Jump to content

கிறங்க வைக்கும் கிராமத்து சமையல்!


Recommended Posts

கிறங்க வைக்கும் கிராமத்து சமையல்!
 
சமையல்

 

a%284%29.jpgமைக்கும்போதே அந்த வாசனை மூக்கைத் துளைத்து, நாக்கில் நீர் ஊறவைத்து, `உணவு வரப்போகிறது’ என்று வயிற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்; சாப்பிட் டவுடன் வயிறு நிறைவதுடன், உடலுக்கும் சத்து சேர வேண்டும்... இதுதான் முழு மையான உணவு அனுபவம்!

இந்த அனுபவத்தை அள்ளித்தரவல்லவை நாட்டுப்புற உணவுகள்தான். பிரெட் - ஜாம், `2 மினிட்ஸ் நூடுல்ஸ்’, ஃபாஸ்ட் ஃபுட் என நகர வாழ்க்கைக்கு பழகிவிட்ட வர்கூட, ``எங்க ஊர்ல பாட்டி/அத்தை/பெரியம்மா ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... அந்த டேஸ்ட்டே அலாதி!’’ என்று சிலசமயம் ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். இந்த ஏக்கத்தைப் போக்கும் விதத்தில்... சேம்பு கடைசல், கூட்டாஞ்சோறு, பனங்கிழங்கு பாயசம் உட்பட பல்வேறு கிராமத்து சமையல் வகைகளை இங்கே வாரிவழங்கி அசத்துகிறார், சமையல்கலை நிபுணர் லக்ஷ்மி ஸ்ரீநிவாசன்.

கத்திரி - மொச்சை பொரியல்

p54a.jpg

தேவையானவை: பிஞ்சுக் கத்திரிக்காய்  - கால் கிலோ, பச்சை மொச்சை - 100 கிராம், நாட்டுப் பூண்டு - 4 பல் (நசுக்கவும்), இஞ்சி - ஒரு துண்டு (சுத்தம் செய்து, நசுக்கவும்) நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சோம்பு (பெருஞ்சீரகம்) - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 10, நாட்டுத் தக்காளி - 4, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காய், சின்ன வெங்காயம், நாட்டுத் தக்காளியை மீடியம் சைஸில் நறுக்கவும். பச்சை p54h.jpgமொச்சையை வேகவைக்கவும். வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, சோம்பு தாளிக்கவும். சோம்பு சிவந்த பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்க்கவும். பாதி வதங்கிய பின் நறுக்கிய கத்திரிப்பிஞ்சு சேர்த்து, நன்றாக வதக்கி... வேகவைத்த மொச்சை, அரை கப் நீர் விட்டுக் கிளறவும். எல்லாம் நன்கு சேர்ந்து உதிர்உதிராக ஆன பின் இறக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் காய்ச்சி... நசுக்கிய பூண்டு, இஞ்சி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு புரட்டி கத்திரி - மொச்சை கலவையில் சேர்த்துக் கலந்து...  கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

நாட்டுக்காய் கூட்டாஞ்சோறு

p54b.jpg

தேவையானவை: அரிசி - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு,  புளி - நெல்லிக்காய் அளவு, வாழைக்காய் - ஒன்று, கத்திரிக்காய் - 4, இளம் முருங்கைக்காய் - ஒன்று, அவரைக்காய் - 10, வெள்ளை முள்ளங்கி - ஒன்று (இவற்றைப் பெரிய துண்டுகளாக நறுக்கவும்), முங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு, நெய், எண்ணெய் - தலா 2 டீஸ்பூன், கடுகு - சிறிதளவு.

வதக்க: நாட்டுத் தக்காளி - 3 (நறுக்கவும்), நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப்.

வறுத்து அரைக்க: தனியா - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது காரத்துக்கேற்ப),  தேங்காய் - அரை மூடி (சிறிய மூடி போதும்... துருவிக்கொள்ளவும்), சின்ன வெங்காயம் - 4, நாட்டுத் தக்காளி - ஒன்று.

செய்முறை: அரிசியுடன், துவரம்பருப்பு, கொஞ்சம் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அகலமான மண்சட்டி (அ) அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை சிவக்க வறுத்து விழுதாக்கவும். அதே மண்சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். இத்துடன் நறுக்கிய காய்கள், முருங்கைக்கீரை சேர்த்து தண்ணீர் தெளித்து, முக்கால் பதமாக வெந்த பின் புளிக்கரைச்சல், தேவையான உப்பு, மஞ்சள்தூள், அரிசி - பருப்பு கலவை சேர்க்கவும். பின்னர், அரைத்து வைத்த  மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். நெய்யை காயவிட்டு, கடுகு தாளித்து, கூட்டாஞ்சோறில் சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.

பனங்கிழங்கு பாயசம்

p54c.jpg

தேவையானவை: பனங்கிழங்கு - 4, தேங்காய்ப்பால் - ஒரு கப், பனை வெல்லக் கரைசல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - தலா  2 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பனங்கிழங்கை முழுவதாக வேகவிட்டு தோல், உள்தண்டு பகுதியை நீக்கவும். இதனை மிக்ஸியில் விழுதாக்கவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, பனங்கிழங்கு விழுதை சேர்த்து அடி பிடிக்காது 2, 3 நிமிடம் வதக்கி, பனை வெல்லக் கரைசல் சேர்த்து, கொதி வருகையில் இறக்கவும். சற்றே சூடு தணிந்த பின் தேங்காய்ப்பால், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி - திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

சேம்பு கடைசல்

p54d.jpg

தேவையானவை: சேப்பங்கிழங்கு - அரை கிலோ, நாட்டுத் தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, புளிக்கரைசல் - சிறிதளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மஞ்சள்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் - 50 கிராம், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, நசுக்கிய பூண்டு - 4.

செய்முறை: சேப்பங் கிழங்கை வேகவிட்டு, தோல் உரித்து, மசிக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். இதில் கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் உப்பு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, புளிக்கரைசல் சேர்த்து, கொதி வருகையில் மசித்த சேப்பங்கிழங்கு, அரை கப் நீர் சேர்த்து... நன்கு கொதித்து வரும்போது இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

கருப்பட்டி பொங்கல்

p54e.jpg

தேவையானவை: பச்சரிசி - 100 கிராம், பாசிப்பருப்பு - 50 கிராம், கருப்பட்டி - கால் கிலோ, நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்.

செய்முறை: பச்சரிசி, பாசிப் பருப்புடன் தேவையான நீர் சேர்த்து குழைய வேகவிடவும். கருப்பட்டியை சிறிதளவு நீர் விட்டுக் கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அரிசி - பருப்பு கலவை, கருப்பட்டி கரைசல் சேர்த்து தளர கிளறி எடுக்கவும். நெய் முழுவதையும் காய்ச்சி அதன் மீது ஊற்றி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்துப் பரிமாறவும்.

கொள்ளு - கறுப்பு உளுந்து வடை

p54f.jpg

தேவையானவை: முளை விட்ட கொள்ளு - 200 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம் (ஊறவைக்கவும்), பச்சரிசி - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்), நறுக்கிய புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப), நறுக்கிய சின்ன வெங்காயம்  - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை: கறுப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைத்து... கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

கொள்ளு காரப் பொங்கல்

p54g.jpg

தேவையானவை: கொள்ளு - 50 கிராம் (8 மணி நேரம் ஊறவைக்கவும்), பச்சரிசி - 100 கிராம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு  - தேவையான அளவு.

வறுத்துக்கொள்ள: நெய் - 50 கிராம், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், முந்திரித் துண்டுகள் - 10, துருவிய இளம் இஞ்சி - சிறிதளவு, பச்சை மிளகாய்  - 2 (நறுக்கவும்), கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.

செய்முறை: கொள்ளு, அரிசி இரண்டையும் தனித்தனியே தளர வேகவிட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு மசிக்கவும். வறுக்கும் பொருட்களை நன்கு வறுத்து, கொள்ளு கலவையில் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இதற்கு கார சட்னி தொட்டுக்கொள்ளலாம்.

vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

"கொள்ளு - கறுப்பு உளுந்து வடை

p54f.jpg

தேவையானவை: முளை விட்ட கொள்ளு - 200 கிராம், கறுப்பு உளுந்து - 50 கிராம் (ஊறவைக்கவும்), பச்சரிசி - ஒரு டீஸ்பூன் (ஊறவைக்கவும்), நறுக்கிய புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக் கேற்ப), நறுக்கிய சின்ன வெங்காயம்  - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, சோம்பு (பெருஞ்சீரகம்) - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ.

செய்முறை: கறுப்பு உளுந்து, அரிசியை கழுவி, மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முளைவிட்ட கொள்ளு, ஊற வைத்த கறுப்பு உளுந்து (தோல் நீக்க வேண்டாம்), ஊறவைத்த அரிசி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் விடாது கெட்டியாக அரைத்து... கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயம், சோம்பு, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவுக் கலவையை வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்."
 

 

இன்றுதான் கொள்ளு வடையைப்பற்றி அறிகின்றேன். செய்து பார்க்க வேண்டும்.

நன்றி நவீனன் உங்கள் பல விதமான தரமான் இணைப்புக்களுக்கு

 

Link to comment
Share on other sites

நன்றி உடையார் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் ஊக்கத்திற்கும்.

போன வருட ஜூலை மாதத்தில் இந்த பகுதியில் சிறு தானியங்களில் செய்ய கூடிய சில உணவு வகைகளை  தினம் ஒரு சிறுதானியம்  என்று இணைத்து இருந்தேன்.

இங்கு யாரும் ஆர்வம் காட்டாதபடியால் தொடர்ந்து இணைக்கவில்லை. நாவூற வாயூற பகுதியில் 7 வது பக்கத்தில் பல பதிவுகளை காணலாம்.

உதாரணத்துக்கு ஒரு பதிவு இங்கு

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி.  கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.  
    • 🤣............... கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.
    • முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   https://akkinikkunchu.com/?p=298467
    • தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை. தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.   https://akkinikkunchu.com/?p=298489
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.