Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!

Featured Replies

மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
 
மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ். மருத்துவ பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றிணைந்து யாழில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.
 
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி அரசால் வழங்கப்படவுள்ளது. இச்செயற்பாடானது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட  மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.
 
மேலும் தனியார் பல்கலைக்கழகங்களுகான அனுமதி அரசால் வழங்கப்பட்டால் வைத்தியத்துறையில் மக்களுக்கு உள்ள நம்பிக்கையையும் நலிவடையச் செய்யும். இதுமட்டுமல்லாமல் இதுவரை காலமும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் பயிற்சிக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.
 
இதேபோன்று தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துறையில் கற்பவர்களுக்கும் அரசாங்க வைத்தியசாலையில், பயிற்சிக்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் தனியார் மருத்துவத் துறைக்குள் உள்ளீர்க்கப்படவுள்ளவர்கள் பொதுப் பரீட்சை இல்லாமல் உள்ளீர்க்கப்படவுள்ளனர். உயர்தரப்பரீட்சையில் வெறுமனே சி.எஸ் சித்தி பெற்றவர்கள் கூட தனியார் துறைக்குள் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் 3பி பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். இனிவரும் காலங்களில் பணம் உள்ளவர்கள் இலகுவாக கல்வியை கற்றுச் செல்லலாம் என்ற நிலை உருவாக்கப்படப் போகின்றது.
 
தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியானது அரச பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும். வைத்திய சேவையில் மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பும் இல்லாமல் ஆக்கப்படவுள்ளது. 
 
இதனால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என அரசுக்கு மருத்துவ பீட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் மருத்துவ பீட 7 பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் காலை யாழ். மருத்துவ பீடத்தில் ஒன்றிணைந்து பலாலி வீதியூடாக யாழ்.போதனா வைத்தியசாலை வரை சென்றமை குறிப்பிடத்தக்கது.
 
                                                  1452660254_strike1.jpg
 
                                                  1452660270_strike2.jpg
 
                                                  1452660288_strike3.jpg
 
                                                  1452660313_strike4.jpg
 
                                                  1452660334_strike5.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.. விளங்கின மாதிரித்தான். பல்கலைக்கழகம் போவது சமூக அந்தஸ்து என்ற நிலையில் இருந்து.. எல்லோருக்கும் பல்கலைக்கழகக் கல்வி என்ற சிந்தனையோட்டம் சொறீலங்காவில் வளராட்டி.. அது முன்னேற வாய்ப்பே இல்லை. :rolleyes:

250,000 சோதனை எழுதி.. 150,000 பல்கலைக்கழகம் போக தகுதி பெற்று.. 50,000 பல்கலைக்கழகம் போக.. அதில் 5000 மருத்துவப் படிப்பு படிச்சால் தான் எங்களுக்குப் பெருமை.

6000 பேருக்கு ஒரு டாக்குத்தர் என்று இருந்தால் தான் நமக்கு ஊருக்க பெருமை.

வெட்டிப் பசங்களா.. சிந்திக்கவே மாட்டியளாடா..?!

அவன் அவன் 10 பேருக்கு ஒரு டாக்குத்தர் வேணும் என்று நாட்டை மக்களின் சுகவாழ்வை பற்றி யோசிக்கிறான்.. நீங்கள்.. நாங்க 5000 பேர் தான் படிக்கனும் மருத்துவம் மிச்சம் பேர் எங்களை விட மக்குக் கூட்டம் என்று இப்பவும் அந்த பிற்போக்கான மொக்குத்தனத்தில் இருக்க விளைகிறீர்களே. அதற்குள் மாணவ சமூகத்தை கட்டி வைச்சிருக்க நினைக்கிறியளே அது தாண்டா காலத்துக்கு உதவாத சிந்தனை.

அரச நியமங்களோடு.. எதிர்கால மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்.. எல்லாக் கல்வியும் தனியார் மயமாவதோடு.. 150,000 பேரும் பட்டம் பெற வாய்ப்பளிக்க வேண்டும். பாசாகதவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும்.

சும்மா சொறீலங்கா சிங்கப்பூர் ஆகனுன்னு நினைச்சால் மட்டும் போதாது சிங்கப்பூர் ஆகிற வழியைப் பற்றி நடக்கனும் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுங்ஸ் எனக்கு இதைபற்றி கொஞ்சம் விளங்கப்ப‌டுத்துங்கள்.
இதில் என்னபிழை என்று?

இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் உள்ளது என நம்புகின்றேன்.

இலங்கை போன்ற ஓர் சிறிய நாட்டில் தனியார் பல்கலைகழகம் உருவாக்கப்பட கூடாது. (மேலும் கல்வி தனியார்மயப்படுத்தல் கூடாது) இதனால், வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர வேறொன்ரும் ஆகாது. மேலும் இவர்களினது தரம் மிகவும் குறைவாக இருக்கும். பணம் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாமல் படித்து வைத்தியாரக இருப்பார்கள்.

சும்மாவே இவர்கள் எல்லோரும் வசூல் ராஜா எம்.பீ.பீ.எஸ் கள்
டெர்டன்ஸ், நவலோகா எல்லாம் போய் பாருங்கள் தெரியும் இவர்கள் கொள்ளையடிப்பது.  இன்றுவரை இவர்களிடம் ஒரு சரியான விலைப்பட்டியல் இல்லை. தான் நினைத்த கட்டணத்தை அறவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, colomban said:

நெடுங்ஸ் எனக்கு இதைபற்றி கொஞ்சம் விளங்கப்ப‌டுத்துங்கள்.
இதில் என்னபிழை என்று?

இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் உள்ளது என நம்புகின்றேன்.

இலங்கை போன்ற ஓர் சிறிய நாட்டில் தனியார் பல்கலைகழகம் உருவாக்கப்பட கூடாது. (மேலும் கல்வி தனியார்மயப்படுத்தல் கூடாது) இதனால், வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர வேறொன்ரும் ஆகாது. மேலும் இவர்களினது தரம் மிகவும் குறைவாக இருக்கும். பணம் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாமல் படித்து வைத்தியாரக இருப்பார்கள்.

சும்மாவே இவர்கள் எல்லோரும் வசூல் ராஜா எம்.பீ.பீ.எஸ் கள்
டெர்டன்ஸ், நவலோகா எல்லாம் போய் பாருங்கள் தெரியும் இவர்கள் கொள்ளையடிப்பது.  இன்றுவரை இவர்களிடம் ஒரு சரியான விலைப்பட்டியல் இல்லை. தான் நினைத்த கட்டணத்தை அறவிடுவார்கள்.

இந்த எதிர்ப்பு அநாவசியமானது..

1. தனியார் பல்கலைக்கழகங்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு எதிராக வரவில்லை.

2. பல்கலைக்கழகம் போக தகுதி பெறும் மாணவர்களில் 70% பேர் பல்கலைக்கழகம் போக வழியின்றி உள்ளனர். அவர்களுக்கு கல்வி பெற வசதி அளிக்கப்பட வேண்டும். அதற்கு தனியார் பல்கலைக்கழகங்களில் படிக்க அரசு நிதி மானிய உதவியும் செய்ய வேண்டும்.

3. ஒரு தேசம் வளரனும் என்றால் நல்ல கல்விச் சமூகம் தேவை. முதன்மையான வைத்தியசேவை அவசியம். இதற்கு தனியார் பல்கலைக்கழகங்களின் தரமான வருகை அவசியம்.

4. இப்போதும் 3 சி.. 2சி 1 எஸ் எடுக்கிற ஆக்களும் மருத்துவ பீடங்களில் பிந்தங்கிய இடங்களில் இருந்து போய் படிச்சு.. பல்கலையில் சிறந்து விளங்குவதை காண முடிகிறது. ஆகவே ஒரு போட்டிப் பரீட்சை அடிப்படையில்.. ஏ எடுத்தவை தான் டாக்டர் ஆக முடியும் என்பது முழு முட்டாள் தனமான நடைமுறை யதார்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாத ஒரு கூச்சல்.

5. இப்பவும் வசதி உள்ள பெற்றோர் தங்களின் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி மருத்துவப்படிப்பு படிக்க வைக்கினம். அவர்கள் இலங்கை திரும்பி மருத்துவ சேவை செய்ய வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதற்குரிய பரீட்சைகளில் சித்தியடையும் பட்சத்தில். அந்த நடைமுறையை சொந்த மண்ணில் பின்பற்றினால் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தரமான மருத்துவக் கல்வியை பெறலாம்.. அது சமூகத்தின் வைத்திய சேவையை விரிவுபடுத்த மக்களின் வைத்திய நலனை உயர்தரத்தில் வைத்திருக்க உதவலாம்.

6. தற்போது அரச செலவில் கல்வி கற்கும் பலர் படிப்பு முடிந்ததும் வெளிநாடுகளுக்கு ஓடி விடுகிறார்கள். இதனால் உள் நாட்டில் 6000 பேருக்கு ஒரு மருத்துவர் என்பது சிறிய நாடோ பெரிய நாடோ மக்களின் சனத்தொகை அடர்த்திக்கு ஏற்ப நல்ல தேக ஆரோக்கியத்தை பேண போதுமானதல்ல.. இதனை இவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

7. மருத்துவக் கல்வி ஒரு சேவைக் கல்வி. அது சமூக அந்தஸ்துக் கல்வியே அல்ல. அதனை சமூக அந்தஸ்துக் கல்வியாகப் பார்க்கும் வழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.

8. மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது சமூகத்தில் நோய்களின் தாக்கத்தை குறைக்கும். ஆரோக்கியமான சமூகம் நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கியம்.

9. தனியார் பல்கலைக்கழகங்கள் வெறுமனவே மருத்துக் கல்வி அன்றி எல்லா கல்வியும் அளிக்கும். அந்த வகையில் ஒரு அறிவுசார் சமூகமா இலங்கைச் சமூகம் மாறும். தொழில்வாய்ப்புக்களை அது கொண்டு வரும். அது நாட்டின் அபிவிருத்திக்கு மிக முக்கியம்.

10. தனியார் பல்கலைக்கழகங்களின் வருகை அரச பல்கலைக்கழகங்களுக்கு போட்டி போடும் சூழலை உருவாக்கும். அது பல்கலைக்கழகங்களின் தரத்தை அதிகரிக்க உதவும். இன்று உலக அளவில் எங்கோ மூலைக்குள் கிடக்கும் இலங்கைப் பல்கலைக்கழகங்களை உலக அளவில் ஓரளவு நடுத்தர நிலைக்காவது கொண்டு வர உதவும். அது இலங்கையின் கல்வித்தரத்தை உயர்த்தவும் உதவும்.

Edited by nedukkalapoovan

இன்று உலகெங்கும் தனியார் கல்விமயமாதல் அதிகரித்திருக்கிறது. அதனால் நன்மைகள்தான் அதிகம். இந்த ஆர்ப்பாட்டம் விளங்காத் தன்மையால் மட்டுமல்ல யாராலோ மாணவர்கள் தூண்டப்பட்டுள்ளார்கள் என்பதையும் தெரிவிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 1/13/2016 at 1:46 PM, colomban said:

நெடுங்ஸ் எனக்கு இதைபற்றி கொஞ்சம் விளங்கப்ப‌டுத்துங்கள்.
இதில் என்னபிழை என்று?

இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் உள்ளது என நம்புகின்றேன்.

இலங்கை போன்ற ஓர் சிறிய நாட்டில் தனியார் பல்கலைகழகம் உருவாக்கப்பட கூடாது. (மேலும் கல்வி தனியார்மயப்படுத்தல் கூடாது) இதனால், வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமே தவிர வேறொன்ரும் ஆகாது. மேலும் இவர்களினது தரம் மிகவும் குறைவாக இருக்கும். பணம் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்றும் தெரியாமல் படித்து வைத்தியாரக இருப்பார்கள்.

சும்மாவே இவர்கள் எல்லோரும் வசூல் ராஜா எம்.பீ.பீ.எஸ் கள்
டெர்டன்ஸ், நவலோகா எல்லாம் போய் பாருங்கள் தெரியும் இவர்கள் கொள்ளையடிப்பது.  இன்றுவரை இவர்களிடம் ஒரு சரியான விலைப்பட்டியல் இல்லை. தான் நினைத்த கட்டணத்தை அறவிடுவார்கள்.

கொழும்பான் அண்ணை 
இலங்கை சின்னஞ்சிறிய நாடுதான் ......ஆனால் உயர்தர  போட்டி பரிட்ச்சையின் வருவிளைவு எவ்வளவு அபாயகரமானது என்று தெரியுமா .....ஒரு மாணவன் எவ்வளவு சீரிய மாணவனாக இருந்தாலும் ...ஆரம்பக்கல்வி முதல் உயர்தரம் வரை முழு நோக்கத்துடன் கற்றாலும் போட்டிபரிட்சையில் தவறவிட்டால் ....மேற்கொண்டு நகரமுடியாத எதிர்காலமே இருண்டுவிட்ட ஒரு உறை நிலைக்கே சென்றுவிடுவான் ....இப்படியான ஒரு சமூகமே இலங்கையில் உருவாகிவிட்டது ......எல்லோருமே 3A எடுத்தாலும் அதிலும் மாவட்டதிட்கேற்ப Z-Score கூடிய  20-30 பேரே பல்கலைகழகம் செல்ல முடியும். தவறவிடுபவர்களுக்கு தகுந்த வழிகாட்டக்கூடிய எந்த உட்கட்டமைப்பும்  இங்கே இருக்கவில்லை....தனியார் ஆரம்பிக்கப்பட்ட பிறகே இவர்கள் எல்லாம் ஒரு பட்டத்தை பெறக்கூடியதாக உள்ளது....நான் மென்பொருள் துறையில் பணி புரிபவன் என்ற அடிப்படையில் சமீப காலமாக அரச பல்கலை மாணவர்களை விட தனியார் மாணவர்கள் எல்லா மதிப்பீடுகளிலும் குறிப்பாக ஆங்கிலம் உட்பட சிறந்தவர்களாக உள்ளார்கள் ...காரணம் தனியாரின் கல்லூரிகளின் போட்டித்தன்மை அதிகரிப்பின் காரணமாக அவர்களது பாடத்திட்டங்களும் உயர் தரம் வாய்ந்ததாக உள்ளது, வெளிநாட்டு விரிவுரையாளர்களை கொண்டு வந்தும் இன்னும் பல புதிய முதலீடுகளை செய்தும் பட்டாதாரிகள் உருவாக்கப்படுவதால் இவர்கள் சமீப காலமாக அரச பல்கலை மாணவர்களை விட வினைத்திறனுடையவர்களாக உள்ளனர் .

உதாரணமாக ......என்னுடைய காலத்தில் அரச பல்கலை  கணணி  விஞ்ஞானம் கிடைத்து பட்டம் பெற்ற ஒருவர் ....இன்றுவரை அவருக்கு பொருத்தமான வேலை அமையாது சாதாரண ஆசிரியர் தொழில் செய்கிறார் (அவருக்கு நான் வாய்ப்பு ஏற்படுத்திகொடுத்தும் அவரால் பிரகாசிக்க முடியவில்லை என்பது வேறு கதை)   ,அத்துடன் நேர்முகத்தேர்வுகளில் தனியார் மாணவர்களுடன் போராட முடியாமல் பல்பு வாங்குகின்றனர் 

இன்னுமொரு எண்ணம் ...பல்கலைகழகம் போனால் எப்படியும் படிக்கலாம் என்று அடக்கி வைத்திருந்த அவ்வளவற்றையும் கொட்டுவது ...விளைவு சிறந்த குடிமக்களாக வெளியில் வருவதுடன் ஏகப்பட்ட ரிப்பீட்டுகள் , வகுப்புகளற்ற சாதாரண தர பட்டம் (ஜெனரல் டிகிரி)...

இந்த மாணவர்களுடைய பிரச்சினை தாங்கள் மட்டும் வைத்தியர் ஆகவேண்டும் ....தாங்கள் மட்டும் வசூலிஸ்ட்கள் ஆகவேண்டும் என்பது மட்டுமே
இன்னும் இலங்கையில் வைத்தியர்கள்  குறைபாடு கணிசமான அளவில் தானே உள்ளது ....தனியார் கல்லூரிகளையும் உரிய வகையில் அரச மேற்பார்வையுடன் நிர்வகித்தால் திறமையான சிறந்த  வைத்தியர்களை  உருவாக்க முடியும் ,,,,இவர்கள் தான் இலவச சுகாதார சேவை இன்று பணம் புரளும் பிசினசாக காரணம் ....இலவச கல்வி கற்றவர்கள் இலவசமாகவா சேவை செய்கிறார்கள் ...அரச வைத்தியர் அரச கரும நேரத்தில் (Duty Time) இல் பிரைவேட் நேர்சிங் ஹோமில நிக்கிறார்...மக்கள் அவருக்காக அரச வைத்தியசாலையில்  கியுவில நிக்கினம்  ...அதுக்கு மட்டும் இவிங்களுக்கு தனியார் வேண்டும் ...இன்னும்சிலது அரச வைத்தியசாலையில் வைத்து   பிரைவட்டுக்கு வாங்கோ என்று சொல்லி தங்கட பிரைவட் நேர்சிங் ஹோம் விலாசத்தையும் கொடுத்துவிடுகினம்....இதுக்கு பெயர் தான் மக்கள் சேவையா  

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கவலை என்னவென்றால் இலங்கை போன்றதோர் ஊழ‌ல் மிக்கதோர் நாட்டில். இது எந்தளவு சாத்தியப்படும் என்பதுதான் தனியார் பல்கலைகழ‌கம் ஊடாக‌ பணம் இருந்தால் படிக்காமல் சான்றிதல் கூட பெறாலாம்.

இந்தியாவில் எல்லோருக்கும் டிகிரி இருக்க காரணம் இதுதான்.
 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்னவாம் கொழும்பான். ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் இருந்து கள்ள டிகிரியோட படிக்க வந்து இங்கிலாந்தில் வைச்சுப் புடிபட்ட ஆக்களும் இருக்கினம்.

கள்ள டிகிரியை கட்டுப்படுத்த வேண்டியது அரச சட்ட திட்டங்களே அன்றி.. தனியார் கல்விக்கூடங்கள் அல்ல. சட்டத்தை சரிவர இயற்றி அதை பக்கச் சார்பின்றி அமுல்படுத்தினால்.. உந்தப் பிரச்சனை இல்லையே. மேலும் தனியார் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு சேர்ந்து இயங்குவதால்.. அவைட டிகிரியை சரி பார்ப்பது இலகு. உள் நாட்டு அரச பல்கலைக்கழக தில்லுமுல்லுகளை கண்டுபிடிப்பது கஸ்டம். எல்லாம் காதும் காதும் வைச்ச மாதிரி நடத்தி முடிச்சிடுவாங்கள். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.