Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு வீர வணக்க நாள்!

Featured Replies

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு வீர வணக்க நாள்!

 

2010ம் ஆண்டு தை மாதம் 6ம் திகதி மா தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார்

ஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மா தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது.

யுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செல்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது

வார்த்தைக்கு வார்த்தை மனித உரிமையை உச்சரிக்கும் வல்லரசு நாடுகளும் சர்வதேச நாடுகள் அதை கண்டும் காணாமல் மௌனம் சாதித்தது.

உண்மையிலே உலக நாடுகள் சுயநலம் அற்று நேர்த்தியாக செயல்பட்டிருந்தால் மா தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மட்டும் அல்ல எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருந்திருக்கலாம்.

அன்பான எம் உறவுகளே!!

எம் தேசத்துக்காகவும் எம் இனம் வாழவும் எத்தனை எம் உயிருக்கும் மேலான உயிர்கள் தம் உயிரை அர்ப்பணித்தார்கள். இவர்கள் எம் இனம் வாழ தியாகம் செய்தவர்கள் அல்லவா…. எம் உறவுகளுக்காய் உயிர் கொடுத்தவர்கள் அல்லவா….

இவ் மாவீரர்களையும் மக்களையும் நாம் எப்படி மறக்க முடியும்?……இல்லை மறக்க முடியாது. கடைசி தமிழன் ஒருவனாக இவ்வுலகில் நாம் வாழ்ந்தாலும் நாம் மறவோம். ஒரு நாளும் எம் தேசத்தின் மூச்சுக்களை!!!

ஆம் அன்பான தமிழீழ உறவுகளே! நாம் அனைவரும் எப்பொழுதும் எமக்காக தம் உயிரை அர்ப்பணித்து தமிழ் ஈழ கனவுடன் கல்லறைக்குள் கண்மூடி விழித்திருக்கும் எம் தேச வீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மக்களையும் நினைவுகூருவோம்.

ஒரு குடும்பத்துக்காக வாழ்ந்து தம் உயிரை காலத்தின் கோலத்தால் அர்ப்பணித்த எம் பெற்றோர்களை, பிள்ளைகளை நாம் உயிர்வாழும் வரைக்கும் எப்படி மறக்காமல் வருடாந்தம் நினைவு கூறுகிறோமோ அதைவிட எம் தேச விடுதலைக்காய் மக்களுக்காய் தம் உயிரை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.

ஆக குறைந்தது எமது நேரத்தையாவது அர்ப்பணித்து அஞ்சலி செலுத்துவோம் என இந்நாளில் உறுதி எடுப்போமாக.

http://www.puthinamnews.com/wp-content/uploads/2016/01/appa.jpg

http://www.whathits.com/puthinamnews

 

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்திற்கு ஒரு தலைவனை தந்து மறைந்தவருக்குச் சிரம்தாழ்த்தி அஞ்சலிகள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தானைத் தலைவனை தந்த தந்தைக்கு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.