Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'புதிய அரசியல் சாசனத்தால் பௌத்தம் பாதிக்கப்படாது' ரணில் உறுதி

Featured Replies

'புதிய அரசியல் சாசனத்தால் பௌத்தம் பாதிக்கப்படாது' ரணில் உறுதி

 

இலங்கையில் பௌத்த மதத்துக்கு எந்த பாதிப்புகளும் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் ஏற்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தெரிவித்தார்.

150818092338_ranil_wickremesinghe_624x35
புதிய அரசியல் சாசனத்துக்கு அனைத்து தரப்பு கருத்துக்களும் கேட்கப்படும் என்கிறார் ரணில்

நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் சாசனத்தின் மூலம் பௌத்த மதம் பாதிக்கப்படும் என சிலர் கூறிவந்த நிலையில், பிரதமரின் இந்த வாக்குறுதி வந்துள்ளது.

அதேபோல புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் ஆபத்துக்கள் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் கருத்துக்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினரும் கருத்துக்களும் உள்வாங்கப்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

151206162243_ranil_sambandan_624x351_get  உரிய நேரத்தின் தமது கருத்துக்கள் தெரிவிக்கப்படும் என சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்

நாட்டின் புதிய அரசியல் சாசனம் இயற்றப்படுவதில் பொதுமக்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

உலகளவில் முதல் முறையாக புதிய அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைக்கு, சமூக ஊடகங்கள் மூலமாக கருத்துக்கள் பெறப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பது என்பது தொடர்பில், தற்போதுள்ள அரசியல் சாசனத்தின் ஆறாவது திருத்ததுக்கு அமையவே புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/01/160117_ranil_constitution?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தமதம் தமிழர்களாலும் பாதிப்படையாது. அப்படிப் பாதிப்படைந்தாலும் தமிழர்களே அதனை மறுசீரமைத்துக் கொடுத்ததுதான் வரலாறு.

மொழியும் கலாச்சாரமுமே இங்கு பிரச்சனை.

ஒரு இனத்தின் மொழி, மத, கலாச்சாரங்களை இன்னொரு இனத்தைப் பின்பற்றுமாறு, வன்முறையாகவோ அன்றி மென்மையாகவேனும் கிடைத்த சந்தர்ப்பத்தைக் கொண்டு புகுத்துவது, பாதகமான நிலமைகளையே ஏற்படுத்தும். இதற்கு உதாரணமாக இன்று சிறீலங்காவைக் கொள்ளலாம். இந்தநிலை வெற்றிதருவதுபோல் தோற்றம் தந்து, அதன் செயல்கள் ஊக்குவிக்கப்பட்டு, அது ஊதிப்பருத்து எல்லைமீறி வெடிக்கும்போது எல்லாமே அழியும்.:shocked: :shocked:

நான் பௌத்த சிங்களவன்! ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கான சிறப்பு அந்தஸ்து உறுதிப்படுத்தப்படும் – ரணில்

“புதிய அரசியலமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்குரிய சிறப்பு அந்தஸ்து இல்லாமல் செய்யப்படுவதுடன் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படும் எனவும் சிலர் கூறுகின்றனர். ஒருவரும் நாட்டைப்பிரிக்க விரும்பவில்லை. நான் உட்பட எங்களில் பலர் பௌத்தர்கள். நான் சிங்களவன். எனக்கு இந்த நாட்டை ஒருமைப்படுத்தவேண்டிய தேவையுள்ளது, அரசியலமைப்புத்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும். பௌத்தமதமானது சிறப்பு அந்தஸ்தை இழக்கும் என்று கூறுபவர்களுக்காக பாராளுமன்றத்தில் நான் ஒரு விசேட அறிக்கை ஒன்றை சமர்பிப்பேன். பௌத்த மதத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்திருப்பதை அரசியலாக்க வேண்டாம் என சிறிய கட்சிகளிடம் வலியுறுத்துவேன்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இன்று காலை அலரி மாளிகையில் ஆற்றிய விஷேட உரையின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘1983 அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தம் சிறிலங்காவுக்குள் ஒரு தனி அலகு மாநிலம் அமைவதை ஏற்றுக்கொள்ளாது. அதன் வரையறைக்குள் நின்றே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். ‘

‘இதற்கு பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தமது ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைவரது யோசனைகளையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு முன்னோக்கிச் செல்ல நாம் தயாராகவே உள்ளோம். இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுடனும் வெவ்வேறாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். புதிய அரசியல் அமைப்பில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்களை இதன் பின்னர் தான் பொது மக்கள் கருத்துக்கள் ஊடாக தீர்மானிக்க வேண்டும்.’

‘தொலைநகல், ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படவுள்ளது. உலகில் முதல் தடவையாக இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அரசியலமைப்பை உருவாக்கும் நாடாக இலங்கை அமையப் போகின்றது.’ என்றார்.

http://thuliyam.com/?p=11192

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Paanch said:

பெளத்தமதம் தமிழர்களாலும் பாதிப்படையாது. அப்படிப் பாதிப்படைந்தாலும் தமிழர்களே அதனை மறுசீரமைத்துக் கொடுத்ததுதான் வரலாறு.

மொழியும் கலாச்சாரமுமே இங்கு பிரச்சனை.

ஒரு இனத்தின் மொழி, மத, கலாச்சாரங்களை இன்னொரு இனத்தைப் பின்பற்றுமாறு, வன்முறையாகவோ அன்றி மென்மையாகவேனும் கிடைத்த சந்தர்ப்பத்தைக் கொண்டு புகுத்துவது, பாதகமான நிலமைகளையே ஏற்படுத்தும். இதற்கு உதாரணமாக இன்று சிறீலங்காவைக் கொள்ளலாம். இந்தநிலை வெற்றிதருவதுபோல் தோற்றம் தந்து, அதன் செயல்கள் ஊக்குவிக்கப்பட்டு, அது ஊதிப்பருத்து எல்லைமீறி வெடிக்கும்போது எல்லாமே அழியும்.:shocked: :shocked:

அது...tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றையாட்சி அரசியலமைப்பே உருவாக்கப்படும் : பிரதமர் உறுதி!

நாட்டைப் பிளவுபடுத்தவோ, ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பை உருவாக்கவோ மாட்டோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று வெளியிட்ட சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

நாட்டின் அதியுச்ச அதிகாரங்களின் பிரதான உரிமையாளர்கள் பொது மக்களாவர். மக்களின் உரிமைகளுக்காகவே அரசியலமைப்பு தயாரிக்கப்படுகிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் முன்னெடுக்கப்படாத வகையில், சமூக வலைத்தளகளின் ஊடாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும்.

இதனூடாக அரசியலமைப்பின் தயாரிக்கும் போது இளைஞர்களின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன். இந்த நாட்டை பொறுப்பேற்க உள்ளவர்கள் தற்போதைய இளைஞர்களாகும். அவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் போது நாட்டை பிளவுபடுத்த முனைய போவதில்லை. ஒற்றையாட்சிக்கு உட்பட்டே அரசியலமைப்பைத் தயாரிப்போம்.  நான் ஒரு இலங்கையராகும்.

இந்த நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து தேசத்தை ஐக்கியப்படுத்துவற்கு எனக்கு அனைவரும் இடமளிக்க வேண்டும். நான் நாட்டை பிளவுப்படுத்துவற்கு ஒருபோதும் விடமாட்டேன்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரம் மேலோங்க செய்யப்பட்டது. ஆனால் நாம் அடுத்த முப்பது வருடங்களுக்கு நாட்டை நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வரவே முனைகின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் வீணான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம்.  எமது வேலைத்திட்டத்திற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெறுமனே குறுகிய சிந்தனைகளுக்கு வீதியிலிறங்கி போராடுபவர்களை அரசாங்கம் கண்டுக் கொள்ளாது.

21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றால் போல் அரசியலமைப்பு உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆகவே புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை மின்னஞ்சல், தொலைநகல், முகநூல்களினூடாக முன்வைக்க முடியும்.

தற்போதைக்கு வயோதிப நிலையிலுள்ளவர்களின் கருத்துக்களை வினவுவதற்காகவே வீடு வீடாக சென்று கருத்துக்களை கோருவதற்கு விசேட குழு  நிறுவப்பட்டுள்ளது. எனவே புதிய அரசியலமைப்பிற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

http://onlineuthayan.com/news/7061

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.