Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுகிறார். இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
0sambanthan-and-mahinda_CI.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோரிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் இந்த சபையில் தற்போது இல்லை எனவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் தற்போது நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும், அவரின் ஒத்துழைப்பு இந்த நாட்டு மக்களுக்கு தேவையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயத்தில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmuyBSWSWip0C.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(2ம் இணைப்பு)

சுயாட்சிக் கோரிக்கையை கைவிட்ட சம்பந்தன்

வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்புக்கான விவாதத்தின் போது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன், அனைத்து சமூகங்களும் ஏற்கக்கூடிய தீர்வுவொன்றை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்காவை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வுதான் சிறந்தது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரது அணியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

நீண்ட உரையாற்றிய சம்பந்தன், புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளில் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என தனது உரையில் வலியுறுத்தவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளக சுயநிர்ணய உரிமை என்றோ அல்லது தமிழர்களின் இறமையையும் வடக்கு கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசம் என்பதையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற எந்தவொரு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் சம்பந்தன் தனது உரையில் வெளிப்படுத்தவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/show-RUmuyBSWSWip0C.html

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழரசு said:

(2ம் இணைப்பு)

சுயாட்சிக் கோரிக்கையை கைவிட்ட சம்பந்தன்

வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/show-RUmuyBSWSWip0C.html

76 இல் தந்தை செல்வா அவர்கள் தலைமையில் அனைத்துத் தமிழ்க்கட்சிகளும் முன்வைத்த கோரிக்கையே தனித் தமிழீழக் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை வைத்தே சம்பந்தர் அவர்களும் பாராளுமன்றத்திற்குச் சென்றார்.
அந்தக் கோரிக்கையைக் கைவிடும் நிலைமை கூட்டமைப்பினருக்கோ அல்லது தனிப்பட்ட வகையில் சம்பந்தருக்கோ இருக்கலாம்.

மக்கள் தனி நாட்டுக்கோரிக்கையைக் கைவிட்டதாகக் கூறுவதற்கு
சம்பந்தருக்கு எந்த உரிமையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாத்தியார் said:

தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டதாகக் கூறுவதற்கு சம்பந்தருக்கோ அல்லது வேறு எவருக்குமோ எவ்வித உரிமையும் இல்லை. (இறுதிக் காலங்களில் நடந்த துன்பியல் சம்பவங்களைத் தவிர்த்துப் பார்க்கும்போது) விடுதலைப் புலிகளுக்கு மக்கள் ஆதரவு கொடுத்ததன் பின்புலம் அவர்கள் மற்றைய இயக்கங்களைப் போலன்றி கொள்கையில் உறுதியாக இருந்ததே ஆகும். தற்போதைய நிலையில் கிடைப்பதை எடுத்துக்கொண்டு தாயகத்தில் வாழுகின்ற மக்களைக் கட்டியெழுப்பவேண்டிய தேவை இருக்கின்றது, அதற்காகத் தற்போது சில சமரசங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தாலும் தமிழர்களின் நீண்டகால வாஞ்சையான தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவேண்டியது இல்லை. ஆனால் இப்போது இலங்கையைப் பிரிப்பதற்கு சந்தபமே இல்லை. கிடைப்பதை ஏற்றுக்கொண்டு எம்மை உறுதிப்படுத்திக்கொண்டு முன்னேறுவதே சிறந்தது. ஏனெனில் பேரம்பேசும் வலு இன்று எம்மிடம் இல்லை. எமக்காக பேசுவதற்கும் எவருமில்லை. 

5 hours ago, வாலி said:

எல்லா வகைகளிலும் பாதிக்கப்பட்டு நலிந்து போன எமது சமூகம் மீழ கட்டப்படவேண்டும்.

தமிழ் ஈழத்தின் முடிவு எதிர்காலத்தின் கைகளில். இப்போது தேவைகளை புறந்தள்ளுவதால் ஈழத்துக்கான அடிப்படைகளே இல்லாமல் போகும் சாத்தியமே அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இல்லையப்பா... மகிந்த ராஜபக்ச.. சொறீலங்காவின் தேசிய தலைவர். அப்ப உவர் யார்...??! ஓ... எதிர்கட்சி தலைவரில்ல.

ஐயா சிவஞானம் எங்க... அவரைக் கேட்டால் தான் இவர் யார் என்று சொல்லுவார். அதுவரைக்கும்.. இவருக்கு தான் யார் என்ற நிலையே திடமா இல்லை. இதுக்க மகிந்தவுக்கு இவர் வசனம் எழுதிறார்.

அது சரி.. சம் சும் குடுகுடுப்பை கும்பலுக்கு வால் பிடிக்கிறவை.. மகிந்தவை கலைச்ச மகத்தான தலைவர் சம் சும் என்று கொண்டு திரிஞ்சிச்சினம்.. இப்ப இதுக்கு என்ன சொல்லப் போகினம்.

தலைவர் வாய்ஸ மாத்தின மாதிரி.. அவையும் மாத்திடுவினம். இதெல்லாம் எங்களுக்கு என்ன புதிசா பின்ன.

மகிந்த தேசிய தலைவர் என்றால்... விமல் வீரவன்ச.. என்னவாம். அந்தாள் நினைச்சாலும் எதிர்கட்சி தலைவர் பதவி பறியோடும் சம்பந்தர். அவரையும் தாஜா பண்ணி வைக்கவும். tw_blush:

மகிந்த ஒன்றும்.. இவரை மாதிரி இல்லை. குறைஞ்சது... அந்தாள்.. 1987 இல் இருந்து ஒரே கொள்கையோடு தான் இருக்குது. அது தெரியாமல் அரசியலுக்கு வந்தது சம்பந்தரின் பிழை பாருங்கோ. tw_blush:

எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள தமிழனை.. உள்ளதையும் பறிச்சு இடிச்ச புளியாக்காமல் விடமாட்டினம்.. சம் சும் குடுகுடுப்பைக் காரர்கள்..! இதுக்கு எவ்வளவு சீனப் போடுறாமங்கள். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.