்காய்த்தூள் - 10 தேக்கரண்டி
  • கறுவாத்தூள் - 10 தேக்கரண்டி
  • கிராம்பு - 5 தேக்கரண்டி
  • ஸ்ட்ரா பெர்ரி ஜாம் - 2 போத்தல்
  • அன்னாசிப்பழ ஜாம் - 2 போத்தல்

    செய்முறை : 
     
  • மேலே கொடுத்துள்ள பழங்கள், பாகுக்குள் இருக்கும் இஞ்சி, பூசணி, செளசெள மற்றும் முந்திரிப்பருப்பு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
     
  • ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் வெட்டிய பொருட்கள் எல்லாவற்றையும் போடவும்.
     
  • அதில் எசன்ஸ், பன்னீர், கோல்டன்சிரப், பிரண்டி, தேன், வனிலா, ஏலம், கறுவா, ஜாதிக்காய், கிராம்புதூள்கள் மற்றும் ஜாம் இரண்டில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்று சேர்க்கவும்.
     
  • மரக்கரண்டியால் நன்றாக கலந்து மூடி ஒருமாதம் ஊறவைக்கவும்.
     
  • ஒரு கிழமைக்கு ஒருமுறை நன்றாக பிரட்டி ஊறவைக்கவும்.
     
  • பின்பு ரவையை பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.
     
  • பின்பு 60 முட்டையில் 36 முட்டையின் வெள்ளைகருவைவும் 60 முட்டையின் மஞ்சள்கருவையும் தனித்தனியாக் எடுத்து வைக்கவும்.
     
  • சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்றாக அடிக்கவும்.
     
  • முட்டையின் வெள்ளைக்கருவையும் மஞ்சள்கருவையும் தனித்தனியாக நுரைவரும்வரை நன்றாக அடிக்கவும்.
     
  • பின்பு பழக்கலவைக்குள் சீனிக்கவை, ரவை அடித்துவைத்துள்ள முட்டை வெள்ளைக்கருவையும், மஞ்சள்கருவையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.
     
  • கேக் ரேயில் பேக் பேப்பர் விரித்து அந்த ரேக்கு அளவாக கலவையை ஊற்றி 180 பாகை வெப்பத்தில் பேக்செய்யவும். 3 அல்லது 4 தரம் பேக் செய்ய வேண்டும்.
     
  • பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் பேக்செய்த கேக்குகளைக் கொட்டி மீதம் இருக்கும் இரண்டு போத்தல் ஜாம்மையும் சேர்த்து நன்றாக கலக்கி கேக் ரேயில் போட்டு தட்டி சிறிய துண்டுகளாக் வெட்டி எடுக்கவேண்டும்.
     
  • வெட்டிய துண்டுக்களை ஓயில் பேப்பரில் சுற்றி ரிச்கேக் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
Link to comment
Share on other sites

p113c.jpg

இறால் தொக்கு தோசை 

தேவையானவை:

தோசை மாவு  ஒரு கப்

இறால்  கால் கிலோ

சின்னவெங்காயம்  10

சீரகம்  கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்  சிறிதளவு

எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை  சிறிதளவு

முட்டை  2

உப்பு  தேவையான அளவு 

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன், தேவையானவற்றில் கொடுத்துள்ள முட்டை, தோசைமாவு நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும். இறுதியில், முட்டையை உடைத்து ஊற்றி இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு், மெல்லிய தோசைகளாக வார்க்கவும். இதன் மீது  ஏற்கெனவே செய்து வைத்துள்ள மசாலாக் கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.  பிறகு, தோசையை அப்படியே சப்பாத்தி போல் சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

நவதானிய உணவுகள்

 

 

 

p27b.jpg

தட்டைப்பயறு வடை 

தேவையானவை:

தட்டைப்பயறு  250 கிராம்

பெரிய வெங்காயம்  50 கிராம்

பச்சை மிளகாய்  2

உப்பு  5 கிராம்

கறிவேப்பிலை  சிறிதளவு

இஞ்சி  5 கிராம்

பூண்டு  3 பல்

கொத்தமல்லித்தழை  சிறிதளவு

சோம்பு  அரை டேபிள்ஸ்பூன்

சீரகம்  ஒரு டீஸ்பூன்

எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தட்டைப்பயறை நன்றாகக் கழுவி 8 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு ஊறவைத்த தட்டைப்பயறுடன், சீரகம், சோம்பு, உப்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து, ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். பிறகு சூடான எண்ணெயில் வடைகளாகப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.


p27c.jpg

வேர்க்கடலை லட்டு 

தேவையானவை:

வேர்க்கடலை  200 கிராம்

வெல்லம்  150 கிராம்

ஏலக்காய்த்தூள்  ஒரு டீஸ்பூன்

நெய்  25 கிராம் 

செய்முறை:

வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் வேர்க்கடலையைச் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை சூடாக இருக்கும்போதே, வெல்லம், ஏலக்காய்த்தூளைத் சேர்த்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்தவற்றை வாயகன்ற பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். நெய்யை சூடாக்கி, அரைத்த கலவையில் சேர்த்து, சூடாக இருக்கும்போதே கைகளில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடித்தால், வேர்க்கடலை லட்டு ரெடி.


p27d.jpg

கடலைப்பருப்பு இனிப்புப் பணியாரம் 

தேவையானவை:

கடலைப்பருப்பு  250 கிராம்

மைதா மாவு  250 கிராம்

தேங்காய்த்துருவல்  அரை மூடி

வெல்லம்  200 கிராம்

ஏலக்காய்  4

நெய்  25 மில்லி 

செய்முறை:

கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், தேங்காய்த்துருவலுடன் 15 மில்லி நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பிறகு, வேகவைத்த கடலைப்பருப்பு, வறுத்த தேங்காய்த்துருவல், ஏலக்காய், பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் மையாக அரைத்துக்கொள்ளவும். அரைத்தக் கலவையை சிறிய எலுமிச்சைப்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் விட்டுக் கொள்ளவும். மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தயாராக வைத்துள்ள உருண்டைகளை மைதா மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பணியாரக் கல்லில் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுத்தால், கடலைப்பருப்பு பணியாரம் ரெடி.


p27e.jpg

அவரைப்பருப்பு சாதம் 

தேவையானவை:

அரிசி  500 கிராம்

அவரைப்பருப்பு  200 கிராம்

கடுகு  கால் டீஸ்பூன்

சின்னவெங்காயம்  75 கிராம்

காய்ந்த மிளகாய்  4

சீரகம்  கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

நெய்  10 மில்லி

கறிவேப்பிலை  சிறிதளவு

உப்பு  தேவையான அளவு

எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை:

அரிசியை நன்றாகக் கழுவி 15 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம், சின்னவெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பிறகு கலவையுடன் ஊற வைத்த அரிசி, அவரைப்பருப்பு, உப்பு சேர்த்து அரிசி மற்றும் பருப்பைச் சேர்த்து நன்கு வேகவிடவும். சாதத்தை இறக்கும்முன் நெய் கலந்து கிளறி இறக்கிப் பரிமாறவும். 

Link to comment
Share on other sites

p113g.jpg

மைசூர் மசாலா தோசை 

தேவையானவை:

ஜவ்வரிசி  100 கிராம்

சர்க்கரை  ஒரு டீஸ்பூன்

தோசை மாவு  அரை கிலோ

காய்ந்த மிளகாய்  10

பூண்டு  5 பல்

உப்பு  தேவையான அளவு

மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்

கடுகு, உளுந்து  அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்

சீரகம்  அரை டீஸ்பூன்

எண்ணெய்  தேவையான அளவு

பொடியாக நறுக்கிய  

பெரிய வெங்காயம்  ஒன்று

உருளைக்கிழங்கு  150 கிராம்

தக்காளி  ஒன்று

இஞ்சி  ஒரு துண்டு

பச்சைமிளகாய்  ஒன்று

பெருங்காயம்  சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து, சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து அரைத்து, தோசை மாவுடன் கலந்து கொள்ளவும். காய்ந்த மிளகாய், பூண்டு சிறிது உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், அரைத்த பூண்டுக் கலவையைச் சேர்த்து கலவை ஒன்றாகும் வரை வதக்கவும். இத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கைப் பாதியாக நறுக்கிச் சேர்க்கவும். கலவை கெட்டியானதும் இறக்கவும். சூடான தோசைக்கல்லில் தோசைமாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் அதன் மீது உருளைக்கிழங்குக் கலவையை வைத்து  தோசைக்கல்லிலேயே ரோலாக சுருட்டி எடுத்து தட்டில் வைத்துப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites


p35d.jpg

இறால் குழம்பு 

தேவையானவை:

இறால்  கால் கிலோ

முருங்கைக்காய்  ஒன்று

வாழைக்காய்  ஒன்று (சிறியது)

சின்னவெங்காயம்  100 கிராம்

தக்காளி  ஒன்று

பூண்டு  5 பல்

சாம்பார் பொடி  2 டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்)  3 டீஸ்பூன்

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்  அரை டீஸ்பூன்

தேங்காய்த்துருவல்  10 டீஸ்பூன்

சோம்பு  ஒரு டீஸ்பூன்

புளி  எலுமிச்சை அளவு

உப்பு  தேவையான அளவு

கறிவேப்பிலை  சிறிதளவு

பச்சை மிளகாய்  2 

செய்முறை:

தோல் உரித்து சுத்தம் செய்யப்பட்ட இறாலை தண்ணீரில் அலசி வைக்கவும். முருங்கைக்காய், வாழைக்காய், பாதியளவு சின்னவெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் விருப்பப்பட்ட வடிவத்துக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும். தேங்காய்த்துருவல் மற்றும் சோம்பை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, இறுதியாக மீதமுள்ள சின்னவெங்காயத்தையும் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி வைக்கவும். பூண்டுப்பல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். கரைத்து வைத்த புளிக்கரைசலில் சாம்பார் பொடி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள் தூள், உப்பு, அரைத்த தேங்காய்க் கலவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இரண்டாக கீறிய பச்சை மிளகாய், தட்டிய பூண்டு, நறுக்கிய தக்காளி, சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு முருங்கைக்காய், வாழைக்காய் சேர்த்து வதங்கும்போதே இறாலையும் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் கரைத்து வைத்துள்ள புளி, தேங்காய் குழம்புக்கலவையை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பில் உள்ள காய்கள், இறால் வெந்ததும் இறக்கினால், இறால் குழம்பு ரெடி.

சூடான சாதத்துக்கு ருசியாக இருக்கும். டிஃபனுக்கும் ஏற்றதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

p35c.jpg

இறால் பொடி 

தேவையானவை:

இறால் கருவாடு

(சிறியது)  250 கிராம்

காய்ந்த மிளகாய்  10

இரண்டாக நறுக்கிய சின்னவெங்காயம்  7

பூண்டு  8 பல்

சீரகம்  அரை டீஸ்பூன்

தேங்காய்த்துருவல்  200 கிராம்

புளி  சிறிய எலுமிச்சை அளவு

எண்ணெய்  4 டேபிள்ஸ்பூன்

உப்பு  தேவையான அளவு 

செய்முறை:

கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி, உலர வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அடுப்பைக் குறைத்து வைத்து கருவாட்டைச் சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பிறகு, மற்றொரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து தனியே எடுத்துவைக்கவும். அதே வாணலியில் சீரகம் சேர்த்துப் பொரிந்ததும், சின்னவெங்காயம், பூண்டு, புளி சேர்த்து நன்கு வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து, பொன்னிறமாக வரும் வரை கலவையை வறுக்கவும். இதை கருவாடு, காய்ந்த மிளகாயுடன் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த இறால் பொடி சாதம், இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

குறிப்பு:

கருவாட்டில் உப்பு இருப்பதால், பொடிக்கு அரைக்கும் போது உப்பு சரிபார்த்துவிட்டு சேர்க்கவும்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

p35e.jpg

இறால் மசாலா 

தேவையானவை:

இறால்  கால் கிலோ (சுத்தம் செய்தது)

சின்னவெங்காயம்  100 கிராம்

தேங்காய்த்துருவல்  7 டீஸ்பூன்

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

சோம்பு  ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  தேவையான அளவு

உப்பு  தேவையான அளவு

எண்ணெய்  4 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை  சிறிதளவு 

செய்முறை:

தேங்காய்த்துருவல் மற்றும் சோம்பை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் தீயைக் குறைத்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய்க் கலவையும் சேர்த்து கலவை வற்றும் வரை நன்கு புரட்டவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை நன்கு வதக்கி, இறக்கிப் பரிமாறவும். 

Link to comment
Share on other sites

p113d.jpg

கோழி கீமா தோசை 

தேவையானவை:

தோசை மாவு  அரை கிலோ

எலும்பில்லாத சிக்கன்  300 கிராம்

பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம்  50 கிராம்

இஞ்சி  ஒரு துண்டு

பச்சைமிளகாய்  ஒன்று

பூண்டு  5 பல்

எண்ணெய்   தேவையான அளவு

சோம்பு  கால் டீஸ்பூன்

மிளகுத்தூள்  அரை டீஸ்பூன்

சீரகத்தூள்  அரை டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு 

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சின்னவெங்காயம், சிக்கன் சேர்த்து வதக்கவும். இத்துடன் சோம்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் நன்றாக வெந்த தண்ணீர் வற்றியதும் இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, காய்ந்ததும் தோசை ஊற்றி, வதக்கி வைத்துள்ள மசாலாவை அதன் நடுவில் வைத்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேக விடவும். இருபுறமும் வேகவைத்து இறக்கிப் பரிமாறவும்.


p113e.jpg

மட்டன் தோசை 

தேவையானவை:

தோசை மாவு  அரை கிலோ

எலும்பில்லாத மட்டன்  கால் கிலோ

முட்டை  5

இஞ்சிபூண்டு விழுது  ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள்  சிறிதளவு

உப்பு  தேவையான அளவு

மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன்

எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை:

மட்டனை கழுவி சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கிக்கொள்ளவும். இத்துடன் உப்பு, இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தோசை மாவை ஊத்தப்பமாக ஊற்றவும். இதில் முட்டையை உடைத்து அடித்து ஊற்றி, வேகவைத்த மட்டன் தூண்டுகளை வைக்கவும். இதன் மேல் மிளகுத்தூள், சீரகத்தூள் தூவவும். பிறகு, எண்ணெய் ஊற்றி மூடிபோட்டு வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

பனானா பான் கேக் : செய்முறைகளுடன்...

 

 

panecake.jpg

தேவையான பொருட்கள் : 

  • மைதா மாவு - 2 கப் 
  • முட்டை - 2 
  • பால் - 1 1/2 கப் 
  • பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன் 
  • வெண்ணெய்/எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
  • சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன் 
  • வாழைப்பழம் - 3


செய்முறை : 
* ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு பொங்கி வரும் படி அடித்துக் கலக்குங்கள். 

* வெண்ணெயை உருக்கவும். வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்

* பின் அத்துடன், மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை, மசித்த வாழைப்பழம், வெண்ணெய் மற்றும் சிறிது பாலையும் சேர்த்து நன்கு கலக்குங்கள். 

* ரொம்பவும் மென்மையாகும் வரை கலக்கக்கூடாது. கட்டி கட்டியாக துண்டுகள் இருந்தால், அது அப்படியே இருக்கட்டும். அப்போது தான் பான்கேக் நன்கு உப்பி வரும், இல்லையேல் கடினமாக தட்டையாக வரும். 

* தட்டையான நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும் வெண்ணையை வாணலியில் தடவிக் கொள்ளவும். பின்னர் அதில் கால் கப் மாவை எடுத்து, வாணலியில் ஊற்றி வட்டமாக தேய்க்கவும். 

* அந்த பான்கேக்கை 2 நிமிடங்களுக்கு அல்லது பான்கேக் பொன்னிறத்தில் வரும் வரை வேக வைக்கவும். பான்கேக்கின் ஒரத்தில் முறுகலாக வரும் போது கவனமாக திருப்பி போடவும். அவ்வாறு திருப்பியதும், அதன் மறுபக்கமும் பொன்னிறமாக முறுகலாக வரும் போது எடுத்துக் கொள்ளவும். 

* இதோ சுவையான பான் கேக் தயார்!!! 

* வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், சிரப், ஜெல்லி, சாக்லேட் சிப்ஸ் அல்லது பழங்கள் என்று நீங்கள் விரும்பும் ஐட்டங்களுடன், இந்த பான்கேக்கை சாப்பிடலாம்.

குறிப்பு :

* எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரைத்தூள் சேர்த்து டாப்பிங் செய்தால் அருமையாக இருக்கும். 

* பான்கேக் கலவையை கல்லில் ஊற்றப்போகும் முன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு, கொஞ்சம் சர்க்கரையை சேர்க்கலாம்.

* டாப்பிங்கிற்கு பயன்படுத்தும் சாக்லேட் சிப்ஸ், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழத்துண்டுகள், ப்ளூபெர்ரி போன்றவற்றை நேரடியாக பான்கேக் மாவிலேயே கலந்துவிடலாம்.

* பான்கேக் கல்லில் ஒட்டாமல் வரவேண்டுமெனில் சன்ஃப்ளவர் எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

Link to comment
Share on other sites

மூங்கில் அரிசி உணவுகள்

 

 

பாரம்பர்ய அரிசிகளில் இருக்கும் சத்துக்கள் பல. இனி, ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு விதமான பாரம்பர்ய அரிசியை எடுத்துக்கொண்டு அதில் நம்முடைய பழக்கமான உணவுகளை, எப்படிச் செய்யலாம் என்பதைச் செய்து காட்டி விளக்கப் போகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி. முதல் இதழில் கொஞ்சம் வித்தியாசமாக மூங்கில் அரிசியைப் பயன்படுத்தி உணவுகளைத் தந்து அசத்துகிறார்.

p55b.jpg 

மூங்கில் அரிசி

40 வருடங்கள் ஆன மூங்கில் மரத்தின் பூவிலிருந்து கிடைப்பது மூங்கில் அரிசி. இதில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்கிறது. இழந்த ஆரோக்கியத்தை மீட்டு, உடலுக்கு பலன் தரக்கூடியது. மாதவிலக்குக் கோளாறுகள், சுவாசப் பிரச்னைகள் மற்றும் மூட்டு வலி, ருமாட்டிக் வலிகளைக் குறைக்கக்கூடியது. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தத்தை, கட்டுக்குள் வைத்திருக்க உதவக்கூடியது. கருவுற்ற பெண்களுக்கு ஏற்றது. குழந்தையின்மைப் பிரச்னைக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மூங்கில்  அரிசி மட்டுமல்ல, இதன் பட்டை மற்றும் குருத்து ஆகியவையும் உணவாகப் பயன்படுகின்றன. மூங்கில் குழாயையே பாத்திரமாக பயன்படுத்தி சமைப்பது பழங்குடி மக்களின் சிறப்பு.


 

p55c.jpg

இட்லி 

தேவையானவை:

மூங்கில் அரிசி  3 கப்

இட்லி அரிசி  ஒரு கப்

உளுந்து  ஒரு கப்

வெந்தயம்  ஒரு டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு 

செய்முறை:

மூங்கில் அரிசி, இட்லி அரிசியை தனித்தனியாக தலா 4 மணி நேரமும் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 2 மணி நேரம் ஊற விடவும். கிரைண்டரில் உளுந்து மற்றும் வெந்தயக் கலவையைச் சேர்த்து அரைத்தெடுத்து வைக்கவும். பிறகு மூங்கில் அரிசி மற்றும் இட்லி அரிசியை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். இனி, அரைத்தவற்றை எல்லாம் நன்கு கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கி, 6 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, வழக்கமாக நாம் இட்லி அவிப்பது போல இட்லிப் பாத்திரத்தில் மாவை ஊற்றி வேகவைத்து எடுத்து சட்னியுடன் பரிமாறவும்.


 

 

p55d.jpg

சிவப்பு அவல் தோசை

தேவையானவை:

மூங்கில் அரிசி  2 கப்

இட்லி அரிசி  ஒரு கப்

சிவப்பு அவல்  ஒரு கப்

உளுந்து  ஒரு கப்

வெந்தயம்  அரை டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை:

மூங்கில் அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 4 மணி நேரம் ஊற விடவும். இதேபோல இட்லி அரிசியை தனியாக 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகச் சேர்த்து

2 மணி நேரம் ஊறவிடவும். அவலை தனியே ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் அரைக்கும் போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், சிறிது எண்ணெய் விட்டு மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைகளாக சுட்டு எடுக்கவும். சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.


 

p55e.jpg

ஆப்பம் 

தேவையானவை:

மூங்கில் அரிசி  ஒரு கப்

இட்லி அரிசி  ஒரு கப்

பச்சரிசி  ஒரு கப்

சிவப்பு அவல்  அரை கப்

உளுந்து  4 டேபிள்ஸ்பூன்

வெந்தயம்  அரை டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

தேங்காய்த்துருவல்  அரை கப்

ஆப்ப சோடா  ஒரு சிட்டிகை

இளநீர்  ஒரு கப் 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 4 மணி நேரம் ஊற விடவும். மற்றொரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுந்து, வெந்தயத்தைச் சேர்த்து 3 மணி நேரம் ஊற விடவும், அவலை ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு அவல் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். இத்துடன் அவலையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கி, 8 மணி நேரம் புளிக்க விடவும். காலையில் ஆப்பம் சுடுவதற்கு முன் ஆப்ப சோடா, இளநீர் சேர்த்துக் கலக்கி, ஆப்பமாக சுட்டெடுக்கவும். தேங்காய்ப்பால் அல்லது ஸ்டியூவுடன் ஆப்பத்தைப் பரிமாறவும்.


 

p55f.jpg

அரிசி கஞ்சி 

தேவையானவை:

மூங்கில் அரிசி  அரை கப்

பாசிப்பருப்பு  கால் கப்

தக்காளி  ஒன்று

பெரிய வெங்காயம்  ஒன்று

பச்சை மிளகாய்  2

இஞ்சிபூண்டு விழுது  ஒரு டீஸ்பூன்

பட்டை  சிறிய துண்டு

சோம்பு  கால் டீஸ்பூன்

கிராம்பு  ஒன்று

ஏலக்காய்  ஒன்று

புதினா, கொத்தமல்லித்தழை  சிறிதளவு

உப்பு  தேவையான அளவு

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

நெய்  2 டீஸ்பூன்

தேங்காய்ப்பால்  ஒரு கப் 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு, தண்ணீர் இறுத்து நிழல் உலர வைத்து மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கரைய வதக்கி,

இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு புதினா மற்றும் கொத்தமல்லித்தழைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் நீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் உடைத்த மூங்கில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விடவும். பிறகு, அடுப்பை சிம்மில்

20 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து நெய், புதினா மற்றும் கொத்தமல்லித்தழை தூவி, தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


 

p55g.jpg

பணியாரம் 

தேவையானவை:

மூங்கில் அரிசி  ஒரு கப்

இட்லி அரிசி  ஒரு கப்

ஜவ்வரிசி  ஒரு கப்

உளுந்து  கால் கப்

வெந்தயம்  ஒரு டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு,

    கடலைப்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன்

வெங்காயம்  ஒன்று

பெருங்காயம்  ஒரு சிட்டிகை

பச்சைமிளகாய்  2

கறிவேப்பிலை  சிறிதளவு

எண்ணெய்  தேவையான அளவு

இஞ்சித்துருவல்  ஒரு டீஸ்பூன் 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசி, இட்லி அரிசியை ஒன்றாகச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊறவிடவும். இதே போல், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாகவும், ஜவ்வரிசியை தனியாகவும் தலா 3 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு எல்லாவற்றையும் தண்ணீரை இறுத்து கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 6 மணி நேரம் புளிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், சிறிது உப்பு சேர்த்து வதக்கி மாவில் சேர்த்துக் கிளறவும். பிறகு குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி, குழிகளில் எண்ணெய் ஊற்றவும். மாவை குழிகளில் ஊற்றி, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்தால், மூங்கில் அரிசி குழிப்பணியாரம் ரெடி. கார சட்னியுடன் பரிமாறவும்.


 

p55h.jpg

பால் பாயசம் 

தேவையானவை:

ஊற வைத்து, நிழலில் உலர்த்தி உடைத்த மூங்கில் அரிசி  5 டேபிள்ஸ்பூன்

பால்  ஒரு லிட்டர்

கண்டன்ஸ்டு மில்க்  4 டேபிள்ஸ்பூன்

சர்க்கரை  கால் கப்

ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன்

முந்திரி, பாதாம்  தேவையான அளவு 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து ரவை போல் உடைத்துக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் உடைத்த அரிசியைச் சேர்த்து வேகவிடவும். விருப்பப்படுகிறவர்கள் குக்கரில் சேர்த்து 4 விசில் விட்டு வேகவிடவும். இத்துடன் சர்க்கரை, கண்டன்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். நறுக்கிய முந்திரி, பாதாம் சேர்த்துக் கலக்கி சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.


 

p55j.jpg

பேரீச்சம் பழ பிர்னி 

தேவையானவை:

ஊற வைத்து உடைத்த

மூங்கில் அரிசி  கால் கப்

பால்  ஒரு லிட்டர்

பேரீச்சம்பழ சிரப்  அரை கப்

வெனிலா எசன்ஸ்  2 சொட்டு

பாதாம், முந்திரி, பிஸ்தா  

தேவையான அளவு

பேரீச்சம் பழத்துண்டுகள்  சிறிதளவு 

செய்முறை:

மூங்கில் அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணிர் இறுத்து மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். குக்கரில் பாலை ஊற்றி சூடானதும், 2 மணி நேரம் ஊற வைத்து, உடைத்த மூங்கில் அரிசி சேர்த்து 4 விசில் வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வேகவைக்கவும். பிறகு, மூடியைத் திறந்து பேரீச்சை சிரப் சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவைக்கவும். எல்லாம் வெந்து ஒன்று சேர்ந்து வரும்போது முந்திரி, பிஸ்தா, பாதாம் சேர்த்துக் கலக்கவும். அடுப்பை அணைத்து விட்டு வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பேரீச்சைத் துண்டுகளைத் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

பேரீச்சை சிரப் இல்லாதவர்கள், பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, ஊற வைத்து, அரைத்துச் சேர்க்கவும்.


 

p55k.jpg

கிச்சடி 

தேவையானவை:

மூங்கில் அரிசி  ஒரு கப்

பாசிப்பருப்பு  4 டேபிள்ஸ்பூன்

கடலைப்பருப்பு  4 டேபிள்ஸ்பூன்

பட்டை  சிறிய துண்டு

கிராம்பு  ஒன்று

ஏலக்காய்  ஒன்று

இஞ்சித்துருவல்  ஒரு டீஸ்பூன்

பிரிஞ்சி இலை  ஒன்று

நெய்  2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய்  2

உப்பு  தேவையான அளவு

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

சீரகம்  அரை டீஸ்பூன் 

செய்முறை:

மூங்கில் அரிசியை சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற விடவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சைமிளகாய், பிரிஞ்சி இலை, கடலைப்பருப்பை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் இஞ்சித்துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு 4 கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மூங்கில் அரிசி, பாசிப்பருப்பை சேர்த்துக் குழைய வேக விடவும். பிரஷர் வந்ததும் தீயை சிம்மில் 20 நிமிடம் வேகவிட்டு எடுத்து, மீதமுள்ள நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.


 

p55m.jpg

மசாலா சீயம் 

தேவையானவை:

மூங்கில் அரிசி  ஒரு கப்

பச்சரிசி  ஒரு கப்

உளுந்து  முக்கால் கப்

எண்ணெய், உப்பு  தேவையான அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு  தலா அரை டீஸ்பூன்

பெரிய வெங்காயம்  ஒன்று

பொடியாக நறுக்கிய

பச்சை மிளகாய்  2,

பெருங்காயம்  கால் சிட்டிகை

கறிவேப்பிலை  சிறிதளவு 

செய்முறை:

மூங்கில் அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊற விடவும். பிறகு அரிசி மற்றும் உளுந்தை அதிக நீர் விடாமல் கிரைண்டரில் நன்கு கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு போட்டு மாவில் சேர்த்துக் கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மசாலா சீயம் ரெடி.


 

p55n.jpg

வேர்க்கடலை வடை

தேவையானவை:

வேக வைத்த மூங்கில் அரிசி   ஒரு கப்

பொடித்த வேர்க்கடலை  அரை கப்

வெங்காயம்  ஒன்று

பச்சைமிளகாய் விழுது  ஒரு டீஸ்பூன்

இஞ்சித்துருவல்  ஒரு டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்  தேவையான அளவு

சீரகத்தூள்  ஒரு டீஸ்பூன்

புதினா, கொத்தமல்லித்தழை  சிறிதளவு 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசி சாதத்தைச் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். அதனுடன் வறுத்து பொடித்த வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் விழுது, இஞ்சித்துருவல், சீரகத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் வடை ரெடி.

இதே மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பஜ்ஜி மாவில் முக்கியெடுத்து பொரித்தால் போண்டா தயார். 

Link to comment
Share on other sites

p35f.jpg

இறால் மிளகு வறுவல் 

தேவையானவை:

இறால்  கால் கிலோ (சுத்தம் செய்தது)

பூண்டு  6 பல் (பொடியாக நறுக்கியது)

மிளகு  15

கறிவேப்பிலை  சிறிதளவு

பச்சை மிளகாய்  3

உப்பு  தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

சீரகத்தூள்  அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன் 

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு அலசி விட்டு சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்தும் பிசிறி, அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தீயைக் குறைத்து வதக்கி, மூடி போட்டு வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இறாலில் இருந்து வெளிவரும் தண்ணீரே போதுமானது. இறால் நன்கு வெந்ததும், மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.

Link to comment
Share on other sites

அசத்தலான டீ ரெசிப்பி

 

 

 

p88b.jpg

காஷ்மீர் காவா டீ 

தேவையானவை:

கிரீன் டீத்தூள்  ஒரு டீஸ்பூன்

பாதாம்பருப்பு  7

(கொரகொரப்பாக திரிக்கவும்)

ஏலக்காய்  3

பட்டை  ஒரு அங்குல துண்டு

சர்க்கரை  3 டீஸ்பூன்

குங்குமப்பூ  ஒரு சிட்டிகை

தண்ணீர்  3 கப் 

செய்முறை:

கிரீன் டீத்தூள், ஏலக்காய், பட்டை மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து

3 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அரைத்ததைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு குங்குமப்பூ சேர்த்து 5 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக விடவும். அடுப்பை அணைத்து டீயை வடிகட்டி சர்க்கரை மற்றும் அரைத்த பாதாம் பருப்பைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.


p88c.jpg

ஷீர் சாய் 

தேவையானவை:

தண்ணீர்  நான்கரை கப்

பால்  ஒன்றரை கப்

கிரீன் டீத்தூள்  ஒரு டீஸ்பூன்

ஏலக்காய்தூள்  அரை டீஸ்பூன்

பேக்கிங் சோடா  ஒரு சிட்டிகை

பட்டை  ஒன்றில் பாதி

முழு மிளகு  4

கசகசா  30 கிராம்

ஃப்ரெஷ் க்ரீம்  30 மில்லி

பொடியாக நறுக்கிய பிஸ்தாபருப்பு  

கால் டீஸ்பூன்

பொடித்த பாதாம்பருப்பு  ஒரு டீஸ்பூன்

குங்குமப்பூ  சிறிதளவு 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர், கிரீன் டீத்தூள், பேக்கிங் சோடா, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 8 நிமிடங்கள் மீண்டும் கொதிக்க விடவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் பட்டை, கசகசா, மிளகு, அரை கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் சேர்த்து கொதிக்க விடவும். இனி டீத்தூள், பேக்கிங் சோடா கலவை மற்றும் பட்டை, கசகசா கலவை இரண்டையும் ஒன்றாக்கி 20 தடவை வரை சற்று உயர தூக்கி ஆற்றவும். இப்படி ஆற்றினால்தான் டீயின் நிறம் ரோஸ் ஆக மாறும். பிறகு வடிகட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் ஏலக்காயை 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, டீயுடன் பாலைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு பாதாம், பிஸ்தா, ஃப்ரெஷ் க்ரீம், குங்குமப்பூ தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

பேக்கிங் சோடா சேர்ப்பதால் கலவை பொங்கி வழிய ஆரம்பிக்கும். உடனே அடுப்பில் இருந்து இறக்கி, பொங்குவது அடங்கியதும் மீண்டும் அடுப்பில் வைக்கவும்.


p88d.jpg 

அரபி அதேன் டீ 

தேவையானவை:

தண்ணீர்  3 கப்

டீத்தூள்  2 டீஸ்பூன்

பால்  முக்கால் கப்

சர்க்கரை  கால் கப்

ஏலக்காய்  10 (பொடித்தது)

கிராம்பு  4

பட்டை  கால் அங்குல துண்டு

ஜாதிக்காய்த்தூள்  

ஒரு சிட்டிகை 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், பால், பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து

10 நிமிடங்கள் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பிறகு டீத்தூள் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டி

சூடாகப் பரிமாறவும். 


p88e.jpg

அரபி மேக்ரபி புதினா டீ 

தேவையானவை:

கிரீன் டீத்தூள்  ஒரு டேபிள்ஸ்பூன்

சுடுநீர்  5 கப்

சர்க்கரை  4 டேபிள்ஸ்பூன்

புதினா இலை  ஒரு கட்டு 

செய்முறை:

சுடுநீரில் கிரீன் டீத்தூளைச் சேர்த்து 2 நிமிடங்கள் மூடி வைக்கவும். இத்துடன் சர்க்கரை, புதினா இலை சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு டீயை வடிகட்டி புதினா இலை தூவிப் பரிமாறவும். 


p88f.jpg

மசாலா டீ 

தேவையானவை:

பால்  3 கப்

தண்ணீர்  கால் கப்

இஞ்சி  ஒரு அங்குல துண்டு (தட்டியது)

ஏலக்காய்  ஒன்று (தட்டியது)

டீத்தூள்  2 டீஸ்பூன்

சர்க்கரை  3 டீஸ்பூன் 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர், இஞ்சி, ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து 4 நிமிடங்கள் கொதிக்க விடவும். டீத்தூளையும் சேர்த்து 3 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விடவும். பிறகு சர்க்கரை சேர்த்து கரையும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.


p88g.jpg

சுலைமானி டீ 

தேவையானவை:

தண்ணீர்  3 கப்

டீத்தூள்  கால் டீஸ்பூன்

பட்டை  ஒரு அங்குலம்

ஏலக்காய்  2

குங்குமப்பூ  ஒரு சிட்டிகை

எலுமிச்சைச்சாறு  

ஒரு டீஸ்பூன்

சர்க்கரை  3 டீஸ்பூன் 

செய்முறை:

பட்டை மற்றும் ஏலக்காயை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீருடன் ஏலக்காய், பட்டை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் டீத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை விட்டு இறக்கி 5 நிமிடம் மூடி வைக்கவும். டீயை வடிகட்டி எலுமிச்சைச் சாறு, சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும். 


p88h.jpg

காஷ்மீர் நூன் சாய் 

தேவையானவை:

கிரீன் டீத்தூள்  2 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்  5 (கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்)

உப்பு  ஒரு டீஸ்பூன்

சோடா உப்பு  ஒரு டீஸ்பூன்

பட்டை  ஒரு துண்டு

ஸ்டார் அனைஸ்

(நட்சத்திர சோம்பு)  ஒன்று

பால்  2 கப்

சர்க்கரை  2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர்  2 கப்

வெண்ணெய்  கால் டீஸ்பூன் 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் ஏலக்காய், பட்டை, ஸ்டார் அனைஸ் (நட்சத்திர சோம்பு) சேர்த்து

2 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு கிரீன் டீத்தூள், உப்பு, சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து சிம்மில் 40 நிமிடங்கள் கொதிக்க விடவும். இத்துடன் பால் சேர்த்து கலக்கி கொதித்ததும் வடிகட்டி, வெண்ணெய் விட்டு சூடாகப் பரிமாறவும்.

(பின்குறிப்பு: சோடா உப்பு சேர்க்கும்போது தண்ணீர் பொங்கி வழியும், கவனமாக இருக்கவும்.


p88j.jpg

மல்லிகைப் பூ டீ 

தேவையானவை:

மல்லிகைப் பூ கிரீன் டீத்தூள்  ஒரு டீஸ்பூன்

பால்  ஒரு கப்

பனங்கற்கண்டு  தேவையான அளவு

மல்லிகைப் பூ தண்ணீர்  ஒரு கப் 

செய்முறை:

5 மல்லிகைப் பூக்களை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, 4 மணி நேரம் மூடி வைத்து வடிகட்டினால், மல்லிகைப் பூ சாறு இறங்கிய தண்ணீர் ரெடி. இந்த தண்ணீரோடு மல்லிகைப்பூ கிரீன் டீத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து

10 நிமிடங்கள் கொதிக்க விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் பால், பனங்கற்கண்டு சேர்த்து பாலை நன்றாக சூடாக்கவும். பனங்கற்கண்டு நன்றாகக் கரையும் வரை கலக்கவும். சூடான பாலையும், மல்லிகைப் பூ கிரீன் டீ கலவையையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.


p88k.jpg

கருப்பட்டி காபி 

தேவையானவை:

கருப்பட்டி  கால் கிலோ (தூளாக்கவும்)

டீத்தூள்  ஒரு டேபிள்ஸ்பூன்

தண்ணீர்  4 டம்ளர்

பால்  அரை டம்ளர்

இஞ்சி  ஒன்றரை அங்குல துண்டு (தட்டிக் கொள்ளவும்) 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், இஞ்சி, கருப்பட்டி சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவும். இத்துடன் டீத்தூளையும் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி, 10 நிமிடங்கள் நன்கு ஆற விடவும். பிறகு மேலே தெளிந்தநீராக இருப்பதை மட்டும் வடிகட்டி, சூடான பாலில் சேர்த்துப் பரிமாறவும். இந்த காபியில் முறுக்கு அல்லது மிக்ஸர் சேர்த்து குடிக்கலாம் அல்லது காபி குடித்துவிட்டு, ஒரு கடி மிக்ஸரை கடித்துக் கொள்ளலாம்.


p88m.jpg

ஆவாரம்பூ டீ 

தேவையானவை:

ஆவாரம்பூ காய்ந்தது  2 டேபிள்ஸ்பூன்

மல்லி (தனியா)  அரை டீஸ்பூன் (கொரகொரப்பாக பொடித்தது)

மிளகு  அரை டீஸ்பூன் (கொரகொரப்பாகப் பொடித்தது)

இஞ்சி  கால் அங்குலம்

பனங்கற்கண்டு  ஒரு டீஸ்பூன்

தண்ணீர்  ஒரு கப்

பால்  ஒரு கப்

டீத்தூள்  ஒரு டீஸ்பூன் 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஆவாரம் பூ, மல்லி (தனியா), மிளகு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இத்துடன் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு பிறகு டீத்தூள் சேர்த்து நிறம் மாறும்வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கவும். பிறகு டீயை வடித்து பனங்கற்கண்டு சேர்த்து சூடாகப் பரிமாறவும். 

Link to comment
Share on other sites

ஸ்வீட்ஸ் ரெசிப்பி

 

 

p67b.jpg

கசகசா பாயசம் 

தேவையானவை:

கசகசா  100 கிராம்

தேங்காய்த்துருவல்  ஒரு கப்

வெல்லம்  ஒரு கப்

முந்திரி  10

ஏலக்காய்த்தூள்  சிறிதளவு

தண்ணீர்  ஒரு கப்

நெய்  2 டீஸ்பூன்

உலர்திராட்சை (கிஸ்மிஸ்)  6 

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், வெறும் வாணலியில் கசகசாவைச் சேர்த்து நிறம் மாற வறுத்து ஆற வைக்கவும். சூடு ஆறியதும், கசகசாவுடன் தேங்காய்த்துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கனமான அடி பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வெல்லப்பாகுடன் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர்திராட்சை சேர்த்து லேசாக வறுத்து பாயசத்துடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். 


p67c.jpg

கோல்பப்டி 

தேவையானவை:

கோதுமை மாவு  அரை கப்

பொடித்த வெல்லம்  கால் கப்

கசகசா  அரை டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள்  கால் டீஸ்பூன்

நெய்  தேவையான அளவு 

செய்முறை:

நெய் தடவிய தட்டில் கசகசாவைத் தூவி வைக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி சூடானதும், கோதுமை மாவைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கவும். இத்துடன் பொடித்த வெல்லம் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். வெல்லம், கோதுமை மாவின் சூட்டில் உருகியதும், மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். இதனை நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சூடு ஆறும் முன்பு துண்டுகள் போட்டு ஆறியதும் எடுத்துப் பரிமாறவும்.


p67d.jpg

மைசூர்பாகு 

தேவையானவை:

கடலை மாவு  ஒன்றரை கப்

சர்க்கரை  2 கப்

தண்ணீர்  அரை கப்

நெய்  அரை கப்

எண்ணெய்  ஒன்றரை கப் 

செய்முறை:

கடலை மாவை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டிப் பரப்பவும். அடுப்பில் வாணலியை வைத்து 5 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இதை கடலைமாவில் ஊற்றி கட்டி விழாமல் கிளறி மாவை சலித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, சூடானதும் சலித்த மாவை சேர்க்கவும். மிதமான தீயில் அடிக்கடி கிளறிவிட்டுக்கொண்டே இருக்கவும். கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, கம்பி பதத்துக்கு பாகு காய்ச்சவும். தீயை மிதமாக்கி, பாகில் வறுத்த கடலைமாவை சிறிதுசிறிதாகச் சேர்த்து கட்டி விழாதவாறு கிளறவும். இத்துடன் சிறிதுசிறிதாக சூடான நெய்யைச் சேர்த்துக் கிளறவும். நெய்யைச் சேர்த்தவுடன் மாவு சிறுசிறு குமிழ்கள் மாவுக்கலவையிலிருந்து மேலே வரும். பதற வேண்டாம். நெய் கலவையை முழுமையாகச் சேர்த்துக் கிளறவும். பிறகு நெய் தடவிய ஒரு தட்டில் மாவைக் கொட்டி கத்தியால் துண்டுகள் போட்டுப் பரிமாறவும். 


p67e.jpg

ஆப்பிள் அல்வா 

தேவையானவை:

ஆப்பிள்  3 (துருவியது)

நெய்  தேவையான அளவு

கேசரி பவுடர்  ஒரு டீஸ்பூன்

காய்ச்சிய பால்  2 டேபிள்ஸ்பூன்

பால் பவுடர்  150 கிராம்

சர்க்கரை  150 கிராம்

முந்திரி  10 

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், ஆப்பிள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கவும். ஆப்பிள் நெய்யில் வதங்கியதும் சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து கலவை ஒன்றாகும்வரை நன்கு கிளறவும். பாலில் கேசரி பவுடர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும். பிறகு நெய் ஊற்றி, கலவை வாணலியில் ஒட்டாத பதம் வரும்வரை தொடர்ந்து கிளறவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, நெய்யில் முந்திரியைச் சேர்த்து வறுத்து அல்வாவில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.


p67f.jpg

கேரட் பர்பி 

தேவையானவை:

துருவிய கேரட்  ஒன்றே கால் கப்

துருவிய தேங்காய்  ஒரு கப்

சர்க்கரை  இரண்டே கால் கப்

நெய்  4 டேபிள்ஸ்பூன்

ஏலக்காய்த்தூள்  ஒரு டீஸ்பூன்

பாதாம்  5

முந்திரி  5 

செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன் நெய் ஊற்றி துருவிய தேங்காய் மற்றும் கேரட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கேரட் வெந்து கலவை ஒன்று சேர்ந்து வாணலியில் ஒட்டாமல் வரும்வரை கிளறவும். இறுதியாக, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, கலவை சுருண்டு வந்ததும் இறக்கவும். பிறகு, மீதமிருக்கும் நெய்யை தட்டில் தடவி, பர்பி கலவையைச் சேர்த்து ஆறும் முன்பே துண்டுகள் போடவும். பர்பி மீது முந்திரி, பாதாம் வைத்து அலங்கரிக்கவும். விருப்பப்பட்டால் முந்திரி, பாதாமை நெய்யில் வறுத்து பர்பி மீது வைத்து பரிமாறவும்.


p67g.jpg

பாம்பே அல்வா 

தேவையானவை:

சோள மாவு  அரை கப்

சர்க்கரை  ஒன்றரை கப்

தண்ணீர்  2 கப்

கேசரி பவுடர்  சிறிதளவு

முந்திரி  50 கிராம்

ஏலக்காய்த்தூள்  சிறிதளவு

நெய்  4 டீஸ்பூன் 

செய்முறை:

மைக்ரோவேவ் அவனுக்கான பவுலில் சோள மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தண்ணீர், கேசரி பவுடர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து. மைக்ரோவேவ் அவனில் அதிகப்படியான சூட்டில் 6 நிமிடம் வைக்கவும். பிறகு அல்வா கலவையை ஒரு முறை கிளறி, மீண்டும் 4 நிமிடம் வைக்கவும். மீண்டும் கலவையைக் கிளறி அவனில் மேலும் 6 நிமிடம் வைக்கவும். 2 நிமிடத்துக்கு ஒருமுறை கலவையைக் கிளறிவிட்டு பிறகு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரியை அல்வா கலவையுடன் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் அவனில் வைக்கவும். நெய் தடவிய தட்டில் அல்வா கலவையைக் கொட்டி, ஆற விடவும். பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும். 

Link to comment
Share on other sites

முட்டைப் பணியாரம் : செய்முறைகளுடன்...

 

 

paneyaram.jpg


தேவையான பொருட்கள் :

  • இட்லி மாவு - ஒரு கப்
  • முட்டை - 2
  • சின்ன வெங்காயம் - 25 கிராம்
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி


செய்முறை :
*வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். 

* பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.

* அடித்த முட்டையை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். 

* பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

* வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

* குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.

* பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

* முட்டைப் பணியாரம் தயார்.

Link to comment
Share on other sites

p35g.jpg

இறால் முருங்கைக்கீரைப் பொரியல் 

தேவையானவை:

இறால்  100 கிராம் (சுத்தம் செய்தது)

முருங்கைக்கீரை  ஒரு கப்

சின்னவெங்காயம்  15 (நீளவாக்கில் நறுக்கவும்)

காய்ந்த மிளகாய்  2

எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்

தேங்காய்த்துருவல்  5 டீஸ்பூன்

உப்பு  தேவையான அளவு

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன் 

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாயைக் கிள்ளி போட்டுத் தாளித்து சின்னவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக்கும்போதே முருங்கைக்கீரையும் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவுக்கு தண்ணீர் தெளித்து, 10 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வைக்கவும். இடையில் மூடியைத் திறந்து, இறால் கலவையை ஒரு முறை புரட்டி விடவும். பிறகு நன்கு வெந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கினால், இறால் கீரைப் பொரியல் தயார்.

குறிப்பு:

இறாலுடன் சுரைக்காய், கொத்தவரங்காய் சேர்த்தும் இதே போல செய்தால் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

p113f.jpg 

ஜவ்வரிசி கார தோசை 

தேவையானவை:

இட்லி அரிசி  அரைக்கிலோ

உளுந்து  100 கிராம்

காய்ந்த மிளகாய்  5

உப்பு  தேவையான அளவு

சோம்பு  அரை டீஸ்பூன்

சீரகம்  அரை டீஸ்பூன்

மிளகு  ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்  2

பொடியாக நறுக்கிய இஞ்சி  ஒரு துண்டு

எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை:

ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் இந்த மாவுடன் கலந்து சூடான தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்துப் பரிமாறவும்.

Link to comment
Share on other sites

p35h.jpg

இறால் குழி ஆம்லெட் 

தேவையானவை:

இறால்  100 கிராம்

  (சுத்தம் செய்தது)

முட்டை  3

சின்னவெங்காயம்  15

பச்சை மிளகாய்  6

உப்பு  தேவையான அளவு

மஞ்சள் தூள்  அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன்

இஞ்சிபூண்டு பேஸ்ட்  அரை டீஸ்பூன்

எண்ணெய்  தேவையான அளவு 

செய்முறை:

சுத்தம் செய்த இறாலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், இஞ்சிபூண்டு பேஸ்ட், உப்பு சிறிது சேர்த்து புரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும். இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். பிறகு, ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு ஊற வைத்துள்ள இறால் கலவையைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது நேரம் வதக்கினால், இறாலில் உள்ள நீர்  பிரிந்து நன்றாக வெந்து வரும். இப்போது இறாலை முட்டைக்கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு தாளிப்புக் கரண்டி அல்லது ஆழமான குழிக்கரண்டியை அடுப்பில் வைத்து குழியில் எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டை, இறால் கலவையை குழியில் ஊற்றி அடுப்பைக் குறைத்து வேகவிடவும். பிறகு பணியார குச்சியால் ஆம்லேட்டை மறுபுறம் கவனமாக, திருப்பி விட்டு வேகவிடவும். விருப்பப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.