Jump to content

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கண்ணாடி போல காதல் உன்னை காட்ட 

ஈரேழு லோகம் பாத்து நிக்கிறேன் 

கண்ணால நீயும் நூலை விட்டு பாக்க 

காத்தாடியாக நானும் சுத்தறேன் 

சதா சதா சந்தோஷமாகிறேன் 

மனோகரா உன் வாசத்தால் 

உன்னால நானும் நூறாகிறேன் 

பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி 

உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி .....!

----மயிலாஞ்சி மயிலாஞ்சி----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

புண்ணான நெஞ்சை பொன்னான கையால் 

பூப்போல நீவ வா 

நான் காத்து நின்றேன்  காலங்கள் தோறும் 

என் ஏக்கம் தீருமா 

நான் பாத்து நின்றேன் பொன் வானமெங்கும் 

என் மின்னல் தோன்றுமா 

தண்ணீராய் மேகம் தூறும்  கண்ணீர் சேரும் 

கற்கண்டாய் மாறுமா 

ஆராரிராரோ ...ராரோ ....ராரோ ....ஆராரிராரோ 

ஆராரிராரோ ....ராரோ .....ராரோ ....ஆராரிராரோ 

ஆராரிராரோ ....ராரோ .....ராரோ ....ஆராரிராரோ 

கண்ணான கண்ணே  கண்ணான கண்ணே 

என் மீது சாயவா 

புண்ணான நெஞ்சை பொன்னான கையால் 

பூப்போல நீவ வா.......!

---  கண்ணான கண்ணே-----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

மாரளவு தண்ணியில மஞ்சள் பூசி நான் குளிக்க 

மறைஞ்சிருந்து நீயும் பாக்க ஆச வச்சேன் 

பசுவைபோல மெல்ல வந்து கொசுவத்தையும் நீ இழுத்து 

குசும்பு பண்ண வேணும்னு ஆச வச்சேன் 

உள்ளூரு சந்தையில எல்லாரும் பாக்கையில 

கண்டாங்கி வாங்கித் தர ஆச வச்சேன் 

குத்தாத முள்ளு குத்தி குதிகாலு வலிக்குதுன்னு 

மடிமேல காலைப்போட ஆச வச்சேன் 

அத்தனையும் பொய்யாச்சு ராசா 

ஒத்தையில நிக்குதிந்த ரோசா......!

---ஆத்தோரம் தோப்புக்குள்ள----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

அண்டமாய்  அவனி யாகி 

அறியொனாப்  பொருள தாகித் 

தொண்டர்கள் குருவு மாகித் 

துகளறு தெய்வ மாகி

எண்டிசை போற்ற நின்ற 

என்னருள் ஈச னான 

திண்டிறல் சரவ ணத்தான்

தினமும் என்  சிரசைக் காக்க .....! 

---சண்முக கவசம்----

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

காதல் திராட்சை  கொடியிலே 

கள்ளோடு ஆடும் கனியிலே 

ஊறும் இன்பக் கடலிலே 

உன்னோடு நானும் ஆடவா 

ஆசை கைகள் அழைப்பிலே 

அஞ்சாமல் சேரும் அணைப்பிலே 

வாழை மேனி வாடுமே 

அம்மம்மா போதும் போதுமே 

 

அப்போது நெஞ்சம்  ஆறுமே  

எப்போதுமே கொண்டாடுமே ......!

---பார்வை ஒன்றே போதுமே----

Link to comment
Share on other sites

 
 
Image may contain: 1 person, smiling, closeup
 
 

வாழ்கையை கற்றுக்கொள்ள...

சீன அதிபர் சொன்ன தத்துவக் கதை...

``சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன்.

இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை;

மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன.

ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார்.

அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது;

இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்!’ என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது.

புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன்.

நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன.

அதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார்...

`மகனே நினைவில் வைத்துக் கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான்.’’

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார்.

முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது; இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `

மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.

நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்...

மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது.

ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார்.

வழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை; மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... மகனே நீயே தேர்ந்தெடுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்...

அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன்.

அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன்.

நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன.

அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன்.

உண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்...’

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

தாமரை மேலே நீர்த்துளி போலே 

தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன 

நண்பர்கள் போலே வாழ்வதற்கு 

மாலையும் மேளமும் தேவையென்ன 

சொந்தங்களே இல்லாமல்  பந்த பாசம் கொள்ளாமல் 

பூவே உன் வாழ்க்கைதான் என்ன சொல்......!

----மன்றம் வந்த தென்றலுக்கு----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

யாரோ நீ எங்கிருந்து வந்தாய் 

என் நெஞ்சில் சிறகு தந்தாய் 

யாரோ நீ பூந்துயிலில் வந்தாய் 

என் கண்ணில் கனவு தந்தாய் 

ஒரு சிலநொடி குழந்தையை போலெ 

மறு சிலநொடி கடவுளை போலெ 

பல நொடிகளில் அதனினும் மேலே நீ ஆனாய் 

உயிரினைத் தரும் உதிரத்தை போலெ 

உயரத்தை தொடும் சிகரத்தை போலெ 

அனுதினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்.....!

---யம்மா அழகம்மா ---

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

வாய் மொழியும் எந்தன் தாய் மொழியும் 

இன்று வசப்பட வில்லையடி 

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா 

ஒரு உருண்டையும் உருளுதடி 

காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் 

ஒரு நிமிஷமும் வருசமடி 

கண்கள் எல்லாம் என்னை பார்ப்பதுபோல் 

ஒரு கலக்கமும் தோன்றுதடி 

இது சொர்க்கமா நரகமா 

சொல்லடி உள்ளபடி 

நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் 

உன் வார்த்தையில் உள்ளதடி.....!

--- என்னவளே அடி என்னவளே----

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் care ஐ அல்லது don’t care ஐ வைத்து நான் என்ன செய்யப்போகிறேன். அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை. கஸ்தூரி பற்றிய திரியில் சம்பந்தமே இல்லாமல் சாதிய வசை சொல்லை பாவித்து, தெரிந்து கொண்டே பாவித்து, அதில் என்னையும் இழுத்து, எனக்கும் கருணாநிதிக்கும் ஒரு சாதிய பாசமோ? என்ற தொனிப்பட நீங்கள் எழுதியதற்கான எதிர்வினையே இதுவரை நடந்தது. அதில் இனதூய்மைவாத, சாதிய வாத, பிரதேசவாத பழைய உதாரணங்களை எடுத்து காட்டும் படி ஆகிற்று.
    • நாம் கதைத்து கொண்டிருப்பது பிள்ளையானுக்கு வீழ்ந்த, விடும் வாக்குகள் பற்றி. பிள்ளையானின் அரசியல், அதை நீங்கள் இன்றும்(?) ஆதரிப்பது பற்றியது. இதில் ஏன் கருணாவுக்கு வீழ்ந்த வாக்குகள் எண்ணப்படுகிறன. அப்படியே ஆயினும், முஸ்லிம் ஆதிக்கம், கல்முனை தரமுயர்த்தல் இரெண்டும் கருணா, பிள்ளையானால் தீர்க்கப்பட்டு விட்டதா? ஆகவே உங்கள் ஹீரோக்களும் சீரோக்கள்தான்.  மற்றையவர் தேசிக்காய்கள் என்றால் உங்கள் ஹீரோக்கள் சுண்டங்காய்கள்🤣. அவர்கள் எலக்சனுக்காக பேசுவதை அப்பாவி பாமர மக்கள் நம்பினால் கூட பரவாயில்லை. ஆனால் படித்தவர்கள் கூட? அப்படியே ஆயினும், மகிந்த இனவாதிதான், இனப்படுகொலையாளந்தான் ஆனால் முஸ்லீம்களின் வாலை வெட்டினார், வீதிகளை புனரமைத்தார் எனவே அவருக்கு நான் பிரச்சாரம் செய்கிறேன் எனும் சிங்கள வாக்காளருக்கும் உங்களுக்கும் ஒரு வேறுபாடுமில்லை. அவர் இனவாதி. நீங்கள் …. இது அந்த சமயம் நீங்கள் யாழில் எழுதியமைக்கு மாற்றாக உள்ளது.  அந்த தேர்தலில் பிள்ளையான் மட்டிலும், கருணா அம்பாறையிலும் கேட்டார்கள். நீங்கள் தெளிவாக சொல்லி இருந்தீர்கள்…இந்த முறை உங்கள் வாக்கும், உங்களை சூழ உள்ளோர் வாக்கும் இவர்களில்ளுக்கே என்பதை நீங்கள் உறுதி செய்வீர்கள் என. ஆதாரம் கேட்டு திரியை நீளடிப்பதாயின் அது உங்கள் விருப்பம். எனக்கு இந்த ஆதாரம் காட்டும் விடயத்தில் முன்பு போல் ஆர்வம் இல்லை, அதே போல் யாழில் இப்போ தேடுவதும் கடினமாக உள்ளது - இது மாத்தி மாத்தி எழுதுவோருக்கு வசதியாயும் போய்விட்டது.
    • இதுதான் பிரச்சினையே  கருணாவிற்கு அன்று வாக்கு விழுந்தது கல்முனை பிரதேச சபை தரமுயர்த்தல் , முஸ்லிம்களிடமிருந்து வரும் அரசியல் நெருக்குவாரங்களில் இருந்து பாதுகாப்பு இந்த இரண்டையும் பட்டவர்த்தனமாக சொல்லி வேறு எந்த தமிழரும் போட்டியிடவில்லை. கரெக்ட்டு ஆனால் டிக்கடித்தது செல்வம் அடைக்கலநாதனும் கூத்தமைப்பு மத்திய சபையும். அதனால் தான் பிள்ளையான் பிரதேசவாதத்தால் வெல்லவில்லை என்று சொல்கிறேன். திருமலையில் வத்சா, மட்டுநகரில் தனுசிகா இரண்டும் பிள்ளையான் குழுவின் கைங்கர்யம் தான்,  பிள்ளையான் மீது எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் பிள்ளையான் செய்த அபிவிருத்திகள் அப்படி அதனை மறுக்கமுடியாது.  ஆனால் நிட்சயமாக பிள்ளையானுக்கு வாக்கு போட்டிருக்கமாட்டேன். மட்டுநகருக்கு என்னுடைய வாக்குரிமை மாற்றப்பட்ட பின் இரண்டு முறை வாக்களித்திருக்கிறேன் இரண்டும் பிள்ளையானுக்கு இல்லை. கல்முனையில் கல்முனை பிரதேச செயலக தரமுயர்த்தலுக்காக கருணாவிற்கு ஒரு முறை. ஒன்று கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருவதாக யார் வந்து நின்றாலும் வாக்குப்போடுவேன் ஏனென்றால் அது என் ஆன்மா. நான் பிறந்து வளர்ந்த ஊரிலேயே இந்த ஒன்றை பிடுங்க முடியாமல் உலகில் எங்கு போய் எதை பிடுங்கினாலும் அது எனக்கு ஹைகோர்ட் மட்டுமே இந்த லட்சியம் உங்களுக்கு மேலே சொல்வது போல் தெரிந்தால் I don't care.
    • செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்து! அண்ணன் 2025 சட்டசபைத் தேர்தலில் தன்னுடைய தொகுதியில் கட்டுக்காசை பெற முப்பாட்டன் முருகன் அருள் கிடைக்கட்டும்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.