Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பிரச்சினைகளை மோடியிடம் எடுத்துச் செல்வேன்! - இந்திய வெளிவிவகாரச் செயலாளர் உறுதி

Featured Replies

இந்திய வெளிவிவகார செயலாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்ஷங்கருடன் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார்.

TNA.jpg

இச் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. 

TNAf.jpg

http://www.virakesari.lk/article/1992

  • தொடங்கியவர்
வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் : ஜெய்சங்கர் உறுதி
 
வடக்கு மக்களின் பிரச்சினை மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் : ஜெய்சங்கர் உறுதி
போரால் நலிவுற்ற வடக்கு மக்களின் பிரச்சினைகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய வெளியுறவு செயலாளர் .ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
 
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில், இன்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
குறித்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வடக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கை, வடக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜெய்சங்கரிடம் சம்பந்தன் விளக்கியுள்ளார்.
 
கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் உடனிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நவீனன் said:

போரால் நலிவுற்ற வடக்கு மக்களின் பிரச்சினைகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய வெளியுறவு செயலாளர் .ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

மோடியே நேர வந்து பார்த்திட்டுப் போயும் ஒன்னும் மாறல்ல. இவர் போய் என்னத்தை கவனத்தில் கொண்டு வரப்போறாராம்..??! சம் சும் குடுகுடுப்பை கும்பல் கடைசிக் கோவணத்தையும் கழற்றிட்டு மகிந்தவை தேசிய தலைவராக்கிட்டு.. அம்மணமாக நிற்பதையா...?! tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வடக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கை, வடக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜெய்சங்கரிடம் சம்பந்தன் விளக்கியுள்ளார்.

ஒரு குஞ்சு குருவிக்கும் தெரியாத எங்கடை பிரச்சனையை நம்ம  எதிர்க்கட்சிதலைவர் சம்மந்தன் அவர்கள் சமுத்திராவில் வைத்து ஜெய்சங்கருக்கு தெரியப்படுத்தியமையையிட்டு மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றேன்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
போரால் நலிவுற்ற வடக்கு மக்களின் பிரச்சினைகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில், இன்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரால் நலிவுற்ற வடக்கு மக்களின் பிரச்சினைகள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில், இன்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பிலேயே ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல், வடக்கு மக்கள் எதிர்நோக்கும் காணி மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள், மீள்குடியேற்ற நடவடிக்கை, வடக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஜெய்சங்கரிடம் சம்பந்தன் விளக்கியுள்ளார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா விடுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் உடனிருந்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

sampanthan-met-jaishankar-130116-seithy%

sampanthan-met-jaishankar-130116-seithy%

http://www.seithy.com/breifNews.php?newsID=149206&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
Saim%20Sl.jpg
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.

உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பிரதானமாக அரசாங்கம் தயாரிக்க உள்ள உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இதனை தவிர 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டிய விடயங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக இந்திய வெளிவிவகார செயலாளர் இதன் போது கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹாவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/show-RUmuyBSXSWiq0B.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி காலத்திலிருந்து இந்தியாவின் பிரதமர் சகல‌ருக்கும் தமிழர்பிரச்சனையை எடுத்து சொல்லியினம் ஆனால் ஒருவரும் பிரச்சனையை தீர்த்தபாடவில்லை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.