Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : அச்சம் என்பது
மடமையடா
{ அஞ்சாமை திராவிடர்
உடமையடா } (2)

ஆண் : ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது
கடமையடா } (2)

ஆண் : கனகவிஜயரின்
முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான்
சேர மகன் ஆஆ ஆஆ

ஆண் : இமய வரம்பினில்
மீன்கொடி ஏற்றி இசை பட
வாழ்ந்தான் பாண்டியனே

ஆண் : கருவினில் வளரும்
மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள்
தமிழன்னை ஆஆஆ

ஆண் : களங்கம் பிறந்தால்
பெற்றவள் மானம் காத்திட
எழுவான் அவள் பிள்ளை

ஆண் : { வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி மக்களின்
மனதில் நிற்பவர் யார் } (2)

ஆண் : மாபெரும் வீரர்
மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார் ........!

 

--- அச்சம் என்பது மடமையடா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ..........!

பெண் : பாயுமொளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை
வாழி நின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே
சூரையமுதே கண்ணம்மா…….

ஆண் : வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு
மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு

பெண் : வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
ஆண் : பானமடி நீ எனக்கு
பாண்டமடி நான் உனக்கு

பெண் : ஞான ஒளி வீசுதடி
நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஆண் : ஊனமறு நல்லழகே…நல்லழகே….
 ஊரு சுவையே கண்ணம்மா….

ஆண் : காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
பெண் : வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
ஆண் : போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே
நாத வடிவானவளே……
இருவர் : நாத வடிவானவளே
நல்ல உயிரே கண்ணம்மா…….!

--- வீணையடி நீ எனக்கு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

பெண் : காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகம் என்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நிற்பதென்ன வெள்ளி நிலவே


பெண் : நினைத்து நினைத்து சொல்ல வந்த
சேதிகள் என்ன
தன் நினைவு மாறி நின்று விட்ட
வேதனை என்ன
இங்கு விளையாடும் காதலரை
காண வந்தாயோ
உன்னை அறியாமல் பார்த்த படி
திகைத்து நின்றாயோ

பெண் : காதல் எங்கள் சொந்தம் என்று
அறியவில்லையா
கன்னி உள்ளம் உனக்கிருந்தும் நாணமில்லையா

உன் மோக நிலையை மறந்து விடு
வெள்ளி நிலாவே
வந்த மேகத்திலே மறைந்து விடு
வெள்ளி நிலாவே........!

--- காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் ........!

ஆண் : அறுபடை வீடு கொண்ட திருமுருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா

ஆண் : பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன் முருகா

ஆண் : வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு
அந்த வெள்ளிப் பனித் தலையர்
கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு

ஆண் : ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
 

ஆண் : தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
 

ஆண் : குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு

ஆண் : தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை
எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை

ஆண் : கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு….
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை.......!
 

--- அறுபடை வீடு கொண்ட திருமுருகா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ........!

ஆண் : மழைக்காற்று
வந்து தமிழ் பேசுதே
மலைச்சாரல் வந்து
இசை பாடுதே மலரோடு
வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

பெண் : மழைக்காற்று
வந்து தமிழ் பேசினால்
மலைச்சாரல் வந்து
இசை பாடினால் மலரோடு
வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்

பெண் : புல்லோடு
இரவில் பனி தூங்குமே
சொல்லோடு கவியின்
பொருள் தூங்குமே
கல்லோடு மறைந்து
சிலை தூங்குமே தூங்காது
நமது தீபமே தூங்காது
 

ஆண் : கடல் கொண்ட
நீளம் கரைந்தாலுமே
உடல் கொண்ட ஜீவன்
ஓய்ந்தாலுமே முடியாது
அண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே
 

ஆண் : இடையோடு
ரெண்டு கரம் சேர்க்கிறேன்
என்னென்ன வென்று சரி
பார்க்கிறேன் இதழ் தேனை
மெல்ல ருசி பார்க்கிறேன்
இடைவேளை இல்லை
தொடருவேன் 

பெண் : கண்ணாளன்
தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோரம் காதல் பசி
பார்க்கிறேன் என் கூந்தல்
பூக்கள் பரிமாறினேன் இனி
என்ன செய்வது அறியேன் .......!
 

--- மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஜல் ஜல் ஜல் எனும்
சலங்கை ஒலி
சல சல சலவெனச்
சாலையிலே
செல் செல் செல்லுங்கள்
காளைகளே
சேர்ந்திட வேணும்
இரவுக்குள்ளே
 
காட்டினில் ஒருவன்
எனைக்கண்டான்
கையில் உள்ளதைக்
கொடு என்றான்
 
கையில் எதுவும்
இல்லை என்று
கண்ணில் இருந்ததைக்
கொடுத்து விட்டேன்
 
அவன் தான் திருடன்
என்றிருந்தேன்
அவனை நானும்
திருடி விட்டேன்
 
முதல் முதல் திருடும்
காரணத்தால்
முழுசாய்த் திருட
மறந்து விட்டேன்
 
இன்றே அவனைக்
கைது செய்வேன்
என்றும் சிறையில்
வைத்திருப்பேன்
 
விளக்கம் சொல்லவும்
முடியாது
விடுதலை என்பதும்
கிடையாது..........!
 
--- ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி---
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .......!

ஆண் : எம்புட்டு
இருக்குது ஆச
உன்மேல அத
காட்டப்போறேன்

பெண் : அம்புட்டு
அழகையும் நீங்க
தாலாட்ட கொடியேத்த
வாரேன்

ஆண் : உள்ளத்த
கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

பெண் : செல்லத்த எடுத்துக்க
கேட்க வேணாம் அம்மம்மா
அசத்துறியே

ஆண் : கொட்டிக்கவுக்குற
ஆளையே இந்தாடி

ஆண் : கள்ளம் கபடம்
இல்ல உனக்கு என்ன
இருக்குது மேலும் பேச

பெண் : பள்ளம் அறிஞ்சி
வெள்ளம் வடிய
சொக்கிக்கெடக்குறேன்
தேகம் கூச

ஆண் : தொட்டுக்கலந்திட
நீ துணிஞ்சா மொத்த
ஒலகையும் பார்த்திடலாம்

பெண் : சொல்லிக்கொடுத்திட
நீ இருந்தா சொர்க்க கதவையும்
சாய்த்திடலாம்

ஆண் : முன்னப் பார்க்காதத
இப்போ நீ காட்டிட வெஷம்
போல ஏறுதே சந்தோசம்

ஆண் : ஒத்த லைட்டும்
உன்ன நெனச்சி
குத்துவிளக்கென மாறிப்போச்சி

பெண் : கண்ண கதுப்பு
என்ன பறிக்க நெஞ்சுக்குழி
அதும் மேடு ஆச்சு

ஆண் : பத்து தல
கொண்ட இராவணனா
உன்ன இரசிக்கனும்
தூக்கிவந்து

பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு
போட்டுப்புட்டு என்ன இருட்டிலும்
நீ அருந்து

ஆண் : சொல்லக்கூடாதத
சொல்லி ஏன் காட்டுற
மலை ஏற ஏங்குறேன்
உன் கூட .........!

--- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .........!

ஆண் : உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு
போலீசும் திருடனாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு

ஆண் : இருப்போமா லவ் லவ்வா
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா
வாழ்வோமா லவ் லவ்வா
எதுவாக இருந்தாலும் என்ஜாய் பண்லாம் வா

ஆண் : நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு

பெண் : பாப்பா போட்டி இல்ல
அட வாழ்க்கை லேசு இல்ல
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல

ஆண் : நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும்........!

 

--- உன்னால காக்கிச்சட்டை கலரு ஆச்சு ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . .......!

பெண் : கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா

பெண் : கால் வளந்த மன்னவனே வா
காவலுக்கு நின்னவனே வா வா

பெண் : நான் வெள்ளாங்கரட்டில் முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

பெண் : தன்னந்தனி மானு
இவ தண்ணியில்லா மீனு
மஞ்சத்தாலி போட்ட
நீ மட்டும்தானே ஆளு

ஆண் : குத்தமில்லா பொண்ணு
நீ குத்தவச்ச தேனு
கண்ணுக்குள்ள வச்சு
உன்ன காப்பாத்துவேன் நானு

பெண் : தொடுத்த பூவுக்கு நாா் பொறுப்பு
என் துவண்ட சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு

ஆண் : நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்க தொிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னும் எடுக்கல கணக்கு

ஆண் : ஏய் பாசமுள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ணப் போறேன்
வாரம் வரும் முன்னே
உன்ன மாசம் பண்ணப்போறேன்

பெண் : சாமக்கோழி கூவ
உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்தா
நான் ரெட்டப்புள்ள தாரேன்

ஆண் : பாலு தயிரா உறையும் முன்னே
பத்து தடவ சோ்ந்திருப்போம்
தயிரு மோரா மாறுமட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்

பெண் : உசுரையும் மானத்தையும் உன்கிட்ட
குடுத்திட்டேன் தலைவா
ஏழுசென்மம் தீரு மட்டும் எனக்கு
இருக்கணும் உறவா........!

 

--- கருவகாட்டு கருவாயா ---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ..........!

ஆண் : காலை அரும்பி
பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்

ஆண் : மூளை திருகும்
மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
இடப்பக்கம் வலப்பக்கம்
இதயம் பெண்டுலம் ஆடும்

ஆண் : வாய் மட்டும்
பேசாது உடம்பெல்லாம்
பேசும்
பெண் : இது மோசமான
நோய் ரொம்ப பாசமான
நோய்
 

ஆண் : மூளை இருந்த
இடம் சூலை ஆகி விடும்
அது தான் நோயின் ஆரம்பம்

பெண் : கால்கள் பறித்து
கொண்டு சிறகை இரவல்
தரும் ஆனால் அதுவே
ஆனந்தம்

ஆண் : ஒரு கடிதம்
எழுதவே கை வானை
கிழிக்குமே விரல் எழுதி
முடித்ததும் அதை கிழித்து
போடுமே

பெண் : இது ஆண்
நோயா பெண் நோயா
காமன் நோய் தான்
என்போமே

பெண் : சோற்றை
மறுதலித்து விண்மீன்
விழுங்க சொல்லும்
அன்னம் தண்ணீர்
செல்லாது

ஆண் : நெஞ்சில் குழல்
செலுத்தி குருதி குடித்து
கொல்லும் வேண்டாம்
என்றால் கேட்காது

பெண் : ஒரு நண்பன்
என்று தான் அது கதவு
திறக்குமே பின் காதலாகியே
வந்த கதவு சாத்துமே

ஆண் : இந்த நோயின்றி
போனாலே வாழ்க்கை
சௌக்கியம் ஆகாதே.......!

--- காலை அரும்பி ---

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார் . ......!

ஆண் : சொல்லிட்டாளே அவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வாா்த்தைய
கேட்டிடவும் எண்ணி பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

பெண் : சொல்லிட்டேனே இவ
காதல சொல்லும் போதே சுகம்
தாலல இது போல் ஒரு வாா்த்தைய
யாாிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வாா்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…

ஆண் : அம்மையவள் சொன்ன
சொல் கேக்கல அப்பனவன்
சொன்ன சொல் கேக்கல
உன்னோடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன்

பெண் : மனசையும் தொறந்து
சொன்னா எல்லாமே கிடைக்குது
உலகத்துல வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

ஆண் : அட சொன்ன சொல்லே
போதும் அதுக்கு ஈடே இல்லை
யேதும் யேதும்…

பெண் : எத்தனையோ சொல்லு
சொல்லாமலே உள்ளத்திலே
உண்டு என்பாா்களே சொல்லுறதில்
பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம்

ஆண் : உதட்டுல இருந்து சொன்னா
தன்னால மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல.........!

 

--- சொல்லிட்டாளே அவ காதல ---

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.